Thursday, December 31, 2009

மனித நேய மக்கள் கட்சியின் 2ம் ஆண்டு துவக்க விழா பிரச்சராம்....

மனித நேய மக்கள் கட்சியின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா மற்றும் முப்பெரும் கோரிக்கை மாநாடு ( சமூக நீதி, விலைவாசி குறைப்பு, பூரண மது ஒழிப்பு ) வரும் பிப்ரவரி 7ம் திருப்பூரில் நடக்கவுள்ளது. அதற்காக கோவையில் மனித நேய மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் அப்துல் சமது. மாநில துனை ஊபொதுச் செயலாளர் தமீம் அன்சாரி. த மு மு க மாநில துனைபொதுச் செயலாளர் ரிபாய். மாநில செயலாளர். கோவை உமர். மாநில துனை செயலாளர் கோவை சாதிக். மாநில பேச்சாளர் ஜாகீர். தமுமுக மாவட்ட தலைவர் அப்துல் பஷிர்.மாவட்ட செயலாளர் ரபிக்.மாவட்ட பொருளாளர் அகமது கபீர். மற்றும் மாவட்ட நிர்வாகிகள். ஆகியோர்கள் கொடி ஏற்றும் நிகழ்ச்சிகள், செயல் வீரர்கள் கூட்டம் கோவையில் நடைபெற்றது. இந்த அனைத்து நிகழ்ச்சிக்கு மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சுல்தான் அமீர் தலைமையில் நடந்தது. இதற்கான ஏற்றபாடுகளை மாவட்ட துனை செயலாளர் ஷாஜகான். மாவட்ட பொருளாளர். அப்பாஸ். மாவட்ட இளைஞர் அணி அப்பாஸ். ஜபார். கவிஞர் ஹக். பரகாத்துல்லா. காஜா உசேன். நுர் முஹம்மது. ஆகியோர் செய்து வந்தார்கள். இறுதியில் சிறுபான்மை சமூக புரட்சி கட்சியின் மாவட்ட தலைவர் யூசுப் அவர்கள் அந்த கட்சியில் இருந்து விலகி மனித நேய மக்கள் கட்சியில் இனைதார். முடிவுவில் மாநகர செயலாளர் ரபிக் நன்றி கூறினார்.

melapalayam railway station

Wednesday, December 30, 2009

கீழக்கரை கடல் பகுதியில் கூட்டு ரோந்து

கீழக்கரை, டிச. 29: ராôமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை அருகே உள்ள தீவுப் பகுதிகளில் கடலோரப் பாதுகாப்புப் படையினர் செவ்வாய்க்கிழமை கூட்டு ரோந்தில் ஈடுபட்டனர்.

கீழக்கரை அருகே உள்ள அப்பா தீவு முதல் குருசடை தீவு வரையிலான மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில், கீழக்கரை மன்னார் வளைகுடா வனச்சரகர் எம். ராஜேந்திரன் தலைமையில், மன்னார் வளைகுடா உயிர் கோளக் காப்பக அறக்கட்டளை அதிகாரிகள், மீன்வளத் துறை அதிகாரிகள் மற்றும் கடலோரப் பதுகாப்புப் பிரிவைச் சேர்ந்தவர்கள் கூட்டு ரோந்தில் ஈடுபட்டனர்.

காலை முதல் மாலை வரை நடைபெற்ற இந்த ரோந்தில், கடலில் மீன்பிடிக்கச் சென்ற விசைப்படகுகள் மற்றும் நாட்டுப் படகுகளில் ஆவணங்கள் சரியாக உள்ளனவா என்றும் மற்றும் தீவுப் பகுதிகளில் அன்னியர் நடமாட்டம் உள்ளதா என்றும் சோதனை செய்யப்பட்டது.

குவைத் தமுமுக வாராந்திர(01-JAN-09) சிறப்பு நிகழ்ச்சி

அன்பிற்கினிய குவைத் சகோதரர்களுக்

இன்ஷா அல்லாஹ் வருகின்ற 01-ஜனவரி வெள்ளியன்று இரவு 8.30 மணியளவில், ரிக்ஃகா பகுதியில் உள்ள தமுமுக கிளையில் மாதாந்திர மார்க்க மற்றும் சமூக விழிப்புணர்வு கூட்டம் நடைபெற உள்ளது. புரவலர் (மெளலவி) எஸ்.கே.எஸ் மற்றும் ஆயங்குடி சலீம் ரப்பானி அவர்கள்சிறப்புரையாற்றயிருக்கின்றார்கள். அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

Flag this message துபை முமுக வின் வாராந்திர(01-JAN-09) சிறப்பு நிகழ்ச்சி

அன்பிற்கினிய சகோதரர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)

இன்ஷா அல்லாஹ் வருகின்ற 01-ஜனவரி வெள்ளியன்று இரவு 8.30 மணியளவில், நமது துபை முமுக மர்கஸில், சகோதரர் திருச்சி அப்துர் ரஹ்மான் அவர்கள் கியாமத் நாளின் சிறிய அடையாளங்கள் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றயிருக்கின்றார்கள். அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

Sunday, December 27, 2009

லஞ்ச ஒழிப்பு துறைக்கு மூக்கணாங்கயிரா?

மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது வெளியிடும் அறிக்கை

தமிழகத்தில் கடந்த ஆண்டு லஞ்ச ஒழிப்பு துறையினரின் அதிரடி நடவடிக்கைகளால் சிறிய பெரிய அளவிலான ஊழல் பேர்வழிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 2008 மார்ச் முதல் 2009 மார்ச் மாதத்திற்குள் 400க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அப்பழுக்கற்ற நேர்மையான காவல்துறை அதிகாரி ஏ.டி.ஜி.பி. ராமானுஜம் அவர்கள் லஞ்ச ஒழிப்பு துறையின் தலைவராக இருந்த காலக்கட்டத்தில் இந்த நிகழ்வுகள் நடைபெற்றன.

வாக்காளர்களுக்கு அளிக்கப்படும் லஞ்சம் உள்பட தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் நடைபெறும் லஞ்ச ஊழலை தடுத்து நிறுத்த முடியவில்லை என்ற நிலை மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

சிறிய அளவிலான ஊழல் குற்றங்கள் மட்டுமே கண்டு பிடிக்கப்படுவதும், மிகப்பெரிய அளவிலான ஊழல் குற்றங்கள் மறைக்கப்படுவதும் தமிழகத்தில் சர்வசாதாரணமான நிகழ்வுகளாக ஆகிவிட்டது.

லஞ்ச ஒழிப்பு துறைக்கு திரு. ராமானுஜம் (ஏ.டி.ஜி.பி) பொறுப்பில் இருந்த போது, பாரபட்சமின்றி நடவடிக்கைள் எடுக்கப்பட்டன. லஞ்ச ஊழல் முறைகேடுகள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டன. ஆனால் திரு. ராமானுஜம் அவர்கள் அத்துறையில் இருந்து மாற்றப்பட்ட பிறகு தற்போது லஞ்ச ஒழிப்பு துறையின் செயல்பாடுகள் வீரியம் இழந்துள்ளன. லஞ்ச ஒழிப்பு துறையின் நடவடிக்கைகளுக்கு மூக்கனாங்கயிறு போடுவதற்காகவே திரு. ராமானுஜம் அத்துறையில் இருந்து மாற்றம் செய்துள்ளது போல் தெரிகின்றது. அவர் இடமாற்றம் செய்த பிறகு லஞ்ச ஒழிப்பு துறையின் நடவடிக்கைகள் திடீரென குறைக்கப் பட்டன. இந்த நடவடிக்கை குறைப்பு ஊழல் பேர்வழிகளுக்கு உதவி புரியும் படி அமைந்துள்ளது. லஞ்சம் பல்கி பெருக வழிவகுக்கும் வகையில் திமுக அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கையை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கின்றது.

தமிழகத்தில் பெருகி வரும் லஞ்ச ஊழல்களை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் என திமுக அரசுக்கு அக்கறை இருந்தால் மீண்டும் திரு. ராமானுஜம் அவர்களை லஞ்ச ஒழிப்பு துறையின் தலைவராக நியமிக்க வேண்டுமென வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். மேலும் இந்த நிலை தொடருமாயின் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மாபெரும் போராட்டம் நடைபெறும் என எச்சரிக்கிறோம்.

Monday, December 21, 2009

بسم الله الرحمن الرحيم

அல்லாஹ்வின் மாபெரும் உதவியால் 17-12-09 வியாழன் இரவு 10.00 மணியளவில் துபை முமுக வின் பொதுக்குழு மற்றும் புதிய மண்டல நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. அமர்வின் ஆரம்பமாக முன்னால் செயலளார் கொடுங்கையூர் முஹைதீன் கடந்த இரண்டு வருடமாக இருந்த நிர்வாகத்திற்கு ஒத்துழைப்புகளை வழங்கிய அனைத்து சகோதரர்களுக்கும் நன்றியினை தெரிவித்து கடந்த நிர்வாகத்தின் சார்பாக விடை கொடுத்தார். அதன் பிறகு அமர்வினுடைய தலைமை பொறுப்பை ஏற்ற அமீரகத் தலைவர் அதிரை அப்துல் ஹாதி அவர்கள் பொறுப்பாளர்களின் பண்புகள் என்ற தலைப்பின் கீழாகவும், அமீரக துணைத்தலைவர் சகோதரர் ஹுஸேன் பாஷா அவர்கள் துபை மண்டலத்தின் கடந்த இரண்டு ஆண்டு கால செயல்பாட்டையும் புதியதாக தேர்ந்தெடுக்கப்படவுள்ள சகோதரர்கள் தங்களுடைய நிர்வாக செயல்பாடுகளை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதைப்பற்றியும் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்தார்கள். அதன் பிறகு அமீரக தலைவரும், அமீரக துணைத்தலைவரும் தேர்தல் அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டு அல்லாஹ்வின் மாபெரும் உதவியால் மெயிலில் இணைக்கப்பட்டுள்ள துபை மண்டலத்தின் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டார்கள்.

Sunday, December 20, 2009

த.மு.மு.க.வின் டெல்லி பேரணியின் வெற்றி அகில இந்திய அளவில் முஸ்லிகளுக்கு 10 சதவீத இடஓதுக்கீடு ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரைகள் நாடாளுமன்றத்தில்

த.மு.மு.க.வின் டெல்லி பேரணியின் வெற்றி அகில இந்திய அளவில் முஸ்லிகளுக்கு 10 சதவீத இடஓதுக்கீடு ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரைகள் நாடாளுமன்றத்தில் தாக்கல்

அகில இந்திய அளவில் முஸ்லிம்களுக்கு வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஓதுக்கீடு வழங்கும் பரிந்துரையை வழங்கிய ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகத்தின் உரிமைப் போராட்டத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகக் கருதப்படுகிறது. (அல்ஹம்துலில்லாஹ்)

அகில இந்திய அளவில் சமுதாய இயக்கங்கள் எண்ணற்றவை இருப்பினும் முஸ்லிம்களின் ஜீவாதார கோரிக்கைகளுக்காக தொடர்ந்து களம் கண்டு சோர்வின்றி, ஓய்வின்றி, கருமமே கண்ணாக பாடுபட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சாதனை வரலாற்றில் மற்றொரு திருப்புமுனையாக இந்த வெற்றி கிடைத்துள்ளது.2007ஆம் ஆண்டு மார்ச் 7லில் இந்தியக் தலைநகர் டெல்லியே குலுங்கும்வண்ணம் மாபெரும் பேரணி மற்றும் மாநாடு நடைபெற்றது. தலைநகர் டெல்லியில் நாடாளுமன்ற வீதியை நோக்கி பல்லாயிரக்கணக்கான கழகக் கண்மணிகள் பேரணி புறப்பட்டனர்.பேரணியில் அகில இந்திய அளவில் முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்களும் ஒன்றிணைந்து நடந்தே வந்தனர். பேரணி நிறைவிலும் பின்னர் சமூகநீதி மாநாட்டிலும் முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்கள் மட்டுமல்லாது பிற கட்சி தலைவர்களும் அகில இந்திய அளவில் முஸ்லிம்களுக்கு இடஓதுக்கீடு வழங்கும் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து த.மு.மு.கலிவின் போர்க்குரலுக்கு வலிமை சேர்த்தனர்.மார்ச் 7 பேரணிக்கு பிறகு அகில இந்திய அளவில் முஸ்லிம் இயக்கங்களிடையே ஒரு உத்வேகம் தோன்றியது. இடஓதுக்கீடு குறித்த விழிப்புணர்வு தமிழகத்துக்கு வெளியிலும் பரவியது.மார்ச் 7 பேரணிக்குப் பிறகும் தொடர்ந்து த.மு.மு.க. அகில இந்திய அளவில் முஸ்லிம்களுக்கான இடஓதுக்கீடு குறித்த போராட்டங்களை நடத்தியது.

த.மு.மு.க. அரசியல் பிரிவான மனிதநேய மக்கள் கட்சியும் ரங்கநாத மிஸ்ரா ஆணைய பரிந்துரைகளை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். அதற்கு முன்னோடியாக நாடாளுமன்றத்தில் அதனை தாக்கல் செய்ய வேண்டும் எனக் கோரி போராட்டங்களை நடத்தியது.இவ்வாறு பல்வேறு போராட்டங்களைக் கண்டபின் ரங்கநாத் மிஸ்ரா கமிஷனின் பரிந்துரைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.லிபரான் ஆணைய அறிக்கைகள் வெளிவந்த பின் அது தொடர்பான விவாதங்களுக்கிடையே ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரைகள் நாடாளுமன்றத்தில் இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை ஏன் என உறுப்பினர்கள் கொந்தளித்தனர்.குறிப்பாக சமாஜ்வாதிக் கட்சித்தலைவர் முலாயம் சிங்யாதவும், பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளக்கட்சியின் உறுப்பினர் அலி அன்வர் உள்ளிட்டோர் தொடர் கேள்விகளை எழுப்பினர்.லிபரான் ஆணையம் எழுப்பிய புயல் அடங்குவதற்குள் மக்களின் மற்றொரு கோப அலை எழும்பிவிடக்கூடாதே என பதறியது மத்திய அரசு.

இதனைத் தொடர்ந்து ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் அறிக்கை இந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரிலேயே தாக்கல் செய்யப்படும் என பிரதமர் மன்மோகன்சிங் உறுதி அளித்தார்.2009 ஆம் ஆண்டு டிசம்பர் 18 வெள்ளிக்கிழமை இந்தியாவில் வாழும் சிறுபான்மையினருக்கு முக்கியத்துவம் வாய்ந்த நாளாக மாறிவிட்டது.

உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா தலைமையில் அமைக்கப்பட்ட சமயம் மற்றும் மொழிவாரி சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையம் தனது பரிந்துரையில் முஸ்லிம்கள் மற்றும் பவுத்தர்களின் கல்விநிலை குறித்து முஸ்லிம்கள் மற்றும் பவுத்தர்கள் கல்வி நிலையில் மிகவும் பின்தங்கியிருப்பதாகவும் குறிப்பாக தலித் மற்றும்ள பழங்குடியினருக்கு அடுத்த நிலையில் அவர்களின் கல்விநிலை இருப்பதாக ஆணையம் தெரிவித்துள்ளது.
இரண்டு பாகங்களைக் கொண்ட மிஸ்ரா ஆணையம் 449 பக்கங்களைக் கொண்டது. கிறிஸ்தவர்கள், ஜைனர்கள், பார்ஸிகள் முஸ்லிம்களை விட கல்வித் தரத்தில் சிறந்த நிலையில் இருப்பதாக குறிப்பிடும் மிஸ்ரா அறிக்கை சிறுபான்மையினரின் சமூக பொருளாதார பின்னடைவுக்கு அவர்கள் கல்வியில் பின் தங்கியிருப்பதை முக்கிய காராணமாக குறிப்பிட்டது.
சிறுபான்மையினர் குறிப்பாக முஸ்லிம்கள் அரசு வேலை வாய்ப்புகளில் மிகவும் குறைந்த பிரதிநிதித்துவம் வகிக்கின்றனர். சில துறைகளில் முஸ்லிம்களுக்கு அறவே வேலை வாய்ப்பில்லாத நிலை நிலவுகிறது.
சிறுபான்மையினருக்கு மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் 15 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.
சிறுபான்மை சமூகங்களில், பெரும்பான்மை சமூகமாக முஸ்லிம்கள் உள்ளனர்.இந்தியாவின் மொத்த சிறுபான்மை மக்கள் தொகையில் முஸ்லிம்கள் 73 சதவீதம் பேர் உள்ளனர். அதனை அடிப்படையாகக் கொண்டு முஸ்லிம்களுக்கு மத்திய அரசு வேலை வாய்ப்புகளில் 10 சதவீதமும் ஏனைய சிறுபான்மை சமூகத்தினருக்கு ஐந்து சதவீதமும் மத்திய அரசுப்பணிகளில் இடஓதுக்கீடு வழங்க ரங்கநாத் மிஸ்ரா ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

அரசியல் சாசனம் வழங்கிய உரிமைகள் மீட்கப்பட்டு உரிமைகள் காக்கப்பட பாடுபட்டோர் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.

Tuesday, December 15, 2009

நெல்லை ஏர்வாடியில் ஏழை பெண்களுக்கு நலஉதவி

திருநெல்வே­ மாவட்டம் ஏர்வாடியில் தமிழ்நாடு முஸ்­லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் கடந்த 04.11.2009 அன்று கிளைத் தலைவர் பக்ருதீன் அலி­ அஹமது தலைமையில் இஸ்லாமிய மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மவ்லவி. அப்துல் மஜித் மஹ்லரி ஷபாக்களின் தியாக வரலாறு என்ற தலைப்பிலும், மவ்லவி மிஸ்பாஹுல் ஹுதா முகரம் மாதத்தின் சிறப்பு என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.

ஜகாத் நிதியி­ருந்து, ஒரு சகோதரருக்கு தொழிலூ உதவியாக ரூ. 12.000 மும், மருத்துவ உதவியாக இரண்டு நபர்ககளுக்கு தலா ரூ. 3,000மும் வழங்கப்பட்டது.

குர்பானி தோல் வசூல் செய்து ரூ. 30,000த்தில் 7 நபர்களுக்கு தையல் எந்திரமும், ஒரு பெண்ணிற்கு மாவு அரைக்கும் கிரைண்டரும் வழங்கப்பட்டது.

தாராபுரத்தில் 76வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தமுமுகவின் 76வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிக்கப்பட்டது. இதனை தமுமுக தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அர்ப்பணித்தார். மாநிலச் செயலாளர் கோவை உமர், மாநில துணைச் செயலாளர் கோவை செய்யது ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
மாவட்ட, மாநகர, நகர, கிராம தமுமுக மற்றும் ம.ம.க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். பெருந்திரளான மக்கள் இந்த ஆம்புலன்ஸ் அர்பபணிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Saturday, December 12, 2009

குணங்குடி ஹனீபாவுக்கு பிணை மறுப்பு! நீதிமன்றங்கள் மதச்சார்புடையதாக மாறுகின்றன?

குணங்குடி ஹனீபாவுக்கு பிணை மறுப்பு! நீதிமன்றங்கள் மதச்சார்புடையதாக மாறுகின்றன?
Saturday, 12 December 2009 20:04 administrator

வழக்கறிஞர் புகழேந்தி, தமிழக மக்கள் உரிமை கழகத்தின் ஒருங்கிணைப்பு செயலாளர், சிறைக்கைதிகள் உரிமைப் பேரவையின் தலைவர். ரயில் குண்டு வெடிப்பு மற்றும் பல முஸ்லிம் சிறைவாசி களின் வழக்குகளை நடத்தி வருபவர். குணங்குடி ஹனீபாவின் வழக்கையும் இவர்தான் நடத்தி வருகிறார். அவர் மக்கள் உரிமைக்காக துணை ஆசிரியர் காஞ்சி ஜைனுல் ஆபிதீனுக்கு அளித்த நேர்காணல்.
கேள்வி: குணங்குடி ஹனீபாவின் மீதுள்ள குற்றச்சாட்டுக்கள் என்ன?புகழேந்தி: குணங்குடி ஹனீபா, ஜிஹாத் கமிட்டியின் தலைவராக இருந்தபோது கடந்த 15.2.1998 அன்று சிவகங்கை மாவட்டம் அனுமந்தகுடியில் தனது மகளின் திருமண நிகழ்ச்சியின் போது கைது செய்யப்பட்டார். ஜிஹாத் கமிட்டியை தமிழக அரசு தடை செய் திருந்ததால் தடை செய்யப்பட்ட ஜிஹாத் கமிட்டியின் தலைவராக செயல்பட்ட ஹனீபா, தேவகோட்டை நீதிமன்றத்தில் ரிமாண்ட் செய்யப்பட்டார்.அவர் கைது செய்யப்படுவதற்கு முன்பு தமிழகத்தில் 1997, டிசம்பர் 6 அன்று மூன்று இடங்களில் ரயில்களில் குண்டுகள் வெடித்தன. இதற்கு காரணம், இஸ்லாமிய பாதுகாப்பு படை என்ற அமைப்புதான் எனக்கூறி காவல்துறை அந்த சம்ப வத்தில் ஈடுபட்டவர்களை தேடிக் கொண்டிருந்தது.அப்போது சிறையில் இருந்த ஜிஹாத் கமிட்டியின் தலைவராக இருந்த குணங்குடி ஹனீபாவையும், பொதுச் செயலாளராக இருந்த அப்துல் ரஹீமையும் இந்த ரயில் வெடிகுண்டு வழக்கில் சம்பந்தப்படுத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.கேள்வி: ரயில் குண்டு வெடிப்பிற்கும் ஹனீபாவிற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லையா?புகழேந்தி: இல்லை. ஹனீபாவைப் பொறுத்தவரை வன்முறையில் நம்பிக்கை இல்லாதவர். பாட்டாளி மக்கள் கட்சியின் முதல் பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இப்போது முஸ்லிம் அமைப்புகளிலேயே பெரிதாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் தமுமுகவை நிறுவியவரும் அவர்தான். சிறந்த மனிதநேயவாதி.ஹனீபாவின் மீதும் ரஹீமின் மீதும் உள்ள குற்றச்சாட்டு என்னவென்றால், சென்னையில் ஜிஹாத் கமிட்டி அலுவலகத்தில் அவர்கள், ரயில் குண்டு வைப்பது பற்றி பேசிக் கொண் டிருந்ததாகவும், அப்போது அக் கட்ட டத்தின் உரிமையாளரும், அவரது நண்பரும் அலுவலகத்திற்கு வாடகை வாங்க வரும்போது அதைக் கேட்டு விட்டு போலீசில் சொன்னதாகவும் காவல்துறை ஒரு கதையைப்புனைந்து வழக்குப் பதிவு செய்தது. ஆனால் இந்த இரண்டு சாட்சிகளும், அவ்வாறு நடக் கவே இல்லை என நீதிமன்றத்தில் கூறி விட்டனர். இவர்களுக்கு எதிராக வேறு சாட்சிகளே இல்லை என்றாகிவிட்ட சூழ்நிலையில், விசாரணை நீதிமன்றமே இவர்களை விடுவித்திருக்க வேண்டும்.ஆனால் பலமுறை, விசாரணை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நடைபெறட்டும்; பிணையிலாவது விடுதலை செய்யுங்கள் என்று கேட்டபோது, பிணையில் விடுவிக்க மறுத்துவிட்டார்கள். இதையடுத்து உயர் நீதிமன்றத்தில் பிணை கேட்டு மனுச் செய்தோம்.

கேள்வி: உயர்நீதிமன்றம் ஏன் மனுவைத் தள்ளுபடி செய்தது?புகழேந்தி: ஏற்கனவே ஒருசில வருடங்களுக்கு முன்பு உயர்நீதிமன்றத்தில் பிணை கேட்டு மனுச் செய்தோம். ஆனால், வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது; இப்போது விடுவிக்க முடியாது என தள்ளுபடி செய்யப்பட்டது. இப்போது மனுச் செய்தால் வழக்கு முடி யப்போகிறது; இப்போது எதற்கு ஜாமீன் என்கின்றனர். குற்றச்செயலுக்கான தண்டனை காலத்தைவிட அதிக அளவில் விசாரணை சிறைவாசியாகவே சிறையில் வைப்பது கூடாது. உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதை சுட்டிக் காட்டியும் கூட உயர்நீதிமன்றம் பிணை மறுத்திருப்பது வேதனைக்குரியது.காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவில் கொலை செய்யப்பட்ட சங்கர ராமன் கொலை வழக்கில் அப்ரூவராக மாறிய சுப்பிரமணி என்பவர் காஞ்சி சங்கராச்சாரியரின் தூண்டுதல்தான் இக்கொலை நடந்தது என்று சாட்சி சொன்ன பின்னும் நீதிமன்றம் சங்கராச்சாரியை பிணையில் விட்டது.கொலைச் சதியில் சங்கராச்சாரியாரோடு ஈடுபட்ட சுப்ரமணியே சதியை ஒத்துக் கொண்டு சாட்சி சொன்ன சூழ்நிலையிலும் சங்கராச்சாரியை விடுவித்த நீதிமன்றம், இந்த வழக்கில், 2007லிலேயே சதியைக் கேட்டதாக சொல்லப்பட்ட இரண்டு சாட்சிகளும் பிறழ் சாட்சிகளாக (ஐர்ள்ற்ண்ப்ங்) மாறிய பின்னும் சாட்சியமே இல்லாமல் ஹனிபாவை சிறையில் வைத்திருப்பது மிகப்பெரும் மனித உரிமை மீறலாகும்.இந்த வழக்கில் இன்னொரு குற்றவாளியான முபாரக் அலிகான் என்பவர் மீது எவ்வித சாட்சிகளும் இல்லை. குற்றச் சாட்டும் இல்லை. கனி என்பவருக்கு பதிலாக தவறுதலாக இவ்வழக்கில் சேர்க் கப்பட்ட இவர் கடந்த 9 வருடங்களாக விசாரணைக் கைதியாக சிறையில் வாடி வருகிறார். இவரது மனுவையும் தள்ளுபடி செய்துள்ளது உயர்நீதிமன்றம். நீதிமன்றங்கள் மதச்சார்புடையதாக மாறிவருகின்றன என்று நான் குற்றம் சாட்டுகிறேன்.கேள்வி: இதுபோன்று வேறு ஏதாவது வழக்குகளில் இவ்வாறு அநீதி இழைக்கப்பட்டுள்ளதா?புகழேந்தி: ஏராளமான வழக்குகளை என்னால் கூறமுடியும். தமிழக காவல்துறை, முஸ்லிம்கள் மீது பொய் வழக்கு போடுவதை எந்த அரசு ஆட்சியில் இருந்தாலும் பாரபட்சமில்லாமல் செய்து வருகிறது.கடந்த 27.11.97 அன்று மாலை 5 மணி யளவில் சென்னை பத்திரிக்கையாளர் சங்கத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது குணங்குடி ஹனீபா, முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு இல்லை, எனவே அவர்கள் கத்தி வைத்திருக்க வேண்டும் என கத்தி கொடுத்ததாகக் கூறி தினமலர் பத்திரிக்கை செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. இந்த செய்தியின் அடிப்படையில் ஹனீபா மீது ஓர் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனைக் கொடுத்தாலே அதிகபட்சம் மூன்று மாதம் சிறை அல்லது 500 ரூபாய் வரை அபராதம் விதிக்கலாம். ஆனால் இந்த வழக்கிற்காக ஹனீபாவை 12 வருட காலமாக நீதிமன்றத்துக்கு இழுத்தடித்தன காவல்துறையும் நீதிமன்றமும்.இதைப்போல 19.5.95லில் தன்னை மத்திய சிறையில் தாக்கியதாக ஜோன்ஸ் என்ற காவலர் கொடுத்த புகாரின் பேரில் புகாரி, முஹம்மது அலி, மூஸா, முஹம்மது மூஸா, அஹமது நெய்னா, அபுபக்கர் சித்தீக், அப்துல் கலாம் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அதிகபட்சம் மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கலாம். ஆனால் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக காவல்துறை இந்த வழக்கில் காவல் நீட்டிப்பு (தங்ம்ஹய்க்) செய்து வருகிறது. நீதிமன்றமும் இதற்கு துணை புரிந்து வருகிறது. இது மட்டுமல்ல, வெளியே இருக்கும் நபர்கள் மீது பொய் வழக்கு போடும் காவல் துறை உள்ளே சென்ற பின்னும் பொய் வழக்குகளை போடுகிறது. உதாரணமாக அப்துல்ரஹீம் 11 வருடமாக சிறையில் கைதியாக இருக்கிறார். அவர் மீது மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த நேரத்தில் அவர் சிறையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. அதே போல முரளி என்ற ஆய்வாளர் கோவையில் முஸ்லிம்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியவர். இவரை கொலை செய்ய முயன்றதாக அமானி என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால் சம்பவம் நடந்ததாக சொல்லப்படும் நேரத்தில் அமானி வேறொரு வழக்கில் திருச்சி மத்திய சிறையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்று உதார ணங்களைக் கூறலாம்.இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி அடிப்படை உரிமைகளை பெறுவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால் நான் மேலே சொன்ன வழக்குகளை பார்க்கும் போது நீதிமன்றங்கள் முஸ்லிம் கைதிகளின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்க தவறிவிட்டன. இதே போன்று எண்ணற்ற சிறைக் கைதிகளின் உரிமை கள் மறுக்கப்படுகின்றன.கேள்வி: அநீதி இழைக்கப்பட்ட வர்கள் இழப்பீடு பெறமுடியுமா?புகழேந்தி: எந்தவொரு குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படாமல் இளமைப் பருவத்தில் சிறை சென்ற நபர் தனது குடும்பத்தைப் பிரிந்து, நோய்வாய்ப்பட்டு, வயது முதிர்ந்து, குற்றவாளி இல்லை என்று வெளியே வரும்போது இந்த நீதிமன்றங்களால் கைதிகளின் இளமையையோ, சிதைந்து போன அவர்களது குடும்பத்தையோ மீட்டுத்தர முடியுமா?அப்துல் நாசர் மதானி விஷயத்தில் என்ன ஆயிற்று? பலமுறை உயர்நீதிமன் றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் பிணை கேட்டார். தனது செயழந்த காலுக்கு மருத்துவ உதவி செய்வதற்காகவாவது பிணை கொடுக்கும்படி பலமுறை நீதி மன்றத்தை நாடினார். ஆனால் எந்த நீதிமன்றமும் அவருக்கு பிணை கூட அளிக்கவில்லை. இறுதியாக விசாரணை நீதிமன்றத்தால் குற்றமற்றவர் என்று 9 ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டார். அவருக்கு என்ன இழப்பீடு தரப்போகின்றன ஜாமீன் மறுத்த நீதிமன்றங்கள். இதேபோன்ற ஒரு நிலைதான் குணங்குடி ஹனீபாவிற்கும் ஏற்பட்டிருக்கிறது. 11 ஆண்டுகளாக விசாரணை சிறைவாசியாக இருக்கும் அவர் குற்றமற்றவர் என்று விடுவிக்கப்படும் போது அவர் இப்போது அடைந்திருக்கும் இழப்புகளை எவராலும் ஈடுசெய்ய இயலாது.கேள்வி: இவ்வழக்கில் மேல்முறையீடு செய்து உச்சநீதிமன்றம் செல்ல முடியுமா?புகழேந்தி: போகலாம். ஆனால் அதற்கு நிறைய செலவாகும். முஸ்லிம் கைதிகள் அனைவருமே ஏழ்மையான குடும் பத்தைச்சார்ந்தவர்கள். அவர்களது குடும்பமே சிதைந்து போயிருப்பதால் இந்த வழக்கை நடத்துவதற்கே சக்தியற்றவர்களாய் உள்ளனர். கணவரை இழந்த மனைவிகள், பாசத்துக்கு ஏங்கும் பிள்ளை கள், வயதான பெற்றோர்கள் லி இதுதான் அவர்களது குடும்ப நிலை. இந்த நிலையில் அவர்கள் விசாரணை நீதிமன் றங்களில் வழக்குகளை நடத்துவதற்கே சிரமப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.கேள்வி: குணங்குடி ஹனீபா எப்போது வெளியில் வரமுடியும்?புகழேந்தி: இந்த வழக்கு எப்போது முடிகிறதோ அப்போதுதான். தாமதிக் கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதி என்று தமிழக முதல்வர் அறிக்கை விட்டார். குணங்குடி ஹனீபா விஷயத்தில் அது தான் நடந்துகொண்டிருக்கிறது. இன்னும் இரண்டு மாதங்களில் ரயில் குண்டு வெடிப்பு வழக்கு முடிந்துவிடும் என அரசுத் தரப்பு சொல்லுகிறது. இதைத் தான் பல மாதங்களாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.கேள்வி: இதுபோன்ற அநீதிகளைத் தடுக்க என்னதான் வழி?புகழேந்தி: பாபரி மஸ்ஜித் இடிக் கப்பட்டதில் இருந்து முஸ்லிம்கள் மீதான தாக்குதலைத் தடுப்பதற்காக பல முஸ்லிம் இளைஞர்கள் முன்வந்தார்கள். இதன் விளைவாக அவர்களில் பலர் இன்று ஆயுள் கைதிகளாக, விசாரணைக் கைதிகளாக சிறையில் வாடிவருகின்ற னர். அவர்களை விடுவிக்க முஸ்லிம் சமுதாய அமைப்புகள் போராட முன்வரவேண்டும். அண்ணா பிறந்த நாளையொட்டி வருடாவருடம் 8 ஆண்டுகள் சிறையில் இருந்த ஆயுள் தண்டனை கைதிகள் விடுவிக்கப்பட்ட போது 10 வருடம் சிறைத் தண்டனை அனு பவித்த பாஷா போன்ற பல முஸ்லிம் கைதிகள் விடுவிக்கப்படவில்லை. இந்த அநீதிக்கெதிராக எங்கள் அமைப்பின் சார்பில் பேரணி நடைபெற்றது. இதில் பேரா. ஜவாஹிருல்லாஹ் அவர்கள் கலந்து கொண்டார். ஏராளமான த.மு.மு.க.வினர் கலந்து கொண்டனர். ஆனால் இது போதாது. முஸ்லிம் சமுதாய அமைப்புகள் வீரியமாகப் போராட முன் வராதது வருத்தமளிக்கிறது.இவர்களது விடுதலைக்காக அரசை பணியவைக்கும் போராட்டங்களை நடத்த வேண்டும். குறைந்தபட்சம் அவர்களது வழக்குக்கான பொருளாதார உதவிகள், குடும்பத்திற்கான உதவிகளையாவது செய்யலாம். சிறைக்கு நேரடியாகச் சென்று அவர்களது குறைகளை அறியலாம்.மேலும் முஸ்லிம் இளைஞர்கள் வழக்கறிஞராகப் பணியாற்றவும் முன்வர வேண்டும். இதன்மூலம் சமுதாயத்திற்கு எதிரான பொய் வழக்குகள், மனித உரிமை மீறல்களைத் தடுக்க முடியும்.

Friday, December 11, 2009

கோவையில் மவ்லவி. அப்துற் ரஹிம் மருத்துவமனை

கோவையில் மவ்லவி. அப்துற் ரஹிம் மருத்துவமனை

த மு மு க வின் மாநில செயலாளர் ஒருவரான (காலம் சென்ற ) மவ்லவி.அப்துல் ரஹீம் அவர்கள் 2005ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்திற்காக சேலம் வந்தார். பிறகு பிரசசாரத்தை முடித்து விட்டு சென்னை திரும்பும் போது. சேலம் ஆம்பூர் ரோடு அருகில் விபத்தில் வபாத்தானர் (இன்னாலில்லாஹி)
அப்துல் ரஹீம் அவர்கள் பெயரில் நாகூர்யில் சுனாமி பேரிடர் பாதுகாப்பு மையம் நிறுவப் பட்டது. அதை அடுத்து கோவையில் த மு மு க சார்பில் நினைவு மருத்துவ மனை துவக்கப்பட்டு 04 -12 -09 அன்று அர்ப்பணிப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த மருத்துவமனை அர்பணித்து தமுமுக பொதுச்செயலாளர் S.ஹைதர் அலி திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் தமுமுக மாநில செயலாளர் கோவை உமர், மாநில துனைச்செயலாளர் கோவை செய்யது மற்றும் அரசு மருத்துவமனை முதல்வர் டாக்டர் குமரன், அரசு மருத்துவமனை R M O டாக்டர் சிவப்பிரகாசம். தமுமுக மாவட்ட நிர்வாகிகள் அப்துல் பஷிர், ரபிக், அகமது கபீர் மனித நேய மக்கள் கட்சி மாவட்ட நிர்வாகிகள் சுல்தான் அமீர், ஷாஜகான், டி எம் எஸ். அப்பாஸ் ,அப்பாஸ், ஜபார், கவிஞர் ஹக், பாரக்துல்லாஹ். ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள். இதற்கான ஏற்பாடுகளை கோவை மாவட்ட மருத்துவ அணி நிர்வாகிகள் குனிசை அப்துல் ரஹ்மான், இப்ராஹிம், பாருக், பஷிர் செய்துயிருந்தார்கள்.

Monday, December 7, 2009

தமுமுக முயற்சியால்; I.N.T.J-வினர் விடுதலை

E-mailPrintPDF

பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட 17 வது ஆண்டு தினமான டிசம்பர் 6 அன்று சென்னையில் உள்ள உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தின் இல்லத்தை முற்றுகையிட முயன்ற எஸ்.எம். பாக்கர் தலைமையிலான இந்தியன் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் காலையில் கைதுச் செய்யப்பட்டனர். கைதுச் செய்யப்பட்டவர்களில் பெண்களும் அடங்குவர். வழக்கம் போல் இவர்கள் அனைவரும் மாலையில் விடுதலைச் செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காவல்துறையினர் இவர்கள் அனைவரையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்ப முடிவுச் செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜரப்படுத்தி புழல் சிறையில் அடைப்பதற்கான ஏற்பாடுகளை மாலை 6 மணியளவில் காவல்துறை செய்வதற்கு தொடங்கியது. இதற்காக பெண்கள் மற்றும் குழந்தைகளை வீட்டிற்குச் செல்லுமாறு காவல்துறையினர் வற்புறுத்தினர். ஆனால் பெண்கள் மறுத்துவிட்டு உறுதியாக இருந்தனர்.இதனை தொடர்ந்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்விடமும் பொதுச் செயலாளர் ஹைதர் அலியிடமும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உயர்காவல்துறை அதிகாரிகளை தொடர்புக் கொண்ட தமுமுக தலைவர் அடையாளபூர்வமாக முற்றுகைப் போராட்டத்தை நடத்தியவர்களை சிறையில் அடைத்தால் அது பெரும் அநீதியாகும் என்று குறிப்பிட்டார். உள்துறை அமைச்சரின் வீடு முற்றுகையிடப்பட்டுள்ளதால் நாங்கள் அவர்களை சிறையில் அடைக்கின்றோம். நாளை அவர்கள் பிணையில் வெளியில் வந்து விடலாம் என்று காவல் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே வள்ளுவர் கோட்டம் அருகில் ஐ.என்.டி.ஜே.வினர் வைக்கப்பட்டிருந்த மாநகராட்சி பள்ளிக்கு அருகில்; தென்சென்னை மாவட்டத் தலைவர் சீpனி முஹம்மது தலைமையில் தமுமுவினர் பெருமளவில் கூடினர். தொடர்ந்து தமுமுக தலைவர் உயர் காவல் அதிகாரிகளிடம் கைதுச் செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலைச் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தி வந்தார். இச்சூழலில் இரவு 8.15 மணியளவில் கைதுச் செய்யப்பட்ட பாக்கர் தலைமையிலான அனைவரும் விடுதலைச் செய்யப்படுவதாக தமுமுக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்விடம் உயர் காவல் அதிகாரிகள் முதலில் தெரிவித்தனர். அதன் பிறகு அனைவரும் விடுதலைச் செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்வை தொடர்புக் கொண்ட எஸ்.எம். பாக்கர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். சமுதாய ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி இது என்று குறிப்பிட்டார். கைதான பெண்களும் சிறைக்குச் செல்ல உறுதியாக இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
LAST UPDATED ( SUNDAY, 06 DECE

டிசம்பர்-06 ஸ்தம்பித்தது சென்னை அண்ணாசாலை

அண்ணாசிலை எதிரே தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் பாபர் மஸ்ஜிதை இடித்த குற்றவாளிகளை கைது செய்ய கோரி மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்திற்கு தமுமுக பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி கண்டன சிறப்புரை ஆற்றினார். இதில் ஆயிரக்கணக்கானோர் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

Saturday, December 5, 2009

கோவையில் மருத்துவமனை துவக்கம் ..........

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்

குனியமுத்தூர் நகரம் 2வது வார்டு கிளையின் சார்பாக

மர்ஹீம் மெளலவி அப்துல் ரஹிம்

மருத்துவமனை

அர்ப்பணிப்பு நிகழ்ச்சி கோவையில்....

நாள் : இன்ஷா அல்லாஹ் 04 - 12 - 09 வெள்ளிக்கிழமை
மாலை : 6 -00
மணி
இடம் : த மு மு க அலுவலகம், குனியமுத்தூர்,
தலைமை : இப்ராஹிம்மாவட்ட செயலாளர், மருத்துவ சேவை அணி
வரவேற்புரை : பாருக்குனிசை நகர த மு மு க தலைவர்

மருத்துவமனை அர்பணித்து சிறப்புரை
சகோ. எஸ் . ஹைதர் அலி அவர்கள்

மாநில பொதுச் செயலாளர், த மு மு க

எழுச்சியுரை

சகோ. இ . உம்ர் அவாகள்

மாநில செயலாளர், த மு மு க

சகோ. கோவை செய்யது அவர்கள்

மாநில துனைச் செயலாளர், த மு மு க

வாழ்த்துரை

திரு, வேலுமணி. M L A

அ தி மு க, சட்டமன்ற உறுப்பினர்

திரு, டாக்டர். சிவப்பிரகாசம் M. B. B. S. D. A

கோவை அரசு மருத்துவமனை R. M. O

நன்றியுரை

பஷிர்
கிளை செயலாளர். த மு மு க

வேதாரண்யம் பள்ளி குழந்தைகள் வேன் விபத்து மீட்பு பணியில் தமுமுக

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கலைவாணி மழலை பள்ளியை வேன் வழக்கம் போல் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு காலை பள்ளிக்கு சென்ற நேரத்தில் கத்திரிபுலம் என்ற பகுதியில் சென்ற வேன் சென்று கொண்டிருந்தபோது, அருகில் உள்ள குளத்தில் கவிழ்ந்தது.

இதில் ஆசிரியை குழந்தைகள் உள்பட 10 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். இந்த வேனில் ஆசிரியைகள் உள்பட 25 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் விபத்தில் சிக்கியுள்ள குழந்தைகளை மீட்கும் பணி நடந்து வருகிறது. இதுவரை 6 குழந்தைகள் அருகே உள்ள வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு மருத்தவமனை அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணியில் தமுமுக மற்றும் ம.ம.க தொண்டரணியினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விபத்து வேன் ஒட்டுநர் அலைபேசியில் கவனக்குறைவால் (செல்போனில் பேசிக்கொண்டே சென்றதால்) ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.விரிவான செய்திகள் இன்ஷா அல்லாஹ்