Monday, June 24, 2013

புதியதலைமுறையில் ஜவாஹிருல்லாஹ் விவாதம்

கீழக்கரையில் தமுமுக சார்பில் ஜூலை 6 பேரணி ஏன்? தெருமுனை பிரச்சாரம் மற்றும் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

கீழக்கரையில் தமுமுக சார்பில் ஜூலை 6 பேரணி ஏன்? தெருமுனை பிரச்சாரம் மற்றும் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

கீழக்கரை நகர் தமுமுக சார்பில் வள்ளல் சீதக்காதி சாலையில் முனைவர். ஜவாஹிருல்லா.எம்.எல்.ஏ தமுமுக கொடியை ஏற்றிவைத்தார்.

மேலும் ஜூலை 6 பேரணி ஏன்? என்ற தலைப்பில் தெருமுனை பிரச்சாரம் மாவட்டத் தலைவர் சாதிக் தலைமையில் நகர் தலைவர் முகம்மது சிராஜுதீன் வரவேற்புரை ஆற்றினார்.  ஜூலை 6 பேரணி ஏன்? என்ற தலைப்பில் தலைமை கழக பேச்சாளர் கோவை. ஜெய்னுல் ஆப்தீன் சிறப்புரையாற்றினார்



நன்றியுரையை நகர் மூத்த தலைவர் அன்பின் அசன் நிகழ்தினார். நிகழ்ச்சிக்கு மாவட்ட நிர்வாகிகள் நகர் தமுமுக  மமக நிர்வாகிகள் மற்றும் திரளாக மக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி ஏற்பாட்டினை நகர் துணை தலைவர் கௌஸ் செயலாளர் அமீன், இக்பால் துணை செயலாளர்   இஞ்சினியர் நசீர், சலீம், அமீன், PRO நாசர்ஓன்றிய செயலாளர். சாதிக் மற்றும் வளைகுட நிர்வாகி கீழை. இர்பான் ஆகியோர் சிறப்பான ஏற்பாடு செய்திருந்தனர்.

ஜூலை 6 பேரணி பரப்புரை வீடியோ

Saturday, June 22, 2013

இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் முனைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா எம்.எல்.எ. கீழக்கரை நகராட்சியில் அதிரடி ஆய்வு:

இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் முனைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா எம்.எல்.எ. கீழக்கரை நகராட்சியில் அதிரடி ஆய்வு:








21.06.2031 வெள்ளிக்கிழமை மாலை ஜவாஹிருல்லா எம்.எல்.எ கீழக்கரையில் திடீர் ஆய்வு மேற்கொன்டார். கீழக்கரை நகராட்சியின் வள்ளல் சீதக்காதி சாலை, கலங்கரை விளக்கம் பகுதி, குத்பா பள்ளிவாசல் தெரு, ஜின்னா தெரு, மேலதெரு, பண்ணாட்டார் தெரு போன்ற பகுதிகளில் நகராட்சி ஆணையாளர் உட்பட அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார். தெருவோர கழிவு நீர் கால்வாய்கள் திறந்த நிலையில் ஆபத்தான முறையில் இருப்பது, குப்பைகள் கொட்ட போதிய தொட்டிகள் இல்லாமல் இருப்பது, வெள்ளிக்கிழமைகளில் கழிவு நீர் சாலைகளில் ஆறாக ஓடுவது, தெருவிளக்குகள் சில இடங்களில் சரியாக இல்லை போன்ற குறைகளை பொதுமக்கள் தெரிவித்தனர். உடனுக்குடன் நகராட்சி அதிகாரிகளிடம் எம்.எல்.எ விளக்கம் கேட்டு உடனடியாக நிவர்த்தி செய்யுமாறு அறிவுறுத்தினார். ஆங்காங்கே பெருமளவு மக்கள் திரண்டு வந்து எம்.எல்.எ விடம் கோரிக்கைகளை கூறினார்கள். பின்னர் நகராட்சி அலுவலகம் சென்று நகராட்சி கவுன்சிலர்களிடம் கலந்துரையாடல் நடத்தினார். நகராட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து ஆணையாளரிடம் கேட்டறிந்து உரிய அறிவுறுத்தல்களை வழங்கினார்.பொதுமக்கள் கூறிய குறைகளை நிவர்த்தி செய்திட கால அவகாசம் குறித்து ஆணையாளரிடம் கேட்டார் ஜூலை 15க்குள் நிவர்த்தி செய்வதாக ஆணையாளர் உறுதி அளித்தார். அதன்பின் அங்கு வந்த செய்தியாளர்களிடம் எம்.எல்.எ பேசினார். இந்த அதிரடி ஆய்வின் போது மாவட்ட தலைவர் சாதிக் பாட்சா, மாவட்ட செயலாளர் அன்வர் அலி, கீழக்கரை நகர் தலைவர் சிராஜுதீன், நகர் துணை தலைவர் கவுஸ் முகைதீன், நகர் நிர்வாகி சாதிக், இஞ்சினியர் நசீர், கீழை இர்பான், திருப்புல்லாணி ஒன்றிய தலைவர் ரயிஸ் இப்ராஹிம், உள்ளிட்ட த.மு.மு.க.,ம.ம.க.நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் இந்த ஆய்வின்போது கீழக்கரை நகர் நல ஆர்வலர்கள் தங்கம் ராதாகிருஷ்ணன், கவுன்சிலர் முகைதீன், போன்றவர்களும், செய்தியாளர்களும் உடனிருந்தனர்.

கீழக்கரைஇல் கோட்டையை நோக்கி கோரிக்கை பேரணி ’குறித்த தெருமுனை விளக்க பொதுக்கூட்டம்


21.06.2013 அன்று வரும் ஜீலை 6 அன்று தமுமுக நடத்தும் கோட்டையை நோக்கி கோரிக்கை பேரணி ’குறித்த தெருமுனை விளக்க பொதுக்கூட்டம். இடம் கீழக்கரை் முஸ்லிம் பஜாா சிறப்புரை கோவை பீா்   த.மு.மு.க.மாவட்ட  நிர்வாகிகள் சாதிக் பாஷா, பஷர் அஹ்மத் மற்றும் நகர நிர்வாகிகள்  சிரஜுடீன்,  ஈசி சாதிக் மற்றும் த.மு.மு.க., ம.ம.க. வார்டு நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Friday, June 21, 2013

கீழக்கரை நகரில் ஜவாஹிருல்லா MLA நாளை (21.06.2013) முகாமிட்டு ஆய்வு - பொது மக்கள் குறைகளை நேரில் தெரிவிக்கலாம் என TMMK தகவல் !

இராமநாதபுரம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சட்ட மன்ற உறுப்பினர் முனைவர். பேராசிரியர் M.H.ஜவாஹிருல்லா அவர்கள் கீழக்கரை நகருக்கு அடிக்கடி வந்து பொதுமக்கள் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். 
 
இந்நிலையில் நாளை வெள்ளிக் கிழமை மாலை 4.30 மணியளவில் சட்ட மன்ற உறுப்பினர் அவர்கள் கீழக்கரையில் முகாமிட்டு, பொதுமக்களின் குறைகளை நேரில் விசாரித்து ஆவன செய்வார்கள் என கீழக்கரை நகர் த.மு.மு.க சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொது மக்களில் பலர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அவர்களுள் சிலர் கலக்கம் அடைந்துள்ளனர்.

Saturday, June 15, 2013

இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் முனைவர் ஜவாஹீருல்லாஹ்வின் நேரடி முயற்சியால் மின் கட்டண வசூல் மையம் கீழக்கரை பேருந்து நிலையத்தில் திறக்கபட்டது.


இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் முனைவர் ஜவாஹீருல்லாஹ்வின் நேரடி முயற்சியால் மின் கட்டண வசூல் மையம் கீழக்கரை பேருந்து நிலையத்தில் திறக்கபட்டது. கீழக்கரை நகராட்சிக்கும் மின்வாரியத்திற்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடுகளை தனி கவனம் செலுத்தி கால தாமதம் ஆகும் நிலையில் இருந்த இம் மையத்தை துரித நடவடிக்கை எடுத்து மக்கள் பயன் பாட்டிற்கு பெற்று தந்தார். கீழக்கரை சமூக அக்கரையாளர்கள் அனைவரும் நன்றி தெருவித்தனர்.

அல்ஹம்துலில்லாஹ்..............

இது சம்பந்தமாக நானும் கீழக்கரை நகர் தமுமுக தலைவர் மற்றும் PRO நாசர். இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் முனைவர் ஜவாஹீருல்லாஹ் அவர்களை சந்தித்து வலியுரித்திய போது எங்கள் முன்னால் சம்மந்த பட்ட அதிகாரியை தொடர்பு கொண்டு தாமதத்துக்கான காரணத்தை கேட்டார். மின்வாரிய அதிகாரிகள் மென்பொருள்கள் பெருத்தும் பணிகள் நடைபெறுகின்றது என்று பதில் அழித்தனர் என்பது குறிப்பிடதக்காது.

கீழை. இர்பான்

Tuesday, June 11, 2013

கீழ‌க்க‌ரை தமுமுக நகர் தலைவர் சிராஜுதீன் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது




இது  குறித்து தமுமுக நகர் தலைவர் சிராஜுதீன் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது

தற்போது பள்ளிகள் தொடங்கி விட்டதால் பள்ளி மாணவ மாணவியர்களை ஏற்றி செல்லும் வாகனங்கள் செயல்பட  தொடங்கி விட்டது.

கீழ‌க்க‌ரையில் அதிக‌ அளவில் ஆம்னி வாக‌ன‌ங்கள் மற்றும் ஆட்டோக்கள் ப‌ள்ளி குழ‌ந்தைகளை மாத வாடகை அடிப்படையில் அழைத்து செல்கின்ற‌ன‌ர்.இவ‌ற்றில் ப‌ல வாடகைக்கு இயக்க முறையான‌ அனுமதி பெறவில்லை மேலும் சில‌ருக்கு இதில் ஓட்டுந‌ர் லைசென்ஸ் இல்லை.சிலர் கூடுதல் வாடகைக்க்காக அதிக அளவில் ப‌ள்ளி குழ‌ந்தைக‌ளை புளி மூட்டை போல் அடைத்து ஏற்றி செல்கின்ற‌னர்.புத்தக பைகளை அதிக அளவில் மேற்கூரையில் ஏற்றுவதால் வளைவுகளில் கவிழும் ஆபத்து உள்ளது .

மேலும் தெருக்க‌ளிலும்,வ‌ளைவுக‌ளிலும் அசுர‌ வேக‌த்தில் செல‌வதால் அடிக்க‌டி சிறு சிறு விப‌த்துக‌ளும் ஏற்ப‌டுகின்ற‌ன‌.அரசு அதிகாரிகள் போக்குவரத்து வாகனங்களை முறைப்படுத்த வேண்டும்.   ஓட்டுநர்களூம் பொறுப்புணர்ந்து பாதுகாப்பான முறையில் அழைத்து செல்லும் வேண்டும்.பெற்றோர்களும் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.


news by 
kilakaraitimes.blogspot.com

சன்நியூஸின் விவாதமேடையில் பேரா.ஜவாஹிருல்லாஹ்

ராமாநாதபுரம் பெருங்குளத்தில் தமுமுகவின் 106 ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

                                       
இன்று 11-06-2013 ராமாநாதபுரம் பெருங்குளத்தில் தமுமுகவின் 106 ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் மூத்த தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கண்ணியத்திற்குரிய பேராசிரியர் அவர்கள் கலந்துகொண்டு அர்ப்பணித்து உரை நிகழ்த்துகிறார்கள். அதனை யொட்டி வழியெங்கு தமுமுக கொடி பட்டொளி வீசி பறக்க தொண்டர்கள் அணிவகுத்த வண்ணம் உள்ளனர், தற்போதைய படம்.