Friday, August 30, 2013

த.மு.மு.க. தலைவர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு: திண்டுக்கல்லில் பரபரப்பு ! !



திண்டுக்கல் நகரில் த.மு.மு.க நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் பாரதி புரத்தை சேர்ந்தவர் சையது அபுதாகீர். இவர் த.மு.மு.க. 34-வது வார்டு கிளை தலைவராக இருந்து வருகிறார். இவர் சம்சா, வடை போன்றவற்றை விற்பனை செய்து வருகிறார். நேற்று இரவு வழக்கம்போல வியாபாரத்தை முடித்துவிட்டு நள்ளிரவு 11.30 மணியளவில் வீடு திரும்பினார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 4பேர் கொண்ட கும்பல் அபுதாகீர் வீட்டின் மீது தீயை பற்றவைத்து பெட்ரோல் குண்டுகளை சரமாரியாக வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். வீட்டிற்கு வெளியே குண்டுவெடிப்பு சத்தம் கேட்டதால் அதிர்ச்சியடைந்த அபுதாகீர் வீட்டை விட்டு வெளியே ஓடிவந்தார். அப்போது வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் அந்தசமயத்தில் 4 பேர் மோட்டார் சைக்கிளில் சென்றதையும் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. த.மு.மு.க. நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதை அறிந்த த.மு.மு.க.வினர் ஏராளமானோர் வந்து அவரது வீட்டின் முன்பு குவிந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த டி.எஸ்.பி. சுருளிராஜா, இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், புகழேந்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. முன்விரோதம் இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் பாரதிபுரத்தை சேர்ந்த இந்து மக்கள் கட்சியை சேர்ந்த ஒரு நிர்வாகிக்கும், அபுதாகீருக்கும் முன்விரோதம் இருந்துவந்துள்ளது. இருவருக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்துள்ளது. இந்து மக்கள் கட்சியை சேர்ந்த நிர்வாகி அபுதாகீரை பழிவாங்குவதற்காக சமயம் காத்துக்கொண்டு இருந்துள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவில் திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோவில் தெருவில் உள்ள பாரதிய ஜனதா கிளை தலைவர் பிரவீன்குமார் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த நேரத்தில் அபுதாகீரை பழிவாங்கினால் போலீசாரின் விசாரணை வேறுபக்கம் திரும்பிவிடும், நாமும் தப்பிவிடலாம் என்ற கோணத்தில் சம்பந்தப்பட்ட தனது ஆதரவாளர்களுடன் த.மு.மு.க. கிளை தலைவர் அபுதாகீர் வீட்டில் பெட்ரோல் குண்டுகளை வீசி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அடுத்தடுத்து பா.ஜனதா, த.மு.மு.க. பிரமுகர்கள் வீட்டில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் திண்டுக்கல்லில் பொதுமக்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற சம்பவங்களை தடுக்க போலீசார் இரவு பகலாக தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Monday, August 26, 2013

கீழக்கரை நகராட்சி நிர்வாகத்திற்கு ஜவஹிருல்லா எம்.எல்.ஏ கண்டனம்!.

கீழக்கரை முத்துச்சாமிபுரம் மக்களிடம் ராமநாதபுரம் எம்எல்ஏ ஜவாஹிருல்லா குறைகள் கேட்டார்.
பொதுமக்களுக்கு போதிய அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தராத கீழக்கரை நகராட்சி நிர்வாகத்திற்கு ராமநாதபுரம் எம்எல்ஏ ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்தார்.
கீழக்கரை நகராட்சி 2வது வார்டுக்கு உட்பட்ட முத்துச்சாமிபுரத்தில் 200 அருந்ததியின குடும்பங்கள் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் கீழக்கரை நகராட்சி துப்புரவு பணியாளர்களாக உள்ளனர். இப்பகுதியில் தெருவிளக்கு, குடிநீர், கழிப்பறை, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதியளவு இல்லை. கழிப்பறை வசதியின்மையால் திறந்த வெளியிலேயே மலம் கழிப்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாக ஜவாஹிருல்லா எம்எல்ஏவுக்கு தொடர்ந்து புகார்கள் சென்றன. இதையடுத்து நேற்று அவர், முத்துச்சாமிபுரம் பகுதியை நேரில் ஆய்வு செய்தார்.
கீழக்கரை நகராட்சி துப்புரவு தொழிலாளர் சங்கத் தலைவர் ஹமீதுகான் கூறுகையில்,
இப்பகுதியில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன் 3 கழிப்பறைகள் கட்டப்பட்டு தண்ணீர் வசதி இன்றி இது நாள் வரை பயன்பாட்டுக்கு விடாமல் பூட்டு போட்டு வைக்கப்பட்டுள்ளது. தற்போது மீண்டும் மராமத்து பணி செய்ய ரூ.8 லட்சத்திற்கு டெண்டர் விடப்பட்டு ஒரு மாதமாகியும் இதுவரை பணி துவங்கப்படவில்லை. குடிநீர், தெருவிளக்கு, சாலை வசதி இல்லை என நகராட்சியில் பல முறை புகார் கொடுத்தும் எந்நடவடிக்கையும் இல்லை. மழைக்காலம் துவங்கினால் வீடுகளில் தண்ணீர் புகுந்து படுக்கக்கூட இடமின்றி பெரும் சிரமத்திற்கு உள்ளாவர் என்றார்கீழக்கரை நகராட்சி நிர்வாகத்திற்கு ஜவஹிருல்லா எம்.எல்.ஏ கண்டனம்!.
ஜவாஹிருல்லா எம்எல்ஏ கூறியதாவது:
 ஊரையே துப்புரவு செய்யும் தொழிலாளர்களின் இருப்பிடம் உள்ள இடத்தில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காமல் தூங்கும் நகராட்சி நிர்வாகத்தை கண்டிக்கிறேன். ரூ.5 லட்சம் செலவில் கட்டிய கழிப்பறைக்கு தண்ணீர் வசதி செய்து கொடுக்காமல் பூட்டி வைத்து மீண்டும் மராமத்து செய்ய நிதி ஒதுக்கி பணி செய்யாமல் காலம் தாழ்த்துவது இப்பகுதியை புறக்கணிப்பதாக உள்ளது. நகராட்சி நிர்வாக செயல் திறமையின்மையை முதல்வர், கலெக்டர் கவனத்திற்கு கொண்டு செல்வேன். தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இப்பகுதிக்கு குடிநீர் வசதி செய்ய ஏற்பாடு செய்வேன். இவ்வாறு அவர் கூறினார்.
நகராட்சி துணைத்தலைவர் ஹாஜாமுகைதீன், நகர் தமுமுக தலைவர் முகமது சிராஜூதீன், நிர்வாகிகள் சேகுதாவூது சாதிக், ரைஸ் இபுராகிம், மாவட்ட செயலர் அன்வர்அலி, கவுன்சிலர்கள் சாகுல் ஹமீது, முகைதீன் இபுராகிம், முன்னாள் கவுன்சிலர் வேலுச்சாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

source keelakaraitmies.blogspot.com

Saturday, August 17, 2013

ராமநாதபுரம் பட்டினகத்தான் ஊராட்சி உள்பட ரோடுகளை

ராமநாதபுரம் பட்டினகத்தான்  ஊராட்சி உள்பட ரோடுகளை  தமுமுக மூத்த தலைவர், ம.ம.க வின் ராமநாதபுரம்  சட்டமன்ற தலைவர் பேராசிரியர்.டாக்டர். எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் பார்வைஇடர் 

Friday, August 16, 2013

த.மு.மு.க ஆர்.எஸ்.மங்களம் கிளை சார்பில் மாபெரும் இரத்ததான முகாம்

67-வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டம்,திருவாடானை தாலுகா, த.மு.மு.க ஆர்.எஸ்.மங்களம் கிளை சார்பில் “இந்து,முஸ்லிம்,கிறிஸ்துவ” மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி த.மு.மு.க வும்,அரசு தலைமை மருத்துவமனையும் இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் நடந்தது. இந்த நிகழ்ச்சி இராமநாதபுரம் மாவட்ட த.மு.மு.க தலைவர் சாதிக் பாட்சா தலைமையில் நடைபெற்றது. முகாமை மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் (இ.ஆ.ப) அவர்கள் துவங்கி வைத்தார்கள். நிகழ்ச்சியில் சிறப்புரை மாநில அமைப்பு செயலாளர் மண்டலம் ஜைனுலாபுதீன் நிகழ்த்தினார்கள், நிகழ்ச்சிக்கு முன்னிலை மாவட்ட செயலாளர் அன்வர் அலி,மாணவர் இந்தியா கலந்தர் ஆசிக்,ஒன்றிய பெருந்தலைவர் வ.து.ந.ஆனந்த்,அகில இந்திய தேவர் பேரவை மாநில தலைவர் கணேஷத்தேவர், மற்றும் மாவட்ட,ஒன்றிய நிர்வாகிகளும், நகர் தலைவர் மன்சூர்,செயலாளர் ஜமூன்,திருவாடானை ஒன்றிய செயலர் அக்பர் சுல்தான்,பிலால்கனி,சலீம் மற்றும் ஜமாத்தார்களும் பெருந்திரளாக கலந்து கொண்டனர். டாக்டர்.ஞானகுமார் அவர்களின் தலைமையிலான மருத்துவக்குழுவினர் 50 நபர்களிடம் குருதி சேகரித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒன்றிய மாவட்ட  தலைவர்  சாதிக் பாட்சா செய்திருந்தார்.

இலங்கையில் நடைபெற்றுவரும் பள்ளிவாசல் தகர்ப்பு சம்பவங்களை கண்டித்து சென்னையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில்



இலங்கையில் நடைபெற்றுவரும் பள்ளிவாசல் தகர்ப்பு சம்பவங்களை கண்டித்து சென்னையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் மாநில பொருளாளர். ஓ.யூ.ரஹ்மத்துல்லா, துணைத் தலைவர் குணங்குடி ஆர்.எம். அனிபா, உள்ளிட்டோர்.

Friday, August 9, 2013

சென்னை தமுமுகவின் பெருநாள் சிற‌ப்பு தொழுகை! ஏராளமானோர் ப‌ங்கு பெற்ற‌ன‌ர்








எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்களின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி

அருள் நிறைந்த இந்த இனிய ஈகை திருநாளில் கருணை மிக்க யா அல்லாஹ், இத்திருநாளை அனுபவிக்கும் பாக்கியம் தந்த உன்னிடம் கையேந்தி எங்கள் நன்றியை சமர்ப்பிக்கிறோம்.
அகிலத்தார் அனைவரையும் படைத்த எங்கள் இரட்சகனே! பெருமை, பொறாமை, கர்வம், பேராசை , குரோதம் முதலிய தீய குணங்களிலிருந்து எங்கள் உள்ளத்திற்கு விடுதலை வழங்கி அதற்கு பகரமாக தன்னடக்கம், மன நிறைவு, இறக்கம் மற்றும் அன்பு முதலிய நற்பண்புகளால் எங்கள் நெஞ்சம் நிரம்பி ததும்புவதற்கு உன்னிடம் கெஞ்சுகிறோம்.

உனது நிகரில்லா கருணைக்கு முன் எங்கள் சிரத்தைத் தாழ்த்தி வேண்டுகிறோம். அல்லாஹ் எங்கள் பாவங்களை மன்னித்து எங்களை அனைத்து வகையான தீமைகளில் இருந்தும் பாதுகாப்பாயாக

ரமளானில் பெற்ற பயிற்சியால் புதிய எழுச்சி பெற்றுள்ள நாங்கள் வரும் காலங்களில் பலம் மிக்க ஈமானுடன் வாழ்வதற்கு உதவிடுவாயாக.

இந்த திருநாளில் உன்னிடம் மன்றாடுகிறோம் யா அல்லாஹ்.

ரமலான் முழுவதும் உன்னை நெருங்கும் வகையில் எங்கள் செயல்பாடுகளை அமைத்து கொண்டோம். உன்னிடம் மன்றாடி இந்த திருநாளில் நாங்கள் சமர்ப்பிக்கும் பிராத்தனைகளை ஏற்றுக் கொள்வாயாக.

உங்களுக்கு என் நெஞ்சார்ந்த ஈகை திருநாள் நல்வாழ்த்துக்கள்.

தகபல்லல்லாஹு மின்னா வ மின்கும்

--எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்