Saturday, December 29, 2012

ராம‌நாத‌புர‌ம் தொகுதியில் ஜ‌வாஹிருல்லா.எம்.எல்.ஏ ந‌ல‌ப்ப‌ணிக‌ள் குறித்து ஆய்வு!


ராம‌நாத‌புர‌ம் ச‌ட்ட‌ம‌ன்ற‌ உறுப்பின‌ர் ஜ‌வாஹிருல்லாஹ் கீழ‌க்க‌ரை ம‌ற்றும் அருகில் உள்ள‌ கிராம‌ங்க‌ள் உள்ளிட்ட‌ தொகுதிகுட்ப‌ட்ட ப‌குதிக‌ளில் ந‌ல‌ப்ப‌ணிக‌ளை ஆய்வு செய்தார்.
பொதும‌க்க‌ளை ச‌ந்தித்து குறைக‌ளை கேட்டார்.கீழ‌க்க‌ரை ந‌க‌ர் நிர்வாகிக‌ளில் ஒருவ‌ரான‌ சாதிக் உள்ளிட்ட‌ நிர்வாகிக‌ள் உட‌ன் சென்ற‌ன‌ர்

Saturday, November 24, 2012

கீழக்கரைஇல் துண்டு பிரசுரங்களை வழங்கும் விழிப்புணர்வு பரப்புரை



சில்லறை வணிகத்தில் 51% அந்நிய முதலீடுகளை எதிர்த்து கீழக்கரைஇல் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில்  துண்டு பிரசுரங்களை வழங்கும் விழிப்புணர்வு பரப்புரை. கீழக்கரை நகர் நிர்வாகிகள் easy சாதிக் இக்பால், மாவட்ட தலைவர் சாதிக் பாஷா மமக மாவட்ட செயலாளர் அன்வர்  அலி மாவட்ட நகர் நிர்வாகிகளும் கலந்துகொண்டு துண்டு பிரசுரத்ததை வணிகர்களுக்கும்,பயனாளிகளுக்கும்,பொதுமக்களுக்கும் வழ';கினார்கள்

Thursday, November 22, 2012

தர்மபுரியில் பொதுச்செயலாளர் முகாம்


தர்மபுரி அருகே சாதி கலவரங்களால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக மமக பொதுச்செயலாளர் எம். தமிமுன் அன்சாரி இன்று தர்மபுரி சென்றிருக்கிறார். அவருடன் மமக வின் மாநில அமைப்பு செயலலாளர் மண்டலம் ஜைனுலாபுதீன் அவர்களும், மமக வின் சட்டமன்ற உறுப்பினர் அஸ்லம் பாஷா, மாநில செயலாளர் தர்மபுரி சாதிக் ஆகியோரும் தர்மபுரி சென்றிருக்கிறார்கள்.

மமக தலைமையகம்


ஆர்ப்பாட்டம் திட்டமிட்டபடி நடைபெறும்


பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் போர் நிறுத்தம் செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எனினும் கடந்த 10 நாட்களாக இஸ்ரேல் நடத்திய பயங்கரவாத யுத்தத்தைக் கண்டிக்க வேண்டியது சர்வதேச சமூகத்தின் கடமையாகும். இஸ்ரேல் பிரதமரை ஐ.நா. அமைப்பு, போர்க்குற்றவாளி என்று அறிவிக்க வேண்டும் என்பது பாலஸ்தீன மக்களின் விருப்பமாகும். எனவே இக்கோரிக்கைகளை வ-யுறுத்தி தமுமுக சார்பில் திட்டமிட்டபடி நாளை மாலை 4 மணிக்கு மெமோரியல் ஹால் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
தமுமுக தலைமையகம்.

Tuesday, November 20, 2012

பாலஸ்தீனத்திற்காக தமுமுக ஆர்ப்பாட்டம்



கடந்த ஒரு வாரமாக பாலஸ்தீனத்தின் மீது ரவுடித்தனமாக தாக்குதல் நடத்திவரும் இஸ்ரேலின் பயங்கரவாதத்தைக் கண்டித்து தமுமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. எதிர்வரும் 23.11.2012 (வெள்ளி) அன்று மாலை 4 மணிக்கு சென்னை கவர்னர் மாளிகை அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.
இஸ்ரே-ன் பயங்கரவாதத்தைக் கண்டித்தும், இஸ்ரேலுடனான தூதரக உறவை மத்திய அரசு துண்டிக்க வலியுறுத்தியும் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலத் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ அவர்கள் தலைமை ஏற்க உள்ளார்கள் (இன்ஷாஅல்லாஹ்).
தமிழகத்தின் பிற இடங்களில் இஸ்ரேலின் பயங்கரவாதத்தைக் கண்டித்து கண்டன சுவரொட்டி ஒட்டுமாறும் மாவட்ட நிர்வாகிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
(கண்டன சுவரொட்டி மாதிரி கீழே உள்ளது)
- தமுமுக தலைமையகம்

Monday, November 12, 2012

துபாய் தமிழ் வானொலி நிலையத்திற்கு கண்டனம்


முஸ்லிம் பயங்கரவாதிகள் என்ற வார்த்தையை செய்திகளில் பயன்படுத்தியமைக்காக துபாய் தமிழ் வானொலி நிலையத்திற்கு அனுப்பப்பட்ட கண்டன அறிக்கை.

அன்புள்ள இயக்குநர் அவர்களுக்கு,

பொருள் : செய்திகளில் கவனம் செலுத்த வேண்டி

தங்களின் மீது இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவட்டுமாக!
09.11.2012, வெள்ளிக் கிழமை அன்று மதியம் 12.00 மணிக்கு தங்களது ரேடியோ ஹலோ 89.5 அலைவரிசையில் ஒலிபரப்பான தலைப்புச் செய்திகளில் முஸ்லிம் பயங்கரவாதிகளை முதலமைச்சர் ஜெயலலிதா ஒடுக்கவேண்டும் என இராமகோபாலன் தெரிவித்தார் என ஒரு செய்தி வாசிக்கப்பட்டது. தீவிரவாதமும், பயங்கரவாதமும் எந்த ஒரு மதத்திற்கும், மதத்தினருக்கும் பொதுவானது அல்ல என்று வலியுறுத்தப்பட்டதால் முஸ்லிம் பயங்கரவாதம், முஸ்லிம் தீவிரவாதம் என்ற வார்த்தைகளை சன் டிவி போன்ற ஊடகங்களே தவிர்த்தவிட்ட சூழ்நிலையில் முஸ்லிம்களின் குணாதிசியங்களையும், பண்புகளையும் அதிகமாக புரிந்துக் கொள்ளக்கூடிய வாய்ப்புள்ள நாட்டில் அமர்ந்துக் கொண்டு செய்தியின் தரம் அறியாமல் வாசிப்பது தவறு என ரேடியோ ஹலோ உணரவேண்டும்.
மதக் கலவரங்களை ஏற்படுத்தி, அமைதி குலைப்பதை தனது வாழ்நாள் இலட்சியமாக கருதும் இராமகோபாலனின் வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர் கூறிய உண்மையற்ற கூற்றை செய்தியாக வாசிப்பதற்கு முன்பு ஒன்றுக்கு பலமுறை யோசித்திருக்க வேண்டாமா?. ஒரு சில நல்ல பயனுள்ள நிகழ்ச்சிகளும், பல்வேறு மறைமுக கலாச்சார சீர்கேடுகளை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளையும் வழங்கும் தங்கள் ரேடியோ இதுபோன்ற நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் வார்த்தைப் பிரயோகங்களை தவிர்த்துக் கொள்வது நல்லது.
இந்த நாட்டினுடைய சட்டத்தின் படி இஸ்லாமிய மதத்தைப்பற்றியோ, தலைவர்களைப் பற்றியோ நேரடியாகவோ, மறைமுகமாகவோ எதிர்ப்பது, கருத்து தெரிவிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. இந்த தவறுகளை செய்ததற்காக பல செய்தித் தாள்களும், காட்சி ஊடகங்களும் கடந்த காலங்களில் உடனடியாக மூடப்பட்டுள்ளன என்பதை மேற்கோள் காட்டி, தங்களுடைய இன்றைய செய்தி வாசிப்புக்கு வருத்தம் தெரிவிப்பதுடன், இனி செய்திகளில் கவனம் செலுத்துப்படும் என்ற உறுதி மொழியையும் இந்த மின்னஞ்சல் கிடைத்த 7 வேலை நாட்களுக்குள் கொடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். தவறும் பட்சத்தில் சட்ட ரீதியாக இந்த விஷயத்தை அணுகுவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்பதை இதன் மூலமாக பதிவு செய்துக் கொள்கிறேன்.

இப்படிக்கு,
ஹூசைன் பாஷா
துபாய்
நாள் : 19.11.2012


துபாய் தமிழ் வானொலி நிலையத்திலிருந்து கிடைத்த பதில் :

திரு. ஹூசைன் பாஷா
துபாய்

மதிப்பிற்குரிய திரு. ஹூசைன் பாஷா அவர்களுக்கு>
செய்திகளில் கவனம் செலுத்த வேண்டி அனுப்பப்பட்ட தங்களது கடிதம் கண்டோம். தாங்கள் குறிப்பிட்டுள்ள செய்தியில் தவறுதலாக வார்த்தை பிரேயாகம் செய்யப்பட்டுள்ளதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம். சுமார் ஒன்றரை ஆண்டுகளாக எங்களது செய்திகளை கூர்ந்து கவனித்து வந்தீர்களானால் இஸ்லாமிய மதம் குறித்தோ> இஸ்லாமிய சகோதரர்கள் குறித்தோ சிறப்பான செய்திகளையே நாங்கள் அளித்து வந்திருப்பதை அறிந்திருப்பீர்கள். தவிர மதம்>மொழி> இனம் குறித்து எந்த தவறான செய்திகளும் வெளியாகி விடக்கூடாது என்பது குறித்தும் நாங்கள் தொடர்ந்து கவனமாகவே இருந்து வருகிறோம். மேலும்> எங்களது செய்திப் பிரிவின் அனைத்து ஊழியர்களுக்கும் இதுகுறித்து முறையாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த குறிப்பிட்ட வார்த்தைப் பிரயோகம் கவனக்குறைவினால் ஏற்பட்ட தவறே அன்றி> எந்தவித உள்நோக்கத்தினாலும் வாசிக்கப்பட்டதல்ல என்பதையும் தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம் . மேலும்> இதுபோன்ற தவறுகள் நேராவண்ணம் கூடுதல் கவனம் செலுத்தவும் உறுதி ஏற்கிறோம். எங்களது கவனத்துக்கு இதை உடனடியாக கொண்டு வந்தமைக்கு தங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

இங்ஙனம்
செய்தி ஆசிரியர்
ரேடியோ ஹலோ 89.5
நாள் : 11-11-2012

இந்த செய்தியை ஈமெயில் மூலமாக அறிந்த மாநில தலைவர் ஜே.எஸ். ரிபாயி அவர்கள், துபாய் நிர்வாகத்தின் வேகமான செயல்பாட்டிற்கு பாராட்டு தெரிவித்தார்.

Saturday, November 10, 2012

இலங்கை வெளிக்கடை சிறையில் கலவரம்: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்


மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி வெளியிடும் பத்திரிகை அறிக்கை:
இலங்கை கொழும்பு வெளிக்கடை சிறையில் இன்று திடீர் கலவரம் ஏற்பட்டு ஐந்து பேர் உயிரிழந்திருப்பதாகவும், ஏராளமானோர் காயம் அடைந்திருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
முன்பு 1983ல் இதே வெளிக்கடை சிறையில்தான் தமிழ் விடுதலைப் போராளிகளான தங்கமணி, ஜெகன் குட்டிமணி உட்பட 27 தமிழர்கள் சிங்களப் பேரினவாத தூண்டுதலில் படுகொலை செய்யப்பட்டனர். அதுவே இலங்கையில் தமிழர்கள் ஆயுதமேந்தி போராடும் நிலையை ஏற்படுத்தியது.
தற்போது அதே வெளிக்கடை சிறையில் கலவரம் வெடித்திருக்கிறது. அங்கு விசாரணைக் கைதிகளாக ஏராளமான தமிழ் கைதிகள் உள்ளனர். அதில் இந்தியர்கள் உள்ளிட்ட பன்னாட்டு கைதிகளும் உள்ளனர். அவர்களின் நிலை என்னவாயிற்று என்று தெரியவில்லை.
சிறப்புக் காவல் படையினர், சோதனை என்ற பெயரில் பல கைதிகளை நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்ததுதான் கலவரத்திற்கு காரணம் என முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு இலங்கை அரசே பொறுப்பு என்ற வகையில் இலங்கை அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

(எம். தமிமுன் அன்சாரி)

news by:tmmk.in

Tuesday, November 6, 2012

மனிதநேய மக்கள் கட்சியின் மனிதநேய தொழிற்சங்க (MTS) மாநிலச் செயலாளராக


மனிதநேய மக்கள் கட்சியின் மனிதநேய தொழிற்சங்க (MTS) மாநிலச் செயலாளராக கோவையைச் சேர்ந்த சுல்தான் அவர்களும்,
மனிதநேய வணிகர் சங்கத்தின் (MVS) மாநிலச் செயலாளராக தஞ்சையைச் சேர்ந்த கலந்தர் அவர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சுல்தான் (செல்: 9047477897)
கலந்தர் (செல்: 9994845651)

எம்.தமிமுன் அன்சாரி,
பொதுச் செயலாளர், மனிதநேய மக்கள் கட்சி

தமுமுக மாணவர் அணியின் மாநிலச் செயலாளராக


தமுமுக மாணவர் அணியின் மாநிலச் செயலாளராக டாக்டர் சர்வத் கான் அவர்களும், தமுமுக தொண்டர் அணிச் செயலாளராக
பண்ருட்டி அப்துல் காதர் அவர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
டாக்டர் சர்வத்கான் (செல்: 9943888950)
பண்ருட்டி அப்துல் காதர் (செல்: 9787271973)

ப.அப்துல் சமது, பொதுச் செயலாளர்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்

Monday, October 29, 2012

கீழ‌க்க‌ரையில் நாளை(அக்.30,செவ்வாய்) காலை 9 ம‌ணி முத‌ல் மாலை 5 ம‌ணி வ‌ரை மின் த‌டை !

கீழக்கரையில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, கீழக்கரை, ஏர்வாடி, முஹம்மது சதக் கல்லூரி பகுதி, மாயாகுளம், காஞ்சிரங்குடி, களரி, எக்ககுடி, தேரிருவேலி மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகளில் செவ்வாய்க்கிழமை(அக். 30) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை ஏற்படும் என்று ராமநாதபுரம் உதவி செயற்பொறியாளர் க‌ங்காத‌ர‌ன் தெரிவித்துள்ளார்

Friday, October 26, 2012

ஈதுல் “ அல்ஹா ” (ஹஜ் பெருநாள்) நல் வாழ்த்துக்கவாழ்த்து


அஸ்ஸலாமு அலைக்கும்.
அன்பார்ந்த எனது கழகத்து சகோதர சகோதரிகள் மற்றும் நண்பர்களுக்கும் கீழக்கரை தமுமுகவின் ஈதுல் “ அல்ஹா ” (ஹஜ் பெருநாள்) நல் வாழ்த்துக்கவாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

Wednesday, October 10, 2012

‘கீழக்கரை பகுதியில் டெங்கு காய்ச்சல் பரவுவதற்கு அதிகாரிகளின் மெத்தனமே காரணம்’ என ஜவாஹிருல்லா எம்எல்ஏ குற்றம் சாட்டியுள்ளார்.

‘கீழக்கரை பகுதியில் டெங்கு காய்ச்சல் பரவுவதற்கு அதிகாரிகளின் மெத்தனமே காரணம்’ என ஜவாஹிருல்லா எம்எல்ஏ குற்றம் சாட்டியுள்ளார். 

ராமநாதபுரம் மாவட்டத்தின் வர்த்தக நகரங்களுள் ஒன்றான கீழக்கரை மற்றும் அருகாமை பகுதிகளில்  கடந்த மூன்று மாதங்களாக டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. 

ஆக. 18ல், ஏழாவது வார்டுக்குட்பட்ட பெரிய அம்பலார் தெருவில் இன்ஜினியரிங் மாணவர் பாத்திஹ் மவுலானா(19) உயிரிழந்தார். அதற்கு 10 நாட்கள் முன்னதாக, 16வது வார்டுக்குட்பட்ட புது தெருவில் அப்துல் வாஹிது என்பவரின் ஒன்றரை மாதக்குழந்தை டெங்கு காய்ச்சல் பாதிப்பால், மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. 

செப். 30ல் 15வது வார்டுக்குட்பட்ட மாதிஹூர் ரசூல் சாலையைச் சேர்ந்த ஹதிஜத் ரில்வியா(20) என்ற இளம்பெண் டெங்கு பாதிப்பால் உயிரிழந்தார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிப்பதற்காக அங்கு வந்திருந்த ராமநாதபுரம் எம்எல்ஏ ஜவாஹிருல்லா நிருப‌ர்க‌ளுக்கு அளித்த‌ பேட்டியில் கூறியதாவது: 

அதிகாரிகள் மெத்தனம் காரணமாகவே, கீழக்கரை பகுதியில் டெங்கு காய்ச்சல் பரவுகிறது. மூன்று மாதத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். கீழக்கரையின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இருபதுக்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 ஒரு வார்டில் டெங்கு பாதிப்பின் காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டால் மட்டுமே, அந்தப்பகுதியில் சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. 
அங்கிருந்து மற்ற பகுதிகளுக்கும் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை.

 கீழக்கரை நகராட்சியில் தற்போது மலேரியாவும் பரவுகிறது. சரியான முறையில் கொசுவுக்கு புகை மருந்து அடிப்பதில்லை. கிணறுகளிலும் மருந்து தெளிப்பதில்லை. முறையான கண்காணிப்பு இல்லை என பொதுமக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். இதுகுறித்து கலெக்டரை சந்தித்துப் பேசி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவேன். இவ்வாறு தெரிவித்தார்

Monday, October 8, 2012

டெங்கு காய்ச்சலால் மரணமடைந்த ஹதிஜத் ரில்வியா உறவினர்களுக்கு பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லா ஆறுதல்

கடந்த 30.08.2012 அன்று கீழக்கரை மாதிஹுர் ரசூல் சாலை பகுதியைச் சேர்ந்த யூசுப் சாகிபு மகள் ஹதிஜத் ரில்வியா டெங்கு காய்ச்சலால் மரணமடைந்தார் அவர்களது உறவினர்களுக்கு இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் பேரா.எம்.எச். ஜவாஹிருல்லா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இராமநாதபுரம் - திருச்சி புதிய பேருந்து வசதி: எம்.எல்.ஏ. தலைமையில் தொடக்கம்


இராமநாதபுரத்தி-ருந்து திருச்சிக்கு புதிய பேருந்து போக்குவரத்தை இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் பேரா.எம்.எச். ஜவாஹிருல்லா தலைமையில் தமிழக கைத்தறித்துறை அமைச்சர் மருத்துவர் எஸ். சுந்தரராஜ் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்பேருந்து ஆர்.எஸ். மங்கலம், சி.கே. மங்கலம், தேவகோட்டை, காரைக்குடி, புதுக்கோட்டை ஆகிய ஊர்களில் நின்று செல்லும். இப்பேருந்து சேவை இராமநாதபுரத்திலிருந்து தினமும் காலை 6:45, 10:20 மற்றும் 6:15, திருச்சியிலிருந்து அதிகாலை 5:25, மதியம் 12:30 மற்றும் மாலை 4 மணி என 3 முறை இயக்கப்படும்

Friday, September 14, 2012

சென்னை: அமெரிக்க துணை தூதரகம் மீது த.மு.மு.க.வினர் கல்வீசி தாக்குதல்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவரும், ராமநாதபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா இன்று அளித்த பேட்டியில்:-

இறைவனின் இறுதி தூதர் நபிகள் நாயகத்தை கொச்சைப்படுத்தும் வகையில் அமெரிக்காவில் வாழும் யூதரான சாம்பாஸைல்
 என்பவர் தி இன்னோசன்ஸ் ஆப் முஸ்லிம்ஸ் என்ற ஒரு திரைப்படத்தை எடுத்துள்ளார். இந்த திரைப்படம் அனைவரின் உள்ளங்களையும் புண்படுத்தியுள்ளது.

உலக வரலாற்றில் ஒப்பற்ற முறையில் சீரிய மாற்றங்களை கொண்டு வந்த 100 நபர்களில் முதன்மையானவர் நபிகள் நாயகம் என்று ஒரு அமெரிக்க ஆய்வாளர் மைக்கல் ஹார்ட் நீண்ட ஆய்விற்கு பிறகு அறிவித்தார்.

ஆனால் இந்த படத்தை தயாரித்தவர்களுக்கு ஆதரவாக அமெரிக்க வெளிவிவகாரத்துறைச் செயலாளர் ஹிலாரி கிளிண்டன் கருத்துத் தெரிவித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அமெரிக்காவின் இந்த அராஜகப் போக்கை கண்டித்தும் இந்த படத்தை எடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சார்பில் இன்று மாலை அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தார்.

அதன்படி இன்று மாலை 4.45 மணி அளவில் த.மு.மு.க.வினர் சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தை முற்றுகையிட முயற்சித்தினர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். அப்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது சிலர் தூதரகம் மீது கற்கள் வீசியதாக தெரிகிறது. அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா படமும், அமெரிக்க கொடியும் எரிக்கப்பட்டன.

இந்த போராட்டம் காரணமாக அண்ணாசாலையில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Thursday, September 13, 2012

சீண்டும் அமெரிக்க கண்டித்தும் சென்னையில் தமுமுக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்...

நம் உயிரினும் மேலான நபிகள் நாயகம் ஸல் அவர்களை இழிவுபடுத்தி சினிமா வெளியிட்ட அமெரிக்க சினிமாவை தடைசெய்ய கோரியும், தொடர்ந்து முஸ்லிம்களை சீண்டும் அமெரிக்க சினிமாவை கண்டித்தும் சென்னையில் தமுமுக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்... 

நாளை வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு
இடம் அமெரிக்க தூதரகம் முன்பு ஆயிரம் விளக்கு மஸ்ஜித் அருகில்

நியாயவான்களை அணிதிரள்வோம்...
முஸ்லிம்களே கொந்தளித்து எழுவோம்...
அமெரிக்க அறக்கர்களுக்கு தக்க பாடம் புகட்டுவோம்....

அழைக்கிறது
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்
சென்னை மாவட்டம்

Monday, September 10, 2012


கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர்கள் மீது தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு. மக்கள் குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றம்
போலீஸ் அராஜகத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம்.

மமக தலைமையகம் அறிவிப்பு

Tuesday, September 4, 2012

கீழக்கரை மின்சாரப் பிரச்சனையை தீர்க்க வேண்டும் அமைச்சரை நேரில் சந்தித்து எம்.எல்.ஏ வலியுறுத்தல்

கீழக்கரை மின்சாரப் பிரச்சனையை தீர்க்க வேண்டும் அமைச்சரை நேரில் சந்தித்து எம்.எல்.ஏ வலியுறுத்தல்

மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவரும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா நேற்று (03.09.2012) இரவு 10 மணி அளவில் மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் திரு.இரா. விஸ்வாதன் அவர்களை அமைச்சருடைய இல்லத்தில் சந்தித்து கீழக்கரை மின்சாரப் பிரச்சனை தொடர்பாக சில கோரிக்கை கடிதங்களை வழங்கினார்,

அக்கடிதங்களில் குறிப்பிட்டுள்ளதாவது:

1. கீழக்கரையில் மின்சாரக் கட்டணத்தை செலுத்தும் அலுவலகம் ஊருக்கு வெளியே அமைந்திருந்தது. இதன் காரணமாக பொதுமக்கள் மின்சாரக் கட்டணத்தை செலுத்துவதற்காக ஊருக்கு வெளியே செல்ல வேண்டிய நிலை இருந்தது. இப்பிரச்சனையால் பொது மக்கள் மிகவும் சிரமம் அடைந்த காரணத்தால் கீழக்கரை பேருந்து நிலையத்தில் அருகில் மின்சாரக் கட்டணம் செலுத்த புதிய அலுவலகம் அமைக்கப்பட்டு இன்றுவரை திறக்கப்படாமல் உள்ளது.

2. அதேபோல் கீழ்க்கரையில் 10 எம்.வி.ஏ. திறன் கொண்ட மின்மாற்றி ஒன்றை நிறுவி இதுவரை மின் இணைப்பு தாராமல் உள்ளது.

3. மின்தடை ஏற்பட்டால் புகார் தெரிவிக்க சரியான தொலைபேசி எண்ணும் இல்லாமல் உள்ளது.

எனவே செயல்பாடாமல் உள்ள மின்கட்டண அலுவலகத்தை உடனே செயல்படுத்தவும் புதிய மின்மாற்றியை இயக்கவும், மின்தடை ஏற்பட்டால் புகார் தெரிவிக்க தொலைபேசி எண்னை செயல்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்கமாறு கேட்டுக்கொள்கிறேன்.

Sunday, September 2, 2012

இராமநாதபுர மாவட்டம் தமுமுகவின் அசைக்க முடியாத கோட்டை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது தமுமுக.









திணறியது இராமநாதபுரம்..... உடைந்து சிதறியது பொய் வாதங்கள்.......

இராமநாதபுர மாவட்டம் தமுமுகவின் அசைக்க முடியாத கோட்டை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது தமுமுக.

இராமநாதபுரம் மாவட்டம் தமுமுக வின் கோட்டைகளில் ஒன்றாகவும் சக்திவாய்ந்த கழக பணியாளர்களையும் உள்ளடக்கியதாகவும் இருந்துவந்தது. அப்படி தீவிர களப்பணியாளர்களின் ஒருவராய் திகழ்ந்த சகோ.சலீமுல்லாஹ்கான் அவர்கள் தமுமுகவில் இருந்து நீக்கப்பட்டார் அவருடன
் சில சகோதரர்கள் உண்மைநிலையை அறியாமல் தாங்களும் சென்றார்கள். இதனை வைத்துக்கொண்டு பொய்யையே மூலதனமாக கொண்டுள்ள ஒரு தக்லீத் கூட்டம் இராமநாதபுரத்தில் தமுமுக ம.ம.க வின் செல்வாக்கு குறைந்துவிட்டதாகவும். தமுமுக ம.ம.க கூடாரம் காலியாகிவிட்டதாகவும் இணையதளங்களில் கூப்பாடு போட்டுவந்தனர்.

அல்லாஹூ அக்பர்......... அல்லாஹூ அக்பர்....... அல்லாஹூ அக்பர்.......

இராமநாதபுரம் (கிழக்கு) மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி நடத்தும் மீனவர் வாழ்வுரிமை பாதுகாப்பு மற்றும் சிறுபான்மையின முஸ்லிம் இட ஒதுக்கீடு ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று 01-09-2012 சனி மாலை 5.30 மணிக்கு இராமநாதபுரம் சந்தை திடலில் சகோ.சாதிக் பாஷா (தலைவர், மமக இராமநாதபுரம் (கிழக்கு) அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி மவ்லவி ஜே.எஸ். ரிபாயி (தலைவர், மமக), பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் (இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர்), கோவை செய்யது (மாநில செயலாளர், தமுமுக), மைதீன் உலவி (மாநில அமைப்பு செயலாளர், மமக), ஜோசப் நொலஸ்கோ (மாநில அமைப்பு செயலாளர், மமக), மன்னை செல்லச்சாமி (மாநில அமைப்பு செயலாளர், மமக), கிதிர் முஹம்மது (மருத்துவ அணி மாநில செயலாளர், தமுமுக) ஆகியோர் கலந்துகொண்டு எழுச்சி உரை நிகழ்த்தினர்.

இந்த கூட்டத்தில் வழக்கத்தை விட மாறாக மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தமுமுகவின் கொள்கை அடலேறுகளும், ம.ம.கவின் மனிதநேய சொந்தங்களும் மற்றும் சமுதாய சொந்தங்களும், மீனவ உறவுகளும் அலைகடலென திரண்டு வருகை தந்தனர். பொதுக்கூட்டமா மாநாடா என்ற சந்தேகத்தை எழுப்பும் அளவிற்கு மக்கள் வெள்ளம்... இராமநாதபுரம் திணறியது..... அல்ஹம்துலில்லாஹ்......................

பொய் பித்தலாட்டக்காரர்களுக்கு சமுதாய மக்கள் வருகை தந்து சவுக்கடிகொடுத்துவிட்டனர்.. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே........ இனி எவர்களின் பருப்பும் இராமநாதபுரம் மாவட்ட மக்களிடம் செல்லாது என நிரூபித்துவிட்டார்கள்........

அல்லாஹூ அக்பர்......... அல்லாஹூ அக்பர்....... அல்லாஹூ அக்பர்.......

- முத்துப்பேட்டை முகைதீன்


Tuesday, August 28, 2012

Monday, August 20, 2012

மருதாணி வைப்பதால் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக பரவி வரும் செய்தி திட்டமிட்ட வதந்தியாகும்.... யாரும் ஏமாற வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்...

-தமுமுக தலைமையகம்

Saturday, August 18, 2012

கீழக்கரை தமுமுக நகர கிளை சார்பில்,ஃபித்ரா பொருட்கள் வழங்கப்பட்டது


கீழக்கரை தமுமுக நகர கிளை சார்பில்,ஃபித்ரா பொருட்கள் வழங்கப்பட்டது இந்த ஃபித்ராபொ ருட்கள் அவர்கள்  வீடு தேடி சென்று ,ஃபித்ரா பொருட்கள் கொடுக்கப்பட்டது  கீழக்கரை நகர் தலைவர் செஎது இப்ராகிம் அவர்களுடன் கீழக்கரை நகர் தமுமுக மமக  நிர்வாகள் உடன்  இருத்தனர் ,ஃபித்ரா பொருட்கள் வழக்ப்படும்போது

கீழக்கரை 500 பிளாட் புதிய தமுமுக கீழை திறக்கப்பட்டது



கீழக்கரை தமுமுக புதிய கீழை திறக்கப்பட்டது கீழக்கரை 500  பிளாட் எனும் இடத்தில புதிய தமுமுக கீழை திறக்கப்பட்டது இந்த கீழைய தமுமுக   தமுமுக முத்த தலைவர்  ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் (ம.ம.க.) திறந்துவைத்து கொடியதினர். இப்தார் நிகழ்ச்சி  நடைபெற்றது  இந்த  நிகழ்ச்சியில்  நகர்  மற்றும்  மாவட் செயலாளர் அன்வர் அலி ,  மாவட் தலைவர் சதிக்கு பாஷா தமுமுக ஒன்றியச் தலைவர் ரைஸ்  கீழக்கரை நகர் தலைவர் செஎது இபுராஹிம் .பொருளாளர் ஈஸி சதிக்கு செயலர் ராஜா ஹுசைன் இக்பால் கிளை நிர்வாகள் அனைத்து சமுதாய  பொது மக்கள் கலந்து 

Friday, August 10, 2012

தமுமுக மமக வின் மூத்த தலைவரும், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர்.டாக்டர்.M.H.ஜவாஹிருல்லாஹ்.MBA.,MPhil.,PhD.,MLA., அவர்களுக்கு நேர்மையான சட்டமன்ற உறுப்பினர் என்று பாராட்டி "திருவள்ளுவர் நேர்மை அரசியல் விருது" வழங்கப்படுகிறது

தமுமுக மமக வின் மூத்த தலைவரும், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர்.டாக்டர்.M.H.ஜவாஹிருல்லாஹ்.MBA.,MPhil.,PhD.,MLA., அவர்களுக்கு நேர்மையான சட்டமன்ற உறுப்பினர் என்று பாராட்டி "திருவள்ளுவர் நேர்மை அரசியல் விருது" வழங்கப்படுகிறது. 

நேர்மையான தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு "திருவள்ளுவர் நேர்மை அரசியல் விருது" வழங்கி பாராட்டு விழா

நாள்: 11 ஆகஸ்ட் 2012 (சனிக்கிழமை), மாலை 5 மணி

இடம்: எதிராஜ் மகளிர் கல்லூரி கேளரங்கம், சென்னை

நிகழ்ச்சி ஏற்பாடு: ஊழலை எதிர்த்த ஒருங்கிணைப்பு, சென்னை

Tuesday, August 7, 2012

அஸ்ஸாம் - மியான்மர் முஸ்லிம்கள் இனப்படுகொலையைக் கண்டித்தும், மத்திய அரசு உடனடியாகத் தலையிட வலியுறுத்தியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

அஸ்ஸாம் - மியான்மர் முஸ்லிம்கள் இனப்படுகொலையைக் கண்டித்தும், மத்திய அரசு உடனடியாகத் தலையிட வலியுறுத்தியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்


நாள்: 10.08.2012 வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணி

இடம்: கலெக்டர் அலுவலகம் முன்பு, சென்னை

அஸ்ஸாமிலும், மியான்மரிலும் (பர்மா) பெண்கள், குழந்தைகள் உள்பட நூற்றுக்கணக்கில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கானவர்கள் அகதிகளாக்கப்பட்டுள்ளனர். இந்த இனப்படுகொலையைத் தடுக்க அரசுகள் தவறிவிட்டன. முஸ்லிம்களுக்கு எதிரான இந்த இனப்படுகொலைகளைக் கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக மாபெரும் கண்டன நடைபெற உள்ளது இன்ஷாஅல்லாஹ்.
அநீதிக்கு எதிரான இந்த ஆர்ப்பாட்டதிற்கு அலைகடலென ஆர்ப்பரித்து வாரீர்.


அழைக்கிறது


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்

Saturday, August 4, 2012

கீழக்கரையில் புதிய தாலுக்கா அலுவகம் திறக்க தலைமைச் செயலாளரிடம் எம்.எல்.ஏ வலியுறுத்தல்


கீழக்கரையில் புதிய தாலுக்கா அலுவலகம் திறக்கக் கோரி தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரை நேரில் சந்தித்து இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் பேரா.எம்.எச். ஜவாஹிருல்லா மனு அளித்தார் அதில் குறிப்பிட்டுள்ளதாவது:
எனது தொகுதியான இராமநாதபுரத்திற்குட்பட்ட, கீழக்கரையை கடந்த 2010 ஆம் ஆண்டு தனித் தாலுகாவாக அமைக்க வருவாய்துறையின் மூலம் சட்டமன்றத்தில் அறிவிப்பு செய்யப்பட்டதின் அடிப்படையில் தாலுக்கா அலுவலகத்திற்காக கீழக்கரை சதக் டிரஸ்ட் இரண்டு ஏக்கர் நிலத்தை தானமாக வழங்க முடிவு செய்தனர் மேலும் கடந்த 21.05.2011ல் இராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியரால் தற்காலிக அலுவலத்திற்கு இடம் தேர்வு செய்ய சோதனையும் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் கடந்த சட்டமன்ற தேர்தல் மற்றும் புள்ளிவிவரப் பணி காரணமாக புதிய தாலுக்கா பணி நிறுத்தி வைக்கப்பட்டது.
தற்போது அனைத்து பணிகளும் முடிந்தும் புதிய அலுவலகம் திறக்கப்படாமல் நிலுவையில் உள்ளது. நானும் இதுகுறித்து சட்டபேரவையில் கேள்வி எழுப்பினேன் அதற்கு மாண்புமிகு வருவாய்த்துறை அமைச்சர் இவ்விசயம் குறித்து பரிசீலிக்கப்படும் என தெரிவித்தார் என்பதை தங்களின் கவனத்திற்கு கொண்டுவருகிறேன்.
எனவே நிலுவையில் உள்ள கீழக்கரை தனித் தாலுக்கா விரைவில் உதயமாக நடவடிக்கை எடுக்க ஆவன செய்யுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

Wednesday, August 1, 2012

துபாயில் உயிரிழந்த கீழக்கரை மீனவரின் சகோதரிக்கு அரசு வேலை வழங்க வேண்டும். தலைமைசெயலாலரை நேரில் சந்தித்து ராமநாதபுரம் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

கடந்த 23/07/2012 அன்று துபாயில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும்போது ராமநாதபுரம் கீழக்கரையை சேர்ந்த மீனவர் சேகர் அமெரிக்க கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். கொல்லப்பட்ட மீனவர் குடும்பத்தினருக்கு ரூபாய் 5 கோடி நிவாரண தொகையை அமெரிக்காவிடமிருந்து பெற்று வழங்க வேண்டும் என்று ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் கோரிக்கை வைத்திருந்தார். இந்நிலையில் இன்று (01/08/2012) பிற்பகல் 2 மணி அளவில் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் திரு திபேந்திரநாத் சாரங்கி அவர்களை நேரில் சந்தித்து மறைந்த மீனவர் சேகரின் சகோதரிக்கு அரசு வேலை வழங்க வேண்டி கோரிக்கை வைத்தார்.


Tuesday, July 24, 2012

திருப்பதி - மதுரை ரயில் ராமேஸ்வரம் வரை நீட்டிப்பு

திருப்பதி - மதுரை ரயில் ராமேஸ்வரம் வரை நீட்டிப்பு

இராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் வாரம் இரு முறையிலிருந்து வாரம் மூன்று முறையாக சேவை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு இராமேஸ்வரம் வரை நீட்டிக்கப்பட்டுள்ள மதுரை-திருப்பதி விரைவு ரயிலினை தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் டாக்டர். எஸ். சுந்தர்ராஜ் கொடியசைத்துத் துவக்கி வைத்தார்கள். இதில் சிறப்பு விருந்தினர்களாக ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், இராமேஸ்வரம் நகராட்சி தலைவர் திரு. அ.அர்ச்சுனன், மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் கோயல் ஆகியோர் கலந்து கொண்டனர்

தமிழக மீனவர் சேகரின் வீட்டிற்கு சென்று அவரின் குடும்பத்தினருக்கு சட்டமன்ற உறுப்பினர் முனைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா ஆறுதல் கூறினார்.

அன்மையில் துபாயில் அமெரிக்க படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழக மீனவர் சேகரின் வீட்டிற்கு சென்று அவரின் குடும்பத்தினருக்கு சட்டமன்ற உறுப்பினர் முனைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா ஆறுதல் கூறினார். மனிதாபிமானமற்ற இச்செயலை செய்த அமெரிக்க படையினரிடமிருந்து ஐந்து கோடி ரூபாய் நஷ்ட ஈடு பெற்று தரும் வரை ஓய மாட்டோம். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கிடைக்க மாண்புமிகு முதல்வரிடம் வலியுறுத்துவேன் என்றார். 

துபாயில் உள்ள ம.ம.க வினர் சேகரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கான வேலைகளை அங்குள்ள இந்திய தூதரகம் மூலமாக செய்து வருகின்றனர். விரைவில் சேகரின் உடல் சொந்த ஊருக்கு வரும் என்றார். சந்திப்பின்போது மாவட்ட த.மு.மு.க.செயலாளர் அன்வர் பொருளாளர் சித்தீக் ஒன்றிய தலைவர் ரைஸ் இப்ராஹீம் உட்பட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Monday, July 23, 2012

த.மு.மு.க அபுதாபி மண்டலம் சார்பாக இன்ஷா அல்லாஹ் வரும் 02.08.2012

த.மு.மு.க அபுதாபி மண்டலம் சார்பாக இன்ஷா அல்லாஹ் வரும் 02.08.2012 (வியாழக்கிழமை), அன்று மாலை 4.30 மணிக்கு 15 வது ஆண்டு ரமலான் (இப்தார்) சிறப்பு நிகழ்ச்சி நடைபெற

Thursday, July 5, 2012

கீழக்கரை - தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண உதவி



கீழக்கரை குடிசை பகுதிகளில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண உதவிகளை வழங்கும் ராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் மற்றும் மாவட்ட, நகர தமுமுக மற்றும் மமக நிர்வாகிகள் உடன் உள்ளனர்.

Saturday, June 23, 2012

ஜே.எஸ். ரிபாயி அவர்களின் தாயார் வபாத் ஆனார்கள்

தமுமுக - மமக வின் மாநில தலைவர் ஜே.எஸ். ரிபாயி அவர்களின் தாயார் இன்று மேலப்பாளையத்தில் வபாத் ஆனார்கள்....
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி ஊன் ....
அவர்களின் ஜனாஸா நாளை (ஜூன் 24) காலை 10 மணிக்கு மேலப்பாளையத்தில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வெற்றிக்கு துவா செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்....