Wednesday, May 30, 2012

கல்வி உதவித் தொகை - தமுமுக தலைமையகம் வேண்டுகோ


ஏழை மாணவர்கள் பலர் கல்வி உதவித் தொகை கேட்டு தலைமையகத்தில் விண்ணப்பிக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் முழுமையாக உதவி செய்யும் நிதிவசதி நம்மிடம் இல்லை. எனினும் அதிலிருந்து கணிசமானோரைத் தேர்ந்தெடுத்து உதவி செய்வது என்பது தவிர்க்க முடியாதது. எனவே செல்வந்தர்கள், சமுதாய ஆர்வலர்கள், தங்களின் கல்வி உதவித்தொகைகளை தமுமுக தலைமையகம் மூலம் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். நீங்கள் தரும் கல்வி நன்கொடைகள் எங்களை நாடிவரும் ஏழை மாணவ மாணவிகள் ஏற்றம்பெறவும், அவர்களது குடும்பங்கள் முன்னேற்றம் பெறவும் வழிவகுக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக வல்ல இறைவனிடம் அதிகமான நன்மைகளை கிடைக்கவும் உதவும் என்பதையும் நினைவூட்டுகிறோம்.
நிதி உதவி தர விரும்புவர்கள் பொருளாளர் ஓ,யூ.ரஹ்மத்துல்லாஹ் அவர்களை 9791190542 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்

Wednesday, May 23, 2012

நெல்லிக்குப்பத்தில்--தமிமுன் அன்சாரி சிறப்புரை நிகழ்த்துகின்றார்


இன்ஷா அல்லாஹ் வரும் 24-05-2012 வியாழன் அன்று காலை 9 மணியளவில்

நெல்லிக்குப்பம் இஸ்லாமிய ஐக்கிய மஜ்லிஸ் திறப்பு விழா

இடம் மெளலானா அப்துல் கறீம் வீதி ஜூம்மா பள்ளிவாசல் வளாகம்

தலைமை V.M.ஷேக்தாவுத் (தலைவர்--இஸ்லாமிய ஐக்கிய மஜ்லிஸ்)

கிராஅத் M.அப்துர் ரஹ்மான் பாகவி(இமாம் நூருல் கறீம் பள்ளிவாசல்)

வரவேற்ப்புரை ஷாகுல் ஹமீது (துனை .தலைவர்--இஸ்லாமிய ஐக்கிய மஜ்லிஸ்)

 
கட்டிதிறப்பாளர்-
A  அப்துர் ரஹ்மான் ஹஜ்ரத்(தலைவர் மாநில ஜமாதுல் உலமா சபை,JMA அரபிக்கல்லூரி பேராசிரியர்)

சிறப்புரை
                            
M .தமீமுன் அன்சாரி MBA (மாநில பொதுச் செயலாளர் மனித நேய மக்கள் கட்சி)

A.ராஜ் முஹம்மது மன்பஈ (இமாம்&துனை தலைவர் அர்-ரஹ்மான் ஜூம்மா பள்ளி வாசல்)

S.அப்துல்ரஜாக் ஹஜ்ரத் (இமாம் கத்தீப் நூர்முஹம்மது பள்ளி வாசல்)

நன்றியுரை J.M.சாலிஹ் (து செயலாளர் இஸ்லாமிய ஐக்கிய மஜ்லிஸ்)

முஹைதீனியா பள்ளி மாணவி கீழக்கரையில் முதலிடம் !2 ப‌ள்ளிக‌ள் 100 ச‌த‌வீத‌ தேர்ச்சி

+ 2 தேர்வு முடிவுக‌ள் இன்று வெளியிட‌ப்ப‌ட்ட‌ன‌.முஹைதீனியா பள்ளி மாணவி கீழக்கரையில் முதலிடம் பெற்றுள்ளார்.இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி,ஹமீதியா பெண்கள் மேல்நிலை பள்ளி ஆகிய‌ இரு ப‌ள்ளிக‌ளும் 100% ச‌த‌வீத‌ம் தேர்ச்சி பெற்றுள்ள‌து

ஹமீதியா பெண்கள் மேல்நிலை பள்ளியில் 220மாணவிகளில் 220மாணவிகளும் தேர்வு பெற்று 100சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.இப்பள்ளியில்அதிக மதிப்பெண்னாக‌ 1128 மாண‌வி பெற்றுள்ளார்

இஸ்லாமியா மெட்ரிக் பள்ளியில் 58 பேரில் 58 பேர் தேர்வு பெற்று 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர் மாணவி ஹப்ஸா அதிக மதிப்பெண்ணாக‌ 1151 பெற்றுள்ளார்.

கீழ‌க்கரையில் முஹைதீனியா மெட்ரிக் ப‌ள்ளி மாணவி மிஸ்பாஹ் பாத்திமா 1161 பெற்று கீழக்கரை பள்ளி மாணவ ,மாணவிகளில் முத‌லிட‌ம் பெற்றுள்ளார்.இப்ப‌ள்ளியில் மொத்த‌ம் 19 பேரில் 18 பேர் தேர்ச்சி பெற்றுள்ள‌ன‌ர்

ஹைராத்துல் ஜலாலியா பள்ளி அதிக மதிப்பெண்ணாக 1118ம் 98 % ச‌த‌வீத‌ தேர்ச்சி விகிதமும் பெற்றுள்ள‌து

தீனியா ப‌ள்ளியில் 8 பேரில் 7 பேர் தேர்வு பெற்றுள்ள‌ன‌ர்.

ஹ‌மீதியா மெட்ரிக் ப‌ள்ளி மாணவி அதிக ‌ம‌திப்பெண்ணாக‌ 1154 பெற்றுள்ளார் 95% தேர்ச்சியை இப்ப‌ள்ளி பெற்றுள்ள‌து.


ஹ‌மீதியா ஆண்க‌ள் ப‌ள்ளியில் 88 பேரில் 87 மாண‌வ‌ர்க‌ள் தேர்வு பெற்றுள்ள‌ன‌ர். அதிக‌ ம‌திப்பெண்ணாக‌ 1112 பெற்றுள்ளார்






news by:keelakaraitimes.com

Tuesday, May 22, 2012

கீழக்கரை பகுதியில் புதன் மே23 காலை 9 மணி - மாலை 5மணி வரை மின் தடை !

மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக கீழக்கரை, ஏர்வாடி, முகம்மது சதக் கல்லூரி பகுதி, மாயாகுளம், காஞ்சிரங்குடி, உத்திரகோசமங்கை, களரி, எக்ககுடி, தேரிருவேலி மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகளில் புதன்கிழமை (மே.23) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படும் என்று ராமநாதபுரம் உதவி செயற்பொறியாளர் பாண்டியன் தெரிவித்து