Saturday, October 31, 2009

கல்பாக்கம் அணுமின் நிலையம் எதிரே ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனிதநேய மக்கள் கட்சியினர் கைது

கல்பாக்கம் அணுமின் நிலையம் மற்றும் அது சார்ந்த துறைகளில் சிறுபான்மையினருக்கும், 16 கி.மீ சுற்று வட்டார மண்ணின் மைந்தர்களுக்கும் உரிய அளவில் கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம் போன்றவற்றில் இடஒதுக்கீடு கேட்டு மனிதயே மக்கள் கட்சியின் சார்பில் இன்று காலை 11 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அணுமின் நிலைய வளாகத்தின் முக்கிய வாயில்கள் மூடப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு போராட்டத்திற்கும் காவல்துறை தடை விதித்தது.


இந்நிலையில் மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் பி. அப்துல் சமது தலைமையில் மனிதநேய மக்கள் கட்சியினர் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தடையை மீறி அங்கு கூடினர்.


தமுமுக தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், ம.ம.க பொதுச் செயலாளர் பி. அப்துல் சமது, மதிமுக தலைமைக் கழக பிரதிநிதி வந்திய வேந்தன், டாக்டர். புகழேந்தி, புரட்சி பாரதம் மாவட்டச் செயலாளர் சங்கர் உட்பட பங்கேற்ற அனைவரும் கைது செய்யப்பட்டு காவல்துறை வாகனங்களில் பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Thursday, October 29, 2009

கல்பாக்கத்தில் மனிதநேய மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்


கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் சிறுபான்மையினர் மற்றும் மண்ணின் மைந்தர்களுக்கு உரிய அளவில் வேலை வாய்ப்பு கேட்டு மமக கோரிக்கை ஆர்ப்பாட்டம்.

நாள்: 29.10.2009 வியாழன் காலை 11:00 மணிக்கு

இடம்: அணுவாற்றல் நகரின் பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு

Wednesday, October 28, 2009

மேலப்பாளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்


மேலப்பாளையத்தில் அனைத்து பகுதிகளுக்கும் சீராக குடிநீர் விநியோகம் செய்யக் கோரியும், 29வது வார்டு மற்றும் 33வது வார்டு பகுதி மக்களுக்கு இலவச கலர் டிவி, கேஸ் அடுப்பு வழங்காததை கண்டித்தும், மேலப்பாளையத்தில் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்படாமல் உள்ள ஆடறுப்பு மனையை உடனே திறக்க வலியுறுத்தியும், நெல்லை மாநகராட்சி நிர்வாகத்தையும், மாவட்ட நிர்வாகத்தையும் கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 25.10.2009 காலை 10 மணிக்கு மேலப்பாளையம் சந்தை முக்கில் வைத்து நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை தலைவர் கே.எஸ்.ரசூல் மைதீன் தலைமை தாங்கினார். நகர தலைவர் கே.எஸ்.காசீம் பிர்தௌசி, செயலாளர் இ.எம்.அப்துல் காதர், பொருளாளர் ஏ.காஜா, துணைத்தலைவர் கே.கே.அப்துல் அஜீஸ், துணைச் செயலாளர் ஏ.வாகித் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ஐ.உஸ்மான் கான் ஆர்ப்பாட்டத்தை துவங்கி வைத்தார். தலைமை கழக பேச்சாளர் புளியங்குடி செய்யது அலி சிறப்புரையாற்றினார். மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் எஸ்.மைதீன் சேட்கான், த.மு.மு.க.மாவட்ட தலைவர் ஏ.மைதீன் பாரூக் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். ஆர்ப்பாட்டத்தில் திரளான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.

Tuesday, October 27, 2009

கீழக்கரை-ராமநாதபுரம் ரோட்டில் விபத்து கலத்தில் த மு மு க




26/10/2009 திங்கள் மாலை சுமார் 8.00 மணியள கீழக்கரை-ராமநாதபுரம் செல்லும் மெயின் ரோட்டில் சுமோ மற்றும் ஆட்டோ நேருக்கு நேருக்கு மோதி விபத்து.. விவரம் ஆறித்த உடன் கீழக்கரை த மு மு க ஆம்புலன்ஸ் மற்றும் நிர்வாகிகள் இடத்துக்கு வீரைதன.

பொள்ளாச்சியில் 75வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு

பொள்ளாச்சியில் கடந்த அக்டோபர் 23 அன்று தமுமுகவின் 75வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தமுமுக தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அர்ப்பணித்து சிறப்புரையாற்றினார்.
ம.ம.க துணைப் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி. தமுமுக மற்றும் ம.ம.க மாவட்ட மற்றும் நகர நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு பொதுக்கூட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.

Monday, October 26, 2009

வட சென்னை மாவட்டம் ஆர்.கே. நகர் பகுதி தீ விபத்தில் பாதிக்கப்பட்டருக்கு உதவிகள்


வட சென்னை மாவட்டம் ஆர்.கே. நகர் பகுதி 3வது வட்டம் நேதாஜி நகர் கிளை சார்பாக தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 11 குடும்பத்தினருக்கு ரூ.27,000 மதிப்பிலான உதவிகள் வழங்கப் பட்டன. இதனை தமுமுக பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி வழங்கினார்.

கோட்டக்குப்பத்தில் தீயினால் பாதிக்கப் பட்டோருக்கு உதவி

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் ரஹ்மத் நகர் ஐயனார்கோயில்மேட்டில் கடந்த 4.10.2009 அன்று நடந்த தீ விபத்தில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி 16.10.2009 அன்று தமுமுக மற்றும் ம.ம.க.வின் சார்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தமுமுக நகர தலைவர் ஜே. சம்சுதீன் தலைமை தாங்கினார். மமக நகர செயலாளர் ஏ. தாஜுதீன் முன்னிலை வகித்தார். அமீர் அம்ஜா ராபீயாபீ, ஜெய்னுல் ஆபிதீன் சௌதாகனி மற்றும் மஸ்ஜிதே முத்தகீன் பள்ளி முத்தவல்லி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூபாய் 40,000 மதிப்பிலான பொருட்கள் வழங்கப்பட்டன. தமுமுக மற்றும் ம.ம.க. மாவட்ட மற்றும் நகர நிர்வாகிகள் ஏராளமானோர் இதில் கலந்துகொண்டனர்.

Saturday, October 24, 2009

ஓச்சிரா வழக்கு: அப்துன் நாஸர் மாதனி விடுதலை


1992ல் ஐ.எஸ்.எஸ். அமைப்பின் தலைவராக அப்துன் நாஸர் மாதனி இருந்த போது அவர் மீது காவல்துறை போட்ட ஒரு வழக்கில் தற்போது அவர் விடுதலை ஆகியுள்ளார்.


1992ல் உ.பி. மாநிலம் பைசாபாத்தில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் குண்டு வெடித்தது. இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 2, 1992ல் கேரளாவில் முழு அடைப்பிற்கு இஸ்லாமிக் சேவக் சங் (ஐ.எஸ்.எஸ்.) அமைப்பு அழைப்பு விடுத்திருந்தது. முழு அடைப்பின் போது தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து தடைப்பட்டது. அடைப்பின் போது ஏற்பட்ட கலவரத்தில் பல காவலர்கள் காயமடைந்தனர். முழு அடைப்பின் போது ஒச்சராவில் உள்ள பள்ளிவாசலுக்கு வந்த அப்துன் நாஸர் மாதனி தான் வன்முறையை துண்டினார் என்று அவர் மீது காவல்துறை வழக்கு பதிவுச் செய்தது. முழு அடைப்பின் போது காவல்துறை வாகனங்களுக்கும், அரசு பேரூந்துகளுக்கும் பலத்த சேதங்கள் ஏற்பட்டன என்றும் காவல்துறை கூட்டத்தை கலைக்க கண்ணீர் புகை குண்டுகளை கூட பயன்படுத்தவில்லை என்றும் வானத்தை நோக்கி மட்டும் சுட்;டதாகவும் காவல் தரப்பில் வாதிக்கப்பட்டது.


கொல்லம் கூடுதல் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது சரியான சாட்சியங்களை காவல்துறை சமர்பிக்கவில்லை என்றும் சாட்சிகளால் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை அடையாளம் காட்ட இயலவில்லை என்று கூறி அப்துன் நாசர் மாதனி உட்பட அனைவரையும் நீதிபதி இ.பைஜுவிடுதலைச் செய்தார். இவ்வழக்கில் இருந்து விடுதலை ஆனது குறித்து அப்துன் நாஸர் மாதனி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

மாலேகான் ஜாமிஆ மஸ்ஜித் இமாம் அபார வெற்றி மாலேகான் மத்திய தொகுதியில் காங்கிரஸ் படுதோல்வி


மராட்டிய மாநில சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் மாலேகான் மத்திய சட்டமன்றத் தொகுதியில் மாலேகான் ஜாமிஆ பள்ளிவாசலின் இமாம் மவ்லவி ஹாபிஸ் முப்தி முஹம்மது இஸ்மாயில் காங்கரஸ் வேட்பாளரை தோற்கடித்து அபார வெற்றிப் பெற்றுள்ளார். மராட்டிய சட்டமன்றத்திற்குள் நுழையும் முதல் மவ்லவி என்ற சிறப்பையும் இவர் பெறுகிறார்.
வட மராட்டியத்தில் நாசிக் அருகில் உள்ள நெசவு;நகரம் மாலேகான் ஆகும். இந்த நகரத்தில் 2006 மற்றும் 2008ல் நடைபெற்ற குண்டுவெடிப்புகள் நாட்டையே உலுக்கின. முதலில் 2006ல் இந்நகரில் உள்ள பள்ளிவாசல் வளாகத்தில் செப்டம்பர் 8 அன்று ஜும்ஆ தினத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 38 பேர் பலியானார்கள். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மீண்டும் இதே நகரில் ஈகைத் திருநாளுக்கு சில தினங்களுக்கு முன்பு செப்டம்பர் 28 அன்று குண்டு வெடித்து ஐந்து முஸ்லிம்கள் பலியானார்கள்.

2006ல் நடைபெற்ற குண்டுவெடிப்புகளுக்காக அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் கைதுச் செய்யப்பட்டார்கள். காவல்துறையின் இந்த போக்கு மாலேகான் முஸ்லிம்களை கடும் கோபத்திற்கு உள்ளாக்கியது. ஆளும் காங்கிரஸ் கட்சியின் மீது அவர்கள் கடும் கோபம் கொண்டார்கள். இந்த கோபத்தின் காரணமாக 2007ல் நடைபெற்ற மாலேகான் மாநகராட்சி தேர்தலில் முப்தி முஹம்மது இஸ்மாயில் தலைமையிலான ஜன் சூரிய சக்தி கட்சி காங்கிரசை தோற்கடித்து பெரும் வெற்றிப் பெற்றது. 2008ல் நடைபெற்ற குண்டுவெடிப்பிற்கு காரணம் பிரகய சிங் தாகூர், கர்னல் புரோகித் போன்ற சங் பயங்கரவாதிகள் தான் என்று மறைந்த ஹேமந்த் கர்கரே தலைமையிலான பயங்கரவாத எதிர்ப்பு படை கண்டுபிடித்திருந்தாலும் அந்த விசாரணை தொடர்ந்து சரிவர நடைபெறவில்லை என்ற கோபம் மாலேகான் முஸ்லிம்களுக்கு இருந்து வந்தது. இரண்டாவது குண்டுவெடிப்பிற்காக கைதுச் செய்யப்பட்ட பயங்கரவாதிகள் மீது விதிக்கப்பட்ட மோகா என்னும் தடுப்புச் சட்டமும் நீதிமன்றத்தில் நீக்கப்பட்டது ஆளும் காங்கிரஸ் மீது இன்னும் கோபத்தை மாலேகான் மக்களுக்கு ஏற்படுத்தியது.

மராட்டியத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஆளும் காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி பெரும் வெற்றிப் பெற்று மூன்றாம் முறையாக ஆட்சியை பிடித்தப் போதினும் மாலேகான் மத்திய தொகுதியில் அந்த கூட்டணி படுதோல்வி அடைந்தது. மாலேகான் மத்திய தொகுதியில் 2,38,684 வாக்களார்கள் உள்ளனர். இவர்களில் 90 சதவிகிதத்தினர் முஸ்லிம்கள் ஆவர். மராட்டியத்தில் மிக அதிக எண்ணிக்கையில் முஸ்லிம்கள் வசிக்கும் தொகுதியாக மாலேகான் அமைந்துள்ளது.

அக்டோபர் 13 அன்று மாலேகான் தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் 63.8 சதவிகிதம் வாக்குகள் (1,51,269) பதிவாகின. இதில் ஏறத்தாழ பாதிக்கு சற்று குறைவான வாக்குகளை (71,157) முப்தி முஹம்மது இஸ்மாயில் ; பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஷேக் ரஷீத் 53,238 வாக்குகளைப் பெற்றார். 17,919 வாக்குகள் வித்தியாசத்தில் முப்தி இஸ்மாயில் வெற்றிப் பெற்றார். தோல்வி அடைந்த காங்கிரஸ் வேட்பாளர் ஷேக் ரஷீத் 1999 முதல் இத்தொகுதியில் வெற்றி பெற்று வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாலேகான் தொகுதியில் காங்கிரசுக்கு கிடைத்த தோல்வி அக்கட்சிக்கு ஒரு நல்ல பாடமாகும். சிறுபான்மை மக்களின் உள்ளக்குமுறல்களுக்கு செவி சாய்க்காவிட்டால் அக்கட்சிக்கு என்ன நேரிடும் என்பதற்கு இது ஒரு எடுத்துக் காட்டாகும். மாலேகான் தொகுதி முஸ்லிம் வாக்காளர்களும் தமது நலனுக்காக பாடுபடும் சமுதாய கட்சியின் வேட்பாளரை ஒத்துமொத்தமாக ஆதரித்து வெற்றிப் பெற வைத்துள்ளார்கள். நாட்டில் வாழும் பிற முஸ்லிம்களுக்கு இது நல்ல முன்னுதாரமாக விளங்குகின்றது.

Friday, October 23, 2009

75 வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா

பொள்ளாச்சி நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்
சார்பாக

75 வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா

மற்றும்
மாபெரும் பொதுக்கூட்டம்
இறைவன் நாடினால்

நாள்: 23 - 10 -2009 வெள்ளிக்கிழமை

மாலை 5 . 00 மணி
இடம் : திருவள்ளுவர் திடல்
பொள்ளாச்சி

தலைமை
கபூர் அவர்கள்நகர தலைவர். த. மு் மு் க.
பொள்ளாச்சி

ஆம்புலன்ஸ் அர்பணித்து சிறப்புரை

பேரா. டாக்டர். எம்.செ். ஜவாஹிருல்லாஹ் அவர்கள்
மாநிலத்தலைவர் த. மு. மு. க

எழுச்சியுரை
சகோ. எம். தமீமுன் அன்சாரி அவர்கள்
மாநில துனைப்பொதுச்செயலாளர். ம. ம. க


சகோ. கோவை இ. உமர் அவர்கள்மாநில செயலாளர்.
த. மு. மு. க

சிறப்பு அழைப்பாளர்கள்த. மு. மு. க மாவட்ட. மாநகர. நகர. நிர்வாகிகள் அனைத்து அணி நிர்வாகிகள்
மாவட்ட. மாநகர. நகர. நிர்வாகிகள் மனித நேய மக்கள் கட்சி கோவை


நன்றியுரை் இ ரஃபில்தீன் அவர்கள் செயலாளர். பொள்ளாச்சி. த. மு. மு. க

Wednesday, October 21, 2009

வாலிகண்டபுரம்: அடக்கஸ்தலத்தில் புதைக்க உரிமை மறுப்பு!தமுமுக முயற்சியால் முறியடிப்பு!!

பெரம்பலூருக்கு அருகே சென்னை செல்லும் பைபாஸ் சாலையில் அமைந்துள்ளது வாலிகண்டபுரம் கிராமம். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இக்கிராமத்தில் 2 பள்ளிவாசல்கள் உள்ளன. மேலும் 2 ஏக்கர் 70 சென்ட் பரப்பளவுடைய முஸ்லிம்களின் அடக்கஸ்தலம் ஒன்றும் உள்ளது. ஆனால் முஸ்லிம்களின் கபரஸ்தான் நிலத்தை ஆக்கிரமித்த சிலர் கபரஸ்தான் நிலத்துக்கு உரிமை கோரி நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தனர்.

1981ல் முன்சீப் கோர்ட், 1987 மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், 1991ல் கூடுதல் அமர்வு நீதிமன்றம் என அனைத்து நீதிமன்றங்களும், 'நிலம் முஸ்லிம்களுக்கே சொந்தம்' என தீர்ப்பளித்தன. எனினும் அதிகார வர்க்கத்தை கையில் போட்டுக் கொண்ட ஆக்கிரமிப்பாளர்கள் முஸ்லிம்களின் உடலை அடக்கம் செய்ய அனுமதி மறுத்து வந்தனர்.

இந்நிலையில் 2009ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் முஸ்லிம்கள் வழக்கு தொடர்ந்து கபரஸ்தானில் அடக்கம் செய்ய அனுமதி கோரினர். உயர்நீதிமன்றமும் அனுமதி அளித்தது. எனினும் 2 முறை ஜனாஸாக்களை அடக்கம் செய்ய முயன்றபோதும் ஆர்.டி.ஓ. மற்றும் காவல்துறையினரைத் தூண்டிவிட்டு அடக்கம் செய்யவிடாமல் தடுத்தனர் ஆக்கிரமிப்பாளர்கள்.

அதிகாரிகளும் 'பீஸ் மீட்டிங்' என்ற பெயரில் முஸ்லிம்களின் உரிமையைத் தொடர்ந்து மறுத்து வந்தனர். இந்நிலையில் கடந்த 11.10.09 அன்று இறந்த ஒருவரது உடலை அடக்கம் செய்ய சென்றபோது ஆக்கிரமிப்பு சக்திகளின் அடிவருடிகளான ஆர்.டி.ஓ. மற்றும் காவல்துறையினர் அங்கு வந்து முஸ்லிம்களை அடக்கம் செய்யவிடாமல் தடுத்தனர். இதனால் ஜமாத்தினர் தமுமுக மாவட்டத்தலைவர் மீரான் மைதீனுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து தமுமுக நிர்வாகிகள் அங்கு விரைந்து வந்தனர். எனினும் வெளியூர்காரர்கள் என்று தமுமுக நிர்வாகிகளுக்கு பீஸ் மீட்டிங்கில் அனுமதி மறுக்கப்பட்டது.

மேலும் இந்த ஒரு தடவை இங்கு அடக்கம் செய்யாதீர்கள், அடுத்த தடவை நாங்கள் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்கிறோம் என்று உயர்நீதிமன்ற ஆணையை மதிக்காமல் சமரசம் பேசினர் அதிகாரிகள். எனினும் தமுமுகவினர் உஷார்படுத்தியதால் ஜமாத்தினர் இந்த சூழ்ச்சிக்கு அடிபணியவில்லை.

மாவட்ட நிர்வாகிகள் தமுமுக பொதுச் செயலாளர் ஹைதர் அலி அவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். பொதுச் செயலாளர், தொலைபேசி மூலம் ஆர்.டி.ஓ.விடம் பேசினார். எனினும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு உதவுவதிலேயே உறுதியாக நின்றனர் அதிகாரிகள். இதையடுத்து பொதுச் செயலாளரின் உத்தரவின் பேரில் பெரம்பலூர் மாவட்டம் முழுவதிலும் இருந்து தமுமுகவினர் குவிய ஆரம்பித்தனர்.

இப்பிரச்சினைக்கு இறுதி முடிவைக் காணவும், முஸ்லிம்களின் உரிமையினை மீட்டெடுக்கவும் தமுமுக தலைமை முடிவெடுத்தது. திருச்சி, கடலூர், விழுப்புரம் மாவட்ட தமுமுகவினருக்கும் தகவல் அளிக்கப்பட்டு அவர்களும் பெரம்பலூர் நோக்கி கிளம்ப ஆயத்தமாயினர். பொதுச் செயலாளரும் நேரடியாக சம்பவ இடத்திற்கு வருகிறேன் என்று சென்னையிலிருந்து புறப்பட, செய்தி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியருக்கு சென்றது. அவர் உடனடியாக பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி. இல்லாததால், அரியலூர் மாவட்ட எஸ்.பி. நஜ்முல் ஹுதாவை, பிரச்சினையை சமாளிக்கக் கோரினார். போலீஸ் படையும் குவிக்கப்பட்டது.

தமுமுக மாவட்டத் தலைவர் மீரான் மைதீன், மாவட்டச் செயலாளர் தாஹிர் பாஷா, ம.ம.க. மாவட்ட செயலாளர் சுல்தான் மைதீன் தலைமையில் தமுமுக மாவட்ட, நகர, கிளை நிர்வாகிகள் சம்பவ இடத்தில் திரண்டிருந்தனர். பல்வேறு சமுதாய அமைப்பின் நிர்வாகிகளும் வந்திருந்தனர்.

எனினும் முஸ்லிம் தரப்பு ஆவணங்களையும், உயர்நீதிமன்றத்தின் ஆணையையும் பார்த்த எஸ்.பி. நஜ்முல் ஹுதா, முஸ்லிம்கள் அந்த இடத்திலேயே அடக்கம் செய்து கொள்ள அனுமதி அளித்தார். இதனால் ஜனாஸா, முஸ்லிம்களின் கபரஸ்தானிலேயே அடக்கம் செய்யப்பட்டது.


முஸ்லிம்களின் ஒற்றுமையையும், தமுமுகவினரின் போராட்டக் குணத்தை யும் பார்த்த அதிகாரிகளும், ஆக்கிரமிப்பு சக்திகளும் திகைத்து நின்றனர்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு தங்களுக்குச் சொந்தமான நிலத்தில் அடக்கம் செய்த மகிழ்ச்சியில் ஜமாத்தினர் தமுமுகவினருக்கும், தமுமுக தலைமைக்கும் நன்றி கூறினர். மேலும் எதிர்வர இருக்கும் மாவட்ட ஆட்சியருடனான சந்திப்பின் போதும், பிரச்சினைகளின் போதும் அனைத்து சமுதாய அமைப்புகளும் ஒன்றிணைந்து பிரச்சினைகளை எதிர்கொள்வது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இன்ஷூரன்ஸில் இப்படியும் ஒரு மோசடி

அலர்ட் ஆன ஆக்ஷன் செல்... அமுக்கப்பட்ட போலி ஏஜென்ட்கள்!

''தனியார் இன்ஷூரன்ஸ் கம்பெனிகளில் பிரீமியம் செலுத்த வேண்டிய நபர்களிடம் இருந்து பிரீமியம் தொகையை வசூலித்து, அதற்குப் போலியாக ரசீது கொடுத்து ஏமாற்றுகிறது ஒரு கும்பல். இவர்களுக்கும் அந்த தனியார் இன்ஷூரன்ஸ் கம்பெனிகளுக்கும் உண்மையில் எந்த விதமான தொடர்பும் கிடையாது' - நமது ஆக்ஷன் செல்லுக்கு அக்கறையுடன் இப்படி தெரிவித்திருந்தவர் நெல்லை மாநகர த.மு.மு.க. தலைவர் உஸ்மான்கான்.

விசாரணையில் இறங்கினோம். நமது விசாரணையில் கிடைத்த தகவல்களை நெல்லை மாவட்ட காவல்துறையிடமும் பகிர்ந்து கொண்டோம். அதைத் தொடர்ந்து அந்த நூதன மோசடி கும்பலை கைது செய்திருக்கிறது நெல்லை மாவட்ட காவல் துறை!

நெல்லை டவுன் பகுதியைச் சேர்ந்த சிவகுமார் என்பவர் டுபாக்கூர் ஏஜென்ட் ஒருவரிடம், தான் கட்டவேண்டிய பிரீமியம் தொகை பத்தாயிரத்தைக் கொடுத்து அதற்கான ரசீதும் வாங்கியிருந்தார். அவரிடம் இருந்த ரசீதை சம்பந்தப்பட்ட தனியார் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் நாம் செக் பண்ணியபோது, அந்தத் தொகை அங்கு வரவு வைக்கப்படவே இல்லை! உடனே நெல்லை சரக டி.ஐ.ஜி-யான கண்ணப்பனிடம் இதைக் கொண்டு சென்றோம். அதிர்ந்துபோன டி.ஐ.ஜி., உடனடியாக நாங்குநேரி டி.எஸ்.பி-யான அரவிந்த் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணையை துரிதப்படுத்தினார். விளைவு, மோசடி கும்பலைச் சேர்ந்த நான்கு பேர் பிடிபட்டிருக்கிறார்கள். அவர்களிடம் விசாரித்ததில், இந்த மோசடியில் இரண்டு பிரபல தனியார் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் ஊழியர்கள் சிலருக்கும் தொடர்பு இருப்பது அம்பலமானதால், அவர்களையும் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

டி.ஐ.ஜி-யான கண்ணப்பன் நம்மிடம் பேசினார். ''இன்ஷூரன்ஸ் மோசடி குறித்து ஜூ.வி. தகவல் கொடுத்ததுமே தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினோம். அப்போது மாரிமுத்து என்பவர் சிக்கினார். அவரிடம் விசாரிச்சப்போ, 'கலெக்ஷன் ஏஜென்ட் தேவை'னு பத்திரிகையில் வந்த விளம்பரத்தைப் பார்த்து ஒரு மாசத்துக்கு முன்பு இந்த வேலையில் சேர்ந்திருப்பதாகச் சொன்னார். இன்ஷூரன்ஸ் பிரீமியம் வசூல் செய்வது மட்டுமே இவருக்கு வேலை. இவருக்கு தனியார் இன்ஷூரன்ஸ் கம்பெனி ஒன்றின் பெயரில் போலியாக அடையாள அட்டையையும் கொடுத்து நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டம் முழுவதும் இவரை வெச்சு லட்சக்கணக்கில் வசூல் செஞ்சிருக்காங்க. இவரும், 'மோசடி கும்பலுக்காக வசூல் செஞ்சுகுடுக்கிறோம்' என்ற விவரமே தெரியாமல் சின்ஸியராக வேலை பார்த்திருக்கிறார். அப்பாவி மக்களை ஏமாற்றும் இந்த கும்பல் தமிழகம் முழுவதும் பலபேரை வெச்சு மோசடி வசூலில் ஈடுபட்டிருக்கு...'' என்றவர்,

''குறிப்பிட்ட ஒரு தனியார் இன்ஷூரன்ஸ் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்த மேலதிகாரிகள் சிலர் தனிப்பட்ட காரணங்களுக்காக கூண்டோடு விலகியிருக்காங்க. அந்த தனியார் கம்பெனியை பழிவாங்கணும்னு நினைச்ச அவங்க, ஏற்கெனவே அந்த நிறுவனத்தில் வேலை பார்த்தபோது அங்கு இன்ஷூரன்ஸ் கட்டுறவங்களோட பெயர், முகவரியை சுலபமா எடுத்திருக்காங்க. பிறகு தனியாக ஏஜென்ட்களை நியமிச்சு அந்த நிறுவனத்தின் பாலிசிதாரர்களை தொடர்புகொண்டு பணத்தை கலெக்ட் பண்ணியிருக்காங்க. இப்படி கிடைச்ச பல லட்ச ரூபாயை தங்களுக்குள் பங்கு போட்டிருக்காங்க.

இந்த மோசடி வெளியில் தெரிஞ்சாகூட அவங்க மேல நடவடிக்கை எடுக்க முடியாதபடி புத்திசாலித் தனமா நடந்திருக்காங்க. அதாவது, கலெக்ஷன் வேலைக்கு ஆள் தேவைன்னு புதுச்சேரியில் பத்திரிகை விளம்பரம் குடுத்துருக்காங்க. அதோடு, வேலை தேடி வந்தவர்களிடம் போட்டோ, ரேஷன் கார்டு ஜெராக்ஸ்களை வாங்கி அதை வெச்சி, சிம் கார்டுகளையும் வாங்கியிருக்காங்க. நெல்லை, மதுரை, திருச்சி, சேலம், ஈரோடு, கும்பகோணம்னு இவங்களோட எல்லை விரிஞ்சு கிடக்கு. பஜாஜ் அலையன்ஸ் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ. புருடென்ஷியல் ஆகிய நிறுவனங்களில் வேலை பார்க்கும் சுமார் 20 பேர் இந்த கும்பலுக்கு உடந்தையா இருந்திருக்காங்க. முதல் கட்டமா நெல்லையில் 'இண்டியா இன்ஃபோ லைன்' என்ற பெயரில் ஏஜென்ஸி நடத்திவந்த ஜெபராஜ், ஆஃபின் அந்தோணி ராஜ், ஆனந்த்குமார், சதீஷ்குமார் ஆகியோரை கைது செஞ்சிருக்கோம். இந்த மோசடியில் தொடர்புடைய முக்கியப் புள்ளி ஒருத்தன் மும்பையில் இருக்கிறதா தகவல் கிடைச்சிருக்கு. அவனையும், தமிழகம் முழுவதும் இவர்களின் நெட்வொர்க்கில் இருக்கும் கும்பலையும் பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்!'' என்றார்.
கும்பகோணம், கன்னியாகுமரி ஆகிய நகரங்களில் இதேபோன்ற மோசடி நடந்திருப்பது கொஞ்சகாலத்துக்கு முன்பே போலீஸுக்குத் தெரிய வந்திருக்கிறது. ஆனால், மோசடி கும்பலை கண்டுபிடிக்க முடியாததால், இவர்களை நம்பி வேலைக்குச் சேர்ந்த அப்பாவிகள் மீது மட்டும் வழக்குப் போட்டு முடித்திருக்கிறார்கள். இதனால், மோசடிப் பேர்வழிகளுக்குத் துணிச்சல் அதிகரித்து, தொடர்ந்து பல நகரங்களிலும் தங்கள் கைவரிசையைக் காட்டியிருக்கிறார்கள்!

இந்த மோசடி குறித்து பஜாஜ் அலையன்ஸ் நிறுவனத்தின் அதிகாரிகள் சிலரிடம் பேசியபோது, ''நெல்லையில் யாரோ சிலர், போலியான ரசீதுகளைக் கொடுத்து எங்களது வாடிக் கையாளர்கள் சிலரிடம் இன்ஷூரன்ஸ் பிரீமியம் வசூலிச்சிருக்காங்க. அந்தப் பணம் எங்களுக்கு வந்து சேரவில்லை. கடந்த ரெண்டு மாசமா நெல்லை பகுதியில் இதேபோல் நிறைய கம்ப்ளெய்ன்ட்ஸ் வந்துச்சு. எங்களது நிறுவனத்தைத் தவிர வேறு யாரிடம் பணம் குடுத்திருந்தாலும் நாங்கள் எதுவும் செய்ய முடியாது என்பதை அவங்ககிட்ட விளக்கிச் சொல்லி அனுப்பி வெச்சோம். அதன்பிறகும் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து யாரிடமாவது பணம் கொடுத்து ஏமாந்தால், நாங்கள் என்ன செய்ய முடியும்?'' என்று சொன்னார்கள்.

''சம்பந்தப்பட்ட இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்கு, தங்களது வாடிக்கையாளர்களை இப்படியொரு கும்பல் மோசடி செய்வது முன்பே தெரிந்திருந்திருக்கிறது. அப்படி இருந்தும் குறைந்தபட்சம், போலீஸில் புகார் செய்ய வேண்டும் என்ற அடிப்படை உணர்வுகூட இந்த நிறுவனங்களுக்கு இல்லாமல் போனது. இது ஒரு செய்தியாக வெளியில் வந்தால் தங்கள் நிறுவனத்தின் பெயர் பாதிக்குமே என்று சுயநலமாக நினைக்கிறார்களே தவிர... அப்பாவிகள் ஏமாந்துபோகாமல் தடுக்க வேண்டும் என்ற எண்ணம் இவர்களுக்கு இல்லையே...'' என்று போலீஸுக்

Monday, October 19, 2009

தமிழ்நாடு முஸ்லி­ம் முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் என்ஜினீயர் அப்துஸ் ஸமது காலமானார்.




தமிழ்நாடு முஸ்­லிம் முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் பொதுச்செயலாளர் என்ஜினீயர் அப்துஸ் ஸமது சாஹிப் அவர்கள் சென்ற சனிக்கிழமை (அக்டோபர் 17) அன்று பிற்பகல் சென்னையில் காலமானார்கள். அவருக்கு வயது 78 ஆகும்.


தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் பிறந்த ஹெச். அப்துஸ் ஸமது அவர்கள் ஒரு பொறியாளர் ஆவார். பொறியியல் துறையில் முதுகலை பட்டம் பெற்ற அவர் பொறியியல் கல்லுரிகளில் பேராசிரியராகவும், முதல்வராகவும் பணியாற்றியுள்ளார்.

தமிழ்நாடு முஸ்­லிம் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர்களில் ஒருவரான என்ஜினீயர் அப்துஸ் ஸமது சாஹிப் அவர்கள் அமைப்பின் முதல் பொதுச் செயலாளராக ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் துடிப்புடன் செயலாற்றினார். பின்னர் உடல்நலக் குறைவின் காரணமாக அப்பதவியில் இருந்து விலகினார். சமுதாய மற்றும் மார்க்கப்பணியில் அதிக நாட்டம் உடையவராக விளங்கிய இஞ்சினியர் அப்துஸ் ஸமது அவர்கள் தமது கடைசி மூச்சு வரை அப்பணிகளை ஆற்றிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் பல மார்க்க நூல்களை எழுதியும், மொழிபெயர்த்தும் உள்ளார். இந்தியன் இஸ்லாமிக் மிஷனின் அறங்காவலர்களில் ஒருவராகவும் அவர் விளங்கினார்.

அவரது மரணச் செய்தி அறிந்த உடன் சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு தமிழ்நாடு முஸ்­லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர். எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் பொதுச்செயலாளர் எஸ். ஹைதர் அ­லி, பொருளாளர் ஒ.யூ.ரஹ்மதுல்லாஹ், துணைப் பொதுச்செயலாளர ஜே.எஸ். ரிஃபாயி, மாநிலச் செயலாளர்கள் பி.எஸ். ஹமீது மற்றும் ஜிப்ரி காசிம் மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் ப. அப்துஸ் ஸமது சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

மறுநாள் அக்டோபர் 18 அன்று காலை சென்னை அமைந்தக்கரை பள்ளிவாச­ல் ஜனாசா தொழுகை நடைபெற்று பிறகு அங்குள்ள அடக்கத்தலத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது ஜனாசா தொழுகையில் தமிழ்நாடு முஸ்­லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் உட்பட ஏராளமான மக்கள் பங்குக் கொண்டார்கள்.

இறைவன் அன்னாருக்கு மறுமையின் நற்பேறுகளை அளப்பரிய அளவில் வழங்க பிராரத்தனைச் செய்வோமாக.

Sunday, October 18, 2009

கோவா குண்டு வெடிப்பில் பிரக்யாசிங் தாகூரின் அமைப்புக்கு தொடர்பு


நேற்று கோவா மாநிலத்தின் மர்கோவா மார்க்கெட் அருகே மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்தது. அதில் இருவர் படுகாயம் அடைந்தனர்.

அவர்கள் கோவா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களிருவரும் கடுமையான எலும்பு முறிவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வெடிகுண்டு சம்பவம் தொடர்பாக நான்கு பேரை கோவா காவல்துறை கைது செய்துள்ளது. அவர்கள் சனாதன் சன்ஸ்தா என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சனாதன் சன்ஸ்தா என்ற அமைப்பு இந்து தீவிரவாத அமைப்பு என்பதும் முஸ்லிம்களை குறிவைத்து நிகழ்த்தப்பட்ட மாலேகான் குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் பெண்சாமியார் பிரக்யாசிங் தாகூர் இந்த அமைப்பைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கோவா குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட மோட்டார் பைக் சனாதன் சன்ஸ்தா என்ற அமைப்பைச் சேர்ந்தவருக்கு சொந்தமானது என்பதை காவல்துறை கண்டுபிடித்துள்ளது.

இந்த குண்டுவெடிப்பு சிறுபான்மை கிருத்தவர்கள் அதிகம் வசிக்கும் கோவாவில் நிகழ்த்தப்பட்டுள்ளதால் கிருத்தவர்களை குறிவைத்து நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுக்கிறது.

பல குண்டு வெடிப்புகளுக்கு காரணமாக இருக்கும் சனாதன் சன்ஸ்தா என்ற இந்து தீவிரவாத அமைப்பு உடனடியாக தடைசெய்யப்பட வேண்டும், காங்கிரஸ் அரசு செய்யுமா? அல்லது வழக்கம் போல அவர்களுக்கு சாமரம் வீசுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

Friday, October 16, 2009

தலைமை நிர்வாகக்குழு அறிவிப்பு

1) கன்னியாகுமரி மாவட்டத் தலைவராக செயல்பட்டு வந்த எஸ்.காதர்மைதீனும், தலைமைக் கழக பேச்சாளராக இருந்த எம்.ஏ. செய்யது (கோவை), புதிய மாநிலத் துணைச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

2) கழக நிகழ்ச்சிகளுக்கு பேச்சாளர்களின் தேதி கொடுக்கும் பொறுப்பை மாநிலச் செயலாளர் பி.எஸ்.ஹமீது (செல் எண்: 9444156180) கவனிப்பார். கழக நிகழ்ச்சிகளுக்கு தேதி கேட்போர் மாவட்ட நிர்வாகம் மூலமே பி.எஸ்.ஹமீதை அணுக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

3) மாவட்டங்களை கண்காணிக்கும் பொறுப்பை கீழ்கண்டவாறு பிரிக்கப்பட்டுள்ளது.


மாநில செயலாளர்கள் பொறுப்பு மாவட்டங்கள்

1) இ,உமர் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு

2) ஏ.எஸ்.எம்.ஜுனைத் திருவண்ணாமலை, விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர்

3) பேரா.ஜெ.ஹாஜா கனி திருவாரூர், தஞ்சை (வடக்கு), தஞ்சை (தெற்கு), நாகை (தெற்கு)

4) பி.எஸ்.ஹமீது வடசென்னை, ராம்நாட்(கிழக்கு), ராம்நாட்(மேற்கு), சிவகங்கை


மாநில துணைச் செயலாளர்கள் பொறுப்பு மாவட்டங்கள்

5) ஏ.ஸாதிக் அ­ திருச்சி, கரூர், புதுக்கோட்டை, தர்மபுரி

6) வை.ஸாதிக் பாஷா வேலூர், கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல்

7) பி.எல்.எம்.யாஸின் தென்சென்னை, காஞ்சி, திருவள்ளூர்

8) எஸ்.எம். ஜின்னா பாண்டி, காரைக்கால், நாகை (வடக்கு), கடலூர்

9) எஸ்.காதர் மைதீன் கன்னியாகுமரி, திருநெல்வே­, தூத்துக்குடி, விருதுநகர்,

10) எம்.ஏ. செய்யது (கோவை) மதுரை, தேனி, திண்டுக்கல்

Thursday, October 15, 2009

பிரசவத்திற்காக கோசலை படுத்திருந்த இடம் தான் அயோத்தி ராமஜென்ம பூமியா ? கமல்ஹாசன் கேள்வி ...!



ஆசிரியர் குழுவினருடன் கமல்

'உன்னைப் போல் ஒருவன்' திரைப்படம் முஸ்லிம் சமுதாயத்தின் மீது கருத்தியல் யுத்தம் தொடுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக 'மக்கள் உரிமை'' சார்பில் நடிகர் கமலஹாசனை சந்தித்து இந்த படம் பற்றிய கண்டனத்தை தெரிவிக்க நாடினோம்.

இதற்காக கமல்ஹாசனுக்கு நெருக்கமானவரான திரைப்பட இயக்குநர் அமீரிடம் நமது கண்டனத்தைக் கூறி கமல்ஹாசனிடம் தெரிவிக்கக் கூறினோம். அதற்கவர் கமல்ஹாசன் இந்துத்வா சிந்தனை கொண்டவரில்லை. நீங்களே அவரை சந்தித்து விவாதியுங்கள் என்று கூறி கமல்ஹாசனுடன் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார் 09.10.2009 அன்று திரைப்பட விருது நிகழ்ச்சி, முதலமைச்சருடன் சந்திப்பு, மாலை அமெரிக்க பயணம், எனப் பல்வேறு நிகழ்ச்சிகள் இருந்த நிலையிலும், நமக்கு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஒதுக்கித்தந்தார் கமல். வழக்குரைஞர் ஜெய்னுல் ஆபிதீன் மற்றும் ஜி.அத்தேஷுடன் 'முஸ்லிம் சமுதாயத்தின் மீதான ஊடக வன்முறை, உன்னைப் போல் ஒருவன் படம் தந்துள்ள பாதிப்பு'' ஆகியவை குறித்து விரிவாக உரையாற்றினோம். அந்த உரையாடலின் சில பகுதிகள்...

கேள்வி: உள்நாட்டு அளவிலும், உலகளாவிய அளவிலும் முஸ்லிம்களை தீவிரவாதிகளாகவும், பயங்கரவாதிகளாக வும், அமைதியைக் குலைப்பவர்களாகவும் சித்தரிக்கும் மதவாத செயல்கள் முழுவீச் சில் நடந்து வருகின்றன. திரைப்படத் துறையில் ஒரு மேதையாகவும், நியாய வானாகவும் அறியப்படுகின்ற நீங்கள் இந்த அநீதிக்குத்துணை போகலாமா?

கமல் : உன்னைப்போல் ஒருவன் படத்தின் மூலம் முஸ்லிம்களை கொச்சைப் படுத்துவதோ, பயங்கரவாதத்தோடு அவர்களை மட்டும் சம்பந்தப்படுத்துவதோ என் உள்நோக்கம் அல்ல. நான் யாருக் கும் எதிரானவன் அல்ல. குறிப்பாக முஸ்லிம்களுக்கு நான் எதிரி அல்ல என்பதை என்னோடு பழகியவர்கள் அறிவார்கள்.

''வெட்னஸ் டே'' என்ற வெற்றிப்படத்தை தமிழில் தயாரித்தால் பெரும் வெற்றிபெறும் என்று என்னை அணுகினார்கள்.

வெட்னஸ்டே படத்தின் கதாநாயகன் நஸ்ரூதீன் முஸ்லிம் என்பதாலும், ஆரிஃப் என்ற ஒரு நல்ல முஸ்லிம் அதிகாரி காட்டப்படுவதாலும், இந்திப்பட உலகில் இப்படம் முஸ்லிம்களுக்கு எதிரானதாக பார்க்கப்படவில்லை.

நான், ஆரிஃப் என்ற பாத்திரத்தை நல்லவராகக் காட்டுவது மட்டும் போதாது என்று மேலும் பல மாற்றங்களைச் செய்தேன். அதற்குப் பிறகும் கூட இது முஸ்லிம்களைப் பாதிக்கும் வகையில் இருப்பதாகக் கூறுவது ஆச்சர்யம்தான்.

நான் 'ஹேராம்' படம் எடுத்தபோது முஸ்லிம்களின் தரப்பைக் கூறுவதற்கு ஏகப்பட்ட இடங்களைத் திட்டமிட்டு உருவாக்கினேன். திரைப்பட வர்த்தகர்கள் ஹேராமில் எத்தனைப் பாட்டு, எத்தனை சண்டை? என்று கேட்டபோது, காந்தியை இந்துத்துவ தீவிரவாதி சுட்டுக்கொல்வது தான் உச்சக்கட்ட சண்டை என்றேன்.

'ஹேராம்' முஸ்லிம்களுக்கு எதிரானபடம் என்றார்கள் சிலர். ஆனால் இந்துத் தீவிரவாதத்தை எடுத்துக்காட்டிய படம். மறக்கடிக்கப்பட்ட மாபெரும் போராளியான யூசுப்கானின் வரலாற்றை 'மருதநாயகம்' என்ற பெயரில் படமாக எடுக்கத் துணிந்தவனும் நான்தான். முஸ்லிம்களைக் கொச்சைப்படுத்துவது என் நோக்கமல்ல.

கேள்வி : நீங்கள் முஸ்லிம்களுக்கு இணக்கமானவர்தான். ஆனால் உங்கள் படம் காயப்படுத்தும் வகையில் தானே அமைந்துள்ளது. உதாரணத்திற்கு கோவை குண்டு வெடிப்பு சம்பவம் 1998ல் நடந்தது. குஜராத் கலவரம் 2002ல் நடந்தது. குஜராத் கலவரத்தில் முஸ்லிம் ஒருவருடைய மூன்றாவது மனைவி (வயது 16) உயிரோடு எரிக்கப்பட்டதால், அவர் பயங்கரவாதியாக மாறி கோவையில் குண்டுவைப்பது போல் கூறியிருக்கிறீர்கள் இப்படி வரலாற்றைத் திரிப்பதால்தானே முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை நடக்கிறது. 2002ல் நடந்த சம்பவம் 1998ல் நடந்த சம்பவத்துக்கு எப்படி காரணமாக இருக்க முடியும்?

கமல்: வரலாறு முன்பின்னாகத் திரிவடைந்து மொத்தமாகவே குழப்பி இருக்கிறது. நடந்ததை மட்டும் சொல்வது தான் வரலாறு. நடந்த சம்வத்தின் மீது தன் கருத்தையும், பார்வையையும் கூறுவது வரலாற்றாசிரியனின் வேலை அல்ல. அதனால் ஹிந்தியில் இதிலிஹாஸ் (இவ்வாறு நடந்தது) என்று குறிப்பிடுகிறார்கள்.

நம்மவர் என்ற படத்தில் நான் வரலாற்று ஆசிரியராக நடித்தேன். வரலாற்றுக் குளறுபடிகளைப் பற்றி நான் செய்த விமர்சனத்தை என்ன காரணத்திற்காகவோ சென்சாரில் வெட்டிவிட்டார்கள். அதைச் சேர்க்க வேண்டும் என்று நான் வாதாடிய போதும் அவர்கள் ஏற்கவில்லை! அந்தப் பகுதி இதுதான்.

முகலாயர் படையெடுப்பு என்றும் வெள்ளையர் வருகை என்றும் நாம் பாடம் சொல்லித் தருகிறோம். முகலாயர்கள் இங்கு வந்து, இங்குள்ள பெண்களையே திருமணம் செய்து கொண்டு இங்கேயே அரண்மனைகளைக் கட்டி ஆட்சி செய்தார்கள். இந்த நாட்டை அவர்கள் வளப்படுத்தினார்களே தவிர, இங்கு சுரண்டி ஆப்கானிஸ்தானுக்கு கொண்டு போய் சேர்க்கவில்லை.

ஆனால் ஆங்கிலேயேர்கள் இங்கு வளங்களைச் சுரண்டி பிரிட்டனில் சேர்த்து வைத்தார்கள். அவர்கள் இந்த நாட்டைத் தம் நாடாக ஒரு போதும் கருதியதே இல்லை. ஆனால் முகலாய மன்னர் பஹதூர் ஷா ஜாபர் 'இந்த நாட்டில் தன் உடலைப் புதைக்க ஆறுகெஜ நிலம் கிடைக்க வில்லையே என்று கண்ணீர்க் கவிதையை பர்மா சிறையிலிருந்து எழுதினார். (அந்த உருது கவிதையை கமல் மனப்பாடமாகவும் சொன்னார்.

இந்த நாட்டை வளப்படுத்தியவர்களை படையெடுத்தவர்கள் என்றும், சுரண்டியவர்களை வருகை தந்தவர்கள் என்றும் எப்படி சொல்லாம் என்பது தான் நான் வைத்த விவாதம்.

கேள்வி : தற்போதைய தமிழ்த் திரையுலகம் மீது எங்களுக்கு மரியாதை இல்லை. ஆனால் நியாயத்திற்காகக் குரல்கொடுப்பவர் என்ற முறையில் உங்கள் மீது ஒரு மதிப்பு உண்டு. பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட போது, நீங்கள் கண்டனம் செய்ததை நாங்கள் மறக்க வில்லை.

கமல் : நான் நடிகனாக அல்ல மனிதனாக இருந்து அந்த அராஜகத்தைக் கண்டித்தேன். ராமஜென்ம பூமி என்கிறார்கள். ராமர் பிரந்த இடம் என்று சதுரஅடிவரை கணக்கிட்டுச் சொல்கிறார்கள். பிரசவத்திற்காக கோசலை படுத்திருந்த இடம் அதுதான் என்கிறார்களா?. இதில் கலைஞரின் கருத்தோடு எனக்கு முழு உடன்பாடு உண்டு.

தலைப் பிரசவத்திற்கு பெண்கள் பிறந்த வீட்டிற்கு செல்வது தான் தொன்று தொட்ட வழக்கம். அப்படிப்பார்த்தால் கோசலையின் சொந்த ஊர் கந்தஹார் ஆப்கானிஸ்தானில் இருக்கிறது. ராமர் பிறந்த இடத்தில் கோவில் கட்ட வேண்டும் என்பவர்கள் ஆப்கானிஸ்தா னில் போய் வேண்டுமானால் கட்டலாம் என்றார். அதுதான் எனது நிலைப்பாடும்.

கேள்வி : அப்போது பிரதமர் நரசிம்மராவைக்கூட சந்தித்தீர்களே?

கமல் : பம்பாய் கலவரத்தின் (1993) கொடுமைகளை நேரில் பார்த்து என்னால் மனம்தாள முடியாமல் அங்கேயே அழுது விட்டேன். உடனே சென்று திரைப்படப் பிரமுகர்களுடன் பிரதமர் நரசிம்மராவை சந்தித்தேன். நடந்த சம்பவங்கள் குறித்துக் கேட்டேன். மஹா ஆரத்தி பற்றி எதுவுமே தெரியாது என்றார். என்னுடன் வந்த நண்பர் இதைக்கேட்டு கேலியாக சிரித்து விட்டார் (அவர் முஸ்லிம் நண்பர்) இதனால் அவருக்கு கொஞ்சம் கோபம்.

கலவரங்களின் போது மகாத்மா காந்தி வீதியில் இறங்கி நடந்துள்ளார். வாருங்கள், நாங்கள் உங்களோடு வருகிறோம். பம்பாய் வீதிகளில் நடந்து பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்போம் என்றேன்.

அது எனக்குப் பாதுகாப்பானதில்லை என்று பாதுகாப்பு அதிகாரிகள் சொல்கிறார்கள் என்றார்.

பிரதமருக்கே பாதுகாப்பில்லை என்றால் சாதாரண பாதசாரிகளுக்கு என்ன பாதுகாப்பு கிடைக்கும்? என்றேன்.

சற்று கோபமாக முறைத்த நரசிம்மராவ் நினைத்த உடன் கிளம்புவதற்கு இது ஒன்றும் சினிமா 'ஷுட்டிங் இல்லை என்றார். நீங்கள் நினைப்பது போன்ற தல்ல சினிமா 'ஷுட்டிங். அதற்கும் ஏராளமான முன் திட்டங்கள் வேண்டும். மக்களைச் சந்திப்பதற்காக எங்களுடன் வரமுடியுமா? என்றேன்.

நிலைமையின் வளர்ச்சியைப் பார்த்து முடிவு செய்யலாம்'' என்றார்.

உடனே நான் இந்த நிலைமை மேலும் வளர அனுமதிக்கப் போகிறீர்களா?'' என்றேன்.

உடனே கோபமான அவர், எனக்கு நீங்கள் ஆங்கிலம் கற்றுக் கொடுக்கிறீர்களா?

Do you teach me english? என்றார். வேறெதுவும் கேட்க வேண்டுமா? என்று வேறுபக்கம் பார்த்துக் கொண்டு கேட்டார்.

பெரிய கும்பிடாகப் போட்டுவிட்டு வெளியேறினோம். அப்போது ஆனந்த விகடன் இதழில் இச்சம்பவம் விரிவாக வந்திருந்தது.

கேள்வி : மணிரத்தினத்தின் பம்பாய் திரைப்படம் இந்தக் கலவரங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. அந்தப் படமும் முஸ்லிம்களை வன்முறையாளர் களாகத்தானே சித்தரித்தது?

கமல்: இதை நான் அப்போதே எதிர்த்தேன்.

(முஸ்லிம்களைத் தொடர்ந்து குற்றவாளிகளாக சித்தரிப்பது தவறானது மணிரத்னத்தின் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கமல்ஹாசன் பம்பாய் படம் குறித்து பேட்டியளித்திருந்தார்) இவ்வளவுக்கும் மணிரத்னம் எனது உறவுக்காரர். அவருக்கு எங்கள் பெண் ணைக் (மணிரத்தினம் மனைவி சுஹாசினி கமலின் அண்ணன் மகள்) கொடுத்திருக்கிறோம். அவர் எனக்கு மாப்பிள்ளை முறை, ஆனாலும் கூட நியாயத்தை நான் கூறினேன். அவரது படத்தின் விளைவாக எதாவது விபரீதம் நடந்திருந்தால், எங்கள் பெண்ணுக்குதானே பாதிப்பு...

கேள்வி : செப்-11, 2001 சம்பவத்திற்குப் பிறகு (அமெரிக்காவின் இரட்டை கோபுரத் தகர்ப்பு) ரஹழ் ர்ய் பங்ழ்ழ்ர்ழ்ண்ள்ம் என்ற பெயரில் முஸ்லிம்கள் மீது உலகளாவிய அளவில் ஒடுக்கு முறை ஏவப்பட்டுள்ளது. நம் நாட்டில் பாபரி மஸ்ஜித் இடிப்பிற்குப்பிறகு வளர்ந்தோங்கிய மதவாதத் தால் பாதிக்கப்படுவர்களும் முஸ்லிம்கள்தான்.

எல்லா முஸ்லிம்களும் தீவிரவாதிகள் அல்ல, ஆனால் தீவிரவாதிகள் அனைவரும் முஸ்லிம்கள் என்ற கருத்து பரப்பப் படுகிறது. ஊடகங்களிலும் வலுவான குரலற்ற (Voiceless Community) சமுதாயமாக உள்ள முஸ்லிம் சமுதாயத்தை சினிமா போன்ற சக்திவாய்ந்த ஊடகங்கள் மேலும் ஒடுக்குவது சரியா?

கேள்வி : பயங்கரவாதிகள் ஏன் உருவாகிறார்கள்?

கேள்வி : உன்னைப் போல் ஒருவன் உருவாக்கிய காயத்தை எப்படி ஆற்றப் போகிறீர்கள்?
போன்ற கேள்விகளுக்கு கமலின் பதில்கள் தொடரும்........
இறைவன் நாடினால்

தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல் போட்டியிட்ட மூன்றில் இரண்டு இடங்களில் ம.ம.க. வேட்பாளர்கள் வெற்றி!




வெற்றி பெற்றதற்கான சான்றிதழைபெறுகிறார் தென்காசி முகம்மது அலி

தமிழகத்தில் உள்ளாட்சி மன்றங்களுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 7 அன்று நடைபெற்றது. சிறுபான்மையினர் வாழும் பகுதிகளில் மிக குறைவான இடங்களில் மட்டுமே இடைத் தேர்தல் நடைபெறக் கூடிய நிலை இருந்ததால் அப்பகுதிகளில் மட்டுமே போட்டியிட ம.ம.க. முடிவு செய்தது.

நெல்லை மாவட்டம் தென்காசி நகராட்சிக்குட்பட்ட 16லிவது வார்டிலும், கடலூர் மாவட்டம் லால்பேட்டை பேரூராட் சிக்கு உட்பட்ட மூன்றாவது வார்டிலும், விருதுநகர் மாவட்டம் கூமாப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 8வது வார்டிலும் மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

தென்காசியில் தி.மு.க, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், ஆகிய வற்றின் பின்புலத்தோடு முஸ்லிம் லீக் களத்தில் இறங்கியது. திமுக மாவட்டச் செயலாளர் கருப்பசாமி பாண்டியன் தலைமையில் பெரும் படையினர் சுழன்றனர், கடைசியில் வாக்களர்களுக்கு பணப் பட்டுவாடாவும் நடைபெற்றது.

ம.மக. சார்பில் களப்பணி மட்டுமே நடைபெற்றது. தமுமுக மாநில பொருளாளர் ஓ.யூ.ராஹ்மத்துல்லாஹ் அவர்கள் முகாமிட்டு களப்பணிகளை ஒருங்கிணைத்தார். கட்டுக்கட்டான பண வினியோகத்தையும் மீறி ம.ம.க. வேட்பாளர் பி.முஹம்மது அலி 214 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அ.தி.மு.க. வேட்பாளரை தோற் கடித்தார். யாரும் எதிர்பாராத வகையில் தி.மு.க, காங்கிரஸ், விடுதலை சிறுத்தை களின் பின்னணியில் தேர்தலில் போட்டியிட்ட முஸ்லிம் லீக் வேட்பாளர் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.


கடலூர் மாவட்டம் லால்பேட்டை பேரூராட்சியில் மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளர் யாசர் அராபத் 102 வாக்குகள் பெற்று வெற்றி வாகை சூடியுள்ளார். அதிமுக கூட்டணியில் இடம் பெற்ற தேசிய லீக் கட்சி வேட் பாளரை தோற்கடித்தார். இங்கு மனித நேய மக்கள் கட்சியினரின் உழைப் புக்கு ஈடு கொடுக்க முடியாத கோழைகள், ம.ம.க. சகோதரர்கள் முஹம்மது அலி, முஹம்மது காசீம், முஹம்மது சித்தீக் ஆகியோரை தேர்தல் நடைபெற்ற அக்டோபர் 7 அன்று கத்தியால் குத்தி படுகாயப்படுத்தினர். அந்த அரசியல் வன்முறைகளையும் மீறி லால்பேட்டை சமுதாய மக்கள் மனிதநேய மக்கள் கட்சிக்கு வாய்ப்பு வழங்கி வெற்றிபெற செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் கூமாப்பட்டி யில் மனிதநேய மக்கள் கட்சியினரின் கடும் உழைப்பை பார்த்து திமுக, அதிமுக, கூட்டணிகள் திணறின. திமுக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். அவர்கள் கூட ம.ம.க. தலைமையிடம் தொடர்பு கொண்டு போட்டியிலிருந்து வாபஸ் பெற நட்பு அடிப்படையில் பேசினார்.

கடைசி வரை, ம.ம.க.வினர் அசராமல் பணியாற்றினார்கள். தேர்தல் நாளன்று சற்றும் எதிர்பாராத வகையில் திமுக வேட்பாளரோடு இணைந்து அ.தி.மு.க. வினரும் பிரச்சாரம் செய்தனர். இதனால் ம.ம.க. வேட்பாளர் முஹம்மது ஹபீப் கூமாப்பட்டியில் தோல்வியடைந்தார்.

திமுக, அதிமுக கூட்டணிகளின் கடைசி நேர உறவு, பண வினியோகத்தையும் தாண்டி குறைவான வாக்குகள் வித்தியாசத்தில், வாக்குகள் பெற்று தோற்றாலும், அது தார்மீக ரீதியில் ம.ம.க.வின் பலத்தை வெளிக்காட்ட உதவியுள்ளது.

நடந்து முடிந்த உள்ளாட்சி அமைப்பு களுக்கான இடைத் தேர்தல்கள் சிறுபான்மையினர் வாழும் பகுதிகளில் அதிகமான இடங்களில் நடைபெற்றிருந்தால் ம.ம.க. நிறைய இடங்களில் போட்டியிட்டு பலத்தை காட்டியிருக்கும் என்பது கவனிக்கத்தக்கது.

ம.ம.க.வுக்கு கிடைத்திருக்கும் வெற்றி சில செய்திகளை சொல்கிறது. பரந்து விரிந்த நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளில் நடைபெறும் அராஜகங்களை எதிர் கொண்டு ஜெயிப்பதற்கும், சிறிய பரப்பளவுக்கு உட்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் நடைபெறும் பண வினியோகத்தை எதிர்கொண்டு ஜெயிப்ப தற்கும் உள்ள வித்தியாசத்தை புரிய வைத்திருக்கிறது. சிறிய பரப்பளவுக்குட் பட்ட பகுதிகளில் தேர்தல் பணிகளின் போது நடைபெறும் தில்லுமுல்லுகளை ஒரளவு கட்டுப்படுத்த முடியும் என்பது தெரிய வருகிறது.

இன்னொரு செய்தி முக்கியமானது. தமிழக முஸ்லிம்களுக்கு மத்தியில் அங்கீகரிக்கப்பட்ட சமுதாய கட்சியாக முஸ்லிம் லீக்கும், தேசிய லீக்கும் திகழ்ந்தன. இப்போது முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளில் தென்காசியில் முஸ்லிம் லீக்கையும், லால்பேட்டையில் தேசிய லீக் கட்சியையும் தோற்கடித் திருப்பதன் மூலம் மனிதநேய மக்கள் கட்சியே சமுதாயத்தின் நம்பிக்கை பெற்ற கட்சி என்பது நிரூபணமாகியிருக்கிறது.

இந்த இடைத்தேர்தல் முடிவுகளின் மூலம் கூட்டணியின் முதுகில் மட்டுமே வெற்றி பெறுபவர்கள் யார் என்பதும், தனிபெரும் சமுதாய செல்வாக்குடன் தனித்து நின்று வாக்குகளை குவிப்பவர்கள் யார் என்பதும் தெளிவாக்கப்பட்டிருக்கிறது.

Monday, October 12, 2009

முஸ்லீம் மக்கள்: மூன்றாவது இடத்தில் இந்தியா

முஸ்லீம் மக்கள்: மூன்றாவது இடத்தில் இந்தியா

அமெரிக்காவில் உள்ள திங்டாங் ஆய்வு மையம் உலகில் வாழும் முஸ்லிம் மக்கள் பற்றி ஒரு கணக்கெடுப்பு நடத்தி உள்ளது. 1500 வகையான ஆதாரங்களை மையமாக வைத்து இந்த கணக்கெடுப்பை நடத்தி உள்ளது.

அதில் உலகில் மொத்தம் உள்ள 680 கோடி மக்களில் 157 கோடி பேர் முஸ்லிம்கள் என்று தெரிய வந்துள்ளது. அதாவது உலகில் 23 சதவீத மக்கள் முஸ்லிம்களாக உள்ளனர். 232 நாடுகளில் முஸ்லிம்கள் வசிக்கின்றனர்.

உலகிலேயே அதிக முஸ்லிம்கள் வசிக்கும் நாடு இந்தோனேசியா. அங்கு 20 கோடி முஸ்லிம்கள் உள்ளனர். 2-வது இடம் பாகிஸ்தானுக்கு கிடைத்துள்ளது. அங்கு 17 கோடியே 40 லட்சம் முஸ்லிம்கள் வசிக்கின்றனர். 3-வது இடத்தில் இந்தியா உள்ளது. இங்கு 16 கோடியே 9 லட்சம் முஸ்லிம்கள் இருக்கின்றனர்.

இந்திய மக்கள் தொகையில் 13.4 சதவீதம் பேர் முஸ்லிம்கள். ஷியா பிரிவு முஸ்லிம்கள் அதிகம் வாழும் 4 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது.

உலகில் வாழும் மொத்த முஸ்லிம்களில் 87-ல் இருந்து 90 சதவீதத்தினர் ஷன்னி பிரிவு முஸ்லிம்கள் 10-ல் இருந்து 13 சதவீதம் பேர் ஷியா முஸ்லிம்கள்.

ஷியா முஸ்லிம்களில் 68ல் இருந்து 80 சதவிதத்தினர் இந்தியா, ஈரான், பாகிஸ்தான், ஈராக் ஆகிய நாடுகளில் வசிக்கின்றனர்.

மக்கள் வாழும் அனைத்து கண்டங்களிலும் முஸ்லிம்கள் உள்ளனர். உலகில் 60 சதவித முஸ்லிம்கள் ஆசியாவில் வசிக்கின்றனர்.

Sunday, October 11, 2009

பெரம்பலூரில் தமுமுக மாணவரணியின் பண்பொழுக்க பயிற்ச்சி முகாம்

தமுமுக மாணவரணி சார்பாக பெரம்பலூர் மாவட்ட மாணவர்களுக்கான பண்பொழுக்க பெரம்பலூர் பயிற்சி முகாம் பெரம்பலூர் ஜே.கே மஹாலில் 28.10.09 திங்களன்று நடைபெற்றது. இம்முகாமிற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் இல்யாஸ் தலைமை வகித்தார். மாநில மாணவரணி செயலாளர் வழக்கறிஞர் ஜைனுல் ஆபிதீன், விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் வழக்கறிஞர் பேரா. முருகையன், அப்துல் காதிர் நூரி, அச்சிறுபாக்கம் ஷாஜஹான், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் தாஹிர் பாட்சா ஆகியோர் மாணவர்களுக்கு பல்வேறு தலைப்புகளில் வகுப்பெடுத்தனர். இம்முகாமில் 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பலன் பெற்றனர். மாவட்ட செயலாளர் தாஹிர், மாவட்ட தலைவர் பாபு, துணை செயலாளர் ஜீலானி, ஜஹாங்கீர் மற்றும் நிர்வாகிகள் முகாமிற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.

இடைத்தேர்தலில் மனித நேய மக்கள் கட்சி வெற்றி!

இடைத்தேர்தலில் மனித நேய மக்கள் கட்சி வெற்றி!

09.10.2009

லால்பேட்டை பேரூராட்சி மூன்றாவது வார்டுக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலையில் துவங்கியது.

மொத்தம் பதிவான வாக்குகள் 187 இதில் மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் எஸ்.ஏ.யாசிர் அரஃபாத் 102 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.தன்னை எதிர்த்து போட்டியிட்ட தேசிய லீக் வேட்பாளர் சிராஜுத்தீனை விட கூடுதலாக 17 வாக்குகள் பெற்றார்.

வெற்றிபெற்ற யாசிர் அரஃபாத்துக்கு மனித நேய மக்கள் கட்சியின் நிர்வாகிகள்,தொண்டர்கள் மற்றும் அனைத்துக் கட்சி பிரமுகர்களும் வாழ்த்து தெரிவித்தனர். தனக்கு வாக்களித்த வாக்களர்களுக்கும்,வெற்றிக்காக உழைத்த அனைத்துத் தரப்பினருக்கும் நன்றி தெரிவித்தார்.

மனிதநேய மக்கள் கட்சிக்கு முதல் வெற்றி

தென்காசி, அக். 9: தென்காசி நகராட்சி 16-வார்டுக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் மனித நேய மக்கள் கட்சி வெற்றிபெற்றுள்ளது. தேர்தலில் அக்கட்சிக்குக் கிடைத்திருக்கும் முதல் வெற்றியாகும் இது.

அந்தக் கட்சியின் வேட்பாளர் முகமது அலி தமக்கு அடுத்தபடியாக வந்த அதிமுக வேட்பாளர் தமீம் இப்ராஹிமை 200 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

வாக்குகள் விவரம்

மொத்த வாக்குகள் : 1441

பதிவானவை : 881

முகமது அலி (தமக) : 414

தமீம் இப்ராஹிம்(அதிமுக) : 214

முகமது அலி : 206 (முஸ்லீம் லீக்)

Monday, October 5, 2009

விபச்சாரிகளுக்கு புர்கா அணிவித்து முஸ்லிம் பெண்களை இழிவு படுத்தும் காவல்துறையின் போக்கைக் கண்டித்து காவல்துறை ஆணையரிடம் தமுமுக மனு

(தமுமுக மாநிலச் செயலாளர் பேரா.ஜெ.ஹாஜா கனி வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை:)


விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை புவனேஸ்வரி மற்றும் சில விபச்சாரப் பெண்கள், முஸ்லிம் பெண்கள் கண்ணியத்துடன் அணிகின்ற புர்காவை அணிந்த நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் படங்கள் பத்திரிக்கைகளில் வெளியாகி உள்ளன. மேலும், விபச்சார வழக்கில் கைதாகும் கழிசடைப் பெண்களுக்கு முஸ்லிம் பெண்களுக்கே உரிய கண்ணியமான புர்காவை அணிவித்து, அழைத்து வரும் கயமைத்தனம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது பத்திரிக்கைகளிலும் வெளிவருகிறது.


இதனால் முஸ்லிம் சமுதாயப் பெண்கள் பெரும் மன உளைச்சலுக்கும், வேதனைக்கும் உள்ளாகியுள்ளனர். புர்கா அணிந்து செல்லும் பெண்கள் கேலி செய்யப்படும் வாய்ப்பும் இதனால் உருவாகியுள்ளது. விபச்சாரிகளுக்கு புர்கா அணிவிக்கும் தரங்கெட்ட செயûலைத் தடுத்து நிறுத்துமாறு தமிழக முதல்வருக்கும், தமுமுக தலைவர் பேரா. டாக்டர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் கடிதம் எழுதியுள்ளார் சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் தமுமுக மாநிலச் செயலாளர் , பி.எஸ்.ஷாகுல் ஹமீத், வடசென்னை
மாவட்ட செயலாளர் ஏ.செய்யது அபூதாஹிர் ஆகியோர் தமுமுக சார்பில் புகார் மனு அளித்துள்ளனர்.

Thursday, October 1, 2009

இலங்கையி­ருந்து ஒரு தமிழ் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு

இலங்கையி­ருந்து ஒரு தமிழ் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு

இலங்கையி­ருந்து தமிழுலகிற்கு புதியதொரு தமிழ் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு வந்து சேர்ந்துள்ளது. அகில இலங்கை ஜம்இய்யது அன்ஸாரிஸ் ஸீன்னத்தில் முஹம்மதிய்யாவும், சர்வ தேச நூல் வெளியீட்டாகமான தாருஸ் ஸலாமும் இணைந்து இப்பணியைச் செய்துள்ளன.


இதுவரை தமிழில் பல திருக்குர்ஆன் மொழிபெயர்ப்புகள் வெளிவந்திருந்தாலும் இலங்கையி­ருந்து வெளிவரும் முதல் தமிழ் மொழியாக்கம் என்ற அடிப்படை யில் இது சிறப்புப் பெருகின்றது.
அத்துடன் இது தனிநபர் முயற்சியாக அல்லாமல் கூட்டு முயற்சியால் உருவான புது வரவு என்பதும் இதன் சிறப்பம்சமாகும்.

அன்ஸாருஸ் ஸின்னாவின் அறிஞர் குழுவான எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி), எம்.ஜெ.எம். ரிஸ்வான் மதனி, எம்.எச்.எம். அஸ்பர் பலாஹி ஆகியோர் இதன் மொழியாக்கப் பணியில் ஈடுபட எம்.சி. அன்ஸார் ரியாதி, என்.பி. ஜூனைத் மதனி, எம்.எஸ்.எம். ரிஸ்வி மதனி ஆகியோர் மேற்பார்வையாளர்களாக செயல்பட்டுள்ளனர். அத்துடன் அன்ஸாரிஸ் ஸþன்னாவின் தலைவர் அஷ்ஷெய்க் என்.பி.எம். அபுபக்கர் சித்திக் மதனி அவர்களின் கண்கானிப்பின் கீழ் இப்பணி பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.
அபுபக்கர் சித்திக் மதனி அவர்களின் மதிப்புரையில் ''இம்மொழியாக்கத்தின் தமிழ்நடை எளிமையானதாகவும் அடைப்பு குறிகள் குறைவானதாகவும் இருப்பது இதன் சிறப்பியல்புகளில் ஒன்றாகும். அதேவேளை குர்ஆன் சுன்னாவின் அடிப்படையில் ஸலபுஸ் ஸா­ஹீன் களது விளக்கங்களுக்கு முன்னுரிமை கொடுத்து இம்மொழியாக்கம் செய்யப் பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழாக்க மற்றும் மேற்பார்வை குழுவினரின் முன்னுரையில் ''ஏற்கெனவே பல மொழி பெயர்ப்புகள் தமிழில் வெளிவந்துள்ளன. முதன்முத­ல் திருக் குர்ஆனைத் தமிழில் தரும் பணியைச் செய்த அப்துல் ஹமீத் பாகவி (ரஹ்) அவர்களை இவ்வகையில் நன்றியுடன் நினைவு கூர்கின்றோம். இவருக்குப் பின்னரும் பலரும் இப்பணியைச் செய்துள்ளனர். அவர்கள் அனை வரையும் நன்றி யுடன் நாம் நிறை வு கூர்கின்றோம்'' எனக் குறிப் பிட்டுள்ளமை இக்குழுவின் பணிவையும் பண்பாட்டையும் பறை சாட்டுகின்றது.
கடந்த காலத்தில் பணியாற்றி யவர்களையெல்லாம் குறைகூறி கேவலப் படுத்திவிட்டு தமது பணியைத் தூக்கி நிறுத்தும் தவறான போக்கு அவர்களிடம் தென்படாமை இஸ்லாமியப் பணியாளர் கள் கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சமாகும்.
அத்துடன் பலர் பங்கு கொண்ட பணி என்றாலும் இதில் தவறுகளும் குறை களும் இடம் பெற வாய்ப்பு உள்ளமையை நிச்சயமாக நாம் மறுக்க மாட்டோம். எனவே, எமது தமிழாக்கத்தில் குறைகளை யும், தவறுகளையும் காணும் வாசகர்கள் அவற்றைச் சுட்டிக்காட்டினால் திருத்திக் கொள்ளப் பெரிதும் உதவியாக அமையும் என்று பணிவுடன் தெரிவித்துக் கொள் கின்றோம்'' என்று குறிப்பிட்டுள்ளமையும் கவனத்தில் கொள்ளத் தக்கதாகும்.
அழகிய வடிவமைப்பில் நேர்த்தியான கட்டமைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த தமிழாக்கத்தின் இலங்கை தவிர்த்த ஏனைய நாடுகளுக்கு பதிப்புரிமையை சவூதியை தலைமையகமாக கொண்டு இயங்கும் இஸ்லாமியப் பிரச்சாரப் பேரவை சார்பாக சென்னையில் ரமலானில் நடைபெறும் தொடர் சொற்பொழிவில் பங்குக் கொள்ள சென்னை வந்திருந்த குழுவைச் சேர்ந்த மவ்லவி இஸ்மாயில் சலபி, தமுமுக தலைவருக்கு அகில இலங்கை ஜம்மியத்து அன்ஸாரிஸ் ஸீன்னத்துல் முஹம்மதிஸ் சார்பாக திருக்குர்ஆன் தமிழாக்கப் பிரதி ஒன்றை வழங்கினார். தாருஸ்ஸலாம் வெளியீட்டு உரிமையை தன்னுடைமையாக்கியுள்ளது.
இந்த புதிய வரவு மக்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் நிச்சயமாக இது நல்ல வரவேற்பையும் பெறும் எனக் கட்டியம் கூறலாம்.