Thursday, April 30, 2015

இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் மமக செயலாளராக அன்வர் அலி

மனிதநேய மக்கள் கட்சி தலைமையால் இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் மாவட்ட செயலாளராக;B.அன்வர் அலி அவர்கள் நியமனம்....இவரின் சேவை தொடர ஏன்னுடைய துஆக்களுடன் வாழ்த்துக்கள்

Saturday, April 25, 2015

நேபாள மக்களின் துன்பத்தில் பங்கேற்கிறோம்! மனிதநேய மக்கள் கட்சி அறிக்கை

மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி வெளியிடும் அறிக்கை:
இன்று (25.04.2015) நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் ஏராளமனோர் பலியாகியும், ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்துள்ளதும் பெரும் வேதனை ஏற்படுத்தியுள்ளது.
பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ள நேபாள மக்களின் துயரத்தில் மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்கிறது.
இந்நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
பெரும் துயரில் சிக்கியிருக்கும் நேபாள மக்களுக்கு இந்திய அரசு போர்க்கால அடிப்படையில் உதவிகளை வழங்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இவண்
(எம். தமிமுன் அன்சாரி)

Monday, April 20, 2015

தமுமுக சர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கேரிக்கை!

இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர்:M.சாதிக் பாட்சா அவர்கள் இராமநாதபுரம் கீழக்கரை(ரயில்வே சாலை)நெடுஞ்சாலைக்கு கீழக்கரை சமுதாய வள்ளல் பி.எஸ்.அப்துல் ரஹ்மான் பெயர் வைக்க மாவட்ட ஆட்சியரிடம் தமுமுக சர்பாக கேரிக்கை வைத்தார்கள்....

வெளிநாட்டிலிருந்து அனுப்பும் பணத்திற்கு கமிசன் தொகை உயர்வு: மோடி அரசிற்கு ஜவாஹிருல்லா கடும் கண்டனம்

துபாய் வருகை தந்த மமக சட்டமன்ற தலைவர் ஜவஹிருல்லாஹ் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது தங்களது வீடு வாசல் குடும்பம் தாய் நாட்டை பிரிந்து தியாகம் செய்து கடுமையாக உழைத்து வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் வெளிநாட்டிலிருந்து அனுப்பு பணத்திற்க்கான கமிசன் தொகையை மத்திய அரசாங்கம் உயர்த்தியுள்ளது கடும் கண்டனத்துக்குறியது. 
இதனால் வெளிநாட்டில் பணி புரியும் ஏழை தொழிலாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள். சிலர் சிறிய தொகைதானே என்கிறார்கள் ஆனால் ஏழை தொழிலாளர்களின் மாத வருமானத்தை ஒப்பிடும்போது பெரும் தொகையாகும்.2016ல் இன்னும் உயரும் என சொல்கிறார்கள்.
உடனடியாக இதனை ரத்து செய்ய வேண்டும்.வெளிநாடு வாழ் இந்தியர்களின் நலனை பற்றி பேசும் மோடி அரசாங்கம்தான் மற்றொரு புறம் இது போன்ற‌ வேலையை செய்கிறது.
மேலும் வெளிநாடுகளில் வாழ்பவர்கள் குறிப்பாக தமிழர்கள் இறந்து விட்டால் அவர்களின் உடலை தாயகம் எடுத்து வருவதற்கும் ,உடல் நிலை குறைபாடு ஏற்பட்டால் உதவுவதற்கும் இன்னும் பல்வேறு நல திட்டங்களை செயல்படுத்துவதற்கும் ளிநாட்டு வாழ் தமிழர் நலனை பாதுகாக்கும் வகையில் தமிழகத்தில் வெளிநாட்டு வாழ் தமிழர் நலச் சட்டம், 2011ல் நிறைவேற்றப்பட்டது. 
இதன்படி, வெளிநாட்டு வாழ் தமிழர் நலனுக்காக, தனி நிதியம் உருவாக்க வழி செய்யப்பட்டு. வாரியம் ஒன்றை உருவாக்கவும், சட்டம் அனுமதி அளிக்கிறது. ஆனால் இது வரை இச்சட்டம் செயல்படுத்தபடாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் நிறைவேற்ற கோரி போராட்டங்கள் நடத்துவது குறித்து எங்கள் கட்சி சார்பாக ஆலோசிக்கபடும்.
கடல் அட்டைக்கு தடை விதித்தது அப்போதைய மத்திய திமுக அமைச்சராக இருந்த டி ஆர் பாலுவின் தவறாகும் உலகின் பல்வேறு நாடுகளில் கடல் அட்டைக்கு தடையில்லை லட்சக்கணக்கில் பெருகும் இனமான‌ கடல் அட்டை அழியும் இனமல்ல ஆனால் இதனை பிடிப்பதாக கூறி ராமநாதபுரம் மாவட்டத்தின் ராமேஸ்வரம் ,கீழக்கரை, மண்டபம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மீனவர்களை கைது செய்வது கண்டிக்கதக்கது. 
தடையை நீக்குவது குறித்து அரசாங்கத்திடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன் ஆனால் எவ்வித பயனும் இல்லை. வன உயிரனங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும் மத்திய அரசாங்கம் மனித உயிர்களை பற்றி கவலைப்பட்டதாக தெரியவில்லை காட்டு பன்றியை கொன்றால் ஜெயில்லில் தள்ளுகிறார்கள் ஆனால் ஆந்திராவில் 20 அப்பாவி தமிழர்களை சுட்டு கொன்றுள்ளார்கள்
நெஞ்சை உருக்கும் இச்சம்பவத்திற்கு எவ்வித நடவடிக்கையும் இல்லை கேள்வியும் இல்லை கேட்பாறும் இல்லை .அனைத்தையும் பேஸ்புக்கிலும் ,டிவீட்டரிலும் பதிவு செய்யும் பிரதமர் மோடி ஏன் இந்த படுகொலை குறித்து ஒரு வார்த்தை கூட கண்டனம் தெரிவிக்கவில்லை
இந்திய வரலாற்றிலேயே இப்படி ஒரு பிரதமரை கண்டதில்லை.கோட் அணியவே கோடிக்கணக்கில் செலவழிக்கிகிறார் தன்னை முன்னிலை படுத்துவதில் மோடிக்கு நிகர் மோடிதான் அதில் ஒன்றுதான் தன்னுடைய பெயரை தன் தன் சட்டையில் பதித்தது இது போன்று முன்னாள் எகிப்த் அதிபர் முபாரக் என்பவரும் செய்துள்ளார். 
தற்போதை மோடி அரசாங்கம் ஏழை எளிய மக்களுக்கு எதிரான அரசாங்கம். ஐக்கிய முற்போக்கு கூட்டணி கொண்டு வந்த ஏழைகளுக்கு உதவும் திட்டமான‌ 100 நாள் வேலை வாய்ப்பை ரத்து செய்து ஏழைகளின் வயிற்றில் அடித்து விட்டார்கள். 
ஆந்திராவில் சுட்டுகொல்லப்பட்ட திருவண்ணாமலை பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் ஆந்திராவிற்கு சென்றதற்கு முக்கிய காரணம் இது போன்ற திட்டத்தை ரத்து செய்தததால்தான் ஏற்பட்ட வேலை இல்லா நிலை என்பதை உண்மை அறியும் குழுவில் இடம்பெற்ற நான் அறிந்தேன்
அதே போன்று பேசுவது ஒன்று செயல்படுத்துவது வேறொன்று மோடி அவர்கள் வெளிநாடுகளில் மதசார்பின்மை பற்றி பேசுகிறார் ஆனால் இங்கே அவரது கட்சியை சார்ந்தவர்கள் மத நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் பேசி வருகிறார்கள். 
மோடி ஏன் இதனை கண்டிக்கவில்லை .தற்போதையை மோடி அரசில் பெரும் கோடிஸ்வரார்கள் மாபெரும் கோடீஸ்வரர்கள் ஆகிறார்கள் ஆனால் ஏழை எளிவர்கள் பரம ஏழைகளாக‌ வறுமையில் உழல்கிறார்கள் ஏழைகளை வறுமையில் ஆழ்த்தும் பல திட்டங்களை செயல்படுத்துகிறார்கள்.
அதில் ஒன்று நிலம் கையகப்படுத்தும் சட்டம் தமிழக அரசாங்கத்தின் செயல்பாடு ஓரளவிற்கு திருப்தி அளிக்கிறது. எஸ் பி பட்டிணம் வாலிபர் சுட்டு கொல்லப்பட்டது தொடர்பாக வரலாற்றிலேயே முதல் முறையாக போலீஸ் எஸ் ஐ மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது வரவேற்கதக்கது.
அதே போன்று முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஸ்ணமூர்த்தி இவரை போன்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை புகழ்ந்தவர்கள் யாருமில்லை ஆனாலும் அவர் மீது எவ்வித பாரபட்சமும் இல்லாமல் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் சில திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. 
அத்திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடு

Friday, April 3, 2015

தமிழக மீனவர் பிரச்னை - இலங்கையின் மிரட்டலுக்கு மோடி அரசின் மெத்தனமே காரணம்

தமிழக மீனவர் பிரச்னை - இலங்கையின் மிரட்டலுக்கு மோடி அரசின் மெத்தனமே காரணம்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவரும், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., வெளியிடும் அறிக்கை:
தமிழக, இலங்கை மீனவர்களிடையே சென்னையில் கடந்த மார்ச் 24ம் தேதி மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தையின்போது தமிழக மீனவர்கள் சார்பில், ஆண்டுக்கு 83 நாட்கள் இலங்கை கடல்பகுதியில் மீன் பிடிக்கும் உரிமை கோரியிருந்தனர். இந்த கோரிக்கை குறித்து இலங்கை மீனவர்கள் இலங்கை அதிபரிடம் ஆலோசித்து விட்டு அறிவிப்பதாக இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தையின் போது தெரிவித்தனர்.
கொழும்புவில் மீனவ தொழிற்சங்க பிரதிநிதிகளை சந்தித்துப் பேசிய இலங்கை அதிபர் சிறிசேனா, "இலங்கைக் கடல் எல்லையில் மீன்பிடிக்க தமிழக மீனவர்களுக்கு அனுமதி அளிக்கவில்லை. தமிழக மீனவர்கள் இலங்கை கடல் பகுதியில் மீன்பிடிக்க அனுமதிக்க முடியாது என்றும் அத்துமீறி நுழையும் தமிழக மீனவர்களின் படகுகளை சிறைபிடிக்குமாறு கடற்படைக்கு உத்தரடிவிட்டுள்ளார். மேலும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் மீன் பிடித்தலை நிறுத்திக் கொள்ளுமாறும் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை அதிபர் சிறிசேனாவின் இத்தகைய அறிவிப்பு மிகவும் கண்டனத்திற்குரியது, இப்பிரச்சினையில் இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே இலங்கை கடற்பகுதிக்குள் நுழையும் தமிழக மீனவர்களை சுட்டுத்தள்ளுவோம் என உலகத்தில் எந்த பிரதமரோ, அதிபரோ சொல்லாத கூற்றை தெரிவித்துள்ளார். இந்தியாவின் வலிமையான பிரதமர் என்று சொல்லப்படுகின்ற மோடி, ரனில் விக்ரம சிங்கேவின் பேச்சுக்கு உரிய முறையில் கண்டனம் தெரிவிக்காதது தான் தற்போது தமிழக மீனவர்களின் பராம்பரிய மீன்பிடி உரிமையை மறுத்துள்ளது. இலங்கை அரசின் இந்த அறிவிப்பு தமிழக மீனவர்களின் வாழ்வுரிமையை கேள்விக் குறியாக்கி உள்ளது. இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுக்கான மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கை மீனவர்களுக்குகென இந்திய கடல் பகுதியில் உள்ள பர்ஜூ பேங்க் இலங்கைக்கு குத்தக்கைக்கு விட்டதுபோல், இலங்கை கடல் பகுதியில் இந்திய மீனவர்களுக்குகென ஒரு பகுதியை குத்தக்கைக்கு எடுக்க வேண்டும்.
மேலும் உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தினை நிர்மூலமாக்கும் வகையில் அந்நிய நாட்டு மீன்பிடி கப்பல்களை அனுமதி அளிக்கக்கோரும் மீனா குமரி அறிக்கையினை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் எனவும் மத்திய அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
இவண்
(ஒ-ம்)எம்.எச்.ஜவாஹிருல்லா

சாலை விபத்தில் மார்க்க அறிஞர்கள் 9 பேர் உயிரிழப்பு : தமுமுக ஆழ்ந்த இரங்கல்