Monday, August 31, 2009

திருவாரூர் மாவட்ட தமுமுக தொண்டரணிச் செயலாளர் படுகொலை

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரைச் சேர்ந்த சகோ. நூர் முஹம்மத் நேற்று தனது வீட்டருகில் உள்ள அன்வரியா பள்ளிவாசலில் நோன்பு திறந்து விட்டு மஃரிப் தொழுகையை நிறைவேற்றி விட்டு வெளியில் வந்தபோது நான்கு பேர் கொண்ட சமூக விரோத கும்பலால் கத்தியால் குத்தப்பட்டு அந்த இடத்திலேயே அநியாயமாக உயிரிழந்துள்ளார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


சகோ. நூர் முஹம்மத் தனது கம்பீரமானத் தோற்றத்துடனும், மிகுந்த செயல்துடிப்புடனும் பாடுபட்டு திருவாரூர் மாவட்ட தமுமுகவின் தொண்டரணி உருவாகவும், அது திறம்பட செயல்படவும் காரணமாக இருந்தவர். தனது சொந்த ஊரான கூத்தாநல்லூரின் நலனுக்காகவும், அந்த பகுதியில் உள்ள மக்களுக்காக உழைப்பதிலும் அயராது ஈடுபட்டு வந்தார். சென்ற ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு கூத்தாநல்லூர், பொதக்குடி, அத்திக்கடை மற்றும் மன்னார்குடியில் தமுமுக நடத்திய இரத்ததான முகாம் மற்றும் பொது மருத்துவ முகாம்களிலும், திருத்துறைப்பூண்டியில் நடந்த ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழாவிலும் கொடும் வெயிலிலும், கொட்டும் மழையிலும் தொண்டரணியை வழி நடத்தி சிறப்பான சேவைகளை வழங்கினார்.

இவரது படுகொலை செய்தி பரவியதுமே அந்த பகுதி முழுவதும் பதற்றம் பற்றிக்கொண்டது. செய்தி அறிந்த மாவட்ட நிர்வாகிகள் உடனே களத்துக்கு விரைந்து காவல்துறை அதிகாரிகளை சந்தித்து உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்றும் தவறினால் விளைவுகள் மோசமாகிவிடும் என்று கேட்டுக் கொண்டனர்.

சமூக சேவையிலும், மனிதநேய பணிகளிலும் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட சகோ. நூர் முஹம்மதை, புனிதமிக்க ரமலான் மாதமென்றும் பாராது கொடூரமாக படுகொலையை முன்னின்று நடத்திய அதே ஊரைச் சேர்ந்த அனஸ் என்பவரை காவல்துறை கைது செய்திருப்பதாக தகவல் வந்துள்ளது. முஹல்லா பள்ளிவாசல் நிர்வாகத்தில் ஈடுபடுவதில் ஏற்பட்ட சாதாரண ஈகோ பிரச்சினையின் காரணமாக இந்த படுபாதக செயலை செய்துள்ளனர்.

தலைவர் பேரா. ஜவாஹிருல்லாஹ், மாநில செயலாளர் ஹாஜாகனி, மனிதநேய மக்கள் கட்சி செயலாளர் தமீமுன் அன்சாரி, கோவை சாதிக் ஆகியோர் கூத்தாநல்லூரில் கூடி உள்ளனர். மேலும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து தமுமுக, மமகவினர் வந்துக் கொண்டுள்ளனர்.

கொலையாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வைப்பதற்காகவும், மீண்டும் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தடுப்பதற்காகவும் இன்று கூத்தாநல்லூரில் தமுமுக தலைவர்கள் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்த உள்ளனர்.

தனது இன்னுயிரை மக்கள் பணியில் இழந்துள்ள சகோதரரின் மறுமை வாழ்க்கையை அல்லாஹ் மேன்மை ஆக்கவும், அவரது குடும்பத்தினர், கழகத்தினர் அனைவரது உள்ளங்கள் அமைதி அடையவும் யாவரும் பிரார்த்திப்போமாக.

Sunday, August 30, 2009

தமுமுக கிளை உறுப்பினர்களுக்கு ஒரு முக்கிய அவசர வேண்டுகோள்

அனைத்து தமுமுக கிளை உறுப்பினர்களுக்கு ஒரு முக்கிய அவசர வேண்டுகோள்:

கூத்தாநல்லூரில் நேற்று (ஆக 29) இஃப்தாருக்குப் பிறகு திருவாரூர் மாவட்ட தொண்டரணிச் செயலாளர் சகோ. நூர் முஹம்மது அதே ஊரைச் சேர்ந்த சமூக விரோதி அனஸ் மற்றும் அவனது கூட்டாளிகளால் படுகொலைச் செய்யப்பட்ட சம்பவத்தை அறிந்திருப்பீர்கள். இந்த குற்றவாளிகளை சட்டத்தின் பிடியிலிருந்து தப்புவிக்க சில சக்திகள் முயற்சி செய்து வருகின்றன. இந்த கயவர்களை நீதியின் முன் நிறுத்த தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்க அவரது தனி செல்லுக்கு (00914425671441) என்ற எண்ணில் இணைப்பில் உள்ள படிவத்தில் கையெழுத்திட்டு உடனடியாக ஏராளமான ஃபேக்ஸ்களை அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ராசல்கைமாவில் நடைபெற்ற மாபெரும் திருக்குர்ஆன் மாநாடு

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

ராசல்கைமாவில் நடைபெற்ற மாபெரும் திருக்குர்ஆன் மாநாடு

முஸ்லிம் முன்னேற்றக் கழகம், ராசல்கைமா மண்டலம் சார்பாக28.08.2009 அன்று வெள்ளிக் கிழமை இரவுத் தொழுகைக்கு பின்பு திருக்குர்ஆன் மாநாடு மு.மு.க அமீரக துணைத் தலைவர் ஹுசைன் பாஷா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் துவக்கமாக மௌலவி இஸ்மாயில்ஷா மன்பயீ அவர்கள் கிராஅத் ஓதி மிக அருமையான விளக்கவுரையாற்றினார். மண்டல பொருளாளர் கடியச்சை ஹாஜா முகையதீன் அவர்கள் வரவேற்புரையாற்றினார்கள். மண்டலத் தலைவர் ஜாஃபர் சாதிக் முன்னிலை வகித்தார்.

ஷார்ஜா மண்டல முமுக முன்னாள் நிர்வாகியும், இஸ்லாமிய அழைப்பாளருமான திருச்சி அப்துல் ரஹ்மான் அவர்கள் ரமலானில் நாம் எடுக்கும் பயிற்சி நமக்கு எப்படிப்பட்ட மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமெனவும், குர்ஆன் ஹதிதை பின்பற்றி அனைவரும் நடக்க வேண்டுமெனவும், திருமறைக் குர்ஆனை தொடர்ந்து படிக்க வேண்டுமெனவும், அழைப்புப் பணி அனைவரின் மீதும் உள்ள கடமை என்றும் வலியுறுத்தி சிறந்ததொரு உரையாற்றினார்கள். அதைத் தொடர்ந்து பேசிய முமுக-வின் அமீரக அலுவலகச் செயலாளர் சகோதரர் ஹசன் எண்ணத்தின் அடிப்படையில் அல்லாஹ் கூலி வழங்குகின்றான்,எண்ணத்தில் இருக்கும் தூய்மைக்கு தகுந்த சிறந்த பரிசை அல்லாஹ் வழங்குவான் என்ற கருத்தை வலியுறுத்தி பேசினார்கள்.

இறுதியாக சிறப்புரையாற்றிய தமுமுக-வின் தலைமைக் கழகப் பேச்சாளர் கோவை ஜாஹிர் அவர்கள் மறுமை, மண்ணறை குறித்து பேசுகையில், நபி (ஸல்) அவர்களின் முன் பின் பாவங்களை அல்லாஹ் மன்னித்ததாக அறிவித்த பின்பும் அவர் அல்லாஹ்வை அதிகமதிகம் நின்று வணங்கி அல்லாஹ{க்கு நன்றி செலுத்தியது போன்ற பல விஷயங்களை எடுத்துக் கூறி உள்ளங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய அளவு சிறந்த உரையாற்றினார்கள். மாநாட்டில் திரளாக கலந்துக் கொண்ட ஆண்களும், பெண்களும் கண்ணீர் மல்க அவரது உரையை செவிமடுத்தார்கள்.

மண்டலச் செயலாளர் பொதக்குடி முஹம்மது ஷாஜஹான் அவர்கள் நன்றிவுரை கூறி துவா ஓதி நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது. இது போன்ற மாநாடுகள், இஸ்லாமிய சொற்பொழிவு நிகழ்ச்சிகள் இந்த பகுதியில் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என கலந்துக் கொண்டவர்கள் விருப்பம் தெரிவித்தார்கள். மக்களை ஒருங்கிணைக்கும் பணியை ராக் சிட்டி பகுதியில் பாம்பன் அப்துல்லாஹ் அவர்களும், ஜூல்ஃபார் கேம்ப் பகுதியில் பஷீர் அவர்களும், எம்.பி.எம்.கேம்ப் பகுதியில் பீர் முஹம்மது அவர்களும், ஸ்டார் சிமெண்ட் கேம்ப் பகுதியில் மன்சூர் அவர்களும் திறம்பட செய்திருந்தார்கள்.

திருக்குர்ஆன் இறக்கி அருளப்பட்ட இந்தப் புனிதமிகு மாதத்தில் திருக்குர்ஆன் மாநாடு மக்களிடையே ஒரு எழுச்சியை ஏற்படுத்தியதென்றால் அது மிகையில்லை. எல்லாப் புகழும் இறைவனுக்கே!

மாநாட்டு புகைப்படங்களைக் காண இங்கே சொடுக்கவும்http://picasaweb. google.com/ powermediaonline /28082009#

Saturday, August 29, 2009

கீழக்கரை பழைய குத்பா மசூதியில் 380 ஆண்டுகளுக்கு பின் ஜும்மா தொழுகை

கீழக்கரை பழைய குத்பா மசூதியில் 380 ஆண்டுகளுக்கு பின் ஜும்மா தொழுகை

ராமநாதபுரம், ஆக. 28: கீழக்கரையின் தொடக்க கால தாய் மசூதியான பழைய குத்பா மசூதியில் 380 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் உள்ள பழைய குத்பா மசூதி சுமார் 1000 வருடங்களுக்கு முன்பு இஸ்லாமியர்களால் நிறுவப்பட்டது. பின்னர் மக்கள்தொகை அதிகமான காரணத்தால் இடவசதி பற்றாக்குறை ஏற்பட்டது.

380 ஆண்டுகளுக்கு முன்னர் அந்தக் காலத்தில் வாழ்ந்து வந்த வள்ளல் சீதக்காதி மரைக்காயர் கீழக்கரை நடுத் தெருவில் பெரிய ஜும்மா பள்ளியை நிறுவி, அதில் இஸ்லாமியர்கள் அனைவரும் ஒன்றுகூடி வெள்ளிக்கிழமை தோறும் குத்பா தொழுகை நடத்தி வந்தனர்.

இதனால் வெள்ளிக்கிழமை தோறும் பழைய குத்பா மசூதியில் நடந்துவந்த ஜும்மா தொழுகை நடைபெறாமல் இருந்தது.

தற்போது கீழக்கரையில் மேலத்தெரு புதுப்பள்ளி மசூதி, தெற்குத் தெரு மசூதி, கிழக்குத் தெரு அப்பா பள்ளி மசூதி, நடுத்தெரு பெரிய ஜும்மா மசூதி மற்றும் பழைய குத்பா மசூதி உள்பட 5 மசூதிகளில் குத்பா தொழுகை நடந்து வருகிறது.

மக்கள்தொகை அதிகமானதன் காரணமாக பழைய குத்பா மசூதியில் 380 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகை நடந்தது குறிப்பிடத் தக்கது.

Wednesday, August 26, 2009

கீழக்கரையில் ரூ. 300 லஞ்சம் வாங்கிய தலைமைக் காவலர் கைது



ராமநாதபுரம், ஆக. 25: கீழக்கரை காவல் நிலையத்தில் ரூ. 300 லஞ்சம் வாங்கிய தலைமைக் காவலரை லஞ்ச ஒழிப்புப் போலீஸôர் செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை கிழக்குத் தெருவைச் சேர்ந்த அப்பா முகைதீன் கருணை மகன் செய்யது முகம்மது பாக்கர் (34). இவரது மனைவி ஆயிஷத் மர்லியா. இவருக்கு வெளிநாடு செல்ல பாஸ்போர்ட் விசாரணைக்கு கீழக்கரை காவல் நிலையத்தில் பணிபுரியும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயதேவி, தலைமைக் காவலர் சண்முகவேல் ஆகியோர் ரூ. 300 லஞ்சம் கேட்டனராம். இதுகுறித்து செய்யது முகம்மது பாக்கர் ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்புப் போலீஸôரிடம் புகார் செய்தார். புகாரின்பேரில், லஞ்ச ஒழிப்புப் போலீஸôர் மாறு வேடத்தில் சென்றனர். அப்போது கீழக்கரை காவல் நிலையத்தில் ரூ. 300 லஞ்சமாக தலைமைக் காவலர் சண்முகவேலிடம்(படம்) செய்யது முகம்மது பாக்கர் கொடுக்கும்போது, கைது செய்யப்பட்டார். லஞ்சம் கேட்ட கீழக்கரை காவல் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயதேவி ஏர்வாடியில் விநாயகர் சிலை ஊர்வலத்துக்குப் பாதுகாப்புக்குச் சென்று விட்டதால், அவர் கைது செய்யப்படவில்லை. இருவர் மீதும் விசாரணை நடந்து வருகிறது.

thanx to: dinamani

Tuesday, August 25, 2009

அரபி கல்லூரி கட்டுமான பணிக்கு ரூ. ஒரு லட்சம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மனித நேயமக்கள் கட்சி சார்பில் வேதாளை தெற்குதெரு ஜமாத் சார்பில் கட்டபட உள்ள அரபி கல்லூரி கட்டுமான பணிக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டது. முத்துபட்டிணம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த சர்புதீன் மகன் அசாருதீன்(13) சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக 20 ஆயிரம் , சென்னை வில்லிவாக்கம் பாரதிநகரை சேர்ந்த அன்சாரிக்கு மருத்துவ நிதியாக 50 ஆயிரம் வழங்கப்பட்டது. மாவட்ட செயலாளர் சலிமுல்லாகான் நிதியை வழங்கினார்.

மாவட்ட மருத்துவ அணி செயலாளர் அன்வர் அலி, த.மு.மு.க., தலைவர் ஷேக்ஜமாலுதீன், செயலாளர் அல்லாபிச்சை, துணை செயலாளர் ரசுல் கான், மாவட்ட தொண்டரணி செயலாளர் அஜ்மல் கான், மண்டபம் தலைவர் சாகுல்ஹமீது, மாவட்ட துணை தலைவர் ஹிமாயுன்கபீர் உட்பட பலர் பங்கேற்றனர்.

Monday, August 24, 2009

முஸ்லிம்களை வதைக்கும் வக்பு வாரியம்

முஸ்லிம்களை வதைக்கும் வக்பு வாரியம்







-மாயாவி

தமிழ்நாடு வக்பு வாரியத்துக்கு சொந்தமான கொவ்ஸ் மைதீன் பேட்டை வக்புக்கு சொந்தமான இடத்தில் தமிழ்நாடு அரசு குடிசை மாற்று வாரியம் சார்பாக ஜெயலலிதா ஆட்சி காலத்தில் வீடுகள் கட்டப்பட்டன. கலைஞர் ஆட்சியில் அரசு சார்பில் அவ்வீடுகள் ஏழைகளுக்கு தரப்படும் என்று அறிவிக்கப்பட்டது.உடனே அன்று வக்பு வாரிய தலைவராக இருந்த ஹைதர் அலி வக்ப் வாரியத்திற்கு சொந்தமான வீடுகளை தமிழக அரசு ஒதுக்க கூடாது.வக்ப் வாரியத்திடமே ஒப்படைக்க வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை வைத்தார்.பல முயற்சிகளுக்கு பின்னர் அந்த இடங்கள் வக்பு வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டது.அதற்குள் தேர்தல் வந்து விடவே ஹைதர் அலி வக்ப் வாரிய பதவியை ராஜினாமா செய்து விட்டார்.

இந்நிலையில் புதிதாக பதவியேற்ற கலைஞரின் நண்பர் கவிக்கோ அப்துல் ரஹ்மான் வீடுகளை வைத்து சமூகத்தின் மதிப்பை பெற்று விட வேண்டும் என்று களத்தில் இறங்கினார்.பாவம் இளிச்சவாய் பொதுமக்கள்.காசிமேடு பகுதியில் நூறு வீடுகளும் துரைப்பாக்கம் பகுதியில் 176 வீடுகள் மட்டுமே இருக்கும் நிலையில் அதிலும் 10% இமாம்களுக்கும் 10% மோதினர்களுக்கும்,10% விதவைகளுக்கும்,10% கை விடப்பட்ட பெண்களுக்கும்,10% வேலை இல்லாத ஆலிம்களுக்கும் மீதி 50% மற்ற ஏழை மக்களுக்கும் என ஒதுக்கப்பட உள்ள நிலையில் 5 நாட்கள் வீடுகளுக்கு விண்ணப்பம் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது.வாடகை 250 என்றும் அட்வான்ஸ் 1000 என்றும் வீடு (வெறும்) 250 Sqft என்றும் கூறப்பட்டது. இதை கேட்டதும் வக்பு வாரியத்தின் முன் 17.8.09 திங்கள் கிழமை முதல் மக்கள் சாரை சாரியாக குவிந்தனர்.விண்ணப்பங்கள் வாங்க வந்த கூட்டத்தை சமாளிக்க முடியாமல் திணறினர் வாரிய அதிகாரிகள்.போலீஸ் வந்து கூட்டத்தை சமாளிக்க வேண்டியதாயிற்று.



முதல் நாள் இரவிலேயே ரோட்டிலேயே உட்கார்ந்து அங்கேயே படுத்து தூங்கி காலையில் விண்ணப்பம் வாங்க வந்த முஸ்லிம்களை பார்த்து அந்த பகுதியில் வழக்கமாக தெருவில் வசிக்கும் மக்களே ஆச்சரியப்பட்டனர்.கைக்குழந்தைகளோடு இயற்க்கை உபாதைகளை நிறைவேற்றக்கூட வசதி இல்லாத நிலையில் நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் அதிகாலை முதலே வரிசையில் நின்று கொண்டிருந்தது பார்க்கவே கொடுமையாக இருந்தது.சமுதாயத்தின் மானத்தை சந்தி சிரிக்க வைக்க வேண்டும் என்ற வக்பு வாரியத்தின் எண்ணம் நல்லபடியாக நிறைவேறியது.வெறும் 276 வீடுகளுக்கு இது வரை 15,000விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளது.ஏழை மக்களின் அடிப்படை தேவைகளை வைத்து அரசியல் செய்யும் வாரியத்தின் கூத்தை பார்த்து எல்லோரும் காரி துப்பினர்.கூட்டத்தின் வேகத்தை கட்டுபடுத்த முடியாமல் திணறிய போலீசார் ஒரு கட்டத்தில் தடியடி நடத்தும் சூழ்நிலை உருவானது.கடைசியாக போலீசார் வக்பு வாரிய உயர் அதிகாரியிடம் அசம்பாவிதம் ஏதும் நடந்தால் உங்கள் மீது வழக்கு பதிவு செய்ய நேரிடும் என்று கூறியதால் வியாழன் கிழமையோடு விண்ணப்பம் வழங்குவதை நிறுத்தி கொண்டனர்.


மொத்த ஒதுக்கீட்டில் வக்பு வாரிய உயர் அதிகாரிகளுக்கும் வாரிய உறுப்பினர்களுக்கும்(வாங்காதவர்களும் உண்டு)அவர்களுக்கு தேவை பட்டவர்களுக்கும் போக மீதி உள்ள இடங்களுக்குத்தான் இவ்வளவு போட்டி.நவீன யுகத்தில் இன்டர்நெட் போன்றவற்றில் டவுன்லோட் செய்து கொள்ளும் வசதிகள் எல்லாம் வந்து விட்ட பிறகு மக்களை வரிசையில் நிற்க வைத்து கஷ்டப்படுத்துவது பக்கா அரசியல். வெள்ள நிவாரணம் என்ற பெயரில் திரண்ட கூட்டத்தில் ஏற்பட்ட கசமுசா போன்று ஏற்பட்டு ஏதாவது உயிரிழப்பு ஏற்பட்டிருந்தால் என்னவாகி இருக்கும்.அப்போது இரங்கல் கவிதையை பாடுவதை தவிர வாரிய தலைவரால் என்ன செய்ய முடியும்.மக்களுக்கு நன்மை செய்கிறேன் என்று கிளம்பி தான் தோன்றி தனமாக வேலை செய்வதை விட்டு உருப்படியான வேலைகளை வக்பு வாரியம் பார்க்க வேண்டும்.

Tuesday, August 18, 2009

முதுகுளத்தூரில் இராமநாதபுரம் மேற்கு மாவட்ட த.மு.மு.க. பொதுக்குழு கூட்டம்

முதுகுளத்தூரில் த.மு.மு.க., மேற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மாநில தலைவர் ஜவாஹிருல்லாஹ் தலைமை வகித்தார்.

அவர் பேசுகையில், "அண்ணா பிறந்த நாளில் ஆயிரத்து 405 பேர் விடுதலை செய்யப்பட்டனர். கோவை குண்டுவெடிப்பில் 12 ஆண்டுகளாக விசாரணை கைதிகளாக உள்ளவர்களை அடுத்த அண்ணா பிறந்த நாளில் விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் அ.தி.மு.க., தேர்தலை புறக்கணித்தது ஜனநாயக குற்றமாகும். மின்னணு ஓட்டுபதிவில் ஏற்படும் குறைகளை களைய போதுமான விளக்க கூட்டங்களை மத்திய, மாநில அரசுகள் நடத்த வேண்டும் என த.மு.மு.க., வலியுறுத்தியுள்ளது" என்றார்.

ராமநாதபுரம் மாவட்ட பொருளாளர் சல்மான், செயலாளர் ஜபருல்லாகான் முன்னிலை வகித்தனர். மனித நேய மக்கள் கட்சி நகர் செயலாளர் அமிருல் ஹக், ஒன்றிய செயலாளர் வாவா ராவுத்தர், மாவட்ட துணை செயலாளர் அஜிஸ் கனி, த.மு.மு.க., நகர செயலாளர் ரைசூல் உட்பட பலர் பங்கேற்றனர்.

தொண்டியில் தமுமுக சார்பில் மாபெரும் இரத்ததான முகாம்

தொண்டியில் ஆக.15இல் 63வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகமும் மாவட்ட அரசு மருத்துவமனையும் இணைந்து தொண்டி சிந்தா மஹாலில் மாபெரும் இத்ததான முகாம், தமுமுக மாவட்ட தலைவர் எம்.சாதிக் பாட்சா தலைமையில் நடைபெற்றது.

ம.ம.க. மாவட்ட பொருளாளர் சாகுல் ஹமீது வரவேற்புரை நிகழ்த்தினார். தொண்டி ஐக்கிய ஜமாஅத் தலைவர் செய்யதலி அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து முகாமை தொடங்கி வைத்தார்.

இதில் 63 நபர்கள் இரத்ததானம் செய்தனர். 100 க்கும் மேற்பட்டவர்கள் அவசர தேவைக்கு இரத்ததானம் கொடுக்க முன்வந்தனர்.

இதில் தமுமுக மாவட்ட செயலாளர் தஸ்பீக் அலி, மாவட்ட பொருளாளர் வாணி சித்தீக், துணைத் தலைவர் ஹுமாயூன் கபீர், துணைச் செயலாளர் அன்வர் அலி, மாவட்ட மாணவரணி செயலாளர் கலந்தர் ஆசிக், ஒன்றிய துணைச் செயலாளர் சம்சுதீன் முனவர், ஒன்றிய தலைவர் நிஹ்மத்துல்லா, ஒன்றிய மமக செயலாளர் பரக்கத் அலி, ஒன்றிய இணை செயலாளர் சேக் முஹம்மது, நகர் நிர்வாகிகள் சுல்த்தான், அப்துல் ரஷீது, அப்துல் ரஜாக், அப்துல் ரஹ்மான், பேரூராட்சி மன்ற கவுன்சிலர் அப்துல் அஜீஸ், அழகப்பா கல்லூரி டாக்டர். ரவிக்குமார், வட்டார காங்கிரஸ் தலைவர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ம.ம.க. மாவட்ட செயலாளர் சலீமுல்லாஹ் கான், தொண்டி பேரூராட்சி மன்றத் தலைவர் பால்சாமி, வட்டார மருத்துவ அலுவலர் வெ.வீ.துரைச்சாமி, டாக்டர் ஸ்டீபன் சகாயராஜ், ஐக்கிய ஜமாஅத் செயலாளர் அயூப்கான் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் அகமது பயாஸ் நன்றி கூறினார்.

புதிய மாநில நிர்வாகிகள் நியமனம்

தமுமுகவின் தலைமை நிர்வாகக்குழு ஆலோசனைக் கூட்டம் 07.08.2009 அன்று நடைபெற்றது. ஏற்கனவே செயல்பட்ட நிர்வாகிகளில் சிலர் மனிதநேய மக்கள் கட்சியின் நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டதால், காலியான இடங்களுக்கு கீழ்க்கண்டவர்கள் நியமிக்கப்பட்டனர்.

மாநிலச் செயலாளர்கள் :

பேரா.ஜெ.ஹாஜாகனி, பி.எஸ்.ஹமீது, ஜிஃப்ரீகாஸிம்,

மாநில துணைச் செயலாளர்கள்:


பி.எல்.எம்.யாஸீன், தர்மபுரி ஸாதிக், கடலூர் ஜின்னா ஆகியவர்கள் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

Wednesday, August 12, 2009

71 & 72வது தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகத்தின் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு


விசாரணை சிறைவாசிகளை விடுதலை செய்! சென்னை ஊர்வலத்தில் எழுச்சி!





ஒவ்வொரு வருடமும் அண்ணா பிறந்த நாளான செப்டம் பர் 15ஆம் தேதி அன்று 7 வருடம் தண்டனையை அனுபவித்த ஆயுள் தண்டனை சிறைவாசிகளை தமிழக அரசு பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்து வருகிறது. ஆனால் ஏழு வருடம் முடித்த சிறைக் கைதி களின் பட்டியலில் மதக் கலவர வழக்குகளில் சம்பந்தப்பட்ட தாகக் கூறி முஸ்லிம் கைதிகள் விடுதலையாவதை அரசு தடுத்து வருகிறது. மேலும் விசாரணை என்ற பெயரில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில்வாடி வரக்கூடிய கைதிகள் தமிழக சிறைகளில் பலர் உள்ளனர். குணங்குடி அனிபா, தடா ரஹீம் போன்ற வர்கள் விசாரணைக் கைதிகளாகவே சுமார் 11 வருடங்களாக சிறையில் வாடி வருகின்றனர். இவர்களின் மீதான வழக்கே முடியும் தருவாயில் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் களுக்கு எதிராக எந்த சாட்சியங் களும் இல்லாத சூழ்நிலையிலும் இவர்கள் இதுவரை விடுதலை செய்யப் படாதது நீதித்துறைக்கு பெரும் களங்கமாகும்.


இந்நிலையில் வரும் அண்ணா பிறந்த நாளன்று ஏழு ஆண்டுகள் தண்டனை முடிந்த ஆயுள் சிறைவாசிகள் லி அவர்கள் எக்குற்றத்தைப் புரிந்திருந் தாலும் பாரபட்சமின்றி அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும், ஆயுள் தண்டனை பெறாத மற்ற சிறை யாளிகளுக்கு தண்டனை குறைப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும், ஓராண்டுக்கு மேல் சிறையில் உள்ள விசாரணை சிறைவாசிகளை பிணையில் விடுதலை செய்ய உரிய சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து சென்னையில் மிகப் பெரும் பேரணி ஒன்றை தமிழக மக்கள் உரிமைக் கழகம் ஒருங்கிணைத் திருந்தது.



காலை 11 மணியளவில் மன்றோ சிறையி­ருந்து புறப்பட்ட இப்பேர ணியை பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல் லாஹ் துவக்கி வைத்தார். இப்பேரணி யில் நூற்றுக்கணக்கான மக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். தமுமுக மற்றும் ம.ம.க.வினர் பெருளவில் பங்குகொண்டது குறிப் பிடத் தக்கது. கோஷங்களை எழுப்பிய படி கைகளில் கோரிக்கை வாசகங்கள் எழுதிய அட்டைகளோடு நீண்ட வரிசையில் சென்ற பேரணியை தமிழ மக்கள் உரிமை கழக ஒருங்கிணைப்பு செயலாளர் வழக்கறிஞர் புகழேந்தி தலைமை ஏற்று நடத்திச் சென்றார். அவருடன் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், பேராசிரியர் கல்யாணி, தோழர் தியாகு, தோழர் பாவேந்தன், தோழர் வடிவு, தோழர் சங்கர் ஆகியோர் முன்வரிசையில் முழக்க மிட்டபடி பேரணியை வழிநடத்திச் சென்றனர்.

பேரணியின் பின்வரிசையில் பெண் ளும் அணிவகுக்க தேசிய லீக் இனாயத்துல்லாஹ், அக்ரம்கான் ஆகியோர் கோஷ மிட்டபடியே வந்தனர். பேரணியில் வந்தவர்கள் விசா ரணை சிறைவாசிகள் குணங்குடி அனிபா, தடா ரஹீம் ஆகியோரை விடுதலை செய்! 17 ஆண்டுகளாய் சிறையில் உள்ள நளினி, பேரறிவாளன் ஆகியோரை விடுதலை செய்! என முழக்கமிட்டனர்.



பேரணி கட்டுக்கோப்பாக போக்குவரத்துக்கு எந்த இடை யூறும் இன்றி சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையை வந்தடைந்தது. அங்கே அமைக்கப்பட்டிருந்த மேடையில் தலைவர்கள் உரையாற்றினர். பேரா. கல்யாணி பேசும்போது கைதிகளைப் பார்க்க சிறையில் வரும் உறவினர்கள் அவர்களுடன் பேசுவதற்கு படும் கஷ்டங்களை விவரித்தார். கைதிகளுக்கான ரேஷன் பொருட்களில் நடைபெறும் ஊழல்களையும் எடுத்துச் சொல்லி தலித்துகளும், முஸ்­ம்களும் சிறையில் படும் துயரங்களை விவரித்தார். தோழர் தியாகு பேசும்போது, மும்பை குண்டுவெடிப்பு போன்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டதாகக் கூறி முஸ்­ம் களுக்கு வழக்குகளை விரைந்து நடத்தி மரண தண்டனை அளிக்கப்படுகிறது. ஆனால் பாபர் மஸ்ஜிதை இடித்தவர்கள், முஸ்லிம்களுக்கு எதிரான கலவரங்களை நடத்தியவர்களுக்கு என்ன தண்டனை? என கேள்வி எழுப்பினார். சிறைவாசிகள் படும் துயரங்களை சிறை சென்ற தனது அனுபவத்தோடு எடுத்துரைத்தவர், 8 வருடங்களுக்கு மேல் சிறையில் இருப்பதால் மனரீதியாகவே சிறைவாசி கள் பாதிக்கப்படுவதை உணர்ந்து குற்றப்பிரிவுகளை பாராது, அவர்கள் 7 வருடம் சிறைத் தண்டனை அனுபவித்து இருந்தால் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார். இறுதியாகப் பேசிய தமுமுக தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் பேரணியின் நோக்கங்களை எடுத்துரைத்து அரசு அவற்றை வரும் அண்ணா பிறந்த நாளன்று நிறைவேற்ற வேண்டும், இல்லையெனில் அடுத்தக் கட்ட போராட்டம் தொடரும் என எச்சரித்தார். (பேராசிரியரின் உரை தலையங்கமாக) இறுதியாக நன்றியுரைக் குப் பின் கூட்டம் எழுச்சியோடு முடிவுற்றது. தலைநகரில் நடந்த பேரணி மனித உரிமை ஆர்வாளர்களின் மீடியா மற்றும் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்ததைப் போல் அரசின் கவனத்தை யும் ஈர்த்திருக்கும். மனித உரிமை ஆர்வலர்களின் நியாய மான கோரிக் கையை அரசு ஏற்குமா?



புதுவை முஸ்லிம்களுக்கு 2.5 சதவீத இடஒதுக்கீடு: பட்ஜெட் உரையில் அறிவிப்பு!

தமுமுக தொடர் போராட்டத்தின் வாயிலாக சென்ற 05.08.09 அன்று புதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் உரையில் முதலமைச்சர் வி.வைத்திய லிங்கம் அவர்கள் முஸ்லிம் வகுப்பினருக்கு 2.5 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்குவதாக அறிவிப்பு செய்தார். இந்த அறிவிப்பினை கேள்விப் பட்ட தமுமுக தலைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் புதுவை அரசுக்கும், முதலமைச்சர் வைத்தி யலிங்கம் அவர்களுக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். இடஒதுக்கீட்டின் அறிவிப்பைத் தொடர்ந்து புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த தமுமுக நிர்வாகிகள் புதுவை அரசுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நகர் முழுவதும் வால்போஸ்டர்கள் ஒட்டி முதலமைச்சர், சமூகநல அமைச்சர் மற்றும் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்து மகிழ்ச்சியினை வெளியிட்டனர்.

இடஒதுக்கீடு அறிவிப்பில் குளறுபடி?

புதுச்சேரி மாநிலத்தில் இடஒதுக்கீடு முறை கீழ்க்கண்டவாறு நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது. அதில் எஸ்.சி. பிரிவுக்கு 16%, எம்.பி.சி. 20%, ஓ.பி.சி. 13%, பொது 51% கடைப்பிடிக்கப்படு கிறது. இதில் எம்.பி.சி. பிரிவில் 34 சாதிகளும், ஓ.பி.சி.யில் 75 சாதிகளும் (முஸ்லிம்கள் உட்பட) உள்ளனர். புதுவை அரசு அறிவித்த முஸ்லிம் களுக்கான இடஒதுக்கீட்டில் 1.5 சதவிகிதம் எம்.பி.சி.யிலிருந்தும், 1 சதவிகிதம் ஓ.பி.சி.யிலிருந்தும் கொடுப் பதாக அறிவித்துள்ளது. ஆனால் முஸ்லிம்கள் அனைவரும் ஓ.பி.சி. பிரிவிலேயே உள்ளதால் இந்த 2.5 சதவிகித இடஒதுக்கீட்டை ஓ.பி.சி.யின் 13 சதவிகிதத்திலிருந்தே கொடுக்க வேண்டும், எம்.பி.சி.யிலிருந்து பிரித்து கொடுக்கக்கூடாது என பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத் தில் அமளியில் ஈடுபட்டதால் சென்ற 7.8.09 அன்று முதலமைச்சர் வைத்தி யலிங்கம், முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கிய விவகாரத்தில் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம் மீண்டும் கருத்து கேட்கப்படும் என்று சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பட்ஜெட் உரையில் வெளியிட்டப் பட்ட வரலாற்று சிறப்புமிகு இந்த அறிவிப்பு, தடங்கல் இன்றி நடை முறைக்கு வரவேண்டும் என்பது தான் புதுவை மக்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.

தமுமுக வரவேற்பு

இது குறித்து கடந்த 05.08.2009 அன்று தமுமுக தலைவர் டாக்டர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது

புதுச்சேரியில் வாழும் முஸ்லிம்களின் நீண்டக் கால கோரிக்கையை ஏற்று இன்று புதுவை சட்டமன்றத்தில் முஸ்லிம் களுக்கு 2.5 சதவிதம் தனி இடஒதுக்கீடு வழங்கிய காங்கிரஸ் அரசுக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

புதுவையில் வாழும் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் தனி இடஒதுக்கீடு வழங்க கோரி நீண்ட காலமாக தமுமுக மாநாடுகளையும் போராட்டங்களையும் நடத்தி வந்துள்ளது. 2007ல் காரைக்கால் முதல் புதுச்சேரி வரை இருசக்கர வாகன பேரணி போராட்டத்தை இடஒதுக்கீடு கோரிக்கையை முன்வைத்து தமுமுக நடத்தி யுள்ளது. இதன் விளைவாக புதுவை சட்டமன்றத்தில் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க புதுவை சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. இருப்பினும் இந்த தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. இதன் பிறகு புதுவை சட்டமன்றத்தில் முஸ்லிம் களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க தீர்மானம் நிறை வேற்றிய பிறகும் ஒரு ஆண்டுக்கும் மேலாக அதை மத்திய அரசுக்கு அனுப்ப தவறிய திரு. ரங்க சாமி தலைமையிலான புதுவை அரசை கண்டித்தும், தீர்மானத்தை டெல்லிக்கு அனுப்ப வலியுறுத்தியும் ஆயிரக்கணக் கான ஆண்களும், பெண்களும் பங்குக் கொண்ட சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்தை தமுமுக நடத்தியது. இந்த போராட்டங்களின் பலனாக இன்று புதுவை மாநில பட்ஜெட் உரையில் 2.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளதை வர வேற்கிறோம் என்று டாக்டர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் தெரிவித்துள்ளார்.

பீடி தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் த.மு.மு.க. பொதுக்குழு வற்புறுத்தல்

நெல்லை, ஆக.10-

பீடிசுற்றும் தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்கவேண்டும் என்று நெல்லையில் நடந்த த.மு.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


பொதுக்குழு கூட்டம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகத்தின் நெல்லை மாவட்ட பொதுக்குழு கூட்டம் நெல்லை விஜயாகார்டனில் நேற்று நடந்தது. பொதுச்செயலாளர் ஹைதர்அலி தலைமை தாங்கி பேசினார். மாநில துணை செயலாளர் மைதீன்சேட்கான் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

தனி நல வாரியம்

பீடி சுற்றும் தொழிலாளர்களின் பிரச்சினைகளை தீர்க்க அவர்களுக்கு தனி நல வாரியம் அமைக்கவேண்டும்.

நெல்லை மாநகராட்சியின் வளர்ச்சி பணியில் தேக்கம் இல்லாமல் செயல்பட ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியை மாநகராட்சி ஆணையாளராக நியமிக்கவேண்டும்.

மேம்பாலத்தின் கீழ் பகுதியில் முன்பு போல கடைகளை அமைக்கவேண்டும். முதியோர் ஓய்வூதியம் பெற தகுதியான அனைவருக்கும் வழங்கவேண்டும்.

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

யார்-யார்?

கூட்டத்தில் மாவட்ட தலைவர் மைதீன்பாரூக், துணை தலைவர் ரசூல்மைதீன், செயலாளர் உஸ்மான்கான், துணை செயலாளர்கள் சுல்தான், சர்தார் அலிகான், பொருளாளர் மிஸ்பாகி, மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் பாளை.ரபீக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tuesday, August 4, 2009

டாஸ்மாக் மதுபான கடை தமுமுக கடும் எதிர்ப்பு

திருநெல்வேலி: நெல்லை டவுனில் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு தமுமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் தமுமுக நெல்லை மாவட்ட செயலாளர் உஸ்மான் கான் மற்றும் பலர் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:

நெல்லை டவுன் நெல்லையப்பர் கோயில் வடக்கு வாசலில் இருந்து சுமார் 30 மீ தொலைவில் டாஸ்மாக் மதுபான கடை உள்ளது. கடந்த ஆண்டு நான்கு ரத வீதிகளிலும் டாஸ்மாக் மதுபான கடைகள் அகற்றப்பட்டும் இந்த கடை மட்டும் அகற்றப்படவில்லை. வடக்கு ரத வீதியில் உள்ள கடையை அகற்றவும் பல முறை கோரிக்கை விடுக்கப்பட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிப்பு அடைகின்றனர். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sunday, August 2, 2009

ஊட்டியில் 69வது மற்றும் 70வது ஆம்புலன்ஸ் அர்பணிப்பு விழா



நீலகிரி மாவட்ட தமுமுக சார்பாக கடந்த
24.07.2009 அன்று 69வது மற்றும் 70வது இரு ஆம்புலன்ஸ்
அர்பணிப்பு விழா நடைபெற்றது. அதில் தமுமுக தலைவர்
டாக்டர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் மற்றும் துணைப் பொதுச்
செயலாளர் ஜெ.எஸ்.ரிஃபாயி, மாநிலச் செயலாளர் சகோ.இ.உமர்,
மாநில துணைச் செயலாளர் சகோ.கோவை சாதிக், தலைமைக் கழக
பேச்சாளர் சகோ. கோவை செய்யது, மாநிலச் செயற்குழு
உறுப்பினர் சகோ. கோவை அனல் அக்பர் ஆகியோர் கலந்து
கொண்டு சிறப்புரையாற்றினார்கள். இதில் நீலகிரி மாவட்ட,
நகர, கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர் ஏராளாமான
பொது மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

சிவகாசியில் தமுமுக சார்பாக 67வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு


சிவகாசியில் தமுமுக சார்பாக 67வது

ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு


விருதுநகர் மாவட்ட சிவகாசியில் தமுமுக
சார்பாக 67வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா கடந்த
19.07.2009 அன்று நடை பெற்றது. தமுமுக தலைவர் டாக்டர்
எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ், ம.ம.க. பொதுச் செயலாளர்
ப.அப்துல் சமது, ம.ம.க. அமைப்புச் செயலாளர் சகோ.
முஹம்மது கவுஸ் ஆகியோர் கலந்து கொண்டு
சிறப்புரையாற்றினார்கள். அதில் விருது நகர் மாவட்ட,
நகர, வார்டு, கிளை நிர்வாகி கள் மற்றும் திரளான பொது
மக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை செயற்குழு தீர்மானங்கள்




மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை செயற்குழு கூட்டம் சென்னை - எழும்பூரில் 01.08.2009 அன்று பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது தலைமையில் நடைபெற்றது.


தலைமை ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூண் ரஷீது, துணைப் பொதுச் செயலாளர் எம்.தமீமுன் அன்சாரி, அமைப்புச் செயலாளர்கள் மண்டலம் எம்.ஜெய்னுலாபுதீன், நாசர் உமரி, மதுரை கௌஸ், தலைமை நிலையச் செயலாளர் முஹம்மது இஸ்மாயீல் உட்பட மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்றனர்.


இச்செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:


1) எதிர்வரும் 18.08.2009 அன்று தமிழகத்தில் நடைபெறவிருக்கும் ஐந்து சட்டமன்ற இடைத் தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சி யாரையும் ஆதரிக்காது என தீர்மானிக்கப்படுகின்றது.


எந்த அரசியல் திருப்புமுனையும் ஏற்படுத்தாத இந்த இடைத்தேர்தலில், போட்டியிடும் வேட்பாளர்களில் தொகுதி மக்களின் நலன் பேணுவதில் அக்கரையுள்ள வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு மனிதநேய மக்கள் கட்சி கேட்டுக்கொள்கிறது. இதே நேரத்தில் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவாக மனிதநேய மக்கள் கட்சி ஆதரித்து பிரச்சாரம் செய்யாது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.


2) சிறுபான்மை மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தனி இடஒதுக்கீடு வழங்க பரிந்துரைத்துள்ள நீதிபதி ரெங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரைகளை உடனடியாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து அமல்படுத்துமாறு மத்திய அரசை இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.


3) இலங்கையின் அகதி முகாம்களில் முள்வேலிகளுக்கு மத்தியில் அகதிகளாக வாழும் 3 லட்சத்திற்கும் அதிகமான தமிழர்களின் நலன்கள் குறித்து இச்செயற்குழு ஆழ்ந்த கவலை தெரிவித்துக்கொள்கிறது.


அங்கு வாழும் தமிழர்களின் நிலையறிய இந்தியாவிலிருந்து உண்மை அறியும் குழு ஒன்றை மத்திய அரசு அனுப்பி வைக்க வேண்டும் என்று இச்செயற்குழு மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.


4) விலைவாசி உயர்வில் மிகப்பெரிய விளைவை ஏற்படுத்தியிருக்கும் யூகபேர (Online) வணிகத்தை மத்திய அரசு தடைசெய்ய வேண்டும் என இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.


5) இந்தியர்களின் கலாச்சாரத்திற்கும் மனித குலத்திற்கும் எதிரான ஓரினச்சேர்க்கை சீர்கேட்டுக்கு எக்காரணம் கொண்டும் சட்ட அங்கீகாரம் கொடுக்கக் கூடாது என்று மத்திய அரசை இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.


6) பாலாற்றின் குறுக்கே அணைக்கட்டும் முயற்சியை ஆந்திர அரசு கைவிட வேண்டும் என்றும், நதி நீர் விவகாரங்களில் அண்டை மாநிலங்களுக்கிடையே சுமூகமான உறவுகள் ஏற்பட மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.


7) வாக்குப் பதிவு இயந்திரத்திற்கு எதிராக பெரும்பாலான அரசியல் கட்சிகள் கருத்து தெரிவித்துள்ள நிலையில், இந்திய தேர்தல் கமிஷன் இதுகுறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தை மாநில அளவிலும் தேசிய அளவிலும் கூட்டி இறுதி முடிவெடுக்க வேண்டும் என்றும், இச்செயற்குழு மத்திய தேர்தல் ஆணையத்தை கேட்டுக்கொள்கிறது.


8) மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளிகளான இராணுவ அதிகாரி ஸ்ரீகாந்த் புரோகித் மற்றும் பிரக்கியா சிங் தாகூர் ஆகிய இருவர் மீதும் பயங்கரவாத தடுப்பு படை போட்டிருந்த மோகா சட்டம் செல்லாது என்று மும்பை சிறப்பு நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு கவலை அளிக்கின்றது. மராட்டிய அரசு இப்பிரச்சனையில் தலையிட்டு இந்த இருவர் மீதும் மீண்டும் மோகா சட்டம் விதிக்கப்பட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் இச்செயற்குழு தீர்மானிக்கிறது.


9) செப்டம்பர் 15, அண்ணா பிறந்த நாளை யட்டி பொதுமன்னிப்புடன் ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்துவரும் நிலையில் இவ்வருடம் பல்வேறு வழக்குகளில் தண்டனை பெற்ற ஆயுள் தண்டனை பெற்ற முஸ்லிம் கைதிகள் விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு பரீசிலிக்க வேண்டும் என இச்செயற்குழு தமிழக அரசை கேட்டுக்கொள்கிறது.

Saturday, August 1, 2009

கோவை மாவட்ட மனித நேய மக்கள் கட்சியின் சார்பாக ஆர்பாட்டம்.


கோவை மாவட்ட மனித நேய மக்கள் கட்சியின் சார்பாக ஆர்பாட்டம்.
கடந்த 2004 நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு ஐக்கிய முற்போக்கு கூட்டணி பிரதமர் திரு.மன்மோகன் சிங் அவாகள் உத்தரவின்போரில் ஒய்வு பெற்ற நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா அவாகளின் மூலம் சிறுபான்மை மக்களின் நிலையை மேம்படுத்திட ஆணையம் அமைக்கப்பட்டது.அதை தொடாந்து இந்த ஆனணயத்தின் நிறைவு அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.கடந்த ஆட்சியின் போது அமுலடபடுத்தாமல்மத்திய அரசு காலம் தாழ்த்தி வருவதால் சிறுபான்மை மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா ஆனையத்தின் பரிந்துரையை உடனடியாக மத்திய அரசு அமுல்படுத்த வேண்டும் என்று கோவை மாவட்ட மனித நேய மக்கள் கட்சியின் சார்பாக . வெள்ளி கிழமை (31-07-09) அன்று ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்திற்கு மனித நேய மககள் கட்சியின் மாவட்ட பொருளாளர் டி.எம்.எஸ். அப்பாஸ் தலைமை தாங்கினார். மனித நேய மக்கள் கட்சியின் மாநில துனைப் பொதுச்செயளாளர் எம். தமிமுன் அன்சாரி சிறப்புரையாற்றினர்.இந்த ஆர்பாட்டத்தில். த மு மு க. மாவட்ட தலைவர் பஷிர். மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர். சுல்தான் அமீர். த மு மு க. மாவட்ட செயலாளர். ஆர். எம். ரபிக். த மு மு க. மாவட்ட பொருளாளர். அகமது கபிர். மனித நேய மக்கள் கட்சியின் . மாவட்ட துனை செயலாளாளர்.ஷாஜகான். இளைஞர் அணி செயலாளர். அப்பாஸ். கோவை தங்கப்பா. மற்றும் மாவட்ட. மாநகர. நகர. நிர்வாகிகள். உட்பட கட்சி தொண்டர்கள் 500க்கு மேற்பட்றோர்கள் கலந்துக் கொண்டனர்.
செய்தி- புகைப்படம்: கோவை தஙகப்பா






மத்திய அரசு பதவிகளில் சிறுபான்மையினருக்கு தனி இடஒதுக்கீடு வழங்க பரிந்துரைத்துள்ள மிஸ்ரா ஆணைய அறிக்கையை அமுல்படுத்த வலியுத்தி மனிதநேய மக்கள் கட்சி ஆர்ப


முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு தனி இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் கடந்த முறை பிரதமராக இருந்தபோது ஒய்வு பெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரங்காநாத் மிஸ்ரா தலைமையில் தேசிய மத மற்றும் மொழி வாரி சிறுபான்மை ஆணையத்தை அமைத்தது.


ஈராண்டுகள் தாமதத்திற்கு பிறகு மே 21,2007 அன்று நீதிபதி ரெங்கநாத் மிஸ்ரா தனது ஆய்வறிக்கையை பிரதமரிடம் சமர்பித்தார். அதில் உள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

  • மத்திய அரசு பணிகளில் 15 சதவீதம் சிறுபான்மையினருக்கு ஒதுக்கப்பட வேண்டும். அதில் 10 சதவீதம் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடாக கொடுக்கப்பட வேண்டும்.

  • சிறுபான்மையினர் அல்லாதவர் நடத்தும், அனைத்து கல்வி நிறுவனங்களிலும் 10 சதவீதம் முஸ்லிம்களும், 5 சதவீதம் இதர சிறுபான்மையினருக்கும் இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும்.

  • முஸ்லிம்கள் நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கு கூடுதல் மாணியமும், இதர வசதிகளும் செய்து கொடுக்கப்படவேண்டும்.

நீதிபதி ரெங்கநாத் மிஸ்ராவின் பரிந்துரைகளை மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போருக்கு கூட்டணி அரசு கிடப்பில் போட்டுவிட்டது. வழக்கம் போல் காங்கிரஸ் கட்சி சமூக நீதியில் இரட்டை வேடம் போடுகிறது. சிறுபான்மையினரின் வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்தவர்கள், இன்று அவர்களுக்கு சமூக நீதியை மறுக்கிறார்கள்.


ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள திமுக, திரிணமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் போன்ற கட்சிகளும் மௌனம் காக்கின்றன.

எனவே, நீதிபதி ரெங்காநாத் மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரைகளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து, அவற்றை உடனடியாக அமல்படுத்தி சமூக நீதியை பேனுமாறு மத்திய அரசை வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் தமிழ்நாடு - புதுச்சேரி மாநிலங்களில் மாவட்ட தலைநகரங்களில் கோரிக்கை ஆர்ப்பாட்டங்கள் நடத்துகிறோம்.


சென்னையில், சென்னை மொமோரியல் ஹால் அருகில் மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது அவர்களின் தலைமையில் மாலை 4.30 மணி அளவில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வடசென்னை மாவட்ட செயலாளர் முஹம்மது தமீம், தென் சென்னை மாவட்ட செயலாளர் அப்துல் சலாம் மற்றும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட பெரும் திரளானோர் கலந்துக் கொண்டனர்.