Sunday, February 28, 2010

மதுக்கடை மறியல் போராட்டம் நடைபெறும், இடங்களும் தலைமை தாங்குபவர்களின் விபரமும்


படங்களைப் பெரிதாகக் பார்க்க படத்தின் மேல் கிளிக் செய்யவும்.

Saturday, February 27, 2010

கீழக்கரை முதல் ராமநாதபுரம் வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகளைத் தவிர்க்க காவல்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட வேண்டும் என்று தமுமுக கோரிக்

25-2-2009 அன்று நாடாத விபத்து புகை படம்




கீழக்கரை முதல் ராமநாதபுரம் வரை செல்லும் கிழக்குக் கடற்கரை தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகளைத் தவிர்க்க காவல்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட வேண்டும் என்று தமுமுக கோரிக்கை அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நெடுஞ்சாலையில் இதுவரை சுமார் 50-க்கும் மேற்பட்ட வாகன விபத்துகள் நிகழ்ந்து, பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இச்சாலையில், பல கல்லூரிகள் உள்ளன. இதனால் இவ்வழித்தடத்தில் வாகனப் போக்குவரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. ராமேசுவரம், மதுரை வழியாக தூத்துக்குடிக்கு வந்து போகும் கனரக வாகனங்களும் இவ்வழியாகவே செல்கின்றன. கீழக்கரை அகஸ்தியர் கோயில் கிழக்குக் கடற்கரை தேசிய நெடுஞ்சாலை வளைவுப் பகுதியில் மாதத்திற்கு குறைந்தது நான்கு அல்லது ஐந்து விபத்துகள் வரை நிகழ்கின்றன. இதில் அதிகமாக பாதிக்கப்படுவது இருசக்கர வாகனங்களில் செல்லும் இளைஞர்கள்தான். எனவே, இப்பகுதியில் செல்லும் வாகனங்களின் அதிவேகத்தைக் கட்டுப்படுத்தவும், அதிகரித்துவரும் விபத்துகளை தடுக்கவும் நெடுஞ்சாலை ரோந்து பணியில் காவல்துறை ஈடுபடவேண்டும் என்று கீழக்கரை, ஏர்வாடி, சிக்கல், வாலிநோக்கம், இதம்பாடல், சாயல்குடி உள்ளிட்ட கிராம மக்கள் மற்றும் கீழக்கரை தமுமுக கோரியுள்ளனர்.

முற்ற ஒருவருக்கு கைதடி வழங்கப்பட்டது.


கீழக்கரை தமுமுக சார்பாக முகமது எனும் உனம் முற்ற ஒருவருக்கு கைதடி வழங்கப்பட்டது. கைதடியை அஹ்சாது வழங்கினர் உடன் கீழக்கரை தமுமுக தலைவர் முஜீப் ரகுமான், உஸ்மான். பகர் ,ஆய்பு கான், ஜெய்னுல்ஆப்தீன் உடன் இருதான்

Thursday, February 25, 2010

கோவை மாவட்ட மனித நேய மக்கள் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது


கோவையில் 24/02/2010 கோவை மாவட்ட மமக செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் சுல்தான் அமீர் அவர்கள் தலைமையில் தமிழ்நாடு ஹோட்டலில் நடைபெற்றது. இந்த செயற்குழுவில் மாநில நிர்வாகிகள், மாவட்ட தமுமுக நிர்வாகிகள், மாவட்ட மமக நிர்வாகிகள் கலந்து கொண்டதுடன் செயற்குழுவில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானங்கள்:

பிப்ரவரி 7ம் தேதி திருப்பூரில் நடந்த மமகவின் இரண்டாம் ஆண்டு தொடக்கவிழா மற்றும், முப்பெரும் கோரிக்கை மாநாட்டை வெற்றி பெற செய்த மற்றும் மாநாட்டில் கலந்து கொண்டவர்களும் செயற்குழு மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றியையும் தொவித்துக்கொள்கிறது.

தமிழகத்தில் பூரண மதுவிலக்ககை உடனடியாக அமுல்படுத்த கோரி தமிழக அளவில் மனித நேய மக்கள் கட்சி எதிர்வரும் மார்ச் 7ம் தேதி அன்று நடக்க இருக்கும் மதுக்கடை மறியல் போரை தமுமுக மற்றும் ஒத்த கருத்துள்ள அனைவரையும் ஒன்று திரட்டி வெற்றிகரமாக நடத்தவது எனவும், அதற்கான கடுமையாக உழைப்பது எனவும் இச் செயற்குழுவில் முடிவு செய்யப்படுகிறது.

கோவையில் அதிகமான இடங்களில் மறியல் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

கோவையில் ஜுன் மாதம் நடக்க இருக்கும் செம்மொழி மாநாட்டிற்கு பல கோடிகளில் அடிப்படை வசதிகளை செய்து வரும் திமுக அரசு சிறுபான்மை மற்றும் தாழ்த்தபபட்ட மக்கள் பெரும்பான்மையாக வசித்து வரும் கோவை தெற்கு பகுதிகளை திட்டமிட்டு புறக்கணித்து வருவதை செயற்குழு கண்டிப்பதுடன் உடனடியாக அடிப்படை வசதிகளை கோவை தெற்கு பகுதியில் விரிவுபடுத்தும் திட்டங்களை தீட்டி செயல்படுத்த வேண்டும் என செயற்குழு கோரிக்கை வைப்பதுடன் புறக்கணிப்பு தொடர்ந்தால் செம்மொழி மாநாட்டில் கோவை தெற்கு பகுதி மக்கள் கலந்து கொள்ளக்கூடாது என்ற பிரச்சாரத்தை கடுமையாக செய்வது எனவும், செம்மொழிமாநாடு அன்று தெற்கு பகுதிகளில் கறுப்புக் கொடி ஏற்றுவது எனவும் முடிவு செய்யப்படுகிறது.

இன்னும் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த செயற்குழுவிற்கு, தமுமுக மாநில துணைச்செயலாளர்கள் கோவை சையது, கோவை சாதிக், மாநில செயற்குழு உறுப்பினர் கோவை அக்பர், மாநில கழக பேச்சாளர் கோவை ஜாகீர், மமக மாவட்ட செயலாளர் சுல்தான் அமீர், தமுமுக மாவட்ட தலைவர் அப்துல் பசிர், மாவட்ட செயலாளர் ஆர்.எம். ரபிக், மமக மாவட்ட துனைச்செயலாளர் ஷாஜகான், மமக மாவட்ட பொருளாளர் அப்பாஸ், மற்றும் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் அப்பாஸ், தமுமுக மாவட்ட துனைச்செயலாளர் ஜபார்சாதிக், மோட்டுபாளையம் நகர நிர்வாகி ரகுபதி, வணிகர் பிரிவு செயலாளர் ராஜா, மற்றும் திருப்பூர் மமக மாவட்ட பொருளாளர் ஷாஜகான், மற்றும் மமக, தமுமுக, நகர மாநகர மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். இறுதியில் மமக தொழிலாளர்அணி செயலாளர் சலிம் நன்றி கூறினார்.

கட்டாய திருமணப் பதிவு சட்டம்: அனைத்து சமூக அமைப்புகள் கலந்தாய்வு

உச்சநீதிமன்றத்தின் அறிவுரையின் படி இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் கட்டாய திருமண பதிவு சட்டத்தை நிறைவேற்ற வேண் டும் என மத்திய அரசு உத்திர விட்டுள்ளது. அதன்படி தமிழக அரசும் இச்சட்டத்தை நடைமுறைப் படுத்த தேவையான முயற்சிகளை மேற்க்கொண்டுள்ளது.


இச்சட்டம் நடைமுறைப்படுத்தப் பட்டால் முஸ்லிம் ஷரீத் சட்டத்தில் இடையூறு ஏற்படும் என முஸ்லிம் மக்களிடையே எழுந்துள்ள ஐயப் பாடுகளைப்பற்றி விரிவாக கலந்தா லோசிக்க ஜமாஅத்துல் உலமா சபை தலைமையில் கடந்த 17.02.2010 அன்று சென்னை பிரெஸிடென்ஸி ஹோட்டலில் முஸ்லிம் சமுதாய அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் தமிழக அரசு இயற்றி உள்ள சட்டத்தில் முஸ்லிம்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் இச்சட்டம் அமைய வேண்டும் என கோரிக்கை மனு தயார் செய்து, தமிழக முதல்வரை நேரில் சந்தித்து வலியுறுத்துவது எனவும் மேலும் இச்சட்டம் குறித்து ஆராய நிபுணர் குழு அமைக்கவும் தீர்மாணிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் ஜமாஅத்துல் உலமா தலைவர் மௌலான அப்துல் ரஹ்மான், த.மு.மு.க தலைவர் பேரா.எம்.ஹச்.ஜவாஹிருல்லாஹ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் முகைதீன், தேசிய லீக் தலைவர் பஷீர் அஹமத், வேலூர் தொகுதி எம்.பி. அப்துல் ரஹ்மான், தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் அபூபக்கர், தமிழக தலைமை காஜி சாலவுதீன் அய்யூப் மற்றும் ஜமாஅத்தே இஸலாமிய ஹிந்த், மறுமலர்ச்சி முஸ்லிம் லீக், இந்திய தவ்ஹீத் ஜமாத், தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம், தமிழ் மாநில தேசிய லீக், தாருல் இஸ்லாம் பவுண்டேஷன் முதலிய அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

Tuesday, February 23, 2010

பிரிட்டனில் 'பர்கா' உடைக்கு தடைவிதிக்க முடியாது

இஸ்லாமிய பெண்கள் 'பர்கா' அணியக்கூடாது: பிரிட்டன் அமைச்சர்

இங்கிலாந்தில் உள்ள இஸ்லாமிய பெண்கள், தலைமுதல் பாதம் வரை மறைக்கும் கறுப்பு அங்கியான 'பர்கா' உடையை அணியாமல் இருப்பதையே தாம் விரும்புவதாக பிரிட்டன் சட்டத்துறை அமைச்சர் ஜேக் ஸ்ட்ரா தெரிவித்துள்ளார்.

அதே சமயம் பிரிட்டனில் 'பர்கா' உடைக்கு தடைவிதிக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், பிரான்ஸில் வேண்டுமானால் 'பர்கா'வுக்கு தடை விதிப்பது சாத்தியமாகி இருக்கலாம். ஆனால் அதற்கு இங்கு (இங்கிலாந்து) தடை விதிப்பது சாத்தியமில்லை என்றார்.

Tuesday, February 16, 2010

தலைமைச் செயலகம் முற்றுகை தமுமுக அறிவிப்பு


திருவள்ளூர் மாவட்டம் போரூர் ஷேக்மான்யம் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்பட்ட உடலை தோண்டி எடுத்த திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரை கண்டித்து தலைமை செயலகத்தை தமிழ்நாடு முஸ்­ம் முன்னேற்றக் கழகம் 17-02-2010 அன்று முற்றுகை போராட்டம் நடத்துகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தமுமுக பொதுச் செயலாளர் செ. ஹைதர் அ­ தலைமை தாங்குகிறார்.

Sunday, February 14, 2010

கீழக்கரை தமுமுக ஆபீசில் வைத்து குடும்பம் இஸ்லாதை கொண்ட குடும்பம்


கீழக்கரை தமுமுக ஆபீசில் வைத்து குடும்பம் இஸ்லாதை கொண்ட குடும்பம் இயற்கை மார்க்கமாம் இஸ்லாத்தின் தூய உன்னதக் கொள்கைகளை அறிந்து அதனை ஏற்றுக் கொண்ட தமிழ் மொழிபெயர்ப்பு குர்ஆன் வழங்கப்பட்டன. கீழக்கரை தமு முக தலைவர் முஜீப் ரகுமான் உஸ்மான், முஸ்தகீன் ஆகியோர் பங்கேற்றனர்

Saturday, February 13, 2010

த.மு.மு.க. சார்பாக கீழக்கரை நடந்த விளையாட்டுப்




கீழக்கரை நடந்த விளையாட்டுப் போட்டியில் த.மு.மு.க. சார்பாக நினைஉ பரிசு வழங்கப்பட்டது. த.மு.மு.க மாவட்டசெயலாளர் தச்பிகு. மாவட்ட துணை செயலாளர் அன்வர் த.மு.மு.க. கீழக்கரை தமு முக தலைவர் முஜீப் ரகுமான் உஸ்மான், முஸ்தகீன் ராஜா ஹுசைன் மாணவரணி செயலாளர் அக்ரம் ஆகியோர் பங்கேற்றனர்

Friday, February 12, 2010

மேலப்பாளையம் காவல்துறை இன்ஸ்பெக்டரை கண்டித்து தமுமுக ஆர்ப்பாட்டம்

மருத்துவ உதவி வழங்கப்பட்டது.







கீழக்கரை தமுமுக சார்பாக ஏழை பெண்ணிற்கு ரூபாய் 2 ஆயிரம் மருத்துவ உதவி வழங்கப்பட்டது.

மேலும் ஏழை சகோதரருக்கு வீட்டை சீர்படுத்துவதற்காக மருத்துவ உதவி வழங்கப்பட்டது.

மார்ச்-07 மதுக்கடை மறியல் மாதிரி விளம்பரம்

Saturday, February 6, 2010

வேலூர் மறியல் போராட்டம் தமுமுகவினர் கைதாகி விடுதலை


E-mailPrintPDF
முஸ்லிம்கள் அதிகமாக வாழும் மாவட்டங்களில் வேலூர் மாவட்டமும் ஒன்றாகும். குறிப்பாக உருது மொழியை தாய் மொழியாக கொண்ட முஸ்லிம்கள் அதிக அளவில் தங்களுடைய வசிக்கும் நகரம் வேலூர். அந்நகர மக்களுக்கு தேவையான கல்வியை அளிப்பதற்காக கடந்த 1906 ஆண்டு அப்பகுதி முஸ்லிம்களால் அவர்களுடைய சொந்த பணத்தின் மூலம் உருது வழி கல்வியில் ஓர் உயர்நிலை பள்ளிக்கூடம் துவக்கப்பட்டது. அப்பள்ளிக்கூடம் கடந்த 1978லில் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு, தற்பொழுது வேலூர் அரசு முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி என்று அழைக்கப்படுகிறது. இதில் கல்வி பயின்றவர்கள் தற்பொழுது ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., மருத்துவர் பொறியாளர் மற்றும் தொழிலதிபர்களாக உள்ளனர்.
முஸ்லிம்கள் அதிகமாக வாழும் மாவட்டங்களில் வேலூர் மாவட்டமும் ஒன்றாகும். குறிப்பாக உருது மொழியை தாய் மொழியாக கொண்ட முஸ்லிம்கள் அதிக அளவில் தங்களுடைய வசிக்கும் நகரம் வேலூர். அந்நகர மக்களுக்கு தேவையான கல்வியை அளிப்பதற்காக கடந்த 1906 ஆண்டு அப்பகுதி முஸ்லிம்களால் அவர்களுடைய சொந்த பணத்தின் மூலம் உருது வழி கல்வியில் ஓர் உயர்நிலை பள்ளிக்கூடம் துவக்கப்பட்டது. அப்பள்ளிக்கூடம் கடந்த 1978லில் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு, தற்பொழுது வேலூர் அரசு முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி என்று அழைக்கப்படுகிறது. இதில் கல்வி பயின்றவர்கள் தற்பொழுது ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., மருத்துவர் பொறியாளர் மற்றும் தொழிலதிபர்களாக உள்ளனர்.



இன்றைய காலகட்டத்தில் 1660 மாணவ, மாணவியர்களைக் கொண்ட பள்ளிக்கூடம் அவர்களுக்கு கல்வி அளிப்பதற்கு மொத்தம் 17 உருது வழி ஆசிரியர் பணியிடங்கள் உள்ளது. அதில் 10 பணியிடங்கள் பல்வேறு காரணங்களால் காலியாக்கப்பட்டு அரசு மற்றும் கல்வித்துறையின் அலட்சியத்தினாலும், மெத்தன போக்கினாலும் நிரப்படாமல் இருக்கிறது.

நிரப்படாமல் உள்ள பணியிடங்களில் கணித பாடத்திற்கென முதுகலை பட்டதாரி ஆசிரியர் சுமார் 12 ஆண்டுகளாக நியமிக்கப்படாமல் சிறுபான்மை மக்களின் அடிப்படை கல்வி உரிமையை பறிக்கும் செயலில் அதிகாரவர்கங்கள் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இவ்விஷயம் குறித்து தமிழக முதல்வர் அப்போதைய வேலூர் மாவட்ட எம்.பி.காதர் மொய்தீன், வேலூர் எம்.எல்.ஏ. ஞானசேகரன், மாவட்ட ஆட்சி தலைவர், பள்ளிக்கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோர்களுக்கு த.மு.மு.க. தமிழ்நாடு உருது வழி ஆசிரியர் கழகம் (மாநில அமைப்பு) மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமாக பலமுறை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புமாறு கோரிக்கைகள் வைக்கப்பட்டும், பள்ளியின் சார்பாக படிவம் 1.8 சமர்ப்பிப்பட்டும் அரசு முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாமல் இருப்பது மாணவ மாணவியர்களின் எதிர்காலத்தை கேள்வி குறியாக்கி உள்ளது.


இந்நிலையில் கடந்த 5.1.2010 அன்று நடைபெற்ற வேலூர் மாநகர த.மு.மு.க செயற்குழு கூட்டத்தில் வேலூர் அரசு முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி உருது ஆசிரியர் பணியிடங்களை உடனே நிரப்ப கோரி த.மு.மு.க தலைவர் M.H. ஜவாஹிருல்லாஹ் தலைமையில் பள்ளியின் முன்பு மறியல் போராட்டம் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது. போராட்டம் அறிவிக்கப்பட்ட நாள் முதலே காவல்துறை மறியல் போராட்டத்தை வாபஸ் பெறுமாறும் அல்லது ஆர்பாட்டமாக நடத்துமாறும் கோரியது இதற்கு பணியாத த.மு.மு.க திட்டமிட்டபடி மறியல் நடந்தே தீரும் என்பதை காவல்துறைக்கு எடுத்துரைத்தது. மே 9. 2009 த.மு.மு.க. நடத்திய வேலூர் கோட்டை முற்றுகை போராட்டத்தில் திணறிய வேலூர் காவல்துறை இப்போரட்டத்திற்கு முன்கூட்டியே பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகப்படுத்தியது.

முஸ்லிம் மேல்நிலைப்பள்ளிகூடம் முன்பு மறியலில் ஈடுபட அனுமதி மறுத்த காவல்துறை, மீறினால் கைது செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்து பாதுகாப்பு வளையத்தை மேலும் கடுமையாக்கியது,

த.மு.மு.க தலைவர் பேரா. M.H. ஜவாஹிருல்லாஹ் தலைமையில் த.மு.மு.க. மாநில துணைப்பொது செயலாளர் J.S. ரிஃபாயி ரஷாதி, மாநில துணை செயலாளர் தருமபுரி சாதிக்பாஷா, ம.ம.க. மாநில அமைப்பு செயலாளர் நாஸிர் உமரி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்ற மறியலில் த.மு.மு.க. தொண்டர்கள், மாணவ, மாணவியர்களின், பெற்றோர்கள் மற்றும் பொது மக்கள் ஆயிரக்கணக்கில் கலந்துக் கொண்டு தமிழக அரசின் முஸ்லிம விரோத போக்கை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.


மறியலின் இறுதிகட்டத்தில் எழுச்சியுரையாற்றிய த.மு.மு.க. தலைவர் பேரா. எம்.ஹெச், ஜவாஹிருல்லாஹ், சர்சார் கமிட்டி அறிக்கையை நடைமுறைப்படுவதில் அதிக அக்கரை கொண்டுள்ளதாக கூறும் தமிழக உடனே வேலூர் முஸ்லிம் உருது பள்ளிக்டத்தில் உள்ள காலியாக உள்ள 10 இடங்களை நிரப்ப வேண்டுமென்றும் தவறும் பட்சத்தில் தமிழகம் தழுவிய அளவில் போராட்டமும் சென்னையில் தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என்று கூறி கைதானார் அதனை தொடர்ந்து ஆயிரக்கணக்கானோர் கைதாயினர். கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Tuesday, February 2, 2010

கீழக்கரை தமுமுக சார்பில் உதவி வழங்கப் பட்டன.


கீழக்கரை தமுமுக சார்பில் ஒருவருக்கு சுறு தொளில் புரிய தொளில் உதவி வழங்கப் பட்டன.