Saturday, July 27, 2013

"ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் அவதூறுகள் பரப்பப்படுகின்றன''-- ஜவாஹிருல்லாஹ்

"ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் அவதூறுகள் பரப்பப்படுகின்றன''-- ஜவாஹிருல்லாஹ்

பாஜக பொதுச் செயலர் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் அவதூறுகள் பரப்பப்படுவதாக ராமநாதபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜவாஹிருல்லாஹ் தெரிவித்தார்.தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில், இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை மாலை கும்பகோணத்தில் நடைபெற்றது.இதில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:சேலத்தில் பாஜக பொதுச் செயலர் ஆடிட்டர் ரமேஷ் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரை இழந்து வாடும் குடும்பத்துக்கும், கட்சியினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

படுகொலை தொடர்பாக மிகப்பெரிய அவதூறுகளை இந்து அமைப்பினர் சிலர் பரப்பி வருகின்றனர். முஸ்லிம்களில் சிலர் இந்தக் கொலைக்கு காரணமாக இருக்கலாம் எனக் கூறுவது கண்டிக்கத்தக்கது.தமிழ்நாட்டில் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகளிலும், ஆளுங்கட்சியிலும் கூட உள்ளாட்சிப் பிரதிநிதிகள் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். ஆனால் தற்போது ஒருதலைபட்சமாக பாஜகவினர் ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளனர். அதில் தென் சென்னையில் பாஜக பொறுப்பாளர் விட்டல் கொலை, வேலுரில் டாக்டர் அரவிந்த்ரெட்டி கொலை, நாகையில் புகழேந்தி கொலை, பரமக்குடி முருகன் வழக்கு ஆகியவற்றில் முதலில் முஸ்லிம்களை சம்பந்தப்படுத்தி பிரசாரத்தை பாஜகவினர் கூறினர். ஆனால், போலீஸார் விசாரணையில் சொந்தக் காரணங்களுக்காகவும், கொடுக்கல் வாங்கல், ரியல் எஸ்டேட், பெண்கள் பிரச்னை போன்றவற்றுக்காகவும் இந்தக் கொலைகள் நடந்தது விசாரணையில் தெரியவநதது.சமீபத்தில் வெள்ளையப்பன் கொலையும், ஆடிட்டர் ரமேஷ் கொலையும் காவல் துறை விசாரணையில் உள்ளது. ஆனால், விசாரணை முடிவதற்கு முன்பே யூகத்தின் அடிப்படையில் சிலர் ஏற்படுத்தும் தவறான பிரசாரத்தின் காரணமாக, காவல்துறையினர் பொறுப்பற்ற முறையில் மக்களிடம் தவறான எண்ணத்தை உருவாக்கும் விதத்தில் செயல்பட்டுள்ளனர்.ஆனால், உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம். இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸாரிடம் தமிழக அரசு ஒப்படைத்ததை நாங்கள் வரவேற்கிறோம் என்றார்.

Friday, July 26, 2013

26-07-2013 இன்று கீழக்கரை நடத்த ஆர்ப்பாட்டம் புகைபடம்










கீழக்கரையில் தமுமுக ஆர்ப்பாட்டம்








ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சியின் ஊழல் நிர்வாக சீர்கேட்டை கண்டித்தும், நகராட்சி தலைவி யின் கணவர் நிர்வாகத்தில் தலையிடுவதை கண்டித்தும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற் றக்கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இக்கூட்டத்தின் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேறப்பட்டன.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மனித நேய மக்கள் கட்சியின் மாநில அமைப்பாளர். மண்டலம் ஜெய்னுலாபுதீன், தமுமுக  நகர் தலைவர் சிராஜுதீன், தமுமுக மூத்த தலைவர். அன்பின் ஹசன், 18 வது வார்டு கவுன்சிலர் முஹைதீன் இபுறாஹீம் உள்ளிட்டோர் கண்டன உரை நிகழ்த்தினர்.

இந்தஆர்ப்பாட்டத்தின் முடிவில் பின் வரும் ஆறு தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன. இந்த நிகழ்வின் போது, மமக திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் சேகு தாவூது சாதிக், மமக துணை செயலாளர் புகாரி, PRO கமால் நாசர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

கோவை பள்ளிவாசல்மீது பெற்றோல்குண்டு வீசியே ராமநாதபுரத்தை சேர்ந்த இந்துமுன்னணி தீவிரவாதி கைது


Tuesday, July 23, 2013

கீழக்கரை நகராட்சியை கண்டித்து தமுமுக ஆர்ப்பாட்டம்!

நமது ஊருக்கு வரும் நிதியை சிரலிக்கும் நிர்வாகத்தை இன்னும் அமைதியாக பார்த்து கொண்டு இருந்தால் அல்லாவிடம் நாமும் பதில் சொல்ல வேண்டும். நமது வீட்டில் வரும் நோய்களுக்கு முடிவுகட்டுவோம்.... கீழக்கரை குடிநீர் பிரச்சனையை ஒழித்திடுவோம்.... முன்மாதிரி நகராட்சியாக மாற்றவிடுவோம்..... தயாரகுங்கள் உங்களுக்கு நடக்கும் அநீதிகளை தடுக்க..... அணிதிரல்வீர் 26 07 முஸ்லீம் பஜார் நோக்கி..... அநீதியை அழிக்க மக்கள் வெள்ளம் திரளட்டும்..... 26 07 ஆர்பாட்டம் கீழக்கரை வலாற்றில் பொறிக்கபடும்... அமைதிக்கு பிறகு தான் புயல் என்பார்கள் ஆனால் இன்று நமது ஊர் மக்கள் சுனாமியாக புறப்பாட தயாரகுகிறார்கள்... மக்கள் எழுச்சியில் தான் மாபெரும் மறுமலர்ச்சி நடைபெறும்.. அந்த நாள் தான் 26 07 முஸ்லீம் பஜார் நோக்கி மக்கள் எழுச்சி.....

Saturday, July 20, 2013

கீழக்கரையில் 26/07 வெள்ளிக்கிழமை நகராட்சியை கண்டித்து தமுமுக ஆர்ப்பாட்டம்!


19 07 2013 அன்று கீழக்கரை நகர் தமுமுக நிர்வாக கூட்டம் நகர் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. தமுமுக நகர் தலைவர் முகம்மது சிராஜுதீன் தலைமையில் நகர் துணைத்தலைவர் கோஸ் முகம்மது முன்னிலையில் நகர் நிர்வாக கூட்டம் நடைபெற்று. இறுதியாக தீர்மானங்கள் நிரைவேற்றப்பட்டது. 

தீர்மானங்கள் பற்றி நகர் தலைவர் முகம்மது சிராஜுதீன் பத்திரிக்கையாளரிடம் கூறுகையில் :

  1. கீழக்கரை நகராட்சி யில் தொடர்ந்து நடைபெறும் சீர்கேடுகளை  கண்டித்து  மற்றும் முறையான குடிநீர்  வழங்க கோரியும் வரும் 2 6/07/13 அன்றுவெள்ளிக் கிழமை முஸ்லீம் பஜாரில் பகல் 2 மணிக்கு ஆயிரக்கணக்கன பொதுமக்களை திரட்டி கண்டன ஆர்பாட்டம் நடத்தப்படும்

2 புனித ரமலான் மாத பித்ராக்களை வசூல் செய்து அதிகமான ஏழை எளிய மக்களுக்கு பெருநாள் கொடை வழங்குவது.   

3.   ஜுலை 15 க்குள் அனைத்து மக்கள் நல பணிகளும் நிறைவேற்றப்படும் என்று கீழக்கரை நகராட்சி அதிகாரிகள் அழித்த வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற வேண்டும்.

 பேட்டியின் போது மூத்த தலைவர் அன்பின் அசன், நகர் செயலாளர் பவுசுல் அமீன், ஒன்றிய செயலாளர் சாதிக், மமக செயலாளர் இக்பால், வர்த்தக அணி செயலாளர் சலீம்,  மமக துணை செயலாளர்  புகாரி PRO கமால் நாசர் மற்றும் ரிபாக், , வளைகுடா நிர்வாகி கீழை. இர்பான், 9 வார்டு நிர்வாகி மாலிக் உடன் இருந்தனர்.

Saturday, July 13, 2013

பாசிச மத வெறிக்கு பலியான மக்களை நாய்க் குட்டிகளோடு ஒப்பிடுவதா? அனைத்து மக்களும் ஒரு தாய் வயிற்று பிள்ளைகளாக வாழும் இந்தியாவை தலைமை ஏற்க மோடி தகுதியற்றவர்: மோடியின் பேச்சுக்கு தமுமுக கடும் கண்டனம்

தமுமுக தலைவர் ஜே எஸ் ரிபாயி வெளியிடும் கண்டன அறிக்கை
இந்நாட்டின் மிகப்பெரிய இனப்படுகொலையான குஜராத் இனபடுகொலையின் சூத்ராதாரியான 2000க்கும் மேற்பட்ட அப்பாவி சிறுபான்மை சமூக மக்களை கொடூரமாக கொன்ற கொலைப்படையின் தலைவராக வளம்வரும் மோடி அந்த படுகொலை குறித்தும் 2000க்கும் மேற்பட்ட மக்கள் கொடூரமாக கொல்லப்பட்டது குறித்தும் தனது உண்மயான எண்ணவோட்டத்தை வெளியிட்டுள்ளார். பாசிச மதவெறி வன்முறைக்கு பலியான மக்களை நாய் குட்டிகளோடு ஒப்பிட்டு மனிதநேயம், மதசார்பின்மை, நாகரீக அரசியல் அனைத்தையும் இழிவுபடுத்தியுள்ளார். மோடியும் மோடியை உயர்த்தி பிடிப்பவர்களும் இந்த இழி கருத்துக்கு பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும்.
இந்த நூற்றாண்டின் மாபெரும் இனபடுகொலை குறித்து மோடி தெரிவித்தகருத்துக்கள் வன்மையாக கண்டிக்கத்தக்கவை. இது பலியான அப்பாவி சிறுபான்மை மக்களை மட்டுமல்ல, இந்நாட்டில் வாழும் முப்பது கோடி முஸ்லிம்களையும், அனைத்து இந்தியர்களையும் உலகில் வாழும் நாகரிக சமூக மக்கள் ஒவ்வொருவரையும் இழிவுபடுத்தும் செயல் ஆகும். மலிவு விளம்பரத்திற்காக தான் ஒரு இந்து தேசியவாதி எனக் கூறும் மோடிக்கு மதச் சார்பின்மையை போற்றும் இந்தியாவின் பிரதமராக விரும்புவதற்குகூட தகுதி இல்லாதவர். இந்தியா போன்ற பல்சமூக மக்கள் ஒற்றுமையாக வாழும் நாட்டில் மோடி தலைமைத்துவத்திற்கு கூட தகுதி படைத்தவர் அல்ல. இந்திய மக்கள் அனைவரும் மோடியை புறக்கணிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

(ஜே எஸ் ரிபாயி)

Tuesday, July 9, 2013

கீழக்கரை தமுமக மற்றும் மமகவின்  இனிய ரமலான் நல் வாழ்த்துக்கள் 

Saturday, July 6, 2013

நாளை தடையை மீறி பேரணி நடைபெறும்: தமுமுக அறிவிப்பு

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ வெளியிடும் அறிக்கை:
ஜனநாயக முறையில், சட்டத்தின் வழியில் தமுமுக நாளைய தினம் நடத்தவிருந்த பேரணிக்கு காவல்துறை தடை விதித்திருக்கிறது.  சிறுபான்மையின மக்களின் ஜனநாயக உரிமைகளை குழி தோண்டிப் புதைப்பதை சகித்துக்கொள்ள முடியாது. சிறுபான்மையின முஸ்லிம் மக்களுக்கான இடஒக்கீட்டை உயர்த்த வேண்டும், சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும், திருமணப் பதிவு சட்டத்தில் திருத்தம் வேண்டும் என்ற நியாயமான கோரிக்கைகளை அரசிடம் முன்வைக்க பேரணி என்பது ஒரு வழிமுறையாகும். இதை தடுக்க முனைந்தது அரசியல் பழிவாங்கல் ஆகும்.
எனவே திட்டமிட்டபடி நாளை மதியம் 3 மணிக்கு சென்னை எழும்பூர் ராஜரத்தின ஸ்டேடியத்திலிருந்து பேரணி புறப்படும். காவல்துறையின் இடையூறுகள், அவர்கள் வாகன உரிமையாளர்களுக்கு தரும் நெடுக்கடி ஆகியவற்றையும் மீறி அலை, அலையாய் புறப்பட்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
உரிமைகளை வெல்ல, கருத்துவேறுபாடுகளையும், கட்சி வேறுபாடுகளையும் மறந்து சமுதாயத்தின் அனைத்துத் தரப்பும் ஒர் அணியில் திரண்டுவருமாறு உரிமையோடு அழைக்கிறோம். திடீர் என 24 மணி நேரத்திற்கு முன்பு அரசுதரப்பு கொடுத்துள்ள நெருக்கடியை முறியடித்து புதிய சரித்திரத்தை படைப்போம். நாளைய பேரணி அமைதியாக நடைபெற அனைவரும் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அன்புடன்,
(ஜே.எஸ்.ரிபாயீ )