Tuesday, December 31, 2013

கீழக்கரை நகர் தமுமுக ஆர்பாட்டத்தில் அறிவித்த அறிவிப்புக்கு கீழக்கரை நகராட்சியில் பதில் இல்லை... கவுன்சிலர் நோட்டிஸ்...

http://keelakaraitimes.com/wp-content/uploads/2013/12/notice12.jpg
நன்றி : http://keelakaraitimes.com

தமிழ்நாடு வக்பு வாரியத்தின் கூட்டம்

 

தமிழ்நாடு வக்பு வாரியத்தின் கூட்டம் வாரிய தலைவர் தமிழ்மகன் ஹுசேன் தலைமையில் நடைபெற்றது. உறுப்பினர்கள் மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் அ.அஸ்லம் பாஷா MLA முன்னாள் அமைச்சர் முஹம்மத் ஜான், அப்துல் ரஹ்மான் எம்.பி, சிக்கந்தர், தலைமை காஜி முப்தி சலாஉதீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Monday, December 30, 2013

தேர்தல் கூட்டணி ஜன.10ம் தேதி மனிதநேய மக்கள் கட்சி முடிவு

 மனிதநேய மக்கள் கட்சி எம்எல்ஏ ஜவாஹிருல்லா, நாகை மாவட்டம், சங்கரன்பந்தலில் நிருபர்களுக்கு நேற்று அளித்த பேட்டி:


வருகிற நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி என்பது குறித்து விவாதித்து முடிவு எடுக்க மனிதநேய மக்கள் கட்சி மாநில செயற்குழு கூட்டம் வரும் ஜனவரி 10ம் தேதி சென்னையில் கூடுகிறது. கூட்டத்தில் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும்.


தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது

இந்திய துணை தூதர் தேவயானியை அமெரிக்க அரசு கைது செய்தபோது மத்திய அரசு அழுத்தமான நடவடிக்கையை எடுத்தது. அதே போன்று தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்யும் போதும் கடும் நடவடிக்கை  எடுக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசு கரும்பு விலையை டன்னுக்கு ரூ.2,600 அறிவித்துள்ளது. அதை உயர்த்தி 4 ஆயிரமாக வழங்க வேண்டும்.இவ்வாறு ஜவாஹிருல்லா கூறினார்.

Sunday, December 29, 2013

தமுமுக சார்பில் கீழக்கரை நகரில் பி.எஸ்.ஏவுக்கு வாழ்த்து

 கீழக்கரை “அன்பின் முகவரி” பி.எஸ்.அப்துர் ரஹ்மான் உலக முஸ்லிம்களில் செல்வாக்கு மிக்க 500 நபர்களில் ஒருவராக ஜோர்தானிலுள்ள இஸ்லாமியா ஆராய்ச்சி மையத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையோட்டி கீழக்கரை நகரின் மைய பகுதியில் தமுமுக சார்பில் வாழ்த்து பேனர் வைக்கப்பட்டுள்ளது.

Saturday, December 28, 2013

துபாய் தமுமுகவின் சோனாப்பூர் கிளையின் சார்பாக மாபெரும் இஸ்லாமிய மாநாடு ஜனவரி 3 அன்று நடைப்பெற உள்ளது

தீனை நிலைநாட்டுவோம்! இஸ்லாமிய மாநாட்டிற்கு ஆறு நாட்களே உள்ளன
===================================================

இறைவன் நாடினால், துபாய் தமுமுகவின் சோனாப்பூர் கிளையின் சார்பாக மாபெரும் இஸ்லாமிய மாநாடு ஜனவரி 3 அன்று நடைப்பெற உள்ளது


கிழக்கரை பைத்துல் மால் வெள்ளி விழா: பேரா.ஜவாஹிருல்லாஹ் பங்கேற்பு!



 கிழக்கரை  பைத்துல் மால் வெள்ளி விழா: பேரா.ஜவாஹிருல்லாஹ் பங்கேற்பு!

நேற்று 27.12.2013 மாலை 6.30 மணியாளவில் கிழக்கரை பைத்துல் மால் விழாவில் வெள்ளி விழா நிகழ்ச்சியில் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் M.H.ஜாவஹிருல்லாஹ் MBA.m.Phil.phd கலந்து வழ்த்துரை வழங்கினர்.

உடன் தமுமுக மாவட்ட செயலாளர் அன்வர் அலி,இராமநாதபுரம் நகர் மமக செயலாளர் ஜாங்கீர், இராமநாதபுரம் ஒன்றிய தலைவர் பாக்கர்,நகர் சர்புதின்,புராஸ்,ஆற்றாங்கரை அஃபான் கிழக்கரை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் இருத்தார்கள்....

Saturday, December 21, 2013

துபாயில் நடைப்பெற்ற சமுதாய விழிப்புணர்வு கூட்டத்தில் மமக பொதுச்செயலாளர் உரை.



தமுமுக துபை மண்டலத்தின் சார்பாக இன்று [20:12:13] இரவு 8:30 மணியளவில் சமுதாய விழிப்புணர்வு கூட்டம் நடைப்பெற்றது,தமிழகத்தில் இருந்து மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் சகோதரர் தமிமுன் அன்சாரி அவர்கள் நடந்து முடிந்த தேர்தல்களும் பாராளுமன்ற தேர்தலும் என்ற தலைப்பில் இந்தியாவின் இன்றைய அரசியல் மற்றும் சமுக சூழ்நிலைகளை எடுத்துரைத்தார்,அதை தொடர்ந்து சகோதரர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார், திரளான சகோதரர்கள் இந்நிகழ்வில் கலந்துக் கொண்டு சிறப்பித்தார்கள்.

Saturday, December 14, 2013

இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினா் தொகுதி நிதியில் இருந்து வாங்கப்படும் மூன்று சக்கர வாகணங்கள்.




இராமநாதபுரம் மாற்றுத்திறனாளிகள் மையத்தில் மாற்றுது்திறனாளிகளுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருக்கும் மூன்று சக்கர வாகணங்கள். இந்த வாகணங்கள் அணைத்தும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினா் ஜனாப் ஜவாஹிருல்லாஹ் அவா்களின் தொகுதி நிதியில் இருந்து வாங்கப்பட்டுள்ளது. 

Friday, December 13, 2013

கீழக்கரை தமுமுக சார்பில் சாலை பாதுகாப்பு நிறையு விழா









கீழக்கரை  தமுமுக சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா அறிவிக்கப்பட்டு  அதன்  நிறையு விழா கீழக்கரை முஹம்மது சதக் காலூரில் நடத்து கொண்டு இருக்கிறது. இராமநாதபுரம் மமக தமுமுக மாவட்ட தலைவர் சாதிக் பாஷா அவர்கள் தலைமைல் நடத்து,  இந்த விழாவில் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தமுமுக முத்த தலைவர் சகோதரர்  M.H.ஜவாஹிருல்லா அவர்கள் சாலை பாதுகாப்பு பற்றி சிறப்புரையாற்றினார்கள்.  சாலை பாதுகாப்பு பத்திய குறும்படம்  CD இராமநாதபுரம் மமக மாவட்ட செயலாளர்  அன்வர் அவர்கள் மாவட்ட தமுமுக  செயலாளர் ஜாகிர் ஹுசைன் அவர்கள் இடம் வழகினர்.  இந்த  சாலை பாதுகாப்பு வார நிறையு விழாவில்   கீழக்கரை  முஹம்மது சதக் கல்லூரி நிறுவகம் மற்றும் இராமநாதபுரம் கிழக்கு தமுமுக மாவட்ட நிறுவகம் தலைமைல் நடத்து கொண்டு இருக்கிறது. கீழக்கரை நகர்  தமுமுக மற்றும் மமக நிர்வாகிகள் பொதுமக்கள் மாணவர்கள் காலத்து கொண்டு உள்ளனர் , இறுதியாக பொதுமக்களுக்கு மாணவர்களுக்கும்  ஹெல்மெட் வழக்க படாது 

Thursday, December 12, 2013

இராமநாதபுரம் கிழக்கு தமுமுக நகர் சர்பாக இலவச கண் மருத்துவ முகாம்



இராமநாதபுரம் கிழக்கு தமுமுக நகர் சர்பாக 14:12:2013 காலை9.00முதல்1.00வரை மதுரை அரவிந்த கண் மருத்துவமனை இணைத்து நடத்தும் இலவச கண் மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.,. இதில் சிறப்பு விருத்தினர் தமுமுக மாவட்ட தலைவர் சாதிக் பட்ஷா,தமுமுக மாவட்ட செயலாளர் அன்வர் அலி,மனித நேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜாஹிர் உசேன் ,பொருலாளர் சித்திக்,மருத்துவ அணி மாவட்ட செயலாளர் யாசர் அரபாத் ....புகைப்படம் இதற்க்கான நோட்டிஸ்,துண்டு விளம்பரக்கள்...

சாலை பாதுகாப்பு வாரவிழா நிறையு விழா அழைப்பு


வரும் 13.12.2013 அன்று கீழக்கரை தமுமுக சார்பாக  சாலை பாதுகாப்பு வாரவிழா நிறையு விழா  அழைப்பு 

Monday, December 9, 2013

துபாய் தமுமுக வின் கிளையில் இஸ்லாமிய சொற்பொழிவு

இன்ஷா அல்லாஹ் வரும் வியாழன் 12:12:13 அன்று இரவு 10:00 மணியளவில் தமுமுக ஷார்ஜா மர்க்கஸில் மரணம் முதல் மறுமை வரை என்ற தலைப்பிலும் வரும் வெள்ளி 13:12:13 அன்று மஹ்ரிப் தொழுகைக்குப் பின் சோனாப்பூர் பலுதியா கேம்பில் இஸ்லாம் வெறுக்கும் தீய பண்புகள் என்ற தலைப்பிலும் சகோதரர் குணங்குடி முகைதீன் அவர்கள்  உரையாற்ற உள்ளேன் .

9.12.13 சட்டமன்ற தேர்தல் விவாதம் - பேரா.ஜவாஹிருல்லாஹ்

Sunday, December 8, 2013

கிழக்கரை நகர் சர்பாக டிசம்பர் 7முதல்12 வரை சாலை பாதுகாப்பு வார



ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிகளவில் சாலை விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமுமுக சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா அறிவிக்கப்பட்டு அதற்கான நிகழ்ச்சி இன்று துவங்கப்பட்டது. தமுமுக மாவட்ட செயலாளர் நிகழ்ச்சிக்கு தலைமையேற்று துவக்கி வைத்தார்.
மாவட்ட பொருளாளர் சித்தீக் ,செயலாளர் பைசல் அமீன் ,துணை செயலாளர் புஹாரி,ஒன்றிய தலைவர் ரைஸ் இப்ராஹிம்,செயலாளர் சேகு தாவுத் சாதிக்,இர்பான்,நாசர்,சலீம்,அபுதாகிர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.நகர தலைவர் சிராஜுதீன் தலைமையில் நிகழ்ச்சி ஒருங்கினைப்புகளை ஏற்பாடு செய்திருந்தனர்.
இதில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணிய வழியுறுத்தப்பட்டது, ஹெல்மெட் அணிந்தவர்களுக்கு டூவீலர் ஓட்டியவர்களுக்கு பேனா பரிசு வழங்கப்பட்டது.மேலும் விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பான பயணம் மேற்கொள்வது குறித்த கருத்துக்கள் அடங்கிய துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

சிறுவர் அணி தமுமுக அடுத்த தலைமுறை போராளிகள் டிசம்பர் 6 போர் களத்தில்