Saturday, January 29, 2011

முஸ்லிம் மக்கள் தொகை

வாஷிங்டன்: முஸ்லீம் மக்கள் தொகையில் தற்போது முதலிடத்தில் இருக்கும் இந்தோனேசியாவை விரைவில் பாகிஸ்தான் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடிக்கும் என்று அமெரிக்க ஆய்வு தெரிவித்துள்ளது.

அதேபோல 2030-ம் ஆண்டில் இந்தியாவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 23. 6 கோடியைத் தாண்டும் என்றும் அது கூறுகிறது. மேலும், அடுத்த 20 ஆண்டுகளில் உலக முஸ்லிம் மக்கள் தொகை, முஸ்லிம் அல்லாத மக்கள் தொகையின் வளர்ச்சி விகிதத்தை விட இரண்டு மடங்கு வேகத்தில் அதிகரிக்கும் என்றும் அது தெரிவிக்கிறது.

இது குறித்து நேற்று வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,

அடுத்த 20 ஆண்டுகளில் முஸ்லிம் அல்லாத மக்கள் தொகையைவிட முஸ்லிம் மக்கள்தொகை இரண்டு மடங்கு அதிக வேகத்தில் அதிகரிக்கும்.

தற்போதைய சூழல் தொடர்ந்தால் 2030-ம் ஆண்டில் இருக்கும் 8.3 பில்லியன் மக்கள் தொகையில் 26.4 சதவிகிதம் முஸ்லிம்கள் இருப்பார்கள். கடந்த 2010ல் இருந்த 6.9 பில்லியன் மக்கள்தொகையில் 23.4 சதவிகிதம் பேர் முஸ்லிம்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
thanks by

Thursday, January 27, 2011

கீழக்கரை நகர் தமுமுக கீழை தலைவர் நீக்கம் தமுமுக

தமுமுக அபுதாபியில் "தர்பியா - நல்லொழுக்க பயிற்சி முகாம் 28/01/2011

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்

அபுதாபி மண்டலம் சார்பாக நடத்தும்

"தர்பியா - நல்லொழுக்க பயிற்சி முகாம்"

இன்ஸா அல்லாஹ்...

வருகின்ற 28/01/2011 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணி அளவில் நடைபெற இருக்கிறது, சிறப்புரையாளர்கள் :

சகோ.ஹுசைன் பாஷா

( அமீரக த.மு.மு.க துணை தலைவர் )

சகோ.முஹைதீன்

( த.மு.மு.க - துபாய் )

மேலதிக விபரங்களுக்கு 0558878144, 0508715629, 0501306305

Monday, January 24, 2011

திருச்சியில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது


திருச்சியில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
திருச்சியில் தமுமுக மற்றும் மமக ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழு கூட்டம் திருச்சி குத்பிஷா நகர் எவர்கிரீன் பள்ளி கூடத்தில் 23.01.2011 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணியனவிள் மாவட்ட தலைவர் அப்துல் ஹக்கிம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தில் தேர்தல் பணிகள் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது.

Friday, January 21, 2011

மேலப்பாளையத்தில் 30 இடங்களில் ம.ம.க கொடி ஏற்றும் நிகழ்ச்சி



ம.ம.க தொடங்கப்பட்டு 3 ஆண்டுகள் ஆனதை ஒட்டி நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்சிகள் நடைபெற இருக்கிறது. அதனுடைய முதல் கட்ட நிகழ்ச்சியாக மேலப்பாளையத்தில் இன்ஷா அல்லாஹ வரும் பிப்ரவரி 7 ம் தேதி அன்று 30 இடங்களில் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடக்க இருக்கிறது.

இஸ்லாமியர்களை வாக்குகளை மனிதநேய மக்கள் கட்சி பெறுகிறது

லயோலா கல்லூரியின் காட்சி ஊடகத் துறை, அவ்வப் போது, பொது விவகாரங்கள் தொடர்பாக கருத்துக் கணிப்பு நடத்தி முடிவுகளை வெளியிடுவது வழக்கம். இதே போல, கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில், 2011ல் நடக்க இருக்கும் பொதுத் தேர்தலில் எந்தெந்தக் கட்சிகளுக்கு வெற்றி வாய்ப்பு என்பது குறித்து ஒரு கருத்துக் கணிப்பை நடத்தியது. அந்தக் கருத்துக் கணிப்பு முடிவுகள் அதிமுக ஆட்சியை பிடிக்கும் என்று கூறியதால், உளவுத் துறை கொடுத்த நெருக்கடியில், அந்த கருத்துக் கணிப்பின் முடிவுகள் வெளியிடப் படவேயில்லை.

இப்போது, மீண்டும் லயோலா கல்லூரி மீண்டும் நடத்தியுள்ள கருத்துக் கணிப்பில், இப்போது தேர்தல் நடந்தால், அதிமுக கூட்டணிக்கு 181 முதல் 185 இடங்கள் கிடைக்கும் என்றும், திமுகவுக்கு 51 முதல் 55 வரை கிடைக்கும் என்றும் முடிவுகள் வந்திருக்கின்றன.

சீமான் பெருவாரியான மக்கள் ஆதரவை பெற்றுள்ளதாகவும் முடிவுகள் வெளியாகியுள்ளன.

தலித் மக்களைப் பொறுத்த வரை, தென் மாவட்டங்களில் டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகத்திற்கும், வட மாவட்டங்களில் விடுதலை சிறுத்தைகளுக்கும் ஆதரவு உள்ளதாகவும் முடிவுகள் கூறுகின்றன.

இசுலாமியர்களைப் பொறுத்த வரை, இருக்கும் முஸ்லீம் அமைப்புகளில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின், மனித நேய மக்கள் கட்சி, ஆதரவு பெற்றுள்ளதாகவும் தெரிகிறது.

இந்த முடிவுகளை நாளை வெளியிடலாம் என்று லயோலா கல்லூரியின் காட்சி ஊடகவியல் துறை முடிவெடுத்திருந்தாலும், உளவுத்துறை மற்றும் காவல்துறையின் நெருக்கடி காரணமாக, நாளை வெளியிடக் கூடாது என்று கல்லூரி நிர்வாகத்திற்கு கடும் நெருக்கடியை அளித்து வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

நவம்பர் மாத கருத்துக் கணிப்பை முடக்கியது போலவே, இந்த முறையும் கருத்துக் கணிப்பு முடிவுகளை முடக்க ஜாபர் சேட்டும், கருணாநிதியும் கடும் முயற்சிகளை எடுத்து வந்தாலும், லயோலா கல்லூரி நிர்வாகம் இந்த முறை முடிவுகளை வெளியிடுவது என்ற தீர்மானத்தில் இருப்பதாகத் தெரிகிறது.

அப்படி அந்த முடிவுகள் வெளியிடப் படாவிட்டாலும், சவுக்கு தனது வாசகர்களுக்காக எப்படியாவது அந்த விபரங்களை எடுத்து வெளியிடும் என்பதை தெரிவித்துக் கொள்கிறது. மண்ணுக்குள் தலையை புதைத்து கொள்ளும் நெருப்புக் கோழிகளைப் போல, கருணாநிதியும், ஜாபர் சேட்டும், மீண்டும் ஆட்சியை பிடித்து விடலாம் என்று கனவு கண்டு கொண்டுள்ளனர். ஆனால், மீண்டும் கருணாநிதி முதலமைச்சர் என்பதும், மீண்டும் ஜாபர் சேட் உளவுத் துறை தலைவர் என்பதும், முடவன் ஆசைப் படும் கொம்புத் தேனே, தவிர வேறு ஒன்றும் இல்லை.

நன்றி- சவுக்கு இணையதளம்,

Wednesday, January 19, 2011

கல்வி விழிப்புணர்வுக் கருத்தரங்கம்

பரமக்குடி, ஜன. 18: பரமக்குடி மேல முஸ்லிம் உயர்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனித நேய மக்கள் கட்சி சார்பில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவ - மாணவியருக்கான கல்வி விழிப்புணர்வு கலந்தாய்வு கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட தலைவர் மு.சம்சுதீன் சேட் தலைமை வகித்தார். சலிமுல்லா கான், மாவட்ட செயலாளர்கள் சகுபர் சாதிக், ஜபருல்லா கான், துணைத் தலைவர் வி. முகம்மது அப்பாஸ், துணைச் செயலாளர் முகம்மது இலியாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர் தலைவர் எஸ்.அகமது கபீர் வரவேற்றார்.

கல்வி பயில்வதில் பள்ளி மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும், தேர்வுக்கு தயாராகும் முறை மற்றும் தேர்வு எழுதுவது குறித்தும் கல்வித் துறை முன்னாள் இணை இயக்குநர் நயினா முகம்மது, பட்டதாரி ஆசிரியர் எம்.புரோஸ்கான், தலைமையாசிரியை எஸ்.மெகர் பானு ஆகியோர் எடுத்துக் கூறினர்.

இதில் பரமக்குடி பள்ளிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் கலந்துகொண்டனர்.

பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ், ஹாஜா கனி ஆகியோர் எதிர்காலத்தில் சமுதாயத்தில் மாணவர்களின் பங்கு குறித்து சிறப்புரையாற்றினர்.

நிகழ்ச்சியில் த.மு.மு.க., மனித நேய மக்கள் கட்சியைச் சேர்ந்த மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். மனித நேய மக்கள் கட்சியின் ஒன்றியச் செயலாளர் இக்பால் நன்றி கூறினார்

அல்சரை போக்கும் பச்சை வாழைப்பழம்


வயிற்றில் உள்ள குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட்களும் அரிப்பதன் காரணமாக குடல் புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம். குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களைச் விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடும் சக்தி பச்சை வாழைப்பழத்திற்கு உண்டு.
* வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும்.
* உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படிவதை தடுக்கலாம்.
* வாய்ப் புண் உள்ளவர்களுக்கு காரம் ஆகாது. முடிந்தவரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் எளிதில் வாய்ப்புண் ஆறும்.
* ஜாதிக்காயைச் சிறு சிறு துண்டுகளாகச் சீவி அதை நெய்விட்டு வறுத்து சாப்பிட்டு வந்தால் சீதப்பேதி குணமாகும். இதற்கு சிகிச்சை மேற்கொள்ளும்போது தயிர், மோர், இளநீர் ஆகியவற்றை மட்டும் ஏராளமாகச் சேர்த்துக் கொள்வது நல்லது.
* இரவில் படுக்கப் போகும்முன் வெந்நீரில் சிறிது தேன் கலந்து அந்த நீரில் வாயைக் கொப்பளித்து வந்தால் பற்களுக்குத் தொந்தரவு கொடுக்கும் பாக்டீரியாக்கள் செத்துப் போகும். பற்களின் எனாமல் சிதையாமல் பாதுகாக்கப்படும்.
* மஞ்சளை ஒரு கல்லில் உறைத்து ஒரு சலவைச் சோப்புத் துண்டை அதில் குழப்பினால் சிகப்பாகப் பசைபோல் வரும். இதை வேனல் கட்டியின் மேல் பூச, வேனல் கட்டி உடைந்துவிடும். சீழ் வெளியேறும்.
* வெள்ளைப் பூசணிக்காய் சாறில் ஒரு கரண்டித் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் மூளைச்சோர்வு நீங்கும். சுறுசுறுப்பாக செயல்படலாம்.

Tuesday, January 18, 2011

ராசல்கைமா-வில் நடைபெற்ற தமுமுக மண்டல நிர்வாகிகள் கூட்டம்



ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ராசல்கைமா-வில் தமுமுக மண்டல நிர்வாகிகள் கூட்டம் அமீரக துணைத் தலைவர் ஹூசைன் பாஷா தலைமையில் 14.01.11, வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது. அமீரகத் தலைவர் அப்துல் ஹாதி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு ராசல்கைமா மண்டலத்தை முன்மாதிரி மண்டலமாக கொண்டுவருவதற்கான ஆலோசனையை வழங்கினார். அதனைத் தொடர்ந்து கடந்த காலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளைப் பற்றியும், எதிர்காலத்தில் ஏற்பாடு செய்யவிருக்கும் நிகழ்ச்சிகளைப் பற்றியும் கலந்தாலோசிக்கப்பட்டது.

மண்டலத்தின் செயல்பாடுகளை தொய்வின்றி செய்ய மர்கஸ் அமைப்பது எனவும், அதற்கு கடியச்சேரி ஹாஜா, மதுக்கூர் பஷீர், ஆதம் ஆரிபின், குடந்தை ஜாபர் ஆகியோர் அடங்கிய குழு மர்கஸ் அமைப்பதற்கான ஏற்பாடுகளை செய்யும் எனவும், மருத்துவமுகாம், இரத்ததான முகாம், வாராந்திய இஸ்லாமிய சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடத்துவது எனவும், மக்கள் உரிமை பத்திரிகையின் விநியோகத்தை அதிகப்படுத்துவது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மக்கள் உரிமை பொறுப்பாளராக மதுக்கூர் பஷீர் அவர்கள் தேர்வு செய்யப்பட்டார். இறுதியில் துவா ஓதி கூட்டம் நிறைவடைந்தது.

மண்டலத்தின் அனைத்து பகுதியிலிருந்தும் நிர்வாகிகளும், உறுப்பினர்களும் திரளாக கூட்டத்தில் கலந்துக் கொண்டனர். இரவு உணவுடன் கூடிய சிறப்பான ஏற்பாட்டினை மண்டலத் தலைவர் ஜாபர், செயலாளர் ஷாஜஹான் ஆகியோர் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.

பாபர் மசூதி தீர்ப்பும் தேசிய அவமானமும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது








தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் திருச்சி மாவட்டம் சார்பாக திருச்சி தேவர் ஹாலில் பாபர் மசூதி தீர்ப்பும் தேசிய அவமானமும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.கூட்த்திற்க்க மாவட்ட தலைவர் அப்துல் ஹக்கிம் அவர்கள் தலைமைதாங்கினார்.கூட்டத்தில் ம.ம.க மாநில துணை பொதுச்செயலாளர் தமீமுன் அன்சாரி மற்றும் நாம் தமிழர் இயக்க தலைவர் இயக்குனர் சீமான் ம.தி.மு.க மாநில மாணவரணிச் செயலாளர் கங்கைச்செல்வன் ஆகியோர் சிறப்புறை ஆற்றினார்கள்.

Monday, January 17, 2011

அல்-அய்ன் மண்டல தமுமுக-விற்கு பாராட்டுச் சான்றிதழ்


அல்-அய்ன் மண்டல தமுமுகவின் சார்பில் கடந்த 2010 ஆம் ஆண்டில் இரண்டு தடவைகள் நடத்தப்பட்ட இரத்த தான முகாம் சேவையை பாராட்டி அல்-அய்ன் மண்டல இரத்த வங்கி சார்பில் பாராட்டு சான்றிதழ் கடந்த வியாழனன்று (13 /01 /2011 ) அல்-அய்ன் மண்டல இரத்த வங்கியில் வழங்கப்பட்டது. இச்சான்றிதழை அமீரக தமுமுக துணை செயலாளர் டாக்டர் அப்துல் காதர் மற்றும் அல்-அய்ன் மண்டல தமுமுக செயலாளர் சகோ மண்ணை ஹாஜா மைதீன் ஆகியோர் நேரில் சென்று பெற்றுக் கொண்டனர்.

Thursday, January 13, 2011

வென்று காட்டுவோம்-2011 பயிற்சி முகாம்



அரசு தேர்வு எழுதும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு அரசு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கும், தேர்ச்சி பெறுவதற்கும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தால் 9ம் ஆண்டாக இளையான்குடி ஹமிதியா உயர்நிலைப்பள்ளியில் நடத்தப்பட்டது. இளையான்குடி மற்றும் சுற்றி உள்ள கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளின் நலன் கருதி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்த முகாமில் திறமை வாய்ந்த ஆசிரியர்கள் 10, 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு மிகச் சிறப்பாக பாடம் நடத்தினார்கள். மாணவ, மாணவிகளும் ஆர்வத்துடன் குறிப்புகள் எடுத்துக் கொண்டனர். இம்முகாமை இளையான்குடி காவல் ஆய்வாளர் திரு.இராமச்சந்திரன் துவக்கி வைத்தார்கள். ஹமிதியா உயர்நிலைப்பள்ளியின் தாளாளர் திரு.முகம்மது சிக்கந்தர் அவர்களும், தலைமை ஆசிரியர் திரு.பெரியசாமி அவர்களும் வாழ்த்துரை வழங்கினார்கள். இம்முகாமிற்கான ஏற்பாடுகளை தமுமுக-வின் நகர தலைவர் கபார்கான், நகரச் செயலாளர் உமர், நகர பொருளாளர் செய்யது மஹபூப், மனிதநேய மக்கள் கட்சியின் நகரச் செயலாளர் ஜெயினுல் ஆபிதின், சோதுகுடி ஜலால், சாத்தனி சிராஜ், கஸ்ஸாலி, ஹக்கீம், சீனி முகம்மது, ரவி சிறப்பாக செய்திருந்தனர்.
சுமார் 1500 மாணவ, மாணவிகள் பயன்பெற்றனர்.

Wednesday, January 12, 2011

108 ஆம்புலன்ஸ் சேவை சம்பந்தமான விளம்பரங்கள்..... இலவசமா? --

தமிழகத்தில் அவசரகால உதவிக்காக “108′ இலவச ஆம்புலன்ஸ் சேவை, 2008-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நூற்றுக்கணக்கான ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழக அரசும், ஜி.வி.கே. அவசரகால மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி மையமும் (இ.எம்.ஆர்.ஐ.) கையெழுத்திட்டன. மருத்துவம், காவல்துறை, தீயணைப்புத்துறையுடன் இந்த சேவை இணைக்கப்பட்டுள்ளது.

இந்த இலவச ஆம்புலன்ஸ் சேவை, சென்னை மட்டுமில்லாமல் மாவட்டங்களில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. மாரடைப்பு, பெண்களுக்கு பிரசவ வலி, சாலை விபத்துகளில் அடிபடுவோர் என எந்த இடத்தில் இருந்தாலும் “108′க்கு அழைத்தால், இலவச ஆம்புலன்ஸ் சேவை வழங்கப்படுகிறது.

ஒருபக்கம் பொதுமக்களுக்கு இலவசமாக சேவை வழங்கிய போதிலும், “108′ இலவச ஆம்புலன்ஸ் சேவை வழங்குவது தொடர்பான விளம்பரங்கள் குறிப்பாக சன் மற்றும் கலைஞர் டிவிக்களில் கட்டணம் செலுத்தித்தான் விளம்பரம் செய்யப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் தமிழக அரசு 2008 முதல் 2010 வரை காலக்கட்டங்களில் சுமார் ரூ. 1 கோடி செலவு செய்துள்ளது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக சென்னை குரோம்பேட்டையில் உள்ள மக்கள் விழிப்புணர்வு சங்கத்தின் தலைவர் வி.சந்தானம், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் டிசம்பர் 30-ம் தேதி இ.எம்.ஆர்.ஐ. தலைமைச் செயல் இயக்குநரிடம் இருந்து பெற்ற கேள்வி- பதில்களின் விவரம்:

கேள்வி: 108 ஆம்புலன்ஸ் சேவை சம்பந்தமான விளம்பரங்கள் சன் மற்றும் கலைஞர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படுகின்றன. இது இலவச விளம்பரமா? அல்லது கட்டண விளம்பரமா? கட்டணமென்றால் ஒரு முறை விளம்பரத்துக்கு எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும்?

பதில்: 108 ஆம்புலன்ஸ் சம்பந்தமான விளம்பரம் இலவச விளம்பரம் அல்ல. கட்டண விளம்பரம்தான். ஒரு முறை பத்து விநாடிகள் விளம்பரத்துக்கு சன் டிவியில் ரூ. 23,474-ம், கலைஞர் டிவியில் ரூ. 9,700-ம் செலுத்த வேண்டும் என்று இ.எம்.ஆர்.ஐ. பதில் அளித்துள்ளது.

கேள்வி: இலவச ஆம்புலன்ஸ் சேவை அறிமுகப்படுத்தப்பட்ட நாள் முதல் விளம்பரத்திற்காக சன் மற்றும் கலைஞர் டிவி நிறுவனங்களுக்கு இன்று வரை செலுத்தப்பட்ட தொகை எவ்வளவு?

பதில்: இன்று வரை சன் மற்றும் கலைஞர் டிவி விளம்பரத்திற்காக செலுத்தப்பட்ட தொகை ரூ. 1,01,53,320 என்று பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“”ஆகாரத்திற்காக அழுக்கை உண்டு, தடாகத்தைச் சுத்தப்படுத்துகிறதே மீன், அதுபோலத் தான் நானும். என்னுடைய சுயநலத்தில், பொது நலமும் கலந்திருக்கிறது” என்ற “பராசக்தி’ பட வசனத்தைப் போல, தமிழக அரசின் இந்த இலவச ஆம்புலன்ஸ் சேவை பொது நலமாகப் பார்க்கப்பட்டாலும், இந்த 108 ஆம்புலன்ஸ் சேவை விளம்பரத்தின் மூலம் சன் மற்றும் கலைஞர் டிவிகளுக்கு ரூ. 1 கோடி வருவாய் கிடைப்பது என்பது குடும்ப சுயநலம்தான்” என்கிறார் வி.சந்தானம்.

சுயநலத்தில் பொதுநலமும் கலந்திருக்கிறது!

Monday, January 10, 2011

ராசல் கைமா: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கலந்தாய்வு கூட்டம்

ஐக்கிய அரபு அமீரகம், ராசல் கைமா மண்டல
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கலந்தாய்வு கூட்டம்

இன்சா அல்லாஹ்... வருகின்ற 14/01/2011 - வெள்ளிக் கிழமை மாலை 4.30மணிக்கு ராசல் கைமா - அல் நக்கில் - கடியச்சேரி ஹாஜா அவர்கள்இல்லத்தில்
தமுமுக - ராசல் கைமா மண்டல கலந்தாய்வு பொதுக் கூட்டம் நடைப் பெற இருக்கிறது,கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினார்களாக அமீரகத்தின் நிருவாகிகளும், மண்டல நிருவாகிகளும் கலந்துக் கொள்ள இருக்கிறார்கள், இதற்கான ஏற்பாடுகளை குடந்தை ஜாப்பர் தலைமையில் ஈடுப்பட்டு வருகின்றனர்,
மேலதிக விபரங்களுக்கு.. 050 1657853 / 050 6903993 / 050 3775996

வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு நஷ்டைஈடு



1990 ஆம் ஆண்டு வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து நஷ்டைஈட்டை பெற்றுக்கொடுக்கும் வகையில் தனியான ஆணைக்குழு ஒன்றை அமைப்பதற்கு நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகளை மேற்கொள்ள வேண்டும் என யாழ். மாநகரசபையின் முன்னாள் பிரதி மேயர் எம்.ஜி.பஷீர் தெரிவித்தார்.

வட மாகாணத்தில் வாழும் தமிழ் மக்கள் அரசாங்கம் அளிக்கும் எந்த சலுகைகளையும் விட உரிமைகளுக்கே முதலிடம் வழங்குவார்கள்.

எனவே அனைவரையும் அழைத்து பேச்சு நடத்தி தீர்க்கமான முடிவை எடுத்து இந்த நாட்டில் அனைத்து சமூகமும் வாழ வழி வகுக்கவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழுவின் விசாரணை அமர்வு நேற்று புத்தளம் கச்சேரியில் நடைபெற்றபோது அதில் கலந்துகொண்டு சாட்சியமளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மேலப்பாளையத்தில் அடக்கஸ்தலம் அமைக்கக்கோரி ஆர்ப்பாட்டம்


திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் நகரம் சந்தை முக்கு,ஹாமீம்புரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு இறந்தவர்களை அடக்கம் செய்ய அடக்கஸ்தலம் அமைக்க இடம் ஒதுக்கக்கோரியும், அப்பகுதியில் போக்குவரத்தை குறைக்க ரவுண்டானா அமைக்கக்கோரியும் மாவட்ட நிர்வாகத்திற்கு வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் 02.01.2010 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் கே.எஸ். ரசூல் மைதீன் தலைமை தாங்கினார். நகரத் தலைவர் ஹாஜா, செயலாளர் அப்துல் காதர், பொருளாளர் நேசம் ரப்பானி, மாவட்டத் தலைவர் மைதீன் பாரூக், செயலாளர் காசிம் பிர்தௌஸி, பொருளாளர் சர்தார் அலிக்கான் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.


இந்தக் ஆர்ப்பாட்டத்தில் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

Friday, January 7, 2011

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் துபை மண்டலம் சார்பாக நடைப்பெற இருக்கின்ற இன்றைய நிகழ்ச்சிகள்.

தலைப்பு- மறுமை நம்பிக்கையும், மறுபிறவி நம்பிக்கையும்

இடங்கள்-

1) அல்கூஸ் அல்கஹில் மால் அருகில் உள்ள மஸ்ஜித்,

நேரம்- மக்ரிப் தொழுகைக்குப் பிறகு

உரை- அதிரை அப்துல் காதர்

2) சோனாப்பூர்- லேபர் கேம்ப்

நேரம்- மக்ரிப் தொழுகைக்குப் பிறகு

உரை- முஹைதீன்


3) அல்பராஹா, லத்திபா மஸ்ஜித்

நேரம்- இஷா தொழுகைக்குப் பிறகு

உரை- திருச்சி உமர்

4) ஹோர்அல்ஹன்ஸ் போஸ்ட் ஆபீஸ் மஸ்ஜித்

நேரம்- மக்ரிப் தொழுகைக்குப் பிறகு

உரை- மதுக்கூர் அப்துல் காதர்


5) தமுமுக மார்க்கஸ்

நேரம்- இரவு 8 ;30

உரை- மௌலவி முஹைதீன்

Thursday, January 6, 2011

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் அல்கோபர் கிளை நிர்வாகிகள் கூட்டம்

சமுதாய ஒற்றுமை மற்றும் மமகவின் தேர்தல் வெற்றிக்காக மக்கா புனித பயணம்

06.01.2011

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் அல்கோபர் கிளை நிர்வாகிகள் கூட்டம் கடந்த 2-1-2011 அன்று பொறியாளர் சகோ.ஷஃபி அஹமது வீட்டில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தமுமுக அல்கோபர் கிளை சார்பாக வரும் 19-1-2011 அன்று புனித மக்கா பயணம் (உம்ரா) ஏற்பாடு செய்ய திட்டமிடப்பட்டது.

மேலும் உம்ராவில் நம் சமுதாய ஒற்றுமைக்காகவும் வரும் தேர்தலில் மமக வெற்றிக்காகவும் துவாச் செய்ய பயணாளிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் திட்டமிடப்பட்டுள்ளது.

அல்-கோபர் கிளை மக்கள் உரிமையில் மிகவும் கவனம் செலுத்தி வருவதையும் மேலும் மக்கள் உரிமையை விற்பனையை அதிகரிக்க ஆவண செய்ய வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அல்-கோபர் கிளை உறுப்பினர்களை அதிகரிக்க அதற்கான குழு அமைக்கத் திட்டமிடட்ப்பட்டது. இக்கூட்டத்தில் கிளைத்தலைவர் சகோ.இஸ்மாயில் செயலாளர் சகோ.ஹாஜாபஷிர் பொருளார் சகோ.ஷஃபி அஹமது மக்கள் தொடர்பாளர் சகோ. நவாப் ஜான் மற்றும் இதர கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tuesday, January 4, 2011

கோட்டக்குப்பத்தில் நல்லகுடிநீருக்காக ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் மாவட்டம் கோட்டக் குப்பத்தில் 30 ஆயிரம் மக்கள் வாழும் பகுதியாக உள்ளது. ஆனால், இங்கு குடிநீர் மிகவும் மாசடைந்து, உப்பு நீராகவும், பாக்டீரியா கிருமிகள் நிறைந்ததாகவும் உள்ளது. இந்த குடிநீர் குடித்தால் வாந்தி, பேதி, காய்ச்சல் போன்ற கடுமையான நோய்கள் ஏற்படும் ஆபத்து உள்ளதாக புதுவை பொதுப்பணித்துறையின் தண்ணீர் ஆய்வு சோதனைக் கூடத்தின் மூலம் குடிநீரை ஆய்வு செய்ததில் தெரியவந்துள்ளது.
பேரூராட்சியால் வழங்கப்படும் குடிநீர் மேல்நிலை தொட்டிக்கு எந்தவித பாதுகாப்பும் பராமரிப்பும் இல்லாத அவலநிலை உள்ளது. பூந்தோட்டமாய் இருக்க வேண்டிய குடிநீர் தொட்டி சாக்கடையாகவும், குப்பை மேடுகளாவும் மது குடிப்போரின் குளியல் தொட்டியாகவும் உள்ளது.

கோட்டக்குப்பத்தில் இயங்கிவரும் தண்ணீர் கம்பெனிகளால் மக்களின் உயிராதாரமாக கருதப்படும் நிலத்தடி நீர் நாளுக்கு நாள் உறிஞ்சப்படுவதால் கடல் நீர் கலந்து உப்பு நீராக மாறிவருகிறது.

எனவே, கோட்டக்குப்பம் பேரூராட்சியை கண்டித்தும், இங்கு இயங்கிவரும் தண்ணீர் கம்பெனிகளின் உரிமத்தை ரத்து செய்யக் கோரியும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் மற்றும் மனிதநேய கட்சி சார்பில் கண்டன 29.12.2010 ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமுமுக&வின் கோட்டக்குப்பம் நகர தலைவர் ஜெ.சம்சுதீன் தலைமையேற்க, மாநில மாணவரணி செயலாளர் எம்.ஜெய்னுல் ஆபுதீன் கண்டன உரை ஆற்றினார். மேலும், மாவட்ட மற்றும் நகர நிர்வாகிகள், உறுப்பினர்கள், கோட்டக்குப்பம் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

தொகுதிகள் குறித்து பேச மமக சார்பில் ஐவர்குழு அமைப்பு ஜனவரி இறுதிக்குள் பொதுக்குழு முக்கிய பிரச்சினைகள் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானங்கள்


தமுமுக மற்றும் மமக நிர்வாகிகள் பங்குபெற்ற உயர்நிலைக்குழு கூட்டம் சென்னையில் ஜனவரி-2 அன்று பேரா.எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் தலைமையில் நடைபெற்றது.


இதில் பொதுச்செயலாளர் செ.ஹைதர் அலி, பொருளாளர் ஓ.யு.ரஹ்மத்துல்லா, துணைப்பொதுச் செயலாளர் மவ்லவி.ஜெ.எஸ்.ரிஃபாயி, மாநிலச் செயலாளர்கள் கோவை உமர், மௌலா எம்.நாசர், பேரா.ஜெ.ஹாஜாகனி, ஏ.எஸ்.எம்.ஜுனைத், எம்.எச்.ஜிஃப்ரி காசிம், பி.எஸ்.ஹமீது மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் குணங்குடி ஆர்.எம்.ஹனீஃபா, ம.ம.க பொதுச்செயலாளர் ப.அப்துல் சமது, ம.ம.க பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரஷீத், ம.ம.க துணைப்பொதுச் செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி, அமைப்புச் செயலாளர்கள் மண்டலம் எஸ்.எம்.ஜெய்னுல் ஆபிதீன், முகம்மது கௌஸ், சம்சுதீன் நாசர்உமரி, தலைமைத் தேர்தல் ஆணையர்கள் ஜுல்பிகார், வேதாளை ஹாஜா, சிராஜுதீன் ஆகியோர் பங்கேற்றனர்.

இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் தொகுதி பங்கீடுகள் குறித்து அதிமுகவுடன் மமக சார்பில் பேச்சு வார்த்தை நடத்த ஐவர் குழு அமைக்கப்பட்டது. பேரா.எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் தலைமையிலான இக்குழுவில் தமுமுக பொதுச்செயலாளர் செ.ஹைதர்அலி, மமக பொதுச்செயலாளர் ப.அப்துல்சமது, தமுமுக பொருளாளர் ஓ.யூ.ரஹ்மத்துல்லா, மமக பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன்ரசீது ஆகியோர் பங்கு பெறுவார்கள் என முடிவு செய்யப்பட்டது.


ஜனவரி 31-க்குள் மாநில பொதுக் குழுவை நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டணி சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, ஊழல் மிகவும் மலிந்துள்ள நிலை தமிழகத்தில் நிலவுகிறது. ஸ்பெக்ட்ரம் ஊழல் நாட்டையே அதிர வைத்துள்ளது. ஊழல் மிகுந்த திமுக ஆட்சியை அகற்ற, மனிதநேய மக்கள் கட்சி அங்கம் வகித்து வரும் அதிமுக கூட்டணியை மேலும் பலப்படுத்தி, 2011 சட்டமன்றத் தேர்தலில், வெற்றி பெறப் பாடுபடுவது என தீர்மானிக்கப்படுகிறது.


விலைவாசி உயர்வுக்கு கண்டனம்

விஷம்போல் ஏறிவரும் விலைவாசி யால் ஏழை எளியோரின் வாழ்வுரிமை கேள்விக்குள்ளாகியுள்ளது. விலைவாசி உயர்வுக்குக் காரணமான அரசியல் சூதாட்டங்களை அம்பலப்படுத்தும் வகையில் ம.ம.க போராட்டங்களையும், விழிப்புணர்ச்சிப் பிரச்சாரங்களையும் மேற்கொள்வது எனத் தீர்மானிக் கப்படுகிறது.

காவல்துறைக்குக் கண்டனம்

தீவிரவாதிகளைப் பிடிக்கின்ற போலீஸ் பயிற்சியின்போது, திண்டுக்கலில் தீவிரவாதி களை முஸ்லிம்களாக சித்தரித்திருந்தனர். இதை த.மு.மு.க வன்மையாகக் கண்டித்தது. மீண்டும் ஈரோட்டில் நடந்த பயிற்சியின் போதும் தீவிரவாதிகளுக்கு முஸ்லிம் களைப் போலவே செயற்கைத் தோற்றம் கொடுக்கப்பட்டிருந்தது. இவ்வாறு முஸ்லிம்களைத் தொடர்ந்து புண்படுத்திவரும் காவல்துறையின் அராஜகப் போக்கை தமிழக முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு செல்வது எனவும், அதற்குச் சரியான தீர்வு கிடைக்கவில்லை எனில் மிகப்பெரிய கண்டனப் போராட்டத்தை நடத்துவது, எனவும் தீர்மானிக் கப்படுகிறது.

இராணுவத்தில் உள்ள கருப்பாடுகளை களையெடுக்க வேண்டும்

காவி பயங்கரவாதத்தின் விபரீதங்களை சமீபத்தில் தோலுரித்துக் காட்டிய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி மற்றும் திக்விஜய் சிங் ஆகியோருக்கு இந்நிர்வாகக் குழு தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. இதே நேரத்தில் காவி பயங்கரவாதிகளுக்கு எதிரான வழக்குகளில் புலனாய்வுத் துறையினரின் மெத்தனப் போக்கு கவலையளிக்கின்றது. மராட்டிய மாநிலம் மாலேகானில் நடைபெற்ற குண்டுவெடிப்பு தொடர்பாக மராட்டிய மாநில பயங்கரவாத எதிர்ப்புப் படையின் தலைவராக இருந்த மறைந்த ஹேமந்த் கர்கரே மிகச் சிறப்பான புலனாய்வுகளை செய்து இந்திய இராணுவத்தின் உளவுப்பிரிவில் பணியாற்றிய லெப்டினென்ட் கர்னல் ஸ்ரீகாந்த் புரோகித்தை கைது செய்தார். மாலேகான் குண்டுவெடிப்பு மட்டுமின்றி சம்ஜோதா எக்ஸ்பிரஸ், ஹைதராபாத் மக்கா பள்ளிவாசல் குண்டுவெடிப்பு, அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு உட்பட பல குண்டு வெடிப்புகளுக்குப் பின் இராணுவத்தில் பணிபுரிந்த புரோகித்திற்கு தொடர்பு உண்டு என்பதை கர்கரே கண்டுபிடித்தார். புரோகித்தின் மடிகணிணியில் இருந்து பெறப்பட்ட தகவல்கள் அவர் இராணுவத்தில் பணியாற்றும் பலரையும் தனது பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு இசைவானவராக மாற்றியுள்ளார் என்பதையும் கர்கரேயின் புலனாய்வு தெளிவுப்படுத்தியது. ஆனால் கர்கரேயின் மரணத்திற்கு பிறகு இது குறித்தப் புலனாய்வு கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற கர்னல்கள் ஹஸ்முக் பட்டேல், கைலாஷ் ராய்கர், ஆதித்யா பாபதிட்யா தர், பிரிகேடியர் மாத்துர், மேஜர் நித்தின் ஜோஷி மற்றும் மேஜர் பிரயாக் மோடர் ஆகியோருக்கும் குண்டுவெடிப்புகளுக்குப் பங்குண்டு என்று கர்கரேயின் புலனாய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. இருப்பினும் இந்த கருப்பாடுகள் மீது இது வரை முறையான நடவடிக்கை எடுக்கப்படாதது மிகுந்த வருத்தத்தை அளிக்கின்றது. கர்கரேயின் புலனாய்வில் குறிப்பிடப்பட்டுள்ள இராணுவ அதிகாரிகள் மட்டுமில்லாமல் இன்னும் ஏராளமான இராணுவத்தினர் புரோகித்தின் கும்பலினால் மூளைச் சலவைச் செய்யப்பட்டுள்ளார்கள் என்றும் கர்கரேயின் புலனாய்வில் புலப் பட்டுள்ளது. காவி பயங்கரவாதத்தை ஒழிப்ப தற்கு காங்கிரஸ் கட்சிக்கு உண்மையில் அக்கறை இருந்தால் கர்கரேயின் புலனாய்வு அடிப்படையில் இராணுவத்தைச் சேர்ந்த காவி பயங்கரவாதிகள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்நிர்வாகக் குழு கோருகின்றது.

கே.ஜி. கண்ணபிரான் மரணத்திற்கு அனுதாபம்

மனித உரிமைப் போராளி கே.ஜி. கண்ணபிரான் அவர்களின் மரணம் மிகுந்த வருத்தத்தினை அளிக்கின்றது. தனது வாழ்நாள் முழுவதும் மனித உரிமைக்காக அர்ப்பணித்துக் கொண்ட ஒரு மிகச் சிறந்த போராளியாக வாழ்ந்தவர் கண்ணபிரான். அப்பாவி சிறுபான்மை மக்கள் மீது தடா போன்ற கொடிய சட்டம் பாய்ச்சப்பட்ட போது அவர் கொதித்தெழுந்து உரிமைக்குரல் எழுப்பியதை தமுமுக நன்றியுடன் திரும்பிப் பார்க்கின்றது. அன்னாரின் இழப்பு மனித உரிமைகளுக்காகப் பாடுபடும் அனைவருக்கும் ஒரு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், சக மனித உரிமைப் போராளிகளுக்கும் தமுமுகவின் தலைமை நிர்வாகக் குழு தனது அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

தேசிய நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும்

மருத்துவ கல்விக்கான தேசிய நுழைவுத்தேர்வு வைக்கப்படும் என்ற இந்திய மருத்துவ குழுமத்தின் முடிவை தமுமுக கண்டிக் கின்றது. இது அடித்தட்டு மக்களுக்கு எதிரானது. எனவே மத்திய அரசு மருத்துவப் படிப்பிற்கு நுழைவுத்தேர்வு முறையை ரத்து செய்ய மத்தியஅரசு உடனே ஆவன செய்ய வேண்டுமென தமுமுக கோருகின்றது.

சட்ட பயங்கரவாதத்திற்கு கண்டனம்

பழங்குடி இன மக்களின் உயர்விற்காகத் தன்னை அர்ப்பணித்துப் பணியாற்றி வந்த உலகப்புகழ் பெற்ற மருத்துவர் பினாயக் சென்னுக்கு, ஆயுள் தண்டனை வழங்கிய, சட்ட பயங்கரவாதத்தை தமுமுக வன் மையாகக் கண்டிக்கிறது. உயர்நீதிமன்றம் இவ்வழக்கில் தலையிட்டு டாக்டர்.பினாயக்கை விடுவிக்க வேண்டும் எனக் கோருகிறது.

Monday, January 3, 2011

துபை மண்டல நிர்வாகிகளுக்கான தர்பியா முகாம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் துபை மண்டலத்தின் சார்பாக ஜனவரி 1 அன்று துபை மண்டல நிர்வாகிகளுக்கான தர்பியா முகாம் மண்டலத் தலைவர் அப்துல் காதர் அவர்கள் தலைமையில் அல்-தவார் பூங்காவில் நடைப்பெற்றது,



நிகழ்வின் ஆரம்பமாக சகோதரர் நாகூர் சையத் அலி அவர்கள் படைத்தவனுக்கும் படைப்பினங்களுக்கும் செய்யவேண்டிய கடமைகள் என்ற தலைப்பின் கீழாக உரையாற்றினார், அவரது உரையில் படைப்பினங்களுக்கு செய்யவேண்டிய முக்கிய கடமைகளில் அவர்களை சுவனத்திற்கு அழைத்துச் செல்லும் ஒரே மார்க்கமாம் இஸ்லாத்தின் பக்கம் ஒட்டுமொத்த மனித சமுதாயத்தையும் அழைப்பதுதான் நம் மீது உள்ள முக்கிய கடமை என்று எடுத்துரைத்தார்.

அதன் பிறகு அமீரக தமுமுக துணைத்தலைவர் சகோதரர் ஹுசைன் பாஷா அவர்கள் உளவியல் பாதிப்பு என்ற தலைப்பின் கீழாக உரையாற்றினார், தனது உரையில் உளவியல் பாதிப்புகளை தடுக்கும் வழிமுறைகளை எடுத்துரைத்தார்.

தொடர்ந்து சகோதரர் இப்ராகிம் அவர்கள் இஸ்லாம் விரும்பும் கூட்டமைப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார், முஸ்லிம் ஜமாஅத் எப்படி இருக்கவேண்டும் என்பதைப்பற்றியும், ஜமாத்தின் நிர்வாகிகளின் செயல்பாடுகளை எந்தவகையில் அமைத்துக் கொள்ளவேண்டும் என்பதையும், யாருக்காக நமது பணியை அமைத்துக் கொள்ளவேண்டும் என்பதைப் பற்றியும் தெளிவாக விளக்கினார். நமது பனியின் இலக்கு இறைவனின் திருப்தியை அடைவதை மட்டுமே நோக்கமாக இருக்கவேண்டும் என்பதை எடுத்துரைத்தார்.
இறுதியாக மண்டல செயலாளர் அதிரை சாகுல் அவர்கள் கலந்துக் கொண்ட நிவாகிகள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டு தர்பியா நிகழ்வை நிறைவு செய்தார், எல்லாப்புகழும் இறைவனுக்கே.

நிகழ்ச்சியின் துளிகள்



ஜனவரி 1 அன்று அமீரகம் முழுவதும் விடுமுறை என்பதால் இன்ப சுற்றுலா செல்லக் கூடிய முஸ்லிம் சகோதரர்கள் மத்தியில், நம்மை சுயப் பரிசோதனை செய்வதற்காக நடத்தப்பட்ட நிகழ்வில் துபை மண்டல தமுமுகவின் முக்கிய நிர்வாகிகள் கலந்துக் கொண்டு தங்களை மெருகூட்டிக் கொண்டார்கள்.

டிசம்பர் 31 -12 -2010 , அன்று இரவு சோனாப்பூர் பகுதியில் இளையான்குடியை சார்ந்த உடையப்பன் என்ற சகோதரர் தன்னை இஸ்லாத்தில் இணைத்து இஸ்ஹாக் என்று தனது பெயரை மாற்றிக்கொண்டார் (எல்லாப்புகழும் இறைவனுக்கே) சகோதரர் இஸ்ஹாக் அவர்கள் நிகழ்வில் அழைக்கப்பட்டு கழக சகோதர்கள் மத்தியில் அறிமுகம் செய்யப்பட்டார்.