Saturday, January 28, 2012

தமுமுக-மமக மாநில பொதுக்குழுவில்

இன்று நடைபெற்ற தமுமுக-மமக மாநில பொதுக்குழுவில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு......


மமக மாநில பொதுச்செயலாளராக

M. தமிமுன் அன்சாரி


தமுமுக மாநில பொதுச்செயலாளராக

P. அப்துல் சமது



தமுமுக மற்றும் மமக மாநில தலைவராக

மௌலவி JS. ரிபாயி



தமுமுக மற்றும் மமக மாநில பொருளாளராக

O.U. ரஹ்மத்துல்லாஹ்

இன்று நடைபெற்ற தமுமுக-மமக மாநில பொதுக்குழுவில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு......

Friday, January 27, 2012

கோவை பள்ளிவாசல் மீது கல்வீச்சு தமுமுக மாவட்ட துணைத்தலைவர் கார் கண்ணாடியையும் கல்லால் தாக்கி உடைப்பு பதட்டம்

கோவை குனியமுத்தூர் மூவேந்தர் நகர் பகுதியில் தாஜீல் இஸ்லாம் ஹனிபி சுன்னத் ஜமாத் கிளை பள்ளிவாசல் உள்ளது.
நேற்று இரவு மர்ம நபர்கள் சிலர் பள்ளிவாசல் முன்புறம் உள்ள ஜன்னல் கண்ணாடியை கல்வீசி தாக்கினர். பள்ளிவாசலில் தங்கியிருந்த மோதினார் நூர்முகமது சத்தம் கேட்டு எழுந்து பார்த்தபோது சிலர் அங்கிருந்து ஒடியுள்ளனர்.
பள்ளிவாசல் அருகே தமுமுக மாவட்ட துணைத்தலைவர் ரபீக் வீடு உள்ளது. அவரது காரைவீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். பள்ளிவாசலில் தாக்குதல் நடத்திய மர்மநபர்கள் கார் கண்ணாடியையும் கல்லால் தாக்கி உடைத்துள்ளனர்.தகவல் அறிந்ததும் .தமுமுக மாநில செயலாளர் கோவை உம்மர் தலைமையில் தமுமுக நிர்வாகிகள் தொண்டர்கள் உட்பட 300க்கும் மேற்பட்ட பள்ளிவாசல் முன்பு திரண்டனர் தகவல்அறிந்ததும் போலிஸ் கமிஷனர் சுந்தரமுர்த்தி, துணைக்கமிஷனர் ஹேமா கருணாகரன், உதவிகமிஷனர் முத்தரசு, இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் ஆகியோர் சம்பவ இடத்திற்க்கு
வந்து விசாரித்தனர். வழக்குபதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
இதே பள்ளிவாசலில் 2009 ம் ஆண்டு இதுபோல் ஜன்னல் கண்ணாடியை உடைத்துனர். கோவை மீண்டும் கலவர நடக்க அதிகமாக வாய்ப்பு உள்ளது இறைவன் பாதுகாப்பான். அமீன்

கோவை தங்கப்பா

Tuesday, January 24, 2012

இளைஞர்களுக்கான தேசிய ஒருமைப்பாட்டு முகாம்


நேரு யுவ கேந்திரா சார்பில் ஒரு வார காலம் இளைஞர்களுக்கான தேசிய ஒருமைப்பாட்டு முகாம் கீழக்கரை முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது. இதன் தொடக்க விழா ஜனவரி 22 அன்று நடைபெற்றது. இதில் ராமநாதபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் பேராசிரியர் ஜவாஹிருல்லா, அமைச்சர் மருத்துவர் சுந்தராஜன், மாவட்ட ஆட்சியர் அருன் ராய் முதலியோர் பங்குக் கொண்டனர். ராமநாபுரம் அளவில் சிறந்த சேவைகளை புரிந்த இளைஞர்களுக்கு பரிசும் வழங்கப்பட்டது.

Friday, January 20, 2012

இராமநாதபுரத்தில் இரயில்களின் சேவையை அதிகப்படுத்த வேண்டும் - பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கோரிக்கை

இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை:

இராமாநாதபுரத்திற்கு வருகைப் புரிந்த தென்னக ரயில்வே பொது மேலாளரிடம் இன்று (19-01-2012) 10 கோரிக்கை மனுக்களை அளிக்கப்பட்டது. அந்த கோரிக்கை மனுக்களில் இடம் பெற்றுள்ளவை-

1. 16701 சேது விரைவு வண்டி இராமநாதபுரத்திற்கு அதிகாலை 2.55 மணிக்கு வருகின்றது. இது அசாதாரணமான நேரமாகும். இதனால் அருகில் உள்ள ஊர்களுக்குச் செல்ல வேண்டிய பயணிகள் காலை 6 மணி வரை பேருந்திற்காக காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது.மேலும் இந்த வருகை நேரம் முதியோர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பல்வேறு தொல்லைகளை அளிக்கின்றது.

சென்னையிலிருந்து வரும் மற்றொரு ரயிலான 16712 காலை 9.55 மணிக்கு ராமநாதபுரத்திற்கும் 11.45க்கு ராமேஸ்வரத்திற்கும் வருகின்றது. இதனால் அலுவலகம் செல்வோர், வியாபாரிகள் என பல தரப்பட்டோர் ஒரு நாளின் கால் பகுதியை ரயிலிலேயே கழிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே இந்த இரு ரயில்களும் காலை 5 முதல் 8 மணிக்குள்ளாக இராமநாதபுரம் வரும் வகையில் நேரம் மாற்றம் செய்யப்பட வேண்டும்

2. சென்னைக்கும் ராமேஸ்வரத்திற்கும் இடையில் பகலில் இரு மார்க்கங்களிலும் அதிவிரைவு ரயில் விடப்பட வேண்டும். இந்த ரயில்கள் சென்னையிலிருந்தும் ராமேஸ்வரத்திலிருந்தும் காலை 6 மணிக்கு புறப்பட்டு மாலை 6 மணிக்கு சென்றதடைய வேண்டும்.

3. ராமேஸ்வரம் - –மதுரை தடத்தில் இரு மார்க்கத்திலும் கூடுதல் பாஸஞ்சர் வண்டி விடப்பட வேண்டும். ராமேஸ்வரத்தில் காலை 8 மணிக்கு புறப்பட்டு 11.30க்கு மதுரை அடைய வேண்டும். இதே போல் மதுரையில் காலை 10 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.30க்கு ராமேஸ்வரம் வந்தடைய வேண்டும்.

4. ராமேஸ்வரம் –- திருச்சி தடத்தில் இரு மார்க்கத்தில் பாஸஞ்சர் வண்டி விடப்பட வேண்டும். இரு மார்க்க்த்திலும் பகல் 2 மணிக்கு புற்ப்பட்டு இரவு 8 மணிக்கு சென்றடைய வேண்டும்.

5. ராமநாதபுரம்,தூத்துக்குடி வழியாக காரைக்குடியிலிருந்து கன்னியாகுமரிக்கு புதிய இரயில் பாதை அமைப்பதற்கான ஆய்வு அறிவிப்பு 2008 மத்திய வரவு செலவு திட்டத்தில் அறிவிக்கப்பட்டது. அதற்கான ஆய்வு பணி கடந்த ஆகஸ்ட் 2011 முடிவடைந்து ரயில்வே வாரியத்திற்கு சமர்பிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் போடப்பட்ட இந்த திட்டம் வரும் நிதியாண்டில் தொடங்கப்பட வேண்டும். இந்த திட்டம் பிற்படுத்தப்பட்ட இந்த பகுதியின் முன்னேற்றத்திற்கு உதவுவதுடன் ராமேஸ்வரம் மற்றும் கன்னியாகுமரிக்கு வரும் யாத்திரிகர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு பெரிதும் உதவிடும்.

6. 2011 ஜனவரியில் முடிவடையும் என்று கூறப்பட்ட விருதுநகர் –- மானாமதுரை அகல ரயில் பாதை அமைக்கும் திட்டம் விரைவில் முடிக்கப்பட வேணடும்.

7. ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் இரு நடைமேடைகளிலும் முழுமையாக நிழல் கூரை அமைக்கப்பட வேண்டும்.

8. உச்சிப்புளி ரயில் நிலையத்தில் சென்னையிலிருந்து வரும் இரண்டு விரைவு வண்டிகளும் நிற்க வேணடும்.

9. தற்போது ராமேஸ்வரம் – மதுரையிடையே ஒடும் பாஸஞ்சர் ரயில்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிவதால் கூடுதல் ரயில் பொட்டிகள் இணைக்கப்பட வேண்டும்.

10. சென்னையில் மூன்றாவது நிறுத்தமான தாம்பரத்தை அமைக்காமல் முதல் ரயில் நிலையமான ராயபுரத்தை விரிவாக்க வேண்டும்.

Thursday, January 12, 2012

“தானே” புயலை தேசிய பேரழிவாக அறிவிக்க வேண்டும்: பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்


"தானே' புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் முதுநகர், நெல்லிக்குப்பம், பரங்கிப்பேட்டை பகுதிகளை மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார்.

பரங்கிப்பேட்டை மஹ்மூதியா ஷாதி மஹாலில் தமுமுக மாவட்ட தலைவர் மெஹ்ராஜ்தீன் தலைமையில் நடைபெற்ற நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜவாஹிருல்லாஹ்,

கடலூர் மாவட்டத்தில் "தானே' புயல் கடும் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது முந்திரி, பலா மரங்களை உருவாக்க 10 ஆண்டுகள் ஆகும். அதற்கு தகுந்தாற்போல் அரசு நிவாரணங்கள் வழங்க வேண்டும். முந்திரி, பலா பயிர்செய்யப்பட்ட விவசாய நிலங்கள் ரியல் எஸ்டேட்டாக மாறாமல் இருக்க அரசு தடுக்க வேண்டும்.

தானே புயலினை மத்திய, மாநில அரசுகள் தேசிய பேரழிவாக அறிவிக்க வேண்டும். சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு கொடுத்தது போல் தானே புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மத்திய, மாநில அரசுகள் நிவாரணங்கள் வழங்க வேண்டும்.

குடிசை வீடுகளுக்கு 2,500 நிவாரணம் போதுமானதாக இல்லை. அதனால் வீடு கட்டுவதற்குத் தேவையான உதவிகளை அரசு செய்துதர வேண்டும்.

இவ்வாறு பேராசிரியர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., கூறினார். பேட்டியின் போது மனிதநேய மக்கள் கட்சி மாநில தலைவர் அப்துஸ் ஸமது, மாநில துணைப்பொதுச்செயலாளர் ஜின்னா, பரங்கிப்பேட்டை நகர நிர்வாகிகள், ஜாக்கீர், பிலால், செய்யது, ஹஸன் அலி ஆகியோர் உடனிருந்தனர்.

இந்த வாரம் ஷார்ஜா த.மு.மு.க மர்கஸில்



Thursday, January 5, 2012

நகராட்சி சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம்

உஸ்வத்துல் ஹசனா முஸ்லிம் சங்கம் மற்றும் EXNORA INTERNATIONAL இணைந்து நடத்திய நகராட்சி சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பேரா. ஜவாஹிருல்லா, மாவட்ட ஆட்சித்தலைவர் அருண் ராய், EXNORA நிறுவனர் நிர்மல் குமார், Bio Gas நிறுவனர் ராக்கி, Welfare Association தலைவர் ETA சலாவுதீன், உஸ்வத்துல் ஹசனா தலைவர் அப்துல் காதர், கீழக்கரை கமிஷனர் முஜிபுர்ரஹ்மான், துணை செயலாளர் ஹாஜா மொய்தீன், தமுமுக நகர் தலைவர் செய்யது இப்ராஹீம், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் லாபிர் ஆகியோர் கலந்து கொண்டனர்.