Thursday, July 29, 2010

லண்டனில் முகத்திரை அணிந்த மாணவிகளுக்கு பேருந்தில் ஏற அனுமதி மறுப்பு

லண்டன்,ஜுலை27:22 வயது மதிக்கத்தக்க இரண்டு முஸ்லிம் மாணவிகளில் ஒருவர் முகத்திரை அணிந்த காரணத்திற்காக பேருந்தில் ஏற அனுமதி மறுக்கப்பட்டது குறித்து விசாரணை செய்வதாக லண்டன் பேருந்து நிறுவனமான மெட்ரோலைன் கூறியுள்ளது.இரண்டு மாணவிகளில் யாஸ்மின் என்ற மாணவி ஹிஜாப் அணிந்திருந்ததாகவும்,மற்றொருவர் அதூஃபா கண்கள் மட்டும் தெரியும்படி முகத்திரை அணிந்திருந்தனர்.அவ்விரு மாணவிகளும் பேருந்தில் ஏற முற்படும்போது அப்பேருந்தின் ஓட்டுநர், "நான் உங்களை பேருந்தில் ஏற்ற முடியாது, நீங்கள் இருவரும் அச்சுறுத்தும்படி இருக்கிறீர்கள்" என்று கூறி பேருந்தில் ஏற்ற மறுத்துள்ளார்."நாங்கள் இந்த விவகாரத்தை அக்கறையுடன் எடுத்து விசாரித்து வருகிறோம். எங்களின் நிறுவன ஊழியர்கள் இவ்வாறு கூறியிருப்பார்கள் என்று எங்களுக்கு சந்தேகம் இல்லை, ஏனெனில் நாங்கள் சமத்துவம், வேற்றுமை எல்லோருக்கும் உண்டு என்பதை மதித்து உறுதி செய்திருக்கிறோம்." என்று மெட்ரோலைன் கூறியிருக்கிறது."இதுகுறித்து மூன்று ஓட்டுநர்களை விசாரித்து வருகிறோம், எங்கள் நிறுவன ஓட்டுநர் அனுமதி மறுத்திருந்தால், அதை ஏற்றுக்கொள்ள முடியாது" என்று கூறியுள்ளது.இச்சம்பவம் குறித்து பிரிட்டிஷ் முஸ்லிம் கவுன்சில் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளது, ஆனால் தனிநபர் வழக்கிற்காக கருத்து தெரிவிக்க முடியாது என்றும் கூறியுள்ளது

இடுகையிட்டது பாலைவனத் தூது

வண்மையாக கண்டிக்கிறோம்

இந்திய அரசியல் சாசண சட்டப் பிரிவு-25க்கு, எதிராக செயல்படுபவர்களை...
வண்மையாக கண்டிக்கிறோம்


பொதக்குடி அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் கல்வி கற்க்கும், மாணவிகள் தங்களின் இஸ்லாமிய மார்க்க சட்டத்திற்க்கு உட்பட்டு தலையில்
துணி அணிவதை(ஹிஜாப்), அப்பள்ளியின் ஆசிரியர்கள் தடுப்பதையும்,
இஸ்லாமிய கோட்பாடுபளை பின்பற்றுவதற்க்கு தடையாக இருப்பதையும்,
வண்மையாக கண்டிக்கிறோம். மேற்படி விசயத்தில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியக விசாரணை செய்து, இஸ்லாமிய மாணவிகளின் கோறிக்கை ஏற்கப்படவேண்டும். இல்லையெனில் பொதுமக்களை ஒண்றுதிரட்டி ஜணநாயகமுறையில் எங்களது போறாட்டம் தொடரும் என்பதை தெரிவிக்கின்றோம்.

குறிப்பு: இந்தியாவில் வசிக்கும் மக்கள் அவர்கள் ஏற்றுப்கொண்டுள்ள எந்த ஒரு மதத்தின் அடிப்படையிலும், தங்களின் கோட்பாடுகளை பின்பற்றவும்,நடைமுறை படுத்தவும் மற்றவர்களுக்கு எடுத்துகூறி பிறச்சாரம் செய்வதற்க்கும் உள்ள சுதந்திரத்தை வழங்குபிறது. (இந்திய அரசியல் சாசணம் சட்டப் பிரிவு-25)

இவண்,
என்றென்றும் உங்கள் சமுகப்பணியாளன்,
த.மு.மு.க மாணவரணி
பொதக்குடி கிளை

Wednesday, July 28, 2010

ஏர்வாடி தமுமுகவினர் மீது பொய் வழக்கு: பொதுமக்கள் கடும் கண்டனம்


நெல்லை ஏர்வாடி மெயின் ரோட்டில் 6வது தெருவில் உள்ளது மெர்ஸி நர்ஸிங்ஹோம். இங்கு தங்கும் ஒரு நர்சுடன் வெளியூரைச் சேர்ந்த (நான்குநேரி) வக்கீல் கண்ணன் என்பவருக்கு முறையற்ற உறவு இருந்துள்ளது. தினமும் இரவு அந்த வெளியூர் நபர் வருவதும் கள்ளத் தொடர்பை தொடர்வதும் வழக்கமாக இருந்து வந்துள்ளது.குடும்பத்துப் பெண்கள் தங்கள் பணியின் நிமித்தம் தங்கி இருக்கும் இடத்தில் ஒரு முறையற்ற உறவு தொடர்வது மற்ற நர்சுகளுக்கு வேதனையை ஏற்படுத்தியதால் இவர்களில் சிலர் அக்கம்பக்கத்து வீட்டினர்களிடம்ஷ இதனை குமுறலுடன் கூறியுள்ளனர்.அநீதியை தட்டிக் கேட்பதில் என்றும் சளைக்காத துடிப்புமிக்க இயக்கமாம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக சகோதரர்களிடம் இந்த அநியாயம் குறித்த பொதுமக்கள் முறையிட்டனர்.12.07.2010 அன்று வழக்கம் போல்கள்ளத் தொடர்புக்கு வலுசேர்க்கும் விதமாக சர்ச்சைக்குரிய பேர்வழி கண்ணன் வந்தபோது இதனைஎதிர்பார்த்து காத்து இருந்தபொதுமக்கள் அவரை கையும் களவுமாக பிடித்தனர். நம்ம பகுதியை கேவலப்படுத்தி விட்டானே என்ற ஆத்திரம் பொது மக்களிடையே வெடித்தது. கோபத்தோடு கூடியிருக்கும் மக்கள் தனிநபரான கண்ணனைசரமாரியாக தாக்கினால் அவர் உயிருக்கு ஆபத்து நேரிடலாம் என எண்ணிய தமுமுக தலைவர் பக்ருதீன் கண்ணனை மருத்துவமனையில் ஒரு அறையில் வைத்துப் பூட்டினார். அத்தோடு ஆத்திரம் அடைந்த மக்களையும் அமைதிப்படுத்தினார். இந்நிலையில் மருத்துவமனையில் இருந்த சில நர்சுகள் கண்ணனை தப்பிக்க வைத்து விடுகின்றனர்.பிடிபட்ட பேர்வழி தப்பியதை அறிந்து பொதுமக்களின் ஆத்திரம் மேலும் அதிகரித்தது. கோபத்துடன் பொதுமக்கள் நாலாபுறமும் தேடத் தொடங்கினர். தப்பி ஓடி நான்குநேரி சென்றகண்ணன் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஏர்வாடி பொதுமக்களும், தமுமுகவினரும் தாக்கியதால்தான் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டதாக தமுமுக நிர்வாகிகள் மீது நான்குநேரி காவல்துறை பொய் வழக்கு (இபிகோ பிரிவு 308) போட்டது.13.07.2010 அன்று பக்ருதீன், அம்ஜத், முகைதீன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தகவல்அறிந்த தமுமுக நிர்வாகிகள் தமுமுக அலுவலகத்தில் திரண்டனர்.அலுவலகத்தில் இருந்தவர்களும் கைது செய்யப்பட்டனர். தமுமுகவினரின் மீது பொய் வழக்கு போட்ட காவல்துறையைக் கண்டித்து கண்டன போஸ்டர்களும் ஒட்டப்பட்டன. காவல் துறையினர் நியாயமற்ற முறையில் உள்நோக்கத்தோடு நடந்து கொண்டனர். மமக நகர செயலாளர் மாகின் ஊனமுற்ற சகோதரர் ஆவார். இவருக்கும் சம்பவத்திற்கும் தொடர்பு இல்லை எனக் குற்றம் சாட்டப்பட்ட நர்ஸ்கூறியும் கூட காவல்துறை உதவி ஆய்வாளர் அந்தோனி அம்மா உனக்கும் தொடர்பு எனக் கூறி அவரை வலுக்கட்டாயமாக அழைத்து சென்றிருக்கிறார்.இதைப்போல வஷீமீளியூர் காவல்நிலையத்தில் தமுமுகவினரைகைது செய்து எஃப்.ஐ.ஆர் போட்டதோடு அவர்களை பார்க்க வந்த மாவட்ட நிர்வாகிகளை வள்ளியூர் காவல்நிலைய ஆய்வாளர் சுந்தரேசன் பார்க்கவே அனுமதிக்கவில்லை.கடந்த ஆண்டு ஏர்வாடி அருகில் உள்ள சூரங்குடியில் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்தசமையல் மாஸ்டர் அசன்ரபிக் சில சமூக விரோதிகளால் கொலை செய்யப்பட்டார். ஆனால் கொலையை தற்கொலை என மூடிமறைத்த காவல்துறை தற்போது தமுமுகவினர் மீது பொய் வழக்கு போட்டுள்ளதை காவல்துறையைக் கண்டித்து மாபெரும் கண்டனஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமுமுக மாநில செயலாளர் பி.எஸ். ஹமீது தலைமை வகித்து கண்டன உரையாற்றினார்.மாநில துணைச் செயலாளர் எஸ்.காதர் மைதீன் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் மைதீன் பாரூக், செயலாளர் உஸ்மான் கான், பொருளாளர் புளியங்குடி செய்யது அலி,மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் மைதீன் சேட்கான்,பொருளாளர் ரசூல் மைதீன்துணை செயலாளர் நயினார் முகம்மது, சுல்தான், துணை தலைவர் சர்தார் அலிகான்மற்றும் மில்லத் இஸ்மாயில் ஆகியோர் உரையாற்றினர். -களத்தொகுப்பு எஸ்.ஒ.எஸ்

பா.ஜ.க. குண்டர்களால் அடித்து நொறுக்கப்பட்ட திருத்துறைப்பூண்டி தமுமுக ஆம்புலென்ஸ்

பா.ஜ.க. குண்டர்களால் அடித்து நொறுக்கப்பட்ட திருத்துறைப்பூண்டி தமுமுக ஆம்புலென்ஸ்
ஆம்புலன்ஸ் சேவைகளுக்குஇடையூறு செய்யக் கூடாது என்பது சர்வதேச விதியாகும்.ஆனால், கற்ப்பிணிகளின்வயிற்றைக் கிழித்து, அதில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் மதவெறி பயங்கரவாதிகளுக்கு இதெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.தமிழகத்தில் தங்களது இருப்பைவெளிகாட்டுவதற்காக சமீபகாலமாக, இந்து மாணவர்களுக்குகல்வி உதவித் தொகை வேண்டும் என்று தவறான அடிப்படையில் பாஜக போராட்டங்கள் நடத்தி வருகிறது.கடந்த ஜுலை 24 அன்றுதிருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் பாஜகவினர் இதேகோரிக்கைக்காக மாநில தலைவர்பொன். ராதாகிருஷ்ணன் தலைமையில் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர்.அப்போது தமுமுகவின்ஆம்புலன்ஸுக்கு, பிரபல ஹனீபா மருத்துவமனையிலிருந்துஒரு இந்து சமுதாயத்தை சேர்ந்தகுடும்பத்தினரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்திருக்கிறது.ஒரு நோயாளியை தஞ்சாவூருக்கு எடுத்து செல்ல வேண்டும்என்றும், வேகமாக வருமாறுஅதில் வேண்டியதால், தமுமுகவின் ஆம்புலன்ஸ் டிரைவர்தாஜுதீன் வேகமாக ஹனீபாமருத்துவமனையை நோக்கி திருப்பினார்.வரும் வழியில், பாஜகவினர்ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருந்ததால், அவர் வண்டியைமெல்ல இரண்டாவது கியரில் நகர்த்தியிருக்கிறார்.அப்போது காவல்துறையும் கூட்டத்தைவிலக்கி, ஆம்புலன்ஸ்செல்ல வழி ஏற்படுத்தியுள்ளனர். பாஜகதலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தனதுª த £ண்ட ர் களிட ம்ஆம்புலன்ஸுக்கு வழிவிடுமாறு அறிவித்திருக்கிறார்.எந்த விதி மீறலும்யாருக்கும் இடையூறுஇல்லாமலும் ஹனீபாமருத்துவமனையை நோக்கி ஆம்புலன்ஸ் எடுத்துச் சென்றுவிட்டார்.மருத்துவமனை வாசலில் வண்டியை நிறுத்திவிட்டு நோயாளியை பார்க்க டிரைவர் சென்றுவிட்டார்.அதற்குள் சுமார் 30 பேர் கொண்டபாஜக கும்பல் ஓடிவந்த வேகத்தில்,ஆம்புலன்ஸை கட்டைகளால்உடைத்து, டிரைவரை கொலைவெறியுடன் தேடி உள்ளனர்.டிரைவர் கிடைக்காததால், ஆம்புலன்ஸை புரட்டி பெட்ரோல்டேங்கை உடைத்து, வண்டியைதுவம்சம் செய்ய, இதைப் பார்த்தபொதுமக்கள் சப்தம் போட,அதற்குள் ஓடிவந்த காவல்துறையினர் பாஜகவினர் மீதுதடியடி நடத்தியதும், வன்முறைகும்பல் ஓடத் தொடங்கியது.அதற்குள் பாஜகவினர் தங்களின்அயோக்கியத்தனத்தை மறைக்க,ஆம்புலன்ஸ் எங்கள் மீது மோதும்விதமாக வந்தது என வதந்திகளைபரப்பினர்.ஏற்கனவே அங்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்முகாமிட்டு இருந்ததால், அவர்தலைமையிலான போலிசார்நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முயன்றனர். அதற்குள் பாஜகவினர் போலிஸ் வாகனங்களையும் உடைத்தனர்.போலிசார் துரத்த தொடங்கியதும் பாஜகவினர் கொடிகளைபோட்டுவிட்டு, வேனில் கட்டியிருந்த கொடிகளை அவிழ்த்து விட்டு ஓடத் தொடங்கினர்.தமுமுக ஆம்புலன்ஸ் உடைக்கப்பட்ட செய்தி அறிந்ததும் திருத்துறைப்பூண்டி நகர தமுமுகவினர்சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.மாவட்ட தலைவர் தாஜுதீன்,ஒன்றிய செயலாளர் கலிபுல்லாஹ்,யூசுப் உள்ளிட்டோர் தலைமையில்சாலை மறியலில் தமுமுகவினர்இறங்க, பிறகு வழக்கு தொடுத்துவிட்டு அடுத்தகட்டமாக போராட்டம் நடத்தலாம் என முடிவுசெய்யப்பட்டது.செய் தியறிந்து திருவாரூர்மாவட்ட தமுமுகவினர் திருத்துறைப்பூண்டி நோக்கி விரைந் தனர்.திருத்துறைப் பூண்டி நகரெங்கும்பாஜகவினரை பொதுமக்கள் காரிதுப்பாத குறையாக திட்டிக்கொண்டிருந்தனர்.இதே, ஆம்புலன்ஸை பலமுறைபாஜகவினர் அவசரத்துக்கு பயன்படுத்தியது திருத்துறைப் பூண்டிமக்களுக்கு நன்கு தெரியும்.அப்போது கூட ஒரு இந்து சமுதாயகுடும்பத்துக்குத்தான் உதவ அந்தஆம்புலன்ஸ் சென்றதும். திருத்துறைப்பூண்டி மக்களால் மூலைக்குமூலை பேசப்பட்டது.காவல்துறை பாஜகவினரைபிடிக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பிலிருந்தே அழுத்தங்களும அதிகரிக்க, அனைத்துக்கட்சியினரும் இந்த அராஜகத்தைகண்டித்து, தமுமுகவினருக்குஆறுதலையும் ஆதரவையும் தெரிவித்தனர்.அடுத்த நாள் மமக துணைப்பொதுச் செயலாளர் எம். தமிமுன்அன்சாரி, திருத்துறைப்பூண்டிக்குவந்து நிலைமைகளை நேரில் விசாரித்தார்.குற்றவாளிகள் பிடிக்கப்படாததை கண்டித்து திருவாரூரில் காவல் கண்காணிப்பாளர்அலுவலகம் நோக்கி கருப்புக்கொடிஊர்வலம் நடத்தப்படும் எனஅறிவிக்கப்பட்டது.டி.ஐ.ஜி. அவர்களும் பொதுச்செயலாளர் ஹைதர் அலியிடமும்,மற்ற அதிகாரிகள் மமக துணைப்பொதுச்செயலாளர் எம். தமிமுன்அன்சாரியிடமும் பேசினார்கள். முதல்வர் கருணாநிதி திருவாரூக்குவரும் தினத்தில் கருப்புக் கொடிஊர்வலம் நடத்தாதீர்கள் என்றும்,ஜுலை 30க்குள் குற்றவாளிகளைபிடிக்கிறோம் என்று கூறியதால்,ஜுலை 31 அன்று கருப்புக் கொடிஊர்வலம் ஒத்திவைக்கப்பட்டது.ஈவு, இரக்கமற்ற பாஜகவன்முறை கும்பலின் செயல்பொதுமக்களையே கோபப்படுத்தியது எனில், தமுமுகவினரைதமிழகமெங்கும் கொந்தளிக்கவைத்துள்ளது.தமுமுகவினர் இதுவரை ஜனநாயகத்தை மீறவில்லை. காவல்துறைதனது கடமையை வாக்களித்தப்படிசெய்யாவிடில், அதன் பின் விளைவுகளுக்கு காவல்துறைதான்பொறுப்பேற்க வேண்டும். காரணம், எங்களின் ஒவ்வொரு ஆம்புலன்ஸும் எங்களது ரத்தம் வியர்வையினால் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆம்புலன்ஸின் மீதுவிழுந்த தாக்குதல், எங்களின் P நெஞ்சங்களின் மீது விழுந்த தாக்குதல்களாகும்.

Friday, July 23, 2010

ஹஜ் பயணம் மேற்கொள்வோருக்குத் தடுப்பூசி

ராமநாதபுரம், ஜூலை 22: ராமநாதபுரம் சுகாதாரத் துறை துணை இயக்குநர் அலுவலகத்தில் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு மூளைக் காய்ச்சல் தடுப்பூசி வியாழக்கிழமை போடப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்திலிருந்து ஏராளமானோர் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்கின்றனர். இந்த ஆண்டு தமிழகத்திலிருந்து 3,000 பேர் செல்ல மத்திய அரசு அனுமதியளித்திருக்கிறது. ஆனால், 12,000 பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ள விண்ணப்பித்திருந்தனர்.
இதில் குலுக்கல் முறையில் 3,000 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த பயணிகளுக்கு சுகாதாரத் துறை துணை இயக்குநர் அலுவலகத்தில் மூளைக் காய்ச்சல் தடுப்பூசி போட வியாழக்கிழமை வருமாறு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. சென்னையில் உள்ள தமிழ்நாடு ஹஜ் கமிட்டி அலுவலகம் 146 பேருக்கு கடிதம் அனுப்பயதில், வியாழக்கிழமை 76 பேர் ராமநாதபுரத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். ராமநாதபுரம் சுகாதாரத் துறை துணை இயக்குநர் உமாமகேசுவரி தலைமையில் ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் அனைவருக்கும் மருத்துவர் குழுவினர் தடுப்பூசி போட்டனர்.
சௌதி நாட்டு அரசு உத்தரவுப்படி, அந் நாட்டுக்கு ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்பவர்கள் அனைவருக்கும் போலியோ தடுப்பு சொட்டு மருந்தும், மூளைக் காய்ச்சல் தடுப்பூசியும் போட்டு அதற்கான அடையாள அட்டை இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறியதைத் தொடர்ந்து, அவர்கள் அனைவரும் தடுப்பூசியும் போலியோ சொட்டு மருந்தும் போட்டுக் கொண்டனர். இதில் விடுபட்டவர்களுக்கு சிறப்பு முகாம்கள் நடத்தி அதில் தடுப்பூசி போடப்படும் எனவும் தமிழ்நாடு ஹஜ் கமிட்டிக் குழு ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.

thanks by dinamani.com

Thursday, July 22, 2010

மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளருக்கு கம்யூனிஸ்டு கட்சிகள் ஆதரவு

திருச்சி மாநகராட்சி 28-வது வார்டு இடைத்தேர்தல்:
மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளருக்கு கம்யூனிஸ்டு கட்சிகள் ஆதரவு
மாநில பொதுசெயலாளர் அப்துல் சமது தகவல் திருச்சி, ஜுலை.21-திருச்சி மாநகராட்சி 28-வது வார்டு இடைத்தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் மீரான் மைதீனுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளது.இது குறித்து மனிதநேய மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் அப்துல்சமது திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:-கண்டனம்திருச்சி மாநகராட்சி 28-வது வார்டு இடைத்தேர்தலில் எங்கள் கட்சி வேட்பாளர்மீரான் மைதீன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து எங்கள் கட்சியினர் பிரசராம் செய்த சென்ற போது, தி.மு.க.வினர் வாக்காளர்களுக்கு வேட்டி- சேலைகளை வழங்கி உள்ளனர். இதை கொடுத்த தி.மு.க.வினர் மீது போலீசார் எந்த வித வழக்குப்பதிவு செய்யவில்லை. அதற்கு மாறாக பஸ் மீது கல்வீசியதாகவும் எங்கள் கட்சியினர் மீது பொய் வழக்குபதிவு செய்துள்ளனர்.கம்யூனிஸ்டு கட்சிகள் ஆதரவுஅதைப்போல, மனித நேயமக்கள் கட்சி விமானநிலைய தலைவர் பாபா பக்ரூதீன் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது சாதாரண வழக்கு போட்டு உள்ளனர். ஆனால் அரசு ஆஸ்பத்திரியில் கூடிய மனிதநேய மக்கள் கட்சியினர் 8 பேர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு போட்டு உள்ளனர். இது கண்டனத்துக்குரியதாகும். பொய் வழக்கு போட்டு கைது செய்யப்பட்ட எங்கள் கட்சியினரை போலீசார் விடுதலை செய்ய வேண்டும். நாங்கள் அமைதியான முறையில் தேர்தல் நடைபெறுவதை விரும்புகிறோம். இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆதரவை தருகின்றனர். அதுபோல, இந்த தேர்தலில் போட்டியிடாமல் இருக்கும் அ.தி.மு.க. கட்சியிடம் ஆதரவை கேட்டு உள்ளோம்.இவ்வாறு அவர் பேசினார்.பேட்டியின் போது திருச்சி மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி செயலாளர் பஷீர்அகமது, மாவட்ட துணைச்செலயாளர்கள் ரியாசுதீன், ராஜாமுகமது, வக்கீல காஜாமைதீன் ஆகியோர் உடன் இருந்தனர்.
நன்றி: தினத்தந்தி

Wednesday, July 21, 2010

மீனவர்களை கொல்லாதே! வேதாரண்யத்தில் மமக ஆர்ப்பாட்டம்

இந்திய இலங்கை கடற்பகுதியில் சமீபத்தில் நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த செல்லப்பன் என்ற மீனவரை இலங்கை ராணுவம் சுட்டுக் கொன்றது. தொடர்ந்து தமிழக மீனவர்களை கொல்லும் இலங்கை ராணுவத்தைக் கண்டித்து ஜூலை 16 அன்று நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் மமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
மமக து.பொதுச் செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி கண்டன உரையாற்றினார். மமக மாவட்டச் செயலாளர் முபாரக், ஒன்றியச் செயலாளர் நஸ்ருல் இஸ்லாம், தமுமுக மாவட்ட நிர்வாகிகள் ஜபருல்லாஹ், சாகுல், பரக்கத்அலி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள்.

ராசிபுரத்தில் மமக வேட்பாளர் கடத்தல்

நாமக்கல் மாவட்டம் ராசி புரத்தில் 1-வது வார்டுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் ம.ம.க சார்பில் மஹாலெட்சுமி என்ற பெண் வேட்பாளர் நிறுத் தப்பட்டார். அவருக்கு அமோக ஆதரவு பெருகியது.இங்கு இவருக்கும், திமுக வேட்பாளருக்கும் இடையேதான் போட்டியாக இருந்தது. இந்நிலையில் பயந்துபோன திமுகவி னர், கோழைத்தனமாக மஹா லெட்சுமியையும், அவரது கணவ ரையும் இரவோடு இரவாக கடத்தி சென்றனர்.
இச்செய்தியறிந்த நாமக்கல், ஈரோடு, சேலம் மாவட்ட ம.ம.க நிர்வாகிகள் ராசிபுரம் சென்று மறியலில் ஈடுபட்டனர்.
மஹாலெட்சுமியையும், அவரது கணவரையும் கொலை மிரட்டல் விட்ட திமுகவினர், கடைசி நேரத்தில் அவர்களை மிரட்டி, வட்டாட்சியர் அலுவலகத்திற்கு, யாருக்கும் தெரியாமல் கூட்டி சென்று வேட்பு மனுவை வாபஸ் வாங்க வைத்திருக்கின்றனர்.தேர்தல் களத்தை நேரடியாகவும், நேர்மையாகவும் சந்திக்க திராணி யற்ற திமுக கோழைகள் குறுக்கு வழியில் கோழைத்தனமாக செயல்படுகின்றனர். இதுதான் நெஞ்சுக்கு நீதியோ...

Tuesday, July 20, 2010

விருதுநகர் மாவட்ட தமுமுகவைப் பாராட்டி விருது

விருதுநகர் மாவட்டம் சிவகாசி டாக்டர்ஸ் அசோசியேஷன் சார்பாக மருத்துவதினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இந்நிகழ்ச்சியில் தமுமுகவின் அவசர இரத்ததானம் மற்றும் ஆம்புலன்ஸ் சேவையைப் பாராட்டி விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சிவகாசியை சேர்ந்த 150 மருத்துவர்கள் கலந்து கொண்டனர். சிவகாசி மருத்துவ சங்க தலைவர் டாக்டர். அனில் குமார் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். மருத்துவ சங்க செயலாளர் வரவேற்றுப் பேசினார்.

Monday, July 19, 2010

சவுதி அல்ஹஸா மாநகர தமுமுக பொதுக்குழு



தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சவுதி அரேபியா அல்ஹஸா மாநகர பொதுக்குழு கூட்டம் மாநகர தலைவர் அஹமது சுகர்னோ தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று காலை முதல் மாலை வரை மார்க்க அரங்கம், சமுதாய அரங்கம் - அரசியல் அரங்கம் என பிரிவுகளாக நடைப்பெற்றது தலைமையுரையாற்றி பேசிய தமுமுக மாநகர தலைவர் சகோ.அஹமது சுகர்னோ, ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்குரலாக விளங்கும் தமுமுக பணிகள் இன்னும் சிறப்பாக நடைப்பெற உறுப்பினர்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பும் மிகவும் அவசியம் என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து வரவேற்புரையாற்றிய சகோ. லால்பேட்டை அமானுல்லாஹ் தனது உரையில், வெளிநாட்டு வாழ்க்கையில் பொருள் ஈட்டுவது மட்டுமே ஒரே குறிக்கோள் என்றில்லாமல், சமுதாயத்திற்கான தேவைகளில் ஒவ்வொருவர்களின் பங்களிப்பினையும் தனது உதவும் கரங்களை கொண்டு அழுத்தமாக நல்கி வரும் இயக்கம் தமுமுக தான் என்று குறிப்பிட்டார்.
மார்க்க அரங்கத்தில் முதல் நிகழ்ச்சியாக, “தியாகம் – ஓர் இஸ்லாமிய பார்வை” என்ற தலைப்பில் உரையாற்றிய மவ்லவி. அப்துல் ஹக் ஜமாலி, மனிதன் நன்றி கெட்டவனாக இருக்கிறான், தியாகம் என்பதே இங்கே சுயநலன் சார்ந்து தான் இருக்கிறது, இந்த உலகில் செய்யப்படும் தியாகங்கள் என்ற பெயரில் செய்யப்படும் தியாகங்கள் எல்லாமே தியாகம் அல்ல. தியாகம் என்ற வார்த்தைக்கு இலக்கணமாகவே வாழ்ந்தவர்கள் ஸஹாபாக்கள் தான் என்றார்.
தொடர்ந்து, இஸ்லாம் வலியுறுத்தும் சமத்துவம் – சகோதரத்துவம் என்ற தலைப்பில் உரையாற்றிய தமுமுக அப்கேக் நகர பொருளாளர் சகோ. அப்கேக் அப்துல் மூமின், “இஸ்லாமியர்களிடையே தொழுகையில் இருக்கும் சமத்துவம், மற்ற விஷயங்களில் இல்லாமல் போனது ஏன்?” என்று வினா எழுப்பி அனைவர்களின் சிந்தனையும் தூண்டினார். மேலும் இஸ்லாம் வலியுறுத்தும் கொள்கைகள் எல்லாம் பின்பற்றுவதற்காக தான், புறக்கணிப்பதற்காக அல்ல என்றும் வலியுறுத்தினார்.
மார்க்க அரங்கின் நிறைவுப் பகுதியாக ஒளுச் செய்வது எப்படி என்று செயல் விளக்கப் பயிற்சியினை தமுமுக அல்ஹஸா மாநகர தலைவர் சகோ.அஹமது சுகர்னோ செய்து காட்டினார். தொடர்ந்து உறுப்பினர்களும் ஒளுச் செய்வது குறித்து சிறப்பாக செய்து காட்டினர்.
ஜும்ஆ பேருரை நிகழ்த்திய தமுமுக கிழக்கு மண்டல துணை தலைவர் மவ்லவி அலாவுதின் பாகவி, மறுமையில் சுவனத்தில் நுழைவது மட்டுமே வெற்றி, சுவனத்தில் நுழைபவர்களே வெற்றியாளர்கள் என்று குறிப்பிட்டு தனது உரையினை நிறைவுச் செய்தார்.
உணவு இடைவேளைக்கு பிறகு கூடிய இரண்டாம் அமர்வில் சிறப்புரையாற்றிய தமுமுக கிழக்கு மண்டல துணை தலைவர் சகோ.அப்கேக் அப்துல் அலீம், தனது உரையில், “ இந்த இயக்கத்தின் செயல்பாடுகளுக்கு அடிப்படையே குர்ஆன் – ஹதீஸ் தான். இன்று தமிழகத்தில் சமுதாய மக்களிடையே இருக்கும், பாதுகாப்பு உணர்வு, தமுமுக துவங்கப்படுவதற்கு முன் இல்லை என்றார்.
நமக்கு கிடைக்கவேண்டிய உரிமைகளுக்காக ஆட்சியாளர்களின் கவனத்தினை ஈர்ப்பதற்காக போராட்டம், மறியல், தர்ணா போன்ற அறவழி போராட்டங்கள் எல்லாம் மக்களுக்கு தெரிந்திருக்கவில்லை, ஒருவர் தவறாக கைது செய்யப்பட்டால் நீதிமன்றங்களை அணுகுவது எப்படி, காவல்துறை - அரசு அதிகாரிகளை அணுகுவது எப்படி போன்ற அடிப்படை விஷயங்களை கூட மக்கள் தெரிந்திராமல் இருந்தனர். அல்ஹம்துலில்லாஹ், தமுமுக-வின் வருகைக்கு பிறகே மக்கள் இதுப்போன்ற விஷயங்களை கவனத்தில் கொண்டனர்.
வாழ்வில் தன்னுடைய வறுமையை எதிர்த்து போராடும் அதேவேளையில் சமுதாயத்திற்காக தமிழ்நாட்டில் களத்தில் நின்று போராடி இரத்தம் சிந்தவும் தயாராக இருக்கும் போராளிகளின் உழைப்பினை வெளிநாடு வாழ் தமிழர்களாகிய நாம் பெரிதும் மதித்து அவர்களுக்கு உதவ வேண்டும்.
நம் சமுதாய அக்கறை இல்லாமல் சுயநலவாதிகளால் கொல்லப்பட்டு உயிரிழந்தவர்கள் எல்லாம் நம் சொந்தம் தான். அவர்களுக்கு உதவுவது நமது கடமை என்றார். வருங்கால தலைமுறை நிம்மதியாக இருக்க தமுமுக-வின் செயல்பாடுகளே காரணம் என்று குறிப்பிட்டு , அனைவர்களின் சிந்தனையையும் தூண்டி உரையினை நிறைவுச் செய்தார்.
“அரசியல் அரங்கில் நிறைவுரையாற்றிய தமுமுக கிழக்கு மண்டல துணை தலைவர் மவ்லவி அலாவுதின் பாகவி,. ம.ம.க-வின் ஒவ்வொரு அசைவும் மற்ற கட்சிகளால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகின்றது.
கல்வி கற்பதற்கு இஸ்லாமியர்கள் லாயக்கு இல்லை என்று ஆதிக்க சக்திகளால் செய்யப்பட்டிருந்த தப்பான கற்பிதம் நெல்லை மாணவியின் ஜாஸ்மின் செய்த சாதனை மூலம் நொறுக்கப்பட்டிருக்கிறது. ஆட்சி, அதிகாரம் எல்லாம் நம்மிடையே வருவதற்கு நிறைய ஆட்சிப் பணி அதிகாரிகள் உருவாக வேண்டும், அதற்காக தமுமுக கடுமையாக உழைக்கிறது.
தமுமுக-வின் செய்தித்தாளான மக்கள் உரிமை விற்பனையில் தொய்வு ஏற்பட அனுமதிக்க கூடாது, விற்பனையை அதிகரிக்கும் பொறுப்பு ஒவ்வொரு நிர்வாகிகளுக்கும் உண்டு.
ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கான இயக்கம் என்று இல்லாமல் சமூகம் தாண்டிய சேவைகளை புரிவதில் ம.ம.க. முன்ணணியில் இருக்கிறது என்று குறிப்பிட்டு தனது உரையினை நிறைவு செய்தார்.
இறுதியாக சுபஹான் நன்றியுரையாற்றினார். பொதுக்குழு கூட்ட அரங்க ஏற்பாடுகளை குன்னம் ராஜ் முஹம்மது, ஆயங்குடி அப்துஸ் ஸலாம் ஆகியோரும், உணவு ஏற்பாடுகளை கொள்ளிடம் அப்துல் ரஹ்மான், கந்தகுமாரன் அமானுல்லாஹ், இராஜகெம்பீரம் சிக்கந்தர், பாட்சா பின்னத்துர் முஹம்மது ரஃபி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

சட்டசபை தேர்தலில் போட்டியிட கூட்டணி த.மு.மு.க., மாநில தலைவர் உறுதி

விழுப்புரம் : "மனித நேய மக்கள் கட்சி, வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட கூட்டணி விரைவில் அறிவிக்கப்படும்' என, த.மு.மு.க., மாநில தலைவர் ஜவாஹிருல்லா கூறினார். இது குறித்து த.மு.மு.க., மாநில தலைவரும், மனித நேய மக்கள் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளருமான ஜவாஹிருல்லா நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் 69 சதவீதம் இடஒதுக்கீடு குறித்து சமீபத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில், இது இன்னும் ஓராண்டு நீடிக்குமென கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தபட்ட பழங்குடி இன மக்கள் 80 சதவீதம் உள்ளனர். இதற்கான தகுந்த புள்ளி விவரங்களை தமிழக பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். இட ஒதுக்கீட்டு உச்ச வரம்பை அதிகரிக்க, சிறை செல்லவும் தயாராக உள்ளதாக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
உச்சவரம்பை அதிகரிக்க அரசு சார்பில் அனைத்து அரசியல் கட்சிகள், சமூகநல அமைப்புகளின் கூட்டத்தை கூட்ட வேண்டும். 50 சதவீத இட ஒதுக்கீடு என்பது சமூகநீதிக்கு எதிரானது. இது மாநில அரசின் உரிமையில் தலையிடுவதாக உள்ளது. சிறுபான்மையின மக்களுக்கு 3.5 சதவீத இடஒதுக்கீடு போதாது. கூடுதலாக தர வேண்டும். அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு தர வேண்டும். மனித நேய மக்கள் கட்சி, வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிடும். அதற்கான கூட்டணியும் விரைவில் அறிவிக்கப்படும்.
கடந்த ஒரு மாதத்திற்கு முன், விழுப்புரம் மாவட்டம் சித்தணியில் நடந்த ரயில் குண்டு வெடிப்பு சம்பவத்தில் இதுவரை குற்றவாளிகள் கண்டு பிடிக்காமல் இருப்பது துரதிர்ஷ்டவசமானது. போலீசார் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். இவ்வாறு த.மு.மு.க., மாநில தலைவர் ஜவாஹிருல்லா கூறினார்.
தலைமை நிர்வாகக் குழு உறுப்பினர் குணங்குடி அனீபா, மாவட்ட தலைவர் அப்துல் காதர் உடனிருந்தனர்.
நன்றி: தினமலர்

முஸ்லிம் முன்னேற்றக் கழகத்திற்கு துபாய் அரசு பாராட்டுச் சான்றிதழ்


முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் துபாய் மண்டலம் சார்பாக மக்கள் பயன் பெறும்வகையில் இரத்ததான முகாம்கள் பரவலாக பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது.கடந்த இரண்டு வருடங்களில் அதிகப்படியான நபர்கள் கலந்துக் கொண்டு இரத்தத்தைதானமாக அளித்தமைக்காக துபாய் அரசாங்கமும், துபாய் மருத்துவனைகளின் உயரிய கூட்டமைப்பும் இணைந்து பாராட்டுச் சான்றிதழை வழங்கியது.
ஜூலை 16ம் தேதி துபாயில் முமுக ஏற்பாடு செய்திருந்த முகாமை பார்வையிட்ட
மருத்துவக் குழு அதிகாரிகள் அதன் பின் அல் வாசல் மருத்துவனையில் நடைபெற்ற

Thursday, July 15, 2010

உருது மொழியை நசுக்கும் கட்டாய மொழிக் கொள்கையைக் கண்டித்து வாணியம்பாடியில் மாபெரும் ஆர்ப்பாட்டம்


உருது மொழியை பாகம்-1 (Part-1) ஆகக் கற்பதற்கு இரு ந்த வாய்ப்பைத் தமிழக அரசு பறித்திருப்பதைக் கண்டித்து 10.7.2010 அன்று வாணியம்பாடி யில் மாபெரும் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.


மாவட்டத் தலைவர் ஏ.அஸ்லம் பாஷா, தலைமை வகிக்க மாவட்ட, நகர, கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

தலைமைக்கழக அலு வலகச் செயலாளர் ஜெ.வசீம் அக்ரம் ஆர்ப்பாட்டத்தை ஒருங்கிணைத் தார். உருது, மற்றும் தமிழில் கண்டன முழக்கங்கள் எழுப்பப் பட்டன. மாநிலச் செயலாளர் பேரா.ஜெ.ஹாஜகனி ம.ம.க அமை ப்புச் செயலாளர் நாசர் உமரி, ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

வாணியம்பாடி பகுதிப் பிர முகர்களும், ஜமாஅத் தலைவர் களும், ஆசிரியர்களும், மாணவர் களும் இப்போராட்டத்தில் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.

வாணியம்பாடியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாக மக்கள் பங்கேற்றது இதுதான் முதல் முறை என பொதுமக்கள் தெரிவித்தனர்.

ராஷ்ட்ரிய சகாரா, உள்ளிட்ட தேசிய ஊடகங்களின் செய்தியா ளர்கள் த.மு.மு.க&வின் நிலைபாட்டை கேட்டறிந்தனர்.

நகர அமைப்புக் குழுத்தலைவர் டி.ஆர்.ஷவ்கத், உஸ்மான், எஸ். ரபீக், ஏ.எம்.பாஷா, பீ.ரஜாக், ஆம்பூர் நசீர், ஆகியோர் போராட்ட ஏற்பாடுகளை சிறப்பாகச் செய்திருந்தனர்.

www.tmmk.info

இராமநாதபுரம் ம.ம.க., செயலாளருக்கு நினைவுப்பரிசு

உலக குருதி கொடையாளர் தின விழிப்புணர்வு ஊர்வலம் ராமநாதபுரம் அரண்மனை முன் நடந்தது. கலெக்டர் ஹரிஹரன் தொடங்கி வைத்தார். ரத்த தானத்திற்கு உதவியாக இருந்த ம.ம.க., செயலாளர் சலிமுல்லாகான், ஆசிரியர் அய்யப்பன், டாக்டர் சந்திரமவுலி ஆகியோருக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.

Wednesday, July 14, 2010

குருதி கொடையாளர் தின ஊர்வலம்

ராமநாதபுரம்: உலக குருதி கொடையாளர் தின விழிப்புணர்வு ஊர்வலம் ராமநாதபுரம் அரண்மனை முன் நடந்தது. கலெக்டர் ஹரிஹரன் தொடங்கி வைத்தார். ரத்த தானத்திற்கு உதவியாக இருந்த ம.ம.க., செயலாளர் சலிமுல்லாகான், ஆசிரியர் அய்யப்பன், டாக்டர் சந்திரமவுலி ஆகியோருக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. சுகாதார பணிகள் இணை இயக்குனர் இப்ராஹிம் அலி, சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் உமா மகேஸ்வரி. மாவட்ட ரத்த வங்கி மருத்துவ அலுவலர் சகாய ஸ்டீபன்ராஜ், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு பிரிவு திட்ட மேலாளர் முகமது ஹசீன் உட்பட பலரும் பங்கேற்றனர்.

தமிழக மந்திரி பழனிசாமியிடம், சிறைத்துறை டி.ஐ.ஜி. யிடம் த மு மு க, ம ம க, மனு



கோவை, ஜீலை. 13-

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாநில மாநில செயலாளர் கோவை இ உம்மர் மற்றும் மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சுல்தான் அமீர் உள்ளிட்ட 10 பேர் தமிழக ஊரக தொழில் துறை அமைச்சர் பொங்கலுர் பழனிசாமியை சந்தித்து மனு அளித்தார். அதில் அன்சாரியை மீண்டும் கோவை ஜெயிலுக்கு மாற்ற வேண்டும் என கூறி இருந்தனர். மற்ற விபரங்களை கேட்ட அமைச்சர் நான் தமிழக முதல்அமைச்சர், சட்ட துறை அமைச்சர், கலந்து பேசிவிட்டு உங்களுக்கு நல்ல முடிவு சொல்லுகிறேன், பிறகு கோவை மத்திய சிறையில் உள்ள சிறைத்துறை துனைதலைவர் கோவிந்தராஜை சந்தித்து மனு அளித்தார். சந்தித்து விட்டு வெளியே வந்த தமுமுக மாநில செயலாளர் உம்மர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அன்சாரிக்கு இருதய நோய் நீரிழிவு நோய் உள்ளது. கைக்குழந்தைகளும் உள்ளது. அவரை எந்த வித முன் அறிவிப்பு இன்றி சென்னை புழல் ஜெயிலுக்கு மாற்றி உள்ளனர். இங்கிருந்தால் அவரது மனைவி உறவினர்கள் சென்று பார்க்க வசதியாக இருக்கும் எனவே மனிதாபிமான அடிப்படையில் அன்சாரியை மீண்டும் கோவை ஜெயிலுக்கு கொண்டு வர வேண்டும், எங்கள் அமைப்பின் நிர்வாக குழு கூட்டம் 14 ம்தேதி நடக்க இருக்கிறது கூட்டத்தின் முடிவில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அறிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.


பேட்டியின் போது சிறுபான்மை உதவி அறக்கட்டளை நிர்வாகி கோவை தங்கப்பா, தமுமுக மாவட்ட தலைவர் அப்துல் பஷிர்,துனைதலைவர் பர்கத்துல்லாஹ், செயலாளர் ரபிக், பொருளாளர் அகமது கபீர், அதுபோல் மமக மாவட்ட செயலாளர் சுல்தான் அமீர், துனைசெயலாளர்கள் அப்பாஸ், ஷாஜகான், மாவட்ட பொருளாளர் அப்பாஸ், இளைஞர் அணி செயலாளர் அக் ஷியா நிசார் ஆகியோர் உடன் இருந்தார்கள்.

செய்தி புகைப்படம்: மீடியா வாயஸ்


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மதுரை மாவட்ட நிர்வாகிகள் மாற்றம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலளார் எஸ். ஹைதர் அலி வெளியிடும் அறிக்கை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மதுரை மாவட்ட நிர்வாகிகளாக இருந்த எம்.ஏ. சீனி அஹ்மது, ஜே.கே.இப்னு மற்றும் ஏ.நூர் முஹம்மது ஆகியோர் தங்கள் பதவியை துஷ்பிரயோகம் செய்து பாதிக்கப்பட்ட மக்களிடம் வலுக்கட்டாயமாக பணம் வாங்கிக் கொண்டதுடன் மதுரையில் உள்ள சில சமூக விரோதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்துள்ளது அவர்கள் மீது நடத்தப்பட்ட விசாரணையில் தெரிய வருகின்றது. இது குறித்து அவர்களுக்கு அளிக்கப்பட்ட விளக்கம் கோரும் கடிதத்திற்கும் அவர்கள் பதில் தரவில்லை. கழகத்தின் கண்ணியத்தையும் கட்டுப்பாட்டையும் மீறும் வகையில் செயல்பட்ட இந்த மூவரும் த.மு.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறார்கள். மதுரையில் 09-07-10 மாலை நடைபெற்ற மதுரை மாவட்ட தமுமுகவின் செயல்வீரர் கூட்டத்தில் தமுமுக தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் பங்குக் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த வீடியோ காட்சிகளை போட்டு காட்டினார்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மதுரை மாவட்ட தற்கால நிர்வாக அமைப்பு கே. முஹம்மது கவுஸ் அவர்கள் தலைமையில் இயங்கும். தற்கால நிர்வாக அமைப்பின் உறுப்பினர்களாக கஜினி முஹம்மது, அப்பாஸ், அஜ்மீர் அலி மற்றும் காதர் முகைதீன் ஆகியோர் செயல்படுவார்கள்.

இடைத்தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சி போட்டி

திருச்சி 28வது வார்டு இடைத்தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சி போட்டி







திருச்சி மாநகராட்சி 28வது வார்டுக்கு எதிர் வரும் 22ஆம் நாள் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளராக மீராமைதீன் (45) அறிவிக்கப்பட்டுள்ளார். திருச்சி மாநகராட்சி 28வது வார்டு பகுதியில் காமராஜர் நகரில் வகித்து வரும் மீரா மைதீன் ரெடிமேட் துணிக்கடை நடத்தி வருகிறார்.

குடிநீர் பிரட்சினையை தீர்ப்பது, இலவச பட்டா வழங்குவது முதலியவற்றை தனது பிராதான தேர்தல் வாக்குறுதிகளா களத்தில் மீரா மைதீன் இறங்கியுள்ளார்.
--------------------------------------------------------------------------------------------------

மீஞ்சூர் பேரூராட்சி 1வது வார்டு இடைத்தேர்தல் மனிதநேய மக்கள் கட்சி போட்டி


திருவள்ளுர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சி மன்ற 1வது வார்டு இடைத்தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சியின் நகரச் செயலாளர் செய்யது முகம்மது வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

மீஞ்சூர் பேரூராட்சி அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் செயல் அலுவலர் செல்வமணியிடம் செய்யது முகம்மது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

Tuesday, July 13, 2010

முஸ்லிம் பெண்களின் நிகாப் மீதான தடையை எதிர்க்கும் அமெரிக்கர்கள்

வாஷிங்டன்:முஸ்லிம் பெண்கள் நிகாப் அணிவது ஃப்ரான்ஸில் சட்டவிரோதமாக்கப்படும் மசோதா இன்னும் ஓரிரு நாளில் ஃபிரான்ஸ் பாராளுமன்றத்தில் வாக்களிக்கப்படவுள்ள நிலையில், அமெரிக்கர்கள் இத்தடையை எதிர்க்கின்றனர்.

பெவ் எனும் ஆராய்ச்சியாளர் மேற்கொண்ட கருத்துக் கணிப்பில் ஃபிரான்ஸில் 10-ல் 8-பேர் பொது இடங்களில் நிகாப் மீதான தடையை ஆதரித்துள்ளனர். வெறும் 17% ஃபிரான்ஸ் மக்களே தடையை எதிர்க்கின்றனர். ஜெர்மனியில் 71%, பிரிட்டனில் 62%, ஸ்பெயின் 59% மக்களும் தடையை ஆதரிக்கின்றனர்.ஆனால் நிகாப் மீதான தடையை மூன்றில் இரண்டு அமெரிக்கர்கள் எதிர்க்கின்றனர்.

ஃப்ரான்ஸின் தேசிய தினத்திற்கு முந்தய நாளான ஜூலை 13 அன்று பாராளுமன்றத்தில் பொதுயிடங்களில் நிகாபிற்கு தடை விதிப்பது குறித்து வாக்கு எண்ணிக்கை நடக்கயிருக்கிறது.

ஒப்புதல் வேண்டி மேல்சபைக்கு(செனட்) அனுப்பி வைக்கப்படும், செப்டம்பரில் முடிவு தெரியும்.

இதன்படி பொதுயிடங்களில் முழுமுகத்திரையுடன் பெண்கள் பிடிபட்டால் 150 யூரோ (190 டாலர்) அபராதமும், ஆண்கள் மனைவியை அல்லது பிள்ளைகளை நிர்பந்தித்தால் 30,000 யூரோ அபராதமும், ஒரு ஆண்டு சிறைத் தண்டனையும் கிடைக்கும்.

ஃப்ரான்ஸில் சிறுபான்மையாகயிருக்கும் முஸ்லிம் பெண்களை இந்த சட்டம் பெரிதும் பாதிக்கும். 1,900 பேர் மட்டுமே நிகாப் அணிவதாக அமைச்சகம் தெரிவிக்கிறது. இதேபோன்று சட்டங்கள் பெல்ஜியம், ஸ்பெயினில் நிலுவையில் உள்ளது,

ஆனால் குறிப்பாக ஐரோப்பாவின் சிறுபான்மை முஸ்லிம்களை பெரியளவில் கொண்டிருக்கும் ஃப்ரான்ஸில் மட்டுமே பெரிதும் புண்படுத்துகிறது.
நன்றி: பாலைவனத்தூது

அல் உம்மா இயக்க தலைவர் முஹம்மது அன்சாரி கோவை மத்திய சிறையில் இருந்து சென்னை புழல் சிறைக்கு மாற்றம்



அவர் மனைவி சம்சுநிஷா மூன்று பெண் குழந்தைகளுடன்
கோவை கலெக்டர் அலுவலகத்தில் உள் இருப்பு போராட்டம்



கோவை ஜீலை 11-
அல் உம்மா தலைவர் முஹம்மது அன்சாரி, கோவை மத்திய சிறையில் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று
கோவை மத்திய சிறையில் உள்ளார். இவரை சென்னை புழல் சிறைக்கு மாற்றி சிறை நிர்வாகம் உத்திரவிட்டது. இதையடுத்து அன்சாரி
பலத்த பாதுகாப்புடன் (10ம் தேதி சனிகிழமை ) சென்னை புழல் சிறைக்கு கொண்டு சொல்லப்பட்டார்.

இந்த தகவலையை சிறுபான்மை உதவி அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு தெரியவந்தது. உடனே சமுதாய இயக்க தலைவர்கள், தமுமுக
தலைவர் ஜவாஹிருல்லாஹ், பொதுச் செயலாளர் ஹைதர் அலி,கோவை இ உம்மர், முஸ்லிம் லீக் தலைவர் காதர்மைதீன், அப்துல்
ரஹ்மான் எம்.பி, இந்திய தவ்ஹித் ஜமாத் தலைவர் பாக்கர், பாப்புலர் ஃபிரண்ட் மாநில துனை தலைவர் இஸ்மாயில், குணங்குடி
அனிபா, மற்றும் அரசு உயர்அதிகாரிகளுக்கு அறக்கட்டளை நிர்வாகி கோவை தங்கப்பா, தகவல் தெரிவித்தார்.
இதற்கிடையில் அன்சாரி மனைவிக்கு தகவல் கிடைக்க புழலுக்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்து தன் மூன்று பெண் குழந்தைகளுடன்
கலெக்டர் அலுவலகத்தில் உள் இருப்பு போராட்டம் நடத்தினர். பிறகு காவல் துறை உயர் அதிகாரிகள் பேச்சு வார்த்தைக்கு பிறகு
கோவை குற்றவியல் அலுவலக மேலாளர் மல்லிகாவிடம் மனு அளித்தனர். பிறகு கலெக்டர் வேறு நிகழ்ச்சியில் உள்ளதால் அவர்
அன்சாரி மனைவியிடம் தொலை பேசி தொடர்பு கொண்டு உங்கள் கணவரை கோவை மத்திய சிறைக்கு மாற்ற சிறை நிர்வாத்திற்க்கு
பரிந்துறை செய்கிறேன்.

பிறகு உள்துறை செயலாளர் அவர்களுக்கு கலெக்டர் அலுவலக முலம் மனு கொடுத்தார். அளித்தார் விபரம்
கோவையில் நடந்த வெடிகுண்டு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று கடந்த 13 வருடங்களாக கோவை மத்திய சிறையிலேயே தன்
தண்டனை காலத்தை கழித்து வரும் எனது கணவர் முஹம்மது அன்சாரி எக்காரணமும் இல்லாமல் மிகக் கொடுமையான முறையில்
அதிகாலை 5 மணிக்கு சிறைமாற்றம் செய்யப்பட்டுள்ளார
எங்களுக்கு திருமணமாகி இரண்டு கைக்குழந்தைகள் உட்பட மூன்று பெண் குழந்தைகள் உண்டு. எனது கணவர் ஏற்கனவே
கடுமையான நீரழிவு நோயாலும் அவதிப்பட்டு வருகிறார். மேலும் அவருக்கு இருதய நோயும் உண்டு நான் சென்ற முறை வியாழன்று
நேர்கானல் சென்ற போது மிகவும் சோர்வாக இருந்தார்.
நானும் எங்களது குடும்பத்தார் அனைவரும் கோவையில் தான் வசிக்கின்றோம். சிறைமாற்றம் செய்த காரணத்தால் எங்களின்
குடும்பத்தாருக்கும், எங்களது குழந்தைகளுக்கும் மிக நீண்ட தூரம் பயணம் செய்து மனு நேர்காணல் சென்று காண சிரமமாக இருக்கும்
என்பதை கருத்தில் கொண்டு அவரை கோவை மத்திய சிறைக்கே மாற்ற செய்து தரும்படி தாங்களை அன்புடன் கேட்டு கொள்கிறேன்.
என மனுவில் கூறியுள்ளனர்.
இதற்கான ஏற்பாடுகளை சிறுபான்மை உதவி அறக்கட்டளை நிர்வாகிகள் உம்மா ஷா, கோவை தங்கப்பா, அபுதாஹிர், தாஜ்பாபு, ரபிக், ஏர்டெல் அபு ஆகியோர் செய்து வந்தார்கள்.







Monday, July 12, 2010

துறைமுகம் ம.ம.க சார்பில் வாக்காளர் பட்டியலில் பெயர் சரி பார்ப்பு பணி


வடசென்னை மாவட்டம் துறைமுகம் பகுதி மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் வாக்காளர் பட்டியலில் பெயர் சரி பார்ப்பு மற்றும் விடுபட்டவர்களின் பெயர் இணைப்பு முகாம் நடைபெற்றது.

இதில் ஏராளமான வாக்காளர்கள் தங்கள் பெயரை சரி பார்த்துக் கொண்டதோடு, விடுபட்டவர்கள் தங்களின் பெயர்களையும் இணைத்துக் கொண்டனர்.

ஜூலை 16ல் காஷ்மீரின் மனிதஉரிமை மீறுதல்களை கண்டித்து தமுமுகவின் போராட்டம்

இன்ஷா அல்லாஹ், ஜூலை 16 அன்று காஷ்மீரில் நடைப்பெறும் மனித உரிமை மீறுதல்களை கண்டித்து தமுமுக சார்பில் சென்னையில் போராட்டம் நடைபெறுகிறது. நீதிக்கு குரல் கொடுக்க அணிதிரள்வீர்!!


Thursday, July 8, 2010

முழுத்த்திறன் கொண்ட அறிவு ஜீவி' என்ற பட்டத்தை பெறும் முதல் இந்திய முஸ்லிம் மாணவி


பாட்னா தனது சமூகத்திற்கு புகழ் சேர்க்கும் விதமாக பீகாரை சேர்ந்த ஜீஷான் அலி என்ற மாணவி 'முழுத்திறன் கொண்ட அறிவு ஜீவி' என்ற பட்டத்தை பெற்றுப் பெருமை சேர்த்துள்ளார்.

அமெரிக்க-இந்திய கல்வி நிறுவனமான USIEF இப்பட்டத்தை ஜீஷான் அலிக்கு வழங்கவுள்ளது.இப்பட்டத்தை பீகாரைச் சேர்ந்த முஸ்லிம் பெண்மணி பெறுவது இதுவே முதன் முறையாகும்.

"இச்செய்தியை கேட்டதும் நான் வியப்படைந்தேன், அளவு கடந்த மகிழ்ச்சியடைந்துள்ளேன், நான் உண்மையாகவே கவுரவிக்கப்பட்டுள்ளேன்" பாட்னா பல்கலைகழக Ph.D மாணவி ஜீஷான் பேட்டியளிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.

USIEFன் முழுத்திறன் அந்நிய மொழி கற்பித்தல் உதவியாளர் (FLTA) என்ற திட்டத்தின் மூலம் இவர் இப்பட்டத்தை பெற்றிருக்கிறார். இத்திட்டத்தின் மூலம், 21-29 வயதுள்ள இந்தியர்கள் தற்போது கல்லூரிகளில் ஆங்கில ஆசிரியராகவோ அல்லது ஆங்கில ஆசிரியராக பயிற்சி எடுப்பவராக தேர்ந்தெடுக்கப்படுவர்.

அப்படி தேர்ந்தெடுக்கப்படும் ஆசிரியர்கள் அவர்களின் 9 மாத அமெரிக்க கல்லூரி வாழ்க்கையில் பெங்காலி, குஜராத்தி, ஹிந்தி அல்லது உருது சொல்லித்தர வேண்டும்.

இப்போட்டியில் சுமார் 150 நாடுகளிலிருந்து மாணவ மாணவியர்கள் பங்கு பெற்றனர். ஆனால் 60 நாடுகளை சேர்ந்தவர்களே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

மவ்லானா ஜாத் பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரியும் ஜீஷான் அலி, இத்திட்டத்தில் ஹிந்தி மற்றும் உருது கற்பிப்பார். இது தவிர, அமெரிக்காவிற்கான கலாச்சார தூதராகவும் பதவி வகிப்பார். இது தொடர்பாக, ஜூலை இறுதியில் இவர் அமெரிக்கா பயணிக்கவுள்ளார்

அமெரிக்காவின் டீநெக் நகர மேயராக இந்திய அமெரிக்க முஸ்லீம் தேர்வு

Hammeduddin
வாஷிங்டன்: அமெரிக்கா [^]வில் யூதர்கள் அதிகம் வசிக்கும் டீனெக் நகர மேயராக இந்திய அமெரிக்கரான முஸ்லீம் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அவரது பெயர் முகம்மது ஹமீதுதீன். ஆந்திர மாநிலம் ஹைதராபாத் தான் முகம்மதுவின் பூர்வீகம். இவர் நியூஜெர்சியில் உள்ள டீனெக் நகரின் மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த நகரில் யூதர்கள்தான் அதிகம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் மேயர் பதவிக்கு வந்த ஒரு சில முஸ்லீம்கள் வரிசையில் முகம்மதுவும் இணைந்துள்ளார். கடும் போட்டிக்கு மத்தியில்தான் முகம்மது மேயர் பதவிக்கு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

2 ஆண்டுகளுக்கு முன்பு மாநகரசபை உறுப்பினராக வென்றவர் முகம்மது. ஜூலை 1ம் தேதி நடந்த கவுன்சில் வருடாந்திர கூட்டத்தில் இவருக்கு ஆதரவாக 5 வாக்குகள் கிடைத்தன. மொத்தம் உள்ள வாக்குகள் எண்ணிக்கை 7 ஆகும்.

news by: oneindia.com

வாக்குகளை கவர்ந்துவரும் மமக! ..நக்கீரன்..



துபை மண்டலம் தமுமுக சார்பாக 6 வது இரத்த தான முகாம்


இன்ஷா அல்லாஹ் வருகின்ற 16 - 07 - 2010 வெள்ளிக்கிழமையன்று, முமுக – துபை மண்டலம் சார்பாக 6 வது மாபெரும் இரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இடம் : அல் வாசல் மருத்துவமனை, துபை
குறிப்பு : மருத்துவமனை செல்ல வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இரத்த தானம் கொடுக்க விரும்புவேர் தொடர்பு கொள்ள வேண்டிய
தொலைபேசி எண்கள் : 055-4128182, 055-8963384, 050-3949142

Tuesday, July 6, 2010

கருவிலிருக்கும் இருக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவும் மீன் உணவு!


கர்ப்பிணிப் பெண்கள் அதிகளவில் மீன் சாப்பிட்டால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி மிக நன்றாக இருக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும் பிறக்கும் குழந்தைக்கு மூளை தொடர்பான நோய்கள் வராமலும் தவிர்க்கலாம் என்றும் தெரியவந்துள்ளது.

லண்டன் மெட்ரோபாலிட்டன் பல்கலைக்கழகமும், அமெரிக்காவின் தேசிய நல்வாழ்வு மையமும் இணைந்து நடத்திய ஆய்வில் இந்த விவரங்கள் தெரியவந்தன.

இதுத் தொடர்பாக 11,875 கர்ப்பிணிப் பெண்களிடம் ஆய்வு நடத்தப்பட்டு இந்த முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்வை முன்னின்று நடத்திய பேராசிரியர் ஜேக் வின்க்லெர் கூறுகையில்,"கர்ப்ப காலத்தில் அதிகமான மீன்கள் உண்ணும் தாய்மார்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் மிகுந்த புத்திக் கூர்மையுடன் இருக்கும்.

அந்த சிசுக்கள் வயிற்றில் இருக்கும்போது மூளை தொடர்பான நோய்கள் தாக்குவதும் குறைவாக இருக்கும்.குழந்தைகளின் மூளையும் சிறப்பாக வளர்ச்சி அடையும்.

கர்ப்பிணிகளாக இருக்கும்போதே ஆரம்பித்து, பிரசவசத்துக்குப் பின் குழந்தைகளிடமும் இந்த ஆய்வு தொடர்ந்தது. அதில், கர்ப்பத்தின்போது மீன்கள் அதிகம் உண்ட தாய்களின் குழந்தைகளின் புத்திக் கூர்மையும், அவர்களது கை-கண் இணைந்து செயல்படுவதும்,தகவல் தொடர்பும் மிகச் சிறப்பாக இருப்பது தெரியவந்துள்ளது.

மூளை வளர்ச்சிக்கு முக்கியமான ஒமேகா-3 fatty acids’ (docosahexaenoic acid) மீன்களில் அதிகமாக காணப்படுவதே இதற்குக் காரணம்.

தாய், சிசுவின் உடலில் ‘ஒமேகா-3 fatty acids’ அளவு மிகவும் குறைவாக இருந்தால் குழந்தைகளுக்கு புத்தி மழுங்கவும் வாய்ப்புள்ளது.

32 வார கர்ப்ப காலத்தில் வாரத்துக்கு 340 கிராமுக்குக் குறைவாக மீன் உண்டவர்களின் குழந்தைகளுக்கு புத்திகூர்மை குறைவாகவே இருந்தது. அதிகம் உண்டவர்களின் குழந்தைகள் அகிக ஐ.கியூவுடன் மிக சுட்டியாக உள்ளன என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

வாக்களர் பட்டியலில் உங்கள் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதா ?

வாக்களர் பட்டியலில் நமது சமுதாயத்தை சேர்ந்தவர்களின் பெயர்களை வேண்டும் என்றே சேர்க்காமல் விட்டுவிடும் போக்கு தொட்ரகிறது.அதே நேரத்தில் நம் சமுதாயத்தை சேர்ந்தவர்களும் அலட்சிய போக்கோடு நடந்து வருகின்றனர்.நமது அரசியல் உரிமைகளை பெற நாம் வாக்களர் ஆவது முக்கியம்.எனவே உடனடியாக உங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்வோம்.மாணவரணியினர் இது குறித்து நோட்டீஸ் அடிப்பதோடு தனிநபர் பிரச்சாரம் செய்ய வேண்டும்.வாக்களர் பட்டியலில் பெயரை சேர்க்க விழிப்புணர்வு பிரசாரம் செய்வோம்.வாக்களர் பட்டியலில் உங்கள் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதா என்று சரிபார்க்க
http://www.elections.tn.gov.in/pdfs/acwise_pdf.asp

Saturday, July 3, 2010

ஜீலை 5 முழு அடைப்புக்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு

மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை

பெட்ரோல், டீசல், மண்ணெண்ணை, சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்வை கண்டித்து எதிர்கட்சிகள் ஜீலை 5 அன்று நடத்தும் முழு அடைப்பிற்கு முழுமையான ஆதரவை அளிப்பதென இன்று நடைபெற்ற மனிதநேய மக்கள் கட்சியின் உயர்நிலை குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு எடுத்துள்ள எரிபொருட்களின் விலை ஏற்றம் ஏழை, நடுத்தர மக்களை கடுமையாக வஞ்சிக்கும் கொடும் நடவடிக்கை ஆகும். ஓரிரு இந்திய பெருமுதலாளிகளுக்கும், சில பன்னாட்டு நிறுவனங்களுக்கும் ஆதரவாக இந்த விலை ஏற்றம் அமைந்துள்ளது. இந்த விலை ஏற்றத்தைக் கண்டித்து நாடு முழுவதும் இடதுசாரி கட்சிகள் அறிவித்துள்ள முழு அடைப்பு அவசியமான ஒன்று என்று மனிதநேய மக்கள் கட்சி கருதுகிறது.

இந்த முழு அடைப்பிற்கு முழுமையான ஒத்துழைப்பை அளிக்குமாறு அனைவரையும் மனிதநேய மக்கள் கட்சி கேட்டுக் கொள்கிறது.

விருத்தாசலத்தில் தீ விபத்து ம.ம.க உதவி



விருத்தாசலம் 26வது வார்டு பழமலை நகரில் இரண்டு வீடுகள் தீக்கு இறையாகின. இதில் பாதிக்கப் பட்ட நபர்களை விருத்தாச்சல மனிதநேய மக்கள் கட்சியினர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி உதவிகளை வழங்கினர்.