Tuesday, August 24, 2010

மதானி கைது: கோவையில் தமுமுக கண்டன ஆர்ப்பாட்டம்

கோவை:"இந்தியாவை நாம் ஆளும் போது தான், உரிமைகள் நமக்கு கிடைக்கும்' என மதானி கைது செய்யப்பட்டதை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில், த.மு.மு.க., மாநில துணை செயலர் பேசினார்.பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கில், கேரள மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மதானி சில நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். கர்நாடக போலீசாரின் இந்நடவடிக்கையை கண்டித்து, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில், நேற்று காந்திபுரம் தமிழ்நாடு ஓட்டல் முன், ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் பர்கத் அலி தலைமை வகித்தார். மாவட்ட செயலர் ரபீக், பொருளாளர் அகமது கபீர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைச் செயலர் செய்யது பேசியதாவது:கடந்த 2008ல் பெங்களூருவில் நடந்த குண்டு வெடிப்பு வழக்கில் பிடிபட்ட கேரளாவை சேர்ந்த நசீர் கொடுத்த வாக்குமூலத்தில், மதானி 31வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். கோவை குண்டு வெடிப்பு வழக்கில் விடுதலையானவர், கேரள சிறப்பு போலீஸ் படை பாதுகாப்பில் இருந்தார். அவர் எங்கெல்லாம் சென்றார் என கேரள போலீசாருக்கு தெரியும்.இப்படி இருக்கும் போது, 31வது குற்றவாளியாக இருக்க முடியுமா? மதானி கைது மூலம் வேறு யாரையோ சிக்க வைக்க கர்நாடக அரசு முயற்சிக்கிறது. மதானியை கைது செய்ய தீவிரம் காட்டிய போலீசார், மலேகான், சம்ஜவ்தா, அஜ்மீர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் குற்றம் சாட்டப்பட்ட இந்துத்துவா பெரும்புள்ளிகளை கைது செய்யாதது ஏன்?கேரள போலீஸ் பாதுகாப்பில் இருக்கும் ஒருவர் எப்படி குண்டு வைத்திருக்க முடியும். எனவே கேரள போலீசாரையும் இவ்வழக்கில் முக்கிய சாட்சியாக விசாரிக்க வேண்டும். தவிர கர்நாடக அரசையும் மத்திய போலீசார் விசாரிக்க வேண்டும். ஒவ்வொரு குண்டு வெடிப்பின் போதும், முஸ்லிம்களை கைது செய்து, தீவிர விசாரணைக்கு பின் விடுவிக்கின்றனர்.மத்திய உளவுத் துறையில் ஆர்.எஸ்.எஸ்., பற்றுள்ளவர்கள் தான் அதிகாரிகளாக உள்ளனர். இவர்கள் தான் முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படுகின்றனர். முஸ்லிம்களாகிய நமக்குரிய உரிமைகள் கிடைக்க, நாம் இந்தியாவை ஆள வேண்டுமென்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பொய் வழக்கில் கைது செய்யப்பட்ட மதானியை விடுதலை செய்யும் வரை போராட்டம் தொடரும்.இவ்வாறு செய்யது பேசினார்.கோவை மாநகர் மாவட்ட தலைவர் மொய்தீன் சேட் நன்றி கூறினார்நன்றி- தினமலர்,

No comments :