Saturday, November 27, 2010

கீழக்கரையில் ஏடிஎம் மையங்கள் அடிக்கடி மூடல்: பொதுமக்கள் அவதி

கீழக்கரை,நவ. 24: கீழக்கரையில் அடிக்கடி ஏடிஎம் மையங்கள் மூடிக்கிடப்பதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.
கீழக்கரையில் பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி,
ஐசிஐசிஐ வங்கி, பாண்டியன் வங்கி, ராமநாதபுரம் மத்திய கூட்டுறவு வங்கி என பல்வேறு வங்கியின் கிளைகள் செயல்பட்டு வருகின்றன.
அனைத்து வங்கிகளும் பாரத ஸ்டேட் வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம் மையங்களைச் சார்ந்தே செயல்பட்டு வருகின்றன. இந்த இரண்டு வங்கிகளைத் தவிர மற்ற வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம் கார்டுகளை மட்டும் வழங்கி விட்டு ஏடிஎம் மையங்கள் அமைக்காமல் உள்ளன.
இதுசம்பந்தமாக பாரத ஸ்டேட் வங்கி மேலாளர் தங்கவேல் கூறியதாவது:
கீழக்கரையில் அடிக்கடி மின்சாரம் தடைபடுவதால் ஏடிஎம் மையத்தில் இருக்கும் பேட்டரி 30 நிமிடங்கள் மட்டுமே வேலைசெய்வதாலும், எங்களது கிளையின் மூலமாக குறிப்பிட்ட தொகை மட்டுமே வைப்பதற்கு அனுமதி இருப்பதாலும் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது.
இது விரைவில் சரி செய்யப்படும் என்று அவர் கூறினார்.ஐசிஐசிஐ வங்கி கிளஸ்டர் மேலாளர் ரங்கராஜ் கூறியதாவது: மின்சாரம் தடைபட்டவுடன் 30 நிமிடங்கள் மட்டுமே ஏடிஎம் இயந்திரம் வேலைசெய்கிறது என்று எங்களது கிளையின் சார்பாக தலைமைஅலுவலகத்துக்குத் தகவல் தெரிவித்து விட்டோம். இரண்டு நாள்களில் சரியாகிவிடும் என்று கூறினார்.

Thursday, November 25, 2010

டிசம்பர் 6 அன்று மாவட்டத் தலைநகரங்களில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் - தமுமுக அறிவிப்பு

தமிழ்நாடு முஸலிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் பத்திரிகை அறிக்கை:தமிழ்நாடு முஸலிம் முன்னேற்றக் கழகத்தின் தலைமை நிர்வாகக்குழுக் கூட்டம் இன்று எனது தலைமையில் சென்னையில் நடைபெற்றது. தமுமுகவின் பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி, பொருளாளர் ஓ.யூ. ரஹ்மத்துல்லாஹ் உள்ளிட்ட தலைமைக்கழக நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது: ”இந்திய ஒருமைப்பாட்டின் சின்னமாகத் திகழ்ந்த வரலாற்றுச் சிறப்புமிகு பாப்ரி பள்ளிவாசல் 1992 டிசம்பர் 6 அன்று மதவெறி கும்பலால் இடித்து நொறுக்கப்பட்டு 18 ஆண்டுகள் நிறைவடைகிறது.பாப்ரி பள்ளிவாசல் நிலம் தொடர்பாக சமீபத்தில் அலஹாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு நியாயவான்களால் விமர்சிக்கப்பட்டு தற்போது அது உச்சநீதிமன்றத்தின் மேல்முறையீட்டுக்குச் சென்றிருக்கிறது.அதேநேரம் பாப்ரி பள்ளிவாசலை இடித்தது தொடர்பான வழக்கு ராய்பரேலி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதுகுறித்து அமைக்கப்பட்ட -பர்ஹான் ஆணையம், அத்வானி, வாஜ்பேயி உள்ளிட்ட 68 பேரை குற்றவாளிகள் என அறிவித்தது.இந்நிலையில் 1995 முதல் கடந்த 16 ஆண்டுகளாக தமுமுக தமிழகத்தில் ஜனநாயக வழியில் ஒவ்வொரு டிசம்பர் 6 அன்றும் அறவழிப் போராட்டங்களை நடத்தி வருகிறது.அதேபோல் இவ்வருடம் உச்சநீதிமன்றம், 1) பாப்ரி பள்ளிவாசலை இடித்த லிபர்ஹான் ஆணையம் சுட்டிக்காட்டிய குற்றவாளிகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், 2) அத்வானி உள்ளிட்ட பாப்ரி பள்ளிவாசலை இடித்த குற்றவாளிகள் மீதான வழக்கில் விரைந்து தீர்ப்பளிக்கப்பட்டு அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும், 3) பாப்ரி பள்ளிவாசல் இடம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் விரைந்து தீர்ப்பை வழங்க வேண்டும் ஆகிய மூன்று கோரிக்கைகளை வ-யுறுத்தி மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் பெருநகரங்களில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டங்கள் (தர்ணா) நடைபெறவிருக்கிறது.இந்த தர்ணா போராட்டத்தில் முஸலிம்கள் மட்டுமின்றி, மதச்சார்பற்ற சிந்தனையாளர்களும் பங்குகொண்டு கண்டன உரைகள் வழங்குவார்கள்.

Wednesday, November 24, 2010

தொண்டியை சேர்ந்த சகோதரர். உமர் இன்று காலை (24-11-2010) ஷார்ஜாவில் எதிர்பாராத விபத்து ஒன்றில் தாருல் ஃபனாவை விட்டு தாருல் பகாவை அடைந்து விட்டார்கள்.

சகோதரர். உமர் இரத்ததானம் செய்யும் பொழுது

தொண்டியை சேர்ந்த சகோதரர். உமர் (வயது-29) அவர்கள் இன்று காலை (24-11-2010) ஷார்ஜாவில் எதிர்பாராத விபத்து ஒன்றில் தாருல் ஃபனாவை விட்டு தாருல் பகாவை அடைந்து விட்டார்கள். (இவர் தமுமுகவின் பொதுச்செயலாலர் சகோ-ஹைதர் அலி அவர்களின் மருமகன் ஆவார் மற்றும் தமுமுக துபை மண்டலத்தின் நிர்வாகியுமாவார்)

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

சகோ.அவர்களுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய 'ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்' சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், உலகெங்கும் வாழும் சகோதரர்கள் அனைவரும் அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார் மற்றும் உறவினர் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் துஆ செய்யுங்கள்.


தமுமுக துபை மண்டலத்தின் இந்த வார நிகழ்ச்சிகள்
















Monday, November 22, 2010

த மு மு க __ம ம க கோட்டையான கடலுர் மாவட்டத்தின் புதிய நிர்வாகிகளின்

காயல்பட்டணத்தில் தமுமுக - மமக பொதுக்கூட்டம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பிரிவான மனித நேய மக்கள் கட்சியின் அரசியல் விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நேற்று (20 நவம்பர்) காயல்பட்டணத்தில் சிறப்பாக நடைபெற்றது. தமுமுக மாநில துணை செயலாளர் கோவை செய்யது சிறப்புரையாற்றினார்

அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1 செந்தூர் எக்ஸ்பிரசை சென்னைக்கு தினசரி கார்டு லைனில் இயக்க வேண்டும்

2 நிதி ஒதுக்கீடு செய்யப்பட இரண்டாம் பைப் லைன் திட்டத்தை கிடப்பில் போடாமல் உடனடியாக நிறைவேற்ற வேண்டும்
3 இரண்டாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட காயல்பட்டண நகராட்சிக்கு போதிய துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்படவேண்டும். ஆங்காங்கே குவிந்து கிடக்கும் குப்பைகள் உடனடியாக சுத்தம் செய்யப்படவேண்டும்
4 புதிய பேருந்து நிலையம் அருகில் கிராம நிர்வாக அதிகாரி அலுவலகம் மற்றும் மின்சார வாரிய அலுவலகங்கள் கட்ட இடங்கள் கையகப்படுத்தப்பட்ட பின்பும் வாடகை கட்டிடங்களில் இயங்கிவருவது வேதனைக்குறியது. உடனடியாக இங்கு கட்டிடங்கள் கட்டப்படவேண்டும்.

இந்த கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படவேண்டும் என்று இந்த பொதுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .

Sunday, November 21, 2010

திருப்பூர் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக கூட்டம்

திருப்பூர்: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாக கூட்டம், மாவட்ட தலைவர் ஹாலிதீன் தலைமையில் நடந்தது.

மாவட்ட செயலாளர் சர்புதீன், மனிதநேய மக்கள் கட்சி செயலாளர் அன்சார் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், "திருப்பூர் மாநகராட்சி 41வது வார்டு கோம்பைத்தோட்டம், சொர்ணபுரி லே-அவுட் மற்றும் வெங்கடேஸ்வரா நகர் பகுதிகளில், சாக்கடை கால்வாய், சாலை பணிகள் துவங்கப்பட்டு பாதியிலேயே நிற்கின்றன. இதனால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். மாநகராட்சி நிர்வாகம் பணியை விரைந்து முடிக்க வேண்டும். "அனைத்துக்கட்சி கூட்டங்களில் சிறுபான்மையினரை மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. இதே நிலை தொடர்ந்தால், மக்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்தப்படும். தேர்தல் நெருங்க உள்ள நிலையில், விடுபட்ட வாக்காளர்கள் பெயர்களை பட்டியலில் சேர்க்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்ட துணை தலைவராக பஷீர், துணை செயலாளராக சாதிக், மனிதநேய மக்கள் கட்சி துணை செயலாளராக மீரான் நியமிக்கப்பட்டனர். மாவட்ட பொருளாளர் இக்பால் நன்றி கூறினார்.

Source: Dinamalar

துபை தமுமுக மர்கஸில் இஸ்லாமிய நிகழ்ச்சி



அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 19-11-2010 வெள்ளிக்கிழமையன்று துபை தமுமுக மர்கஸில் சகோ.இப்ராஹிம் அவர்கள் அற்ப உலகமும் அற்புதமான மறுமையும் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள். இந்த அமர்வில் திரளான சகோதரர்கள் கலந்துகொண்டு பயனடைந்தார்கள்.

Thursday, November 18, 2010

32 புனித ஹஜ் யாத்ரீகர்களை இஸ்ரேலிய ராணுவம் தடுத்து நிறுத்தியது

ராமல்லா,நவ.14:சிறைக்கைதிகள் மற்றும் உயிர் தியாகிகளின் உறவினர்களான புனித ஹஜ் கடமையை நிறைவேற்றப்பட்ட 32 பேரை இஸ்ரேலிய ராணுவம் தடுத்துள்ளது.ஜோர்டானுக்கும் மேற்குகரைக்குமிடையே அலன்பி பாலத்தில் காவலுக்கு நிற்கும் இஸ்ரேலிய ராணுவத்தினர் புனித யாத்ரீகர்களிடம் திரும்பிச் செல்லுமாறு கூறினர்.சிறைக்கைதிகள் மற்றும் உயிர் தியாகிகளின் உறவினர்கள் ஹஜ்ஜுக்கு செல்வதை இஸ்ரேலிய ராணுவம் தடுக்காது என இஸ்ரேலிய சிவில் விவகார அமைச்சகம் அறிவித்திருந்தது என ஃபலஸ்தீன் சிறைக்கைதிகளுக்கான அமைச்சர் ஈஸா கராகி தெரிவித்துள்ளார்.பிரச்சனையை பரிசீலிக்க பலரையும் தொடர்புக்கொண்ட பொழுதும் பயனில்லை என அவர் தெரிவித்தார்.சவூதி ஆட்சியாளரான மன்னர் அப்துல்லாஹ்வின் முயற்சியால் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஃபலஸ்தீனர்கள் ஹஜ் செல்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டது. அதில் உட்பட்ட 32 பேரைத்தான் இஸ்ரேலிய ராணுவம் அராஜகமாக தடுத்துள்ளது.

செய்தி: தேஜஸ் மலையாள நாளிதழ்

Wednesday, November 17, 2010

மேலப்பாளையத்தில் பெருநாள் திடல் தொழுகை.




இஸ்லாமிய பிரச்சார பேரவையின் சார்பாக பெருநாள் தொழுகை இன்று 17 -11 -2010 ,காலை நடைப்பெற்றது,மௌலவி அப்துல் காதர் மிஷ்பாஹி அவர்கள் தொழுகை நடத்தினார்கள்,
தொழுகைக்குப் பின் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில துணைப் பொதுச்செயலாளர் மௌலவி j .s .ரிபாயி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள், தனது உரையில் ஹஜ் பெருநாளின் சிறப்புகளை குறித்தும் இப்ராஹிம்(அலை)அவர்களின் தியாகம் குறித்தும் எடுத்துரைத்தார்கள்,நெல்லை மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் மேலப்பாளைய நகர நிர்வாகிகள் முஸ்லிம் பொதுமக்கள் ஆண்கள் பெண்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துக் கொண்டு இறைவணக்கம் செய்தார்கள்,தொழுகைக்கான ஏற்பாடுகளை நகர தமுமுக நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தார்கள், தொழுகைக்குப் பின் மேலப்பாளைய நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக மாடுகள் குர்பானி கொடுக்கப்பட்டது. எல்லாப் புகழும் இறைவனுக்கே .
நெல்லை மாவட்ட இஸ்லாமிய பிரச்சார பேரவையின் சார்பாக கடையநல்லூர்,புளியங்குடி ஆகிய பகுதிகளிலும் பெருநாள் திடல் தொழுகை நடைப்பெற்றது ஆயிரக் கணக்கான முஸ்லிம் சகோதர சகோதரிகள் கலந்துக் கொண்டு இறைவணக்கம் செய்தார்கள்.மாவட்டத்தில்

காரைக்ககால் நகராட்சியைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்


காரைக்கால் நகராச்சியில் உள்ள பல்வேறு பிரச்சனைகளால் நகராச்சி நிர்வாகம் சீரழிந்து மக்களின் பல்வேறு பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் காரைக்கால் நகர பகுதி சாலைகள் செப்பனிடப்படாமலும், சாக்கடைகள் உடைந்து கழிவு நீர் தேங்கி நிற்பதும், குப்பைகள் சுத்தம் செய்யபடாமலும், கொசுக்கள் அதிகரித்து வியாதிகள் அதிகமாகவும் உள்ளன, மேலும் அலுவலகத்தில் உள்ள பல்வேறு பதிவேடுகள் பராமரிக்கப்படாமலும் உள்ளன. ஆகவே, பிரச்சனைகளை தீர்க்க வழி வகுக்காமல் நிர்வாகம் செய்து வரும் நகராச்சி நிர்வாகத்தையும், அதனை உரிய முறையில் வழி நடத்தாமல், நகராச்சியில் இருந்து அனுப்பும் கோப்புகளுக்கு சரியான பதில் அளிக்காமலும் உள்ள புதுச்சேரி உள்ளாட்சித்துறை நிர்வாகத்தை கண்டித்தும் மனிதநேய மக்கள் கட்சி காரைக்கால் நகர சார்பாக காரைக்கால் நகராச்சி அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் A.அக்பர் ஷா தலைமை வகித்தார், த.மு.மு.க மாவட்ட துணை தலைவர் B.ஷாஜஹான், மாவட்ட பொருளாளர் S.யூசுப் கான், மாவட்ட துணை செயலாளர் A .அப்துல் நாசர், மாவட்ட இளைஞரணி செயலாளர் M.நெய்னா முகமது, மாவட்ட மனித நேய தொழிற்சங்க செயலாளர் H.M.இக்பால், காரை நகர துணை செயலாளர் M.முகமது சர்புதீன், த.மு.மு.க நகர செயலாளர் M.முகமது நஜிமுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட தலைவர் A.லியாகத் அலி,மாவட்ட செயலாளர் S.T.ஆரிபு மரைக்கார், த.மு.மு.க மாவட்ட செயலாளர் I.அப்துல் ரஹீம், மாவட்ட துணை செயலாளர் M.A. ஹாஜா நஜிமுதீன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். கண்டன ஆர்ப்பாட்டதில் த.மு.மு.க மாவட்ட துணை செயலாளர் A.முகமது தாரிக், மாவட்ட மாணவரணி செயலாளர் S.நியாஜ் அகமது, மாவட்ட மருத்துவசேவை அணி செயலாளர் M.முகமது ஜியாவுதீன், மாவட்ட மனித உரிமை மற்றும் சுற்றுப்புற சூழல் அணி செயலாளர் E.M.சபுருதீன், நகர மனிதநேய தொழிற்சங்க செயலாளர் S.ஜெஹபர் சாதிக், நகர மனிதநேய வர்த்தகர் சங்க செயலாளர் S.முகமது இஸ்மாயில், நகர வார்டு தலைவர் A.ஜாகிர் ஹுசைன், M.ஹாஜா பாருக், A.பைசர் ரஹ்மான், S.அப்துல்காதர், நகர வார்டு செயலாளர் M.காதர் சாஹிப் , M.சுல்தான் அப்துல்காதர், J.முகமது அசனுதீன், S.முகமது இப்ராகிம், P.ஹாஜா மொய்தீன் முன்னால் மாவட்ட மனித உரிமை அணி செயலாளர். உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். முடிவில் காரைக்கால் நகர பொருளாளர் H .ஹசனுதீன் நன்றி கூறினார்

Tuesday, November 16, 2010

சென்னை , மேலப்பாளையம், கோவை மற்றும் தமிழகத்தில் பல பகுதிகளில் பெருநாள் திடல் தொழுகை!!!

சமுதாய சொந்தங்களே அஸ்ஸலாமு அலைக்கும்,
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தாவா பிரிவான இஸ்லாமிய பிரச்சாரப் பேரவையின் சார்பாக இன்ஷா அல்லாஹ் தியாகத் திருநாள் திடல் தொழுகை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இன்ஷா அல்லாஹ் 17:11:2010 அன்று காலை 8 மணியளவில் பிராட்வேயில் உள்ள டான்போஸ்கோ பள்ளியில் உள்ள திடலில் நடைப்பெறுகிறது, , பெண்களுக்கு தனி இடம் வசதி செய்யப்பட்டுள்ளது, சென்னையில் உள்ள சமுதாய சொந்தங்கள் கலந்துக் கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.


மேலப்பாளையத்தில் இன்ஷா அல்லாஹ் 17:11:2010 அன்று காலை 7 :30 , மணியளவில் பஜார் திடலில் தொழுகை நடைப்பெறுகிறது, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில துணைப் பொதுச்செயலாளர் மௌலவி J .S .ரிபாயி அவர்கள் உரை நிகழ்த்திகிரார்கள்.பெண்களுக்கு தனி இடம் வசதி செய்யப்பட்டுள்ளது, மேலப்பாளையத்தில் உள்ள சமுதாய சொந்தங்கள் கலந்துக் கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.

கோவை செல்வபுரம் வடக்கு பகுதியில் உள்ள திடலில் இன்ஷா அல்லாஹ் 17:11:2010 அன்று காலை 8 மணியளவில் தொழுகை நடைப்பெறுகிறது கோவை சையது அவர்கள் உரை நிகழ்த்துகிறார்.பெண்களுக்கு தனி இடம் வசதி செய்யப்பட்டுள்ளது
கோவை உக்கடம் பைபாஸ் சாலையில் உள்ள JK கர்டன் திடலில் இன்ஷா அல்லாஹ் 17:11:2010 அன்று காலை 8 மணியளவில் தொழுகை நடைப்பெறுகிறது சகோதரர் ரெக்ஸ் ரபி அவர்கள் உரை நிகழ்த்துகிறார். பெண்களுக்கு தனி இடம் வசதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தில் பல பகுதிகளில் தியாகத் திருநாள் திடல் தொழுகை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் இஸ்லாமிய பிரச்சாரப் பேரவையின் சார்பாக நடைப்பெறுகிறது.

Friday, November 12, 2010

மன்னிப்புக்கோரும் வரை இஸ்ரேலுடனான தொடர்புகள் துண்டிக்கப்படும்: அர்தூகன்

கடந்த மே மாதம் காஸாவுக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிச்சென்ற 'மாவி மர்மரா' எனும் துருக்கியக் கப்பல் மீது இஸ்ரேல் மேற்கொண்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்காக இஸ்ரேல் பகிரங்க மன்னிப்புக் கோரும்வரை தமது நாடு இஸ்ரேலுடன் எத்தகைய சுமுகமான உறவுகளையும் பேணப்போவதில்லை என துருக்கியின் பிரதமர் ரஜப் தையிப் அர்தூகன் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

ஃபிரான்ஸ் 24 தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், தமது மனிதாபிமானமற்ற செய்கைக்காக இஸ்ரேல் கட்டாயம் மன்னிப்புக் கோரி, உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும். அதன் பின்பே அந்த நாட்டுடனான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பது குறித்துச் சிந்திக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரின் காட்டுமிராண்டித் தாக்குதலினால் 9 துருக்கியப் பிரஜைகள் உயிரிழந்ததோடு மற்றும் பலர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து அவ்விரு நாடுகளுக்குமிடையிலான சுமுக உறவு சீர்குலைந்தது. இது குறித்துக் கருத்துரைத்த துருக்கியப் பிரதமர், தம்மிரு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலைமைக்கு இஸ்ரேல்தான் முழுப் பொறுப்பு ஏற்கவேண்டும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

"தம்மையொத்த சகமனிதர்களுக்கு உதவவேண்டும் என்ற ஒரே நல்லெண்ணத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மனிதாபிமானத் தன்னார்வத் தொண்டர்கள் பயணித்த ஒரு கப்பல் மீது, அதுவும் துருக்கியின் தேசியக் கொடியைத் தாங்கிச் சென்ற ஒரு கப்பல்மீது இஸ்ரேலிய வான்படையும் கடற்படையும் அடாவடியாகத் தாக்குதல் நடாத்தியதை நாம் எப்படி மன்னித்து மறக்க முடியும்?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.

"சரி, அவர்கள் அந்தக் கப்பலில் இருந்து ஆயுதங்கள் எவற்றையேனும் கண்டுபிடித்து விட்டார்களா? இல்லை. எனவே, நிராயுதபாணிகளான அப்பாவி மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இந்த ஈவு இரக்கமற்ற இழிசெயலை இஸ்ரேலினால் எந்தவிதத்திலும் நியாயப்படுத்திவிட முடியாது" என்று அவர் சுட்டிக்காட்டினார்.

தமது பிரதமரின் அறிக்கையைத் தொடர்ந்து கருத்து வெளியிட்ட துருக்கியின் வெளிநாட்டு அமைச்சர் அஹ்மத் தாவூதொக்லு, சர்வதேசக் கடற்பரப்பில் பயணித்துக் கொண்டிருந்த ஃப்ரீடம் ஃபுளோடில்லா நிவாரணக் கப்பல்கள் மீது அடாவடியாகத் தாக்குதல் நடத்திய இழிசெயலுக்காக இஸ்ரேல் உத்தியோகபூர்வமாக மன்னிப்புக் கோரி, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நஷ்ட ஈட்டுத் தொகையை வழங்கும் வரை தமது நாடு இஸ்ரேலுடன் எத்தகைய சுமுகத் தொடர்புகளையும் வைத்திருக்காது என்று வலியுறுத்தியுள்ளார்.

கடந்த செய்வாய்க்கிழமை (09.11.2010) ரோம் நகரில் உள்ள துருக்கியத் தூதுவராலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்துத் தெரிவித்த துருக்கியின் வெளியுறவு அமைச்சர், இதேநேரம் இஸ்ரேலுக்குப் பதிலாக வேறு ஒரு நாடு இத்தகையதொரு தாக்குதலை நிகழ்த்தியிருக்குமானால், அந்த நாடு சர்வதேச ரீதியான பொருளாதாரத் தடைகளைத் தற்போது எதிர்கொண்டிருக்கும் என்றும் சுட்டிக்காட்டினார்.

Source: inneram

ப் பொருட்களை ஏற்றிச்சென்ற 'மாவி மர்மரா' எனும் துருக்கியக் கப்பல் மீது இஸ்ரேல் மேற்கொண்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்காக இஸ்ரேல் பகிரங்க மன்னிப்புக் கோரும்வரை தமது நாடு இஸ்ரேலுடன் எத்தகைய சுமுகமான உறவுகளையும் பேணப்போவதில்லை என துருக்கியின் பிரதமர் ரஜப் தையிப் அர்தூகன் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

ஃபிரான்ஸ் 24 தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், தமது மனிதாபிமானமற்ற செய்கைக்காக இஸ்ரேல் கட்டாயம் மன்னிப்புக் கோரி, உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும். அதன் பின்பே அந்த நாட்டுடனான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பது குறித்துச் சிந்திக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரின் காட்டுமிராண்டித் தாக்குதலினால் 9 துருக்கியப் பிரஜைகள் உயிரிழந்ததோடு மற்றும் பலர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து அவ்விரு நாடுகளுக்குமிடையிலான சுமுக உறவு சீர்குலைந்தது. இது குறித்துக் கருத்துரைத்த துருக்கியப் பிரதமர், தம்மிரு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலைமைக்கு இஸ்ரேல்தான் முழுப் பொறுப்பு ஏற்கவேண்டும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

"தம்மையொத்த சகமனிதர்களுக்கு உதவவேண்டும் என்ற ஒரே நல்லெண்ணத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மனிதாபிமானத் தன்னார்வத் தொண்டர்கள் பயணித்த ஒரு கப்பல் மீது, அதுவும் துருக்கியின் தேசியக் கொடியைத் தாங்கிச் சென்ற ஒரு கப்பல்மீது இஸ்ரேலிய வான்படையும் கடற்படையும் அடாவடியாகத் தாக்குதல் நடாத்தியதை நாம் எப்படி மன்னித்து மறக்க முடியும்?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.

"சரி, அவர்கள் அந்தக் கப்பலில் இருந்து ஆயுதங்கள் எவற்றையேனும் கண்டுபிடித்து விட்டார்களா? இல்லை. எனவே, நிராயுதபாணிகளான அப்பாவி மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இந்த ஈவு இரக்கமற்ற இழிசெயலை இஸ்ரேலினால் எந்தவிதத்திலும் நியாயப்படுத்திவிட முடியாது" என்று அவர் சுட்டிக்காட்டினார்.

தமது பிரதமரின் அறிக்கையைத் தொடர்ந்து கருத்து வெளியிட்ட துருக்கியின் வெளிநாட்டு அமைச்சர் அஹ்மத் தாவூதொக்லு, சர்வதேசக் கடற்பரப்பில் பயணித்துக் கொண்டிருந்த ஃப்ரீடம் ஃபுளோடில்லா நிவாரணக் கப்பல்கள் மீது அடாவடியாகத் தாக்குதல் நடத்திய இழிசெயலுக்காக இஸ்ரேல் உத்தியோகபூர்வமாக மன்னிப்புக் கோரி, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நஷ்ட ஈட்டுத் தொகையை வழங்கும் வரை தமது நாடு இஸ்ரேலுடன் எத்தகைய சுமுகத் தொடர்புகளையும் வைத்திருக்காது என்று வலியுறுத்தியுள்ளார்.

கடந்த செய்வாய்க்கிழமை (09.11.2010) ரோம் நகரில் உள்ள துருக்கியத் தூதுவராலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்துத் தெரிவித்த துருக்கியின் வெளியுறவு அமைச்சர், இதேநேரம் இஸ்ரேலுக்குப் பதிலாக வேறு ஒரு நாடு இத்தகையதொரு தாக்குதலை நிகழ்த்தியிருக்குமானால், அந்த நாடு சர்வதேச ரீதியான பொருளாதாரத் தடைகளைத் தற்போது எதிர்கொண்டிருக்கும் என்றும் சுட்டிக்காட்டினார்.

Source: inneram

Wednesday, November 10, 2010

தமுமுக ஆர்ப்பாட்டத்தின் விளைவாக, கர்ப்பிணியின் சாவுக்கு காரணமாய் இருந்த 2 டாக்டர்கள் சஸ்பெண்ட்

கடந்த ஜூன் 24-ம் தேதி புளியங்குடி கீழப்பள்ளிவாசல் தெருவைச் சேர்நத ஜமீலா பீவி பிரவசத்திற்காக புளியங்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளிக்காததால் ஜமீலா பீவியும், குழந்தையும் இறந்தனர்.இதனையடுத்து சம்பந்தப்பட்ட டாக்டர்கள் மற்றும் நர்சுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட், தமுமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தின.இதையடுத்து இறந்த ஜமீலா பீவியின் குடும்பத்துக்கு முதல்வர் கருணாநிதியின் உத்தரவுபடி கலெக்டர் ஜெயராமன் ரூ.2 லட்சம் நிதியுதவி அளித்தார். இதைத் தொடர்ந்து கவனக்குறைவாக இருந்த டாக்டர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட சுகாதார நலத்துறை கண்காணிப்பாளர் அரசுக்கு அறிக்கை அனுப்பி வைத்தார்.அதன்பேரில் கடந்த 4-ம் தேதி மாநில சுகாதாரத்துறை இயக்குனர் புளியங்குடி அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த டாக்டர்கள் கற்பகராஜ், சித்திரா சங்கரேஸ்வரி ஆகியோரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவு கடிதம் தென்காசி சுகாதாரத்துறை துணை இயக்குனர் அலுவலகத்திலிருந்து புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

Monday, November 8, 2010

பொட்டல்புதூரில் தமுமுகவின் 90வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு




ஆழ்வார்குறிச்சி:பொட்டல்புதூரில் அனைத்து சமுதாய மக்களுக்காக த.மு.மு.க., சார்பில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா நடந்தது.கடையம் ஒன்றியம் பொட்டல்புதூர் த.மு.மு.க., சார்பில் புதிய ஆம்புலன்சை பொதுமக்களுக்காக வாங்கி அதன் அர்ப்பணிப்பு விழா நடந்தது.

பொட்டல்புதூரில் நடந்த விழாவிற்கு த.மு.மு.க., கிளை தலைவர் முகம்மது அலி ஜின்னா தலைமை வகித்தார். துணைத் தலைவர் சாகுல்ஹமீது வரவேற்றார்.

ஷாபி ஜமாத் தலைவர் முகமதுஅலி, ஜமாத் தலைவர் முகமதுகனி, கிளை பொருளாளர் மதார்கனிலெப்பை, துணை செயலாளர் முகமதுகான், மனிதநேய மக்கள் கட்சி கிளை செயலாளர் ராஜாஜி, கிளை பொருளாளர் காஜாமைதீன், ஒன்றிய பேச்சாளர் ஈசாக் அலி, த.மு.மு.க., கிளை தலைவர்கள் வீராசமுத்திரம் நாகூர்கனி, சம்பன்குளம் அப்துல்ரகுமான், முதலியார்பட்டி பாசூல்அஷ்ரப் முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பாளர்களாக டாக்டர்கள் நம்பிராஜன், பழனிக்குமார், கடையம் வட்டார மோட்டார் வாகன சங்க தலைவர் முருகேசன், பொட்டல்புதூர் வியாபாரிகள் சங்க தலைவர் செய்யது மசூது, பொருளாளர் அப்துல்ரஹீம் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்.

மாநில பொது செயலாளர் ஹைதர்அலி, மாநில செயலாளர் கோவை செய்யது பேசினர்.புதிய ஆம்புலன்ஸ்க்கான சாவியை த.மு.மு.க., மாநில பொதுசெயலாளர் ஹைதர் அலி கிளை தலைவர் முகமதுஅலிஜின்னாவிடம் வழங்கினார். மாவட்ட தலைவர் மைதீன் பாரூக், செயலாளர் உஸ்மான்கான், மாவட்ட பொருளாளர் செய்யதுஅலி, மாவட்ட துணை செயலாளர் சர்தார்அலிகான், கடையம் ஒன்றிய செயலாளர் காஜாஅலாவுதீன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் மைதீன்சேட்கான், மாவட்ட பொருளாளர் ரசூல்மைதீன், மாவட்ட துணை செயலாளர்கள் நயினார்முகமது, சுல்தான்மைதீன், கடையம் ஒன்றிய செயலாளர் மீரான்மைதீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.கிளை செயலாளர் ஆட்டோ சித்திக் நன்றி கூறினார். பொதுமக்கள் தங்கள் அத்யாவசிய தேவைகளுக்கு 99445 09050 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு ஆம்புலன்சை பயன்படுத்திக் கொள்ளலாம் என த.மு.மு.க.,வினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Wednesday, November 3, 2010

த.மு.மு.க., தேவிபட்டினம் கிளையின் செயற்குழு கூட்டம்

ராமநாதபுரம் : த.மு.மு.க., தேவிபட்டினம் கிளையின் செயற்குழு கூட்டம் ஜாஹிர் ஹூசைன் தலைமையில் நடந்தது. கிளைப்பொருளாளர் சுஹாபுத்தீன் , கிளை செயலாளர் அப்துல்லா , ம.ம.க., கிளை செயலாளர் மஸ்தான், துணை தலைவர் முகமது புகாரி, பங்கேற்றனர்.

சத்தியமங்கலம் நகர தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழக நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் நகர தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழக நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.சத்தியமங்கலம் நகர தலைவராக ஜாகிர்உசேன், செயலாளராக பக்ருதீன், பொருளாளராக நஜீமுல்லாஹீ, துணைத் தலைவராக பாபுலால், துணை செயலாளராக காதர்பாய், துணை பொருளாளராக சையத்அலி, மாணவரணி செயலாளராக ஷேக்நவீத், மருத்துவசேவை அணி செயலாளராக முஹமதுஇஸ்மாயில், தொழிலாளர் அணி செயலாளராக சிக்கந்தர் பாஷா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

முதுகுளத்தூர் ஒன்றிய, நகர் த.மு.மு.க., ம.ம.க., நிர்வாகிகள் தேர்வு மாநில பேச்சாளர் கோவை ஜாகிர் தலைமையில் நடந்தது

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் ஒன்றிய, நகர் த.மு.மு.க., ம.ம.க., நிர்வாகிகள் தேர்வு மாநில பேச்சாளர் கோவை ஜாகிர் தலைமையில் நடந்தது. த.மு.மு.க., நகர தலைவராக அமீர்கான், செயலாளராக அமீன்தீன், பொருளாளராக முகம்மது அலி, துணை செயலாளர்களாக அப்துல் ரஹ்மான், சகுபர்சாதிக், ம.ம.க., நகர செயலாளராக இக்பால், துணை செயலாளராக அப்துல்லா, வார்டு தலைவராக ஜாஹிர் உசேன், துணை தலைவராக ரியாஸ், செயலாளராக ஜலால் காதரி, பொருளாளராக முகம்மது அலி, முகம்மது ரித்தீஸ் ,துணைதலைவராக அம்ஜத் அலி, செயலாளராக கலீல், பொருளாளராக உமர்முக்தார் உட்பட பலர் தேர்வு செய்யபட்டனர். தேர்தலின்போது த.மு.மு.க., மாவட்ட தலைவர் சகுபர் சாதிக், செயலாளர் ஜபருல்லாகான், துணை செயலாளர் அஜீஸ்கனி, முன்னாள் மாவட்ட தலைவர் சம்சுதீன்சேட், ம.ம.க., ஒன்றிய செயலாளர் வாவாராவுத்தர், மாவட்ட செயலாளர் யூசூப் கலந்து கொண்டனர்.

முத்துப்பேட்டை தமுமுக மமக நகர புதிய ஆலுவலகம்

முத்துப்பேட்டை தமுமுக மமக நகர புதிய அலுவலகத்தை மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் சகோதரர் முஜிபுர் ரஹ்மான் அவர்கள் திறந்து வைத்த போது எடுத்தப்படம். அருகில் மாநில செயற்குழு உறுப்பினர் நாச்சிக்குளம் தாஜுதீன் (இடது) தஞ்சை தெற்கு மாவட்ட துணை செயலாளர் சகோதரர் அதிரை சாகுல் (வலது

Monday, November 1, 2010

பாளையங்கோட்டையில் எஸ்.பி அலுவலகம் நோக்கி த.மு.மு.க.பேரணி

கடந்த 2000ம் ஆண்டு புளியங்குடி தப்லீக் ஊழியர் அப்துல் ரஷீத் படுகொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்திட வலியுறுத்தியும், ஏர்வாடி அசன் ரபீக் மரணத்தில் உண்மை நிலையை அறிந்திட சி.பி.சி.ஐ.டி.விசாரணைக்கு உத்தரவிடக்கோரியும், நெல்லை மாவட்டத்தில் முஸ்லிம்கள் மீது போடப்பட்ட அனைத்து பொய் வழக்குகளையும் வாபஸ் பெற்றிடக் கோரியும் த.மு.மு.க.சார்பில் 30.10.2010 சனிக்கிழமை அன்று நெல்லை எஸ்.பி அலுவலகம் நோக்கி மாபெரும் பேரணி நடைபெற்றது. இப்பேரணிக்கு ம.ம.க. மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது தலைமை வகித்து கண்டன உரையாற்றினார்.
நெல்லை மேற்கு மாவட்ட தலைவர் மைதீன் சேட்கான், கிழக்கு மாவட்டத் தலைவர் மைதீன் பாரூக், ம.ம.க.கிழக்கு மாவட்டச் செயலாளா; .ரசூல் மைதீன், மேற்கு மாவட்டச் செயலாளார் புளியங்குடி செய்யது அலி, த.மு.மு.க.மாவட்டச் செயலாளர்கள் காசீம் பிர்தௌசி, நயினார் முகம்மது, கிழக்கு, மேற்கு மாவட்ட பொருளாளர்கள் சர்தார் அலிகான்,.சுல்தான் மைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்தக் கண்டனப் பேரணி 1500க்கும் மற்பட்டோர் பேரணியில் கலந்து கொண்டனர். பேரணி இறுதியில்மாவட்ட காவல் கண்காணிப்பாளாரிடம் மனு அளிக்கப்பட்டது.