Monday, February 28, 2011

கீழக்கரை அன்று 25 /2/2011 நடத்த தெருமுனை பிரசாரம்


கீழக்கரை தெருமுனை பிரசாரம் அன்று 25 /2/2011 நடத்த தெருமுனை பிரசாரத்தில் தமுமுக மாநில துணை செயலாளர் கோவை செய்யாது அவர்கள் தற்போதையா அரசியல் சுழ்நிலைகளை எடுத்து உரைத்தார், தமுமுக மாவட்ட தலைவர் சலிமுள்ள கான், மாவட்ட துணை தலைவர் அஜ்முள் கான். தலைமை தாக்கினர். கீழக்கரை தமுமுக நகர் தலைவர் கபீர், நகர் செயலாளர் முஸ்தகீன்.நகர் பொருளாளர் வப்பு மற்றும் நிர்வாகிகள் ராஜா ஹுசைன் இக்பால். சடக், பகர், ஜைனுலாப்தீன், ஹுசைன் மற்றும். இதில் 200 க்கு மேல் பொது மக்கள் கலந்து கொண்டார்கள் மற்றும் அதிமுக கீழக்கரை நகர் நிர்வாகிகலும் கலந்து கொண்டார்கள்,

Sunday, February 27, 2011

கோவையில் மனித நேய மக்கள் கட்சியினர் சாலை மறியல் பெண்கள் உள்பட 350 பேர் கைது ! போக்குவரத்து பாதிப்புகள் !






மனித நேய மக்கள் கட்சி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பூரண மதுவிலக்கை அமுல்படுத்தக்கோரி தமிழகத்தின் பல பகுதிகளிலும் போராட்டம் நடத்தி வருகிறது.
பூரண மதுவிலக்கை அமுல்படுத்தக்கோரி மாநாடுகள் வாகன பேரணிகள் மேலும் குறிப்பாக கடந்த ஆண்டு மார்ச் 7ம் தேதி தமிழகம் தழுவிய அளவில் மதுக்கடை மறியலில் ஈடுபட்ட பல்லாயிரக்கணக்கான மனித நேய மக்கள் கட்சி தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
தற்போது கட்சியின் கோவை மாநகர சார்பாக பூரண மதுவிலக்கை அமுல்படுத்தகோரியும் பொது மக்களுக்கு இடையூறாக உள்ள கோவை செல்வபுரம்தெற்கு, கோட்டை மேடு பெருமாள் கோவில் வீதி, உக்கடம் பஸ் நிலையம், போத்தனூர் ஆட்டுத்தொட்டி உள்ளிட்ட பகுதிகளில்
உள்ள அரசு மதுபானக் கடைகளை அகற்றக் கோரி வெள்ளிக்கிழமை (25-02-2011) அன்று மாலை 4 மணிக்கு கோவை செல்வபுரம் தெற்கு பகுதியில் அமைந்துள்ள அரசு டாஸ்மாக் மதுக்கடையை த மு மு க, மற்றும் ம ம க, கட்சியினர் அதுபோல் அருகில் உள்ள
பள்ளிகூட ஆசிரியர்கள், மாணவர்கள்,அந்த பகுதி அனைத்து சமூக பொது மக்கள் ஆகியோர்கள் முற்றுகையிட்டார்கள். ஒரு மணிநேரம் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே காவல் துறை உயர் அதிகாரிகள், மாவட்ட துனை ஆட்சியாளர், மற்றும் டாஸ்மாக்
அதிகாரிகள் சம்பவ இடத்திற்க்கு வந்து பேச்சுவார்த்தை முலம் வருகிற 6ம் தேதி அந்த டாஸ்மாக் கடையை முழுமையாக அகற்றிகிறோம் என்று வாக்கு உறுதி அளித்தார்கள். பின்னா மறியல் செய்த அனைவரையும் கைது செய்தனர் காவல் துறை பிறகு மாலை 8 மணிக்கு விடுதலை
செய்தினர். இந்த மறியல் போராட்டத்திற்க்கு த மு மு க. மாவட்ட தலைவர் பர்கத் அலி தலைமையில் நடந்தது. இதில் மமக மாவட்ட செயலாளர் சுல்தான் அமீர், பொருளாளர் அப்பாஸ், மற்றும் நிர்வாகிகள் சாகுல் ஹமீது, அப்பாஸ், சுலைமான், ஜாபர் சாதிக், ரபிக், உள்பட
பெண்கள் கலந்து கொண்டார்கள்.

Monday, February 21, 2011

அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு 3 தொகுதிகள்



சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.இன்று மதியம் அதிமுகவின் பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் தமுமுக தலைவர் பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லா, பொதுச் செயலளார் எஸ்.ஹைதர் அலி, பொருளாளர் ஒ.யு. ரஹ்மதுல்லாஹ், மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது, பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூன் ரஷீத் ஆகியோர் சந்தித்தனர். அப்போது அதிமுக பொருளாளர் ஓ. பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ, அதிமுக தலைமை நிலையச் செயலாளர் கே.ஏ. செங்கோட்டையன் எம்.எல்.ஏ. ஆகியோரும் உடன் இருந்தனர். அப்போது அதிமுக தலைமையிலான கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி தமிழகத்தில் மூன்று தொகுதிகளில் போட்டியிடுவது என இரு கட்சிகளுக்கு இடையே கையெழுத்தானது.
மேலும் புதுவை சட்டசபைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒரு இடம் அளிக்கப்படும் என அதிமுக பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா உறுதி அளித்தார்.

Friday, February 18, 2011

இலங்கைத் தூதரகம் முற்றுகை: மனிதநேய மக்கள் கட்சி அறிவிப்பு


மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் பி. அப்துல் சமது வெளியிடும் அறிக்கை
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். தமிழக மீனவர் சமுதாயம் உயிரிழப்புகளையும், படுகாயங்களையும் எதிர்கொள்வது தொடர்கதையாகி வரும் நிலையில், நாகையைச் சேர்ந்த 106 மீனவர்கள் 15.02.2011 அன்று இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர். இந்நிலையில் மீண்டும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 24 மீனவர்கள் நேற்று சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.

இது கடும் கண்டனத்திற்குரியது. தொடர்ந்து தமிழக மீனவர்களைக் கொடுமைப்படுத்தும் இலங்கை அரசைக் கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி சார்பில் 22.02.2011 அன்று காலை 10.30 மணிக்கு சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகம் முற்றுகையிடப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களும், மனிதஉரிமை ஆர்வலர்களும் திரளாகக் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Thursday, February 17, 2011

106 தமிழக மீனவர்கள் கைது: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்

மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் பத்திரிகை அறிக்கை

நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 106 மீனவர்களை இலங்கை ராணுவம் கைது செய்திருப்பதை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
தொடர்ந்து பலவகையிலும் தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் துன்புறுத்தப்பட்டு வருகின்றனர். உயிர்களைப் பறிகொடுத்தல், உடைமைகளை இழத்தல் என துன்பங்களை சந்தித்துவரும் நமது மீனவர்கள் இப்போது கடலுக்குச் சென்று மீன்பிடிக்கவே அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது.

வங்கக்கட-ன் மீன் வளங்களை, தங்களுக்கு மட்டுமே சொந்தமாக்கும் நோக்கத்தோடு, தமிழக மீனவர்களை அச்சுறுத்தி ஒருவகை மிரட்டல் போக்கை இலங்கை அரசு செய்து வருகிறது.

இவ்விவகாரத்தில் இந்திய நடுவண் அரசு, இந்தியாவின் உரிமைகளை அடகு வைக்கும் விதமாக கண்துடைப்பு நடவடிக்கைகளை மட்டுமே மேற்கொண்டு வருகிறது.

அந்த தைரியத்தில்தான் இலங்கை ராணுவம் 106 தமிழக மீனவர்களைக் கைது செய்யும் அளவுக்கு துணிச்சல் பெற்றிருக்கிறது.

கைது செய்யப்பட்டவர்களை 48 மணி நேரத்திற்குள் விடுதலை செய்திடவும், அவர்களது உடைமைகளை சேதமின்றி திருப்பிக் கொடுக்கவும் மத்திய-மாநில அரசுகள் உடனே நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சி கேட்டுக் கொள்கிறது.

Saturday, February 12, 2011

தமுமுக துபை மர்க்கஸில் இணையதளம் மூலமாக தலைவரின் உரை.

இறைவனின் கிருபையால், பிப்ரவரி 10 வியாழன் இரவு 10 மணியளவில் தமுமுக துபை மர்க்கஸில் தாயகத்தில் இருந்து, தமுமுக தலைவர் முனைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் இணையதளம் மூலமாக இன்றைய அரசியல் சூழ்நிலைகளை பற்றி உரை நிகழ்த்தினார்கள்,கடந்த மாதம் தாம்பரத்தில் நடைபெற்ற பொதுக்குழுவிற்கு பின் முதன் முதலாக வளைகுடா இயக்க சகோதரர்களுக்கு மத்தியில் இணையதளம் மூலமாக பேராசிரியர் அவர்கள் உரையாற்றியது துபை மண்டல தமுமுக சகோதர்களுடன்தான் என்பது குறிப்பிடத்தக்கது, உரைக்குப் பின் சகோதரர்கள் கேட்ட கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார்கள், நிகழ்விற்கு துபை மண்டல கிளை கழக நிர்வாகிகளுக்கு மட்டுமே அழைப்புக் கொடுக்கப்பட்டது அனைத்து கிளை கழக சகோதரர்களும் ஆர்வமுடன் சமுதாய கவலையுடன் கலந்து கொண்டார்கள் . எல்லாப் புகழும் இறைவனுக்கே.

mhj1.jpg

கவலையுடன் சமுதாய செய்திகளை கேட்கும் சமுதாய கண்மணிகள்.
mhj2.jpg

Thursday, February 10, 2011

துபை தமுமுக சார்பாக வாரம்தோறும் நடைபெற்று நிகழ்ச்சிகள்


துபை தமுமுக சார்பாக வாரம்தோறும் மார்க்க அமர்வுகள் இறைவனின் கிருபையால் நடைபெற்று சகோதரர்கள்
பயன் அடைந்து வருகிறார்கள், தாங்களும் கலந்துக் கொண்டு பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

Monday, February 7, 2011

துபை தமுமுக மர்க்கஸில்

துபை தமுமுக மர்க்கஸில் பிப்ரவரி 4 அன்று இஷா தொழுகைக்குப் பின் பெரம்பலூர் நாசர்அலிகான்
அவர்கள் மரணத் தருவாயில் மனிதனின் நிலை என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்,
திரளான சகோதரர்கள் கலந்துக் கொண்டு பயன் அடைந்தார்கள், பிப்ரவரி 3 , மற்றும் 4 அன்று துபை முழுவதும் உள்ள தமுமுகவின் அனைத்து கிளைகளிலும் நடைப்பெற்ற நிகழ்ச்சிகளில் இதே தலைப்பு கொடுக்கப்பட்டு சகோதரர்கள் பேசினார்கள் எனபது குறிப்பிடத்தக்கது.
எல்லாப் புகழும் இறைவனுக்கே.

மனித நேய மக்கள் கட்சி மூன்றாம் ஆண்டு தொடக்கவிழா கோவையில்


மாநிலத்தலைவர் எழுச்சியுரை
அதிமுக, மதிமுக, நிர்வாகி தமுமுக மாநில தலைவருக்கு சால்வை அணிவித்தார்கள்.
அதிமுக, மதிமுக, நிர்வாகி தமுமுக மாநில தலைவருக்கு சால்வை அணிவித்தார்கள்.
மாநாடு போல் காட்சி அளிக்கும் மக்கள் கூட்டம்





கோவை மாவட்ட மனித நேய மக்கள் கட்சியின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் கோவை நடந்தது... பிப்ரவரி 6ம் தேதி மாலை 7 மணிக்கு கோவை சுந்தராபுரம் கடைவிதியில் நடந்தது. இதில் மமக மாவட்ட செயலாளர் சுல்தான் அமீர் தலைமையில், மாவட்ட பொருளாளர் டி.எம்.எஸ். அப்பாஸ் முன்னிலையில் நடந்தது. இதில் சிறப்புரையாக தமுமுக மாநிலத்தலைவர் போராசியர். டாக்டர் . எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் பேசினர், மற்றும் தமுமுக, மமக, தலைமை கழக பேச்சாளர் கோவை செய்யது அவர்கள் தற்போதையா அரசியல் சுழ்நிலைகளை எடுத்து உரைத்தார். இதில் 1500 க்கு மேல் கலந்து கொண்டார்கள். மாலையில் கோவையில் கோட்டைமேடு, செல்வபுரம், கரும்பு கடை, ஆத்துபாலம்,பகுதிகளில் கொடி ஏற்றும் நிகழ்ச்சிகள் மமக கட்சியின் பெயர் பலகை திறப்பு விழா, குறிச்சி நகரம் அலுவலகம் திறப்பு விழா நடந்தது.

Saturday, February 5, 2011

ஷார்ஜா-வில் நடைபெற்ற தமுமுக-வின் அமீரக செயற்குழு (03.01.2011)






அபுதாபி தமுமுக சார்பாக நடைபெற்ற நல்லொழுக்கப் பயிற்சி முகாம் (28.01.2011) & ஷார்ஜா-வில் நடைபெற்ற தமுமுக-வின் அமீரக செயற்குழு (03.02.2011)

அபுதாபி தமுமுக சார்பாக நடைபெற்ற நல்லொழுக்கப் பயிற்சி முகாம்





Friday, February 4, 2011

ராமநாதபுரத்தை குறிவைக்கும் மனித நேய மக்கள் கட்சி

ராமநாதபுரம் : அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா ராமநாதபுரம் தொகுதியில் போட்டியி்டப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்பு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் முஸ்லிம்களின் நலன் மற்றும் அனைத்து சமுதாய மக்களின் நல்லிணக்கத்துக்காக இயங்கி வந்தனர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது மனித நேய மக்கள் கட்சி துவங்கப்பட்டது. அப்போது தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்தது.

பின்பு தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறி தனியாகவே போட்டியிட்டு தமிழகம் முழுக்க ம.ம.க. தனது பலத்தை நிரூபித்தது. தற்போது மனித நேய மக்கள் கட்சி அ.தி.மு.க. கூட்டணியில் சேர்ந்துள்ளது.

இந்த நிலையில் இம்முறை ம.ம.க. சார்பில் பேராசியர் ஜவாஹிருல்லா ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது.

அ.தி.மு.க. கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதி எங்களுக்கு ஒதுக்கப்பட்டால், கட்சித் தலைமை தகுதியான வேட்பாளரை முடிவு செய்து அறிவிக்கும் என பேராசியர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

Tuesday, February 1, 2011

தற்போதைய தலைமை நிர்வாக குழுவிற்கு ஓர் ஆண்டுக் கால பதவி நீடிப்பு- எழுச்சியுடன் நடைபெற்ற தமுமுக பொதுக் குழுவில் முடிவு

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைமைப் பொதுக் குழுக் கூட்டம் கடந்த சனிக்கிழமை (ஜனவரி 29,2011) கிழக்கு தாம்பரத்தில் ஒரு பள்ளிக்கூடத்தின் விளையாட்டு திடலில் நடைபெற்றது.

முன்னதாக வெள்ளிக்கிழமை (ஜனவரி 28) அன்று தலைமை செயற்குழுக் கூட்டம் சென்னை மன்னடியில் உள்ள ஆயிஷா மகாலில் நடைபெற்றது. செயற்குழுக் கூட்டத்திற்கு தமுமுக தலைவர் பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் தலைமை தாங்கினார். சவுதி கிழக்கு மண்டல தமுமுகவைச் சேர்ந்த மவ்வவி ஆற்றங்கரை அலாவுதீன் பாகவியின் திருக்குர்ஆன் விளக்கவுரையுடன் செயற்குழு தொடங்கியது. செயற்பாடு அறிக்கை மற்றும் வரவு செலவு அறிக்கை சமர்பிக்கப்பட்ட பிறகு தலைமைக் கழகத் தேர்தல் தொடர்பான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர்களில் 50 பேர் பங்குக் கொண்டு தமது கருத்தை பதிவுச் செய்தார்கள். விவாதத்தில் பங்குக் கொண்ட 46 மாவட்ட நிர்வாகிகளில் 40 பேர் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் அதைத் தொடர்ந்து உள்ளாட்சி மன்றத் தேர்தல் முதலியவற்றை சந்திக்க உள்ளதால் தலைமை நிர்வாகிகள் தேர்தலை ஒத்திவைத்து தற்போதைய தலைமை நிர்வாகமே நீடிக்க வேண்டும் என்று கருத்துத் தெரிவித்தனர். இவர்களில் பலர் ஓர் ஆண்டுக்கு தலைமை நிர்வாகிகளுக்கு பதவி நீடிப்பு அளிக்கப்பட வேண்டுமென்றும், சிலர் மேலும் மூன்று ஆண்டுகளுக்கு பதவி நீடிப்பு அளிக்கப்பட வேண்டுமென்றும் இதற்காக அமைப்பு நிர்ணயச் சட்டம் திருத்தப்பட வேண்டுமென்றும் கருத்துத் தெரிவித்தனர். விவாதத்தின் இறுதியில் அமைப்பு நிர்ணயச் சட்டத்தை திருத்தாமல் அமைப்பு நிர்ணயச் சட்டம் அவசர நிலையில் முடிவெடுக்க அதிகாரம் வழங்கும் விதிமுறைப்படி ஓர் ஆண்டுக் காலம் தலைமை நிர்வாகிகளுக்கு பதவி நீடிப்பு அளிக்கப்பட வேண்டுமென்று செயற்குழு ஏகமனதாக தீர்மானித்தது. இந்த தீர்மானத்தை பொதுக்குழுவின் ஒப்புதலுக்கு முன்வைப்பது என்றும் முடிவுச் செய்யப்பட்டது.


தமுமுக தலைமை பொதுக் குழுக் கூட்டம் மறுநாள் கழகத்தின் தலைவர் பேராசிரியர் முனைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் தலைமையில் நடைபெற்றது. மவ்லவி அலாவுதீன் பாகவியின் திருக்குர்ஆன் விளக்கவுரையுடன் பொதுக் குழு தொடங்கியது. பின்னர் பொதுச் செயலாளர் எஸ். ஹைதர் அலி சென்ற 2009 ஜனவரியில் திருச்சியில் நடைபெற்ற பொதுக் குழு முதல் இந்த பொதுக் குழு வரையிலான செயற்பாட்டு அறிக்கையை சமர்பித்தார். பொருளாளர் ஒ.யு. ரஹ்மதுல்லாஹ் வரவு செலவு அறிக்கையை சமர்பித்தார். இதன் பின் பொதுக்குழு தீர்மானங்களை தலைமை கழக நிர்வாகிகள் முன்மொழிந்தார்கள். தீர்மானங்களுக்கு ஒப்புதல் கிடைத்த பிறகு அமைப்புத் தேர்தல் தொடர்பாக செயற்குழு தீர்மானத்தை முன்மொழிந்து பேச சில செயற்குழு உறுப்பினர்கள் அனுமதி பெற்று பேசினார்கள். தலைமை செயற்குழு உறுப்பினர் கோவை அக்பர், வேலூர் மேற்கு மாவட்டத் தலைவர் அஸ்லம் பாஷா, ராமநாதபுரம் கிழக்கு மாவட்டத் தலைவர் சலீமுல்லாஹ் கான், நெல்லை மேற்கு மாவட்டத் தலைவர் மைதீன் சேட் கான், மதுரை மாவட்டச் செயலாளர் மதுரை மைதீன், நாகை தெற்கு மாவட்டத் தலைவர் ஜபருல்லாஹ், வட சென்னை மாவட்டத் தலைவர் உஸ்மான் அலி மற்றும் வெளிநாடுகளில் உள்ள தமுமுக சகோதரர்கள் சார்பாக சவுதி கிழக்கு மண்டலத் தலைவர் பொறியாளர் ஷபியுல்லாஹ் கான் ஆகியோர் இது முக்கியமான காலக்கட்டம். சட்டமன்றத் தேர்தலையும் உள்ளாட்சி மன்றத் தேர்தலையும் எதிர்நோக்கும் இந்த சூழலில் தற்போதைய தலைமை நிர்வாக குழு தொடர்வது தான் அமைப்பு மற்றும் சமுதாய நலனுக்கு பயனுள்ளதாக இருக்கும். எனவே ஓர் ஆண்டுக் காலத்திற்கு தற்போதைய தலைமை நிர்வாகிகளுக்கு பதவி நீடிப்பு வழங்கப்பட வேண்டுமென்ற செயற்குழுவின் தீர்மானத்திற்கு ஒப்புதல் வழங்க வேண்டுமென்று பொதுக் குழு உறுப்பினர்களை கேட்டுக் கொண்டார்கள். செயற்குழு முன்வைத்துள்ள தீர்மானத்திற்கு ஏகமனதாக பொதுக்குழு ஒப்புதல் அளித்தது. இதைத் தொடர்ந்து தமுமுக தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், பொதுச் செயலாளர் எஸ். ஹைதர் அலி, பொருளாளர் ஓ.யு. ரஹ்மதுல்லாஹ் உள்ளிட்ட தலைமை நிர்வாகிகள் ஜனவரி 2012 வரை தலைமை நிர்வாகிகளாக நீடிப்பார்கள்.
இதே நாளில் நடைபெற்ற மனிதநேய மக்கள் கட்சியின் பொதுக்குழுவில் மனிதநேய மக்கள் கட்சி வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்று அக்கூட்டணியின் வெற்றிக்கு பாடுபடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. இறுதியில் மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது நன்றியுரை ஆற்றினார்.


மிகுந்த எழுச்சியுடனும் உற்சாகத்துடனும் இந்த இரு பொதுக்குழுக்களும் நடைபெற்றன. பல்வேறு மாவட்ட பொதுக் குழு உறுப்பினர்களை வரவேற்கும் வண்ணமையமான வரவேற்பு பலகைகள் காஞ்சி தெற்கு மாவட்டத்தினரால் வைக்கப்பட்டிருந்தன. ஒரு மாநில மாநாடு போல் 3 ஏக்கர் பரப்பளவுள்ள பொதுக்குழு திடல் மக்களால் நிரம்பி வழிந்தது. பொதுக்குழு திடலில் தொழுகை இடம், ஒழுச் செய்யும் வசதி, கழிப்பறை வசதி முதலியவை கச்சிதமாக செய்யப்பட்டிருந்தன. பொருளாளர் ஒ.யு. ரஹ்மதுல்லாஹ், துணைப் பொதுச் செயலாளர் ஜே.எஸ்.ரிபாயி மற்றும் செயலாளர் பி.எஸ். ஹமீது ஆகியோர் பொதுக் குழு ஏற்பாடு பணிகளை சிறப்பாக ஒருங்கிணைத்தனர். காஞ்சி தெற்கு மாவட்ட தலைவர் எம். யாகூப், மாவட்ட செயலாளர்கள் யுசுப் சுலைமான். காமராஜபுரம் ஹைதர் மற்றும் மாவட்ட பொருளாளர் சைபுதீன் ஆகியோர் வழிகாட்டலில் மாவட்ட சகோதரர்கள் மிக சிறப்பான முறையில் பொதுக் குழுவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தலைவர் எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ் மற்றும் பொதுச் செயலாளர் ஹைதர் அலி ஆகியோரின் நிறைவுரைகள் பொதுக் குழு உறுப்பினர்களுக்கு பெரும் உற்சாக டானிக் அமைந்தது. உடனடியாக சட்டமன்றத் தேர்தலுக்கான களப் பணிகளை மறுநாளே தொடங்குவது என்ற உற்சாகத்துடன் அவர்கள் கலைந்துச் சென்றனர்.