Wednesday, November 19, 2014

இலங்கை வெலிக்கடை சிறையில் வாடிய தமிழகத்தை சேர்ந்த அனைத்து சமுதாய சிறைவாசிகள் எட்டுபேர் மனிதநேய மக்கள்கட்சியின் தொடர் முயற்சியால் விடுதலையடைந்தனர்

இலங்கை வெலிக்கடை சிறையில் வாடிய தமிழகத்தை சேர்ந்த அனைத்து சமுதாய சிறைவாசிகள் எட்டுபேர் மனிதநேய மக்கள்கட்சியின் தொடர் முயற்சியால் விடுதலையடைந்தனர் !

இலங்கை சிறையில் பல்வேறு வழக்குகள் தொடர்பாக தமிழகத்தை சேர்ந்த நபர்கள் தண்டனை அனுபவித்து வந்தனர். கடந்த 2010 ல் நடந்த இலங்கை மற்றும் இந்தியாவின் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கை வெலிக்கடை சிறையில் இருந்து 16 கைதிகள் தமிழகம் கொண்டு வரப்பட்டு இங்குள்ள தமிழக சிறையில் தண்டனை அனுபவித்து வந்தனர்.

இந்நிலையில் தண்டனை பெற்று தன் குடும்பத்தாருடன் திருந்திவாழ விருப்பப்படும் அனைத்து சமுதாயத்தை சேர்ந்த நபர்களின் நிலை அறிந்து சிறைவாசிகளின் விடுதலை தொடர்பாக மனிதநேய மக்கள்கட்சியின் சட்டமன்றகுழு தலைவரும், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான  பேராசிரியர்.முனைவர்.M.H.ஜவாஹிருல்லா MLA அவர்கள் தமிழக அரசிடம் பரிந்துரை செய்து இப்பிரச்சினையில் கூடுதல் கவனமெடுத்து பேசி வந்தார்கள்.

அதனடிப்படையில் கடந்தமாதம் திருச்சி சிறையில் இருந்த மஞ்சத்திடல் திருச்சியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் சிங்கராயர் 50/M, கண்ணன் 45/M, ராமநாதன் 48/M, ராஜகோபால் 49/M, முனியசாமி 50/M, காசீம் 50/M, இபுராஹீம் மகன் மீரா முஹைதீன் 50/M, மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தை சேர்ந்த முஹைதீன் மகன் முஹைதீன் அபூபக்கர் 40/M ஆகிய எட்டு நபர்களும் தன் வாழ்நாளில் அதிகமான நாட்களை தன்னுடைய மனைவி மக்களை விட்டு பிரிந்து சுமார் 11 வருடங்களுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து தான் செய்த தவறுக்காக மனம் வருந்தி தற்போது விடுதலையடந்துள்ளனர்.

மேலும் சிறையில் உள்ள மீதமுள்ள அனைத்து சமுதாயத்தை சேர்ந்த பெண்கள் உட்பட எட்டு நபர்களும் வரும் மாதங்களில் படிப்படியாக விடுதலை செய்யப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.


சிறையிலிருந்து விடுதலையான அனைவரும் தொலைபேசியிலும், நேரிலும் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் அவர்களை தொடர்புகொண்டு நன்றி தெரிவித்தனர். குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த முஹைதீன் அபூபக்கர் பேராசிரியர் அவர்களை நேரில் சந்தித்து அறிவுரை ஏற்றார்.

Saturday, November 15, 2014

தொழுகை செயல்முறை பயிற்சி



தொழுகை செயல்முறை பயிற்சி 
========================================

தமுமுக துபை மண்டலத்தின் சார்பாக 14:11:2014 வெள்ளியன்று இரவு 8:30 மணியளவில் தேரா மர்கசில் சகோதரர் நாசர் அலிகான் அவர்கள் தொழுகை செயல்முறைகள் தொடர்பாக வகுப்பெடுத்தார்கள், இந்நிகழ்ச்சியின் மூலம் தொழுகையில் சகோதரர்கள் அறியாமல் செய்யும் சிறு சிறு தவறுகளை விளக்கி பேசினார்கள்,

இந்நிகழ்ச்சி கலந்துக் கொண்ட சகோதர்களுக்கு பயனுள்ள அமர்வாக இருந்து,இதன் தொடர்ச்சியை இறைவன் நாடினால் 21:11:2014 வெள்ளியன்று இரவு 8:30 மணியளவில் தேரா மர்கசில் நாசர் அலிகான் அவர்கள் நடத்த உள்ளார்,எல்லாப் புகழும் இறைவனுக்கே!

Saturday, November 8, 2014

காஷ்மீர் நிதி ரூ.50 லட்சத்து 50 ஆயிரம் ஒப்படைப்பு


காஷ்மீர் நிதி ரூ.50 லட்சத்து 50 ஆயிரம் ஒப்படைப்பு

ஜம்மு காஷ்மீரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி அளிப்பதற்காக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் நிதி திரட்டியது தெரிந்ததே. 

இந்நிதியை ஜம்மு&காஷ்மீர் மாநில முதல்வரிடம் ஒப்படைப்பதென முடிவெடுக்கப்பட்டது. ஆனால் ஜம்மு&காஷ்மீர் மாநில தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையத்தின் நடைமுறைகள் முன்னுக்கு வந்துவிட்டதால் மாநில முதல்வரிடம் ஒப்படைக்க முடியாத நிலையில் ஸ்ரீநகர் ஆட்சியரும் துணை ஆணையருமாகிய பாரூக் அஹமதுஷாவிடம் ரூ.50 லட்சத்து 50 ஆயிரத்திற்கான காசோலையை முதல்வர் நிவாரண நிதியாக தமுமுக தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ மற்றும் மூத்த தலைவர் செ. ஹைதர் அலி ஆகியோர் நேரில் ஒப்படைத்தனர். 

காசோலை ஒப்படைக்கப்பட்ட பின் பத்திரிக்கையாளர் சந்திப்பும் நடைபெற்றது.