Wednesday, January 16, 2013

பாம்பன் கால்வாய் உடனடியாக தூர் வாரப்பட வேண்டும்

இராமநாதபுரம் தொகுதி எம்.எல்.ஏ. பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை
கடந்த ஞாயிறு (ஜனவரி 13) அன்று கடற்படையின் இழுவைக் கப்பல் எனது இராமநாதபுரம் தொகுதியில் உள்ள நூற்றாண்டு கண்ட பாரம்பரியமிக்க பாம்பன் ரயில் பாலத்தில் மோதி இதன் காரணமாக ரயில் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது 16 இரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன இதனால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.பாம்பன் கால்வாய் பன்னெடுங்காலமாக தூர் வாரப்படாதது தான் இந்த விபத்திற்கு காரணமாகும். இது குறித்து பின் வரும் கடிதத்தை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும் மத்திய கப்பல் போக்குவரத்து மற்றும் துறைமுக நிர்வாக அமைச்சர் மாண்புமிகு திரு. ஜி.கே. வாசன் அவர்களுக்கும் கோரிக்கை கடிதத்தை இராமநாதபுரம் தொகுதி மக்கள் சார்பாக எழுதியுள்ளேன்.
எனது இராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட பாரம்பரியமிக்க பாம்பன் ரயில் பாலத்தில் இழுவை கப்பல் ஒன்று கடந்த ஞாயிறு (ஜனவரி 13) அன்று மோதி பாலத்தைச் சேதப்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து ராமேஸ்வத்திற்கான ரயில் சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.16 இரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன பாம்பன் கால்வாய் பகுதியில் சமீப காலமாக கப்பல்கள் தரைத் தட்டுவது வாடிக்கையாகி விட்டது. இது போன்ற நிகழ்வுகள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுப்பதற்கான வழிமுறைகளை மத்திய மாநில அரசுகள் போர் கால அடிப்படையில் ஆய்வு செய்து வகுக்க வேண்டும் என்று தொகுதி மக்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறேன். பாம்பன் வடக்கு மற்றும் தெற்கு கடலில் படகுகள் மற்றும் கப்பல்கள் கடக்கும் கால்வாய் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாததால் அந்தக் கால்வாயில் மணல் அதிகளவு சேர்ந்து பாதை மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கப்பல்கள் தரைத் தட்டுவதற்கு இது முக்கிய காரணமாக உள்ளது. பாம்பன் கால்வாய் - பாம்பனுக்கு அருகில் குருசடை தீவு மற்றும் சிங்கள தீவு ஆகிய தீவுகளுக்கு இடையில் உள்ள நீர்ப்பரப்பிலிருந்து துவங்கி பாம்பன் ரயில் பாலத்தை கடந்து சுமார் முன்னூறு மீட்டர் வரை Pamban Channel எனப்படும் இந்த கால்வாயின் வழித்தடம் நீளுகின்றது. பல ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 9 மீட்டர் அளவு ஆளமாக இருந்த இந்த கால்வாய் வழித்தடம் தற்போது 2 மீட்டர் அளவிற்கு குறைந்துள்ளது. மேற்படி நீர்ப்பரப்பை சுமார் நான்கு மீட்டர் ஆழத்திற்கு தூர் வாரினால் போக்குவரத்திற்கு தேவையான பாதை சரி செய்யப்பட்டுவிடும். வாரத்திற்கு சுமார் மூன்று பெரிய கப்பல்கள் மற்றும் இழுவை கப்பல்களும் பெரிய ஆழ்கடல் மீன்பிடி படகுகளும் இந்த கால்வாயை பயன்படுத்துகின்றன. இந்த கால்வாய் மண் நிறைந்துள்ளதால் குறிப்பிட்ட நேரத்தில் கப்பல்கள் கால்வாயை கடப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. கடல் நீரேற்றம் - high tide நேரத்தில் மட்டும் கால்வாயை கடக்க துறைமுக துறை அனுமதிக்க வேண்டிய நிலையுள்ளது. மற்ற நேரத்தில் கப்பல் காத்திருக்க வேண்டியுள்ளது. இவ்வாறான சமயத்தில் கடல் காற்று திடீரென திசை மாறி வேகமும் அதிகரிக்கும் போது கடந்த காலங்களில் கப்பல்கள் தரை தட்டியுள்ளன. இது போன்ற ஒரு அசாதாராண நிலை தான் ஞாயிற்று கிழமை நள்ளிரவில் நிகழ்ந்தது. இனியும் இது போன்ற விபத்துகள் நடக்காமல் தடுக்க பாம்பன் கால்வாயை தூர்வரும் நடவடிக்கை உடனே எடுக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

எம்.எச்.ஜவாஹிருல்லா

Sunday, January 13, 2013

தமுமுக‌ சார்பில் குப்பைக‌ள் அக‌ற்ற‌ப்ப‌ட்டு அறிவிப்பு ப‌ல‌கை!


த‌முமுக‌ சார்பில் கீழ‌க்க‌ரை பொருளாள‌ர் சாதிக் வெளியிட்டுள்ள‌ செய்தி குறிப்பில் கூறியிப்ப‌தாவ‌து,

கீழக்கரை அருகில் உள்ள 500 பிளாடில் த.மு.மு.க வினர் சுத்தம் செய்து ஆங்காங்கே அறிவிப்பு பலகை வைத்துள்ளார்கள். இதை இப்பகுதி மக்கள் அனைவரும் வரவேற்றனர். மற்றும் இப்பகுதி நுலைவாயிலும் அறிவிப்பு பலகை வைத்துள்ளார்கள்.

இப்ப‌ணிகளை 500 பிளாட் த.மு.மு.க வின் கிளை க‌ழ‌த்தின‌ர் செய்துள்ளார்கள்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Saturday, January 5, 2013

500 பிளாட் ப‌குதியில் சோலார் தெரு விள‌க்குக‌ள்!ஜ‌வாஹிருல்லாஹ்.எம்.எல்.ஏ தொட‌ங்கி வைத்தார்!

 த‌மிழ‌க‌த்தில் பல்வேறு இட‌ங்க‌ளில் சூரிய‌ ச‌க்தியில் இய‌ங்கும்
 தெரு விளக்குக‌ள் அமைக்க‌ப்ப‌ட்டு வ‌ருகிற‌து இந்நிலையில் தில்லையேந்த‌ல் ப‌ஞ்சாய‌த்துக்குட்ப‌ட்ட‌ கீழ‌க்க‌ரை 500 பிளாட் ப‌குதியில் 10 சோலார் தெரு விள‌க்குக‌ளை ஜ‌வாஹிருல்லா.எம்.எல்.ஏ தொட‌ங்கி வைத்தார். தில்லையேந்த‌ல் ப‌ஞ்ச‌யாத்தின் செல்வ‌குமார்,செய்ய‌து அலி ம‌ற்றும் த‌முமுக‌,மம‌க‌ நிர்வாகிக‌ள் உட‌ன் இருந்த‌ன‌ர்.

கீழ‌க்க‌ரை‍ முனை ரோட்டில் நிழ‌ற்குடைக்கு ரூ 3லட்ச‌ம் நிதி ஒதுக்கியுள்ளேன்!ஜ‌வாஹிருல்லாஹ்.எம்.எல்.ஏ த‌க‌வ‌ல்

கீழ‌க்க‌ரை ஏர்வாடி முக்கு ரோட்டில் வாக‌ன‌ங்க‌ளுக்காக‌ காத்து நிற்கும் ம‌க்க‌ள் நிழ‌ற்குடை இல்லாத‌தால் மிகுந்த‌ சிர‌ம‌டைந்து வ‌ந்த‌ன‌ர்.நிழ‌ற்குடை அமைக்க‌ வேண்டுகோள் விடுத்து கீழ‌க்க‌ரை டைம்சிலும் செய்தி வெளியிட்டிருந்தோம் http://keelakaraitimes.blogspot.com/2011/05/blog-post_24.html த‌ற்போது அனைத்து த‌ர‌ப்பு ம‌க்க‌ளின் கோரிக்கையை ஏற்று நிழ‌ற்குடை அமைக்க‌ சட்ட‌ம‌ன்ற‌ நிதியிலிருந்து நிதி ஒதுக்கியுள்ள‌தாக‌ ஜ‌வ‌ஹிருல்லாஹ்.எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்

கீழ‌க்க‌ரை ம‌க்க‌ள் ந‌ல‌ப்ப‌ணிகள் குறித்து ஆய்வு செய்த‌ ராமநாத‌புர‌ம் ச‌ட்ட‌ம‌ன்ற‌ உறுப்பின‌ர் ஜ‌வாஹிருல்லாஹ் நிருப‌ர்க‌ளுக்கு அளித்த‌ பேட்டியில் கூறியிருப்ப‌தாவ‌து,

ராமநாத‌புர‌ம் திருப்புல்லாணி,கீழ‌க்கரை அருகே உள்ள‌ இறால் ப‌ண்னைக‌ளால் குடிநீர் ஆதார‌ங்க‌ள் பாதிப்ப‌டைகின்ற‌ன‌.மேலும் குடிநீர் பைப்க‌ள் அமைப்ப‌த‌ற்கு இடையூறாக‌ உள்ள‌து.என‌வே இப்பகுதி ம‌க்க‌ளின் ந‌ல‌னை க‌ருத்தில் கொண்டு இறால் ப‌ண்ணைக‌ளை அப்புற‌ப்ப‌டுத்தி சுற்று சூழ‌லுக்கு பாதிப்ப‌டையாத‌ வ‌கையில் வேறு இட‌த்தில் அமைத்து கொள்ள‌ வேண்டும்.

ராம‌நாத‌புர‌ம் மாவ‌ட்ட‌த்தில் ப‌ருவ‌ நிலை மாற்ற‌ம் கைகொடுக்காம‌ல் விவசாய‌ம் பாதிப்ப‌டைந்துள்ள‌தால் விவாசாயிக‌ள் பெரும‌ள‌வில் ந‌ஷ்ட‌ம‌டைந்துள்ள‌ன‌ர்.என்வே டெல்டா மாவ‌ட்ட‌ விவசாயிக‌ளுக்கு நிவார‌ண‌ம் வ‌ழ‌ங்குவது போன்று ஏக்க‌ருக்கு த‌லா ரூ 25 ஆயிர‌ம் நிவார‌ண‌ம் வ‌ழ‌ங்க‌ப்ப‌ட‌ வேண்டும்.

மேலும் கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சியின் செயல்பாடுக‌ள் பார‌ட்டும்ப‌டி இல்லை.சாலைக‌ள் த‌ர‌மில்லாம‌ல் அமைக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன‌.டெங்கு காய்ச்சல் த‌டுப்பு ந‌ட‌வ‌டிக்கைக‌ள் குறிப்பிடிதக்க‌ அள‌வில் இல்லை மீண்டும் டெங்கு த‌லை தூக்க‌ தொட‌ங்கியுள்ள‌து.

மேலும் கீழ‌க்க‌ரை தாலுகாவாக‌ அறிவிக்க‌ப்ப‌ட்டு செய‌ல்ப‌டுத்த‌ப்ப‌டாம‌ல் உள்ள‌து.த்மிழ‌க‌ அர‌சு வ‌ரும் ப‌ட்ஜெட் கூட்ட‌ தொடருக்குள் அறிவிப்பை செய‌ல்ப‌டுத்த‌ விட்டால் பொதும‌க்க‌ளை திர‌ட்டி போராட்ட‌ம் ந‌ட‌த்த‌ப்ப‌டும்.

கீழ‌க்க‌ரை ஏர்வாடி முனை ரோட்டில்  நீண்ட‌ கால‌ கோரிக்கையான‌ நிழ‌ற்குடை அமைக்க‌ என‌து ச‌ட்ட‌மன்ற‌ உறுப்பின‌ர் நிதியிலிருந்து ரூ3 ல‌ட்ச‌ம் ஒதுக்கியுள்ளேன்
இவ்வாறு அவ‌ர் கூறினார்

த‌முமுக‌ கிளை புதிய‌ அலுவ‌ல‌‌க‌த்தை ஜாஹிருல்லா எம்.எல்.ஏ திற‌ந்து வைத்தார்

கீழ‌க்க‌ரை 500 பிளாட்(தில்லையேந்த‌ல் பஞ்சாய‌த்து) ப‌குதியில் த‌முமுக‌ கிளை புதிய‌ அலுவ‌ல‌‌க‌த்தை ஜாஹிருல்லா எம்.எல்.ஏ திற‌ந்து வைத்தார்