Sunday, October 30, 2011

கீழக்கரை நகர் - 14 வது வார்டு மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளர் தாஜின் அலிமா ப‌த‌வியேற்றார்


கீழக்கரை நகர் - 14 வது வார்டு மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளர் தாஜின் அலிமா ப‌த‌வியேற்றார்

உள்ளாட்சி துணைத் தலைவர்களாக மமகவினர் தேர்வு

1.பீர் முஹம்மது
துணைத் தலைவர்(போட்டியின்றி தேர்வு)
ஏர்வாடி பேரூராட்சி
நெல்லை கிழக்கு மாவட்டம்

2.அகமது அலி
துணைத் தலைவர்(போட்டியின்றி தேர்வு)
லால்பேட்டை பேரூராட்சி
கடலூர் தெற்கு மாவட்டம்

3.ஓ.எஸ். இப்ராஹிம்
துணைத் தலைவர்
திருப்பூண்டி ஊராட்சி
நாகை தெற்கு மாவட்டம்

4.ஜமீலா பேகம்
துணைத் தலைவர்
சோழமாதேவி ஊராட்சி
திருப்பூர் மாவட்டம்

5. ஜைனப் பீவி
துணைத் தலைவர்
நெல்வாய் பாளையம் ஊராட்சி
காஞ்சி தெற்கு மாவட்டம்

6. ஏ.அசரப் அலி
துணைத் தலைவர்
பள்ளிபடை ஊராட்சி
கடலூர் தெற்கு மாவட்டம்


7. சகுபர் கனி
துணைத் தலைவர்
கள்ளாழங்குடி ஊராட்சி
புதுக்கோட்டை மாவட்டம்


8. முஹம்மது பாரூக்
துணைத் தலைவர்
பிள்ளையார்பாளையம் ஊராட்சி
விழுப்புரம் தெற்கு மாவட்டம்


9. பி.முஹம்மது பாரூக்
துணைத் தலைவர்
பாளையகுஞ்சரம் ஊராட்சி
விழுப்புரம் தெற்கு மாவட்டம்

10. ரிஸ்வான்
துணைத் தலைவர்
கேளம்பாக்கம் ஊராட்சி
காஞ்சி வடக்கு மாவட்டம்

11. அமீர் உசேன்
துணைத் தலைவர்
பொம்மிடி ஊராட்சி
தர்மபுரி மாவட்டம்

12. நிஜாம் அலி
துணைத் தலைவர்
நெடுஞ்சேரி ஊராட்சி
கடலூர் தெற்கு மாவட்டம்

13. ஷேக் முஹம்மது
துணைத் தலைவர்
முதலியார்பட்டி ஊராட்சி
நெல்லை மேற்கு மாவட்டம்

Friday, October 21, 2011

கீழக்கரை நகராட்சி தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ராபியத்துல் காதரியா வெற்றி பெற்றார்.


ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ராபியத்துல் காதரியா வெற்றி பெற்றார்.மேலும் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளர்களில் அதிமுக சார்பில் ஆறு பேர்களும்,திமுக சார்பில் நான்கு பேர்களும்,காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒருவரும் ,10 சுயேட்சை வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர்.

கீழக்கரை மொத்தம் 21 வார்டுகள் உள்ளன.இதில் மொத்தம் பதிவான வாக்குகள் 12 ஆயிரத்து 712 இதில் ராபியத்துல் காதரியா(அதிமுக) 3701 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
அவருக்கு அடுத்தப்படியாக ஆபிதாபேகம்(டீச்சர்)(சுயே)2931 வாக்குகளும்,
தாஜீன் நிஷா(திமுக)2655 வாக்குகளும்,
கதிராயி(சுயே) 1026 வாக்குகளும்,
ஜீனத் மரியம்(தேமுதிக)731 வாக்குகளும்,
மெஹர் பானு(சுயே), 608 வாக்குகளும்,
ஆயிஷத் (சுயே)449 வாக்குக‌ளும் பெற்றனர்.
ஆயிஷத்துல் முபஸ்ஸரா(காங்)331 வாக்குகளும்,
ரஹமத் நிஷா(புதிய தமிழகம்)147 வாக்குகளும்,
மெகர்நிஷா(சுயே)133 வாக்குகளும்,

கீழக்கரை 21 வார்டுக‌ளில் வெற்றி பெற்ற‌வ‌ர்க‌ள் விப‌ர‌ம்


1 -வார்டு அதிமுக வேட்பாளர் சுரேஷ் வெற்றி
2 வது வார்டு மீனாள் அதிமுக வெற்றி
3வது வார்டு (சுயே) ரமேஷ் வெற்றி
வார்டு 4- பாத்திமா சுயே வெற்றி
வார்டு 5- சாகுல் ஹமீது (திமுக)வெற்றி
வார்டு 6 - தங்கராஜ் வெற்றி(சுயே)
வார்டு -7 அன்வர் அலி(சுயே) வெற்றி
வார்டு 8 செய்யது கருணை(அதிமுக) வெற்றி
வார்டு - 9 ஹாஜா முகைதீன் (அதிமுக)வெற்றி
வார்டு 10 அஜ்மல்கான்(காங்)வெற்றி
வார்டு - 11 மீரா பானு(திமுக) வெற்றி.
வார்டு - 12 -சித்திக் அலி(சுயே) வெற்றி
வார்டு -13 ரபியுதீன் (சுயே) வெற்றி
வார்டு - 14 தாஜின் அலிமா(மமக) வெற்றி
வார்டு -15 முஹம்மது மஜிதா பிவி(சுயே)
வார்டு - 17 ஆனா மூனா என்ற முகைதீன் காதர் சாகிப்(அதிமுக) வெற்றி
வார்டு -18 முகைதீன் இப்ராகிம்(சுயே) வெற்றி
வார்டு - 19 அருசியா பேகம்(திமுக) வெற்றி
வார்டு - 20 ,ஹாஜா முகைதீன் (இடிமின்னல்)(திமுக)வெற்றி
வார்டு 21,ஜெயபிராகசம்(சுயே) வெற்றி போட்டியிட்டொர்

லிபிய முன்னாள் அதிபர் கடாபி கொல்லப்பட்டார்!


திரிபோலி, அக்.20: லிபியாவின் முன்னாள் அதிபர் கடாபி, லிபிய புரட்சிப் படையால் கொல்லப்பட்டுவிட்டார் என்று என்.டி.சி ராணுவ அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார். அவரைச் சுற்றி வளைத்தபோது நடந்த சண்டையில் பெரிதும் காயமடைந்ததாகவும், அதனால் அவர் இறந்துவிட்டார் என்றும் அவர் கூறியுள்ளார்.முன்னதாக, அவர் அங்கே சண்டை நடந்த இடத்தில் இருந்து தப்பிச் செல்ல முயன்றதாகவும், புரட்சிப் படை ராணுவத்தின் கடும் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் அவர் காயமடைந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.கடாபியின் சொந்த ஊரான சிர்தேவில் அவர் இருந்துள்ளார். புரட்சிப் படையினர் அவரை சுற்றிவளைத்துச் சுட்டப்போது, 'என்னைச் சுடாதீர்கள்' என்று அவர் கெஞ்சியுள்ளார். இருப்பினும் புரட்சிப் படையினர் அவர் மீது தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கடாஃபியின் பிறந்த இடமான சிர்ட்டியை பிடித்துவிட்டதாக லிபிய படைகள் நேற்று இரவு அறிவித்தது. 1969-ம் ஆண்டில் லிபியாவில் ராணுவப் புரட்சி மூலம் கலோனல் கடாஃபி ஆட்சிக்கு வந்தார். அவர் லிபிய தலைமைப் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று இந்த ஆண்டு பிப்ரவரியில் மக்கள் புரட்சி ஏற்பட்டது.எகிப்தில் ஏற்பட்ட மக்கள் புரட்சியை அடுத்து பிப்ரவரியில் லிபியாவிலும் கடாபியின் அரசுக்கெதிராக எதிர்ப்புப் போராட்டங்கள் நடைபெற்றன. அப்போது முதல் நடைபெற்று வரும் போரில் லிபிய புரட்சியாளர்கள் லிபியாவின் பல்வேறு நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.கடாபி பிறந்த நகரமான சிர்ட்டி மட்டும் பிடிபடாமல் இருந்தது. நேற்று இரவு அந்த நகரத்தையும் லிபிய படையினர் பிடித்தனர்.

news by: dinamani


Tuesday, October 18, 2011

கீழக்கரையில் காலை மந்தமாக தொடங்கிய வாக்குப்பதிவு உணவு இடைவேளைக்கு பிறகு விறுவிறுப்பாகற்றது நடைப்பெற்றது.

கீழக்கரையில் காலை மந்தமாக தொடங்கிய வாக்குப்பதிவு உணவு இடைவேளைக்கு பிறகு விறுவிறுப்பாக நடைப்பெற்றது.நகர் முழுவதும் அமைதியாக நடைபெற்ற வாக்கு பதிவின் இறுதியில் 12 ஆயிரத்து 674 வாக்குகள் பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.பதிவான மொத்த வாக்குகளில் ஆண் வாக்காளர்கள் 4 ஆயிரத்து 834 பேர்களும், பெண் வாக்காளர்கள் 7 ஆயிரத்து 840 பேர்களும் வாக்களித்துள்ளனர்.இது மொத்த வாக்காளர்களில் 53% சதவீதம் ஆகும் பெண் வாக்காளர்களே அதிகளவில் வாக்களித்துள்ளனர்.

Sunday, October 16, 2011

மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் போட்டி இடும் வார்டு வேட்பாளருக்கு வாக்குகளை சேகரித்தார்,




மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டி இடும் கீழக்கரை மனிதநேய மக்கள் கட்சி நகராட்சி உறுபினர்கள் போடி இடும் 5 , 7 , 9 , 10 , 11 , 12 , 14 ஆகிய வார்டுகலீல் வார்டுகளுக்கும் சென்று கீழக்கரை மனிதநேய மக்கள் கட்சியின் விடு வீடாக தனது வேட்பாளருக்கு வாக்குகளை சேகரித்தார்,

Wednesday, October 5, 2011

தொண்டி பேருராட்சி மன்றம் - த.மு.மு.க வேட்பாளர்கள் போட்டி இன்றி வெற்றி


தொண்டி பேருராட்சி மன்றம் 4வது வார்டு உறுப்பினராக தொண்டி கிழக்கு முஸ்லிம் ஜமாத் சார்பில் பொது வேட்பாளராக த.மு.மு.க. மாவட்ட செயளாலர் ஆ.சாதிக் பாட்ஷா நிருத்தப்பட்டார். போட்டி இன்றி வெற்றி பெற்றுள்ளார். ஐக்கிய ஜமாத் தலைவர் அபுபக்கர் B.E, E.O.செய்யதலி, பெரிய பள்ளி தலைவர் மகருபுல் கர்கி, மரைக்காயர் தெரு ஜமாத் தலைவர் மகருப், கிழக்குத்தெரு முஸ்லிம் ஜமாத் தலைவர் பந்தேநவாஸ் மற்றும் அனைத்து ஜமாத் நிர்வாகிகள் த.மு.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



தொண்டி பேருராட்சி மன்றம் 7வது வார்டு உறுப்பினராக தொண்டி மரைக்காயர் தெரு முஸ்லிம் ஜமாத் சார்பில் த.மு.மு.க. கிழக்கு பகுதி செயளாலர் லு.சேகு அபுபக்கர் அவர்கள் நிருத்தப்பட்டார். போட்டி இன்றி வெற்றி பெற்றுள்ளார். ஐக்கிய ஜமாத் தலைவர் அபுபக்கர் B.E, E.O.செய்யதலி, பெரிய பள்ளி தலைவர் மகருபுல் கர்கி, மரைக்காயர் தெரு ஜமாத் தலைவர் மகருப், கிழக்குத்தெரு முஸ்லிம் ஜமாத் தலைவர் பந்தேநவாஸ் மற்றும் அனைத்து ஜமாத் நிர்வாகிகள் த.மு.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் : ராமநாதபுரம் மாவட்டம்

மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டி இடும் கீழக்கரை நகராட்சி வேட்பாளர்கள்:

Sunday, October 2, 2011

இன்று முதல் மின்தடை நேரம் மாற்றம்

மாலை 4 மணி முதல் 6 மணி வரை: பரமக்குடி மணி நகர்,நேருநகர்,சிட்கோ,கீழக்கரை நகர் மற்றும் ஊரகப்பகுதிகள் மற்றும் நித்தியகல்யாணி தொழிற்சாலைப் பகுதிகள்.