Saturday, May 16, 2015

ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் புதிய பேவர் பிளாக் சாலை திறப்பு



மனிதநேய மக்கள் கட்சி ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் மண்டபம் ஒன்றியம், வழுதூர் ஊராட்சி , வாலாந்தரவை கிராமத்தில் பொதுமக்களின் வசதிக்காக ரூபாய்.17.14 பதினேழு லட்சத்து பதினான்கு ஆயிரம் செலவில் அமைக்கப்பட்ட புதிய பேவர் பிளாக் சாலை திறப்பு ! !
ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மண்டபம் ஒன்றியம், வழுதூர் ஊராட்சி , வாலாந்தரவை கிராமத்தில் பொதுமக்களின் வசதிகளுக்காக பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டு வந்தது.
ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற குழு தலைவருமான பேராசிரியர் DrM.H.ஜவாஹிருல்லா MBA.,M.Phil.,PhD.,MLA அவர்களின் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி 2013 - 2014 ம் ஆண்டின் கீழ்மேற்படி கட்டிட பணிகளுக்காக ரூபாய் 17.14 பதினேழு லட்சத்து பதிநான்காயிரம் நிதி பரிந்துரை செய்து, ஒப்புதல் பெறப்பட்டு, புதிய கட்டிட பணிகளுக்கான அரசாணை பெற்று வழங்கப்பட்டிருந்தது.
அப்பணிகள் நிறைவுற்று ஊர் மக்கள் முன்னிலையில் புதிய பேவர் பிளாக் சாலை ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரால் திறந்து வைக்கப்பட்டது.மேலும் ஊர் சார்பாக சட்டமன்ற உறுப்பினர் அவர்களிடம் புதிய கோரிக்கை மனு அளிக்கப்பட்டது அதில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது .ராமநாதபுரம்:வாலாந்தரவையில் கட்டப்படும் சுகாதார நிலையத்தை, மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டுமென மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.வாலாந்தரவை மக்கள் உடல் நலம் பாதிப்பின்போது 10 கி.மீ., தூரமுள்ள ராமநாதபுரம் அரசு மருத்துவமனை, 17 கி.மீ.,தூரமுள்ள புதுமடம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்கின்றனர்.இங்குள்ள துணை சுகாதார நிலையம், புதன்கிழமை மட்டும் செயல்படுகிறது.
நோயாளிகள் உரிய நேரத்தில் சிகிச்சை பெறுவதில் சிரமம் உள்ளது. குயவன்குடி, தெற்குவாணி வீதி, வாலாந்தரவை துணை சுகாதார நிலையங்களை ஒன்றிணைத்து வாலாந்தரவையில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டுமென பொதுமக்கள், மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தினர்.சுகாதார நிலையம் கட்ட ஓ.என்.ஜி.சி., நிறுவனம், தனியார் தொழிற்சாலைகள் நிதி வழங்க முன் வந்தன. இதையடுத்து ஊருக்கு நடுவே, ஒரு ஏக்கரில் பொதுமக்கள் சார்பில் இனாமாக நிலம் வழங்கப்பட்டது.ரூ.15 லட்சத்தில் கட்டுமான பணிகள் துவங்கியுள்ளன. 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட வாலாந்தரவையில் கட்டப்படும் சுகாதார நிலையத்தை, மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டுமென மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.ஊராட்சித் தலைவர் முனியாண்டி அவர்கள் கூறும்போது ஊராட்சி பகுதியில் உள்ள மக்கள் நோய் பாதிப்பின்போது சிகிச்சைக்கு ரெகுநாதபுரம், புதுமடம்,ராமநாதபுரம் செல்ல வேண்டியுள்ளது. இதனால், இங்கு ஓ.என்.ஜி.சி., தொழிற்சாலைகள் பங்களிப்புடன் அமையும் சுகாதார நிலையத்தை மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என்றார் .இதன் தொடர்ச்சியாக இன்று வாலாந்தரவைக்கு புதிய பேவர் பிளாக் சாலை திறப்பு நிகழ்வுக்கு வந்திருந்த ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரிடம் புதிதாக கட்டப்பட்டும் மருத்துவமனையை தரம் உயர்த்தி தர பரிந்துரை செய்திடக்கோரி கிராமம் சார்பாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க ஆவண செய்யப்படும் என கூறினார்கள்.இந்த நிகழ்வில் மனிதநேய மக்கள்கட்சியின் மாவட்ட, ஒன்றிய , கிளை நிர்வாகிகளும், ஊர் பொதுமக்களும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் நகரில் மனிதநேய மக்கள் கட்சி தீவிர உறுப்பினர் சேர்க்கை



இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் நகரில் மனிதநேய மக்கள் கட்சி மே,ஜூன்,ஜூலை~2015 தீவிர உறுப்பினர் சேர்க்கை மாவட்ட செயலாளர்;B.அன்வர் அலி தலைமையில் நடைபெற்றது..இதனை இராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்;போரசிரியர்:M.H.ஜவாஹிருல்லாஹ்,MLA அவர்கள் தொடக்கி வைத்தார்கள்...இதில் சிறப்பு அழைப்பாளராக மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட பொருளாளர்:ஜாஹிர் உசேன்,தமுமுக மாநில செயலாளர்;மண்டலம் ஜாய்னுலாபுதீன்,தென்கிழக்கு மண்டலம் தேர்தல் அதிகாரி(தமுமுக):வாணி சித்திக் மற்றும் தமுமுக மாவட்ட செயலாளர்:சாதிக் பாட்ஷா,மாவட்ட பொருளாளர்:இஸ்மாயில்,இராமநாதபுரம் முன்னாள் ஓன்றிய தலைவர்:பாக்கர் மற்றும் பொதுமக்கள்,முதியவர்கள்,பெண்கள் நூற்றுகாணக்கில் உறுப்பினர் படிவத்தில் கையெழுத்திட்டு உறுப்பினர்களாக இணைத்தார்கள்...இதில் இராமநாதபுரம் நகர்,வார்டு,ஓன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டானர்.....

Thursday, May 7, 2015

இராமநாதபுரம் மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு

இராமநாதபுரம் மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2015 இல் தேர்வு நடைபெற்ற 121 பள்ளிகளில் மொத்தம் 14,844 மாணவ,மாணவிகள் தேர்வு எழுதியதில் 14,051 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

தேர்ச்சி சதவீதம் 94.66 விழுக்காடு ஆகும். கடந்த ஆண்டு மார்ச் 2014ல் தேர்ச்சி சதவீதம் 93.06 விழுக்காடு ஆகும். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 1.6 விழுக்காடு தேர்ச்சி அதிகரித்துள்ளது.

10 அரசு பள்ளிகளில் 100 விழுக்காடு தேர்ச்சி
________________________________________

இராமநதபுரம் மாவட்டத்தில் 64 அரசு பள்ளிகளில் 10 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சியும,; 28 அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 6 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சியும் மற்றும் 29 மெட்ரிக் பள்ளிகளில் 18 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி என மாவட்டத்தில் மொத்தம் 34 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளது.

இராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழை முதல் பாடமாக பயின்று 1172 மதிப்பெண்களைப் பெற்ற இராமநாதபுரம் நேஷனல் அகடாமி மாண்டிஸோரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி பி.சுருதி முதலிடத்தையும், 1170 மதிப்பெண்களைப் பெற்ற இராமேஸ்வரம் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் பள்ளியைச் சார்ந்த மாணவி எம்.மகேஷ்வரி இரண்டாம் இடத்தையும், 1168 மதிப்பெண்களைப் பெற்ற இராமநாதபுரம் செய்யது அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியைச் சார்ந்த மாணவன் ஜி.பிரகதீஷ்வரன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

அரசு பள்ளி மாணவ மணிகள் சாதனை
______________________________________________________

அரசு பள்ளிகளில் இராமநாதபுரம், நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சார்ந்த மாணவி என்.தங்கவேல் என்பார் 1120 மதிப்பெண் பெற்று முதல் இடத்தையும், பனைக்குளம் அரசு மகளிர் பள்ளியைச் சார்ந்த மாணவி எ.சம்சூல் ஹத்தியா மற்றும் கீழத்தூவல் அரசு மேல்நிலைப்பள்ளியைச் சார்ந்த மாணவன் எ.பழனிமுருகன் ஆகியோர் 1111 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தையும், இரட்டையூரணி அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவன் என்.பிரேம் சந்த் என்பார் 1110 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளார்கள்.

வெற்றிப் பெற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள். இவர்கள் சாதனை பின் இருக்கும் அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

அரசு பள்ளிகளை இரண்டாம் தரமாக கருதுவோரை வாயடைக்கும் வகையில் அரசு பள்ளியில் பயின்ற மாணவ மணிகள் சாதனை புரிய பெரிதும் உழைத்த அரசு பள்ளி ஆசிரியப் பெருமக்களுக்கு எனது நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். முதல் மூன்று இடத்தைப் பிடித்த மாணவ மணிகள் அனைவரும் எனது இராமநாதபுரம் தொகுதியைச் சேரந்த்வர்கள் என்பது எனக்கு கூடுதல் மகிழ்ச்சி. மாவட்டத்தில் தேர்ச்சி விகிதம் அதிகரிப்பிற்கு பெரிதும் ஆக்கமும் ஊக்கமும் அளித்து செயல் திட்டமும் தீட்டி செயல்படும் இராமளநாதபுரம் மாவட்ட ஆட்சியர் திரு. நந்தகுமார் இ.அ.ப. அவர்களுக்கும் எனது நன்றியும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.




இப்படிக்கு 
ஜவாஹிருல்லாஹ் 

Friday, May 1, 2015

மனிதநேய மக்கள் கட்சியின் கீழ்க்கண்ட மாவட்டங்களுக்கு பின்வருவோர்கள் மாவட்டச் செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மனிதநேய மக்கள் கட்சியின் கீழ்க்கண்ட மாவட்டங்களுக்கு பின்வருவோர்கள் மாவட்டச் செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கட்சியினர் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.-
எம். தமிமுன் அன்சாரி, பொதுச் செயலாளர், மனிதநேய மக்கள் கட்சி
1. வடசென்னை - எஸ்.ஏ. அஸீம் (90943 47818)
2. மத்திய சென்னை - இ.எம். ரசூல் (94441 04381)
3. தென் சென்னை - அஹமது அலி ஜின்னா (99405 11973)
4. திருவள்ளூர் மேற்கு - ஏ. முகம்மது நாசர் (98409 88202)
5. காஞ்சி தெற்கு - யு. ரஹ்மத்துல்லாஹ் (98403 67102)
6. காஞ்சி வடக்கு - ஜே. சலீம் கான் (97103 36277)
7. திருவண்ணாமலை - ஏ. நஸீர் அகமது (98433 85170)
8. தர்மபுரி - சி. ஷயின்ஷா (94430 83782)
9. சேலம் கிழக்கு - எஸ்.ஆர். இமாம் முகைதீன் (94432 59786)
10. சேலம் மேற்கு - எஸ். அம்ஜத் (90039 34775)
11. விழுப்புரம் வடக்கு - எம். பாரூக் (99447 38870)
12. கடலூர் தெற்கு - ஏ. யாசர் அரபாத் (94436 42614)
13. சிவகங்கை - எஸ். அப்துல் மஜீது (99658 91602)
14. ஈரோடு மேற்கு - ஏ.கே. ஷாநவாஸ் (98420 98744)
15. ஈரோடு கிழக்கு - அமீர் (95009 07033)
16. திருச்சி தெற்கு - எம். பைஸ் அகமது (99446 88886)
17. தஞ்சை தெற்கு - எம். அஹமது கபீர் (77080 05173)
18. திருவாரூர் - பி.எம்.ஏ. சீனி ஜெகபர் சாதிக் (98425 89222)
19. புதுக்கோட்டை கிழக்கு - ஏ. அபுசாலிஹ் (98651 37686)
20. புதுக்கோட்டை மேற்கு - எம். ரஹீம் தாலிப் (98425 64009)
21. இராமநாதபுரம் கிழக்கு - பி. அன்வர் அலி (98948 87511)
22. இராமநாதபுரம் மேற்கு - எஸ். முகம்மது இக்பால் (94426 79419)
23. கோவை வடக்கு - ஏ. சாதிக் அலி (கவுன்சிலர்) (99947 51124)
24. திருப்பூர் வடக்கு - எம்.ஜே. அபுசாலிஹ் (97515 87037)
25. திருப்பூர் தெற்கு - பல்லடம் பீர்முகம்மது (78713 11190)
26. திண்டுக்கல் - ஜே. முகம்மது இப்ராஹிம் (99527 71684)
27. விருதுநகர் - ஐ. அஜ்மீர் கான் (94448 48551)
28. மதுரை வடக்கு - கே. பக்ருதீன் அலி அஹ்மது (94439 77182)
29. மதுரை தெற்கு - நூருல் ஹக் (95426 93889)
30. நெல்லை மேற்கு - ஏ. நெய்னா முகம்மது (9443 41411)
31. நெல்லை கிழக்கு - மில்லத் இஸ்மாயில் (96007 07007)
32. கன்னியாகுமரி - முகம்மது உவைஸ் (94423 03163)
33. காரைக்கால் - எம். நெய்னா முகம்மது (99407 55317)
34. புதுச்சேரி - என்.எஸ்.கே. அப்துல் சமது (89401 84100)
35. கரூர் - பி.ஆர்.எஸ். அபுதாஹிர் (99527 89385)
36. கடலூர் வடக்கு - எம். மதார்ஷா (98942 79457)
37. தஞ்சை வடக்கு - ஏ. மஹ்மூது மஹ்ரூப் (95246 68076)
38. அரியலூர் - ஜே. மன்சூர் அலி (98437 02400)
39. பெரம்பலு£ர் - எம். சுல்தான் மெய்தீன் (98404 42250)
40. நாமக்கல் - ஏ.எஸ். பகுருதீன் (98655 37374)
41. நாகை வடக்கு - ஓ.எம்.ஏ. முசாவுதீன் (94430 18347)
42. நாகை தெற்கு - என். செய்யது முபாரக் (98427 83292)
43. நீலகிரி - ஏ. அபுதாஹிர் (90471 74281)
44. வேலூர் கிழக்கு - கே.என். சதக்கத்துல்லாஹ் (எ) பாபு (94423 14727)
பட்டியல் தொடரும்...

நியூஸ் : www.tmmk.in