Sunday, September 27, 2015

கீழக்கரை தமுமுக மாணவர் அணி சார்பாக தர்பியா முகாம் நடைபெற உள்ளது

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 04.10.2015 காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை காஞ்சிரங்குடி தோட்டத்தில் கீழக்கரை தமுமுக மாணவர் அணி சார்பாக தர்பியா முகாம் நடைபெற உள்ளது இம்முகாமில் நமது மதிப்பிற்குரிய பேராசிரியர் MH ஜவஹிருல்லாஹ் MLA   அவர்கள் மற்றும்  பேரா ஹாஜாகனி அவர்களும் கலந்துகொள்ள இருக்கின்றனர் கீழக்கரையை சேர்ந்த கல்லூரி  மற்றும்  பள்ளி மாணவர்கள் பொதுமக்கள்  கலந்துகொண்டு பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கிறது.  

தமுமுக தொண்டர்களும் நிர்வாகிகளும் தவறாது கலந்துகொண்டு பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கிறது. மேலும் தொடருபுகு கீழக்கரை நகர் செயலாளர் முஹமது  சிராஜூதீன் 9443170984

இப்படிக்கு 
கீழக்கரை நகர் தமுமுக

Sunday, September 20, 2015

பிஎஸ் அப்துர் ரஹ்மான் பெயரில் சென்னையில் சாலைக்கு பெயரிட வேண்டும் பேரா. M.H.ஜவாஹிருல்லா. M.L.A. கோரிக்கை

பேரா. M.H.ஜவாஹிருல்லா. M.L.A. கோரிக்கை மறைந்த பிஎஸ் அப்துர் ரஹ்மான் பெயரில் சென்னையில் சாலைக்கு பெயரிட வேண்டும்
சட்டமன்றத்தில் உள்ளாட்சித் துறை மானியக் கோரிக்கை விவாதத்தில்

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தமிழுக்காக உழைத்த, தமிழர்களின் நலனுக்காக பாடுபட்ட பத்திரிகையாளர், மறைந்த மாலை முரசு பத்திரிகையின் நிறுவனர், மரியாதைக்குரிய இராமசந்திரன் ஆதித்தனார். அவர்களுக்கு சென்னையில் அவர் தங்கிய தெருவிற்கு அவரது பெயரை சூட்டியதற்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மறைந்த முதல்வர் பாரத ரத்னா திரு.எம்.ஜி.ஆர். அவர்கள் நடித்த ஒரு திரைப்படத்தின் பாடலில் "மேரா நாம் அப்துல் ரஹ்மான்" என்று ஒரு பாடலை பாடுவார். அவருடைய நண்பர்தான் அந்த திரு. அப்துல் ரஹ்மான். கீழக்கரையைச் சேர்ந்தவர், தொழில் அதிபர், மிகப் பெரிய வள்ளலாக விளங்கியவர்.
இராமநாதபுரத்திலிருந்து கீழக்கரைக்கு செல்லக்கூடிய கிழக்கு கடற்கரைச் சாலையில் ஏறத்தாழ 30, 40 ஆண்டுகளுக்கு முன்பு அந்த சாலையைப் போடுவதற்காக ஒரு திட்டத்தை வகுத்தபோது அவர் தன்னுடைய சொந்த நிதியிலிருந்து சுமார் 75 இலட்சம் வட்டியில்லாமல் வழங்கினார். அதைப்போல் இராமநாதபுரத்தில் இருக்கக்கூடிய சேதுபதி சீதக்காதி விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கு அவர்தான் நிதியுதவி செய்திருந்தார். அதுபோன்று நீச்சல் குளம் அமைப்பதற்கும் அவர்தான் வழி வகுத்து நிதியளித்தார். இராமநாதபுரம் கீழக்கரையில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் அமைப்பதற்கும் மற்றும் ஏராளமான அரசு அலுவலகங்கள் அமைப்பதற்கும் அவர் காரணமாக இருந்திருக்கிறார். எனவே, அவர் சென்னை நுங்கம்பாக்கம் பகுதியிலே வசித்த பகுதியில் ஒரு சாலைக்கு திரு.பி.எஸ். அப்துல் ரஹ்மான் அவர்களின் பெயரைச் சூட்ட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

Saturday, September 12, 2015

சத்திய மார்க்கத்தை ஏற்றுக்கொண்டனர்.இராமநாதபுரம் தமுமுக மார்கஸில் நடைப்பெற்றது.


2.09.15 கீழக்கரை தமுமுக சகோதரர்கள் முயற்சியால் ஏர்வாடி தர்ஹாவை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு நபர்கள் சத்திய மார்க்கத்தை ஏற்றுக்கொண்டனர்.
இந்த நிகழ்ச்சி இராமநாதபுரம் தமுமுக மார்கஸில் நடைப்பெற்றது.
மேற்பட்ட நான்கு நபர்களுக்கு தமுமுக உலமாக்கள் அணி மாவட்ட செயலாளர் மௌலவி ஹனிப் ரஷாதி திரு கலிமாவை கூறி இஸ்லாமி அடிபடைகளை பற்றி அவர்களுக்கு எடுத்து கூறப்பட்டது.
மேலும் இந்த நிகழ்ச்சியில் இராமநாதபுரம், கீழக்கரை தமுமுக சகோதரர்கள் கலந்து சிறப்பித்தனர்.