Tuesday, March 30, 2010

துபை முமுக வின் வாராந்திர(1 & 2 march 2010)



இன்ஷா அல்லாஹ் (01-april-10) இன்று இரவு 8.30 இஷா தொழுகைக்கு பின் மணியளவில் நமது துபை அல் முதீன லுலு பின்புறம் அஸ்டிகோ பள்ளியில். துபை முமுக சகோதரர் கீழை ஜாமீன் அவர்கள் சிறப்புரையாற்றயிருக்கின்றார்கள். அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.


இன்ஷா அல்லாஹ் (02-april-10) இன்று இரவு 8.00 மணியளவில் இஷா தொழுகைக்கு பின் நமது துபை அல் முதீன லுலு பின்புறம் அஸ்டிகோ பள்ளியில். துபை முமுக சகோதரர் நசிர் அலி கான் அவர்கள் சிறப்புரையாற்றயிருக்கின்றார்கள். அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

Monday, March 29, 2010

முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டிற்காக மிஸ்ரா கமிஷன் பற்றிய கலந்தாய்வு கூட்டம்

முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டிற்காக மிஸ்ரா கமிஷன் பற்றிய கலந்தாய்வு கூட்டம் 28-03-2010 அன்று மதியம் 2.30 மணியளவில் சென்னையில் உள்ள ஹோட்டல் பிரஸிடெண்டில் நடைபெற்றது.
இந்த கலந்தாய்வு கூட்டத்திற்கு பல முஸ்லிம் இயக்கங்களும் மற்றும் சமூக பிரமுகர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தமுமுக மாநில செயலாளர் ஹாஜா கனி

(1-APRAIL-2010) இரவு 9.30 மணியளவில் நமது ஷார்ஜா முமுகவில்


இன்ஷா அல்லாஹ் (1-APRAIL-2010) இரவு 9.30 மணியளவில் நமது ஷார்ஜா
முமுகவில் சகோதரர்: மொய்தீன் அவர்கள் சிறப்புரையாற்றயிருக்கின்றார்கள்.
அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

Saturday, March 27, 2010

நிதி உதவி வழங்கப்பட்டன


கீழக்கரை தமுமுக சார்பாக மோதினர் அமீன்னுக்கு நிதி உதவி வழங்கப்பட்டன

Friday, March 26, 2010

சச்சார் குழு அறிக்கையை அமுல்படுத்த நடடிவக்கை எடுத்து வருகிறோம் அமைச்சர் சல்மான குர்ஷீத் தமுமுக தலைவரிடம் விளக்கம்




மத்திய சிறுபான்மை விவகாரத் துறை அமைச்சர் திரு. சல்மான் குர்ஷித் நேற்று புதுடெல்லியில நடத்திய கலந்துரையாடல் நிகழ்ச்சியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் பங்குக் கொண்டார். நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருந்த சிறுபான்மை சமூகத்தின் முக்கிய பிரமுகர்களுடன் இந்நிகழ்ச்சியின் போது அமைச்சர் சல்மான் குர்ஷீத் கலந்துரையாடினார். சிறுபான்மை நலனுக்காக தனது அமைச்சகம் செய்து வரும் பணிகளை அமைச்சர் விவரித்தார்.

இந்த கலந்துரையாடலில் பங்குக் கொண்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் பின் வரும் கோரிக்கைகளை முன்வைத்தார்:

மத்திய அரசு நீதிபதி ரங்கநாதன் மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரைகளை அப்படியே செயல்படுத்த வேண்டும்.

வகுப்பு கலவர தடுப்பு மசோதா 2009ஐ அவசரப்பட்டு மத்திய அரசு சட்டமாக்கக் கூடாது. இந்த மசோதா வகுப்பு கலவரங்களால் பாதிக்கப்படும் மக்களுக்கு உரிய நீதியை பெற்று தரும் வகையில் அமையவில்லை. காவல்துறைக்கும் மாநில அரசுக்கும் மிதமிஞ்சிய அதிகாரம் அளிக்கும் வகையில் இந்த சட்டம் அமைந்துள்ளது. எனவே இந்த மசோதாவை சட்டம் ஆக்குவதற்கு முன்பு மத்திய அரசு மனிதஉரிமை அமைப்புகள், சிறுபான்மை அமைப்புகளுடன் கலந்தாலோசனை செய்து உரிய திருத்தங்களை கொண்டு வரவேண்டும்.

தமிழகத்தில் கொண்டுவரப்பட உள்ள சமசீர் கல்வி திட்டத்தினால் சிறுபான்மையினரின் மொழிகளான உருது, அரபி, மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்றவை புறக்கணிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் உருது வழி பள்ளிக்கூடங்களில் காலியாகும் உருது ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கும் தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வில்லை. இந்த அவல நிலையை நீக்க சிறுபான்மை விவகார அமைச்சகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2011ல் நடைபெறும் மக்கட் தொகை கணக்கெடுப்பின் போது அனைத்து பிற்படுத்த வகுப்பினரின் சமூக நிலை குறித்தும் புள்ளி விவரம் திரட்டப்பட்டு இதன் அடிப்படையில் அரசின் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட ஆவணச் செய்யப்பட வேண்டும்.

இடஒதுக்கீட்டின் உச்ச பட்ச அளவு 50 சதவிகிதம் என்று உச்சநீதிமன்றம் நிர்ணயித்துள்ள வரம்பை நீக்குவதற்கும் மாநில அரசுகள் தங்கள் மாநிலத்தில் நிலவும் சூழலுக்கேற்ப இடஒதுக்கீடு அளவை நிர்ணயித்துக் கொள்ளவும் சிறுபான்மை அமைச்சகம் முன்முயற்சி எடுக்க வேண்டும்.

சிறுபான்மையினருக்கான பிரதமரின் 15 அம்ச திட்டம் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்பதை உரிய முறையில் மாநில அரசுகள் கண்காணிப்பதில்லை. எனவே இந்த திட்டம் உரிய முறையில் செயல்படுத்தப்படுகின்றதா என்பதை கண்காணிக்க தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்திற்கு இருப்பது போல் கண்காணிப்பு அமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.

வட்டியில்லா நிதி நிறுவனங்கள் செயல்படுவதற்கு இருக்கும் தடைகளை நீக்க சிறுபான்மை அமைச்சகம் ஆவணச் செய்ய வேண்டும்.


சிறுபான்மை மாணவர்களுக்கும் அமைச்சகம் தரும் 3 வகையான கல்வி உதவிகளுக்கான விண்ணப்ப படிவங்கள் மிக சிக்கலாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனை எளிமைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமுமுக தலைவரின் கருத்துகளை உன்னிப்பாக கேட்ட அமைச்சர் சல்மான குர்ஷீத் பின் வரும் விளக்கங்களை அளித்தார்:

சச்சார் குழு அறிக்கையை முழுமையாக ஆய்வு செய்து அதன் பரிந்துரைகளை அமுல்படுத்த நடடிவக்கை எடுத்து வருகிறோம்.

மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரைகளை நாங்கள் இன்னும் ஆய்வுச் செய்யவில்லை. ஆந்திரா முஸ்லிம் இடஒதுக்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்காக காத்து இருக்கிறோம். வகுப்பு கலவர தடுப்பு மசோதா 2009ஐ நிறைவேற்றுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து விட்டது. இருப்பினும் இது குறித்து மத்திய உள்துறை அமைச்சருடனும் சட்ட அமைச்சருடனும் பேசுகிறேன். தமிழகத்தில் உருது உள்ளிட்ட சிறுபான்மை மொழிகள் நிலை குறித்து தமிழக அரசுடன் பேசுகின்றோம். பிரதமரின் 15 அம்ச திட்டத்தை கண்காணிப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழுவை அமைக்குமாறு ஏற்கெனவே மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.

சிறுபான்மைனயினர் கல்வி உதவி படிவங்களை எளிமைப்படுத்த மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்கியுள்ளோம்''என்றார்.

ஆந்திராவில் முஸ்லிம்களுக்கு 4% இடஒதுக்கீடு- தடையை நீக்கி சுப்ரீம் கோர்ட் இடைக்கால உத்தரவு

டெல்லி: கல்வி நிறுவனங்கள் மற்றும் பணியிடங்களில் முஸ்லிம்களுக்கு 4 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் ஆந்திர அரசின் சட்டம் செல்லும் என உச்சநீதிமன்றம் [^] தனது இடைக்கால உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

கல்வி நிறுவனங்கள் மற்றும் பணியிடங்களில் முஸ்லிம்களுக்கு 4 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை ஆந்திர மாநில அரசு உருவாக்கியது. இதன் அடிப்படையில் கடந்த 2007ம் ஆண்டில் அரசாணையும் பிறப்பித்தது.

இதை எதிர்த்து ஆந்திர உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த ஆந்திர உயர்நீதிமன்ற பெஞ்ச் ஆந்திர அரசின் சட்டம் செல்லாது என அறிவித்து, அரசு உத்தரவுக்கு தடை விதித்தது.

உயர்நீதிமன்றத்தின் தடை உத்தரவை எதிர்த்து ஆந்திர அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் மனு தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த 22ம் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதி தீபக் வர்மா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இம்மனுவை விசாரணைக்கு ஏற்றது.

இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் இன்று இம்மனு விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் மற்றும் நீதிபதிகள் ஜே.எம்.பாஞ்சால், பி.எஸ்.சௌகான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பாக இம்மனு இன்று விசாரணைக்கு வந்தது.

விசாரணைக்கு பின் நீதிபதிகள் பிறப்பித்த இடைக்கால உத்தரவில், முஸ்லிம்களுக்கு 4 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் ஆந்திர அரசின் சட்டம் செல்லும் என குறிப்பிட்டனர்.

Thursday, March 25, 2010

துயரத்தை போக்கிய சந்திப்பு குணங்குடி ஹனீபா கடிதம்


6-12-1997 அன்று நடைபெற்ற மூன்று இரயில் குண்டுவெடிப்புகள் எனது தூண்டுதலில் நடைபெற்றதாக தமிழக சி.பி.சி.ஜ.டி சிறப்பு புலனாய்வு குழு என்மீது வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு விசாரணையை முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரணை செய்த பூந்தமல்லி சிறப்பு அமர்வு நீதிமன்றம் 13 வருடங்களுக்கு பிறகு நிறைவு செய்துள்ளது. இறைவன் நாடினால் மிக விரைவில் மார்ச் 31 அன்று வழக்கின் தீர்ப்பு வரும். தற்போது பல்வேறு பிரச்சினைகளால் எனது உடல்நிலை பாதிக்கப்பட்டு ஊன்றுகோல் துணையுடன் சிறை வாழ்க்கை வாழ்ந்து வருகின்றேன்.
இந்த நிலையில் தமுமுக தலைமை சார்பில் பாசமுள்ள தலைவர் பேராசிரியர் எம்.ஹச்.ஜவாஹிருல்லாஹ், பொது செயலாளர் சகோதரர் எஸ். ஹைதர் அலி, துணை பொதுச்செயலாளர் இமாம் ஜே.எஸ். ரிஃபாய், ம.ம.க பொருளாளர் சகோதரர் ஹாரூன் ரசீது, மாவட்ட துணை செயலாளர் புழல் ஷேக் முஹமது ஆகியோர் 17-3-2010 அன்று சிறையில் என்னை சந்தித்து நலம் விசாரித்து தலைவர் பேராசிரியர் எம்.ஹச்.ஜவாஹிருல்லாஹ் கண்ணீருடன், தன் கரங்களால் ஆப்பிள், ஆரஞ்சு வாழை கனிகளை என்னிடம் வழங்கினார்கள்.

இந்த உணர்வுபூர்வமான சந்திப்பு எனக்கு மிகவும் ஆறுதல் அளித்ததோடு 13 வருடங்களாக நான் சிறையில் உள்ள வேதனை எனக்கு நீங்கியது. அதற்காக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைமைக்கும், இது நாள்வரை சிறையில் என்னை சந்தித்து நலம் விசாரித்த மற்றும் எனது விடுதலைக்காக தொடர்ந்து ஜனநாயக முறையில் உணர்வுகளை வெளிப்படுத்திய தமிழகத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் இயக்கங்களுக்கும், இஸ்லாமிய பத்திரிக்கைகளுக்கும், நான் மிகவும் நேசிக்கின்ற மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிவாசல் இமாம்களுக்கும், பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கும் ஜமாஅத்தார்களுக்கும் வளைகுடா நாடுகளில் உள்ள சமுதாய பட்டாளிகளுக்கும், உங்களுக்கும் எனக்கும் உறவை ஏற்படுத்திய எல்லாம் வல்ல இறைவனுக்கும் என் சார்பாகவும், என குடும்பத்தினர் சார்பாகவும் தொடர்ந்து நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன்
குணங்குடி ஆர்.எம்.ஹனீபா.
source by:www.tmmk.in

Tuesday, March 23, 2010

துபை முமுக வின் வாராந்திர(26 march 2010) துபை ஹோர்லன்சே

இன்ஷா அல்லாஹ் (26-march-10) இன்று இரவு 8.30 இஷா தொழுகைக்கு பின் மணியளவில் நமது துபை ஹோர்லன்சே போஸ்ட் ஆபீஸ் பள்ளியில். துபை முமுக சகோதரர் கீழை ஜாமீன் அவர்கள் சிறப்புரையாற்றயிருக்கின்றார்கள். அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

துபை முமுக வின் வாராந்திர(25 march 2010) அல் முதீன

இன்ஷா அல்லாஹ் (25-march-10) இன்று இரவு 8.00 மணியளவில் இஷா தொழுகைக்கு பின் நமது துபை அல் முதீன லுலு பின்புறம் அஸ்டிகோ பள்ளியில். துபை முமுக சகோதரர் கீழை புஹாரி அவர்கள் சிறப்புரையாற்றயிருக்கின்றார்கள். அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

Monday, March 22, 2010

தமிழர்களுக்கு தனி அமைச்சகம்.


இராமநாதபுரம் மாவட்டம் எமனேஸ்வரத்தில் மாபெரும் கண்சிகிச்சை முகாம்

இராமநாதபுரம் மாவட்டம் எமனேஸ்வரத்தில் த.மு.மு.க மற்றும் ம.ம.க சார்பாக மாபெரும் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இதில் ம.ம.க மாவட்டச் செயலாளர் சலிமுல்லாக்கான் தலைமை தாங்கினார் மேலும் பரமக்குடி துணைக் கண்காணிப்பாளர் சிறப்பழைப்பாளராக கலந்து கொண்டார் மேலும் த.மு.மு.க மற்றும் ம.ம.க மாவட்ட மற்றும் நகர நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். இதில் 300க்கும் மேற்பட்ட மக்கள் சிகிச்கை பெற்று பயனடைந்தனர்.

துபாயில் நடைபெற்ற சர்வதேச அமைதி மாநாடு




மார்ச் 18, 19 மற்றும் 20-ம் தேதிகளில் சர்வதேச அமைதி மாநாடு மற்றும் கண்காட்சி துபாயில் நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளிலிருந்து இஸ்லாமிய அறிஞர்கள் வருகைப் புரிந்து இஸ்லாமிய கொள்கையைப் பற்றியும், அதன் சிறப்புகளைக் குறித்தும் சொற்பொழிவாற்றினர்.
சர்வதேச மார்க்க அறிஞர்கள் மஸ்ஜித் ஹரமின் இமாம் அப்துல் ரஹ்மான் சுதைஸ், குவைத்திலிருந்து ஷேக் மிஷரி ராஸித் அல் எஃப்ஸி, எகிப்திலிருந்து டாக்டர் ஹூசைன் ஹமத் ஹசன், அமெரிக்காவிலிருந்து யூசுப் எஸ்டஸ், யாசிர் காதி, இங்கிலாந்திலிருந்து அப்துல் ரஹீம் கிரீன், மலேசியாவிலிருந்து ஷேக் ஹூசைன் யீ, இந்தியாவிலிருந்து டாக்டர். ஜாகிர் நாயக், எம்.எம்.அக்பர், அஹ்மத் ஹமத், மாயன் குட்டி மாதர், தென் ஆப்ரிக்காவிலிருந்து ஜெய்ன் பிகா, கனடாவிலிருந்து சையத் ராகே ஆகிய அறிஞர்கள் கலந்துக் கொண்டு சொற்பொழிவாற்றினர். நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட முஸ்லிமல்லாதவர்கள் பலரும் மார்க்கத்தை விளங்கி இஸ்லாமிய கொள்கையை தங்களது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ். அமீரகத்திலுள்ள பல்வேறு இஸ்லாமிய வங்கிகளும், வர்த்தக நிறுவனங்களும் தங்களின் நிறுவனங்களின் பொருட்களை மக்களுக்கு அறிமுகப்படுத்தும் விதமாக கடைகளை அமைத்திருந்தன. தமிழகத்திலிருந்து அல்-ஃபஜர், இண்டர்நேஷனல் இஸ்லாமிக் ஸ்கூல் ஆகிய சர்வதேச பள்ளிகளின் விளம்பரங்கள் பொருட்காட்சியில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சி தொடர்பான விபரங்கள் அவ்வப்போது http://www.peachconvention.com/என்ற வலைதளத்தில் கொடுக்கப்பட்டன

- ஹூசைன் பாஷா

Friday, March 19, 2010

முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் கூட்டத்தில் பங்குக் கொள்ள தமுமுக தலைவர் வட இந்தியா பயணம்

அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் ஆண்டு கூட்டம் உ.பி. மாநிலத்தின் தலைநகரான லக்னோவில் மார்ச் 19 முதல் 21 வரை நடைபெறுகின்றது. இந்த கூட்டத்தில் கட்டாய திருமண பதிவுச் சட்டம், பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு, பாபரி மஸ்ஜித் வழக்கு உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
இந்த கூட்டத்தில் பங்குக் கொள்வதற்காக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் உறுப்பினருமான பேராசிரியர் முனைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் இன்று (மார்ச் 18) விமானம் மூலம் லக்னோ புறப்பட்டுச் சென்றார். இக்கூட்டம் முடிவடைந்த பிறகு உ.பி.யிலும் டெல்லியிலும் அரசியல் மற்றும் சமூக பிரமுகர்களை தமுமுக தலைவர் சந்திக்கிறார். பிறகு டெல்லியில் மத்திய சிறுபான்மை நல அமைச்சர் சல்மான் குர்ஷித் வரும் மார்ச் 25ம் தேதி கூட்டியுள்ள முக்கிய சிறுபான்மை சமூகத் தலைவர்களுடனான கலந்தாய்விலும் தமுமுக தலைவர் பங்கு கொள்கிறார். இந்த கலந்தாய்வில் மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரைகள் குறித்து விவாதிக்கப்படும் என தெரிகின்றது.

வெள்ளிக் கிழமை துபை முமுகவில் தர்பியா முகாம்

வெள்ளிக் கிழமை துபை முமுகவில் தர்பியா முகாம்

Thursday, March 18, 2010

துபை முமுக வின் வாராந்திர(18-march-10) சிறப்பு நிகழ்ச்சி


இன்ஷா அல்லாஹ் (18-march-10) இன்று இரவு 8.30 மணியளவில் நமது துபை அல் முதீன லுலு பின்புறம் அஸ்டிகோ பள்ளியில். துபை முமுக சகோதரர் முகமது பிலால் அவர்கள் சிறப்புரையாற்றயிருக்கின்றார்கள். அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

துபை முமுக வின் வாராந்திர(19-march-10) சிறப்பு நிகழ்ச்சி

இன்ஷா அல்லாஹ் (19-march-10) இன்று இரவு 8.30 மணியளவில் நமது துபை ஹோர்லன்சே போஸ்ட் ஆபீஸ் பள்ளியில். துபை முமுக சகோதரர் முகமது பிலால் அவர்கள் சிறப்புரையாற்றயிருக்கின்றார்கள். அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

Wednesday, March 17, 2010

அபுதாபியில் நேர மேலாண்மை பயிற்சி


அபுதாபி: அபுதாபியில் உள்ள கேரளா சோசியல் சென்டரில் நேர மேலாண்மை பயிற்சி முகாம் கடந்த 12ம் தேதி நடைபெற்றது.

நெல்லை ஏர்வாடி நண்பர்கள் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பயிற்சி முகாமை சாதிக் அவர்கள் திருக்குர்ஆன் ஓதி துவக்கி வைத்தார்.

துபாய் மண்டல பொறுப்பாளர் உவைஸ் பயிற்சியாளரைப் பற்றி அறிமுக உரையாற்றி, இது போன்ற நிகழ்ச்சிகளின் அவசியம் குறித்து விளக்கினார்.

மனித வள மேம்பாட்டு பயிற்சியாளர் ஹுசைன் பாஷா நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டவர்களுக்கு நேரமேலாண்மை குறித்து பயிற்சியளித்தார்.

ஒலி ஒளியுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த பயிற்சி முகாமில் மிக எளிமையான முறையில் அனைவருக்கும் புரியும்படியான பாடத்திட்டங்கள் வடிவமைக்கப் பட்டிருந்தன.

இறுதியாக நன்றி கூறிய அபுதாபி பகுதியின் பொறுப்பாளர் அப்துல்லாஹ், இது போன்ற நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து தொடந்து நடத்தப்படும் என்றும் கூறினார்.

சிற்றுண்டி, தேநீருடன் நிகழ்ச்சி ஏற்பாட்டை ஈமான் (EMAN) நண்பர்கள் செய்திருந்தனர்.

Sunday, March 14, 2010

முமுக மர்ககஸில் தமீமுன் அன்சாரி காண்ஃபிரன்ஸ் மூலமாக உரை



அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்....)
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 12/03/2010 அன்று இரவு 9மணியளவில் துபை முமுக மர்ககஸில் மனித நேய மக்கள் கட்சியின் மாநில துணை பொது செயலாளர் தமீமுன் அன்சாரி அவர்கள் மமகவின் செயல்பாடுகள் மற்றும் கட்சியின் வருங்கால திட்டங்கள் பற்றியும், சகோதரர்கள் மத்தியில் தாயகத்தில் இருந்து வீடியோ காண்ஃபிரன்ஸ் மூலமாக உரையாற்றினார்கள். அதன் பிறகு கேள்வி பதில் நிகழ்ச்சி நடைப்பெற்றது. நிகழ்ச்சியில் திரளான சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்....எல்லா புகழும் அல்லாஹ்விற்கே

Saturday, March 13, 2010

பேராசிரியரும் நடிகருமான டாக்டர்.பெரியார்தாசன் இஸ்லாத்தை தழுவினார்


கருத்தம்மா திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானவர் பெரியார்தாசன். உளவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். கடவுள் மறுப்புக்கொள்கையில் உறுதியாகயிருந்தவர். தனது பெயரையே நாஸ்திக சிந்தனையாளரான தந்தை பெரியாரின் பெயருடன் அடிமை என்ற பொருளைத் தரும் தாசன் என்ற வார்த்தையை இணைத்துக் கொண்டவர்.

தமிழகத்தில் பிரபலமான பெரியார்தாசன் பல்வேறு மேடைகளில் சமூக சிந்தனை கருத்துக்களை பரப்பியவர். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் அமைந்துள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் விசிட்டிங் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இஸ்லாத்தை பற்றி பலகாலமாக ஆய்வு செய்த பெரியார்தாசன் கடந்த வியாழக்கிழமை(மார்ச் 11) அன்று சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாதில் அமைந்துள்ள இஸ்லாமிய தஃவா மையத்தில் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்.

தனது பெயரை அப்துல்லாஹ் (அல்லாஹ்வுக்கு அடிமை) என்று மாற்றிக்கொண்டார். இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டதைக் குறித்து டாக்டர் அப்துல்லாஹ் கூறியதாவது:

”இவ்வுலகில் இஸ்லாமிய மார்க்கம் மட்டுமே இறைவனிடமிருந்து நேரடியாக இறக்கியருளப்பட்ட வேதத்தைக் கொண்டுள்ளது. நான் பல்வேறு மதங்களின் வேதங்களையும் ஒப்பீட்டு ஆய்வு செய்தேன். அதில் இஸ்லாத்தைத்தவிர மற்ற அனைத்து நூல்களுமே இறைவனிடமிருந்து நேரடியாக அருளப்பட்டது அல்ல.

குர்ஆன் மட்டுமே இறைவனிடமிருந்து எந்த வடிவில் முஹம்மது நபிக்கு அல்லாஹ்விடமிருந்து அருளப்பட்டதோ அதே வடிவில் இன்றும் உள்ளது. நான் நாத்திகக் கொள்கையின் மூலமாக இந்தியாவில் அனைவருக்கும் நன்றாக அறிமுகமானவன். இஸ்லாம் தான் இவ்வுலகிலும், மறுவுலகிலும் மனித இனத்திற்கு பொருத்தமான மார்க்கம் என்பதை புரிந்துக்கொண்டேன்.” என்றார்.

டாக்டர் அப்துல்லாஹ் இன்று (மார்ச் 13) உம்ரா செய்வதற்காக புனிதஸ்தலமான மக்காவிற்கு செல்கிறார். பின்னர் மதீனாவும் செல்வார். அல்லாஹ் அவருடைய நல்ல செயல்களை பொருந்திக் கொண்டு கடந்த கால பாவங்களை மன்னித்து நேரான வழியில் செலுத்துவானாக! என பிரார்த்திப்போம்.

தகவல் ஆதாரம்: அரப் நியூஸ், மார்ச் 12, 2010.

அல்-கோபர் தமுமுக கிளை தர்பியா முகாம்


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சவூதி அரேபியா கிழக்கு மண்டலம் அல்-கோபர் கிளையின் மாதாந்திர தர்பியா முகாம் நேற்று வெள்ளிக்கிழமை (12-03-2010) காலை 8.30 மணி முதல் ஜூம்மா வரை சகோ.நவாப்ஜான் இல்லத்தில் நடைபெற்றது.

இத்தர்பியா முகாமை அல்-கோபர் கிளைத்தலைவர் சகோ.நஜ்முதீன் அவர்கள் தொடங்கி வைக்க, சகோ.அய்யூப் அவர்கள் தலைமையேற்று சிறப்பாக நடத்திக் கொடுத்தார்.

மேலும் இத்தர்பியா முகாமில் அல்-கோபர் கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

Thursday, March 11, 2010

நெடுஞ்சாலை விபத்துகளை தடுக்கவும்

துபை முமுக வின் வாராந்திர(11-march-10) சிறப்பு நிகழ்ச்சி



அன்பிற்கினிய சகோதரர்களுக்கு,

இன்ஷா அல்லாஹ் (11-march-10) இன்று இரவு 8.30 மணியளவில் நமது துபை ஹோர்லன்சே போஸ்ட் ஆபீஸ் பள்ளியில். துபை முமுக துணை தலைவர் முஹைதீன் அவர்கள் சிறப்புரையாற்றயிருக்கின்றார்கள். அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

Wednesday, March 10, 2010

திருமண உதவி வழங்கப்பட்டன.


கீழக்கரை தமுமுக சார்பில் எழலை குடும்பத்துக்கு திருமண உதவி வழங்கப்பட்டன.

Tuesday, March 9, 2010

மார்ச் 15-ல் ஆர்ப்​பாட்​டம் நடத்த கமுதி மனி​த​நேய மக்​கள் கட்சி முடிவு

கமுதி,​மார்ச் 7:​ பெட்ரோல்,​​ டீசல் மற்றும் அத்யாசியப் பொருள்ளின் விலை உயர்வைக் கண்டிப்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இம்மாதம் 15-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த மனிநேய மக்கள் கட்சி முடிவுசெய்துள்ளது.​ ​

கமுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நகர மனித நேய மக்கள் கட்சியின் செயற்குழு,​​ பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.​

கூட்டத்திற்கு ஒன்றியச் செயலர் முகம்மது காசீம் தலைமை வகித்தார்.​ ராமநாபுரம் மாவட்டத் தலைவர் சாதிக் ஜபருல்லா முன்னிலை வகித்தார்.​ நகரச் செயலர் சேட் வரவேற்றார்.​

பெட்ரோல்,​​ டீசல் விலை உயர்வைக் கண்டித்தும்,​​ கமுதி அரசு மருத்துனையில் மகப்பேறு மருத்துவரை நியமிக்கக் கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.​

கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் அஜீஸ் கனி,​​ கலிமுல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்னர்.​ ​

Monday, March 8, 2010

ஊடகங்களின் பார்வையில்

”WQ U‰«XeÛL AU¥T|†RÚLÖ¡ WÖUSÖR“W†‡¥ U‰eLÛP U½V¥ ÙNšV ˜VÁ\ UÂRÚSV UeL· Lyp›]Ÿ ÛL‰ ÙNšVTyP]Ÿ.

U½V¥ ÚTÖWÖyP•

R–Z†‡¥ ”WQ U‰«XeÛL AU¥T|†R ÚLÖ¡ UÂRÚSV UeL· Lyp NÖŸ‘¥ ÚS¼¿ UÖŒX• Rµ«V U‰eLÛP U½V¥ ÚTÖWÖyP• SÛPÙT¿YRÖL A½«e LTyz£‹R‰. CRÁTz WÖUSÖR“W• UÖYyP UÂRÚSV UeL·LypNÖŸ‘¥WÖUSÖR“W•TÖW‡SL¡¥ U‰eLÛPU½V¥ÚTÖWÖyP•UÖYyPÙNVXÖ[Ÿ N¦˜¥XÖLÖÁ RÛXÛU›¥ SÛPÙT¼\‰. UÖŒX ÙNV¼hµ E¿‘]Ÿ NÖ‡e, RÍ‘eA¦,p†‡e BfÚVÖŸ ˜ÁÂÛX Yf†R]Ÿ.C‡¥ UÖYyP ÙNVXÖ[Ÿ N§˜¥XÖLÖÁ ÚTpVRÖY‰. R–ZL UeLÛ[hzLÖWŸL[ÖL UÖ¼½ A³«¼h, AÛZ†‰ÙN¥¨• AWpV¥YÖ‡Lºeh G‡WÖL°•,UeL¸P• «³“QŸ° H¼T|†R°• R–ZL• ˜µY‰• C‹R U½V¥ ÚTÖWÖyP• SÛP ÙT¿f\‰.U‰LÛPLÛ[ ‡\‹‰ ARÁ ™X• Y£• Y£YÖ›¥ CXYN z.« J£ ¤TÖšeh A¡p GÁ\ CXYN ‡yPjLÛ[ YZjhYÚRÖ| 75 NR«R ÙTL¸Á YÖ²ÛY T½eh• ÙNV¦¥ C‹R AWr D|Ty| Y£f\‰. ÙT¡VÖŸ, AQÖ«Á Y³›¥ ÙN¥YRÖL i¿• ‡.˜.L. AWr AYŸL¸Á E¿‡VÖ] ÙLÖ·ÛLLºeh UÖ\ÖL U‰eLÛPLÛ[ ‡\‹‰ Y£f\‰.CÛR UÛ\eL CXYN ‡yPjL[Ö¥ UeLÛ[ ˜yPÖ·L[Öef Y£fÁ\]Ÿ. CªYÖ¿ ÚTp]ÖŸ.

ŒL²op›¥ UÖŒX ÙNV XÖ[Ÿ ^×Û]ˆÁ LX‹‰ ÙLց| ÚTpVRÖY‰:

ÚTÖWÖyP•

UeL· AÛU‡VÖL°•, Y[UÖL°• YÖZ ÚY|• GÁ\ ÙRÖÛXÚSÖeh TÖŸÛYPÁ UÖŒ X• ˜µY‰•-54 CPj L¸¥ U‰eLÛP U½V¥ ÚTÖWÖyP• SÛP ÙT¿f\‰. SÖyz¥ ÙT£•TÖXÖ] h¼\ ÙNV¥Lºeh U‰TÖ]• RÖÁ AzTÛP LÖWQUÖL E·[‰. CÛR R|eLÚY U½V¥ ÚTÖWÖyP• SP†RT|f\‰.AÛ]†‰ ÙTÖ£·Lº• CXYNUÖL YZjhfÚ\Ö• GÁ\ AWpÁ ÙLÖ·ÛL›¥ UÖ¼\• ÙNšV ÚY|•.EÛZeL ÚYzV UeLÛ[ ÛLÚV‹R «|Y‰ –LÙT¡V RY¿. C‹R ÚTÖWÖyP• ˜ÁÚ]ÖyP• RÖÁ.U‰ GÁÄ• AWeLÛ] K³eLÖU¥ KVUÖyÚPÖ•.U‰eLÛP ™X• R–ZL AWreh B|eh ¤.13 B›W†‰ 500 ÚLÖz Y£UÖ]• Y£f\‰.UeL¸Á YÖ²ÛY T½eh• C‹R Y£UÖ]• SÖy|eh ÚRÛY›¥ÛX. U‰«XeÛL AU¥T|†‡·[ hIWÖ† UÖŒX• ÙRÖ³¥ ‰Û\›¥ ˜R¦P• Yfef\‰.CÛR ˜Á UÖ‡¡VÖL ÙLց| R–ZL†‡¥ ”WQ U‰«XeÛL AWr AU¥T|†R ÚY|•.CªYÖ¿ ÚTp]ÖŸ.

ŒL²op›¥ UÖYyP†‡Á T¥ÚY¿ Th‡LÛ[ ÚNŸ‹R UÂRÚSV UeL· Lyp›]Ÿ HWÖ[UÖÚ]ÖŸ LX‹‰ ÙLցP]Ÿ.

CYŸL· AÛ]Y£• AWr PÖÍUÖe U‰eLÛPÛV U½V¥ ÙNšV ˜VÁ\ ÚTÖ‰ ÚTÖ§NÖŸ R|†‰ 326 ÚTÛW ÛL‰ ÙNšR]Ÿ.

U½V¥ ÚTÖWÖyP†ÛR ÙVÖyz TÖW‡SLŸ Th‡›¥ HWÖ[UÖ] B - ÙT ÚTÖ§NÖŸ TÖ‰L֐“ T‚›¥ D|Tyz£‹R]Ÿ.LXYW†ÛR R|eh• YÇWÖ YÖL]• Œ¿†‡ ÛYeLTyz£‹R‰.


Sunday, March 7, 2010

இராமநாதபுரத்தில் நடைபெற்ற மதுக்கடை மறியல் புகைப்படங்கள்



மதுவிலக்கு அமலாக்க கோரி கோவையில் ம.ம.க. போராட்டம் இன்ஸ்பெக்டர்- பெண் போலீசார் படுகாயம்

கோவை,மார்ச.7- கோவையில் நடந்த போராட்டத்தில் டாஸ்மாக் கடையில் மீது சரமாரியாக கல் வீசப்பட்டது. இதில் இன்ஸ்பெக்டர் மற்றும் 3 பெண் போலீசார் காயம் மடைந்தனர்.

டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி தமிழ்நாடு முழுவதும் இன்று ஆர்பாட்டம் நடைபெறும் என்று மனித நேய மக்கள் கட்சி அறிவித்திருந்தது.

கோவையில் சுந்தராபுரம், குனியமுத்தூர், உக்கடத்தில் டாஸ்மாக் கடைகளில் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உக்கடம் பஸ் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்பாட்டத்துக்கு த.மு.மு.க மாநில செயலாளர் கோவை உமர், தலைமை தாங்கினர் இதில் ம.ம.க மாவட்ட செயலாளர் சுல்தான் அமீர், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் அப்பாஸ், மாநகர செயலாளர் ரபிக், மற்றும் தமுமுக, மமக, மாவட்ட நிர்வாகிகள் அகமது கபீர், ஜபார்சாதிக், ஜாகீர், மைதீன் சேட், கவிஞர் ஹக், ஹக்கிம்,மற்றும் ஏராளமானோர் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர், அவர்கள் மதுக்கடையை மூடக்கோரி கோஷம் எழுப்பினார்கள். ஆர்பாட்டம் நடைபெற்ற இடத்தில் உதவி கமிஷனர் குமாரசாமி தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலிசார் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்து.

ஆர்பபாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த தடையை தாண்டிச்செல்ல முயன்றனர், அப்போது போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது, இதில் உதவி போலீஸ் கமிஷனர் குமாரசாமி கீழே விழுந்தார்.

இந்த சமயத்தில் யாரோ சிலர் டாஸ்மாக் கடை மீது சரமாரியாக கற்களை வீசினார்கள். இதில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த உக்கடம் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் பெண் போலீஸ் கற்பகவள்ளி உள்பட 1பெண் போலீசார் படுகாயம் அடைந்தனர். கல்வீச்சு சம்பவத்தால் அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது,

ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட 175 பேரை போலீசார் கைது செய்தனர்,இதே போல் குனியமுத்தூரில் 87 பேரும், சுந்தராபுரத்தில் 68 பேரும், கைது செய்யப்பட்டனர்.

மறியலை தொடர்ந்து துனை கமிஷனர் நாகராஜ், தலைமையில் 100க்கு மேற்பட்ட போலீசார்கள் சம்பவ இடத்திற்க்கு உடனே வந்து மாநில செயலாளர் கோவை உமர்யிடம் சம்பவத்தை பற்றி விசாரித்தார்.