Saturday, July 30, 2011

கீழக்கரை நகர் புதிய நிர்வாகிகள் தேர்தெடுக்கப்பட்டார்.

29 /07 /2011 இன்று ராமந்தபுரம் மஜிதுல் தக்வா பள்ளியில் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் கீழக்கரை நகர் புதிய நிர்வாகிகள் தேர்தெடுக்கப்பட்டார்.
கீழக்கரை நகர் தமுமுக தலைவர் - ஹுசைன்
கீழக்கரை நகர் தமுமுகசெயலாராக- உஸ்மான்
கீழக்கரை நகர் மமக செயலாராக - ஹமீது முஸ்தகீன்
கீழக்கரை நகர் தமுமுக மற்றும் மமக பொருளாலர்- ஜெய்னுல்அப்தீன்
கீழக்கரை நகர் தமுமுகதுணை தலைவர் -ஹபீப் முஹமது
கீழக்கரை நகர் தமுமுக துணை செயலாராக - ராஜா ஹுசைன்
கீழக்கரை நகர் மமக துணை செயலாராக - இக்பால். நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் தமுமுக மாநில துணை செயலாராக கோவை சையது மாவட்டத் தலைவர் சலிமுல்லாஹ் பொருளாலர் முஜீப் ரகுமான் மாவட்டத்துணை தலைவர் பசீர் அஹ்மத். முன்னிலையில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Monday, July 25, 2011

இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் கீழக்கரையில் 25-07-2011 அன்று ஆய்வு நடத்தினார்கள்.

இராமநாதபுரம் மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் . எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் கீழக்கரையில் உள்ள புதிய பேருந்துநிலையம் அருகில் ஆய்வுப் பணிக்காக சென்ற பொழுது அப்பகுதி மக்கள் அளித்த புகாரின் பேரில் அப்பகுதில் இருத்து கிழக்கு தெரு போகும் வழியில் தேங்கிக் கிடந்த கலிவுநீரை அப்புரப் படுத்த மாநகராட்சி உதவியுடன் உடனே நடவடிக்கை எடுத்தார்கள். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் மனம்மகிழ்தனர










கீழக்கரையில் உள்ள அனைத்து நியாய விலை கடைகளிளும் 25-07-2011 அன்று ஆய்வு நடத்தினார்கள். அப்போது கீழக்கரை நகர் ஆதிமுக, தமுமுக மற்றும் மனித நேய மக்கள் கட்சி நகர் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.








Thursday, July 21, 2011

கீழக்கரை நகர் தமுமுக சார்பாக இரத்தம் மற்றும் சர்க்கரை நோய் கண்டறியும் முகாம்


கீழக்கரை நகர் தமுமுக சார்பாக 20.07.2011 அன்று மாலை 5 மணி முதல் 10 : 30 மணி வரை இரத்தம் கண்டறியும் முகாம் மற்றும் சர்க்கரை நோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது. இதில் 160 க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்

கீழக்கரை நகர் செயலாளர் முஸ்தகீன், துணை செயலாளர் ராஜா ஹுசைன், பொருளாலர் வபு மரிக்க, கிளை நிர்வாகள் ஜெய்னுல்அப்தீன், ஹுசைன், உஸ்மான. தமுமுக மாவட்ட பொருளாலர் முஜீபு ரகுமான் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.

Wednesday, July 13, 2011

கீழக்கரை உச்வதுன ஹசன முஸ்லிம் நிர்வாகள் உடன் இராமநாதபுரம் மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்


கீழக்கரை உச்வதுன ஹசன முஸ்லிம் நிர்வாகள் உடன் இராமநாதபுரம் மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் . எம்.ஹெச். ஜவாஹிருல்லா அவர்கள் சந்தித்து கீழக்கரை பொது பிரச்சனைகள் பத்தி காலத்து பேசினர். பின்பு கீழக்கரை குப்பை பிரச்சனை பத்தி சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் . எம்.ஹெச். ஜவாஹிருல்லா அவர்கள் தன எடுத்த நடவடிக்கை பத்தி உச்வதுன ஹசன முஸ்லிம் சங்கம் நிர்வாகள் இடம் கூறினர்

அப்போது தமுமுக மாவட்ட தலைவர் சலிமுல்லாகளான், மாவட்டபொருளாலர் முஜீபு ரகுமான், கீழக்கரை தமுமுக நகர் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Monday, July 11, 2011

கீழக்கரை நகர் கிளை தமுமுக சார்பாக இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.









கீழக்கரை நகர் கிளை தமுமுக சார்பாக கடந்த 08.07.2011 அன்று அனைத்து சமுதாய மாணவ மாணவியர் உள்ளிட்ட 350 பேருக்கு சுமார் 100,000 ரூபாய் மதிப்பிலான இலவச நோட்டு புத்தகங்கள் 6 மாணவ மாணவியகு பள்ளி கடனம் வழக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ம.ம.க. செயலாளர் அன்வர் அலி, தமுமுக மாவட்ட பொருளாலர் முஜீபு ரகுமான் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். கீழக்கரை நகர் அதிமுக செயலாளர் ராஜந்திரன் அம்மா பேரவை ராஜன்தரன் சமத்துவல் மக்கள் கட்சி தேமுதிக, மதிமுக, இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் நகர் நிர்வாகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கீழக்கரை நகர் செயலாளர் முஸ்தகீன், துணை செயலாளர் ராஜா ஹுசைன், பொருளாலர் வபு மரிக்க, கிளை நிர்வாகள் ஜெய்னுல்அப்தீன், ஹுசைன், சாட், பக்கர் நோட்டு புத்தகங்களை வழங்கினார்.கீழை புஹாரி அவர்கள சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் அனைத்து சமுதாய மாணவ மாணவியர் பொது மக்கள் கலந்து கொண்டனர்.தமுமுக-மமக சேவைகளை வாழ்த்தினார்.

Tuesday, July 5, 2011

இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி ஆய்வு பணிகள்


இராமநாதபுரம் மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் . எம்.ஹெச். ஜவாஹிருல்லா அரசு மருத்துவமனைக்கு சென்று மருத்துவமனை கண்காணிப்பாளர் திருமதி. ஜமுனாராணி மற்றும் மருத்துவர்களை சந்தித்து மருத்துவமனையின் செயல்பாடுகள் மற்றும் மருத்துவமனைக்கு தேவையான கட்டமைப்பு மற்றும் நோயாளிகளை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

மருத்துவமனை கண்காணிப்பாளர் கேட்டுகொண்டதன் பேரில் விரைவில் சர்க்கரை நோய் மையம் விபத்து நேரத்தில் நோயாளிக்கு அளிக்கவேண்டிய அனைத்து வசதிகளும் உள்ளடக்கிய 'டிராமா கோ' மற்றும் மகப்பேறு பிரிவில் நோயாளிகளின் உறவினர்கள் இருக்க மேல்கூரை உள்ள அறை ஆகிய அனைத்து வசதிகளும் விரைவில் செய்து முடித்து தருவதாக வாக்களித்தார்.
பின்பு நகராட்சி அலுவலகத்திற்கு சென்று இராமநாதபுரம் பாதாள சாக்கடை சம்பந்தமாகவும் எதிர்வருகின்ற மழைக்காலத்தில் தேங்கி மக்களின் இயல்பு நிலையை பாதிக்கும் மழைநீரை வெளியேற்ற இராமநாதபுரத்தில் காட்டுபிள்ளையார் கொவில் தெரு, நாகநாதபுரம், சிதம்பரனார் ஊரணி ஆகிய மூன்று இடங்களில் நவீன பாதாள சாக்கடை பம்பிங் நிலையம் அமைப்பது பற்றியும் நகராட்சி அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது நகராட்சி ஆணையர் முஜிபுர் ரஹ்மான் குடிநீர் வடிகால் வாரிய உதவி செயற்பொறியானர் கணேசன், நகராட்சி பொறியாளர் மகேந்திரன், சுகாதார துறை சந்திரன் ஆகியோர் மற்றும் மனித நேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சலிமுல்லாகளான் . மாவட்ட செயலாளர் அன்வர்அலி. நகர் தலைவர் சுல்தான் மற்நும் கவுன்சிலர் ஆரிப் ராஜா, மருத்துவ அணி ரியாஸ்கான் ஆகியோர் கலந்து கொண்டனர்.



Monday, July 4, 2011

இரத்தம் மற்றும் சர்க்கரை நோய் கண்டறியும் முகாம்



ராமநாதபுரம் நகர் ௦தமுமுக சார்பாக 0௦2.07.2011 அன்று இரத்தம் கண்டறியும் முகாம் மற்றும் சர்க்கரை நோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது. இதில் 300 க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
ராமநாதபுரம் நகர் நிர்வாகிகள் நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.

Sunday, July 3, 2011

இராமநாதபுரத்தில் கல்வி உதவி



பரமக்குடியில் தமுமுக சார்பில் கல்வி உதவி (தினமணி)

பரமக்குடி தேவேந்திர மஹாலில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் இலவச நோட்டு மற்றும் கல்வியாளர்கள், கல்வி நிறுவனங்களுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு, தமுமுக மாவட்டத் தலைவர் மு.சம்சுதின்சேட் தலைமை வகித்தார். கிழக்கு மாவட்டத் தலைவர் சலிமுல்லாகான், மாவட்டச் செயலாளர் சகுபர்சாதிக், மனிதநேய மக்கள் கட்சி செயலாளர் ஜபருல்லாகான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர் தலைவர் அகமது கபிர் வரவேற்றார். விழாவில், தமுமுக மாநிலத் தலைவரும் ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான எம்.எச்.ஜவாஹிருல்லா பரமக்குடி கல்வி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 10 மற்றும் பிளஸ் 2 தேர்வில் முதல் மூன்றிடம் பெற்ற 25 மாணவ, மாணவிகளுக்கு நினைவுப் பரிசு வழங்கி பாராட்டினார். இதனைத் தொடர்ந்து பல்வேறு பள்ளிகளின் தாளாளர் மற்றும் தலைமையாசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. பின்னர், நகரில் 3 முதல் கல்லூரி வரை படிக்கும் 110 ஏழை மாணவர்களுக்கு இலவச நோட்டுகளும், ரூ 1 லட்சம் மதிப்பில் உதவித் தொகையும் வழங்கப்பட்டன. பரமக்குடி கல்வி மாவட்ட அதிகாரி ஜெ.ஆர். ஐசக் சுகிர்தராஜ், எஸ்.டி. கூரியர்ஸ் எஸ்.டி.காசின்முகமது ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவில், தமுமுக, ம.ம.க நகர, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.