Saturday, February 14, 2015

கீழக்கரை தமுமுக நகர் கிளை புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்

தமுமுக தேர்தல் களம் 2015 கீழக்கரை 





இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம்  கீழக்கரை தமுமுக நகர்  கிளை புதிய நிர்வாகிகள் தேர்தல் மாநில தேர்தல் அதிகாரி  மைதீன்  உலவி  அவர்கள் முன்னிலையில்
நடைபெற்றது.
கீழ்கண்ட சகோதரர்கள் நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்
கிளை செயலாளர் -   சகோ.சிராஜுதீன்
கிளைபொருளாளர் - சகோ.செய்யது அபுதாஹிர்,
துணைசெயலாளர் - சகோ.அமீன்
                                        சகோ புஹாரி 
                                      .  சகோ நசீர்  
மற்றும் 3, 4, 7,8  அகிய வார்டு புதிய நிர்வாகிகள்  தேர்ந்தெடுக்கப்பட்டனர் இந்த நிகழ்ச்சி மனிதநேய மக்கள்கட்சி மாவட்ட,  செயலாளர் சகோ.அன்வர் அலி, வாணி சித்திக்,  சவுதி நிர்வாகி கீழை இர்பான், துபாய்  நிர்வாகி கோ.ஜெயினுலாபுதீன். ஒன்றிய  நிர்வாகி ரைஸ் சாதிக், முனால் தமுமுக நகர் தலைவர் அன்பில் ஹசன் மனிதநேய மக்கள்கட்சி நகர் செயலாளர் இக்பால், கோஸ்   மற்றும் திருப்புல்லாணி ஒன்றிய நிர்வாகிகள், கீழக்கரை நகர் மற்றும் கிளை நிர்வாகிகள் இருந்தனர். முடிவில் நகர் கிளை செயலாளர் - சகோ.சிராஜுதீன் அவர்கள் இந்த நிகழ்ச்சிக்கு வந்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்கள்.

Tuesday, February 10, 2015

தமுமுக தலைமை முக்கிய அறிவிப்பு


கீழக்கரையில் அரசு உதவிபெறும் கைராத்துல் ஜலாலியா மேல்நிலைப்பள்ளியின் 34 ம் ஆண்டுவிழா நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் அவர்கள் பங்கேற்பு ! !




கீழக்கரையில் அரசு உதவிபெறும் கைராத்துல் ஜலாலியா மேல்நிலைப்பள்ளியின் 34 ம் ஆண்டுவிழா நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் அவர்கள் பங்கேற்பு ! !
ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி திருப்புல்லாணி ஒன்றியம், கீழக்கரையில் 100 ஆண்டுகளுக்கும் முன்னதாக ஆரம்பப்பள்ளியாக தொடங்கப்பட்டு அதன்பின் 1981 ல் உயர்நிலைப்பள்ளியாகவும், 1990 ல் மேல் நிலைப்பள்ளியாகவும் தரம் உயர்ந்த
கீழக்கரை கிழக்குத்தெரு ஜமாஅத் நிர்வாகத்தில் இயங்கும் அரசு உதவி பெறும் கைராத்துல் ஜலாலியா மேல்நிலைப்பள்ளியின் 34 ம் ஆண்டு விளையாட்டுவிழா மற்றும் ஆண்டுவிழா நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
விளையாட்டு நிகழ்ச்சியின் தொடக்கத்தில் ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு.K.ஜெயக்கண்ணு M.A, M.Ed., அவர்களும், மாவட்ட கல்வி அலுவலர் திருமதி.V.சாந்தி M.A, M.Ed., அவர்களும் தேசியக்கொடி ஏற்றிவைத்து மாணவ, மாணவிகளின் அணிவகுப்பை ஏற்றனர்.
ஆண்டுவிழா நிகழ்வுகள் கீழக்கரை குத்பா கமிட்டி பொருளாளரும், கீழக்கரை கிழக்குத்தெரு முஸ்லிம் ஜமாஅத் தலைவருமான ப.அ.சேகு அபுபக்கர் அவர்கள் தலைமையிலும், ஜமாஅத் நிர்வாகிகள், கல்விக்குழு உறுப்பினர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கைராத்துல் ஜலாலியா மேல்நிலைப்பள்ளி தாளாளர் பேராசிரியர்.முனைவர்.B.J.சாதிக் M.Sc, Ph.D, D.Sc., அவர்கள் வரவேற்புரையாற்றினார்கள்.
பள்ளியின் ஆண்டறிக்கையை கைராத்துல் ஜலாலியா மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜனாப்.A.முகம்மது மீராM.Com, M.Ed, M.Phil., அவர்கள் வாசித்தார்கள்.
பள்ளித்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற குழு தலைவருமான பேராசிரியர்.முனைவர்.M.H.ஜவாஹிருல்லா MLA அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.
அவர்கள் பேசும்பொழுது மாணவ, மாணவிகளே கொஞ்சம் கவனமாக கேளுங்கள், நாம் ஏழ்மை குடும்பத்தில் பிறந்து அரசுப்பள்ளியில் படிக்கின்றோம் என்கிற தாழ்வு மனப்பான்மை யாருக்கும் இருக்க வேண்டாம்.
ஏன் என்றால் இந்தியாவே திரும்பி பார்க்கும் வண்ணம் சாதனை புரிந்து இந்தியாவின் குடியரசுத் தலைவராக ஏற்றம் பெற்றார்.
நம்முடைய ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மதிப்பிற்குரிய A.P.J.அப்துல் கலாம் அவர்கள்.
சாதாரண குடும்பத்தில் பிறந்து, அரசு உதவிபெறும் ராமநாதபுரம் ஸ்குவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளியில் படித்து படிப்படியாக முன்னேறினார்.
அதுபோல் நமது ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த கீழக்கரை அருகில் உள்ள மாவிலாதோப்பு என்கின்ற ஊரில் நாடார் சமூகத்தினரால் நடத்தப்படும் நாடார் நடுநிலைப்பள்ளியில் கல்வி பயின்ற மாணவர் 2012 ல் IAS தேர்வில் இந்தியாவில் ஐந்தாவது இடத்தில் தேர்ச்சி பெற்று தற்போது ராஜஸ்தானில் IAS அதிகாரியாக பணியாற்றி வருகிறார். அவர் பெயர் கோபால சுந்தர்ராஜன்.
மேலும் நமது மாவட்டத்தில் பரமக்குடி அருகில் உள்ள எமனேஸ்வரம் பகுதியில் உங்களைப்போன்றே முஸ்லிம் ஜமாஅத் நடத்தும் அரசு உதவி பெறும் தமிழ் மீடியம் பள்ளியில் படித்த மாணவி சென்ற ஆண்டு நடைபெற்ற IAS தேர்வில் வெற்றி பெற்று புர்காவுடன் நேர்முக தேர்வை சந்தித்து, புர்கா அணிந்தவாறு மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்து வருகிறார்.
அவர் பெயர் தமீம் அன்சாரியா இவரும் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்தான் இவர்களால் எல்லாம் முடியும் என்றால் ஏன் உங்களால் முடியாது என்று மாணவ,மாணவிகளை உற்சாகப்படுத்தி ஆர்வமூட்டினார்.
பேராசிரியர் அவர்கள் மேலும் குறிப்பிடுகையில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கீழக்கரை இஸ்லாமியா தொடக்கப்பள்ளியில் வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கு ரூபாய். 5.00 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது,
அதுபோல் கீழக்கரை மக்தூமியா உயர்நிலைப்பள்ளியில் புதிய கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்கு ரூபாய்.15.00 லட்சம் செலவில் நிதி வழங்கி சென்ற வாரம்தான் புதிய கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.
அதேபோன்று பெரியபட்டிணத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் கழிப்பறை மற்றும் தண்ணீர் வசதி,
மாயாகுளம் ஊராட்சியில், மங்களேஸ்வரி நகர் தொடக்கப்பள்ளியில் கழிப்பறை வசதி,
மாயாகுளம் ஊராட்சியில், முத்துசாமிபுரம் நடுநிலைப்பள்ளியில் கழிப்பறை வசதி,
கோரைக்கூட்டம் தொடக்கப்பள்ளியில் கழிப்பறை வசதிகள் ஆகிய பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன.
சுருங்க சொல்லப்போனால் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதிகள் பெரும்பான்மையாக கல்வி நிறுவனங்களின் பள்ளிக்கூட கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள், மேசை நாற்காலிகள், கழிப்பறை வசதிகள், தண்ணீர் வசதிகள் இப்படியான தேவைகளுக்காகவே முன்னுரிமை அளித்து நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆக மொத்தத்தில் கடந்த மே 2011 முதல் டிசம்பர் 2014 வரையிலும் ரூபாய் . 1,13,50,000 ( ஒரு கோடியே பதிமூன்று லட்சத்து ஐம்பதாயிரம் ) பள்ளிக்கூடங்களுக்காகவே செலவிடப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்கள்.
இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த கீழக்கரை கிழக்குத்தெரு ஜமாத்தார்களுக்கும், இப்பள்ளி நிர்வாகஸ்தர்களுக்கும் நாமெல்லாம் இனி வரும் காலங்களில்
எப்படி கல்வி நிறுவனங்களை மிகவும் தாராள எண்ணங்களோடு நடத்தவேண்டும் என்பது பற்றிய அதுசம்பந்தமான ஒரு படிப்பினைக்குரிய நெகிழ்ச்சியான சம்பவத்தைக்கூறி அவர்களின் உரையை நிறைவு செய்தார்கள்.
( சம்பவத்தை YOU TUBE தளத்தில் காண கீழ்கண்ட LINK ஐ கிளிக் செய்து பார்க்கவும் )
சட்டமன்ற உறுப்பினர் அவர்களிடம் இப்பள்ளியின் சார்பாக நான்கு புதிய கூடுதல் வகுப்பறை கட்டிடம் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டித்தர கோரிக்கை வைக்கப்பட்டது.
சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கூறும்போது மிகவும் தாமதமாக இந்த கோரிக்கை வந்துள்ளது இருப்பினும் கனிவுடன் பரிசீலித்து ஆவண செய்ய வழிவகை செய்யப்படும் என கூறப்பட்டது.
மேலும் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவ,மாணவிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் ஊக்கப்பரிசுத்தொகை வழங்கினார்கள்.
அதைத்தொடர்ந்து விளையாட்டு போட்டியில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளியின் பரிசளிப்பு நிகழ்வுகள் சிறப்பான முறையில் நடைபெற்றன.
இந்த நிகழ்வில் ஊர் பொதுமக்கள், அனைத்து ஜமாஅத் நிர்வாகிகள், மாணவ,மாணவிகள், பெற்றோர்கள், ஆசிரியபெருமக்கள், பத்திரிக்கையாளர்கள் உட்பட பெருந்திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
உடன் மனிதநேய மக்கள்கட்சி மாவட்ட, ஒன்றிய, நகர் நிர்வாகிகள் சகோ.அன்வர் அலி, பக்கர் அலி, பரக்கத்துல்லாஹ், பிஸ்மி, நூருல் அFப்பான்,
கீழக்கரை நிர்வாகிகள் சகோ.சிராஜுதீன், சகோ.சாதிக், சகோ.அமீன், சகோ.செய்யது அபுதாஹிர், சகோ.கீழை இர்பான், துபாய் நிர்வாகி சகோ.ஜெயினுலாபுதீன், சகோ.இக்பால் மற்றும்
திருப்புல்லாணி ஒன்றிய நிர்வாகிகள், கீழக்கரை நகர் மற்றும் கிளை நிர்வாகிகள் இருந்தனர்.
முடிவில் இப்பள்ளியின் உதவித்தலைமை ஆசிரியர் ஜனாப்.S.சாகுல் ஹமீது B.Sc., M.A, M.Ed., அவர்கள் இந்த நிகழ்ச்சிக்கு வந்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்கள்.