Sunday, June 21, 2015

ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கீழக்கரை நகராட்சி அலுவலகம் ஆய்வு செய்து பொதுமக்களின் குறைகளை ஆணையாளரிடம் கேட்டறிந்தார்கள் ! !

ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கீழக்கரை நகராட்சி அலுவலகம் ஆய்வு செய்து பொதுமக்களின் குறைகளை ஆணையாளரிடம் கேட்டறிந்தார்கள் ! !

ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீழக்கரை நகராட்சியில் நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்களின் குறைகளை கேட்டறியும் விதமாக 

ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய மக்கள்கட்சியின் சட்டமன்றக்குழு தலைவருமான
பேராசிரியர்.முனைவர்.M.H.ஜவாஹிருல்லா MLA அவர்கள் ஆணையாளர் மற்றும் அதிகாரிகள் சந்திப்பு.

அதுசமயம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மூலமாக கீழக்கரை நகராட்சி பகுதிகளில் வீதிகள் தோறும் வீடுகளில் அன்றாடம் குப்பைகளை சேகரிப்பதற்காக 21 தள்ளு வண்டிகள் புதிதாக வாங்குவதற்கு ஆவண செய்து தர வேண்டி சட்டமன்ற உறுப்பினர் அவர்களிடத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.

அதுபோல் கீழக்கரை நகராட்சிப்பகுதிகளில் வாடகை கட்டிடங்களில் இயங்கிவரும் அங்கன்வாடி கட்டிடங்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதிமூலம் புதிய சொந்த கட்டிடங்கள் கட்டித்தருவதற்கும் கோரிக்கை தரப்பட்டது.

மேலும் கீழக்கரை பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையான குடிதண்ணீர் அனைத்து மக்களுக்கும் தட்டுப்பாடின்றி கிடைத்திட அதற்கான திட்டங்களை மன்றத்தின் மூலமாக ஆவண செய்து வழங்கும்படி அறிவுறுத்தினார்கள்.

இந்த நிகழ்வுகளின்போது கீழக்கரை நகராட்சி ஆணையாளர் மற்றும் அரசு அதிகாரிகள், 21 வது வார்டு உறுப்பினர் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.

உடன் மனிதநேய மக்கள்கட்சி மாவட்ட செயலாளர் சகோ.B.அன்வர் அலி, மற்றும் நிர்வாகிகள் யாசர் அரபாத், நூருல் அஃப்பான், மற்றும் கீழக்கரை நகர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tuesday, June 16, 2015

கீழக்கரை நகராட்சி ஆணையாளரும் முனைவர்.M.H.ஜவாஹிருல்லா MLA வளர்ச்சி பணிகளை பற்றி கலந்து முக்கிய முடிவுகள்



15.06.2015 அன்று ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற குழு தலைவருமான பேராசிரியர்.முனைவர்.M.H.ஜவாஹிருல்லா MLA அவர்களும் கீழக்கரை நகராட்சி ஆணையாளரும் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி கீழக்கரை நகர் நிர்வாகிகள் சந்தித்து கீழக்கரை வளர்ச்சி பணிகளை பற்றி கலந்து முக்கிய முடிவுகள் எடுகபடுள்ளன அபோது  உடன் தமுமுக மாவட்ட  துணை செயலாளர் ரைஸ்  இப்ராஹிம் அவர்களும்  கலந்து கொண்டனர்

Friday, June 12, 2015

முஸாபர் நகரில் பாதிக்கப்பட்ட சொந்தங்களுக்காக த.மு.மு.க சார்பில் கட்டப்பட்டுவரும் வீடு

முஸாபர் நகரில் பாதிக்கப்பட்ட சொந்தங்களுக்காக த.மு.மு.க சார்பில் கட்டப்பட்டுவரும் வீடு


  













முஸாபர் நகரில் பாதிக்கப்பட்ட சொந்தங்களுக்காக த.மு.மு.க சார்பில் கட்டப்பட்டுவரும் வீடுகளை மூத்த தலைவர் அண்ணன் செ.ஹைதர் அலி தலைமையிலான குழு பார்வையிட்டார்கள்...

Saturday, June 6, 2015

கீழக்கரை நகர் தமுமுக சார்பாக கிழக்குத்தெருவில் தெருமுனை பொதுக்கூட்டம்

05.06.2015 அன்று   தமுமுக  கீழக்கரை நகர்  கீழை சார்பாக  கீழக்கரை முஸ்லிம் பஜார்  தெருவில் தெருமுனை பொதுக் கூட்டம் நடைபெற்றது இந்த பொதுக் கூட்டதில் அண்ணன் சிவகாசி முஸ்தபா அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்கள். முன்னிலை சகோ.B.அன்வர் அலி அவர்கள் (மமக மாவட்ட செயலாளர்) ராமநாதபுரம் (கிழக்கு)  மற்றும்  கீழக்கரை நகர்  தமுமுக நகர்  செயலாளர் வெஸ்ட் ஆசியா சிராஜு மற்றும் நகர் நிர்வாகிகள் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். முனதாக சிவகாசி முஸ்தபா , அவர்கள் கழக கொடியே ஏற்றி வைத்தார்கள் .




Tuesday, June 2, 2015

பர்மா மியான்மர் முஸ்லிம்கள் படுகொலையை கண்டித்து இராமநாதபுரத்தில் தமுமுக நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் (கிழக்கு) தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் சார்பில் பர்மா மியான்மர் முஸ்லிம்கள் படுகொலையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் ! !




தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் ராமநாதபுரம் மாவட்டம் (கிழக்கு) சார்பில் இன்று 02-06-2015 மாலை 4 மணி அளவில் ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள சந்தை திடலில், தமுமுக ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் எம்.சாதிக் பாட்சா அவர்களின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இக்கூட்டத்தில் தமுமுக தலைமை கழக பேச்சாளர் சகோ.கோவை ஜாஹிர் அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார்கள்.
அதில் பர்மா மியான்மர் ரோஹிங்கியாவில் பச்சிளம் குழந்தைகள் முதல் சிறுவர்,சிறுமியர், முதியோர், பெண்கள் என அனைத்து முஸ்லிம் மக்களையும் ஈவு இரக்கமின்றி கொன்று குவித்து இனப்படுகொலை செய்யும் பர்மா மியான்மர் பவுத்த அரசு மற்றும் பௌத்த வெறியர்களை கண்டித்தும்,
ஐ.நா.சபை இந்த இனப்படுகொலையை தடுத்து நிறுத்தக்கோரியும், இதை உலக அரங்கில் கை கட்டி வேடிக்கை பார்க்கும் உலக நாடுகள் உடனடியாக குரல் எழுப்பக்கோரியும்,
தட்டிக்கேட்க சக்தி இருந்தும் சத்தமில்லாமல் ஆட்சி செய்யும் மத்திய அரசை இந்திய மக்களின் கண்டனத்தை பதிவு செய்யக்கோரியும் கண்டனக்குரல் எழுப்பப்பட்டது.
மேலும் கண்டனக்குரல் எழுப்பியவர்கள் சகோ.A.முஹம்மது சித்திக் அவர்கள் (தமுமுக தென் கிழக்கு மண்டல தேர்தல் அதிகாரி), சகோ.S.முருக பூபதி மாவட்ட துணை செயலாளர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, சகோ.டாக்டர்.S.ஜாஹிர் ஹுசைன் அவர்கள் தேவிப்பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் மாவட்ட பொருளாளர் மமக.
இந்த நிகழ்வை தமுமுக மாவட்ட உலமாக்கள் அணி செயலாளர் சகோ.ஹனீப் ரஷாதி அவர்கள் கிராஅத் ஓதி ஆரம்பம் செய்து வைத்தார்கள்.
முன்னிலை சகோ.B.அன்வர் அலி அவர்கள் (மமக மாவட்ட செயலாளர்) ராமநாதபுரம் (கிழக்கு) சகோ.S.M.முஹம்மது இஸ்மாயில் அவர்கள் தமுமுக மாவட்ட பொருளாளர், சகோ.S.சுல்த்தான் அவர்கள் தமுமுக மாவட்ட துணை செயலாளர், சகோ.M.ரைஸ் இப்ராஹீம் அவர்கள் தமுமுக மாவட்ட துணை செயலாளர், சகோ.A.செய்யது காசீம் அவர்கள் தமுமுக மாவட்ட துணை செயலாளார்
இக்கூட்டத்தில் தமுமுக மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கிளை மற்றும் மாவட்ட அணி நிர்வாகிகள் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
நன்றியுரை : சகோ.M.நஸ்ருத்தீன் (எ) பிஸ்மி அவர்கள் தமுமுக ராமநாதபுரம் நகர் செயலாளர்.