Monday, June 29, 2009

மண்டபம் ஒன்றியத்தில் த.மு.மு.க.வின் கல்வி உதவித் தொகை

மண்டபம் ஒன்றியத்தில் த.மு.மு.க.-ம.ம.க. சார்பில் 50 ஆயிரம் - மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை
பனைக்குளம்.ஜுன்.28-
மண்டபம் ஒன்றியத்தில் த.மு.மு.க., மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஏழை – எளிய மாணவ – மாணவிகளுக்கு 50 ஆயிரம் மதிப்பில் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது.கல்வி உதவித்தொகை
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் வேதாளை கிராமத்தில் உள்ள ஏழை-எளிய மாணவ – மாணவிகளுக்கு 50 ஆயிரம் செலவில் கல்வி உதவித்தொகை மற்றும் நோட்-புக் வழக்கும் விழா நேற்று முன்தினம் வேதாளையில் நடந்தது. முகாமிற்கு மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் சலிமுல்லாகான் தலைமை தாங்கினார். மண்டபம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரேசன், மாவட்ட செயலாளர் சலிமுல்லாகான் ஆகியோர் 50 ஆயிரம் ரூ. மாணவ – மாணவிகளுக்கு நலத்திட்ட, கல்வி உதவித்தொகை வழங்கினர்.இந்த நிகழ்ச்சியில் மண்டபம், பாம்பன், தங்கச்சிமடம், ராமேசுவரம், மரைக்காயர்பட்டிணம், வேதாளை ஆகிய பகுதிகளை சேர்ந்த நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் 100 ஏழை-எளிய மாணவ – மாணவிகள் பயன் அடைந்தனர்.கலந்து கொண்டவர்கள்
விழாவிற்கு த.மு.மு.க. மாவட்ட துணை தலைவர் மாயுன்கபீர், மண்டபம் ஒன்றிய ரசூல்கான், வேதாளை கிளை தலைவர் சேக் ஜமாலுதீன், ஹபிபுரகுமான் உள்பட தங்கச்சிமடம், ராமேசுவரம் கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Sunday, June 28, 2009

டெல்லியில் 400 ஆண்டுகால பள்ளிவாசலின் கட்டிடப் பகுதிகள் தகர்ப்பு! தமுமுக கடும் கண்டனம்


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் அவர்கள் வெளியிடும் கண்டன அறிக்கை:

இந்தியத் திருநாட்டின் தலைநகர் டெல்லியின் மெஹரெலி பகுதியில் உள்ள 400 ஆண்டுகால பழமைவாய்ந்த திபியா வாலி பள்ளிவாசலை இடித்துத் தள்ள முயன்ற டெல்லி பெருநகர வளர்ச்சிக்குழும அதிகாரிகளையும், டெல்லி மாநில அரசையும் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

பள்ளிவாசலைத் தகர்க்கும் நோக்கத்துடன் நவீன இயந்திரங்கள் பொருத்தப்பட்ட கனரக வாகனங்களுடன் பள்ளிவாசலை முற்றுகையிட்ட டெல்லி பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகளும், காவல்துறையினரும் சிறுபான்மை மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி பள்ளிவாசலோடு சேர்ந்த பகுதிகளைத் தகர்த்து தரைமட்டமாக்கி இருக்கிறார்கள்.

டெல்லியை நவீனப்படுத்தப் போகிறோம் என்ற பெயரில் அதிகார வர்க்கம் செய்த இந்த அடாத செயல் மன்னிக்க முடியாதது. தேசத்தின் வரலாற்று அடையாளங்களை அழிக்கும் குறுகிய மனப்பான்மை வன்மையாக கண்டிக்கத்தக்கது.

திபியாவாலி பள்ளிவாசலின் தகர்க்கப்பட்ட பகுதிகள் மீண்டும் கட்டித் தரப்பட்டு முஸ்லிம்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். அதற்குக் காரணமான அதிகாரிகள் மற்றும் உத்தரவிட்ட அரசுகள் நாட்டு மக்களிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.

மக்களின் வழிபாட்டு உரிமையை மறுக்கும் செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக தொழுகை நடைபெற்று வந்த பள்ளிவாசல் ஒன்றை ரயில்வேத்துறை தகர்த்து தரைமட்டமாக்கியது. இந்தியத் திருநாட்டின் தலைநகரில் இத்தகைய அடாத செயல்கள் நடப்பது வேதனைக்குரியது.

இதுபோன்ற செயல்கள் தொடர்ந்தால், தவறுகள் சரிசெய்யப்படாவிட்டால் காங்கிரஸ் அரசு கடும் மக்கள் போராட்டங்களை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறோம்.

Thursday, June 25, 2009

கோவையில் கோர விபத்து - 4 முஸ்லிம் குடும்பத்தினர் மரணம் செய்திகள்

கோவை தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் என்.செ். ரோடு கிளை தலைவர்.

முகமது கனி விபத்துயில் மரணம்.

ஜனஸா தொழுகை கோவை திப்பு சுல்தான் பள்ளி யில்நடந்தது.இதில் தவ்ஹித் ஜமாத் மாநில நிர்வாகிகள். எம்.ஐ.சுலைமான்,ஏ.ஸ் அலாவுத்தின்.கோவை ஜபார்,கோவை ரஹிம்,மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டார்கள்.அதுபோல் த மு மு க .மாநில செயலாளர் கோவை உம்மர்,துனை செயலாளர் கோவை சாதிக்,மாநில போச்சாளர் கோவை சைய்து,மாவட்ட நிர்வாகிகள், அப்துல் பசிர், ஹமிது,அகமது கபிர்,திருப்புர் த மு மு க. நிர்வாகிகள். ஹாலித், ஹைதர்அலி,மற்றும் மனித நேய மக்கள் கட்சி மாவட்ட நிர்வாகிகள். அப்பாஸ். ஷாஜகான். அப்பாஸ்.கோவை தங்கப்பா, அது போல். ஜாக் மாவட்ட நிர்வாகிகள். மலங்கு.சித்திக்.மற்றும் முஸ்லிம் லிக் நிர்வாகிகள். கோவை நாசர். சாகுல் அமிது. சி.டி.எம்.நிர்வாகிகள் உம்மர்ஷா. அபுதாஹிர். மனிதநீதி பாசறை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்ஜமாத்நிர்வாகிகள்.பொதுமக்கள் சுமார் 3000க்கும் மேற்பட்றோர்கள் கலந்து கொண்டார்கள்.

மேலும் விபரங்களுக்கு






விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு மற்றும் அடைந்தவர்களுக்கு அரசு சார்பில் ருபாய் 7 லட்சத்து 20 ஆயிரம் ருபாய் உதவியை கோவை கலெக்டர் உமாநாத் வழங்கியபோது அருகில் மனித நேய மக்கள் கட்சி மாவட்ட பொருளாளர் அப்பாஸ் உடன் இருந்தார்கள்.




விபத்தில் எந்தவித காயமும் இன்றி தப்பிய 2 வயதுசிறுவன் சேக்பரீத் நடந்த சம்பவம் பற்றி எதுவுமே தெரியாமல் பரிதாபத்துடன் அமர்ந்திருந்த காட்சி.


வேன் நொறுங்கி உருக்குலைந்து கிடக்கும் காட்சி.



பலியான தவ்ஹித் ஜமாத் தலைவர்யின் குடும்பத்தார்கள்.ரஜபுனிஸா,தாஜ்னிஸா,ரகமத்துல்லா,சாயிராபானு,முகமது மீரான்,சாகிதாபேகம்,முகமதுகனி,பாத்துமுத்துஜொகரா,மற்றொரு ரகமத்துல்லா ஆகியோரை படத்தில் காணலாம்.



விபத்துக்குள்ளான லாரியும் ஒரு காரும் நெறுங்கி கிடக்கும் காட்சி.


பல்லடம் அரசு மருத்துவமனையில் வரிசையாக வைக்கப்பட்டு இருப்பதை காணலாம்.



கோவை மேற்கு மண்டல காவல்துறை அதிகாரி. பிரமோத்குமார்.மாவட்ட காவல்துறை கண்கானிப்பாளர். சாந்தி ஆகியோர் பார்வையிட்டர்கள்





ஜனஸாதொழுகை நடத்தும் கட்சி









கொள்கை சகோதரர்கள் கலந்து கொண்ட கட்சி


ஜனாஸா வை. த மு மு க. தவ்ஹித் ஜமாத். ஆம்லன்ஸ் முலம் மைய்ய வாடிக்கு எடுத்து சென்ற கட்சி

Wednesday, June 24, 2009

நக்கீரன் மற்றும் திலகவதி I.P.S-யின் முஸ்லிம் விரோதப் போக்கை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்ட படங்கள்


நக்கீரன் மற்றும் திலகவதி I.P.S-யின் முஸ்லிம் விரோதப் போக்கை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்ட படங்கள்

சென்னையில் நடந்த கொலை வழக்கு தொடர்பாக நக்கீரன் இதழுக்கு பேட்டியளித்த காவல்துறை உயர் அதிகாரி திலகவதி ஐ.பி.எஸ். அவர்கள் ''இஸ்லாமியர்களுக்கு கொலை செய்வது ஒன்றும் புதிதல்ல'' என்று பேட்டியளித்துள்ளார். தனியொரு நபரின் செயலுக்கு முஸ்லிம்கள் அனைவரையும் இழித்துரைப்பது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்.


முஸ்லிம் மத துவேசத்தை உருவாக்கத் துணிந்த காவல்துறை உயர் அதிகாரி திலகவதி ஐ.பி,எஸ்.ஐக் கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் இன்று (24.06.2009) மாலை 4.00 மணியளவில் சென்னை மெமோரியல் ஹால் எதிரே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமுமுக பொருளாளர் ஓ.யூ. ரஹ்மத்துல்லாஹ் தலைமை தாங்கினார். துணைப் பொதுச் செயலாளர் ஜே.எஸ். ரிஃபாய், தமுமுக மாநில மாணவரணிச் செயலாளர் ஜெயினுலாப்தீன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். மனிதநேய மக்கள் கட்சியின் பொருளாளர் எஸ்.எஸ். ஹாருன் ரசீது, தமுமுக மாநிலச் செயலாளர் காஞ்சி ஜுனைது, வட சென்னை மற்றும் தென் சென்னை மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


ஆர்ப்பாட்டத்தில், ''காவல்துறையில் உயர் அதிகாரியாகவும், ஓர் எழுத்தாளராகவும் இருப்பவர் இவ்வாறு பொறுப்பற்று பேசலாமா? அமைதி மார்க்கமான இஸ்லாத்தை வன்முறை மார்க்கமாக சித்தரிப்பது மெத்தப்படித்த அதிகாரிக்கு அழகா?'' என்று கேள்விகள் எழுப்பப்பட்டன. இத்தகைய பொறுப்பற்ற சமூக கருத்துக்கு திலகவதி ஐ.பி.எஸ் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் முஸ்லிம்களை வம்புக்கு இழுத்த நக்கீரன் பத்திரிக்கையும் வெளியிட்ட செய்தியை வாபஸ் பெற வேண்டும் என்றும் இல்லாவிட்டால் போராட்டங்கள் தீவிரப் படுத்தப்பட்டு சட்டரீதியான நடவடிக்கையும் முடுக்கப் படும் என அறிவிக்கப் பட்டது.


இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் குழந்தைகள், பெண்கள் உட்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.

24.06.2009 தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது

இன்ஷா அல்லாஹ் 24.06.2009 புதன்கிழமை மாலை 4.00 மணியளவில் சென்னை மெமோரியல் ஹால் எதிரே) தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமுமுக பொருளாளர் ஓ.யூ. ரஹ்மத்துல்லாஹ் தலைமைத் தாங்குகிறார்.

நக்கீரன் மற்றும் திலகவதி ஐ.பி.எஸ்-யைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

நக்கீரன் மற்றும் திலகவதி ஐ.பி.எஸ்-யைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
குறிப்பு : நக்கீரன் வார இதழில் காவல்துறை அதிகாரி திலகவதி ஐ.பி.எஸ்., இஸ்லாம் குறித்து மிக மோசமான அவதூறைச் சுமத்தியிருக் கிறார். இதற்கு தமுமுக கடும் கண்ட னம் தெரிவித்துள்ளது. துணைப் பொது செயலாளர் ஜெ.எஸ். ரிபாஃயி அவர்கள் நக்கீரனுக்கு ஏற்கனவே கடிதம் அனுப்பியுள்ளார்.
நக்கீரன் 20.06.2009, தேதியிட்ட இதழின் முகப்புக்கட்டுரையான 'மகனைக் கொன்ற அப்பன், அப்பனைக் கொன்ற மகன் குற்றப்பின்னணி, என்ற கட்டுரையில் (பக்-7) காவல்துறை அதிகாரியும், இலக்கியவாதியுமான திருமதி திலகவதி யின் கருத்தை வெளியிட்டிருந்தது, திருமதி திலகவதி ஐ.பி.எஸ்.ஸின் கருத்து முஸ்லிம் சமுதாயத்தினரின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகை யில் இருப்பதால் இவ்விளக்கத்தை எழுதுகிறோம்.
''குடும்பகௌரவத்தைக் காப்பாற்ற பெற்றோர்களே அந்தப் பிள்ளையைக் கொன்று விடும் கௌரவக் கொலைகள் அரபுநாடுகளில் அளவுக்கதிகமாக அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. சலீம் ஒரு இஸ்லாமியர் என்பதால் அந்த மதத்திற்கு இந்தச் சம்பவம் புதிதானதும் அல்ல'' என்று கருத்துகூறியுள்ளார் திலகவதி.அரபு நாடுகளில் கௌரவக் கொலை கள் நடக்கின்றன என்பதற்கு அணுவின் துகள் அளவும் ஆதாரம் கிடையாது. அரபுநாடுகளில் அளவுக்கதிகமாக கௌரவக்கொலைகள் நடக்கின்றன என்பது அபத்தமான அவதூறு.
'சலீம் ஒரு இஸ்லாமியர் என்பதால் அந்த மதத்திற்கு இந்தச் சம்பவம் புதிதானதும் அல்ல' என்ற நச்சுக்கருத்தை திலகவதி போன்ற நல்லிலக்கியவாதி வெளிப்படுத்துவது வேதனைக்குரியது.
இஸ்லாம் மார்க்கம் இத்தகைய கொலைகளை கொள்கையளவில் அங்கீ கரிப்பது போன்ற தோற்றத்தை திலகவதி ஏற்படுத்துகிறார்.
''இது அமைதி மார்க்கம்; இதில் எவ்விதமான நிர்பந்தமும் கிடையாது'' என்கிறது திருக்குர்ஆன். இறைக்கட்ட ளையையே நிர்பந்தப்படுத்தி ஒருவரை ஏற்கச் செய்ய இஸ்லாம் அனுமதிக்காத போது. தன்கருத்துக்கு ஒவ்வாத பிள்ளை யைக் கொல்வதற்கு எப்படி அனுமதிக்கும்?
பெண்சிசுக் கொலைகளை தடுத்து நிறுத்திய மார்க்கம் இஸ்லாம்தான் என்பது குறிப்பிடத்தக்கது. நபிகள் நாயகத்திற்கு முந்திய காலத்தில் அறியாமைக்கால அரபுகள் பெண்குழந்தைகளை உயிருடன் புதைத்து வந்தார்கள். பெண் குழந்தை களை சாபக்கேடாகக் கருதினார்கள், இதை நபிகள் நாயகம் தடுத்து நிறுத்தியதோடு பெண்குழந்தைகளை இறை அருளின் அடையாளமாய் போதித்தார்கள். ''இருபெண் குழந்தை களை சிறப்பாக வளர்த்தவருக்கு சுவர்க் கம் உறுதி'' என்று நவின்றார்கள்.திருக்குர்ஆனின் 81 வது அத்தியாயத் தின் 8,9 வசனங்கள் பெண் சிசுக்கொலை செய்வோரைக் கடுமையாக எச்சரிக்கின்றன.
''குழந்தைகளை நேசிக்காதவர்கள் என்னைச் சேர்ந்தவர்களில்லை'' என்று நபிகள் நாயகம் நவின்றார்கள் இப்படி ஏராளமான சான்றுகளைக் கூறிக் கொண்டே போகலாம்.
உண்மை இவ்வாறிருக்க பெற்ற பிள்ளை யைக் கொல்வது அந்த மதத்திற் குப் புதி தானது இல்லை என்ற திலகவதி யின் கருத்து வன்மையான கண்டனத்திற் குரியது.
''சொந்தப்பிள்ளையை அல்ல அநியாய மாக எந்த ஒரு மனித உயிரை எவர் கொன்றாலும் அவர் உலக மக்கள் அனை வரையும் கொன்றவர் போலாவார். ஒரு மனித உயிரை வாழவைத்தவர் உலக மக்கள் அனைவரையும் வாழவைத்தவர் போலாவார்'' என்று திருக்குர்ஆன் போதிக் கிறது. இத்தகையக் கட்டளைகளைக் கொண்டுள்ள மார்க்கத்தை கொலைகளை அங்கீகரிக்கும் மதமாக திலகவதி சித்தரித்துள்ளார்.
காவல்துறையின் உயரதிகாரி ஒருவர் தனிவாழ்வில் ஒழுங்கீனமானவராக இருக்கிறார் என்பதற்காக ஒட்டுமொத்த காவல் துறையினரும் அப்படிப்பட்டவர் களே என்று கூறமுடியுமா?
மகளின் மீது அதீதபாசம் வைத்திருந்த ஒருவர் தன் கண்முன்னால் மகள் சீரழி வதை சகிக்க முடியாமல். வெறியோடும் அறிவீனத்தோடும் செய்த கொலைக்கும் மதத்திற்கும் முடிச்சுப் போட்டதே முதலில் தவறு. இந்தக் கொலையை முஸ்லிம் சமுதாயம் ஏற்கவில்லை. குற்றச் சம்பவத்தையும், அதைச் செய்தவர் களின் மதத்தையும் இணைத்துப் பார்ப்பது முஸ்லிம்கள் விஷயத்தில் மட்டுமே நடக்கிற கருத்தியல் வன் கொடுமை என்பதைச் சுட்டிக் காட்டு கிறோம். இரண்டு சம்பவங்கள் நடந் திருக்க, ஒரு சம்பவத்திற்கு மட்டும் மதத்தை முடிச்சுப் போட்டுப் பார்ப்பதும் அறிவு நாணயமுள்ள செயலா?
மஹாபாரதத்தில், 'என் உறவுகளை பதவிக்காக நான் கொல்லமாட்டேன்' என்று அர்ஜுனன் மறுக்கும் போது தர்மத்தை நிலைநாட்ட உறவினர்களாக இருத்தாலும் அவர்களைக் கொலை செய்வது ஒரு ஷத்ரியனின் கடமை என்று போதிக்கிறார் கிருஷ்ணபரமாத்மா. இது பகவத் கீதையிலும் பதிவாகியுள்ளது.
பத்தொன்பது வயது விஜயகுமார் அவரது குடிகாரத் தந்தையான நடேசனைக் கொன்றுள்ளதற்கு கீதையை ஆதாரம் காட்டி தந்தையைக் கொல்வது இந்து மதத்திற்குப் புதியதல்ல என்று திலகவதி கூறுவாரா? குற்றங்களுக்கும் மதத்திற்கும் முடிச்சுப் போடும் போக்கிற்கு முற்றுப் புள்ளிவைப் பது தான் சமூக ஒற்றுமைக்கு உதவும். திலகவதி தன்கருத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்

Tuesday, June 23, 2009

பரமக்குடி தமுமுகவின் நோட்டுப் புத்தகங்கள் வழங்கும் விழா

பரமக்குடியில் த.மு.மு.க., சார்பில் இலவச நோட்டு புத்தகம் வழங்கும் விழா நடைபெற்றது. மேற்கு மாவட்ட பொறுப்பாளர் சல்மான் தலைமை வகித்து,ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி, இலவச நோட்டு புத்தகத்தை வழங்கினார்.

நகர் தலைவர் கலிபத்துல்லா, நகர் செயலாளர் முகமது இஸ்மாயில், பொருளாளர் செய்யது இபுராகிம், ஒன்றிய செயலாளர் அப்பாஸ், இளையான்குடி பொருளாளர் உமர், சகுபர் சாதிக், இக்பால், தாஜீதின் உட்பட பலர் கலந்த கொண்டனர்.

Saturday, June 20, 2009

ஷார்ஜா-வில் இலவச மருத்துவ முகாம்




முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் ஷார்ஜா மண்டலம் சார்பாக இலவச மருத்துவ முகாம் 19.06.2009, வெள்ளிக் கிழமை அன்று நத்தானி மெடிக்கல் சென்டரில் நடைபெற்றது. மண்டலத் தலைவர் நெல்லிக்குப்பம் இக்பால் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமின் தொடக்கமாக மௌலவி.இஸ்மாயில் ஷா அவர்கள் கிராஅத் ஒத, அமீரக முமுக துணைத் தலைவர் ஹுசைன் பாஷா தமுமுக-வின் செயல்பாடுகளை எடுத்துரைத்து முகாமை துவக்கி வைத்தார்.
பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, பல் மருத்துவம் போன்றவற்றிற்கான ஆலோசனைகளும், சர்க்கரை நோய், இரத்த அழுத்த நோய் ஆகியவற்றை கண்டறியும் சோதனைகளும் செய்யப்பட்டன. நோயாளிகளுக்கு தேவையான மருந்துகளையும் இலவசமாகவே தருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, அவற்றை மருத்துவ அணி ஒருங்கிணைப்பாளர் மருந்தாளுணர் முஹம்மது இஸ்மாயில் தலைமையிலான மருந்தாளுணர்கள் கபீர், இல்யாஸ் ஆகியோர் வழங்கினர்.
முகாமின் இறுதியில் மருத்துவர்கள் தீபக் நத்தானி, சௌகத் அலி மற்றும் செவிலியர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. தமிழகத்தை சார்ந்த நோயாளிகள் மட்டுமல்லாது இந்தியாவின் அனைத்து பகுதியைச் சார்ந்தவர்களும், பாகிஸ்தானியர்களும், பங்களாதேச நாட்டவர்களும் திரளாக வருகைப் புரிந்து பயணடைந்தனர்.
மிகச் சிறப்பான ஏற்பாட்டினை மண்டல பொருளாளர் அபுல் ஹசன் மற்றும் துணைத் தலைவர் குலாம் தலைமையிலான குழுவினர்கள் செய்திருந்தனர். மருத்துவ சோதனைக்கான வளாகம், உபகரண ஏற்பாடுகளை கள்ளக்குறிச்சி அக்பர் பாஷா ஏற்பாடு செய்திருந்தார்.
மக்கள் நலனை அடிப்படையாகக் கொண்டு முமுக-வினால் அமீரகங்களில் தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் இதுபோன்ற மருத்துவ முகாம்களால் பொருளாதாரமின்மையால் அவதிப்படுபவர்கள் பயனடைவதாக கலந்துக் கொண்டவர்களின் கருத்தாக இருந்தது. எல்லாப் புகழும் இறைவனுக்கே!.

இராமநாதபுரம் தமுமுக ரூ. 50 ஆயிரம் நிதியுதவி


ராமநாதபுரம், ஜூன் 19: ராமநாதபுரத்தில் தமுமுகவின் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வியாழக்கிழமை, மருத்துவம் மற்றும் கல்விக்கான நிதியுதவி வழங்கப்பட்டது.

ராமநாதபுரம் அருகே ஆற்றங்கரையைச் சேர்ந்தவர் ராஜாஉசேன். இவர், மலேசியாவில் விபத்துக்குள்ளானார்.

இவரது குடும்பத்தினருக்கு ரூ. 25000, ராமநாதபுரம் சின்னக்கடையைச் சேர்ந்த முகம்மதுவின் கண் சிகிச்சைக்கு ரூ. 8000, வெளிப்பட்டினம் சகுபர் சாதிக்கின் இருதய சிகிச்சைக்கு ரூ. 5000, 6 மாணவ, மாணவியர்க்கு கல்வி உதவி மொத்தம் ரூ. 12000 உள்பட, ரூ. 50 ஆயிரம் வழங்கப்பட்டது. அமைப்பின் மாவட்டத் தலைவர் எஸ். சலிமுல்லாகான் தலைமைவகித்தார்.

மாவட்டச் செயலர் சாதிக் நிதியுதவியை வழங்கினார்.

மாவட்ட துணைத் தலைவர் ஹுமாயூன் கபீர், மாவட்டத் தலைவர் சல்மான் (மேற்கு), நகர் தலைவர் சுல்த்தான், நகர் செயலர் பரக்கத்துல்லா, பொருளாளர் அப்துல்கனி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tuesday, June 16, 2009

உலக அமைதிக்கு வழி...ஓரிறை கொள்கை ஒன்றே!




இலண்டன் இஸ்லாமிய அழைப்பு பணி மையம் சார்பாக உலக அமைதிக்கு வழி...ஓரிறை கொள்கை ஒன்றே! எனும் தலைப்பில் இஸ்லாமிய மாநாடு பிரிட்டன் தலைநகர் லண்டனில் நடப்பெற்றது.


மாநாட்டில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர்
Dr, M.H. ஜவஹிருல்லாஹ், JAQH அமீர் மெளலவS. கமாலுதீன் மதனி மெளலவி ஹாபிழ் யஹ்யா அஷ்ஷெய்க் M. மன்சூர் நளீமி மெளலவி முஹம்மது இஸ்மாயில் மற்றும் உலமா பெருமக்கள் கலந்துக்கொண்டு, உலக அமைதிக்கு இஸ்லாமிய கொள்கை, இஸ்லாமிய வட்டியில்ல கடன், படைத்தவனை வனங்கு;படைப்பினங்களை வனங்காதே! என்ற தலைப்புகளில் பேசினார்கள்.


லண்டனின் மாநாட்டிற்கு பலப்பகுதிகளில் இருந்து திரலாக கலந்துக்கொண்டனர்.

யுஜெஎன் வட்ட மேசை அமர்வில் த.மு.மு.க தலைவர்


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம் ஹெச் ஜவாஹிருல்லாஹ் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்குக் கொள்வதற்காக கடந்த ஜுன் 7ம் தேதி இரவு லண்டன் வந்தார். லண்டன் ஹூத்ரோ விமான நிலையத்தில் அவரை தைக்கால் ஜாகிர் ஹூசைன், காரைக்கால் டாக்டர் கபீர், லால்பேட்டை இல்யாஸ் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.


ஜுன் 8 முதல் 10 வரை லண்டன் மைதன்வேல் இஸ்லாமிக் சென்டரில் நடைபெற்ற யுனிவர்சல் ஜஸ்டிஸ் நெட்வர்க் (சர்வதேச நீதி இணையம்) – யுஜெஎன் அமைப்பின் வட்ட மேசை அமர்வில் தமுமுக தலைவர் கலந்துக் கொண்டார். கடந்த ஆண்டு மலேசியாவில் உள்ள பினங்கு நகரத்தில் யுஜெஎன் அமைப்பு தொடங்கப்பட்டது.

உலகின் பல்வேறு பகுதிகளில் மனித உரிமைகளுக்காக இயங்கும் முஸ்லிம் அரசு சாரா அமைப்புகளின் ஒரு இணைப்பு அமைப்பாக யுஜெஎன் உருவாக்கப்பட்டது. இதில் தமுமுகவும் இணைந்து செயல்படுகின்றது.

3 நாட்கள் நடைபெற்ற இந்த கூட்டத்தில் உலகில் பல்வேறு நாடுகளில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்னைகள் விவாதிக்கப்பட்டது. குறிப்பாக இலங்கை வட கிழக்கு மாகாணத்தில் வாழும் முஸ்லிம்களின் பிரச்னையை தமுமுக தலைவர் விரிவாக எடுத்துரைத்தார். ஐ.நா. உட்பட சர்வதேச அரங்குகளில் இலங்கை முஸ்லிம்களின் பிரச்சனை முன்னெடுத்துச் செல்வது என்று தீர்மானிக்கப்பட்டது. பிரிட்டன், மலேசியா, இந்தோனேசியா, பிரான்சு, டென்மார்க், நார்வே, தென் ஆப்ரிக்கா, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் பங்குக் கொண்டார்கள்.



ஐ.நா. வினால் அங்கிகரிக்கப்பட்ட மனித உரிமை அமைப்பான இஸ்லாமிக் ஹூமைன் ரைட்ஸ் கமிசன் மற்றும் சிட்டிசன் இன்டர்நேசனல் அமைப்பு ஆகியவை இணைந்து இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தன.



பிரிட்டனில் உள்ள லீஸ்டர் நகரில் இயங்கும் இஸ்லாமிக் பவுன்டேசன் நிறுவனத்திற்கு கடந்த வெள்ளி (ஜுன் 11) அன்று தமுமுக தலைவர் வருகை புரிந்தார் 1973ல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் பிரட்டனில் மிக சிறப்பாக இஸ்லாமிய பிரச்சாரப் பணிகளை செய்து வருகின்றது.



ஆங்கிலத்தில் முன்னூருக்கும் மேலான நூல்களை இந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் தலைமை இயக்குனர் மனாசிர் ஹசன் தமுமுக தலைவரை வரவேற்று நிறுவனத்தின் பணிகளை விளக்கியதுடன் தமுமுகவின் சேவைகளையும் கேட்டறிந்தார். மதிய விருந்தும் அளித்தார் இந்த நிறுவனத்தின செயல் இயக்குனரான சென்னையை சேர்ந்த இர்சாத் பாகியும் இந்த சந்திப்பின் போது உடனிருந்தார்.



இந்த நிறுவனத்தின் சார்பாக ஒரு உயர் கல்வி நிறுவனமும் இயங்கி வருகின்றது. அங்கு இஸ்லாமிய வங்கியியல் குறித்த முதுகலை பட்டப்படிப்பும் டாக்டர் பட்டத்திற்காக பல்வேறு ஆய்வு பாடங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. தமுமுக தலைவருடன் தைக்கால் ஜாகிர் ஹூசைனும் பிரபல மருத்துவர் டாக்டர் அஜ்மலும் உடன் சென்றிருந்தார்கள்.


லீஸ்டரில் வெள்ளி மாலை அங்கு வாழும் தமிழக மற்றும் இலங்கை சகோதர்கள் ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில தமுமுக தலைவர் பங்குக் கொண்டார். இலங்கை மவ்லவி இஸ்மாயில் நளீமி இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். இதில் தமிழக நிலவரங்கள் மற்றும் இலங்கை நிலவரங்கள் குறித்து மிக ஆர்வமாக பங்குக் கொண்டோர் தமுமுக தலைவரிடம் கலந்துரையாடினர்.

Saturday, June 13, 2009

லண்டனில் த.மு.மு.க தலைவர்






தமிழகத்தில் இரத்ததான முகாம்கள், கண்சிகிச்சை முகாம்கள், கல்விச் சேவைகள், இலவச மருத்துவ முகாம்கள், அவசர ஊர்தி அர்பணித்தல், சுனாமி நிவாரணப் பணிகள் என்று மாநிலத்தில் பரவலாக அனைத்து சமூக மக்களுக்கும் கடந்த 14 வருடங்களாக மிகச் சிறப்பான முறையில் சேவைகள் செய்து வரும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் இந்திய எல்லையைத் தாண்டி வெளிநாட்டின் பல பகுதிகளில் மிகச் சிறப்பாக செயல்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.




அந்த வகையில் பிரிட்டன் பயணம் செய்துள்ள தமுமுக தலைவர் முனைவர் ஜவஹிருல்லாஹ் அவர்கள் லண்டனில் வசிக்கும் நமது சமுதாயத்தவர்கள் ஏற்பாடு செய்துள்ள தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் அமைப்பின் கிளை துவக்குவது சம்மந்தமாக பல்வேறு அமர்வுகளில் மக்களை சந்தித்து ஆலோசனை செய்துவருகின்றார்.






கீழக்கரை நகர தமுமுக சார்பில் சுமார் 400 மாணவர்கள் மாணவிகள் கல்வி (நோட்)உதவிகள் வழங்கப்பட்டன




கீழக்கரை நகர தமுமுக சார்பில் சுமார் 400 மாணவர்கள் மாணவிகள் கல்வி (நோட்)உதவிகள் வழங்கப்பட்டன. கல்வி உதவிகளை மாவட்டச் செயலாளர் தஸ்பிக் அலி. தமுமுக துபாய் பொறுப்பாளர் முஜீப் ரகுமான் கீழக்கரை நகர தமுமுக பொறுப்பாளர் ஜெயினுல் அப்தீன வபஷா ஜலால் முஸ்தகீன் உஸ்மான் ஆய்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Wednesday, June 10, 2009

புதுவலசையில் 66வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு

புதுவலசையில் 66வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு


இராமநாதபுரதம் மாவட்டம் புதுவலசையில் தமுமுகவின் சார்பாக 66வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிக்கப் பட்டது. இதனை தமுமுகவின் பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி அர்ப்பணித்தார். இந்த ஆம்புலன்ஸை புதுவலசை தாஸின் அறக்கட்டளையின் நிறுவனர் தாஸின் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் தமுமுகவின் தலைமைக் கழகப் பேச்சாளர் கோவை செய்யது, மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர் சலிமுல்லாஹ் கான், இராமநாதபுரம் கிழக்கு மாவட்டத் தலைவர் சாதிக் பாட்ஷர் மாவட்டச் செயலாளர் தஸ்பிக் அலி மற்றும் மேற்கு மாவட்டத் தலைவர் சல்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியின் போது புதுவலசை கிளையின் சார்பாக கல்வி உதவிகளும் வழங்கப் பட்டன.

இந்த ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சியில் 1200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



Monday, June 8, 2009

இராமநாதபுரத்தில் நகர் தமுமுக சுமார் 250000rs கல்வி உதவி




இராமநாதபுரத்தில் நகர் தமுமுக சுமார் 250000rs கல்வி உதவி கொடுக்க மாணவிகள் மாணவர்கள் பயன் ஆடை இந்தனை . பொருள்கல் வாளைன்குன (டிரஸ், பாக், நோட் புக்ஸ் பெண், பென்சில்) ஆகிய வாளைன்குன .தமுமுக பொதுச்செயலாளர் ஹைதர்அலி. சலிமுல்லாகான்.தமுமுக ம த ,சாதிக் ஆகியோர் கலந்து கொண்டனர்

Sunday, June 7, 2009

தமுமுக சார்பில் கோவை அரசு மருத்துவமனைக்கு உதவி

கோவை மாவட்ட த மு மு க. சார்பில் 2-6-2009 அன்று கோவை அரசு மருத்துவமனைக்கு ருபாய் 25,000, மதிப்புள்ள நோயாளிகளுக்கான படுக்கை மெத்தைகள் வழங்கப்பட்டன.இந்த நிகழ்ச்சியில்.த மு மு க. மாவட்ட மருத்துவ அணி செயலாளர் அசரப் தலைமையில் நடந்தது.இதில் மாநில செயலாளர் கோவை உம்மர் அவர்கள் நோயாளிகளுக்கான மெத்தைகளை அரசு மருத்துவமனை டீன் டாக்டர் குமரனிடம் வழங்கினர்.இந்த நிகழ்ச்சியில் தமுமுக மாவட்ட தலைவர் பசிர் அகமது. மாவட்ட செயலாளர் ஹமிது. மனித நேய மக்கள் கட்சி மாவட்ட பொருளாளர் அப்பாஸ். துனை செயலாளர் ஷாஜகான்.மற்றும் ம ம க இளைஞர் அணி செயலாளர் அப்பாஸ். கோவை தங்கப்பா. கவிஞர் ஹக். நுர்தின்.
ஜாபர்சாதிக் .ஆகியோர்கள் கலந்துகொண்டார்கள்.
செய்தி படம், கோவை தங்கப்பா

ரங்கநாத் மிஸ்ரா ஆணைய பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் - மமக

சென்னை, ஜுன்.7- முஸ்லிம் சமுதாயத்தின் வாழ்வுரிமையை காக்கும் வகையில் ரங்கநாத் மிஸ்ரா ஆணையம் வழங்கிய பரிந்துரைகளை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

ரங்கநாத் மிஸ்ரா ஆணையம்

சென்னையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி தலைமை செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

பாராளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரையில் வகுப்புக்கலவரங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவது என்ற அம்சத்தை வரவேற்கிறோம். அதேநேரம் முஸ்லிம் சமுதாயத்தின் வாழ்வுரிமையைக் காக்கும் வகையில் ரங்கநாத் மிஸ்ரா ஆணையம் வழங்கிய பரிந்துரைகளை நிறைவேற்றுவது பற்றிய அறிவிப்பு ஏதும் இல்லாதது வருத்தமளிக்கிறது. அந்த பரிந்துரைகளை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

இலங்கையில் தமிழ் பேசும் அனைத்து மதத்தினருக்கும் சம உரிமை கிடைக்க இந்திய அரசு முழுமையான முயற்சி எடுக்க வேண்டும்.

வாக்குசீட்டு முறை
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பகிரங்கமாக குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டும் தேர்தல் ஆணையத்தின் மவுனம் வேதனையை ஏற்படுத்துகிறது. மீறினால் தண்டனை இல்லை எனும் போது சட்டங்கள் அர்த்தமிழந்து போய்விடும். எனவே, தேர்தல் விதி மீறல்களுக்கு உரிய தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். மின்னணு வாக்குப் பதிவு முறையை மாற்றி மீண்டும் வாக்குசீட்டு முறையை கொண்டுவர வேண்டும்.

தமிழகத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தல்களில் வாக்குசீட்டு முறையை கொண்டுவர அனைத்து கட்சிகளும் தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்த வேண்டும், கொண்டுவராவிட்டால் தேர்தல்களை புறக்கணிக்க வேண்டும் என அனைத்து கட்சிகளையும் கேட்டுக் கொள்கிறோம்.

முஸ்லிம் சிறுவியாபாரிகள்

மத்திய சென்னை தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சி தொண்டர்கள் மீது நடந்த தாக்குதல்களை கண்டிப்பதுடன் இக்கலவரத்திற்கு காரணமாக இருந்த போலீஸ் அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சென்னை புதுப்பேட்டை, தாம்பரம், பூக்கடை, ஆவடி உள்ளிட்ட இடங்களில் முஸ்லிம் சிறுவியாபாரிகள் ஒடுக்கப்பட்டதையும் அவர்களின் சிறுகடைகள் சூறையாடப்பட்டதையும் கண்டிப்பதோடு, இத்தகைய நடவடிக்கைகளை அரசு உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Wednesday, June 3, 2009

பாபர் மஸ்ஜித் வழக்கு ஆவணங்கள் மாயம்

புது தில்லி :பாபர் மஸ்ஜித் வழக்கு தொடர்பான பல முக்கிய ஆவணங்கள் அழிக்கப்பட்டிருக்கலாம். அதனால் தான் 2002 முதல் எந்த ஆவணங்களையும் சிறப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்காமல் உ.பி அரசாங்கம் இழுத்தடித்துக் கொண்டுள்ளது.

சிறப்பு நீதிமன்றத்தின் பல உத்தரவிற்குப் பின்னும், உ.பி அரசின் முதன்மை செயலாளருக்கும், பைஸாபாத் மாவட்ட நிர்வாகத்திற்கும் இடையில் சம்பவத்தன்று நடைபெற்ற உரையாடலை இன்று வரை சமர்ப்பிக்காமல் உ.பி அரசாங்கம் இழுத்தடித்துக் கொண்டுள்ளது.

1949 இல் பள்ளியின் உள்ளே வைக்கப்பட்ட சிலைகளை உடனே அகற்றும்படி அன்றய பிரதமர் நேரு அன்றய உ.பி மாநில முதல்வருக்கு அனுப்பிய தந்தியையும் கூட காணவில்லை.

2002 முதல் பலமுறை ஆணை பிற்ப்பித்தும், 1949 இல் நடைபெற்ற கடித பரிவர்த்தனையை உ.பி அரசு சமர்ப்பிக்காமல் இழுத்தடித்த காரணத்தால், சிறப்பு நீதிமன்றம் கடுமை காட்டியதன் பின், கடந்த வாரம், சிறப்பு நீதிமன்றத்தில் சமூகமளித்த உ.பி அரசின் முதன்மை செயலாளர் "அது போன்ற எந்த ஆவணமும் இல்லை" என வாக்குமூலம் அளித்தார். இத்தகவலை, இந்த வழக்கில் ஆஜராகி வரும் வக்கீல்கள் முஸ்தாக் அஹமத் ஸித்தீக் மற்றும் ஸ்பரியாப் ஜிலானி தெரிவித்தனர்.

கோர்டுக்கு வந்த முதன்மை செயலாளர் கொண்டு வந்த கோப்புகளில், பைஸாபாத் மாவட்ட நீதிபதி அரசின் முதன்மை செயலாளருக்கு எழுதிய அனைத்து கடிதங்களும் இருந்தாலும், முதன்மை செயலாள்ர் மாவட்ட நீதிபதிக்கு எழுதிய எந்த ஒரு கடிதத்தையும் காணவில்லை. அத்தோடு நேரு அனுப்பிய தந்தியையும் கூட காணவில்லை -- என்றும், முஸ்தாக் குறிப்பிட்டார்.

ஆவணங்கள் காணாததால் கோபமடைந்த நீதிபதி, விசாரணையை ஜூலை 6 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்ததுடன், அன்றய தினம் அவசியம் காணாமல் போன ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என கண்டிப்புடன் ஆணையிட்டுள்ளார்.