Wednesday, June 30, 2010

மதுரையில் நடைபெற்ற பெட்ரோல், டீசல் விலைஏற்ற கண்டன ஆர்பாட்டப் புகைப்படங்கள்



கீழக்கரை அருகே முள்ளுவாடியில் ரூ. 32,000 மதிப்புள்ள 50 மூட்டை ரேஷன் அரிசி கடத்தல்


ராமநாதபுரம், ஜூன் 26: கீழக்கரை அருகே முள்ளுவாடியில் ரூ. 32,000 மதிப்புள்ள 50 மூட்டை ரேஷன் அரிசியைக் கடத்தியதாக 4 பேரை காவல் துறையினர் பிடித்து உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸôரிடம் ஒப்படைத்துள்ளனர். கீழக்கரை போலீஸôர் முள்ளுவாடி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது, அவ் வழியாக வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 50 மூட்டை ரேஷன் அரிசியைக் கடத்தியதாகத் தெரிய வந்ததைத் தொடர்ந்து, மினி லாரியின் டிரைவரான ராமநாதபுரம் வடக்குத் தெருவைச் சேர்ந்த சிவக்குமார் (32) மற்றும் லாரியில் இருந்த கூலித் தொழிலாளர்களான மணிவண்ணன், மாரிமுத்து, முனியசாமி ஆகிய 4 பேரையும் விசாரித்து, அவர்களை விருதுநகர் உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸôரிடம் ஒப்படைத்துள்ளனர். இதுதொடர்பாக வருவாய்த் துறையினரும் கீழக்கரையில் எந்த ரேஷன் கடையிலிருந்து அரிசி கடத்தப்பட்டது என விசாரித்து வருகின்றனர்.

dinamani news

Tuesday, June 29, 2010

தமிழக அரசின் 2010-2011 ஆண்டிற்கான கல்வி உதவி தொகை


தமிழக
அரசின் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தபட்டோருக்கான 2010-2011 ஆண்டிற்கான கல்வி உதவி தொகையை அறிவித்து உள்ளது .
இந்த கல்வி தொகை 3 நிலைகளாக உள்ள மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது


1 - 10 வகுப்பு வரை
தகுதிகள் :
*
கடைசியாக எழுதிய இறுதி தேர்வில் குறைந்தது 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்
*
குடும்ப ஆண்டு வருமானம் 1 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்
*
வேறு எந்த அரசு உதவியும் பெற்றிருக்க கூடாது
*
ஒரு குடும்பத்தில் 2 பேருக்கு மேல் விண்ணப்பிக்க கூடாது

பயன்கள் :
*
கல்வி கட்டணம் அதிக பட்சமாக வருடத்திற்கு 3500 ரூபாய்
*
சேர்கை கட்டணம் அதிகபட்சமாக 500 ரூபாய்
*
விடுதி மற்றும் ஊக்க தொகைகள் உண்டு
*
கிராமத்திலிருந்து நகரத்திற்கு படிக்க வரும் முஸ்லிம் மாணவிகளுக்கு தங்கும் விடுதி மற்றும் உணவு இலவசம்
*
ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொகை 11.62 கோடி

சமர்பிக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் :
*
சாதி சான்றிதல் நகல் (xerox)
*
பிற்படுத்தப்பட்டோர் என்பதற்கான சான்று (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் )
*
வருமான சான்றிதல் (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் )
சமர்பிக்கப்பட வேண்டிய கடைசி நாள்:
புதிதாக விண்ணப்பிபவர்களுக்கு ஆகஸ்ட் 10
புதுப்பிக்கும் மாணவர்களுக்கு ஜூலை 26

கூடுதல் தகவல்கள் :
* புதிதாக இந்த உதவியை விண்ணப்பிப்பவர்கள் இணைக்கப்பட்டுள்ள (prematric_fresh_ appl) மற்றும் (prematric_claim) ஆகிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்யவும்
*
ஏற்கனவே இந்த உதவியை பெற்றுகொண்டிருப்பவர்கள் புதிதாக விண்ணப்பிக்க தேவையில்லை , இணைக்கப்பட்டுள்ள புதுப்பித்தல் விண்ணப்பத்தை (Renewal form) (prematric_renewal_ appl) மற்றும் (prematric_claim) ஆகிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உங்கள் சலுகையை புதுப்பித்து கொள்ளலாம்
*
பூர்த்தி செய்யப்பட வினப்பதை உங்கள் கல்வி நிலையங்கள் குறிப்பிட்ட நாட்களுக்குள் சமர்பிக்கவும் , தாமதமாக சமர்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்
11, 12 , ITI, டிப்ளமோ , ஆசிரியர் பயிற்சி , பட்ட படிப்பு , பட்ட மேற்படிப்பு , ஆராய்ச்சி படிப்பு (Ph.D)

தகுதிகள் :
*
கடைசியாக எழுதிய இறுதி தேர்வில் குறைந்தது 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்
*
குடும்ப ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்
*
வேறு எந்த அரசு உதவியும் பெற்றிருக்க கூடாது

பயன்கள் :
*
கல்வி கட்டணம் அதிக பட்சமாக வருடத்திற்கு 3000 முதல் 7000 வரை
* 30%
கல்வி உதவி பெண்களுக்கு வழங்கப்படும்
* விடுதி மற்றும் ஊக்க தொகைகள் உண்டு
* கிராமத்திலிருந்து நகரத்திற்கு படிக்க வரும் முஸ்லிம் மாணவிகளுக்கு தங்கும் விடுதி மற்றும் உணவு இலவசம்
*
ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொகை 11.60 கோடி

சமர்பிக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் :
*
சாதி சான்றிதல்
* பிற்படுத்தப்பட்டோர் என்பதற்கான சான்று (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் )
*
வருமான சான்றிதல் (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் )
* உங்கள் மதிப்பெண் சான்றிதல் (Marksheet) நகல்களை (Xerox) இணைத்து அனுப்புவது சிறந்தது

சமர்பிக்கப்பட வேண்டிய கடைசி நாள்:
புதிதாக விண்ணப்பிபவர்களுக்கு ஆகஸ்ட் 10
புதுப்பிக்கும் மாணவர்களுக்கு ஜூலை 26

கூடுதல் தகவல்கள் :
* புதிதாக இந்த உதவியை விண்ணப்பிப்பவர்கள் இணைக்கப்பட்டுள்ள (prematric_fresh_ appl) மற்றும் (prematric_claim) ஆகிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்யவும்
*
ஏற்கனவே இந்த உதவியை பெற்றுகொண்டிருப்பவர்கள் புதிதாக விண்ணப்பிக்க தேவையில்லை , புதுப்பித்தல் விண்ணப்பம் (Renewal form) (prematric_renewal_ appl) மற்றும் (prematric_claim) ஆகிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உங்கள் சலுகையை புதுப்பித்து கொள்ளலாம்
* பூர்த்தி செய்யப்பட வினப்பதை உங்கள் கல்வி நிலையங்கள் குறிப்பிட்ட நாட்களுக்குள் சமர்பிக்கவும் , தாமதமாக சமர்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்
தொழிற்படிப்புகள் ( Engineering )


தகுதிகள் :
*
கடைசியாக எழுதிய இறுதி தேர்வில் குறைந்தது 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்
* குடும்ப ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்
* வேறு எந்த அரசு உதவியும் பெற்றிருக்க கூடாது

பயன்கள் :
* கல்வி கட்டணம் அதிக பட்சமாக வருடத்திற்கு 20000 ரூபாய் அல்லது முழு கட்டணம் (இரண்டில் குறைந்தது )
* IIT (
சென்னை ), NIT(திருச்சி ) , Indian Institute of Tech and Design managment (காஞ்சிபுரம் ), national Institute of fashion Technology ஆகிய கல்வி கூடங்களில் பயிலும் மாணவர்களுக்கு முழு கல்வி உதவி வழங்கப்படும்
* 30% கல்வி உதவி பெண்களுக்கு வழங்கப்படும்
* விடுதி மற்றும் ஊக்க தொகைகள் வருடத்திற்கு 10000 வரை
* கிராமத்திலிருந்து நகரத்திற்கு படிக்க வரும் முஸ்லிம் மாணவிகளுக்கு தங்கும் விடுதி மற்றும் உணவு இலவசம்
* ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொகை 8 கோடி

சமர்பிக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் :
*
சாதி சான்றிதல்
* பிற்படுத்தப்பட்டோர் என்பதற்கான சான்று (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் )
*
வருமான சான்றிதல் (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் )
* உங்கள் மதிப்பெண் சான்றிதல் (Marksheet) நகல்களை (Xerox) இணைத்து அனுப்புவது சிறந்தது

சமர்பிக்கப்பட வேண்டிய கடைசி நாள்:
புதிதாக விண்ணப்பிபவர்களுக்கு ஆகஸ்ட் 10
புதுப்பிக்கும் மாணவர்களுக்கு ஜூலை 26

கூடுதல் தகவல்கள் :
* புதிதாக இந்த உதவியை விண்ணப்பிப்பவர்கள் இணைக்கப்பட்டுள்ள (MCM_Appln_form) விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும்
*
ஏற்கனவே இந்த உதவியை பெற்றுகொண்டிருப்பவர்கள் புதிதாக விண்ணப்பிக்க தேவையில்லை , புதுப்பித்தல் விண்ணப்பத்தை (mcm_renewal_ claim) பூர்த்தி செய்து உங்கள் சலுகையை புதுப்பித்து கொள்ளலாம்
*
பூர்த்தி செய்யப்பட விண்ணப்பத்தை உங்கள் கல்வி நிலையங்கள் குறிப்பிட்ட நாட்களுக்குள் சமர்பிக்கவும் , தாமதமாக சமர்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்

மேலும் விவரங்களுக்கு இந்த இணையதளத்தை பார்க்கவும் : http://www.tn. gov.in/bcmbcmw/ welfschemes_ minorities. htm

Monday, June 28, 2010

ராசல் கைமா : மு.மு.க நிர்வாகிகள் அலோசனைக் கூட்டம்



கடந்த 25/06/2010- வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு ராசல்கைமா - அல் நக்கீல் ஹாஜா அவர்களின் இருப்பிடத்தில் ராசல் கைமா மண்டல முஸ்லிம் முன்னெற்றக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது, அக்கூட்டத்திற்கு ராசல் கைமா கிளை பொருளாளர் கடியச்சேரி ஹாஜா அவர்கள் தலைமை தாங்கினார்அதனைத்தொடர்ந்து சார்ஜாவிலிருந்து வருகை தந்த மு.மு.க அமீரக து.தலைவர் சகோ. ஹுஸைன் பாஷா அவர்கள் சிறப்புரை வழங்கினார்கள் பின்னர் தீர்மானங்கள் இயற்றப் பட்டது

  • வருகின்ற ஜூலை மாதம் 16 ஆம் தேதி வெள்ளிக்கிழமை ராசல் கைமா மண்டல புதிய நிர்வாகிகள் தேர்வு மற்றும் பொதுக்கூட்டம் நடத்த ஏற்படுகள் செய்யவும்
  • அமீரகத்தில் நமது சகோதர்களிடத்தில் பெருகிவரும் தற்கொலைகள் குறித்தும் நடக்கவிருக்கும் கூட்டத்தில் சிறப்பு "கவுன்சிலிக்" மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும்
  • ரமலானில் தாயகத்திலிருந்து வருகை தரும் தாயிக்களைக் கொண்டு சிறப்பான முறையில் பயான் நிகழ்ச்சிகள் ஏற்பாடுசெய்யவும்
  • கேம்ப்'கள் தோறும் சென்று சந்திப்பு நடத்துவது என்றும்
  • நமது பத்திரிக்கையான "மக்கள் உரிமை" க்கு புதிய சந்தாக்களை உருவாக்குவது
  • புதிய மர்கஸ் மற்றும் நூலகம் அமைக்கவும் தீர்மானங்கள் இயற்றப் பட்டது
பின்னர் தூஆ ஓதி கூட்டம் இனிதே நிறைவுற்றது, இக்கூட்டத்திற்கு மதுரை.பரக்கத் அவர்களும் அபு ஆதில் அவர்களும் சிறப்பான ஏற்பாடு செய்து இருந்தனர்.

350 ஆண்டுகள் பழமையான பள்ளிவாசல் வேலூர் மாவட்ட தமுமுக மீட்பு




வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் 350 ஆண்டுகள் பழமை வாய்ந்த பள்ளிவாசலை தமுமுகவால் இன்று (27-06-2010) மீட்கப்பட்டது (அல்ஹம்துலில்லாஹ்)


பள்ளிவாசலை மீட்கப்படுவதற்கு முன்னர் இவ்விடத்தில் சமூக விரோதிகளின் புகழிடமாக இருந்துள்ளது. தற்போது 5 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்தப் பள்ளியை சுத்தம் செய்யும் பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட தமுமுக தொண்டர்கள் ஈடுபட்டுள்ளனர். மீட்கப்பட்ட இந்தப் பழமையானப் பள்ளிவாசலில் (27-06-2010)இன்று மாலை அஸர் தொழுகை (இன்ஸா அல்லாஹ்) நடத்தப்பட உள்ளது.


மேலும் செய்திகள் இன்ஷா அல்லாஹ்...

Friday, June 25, 2010

சிறைவாசிகள் விடுதலையில் கோமாளி சு.சாமியின் முட்டுக்கட்டை

செம்மொழி மாநாடு: ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்கக்கூடாது-சு.சாமி

சென்னை: உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுவிக்கக்கூடாது என்று உயர் நீதிமன்றத்தில் ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி மனு தாக்கல் செய்துள்ளார்.

அவரது மனுவில், உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு 500 ஆயுள் தண்டனை கைதிகளை தண்டனை காலத்துக்கு முன்பாகவே விடுதலை செய்ய தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.

ஏற்கனவே அண்ணா பிறந்த நாள் நூற்றாண்டை முன்னிட்டு 1,405 ஆயுள் தண்டனை கைதிகளை தண்டனை காலத்துக்கு முன்னதாகவே சிறையில் இருந்து விடுதலை செய்ததை எதிர்த்து நான் தொடர்ந்த வழக்கில் முடிவு ஏற்படாத நிலையில், மீண்டும் அதே போன்ற ஒரு திட்டத்தை அரசு நடைமுறைப்படுத்தினால், அது நீதிமன்ற அவமதிப்பு செயலாக அமையும்.

எனவே, தமிழ்ச் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு 500 ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கு அதிகாரிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

நன்றி தட்ஸ்தமிழ்.காம்

Thursday, June 24, 2010

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் முதல் முஸ்லீம் வீரர் சேர்ப்பு

சிட்னி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் உஸ்மான் காஜா என்பவர் இடம் பெற்றுள்ளார். இதன் மூலம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் இடம் பெற்ற முதல் முஸ்லீம் என்ற பெருமையை இவர் பெறுகிறார்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான 14 பேர் கொண்ட அணியை ஆஸ்திரேலியா வெளியிட்டுள்ளது. இதில்தான் உஸ்மான் இடம் பிடித்துள்ளார்.

முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான அணி இது. இதில் இடம் பெற்றுள்ள உஸ்மானுக்கு 23 வயதாகிறது. இடது கை பேட்ஸ்மேன் ஆவார்.

காயமடைந்துள்ள பிலிப் ஹ்யூக்ஸுக்குப் பதிலாக உஸ்மானுக்கு இடம் கிடைத்துள்ளது. உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடியதற்காக உஸ்மானுக்கு இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இதுகுறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத் தலைவர் ஆண்ட்ரூ ஹிட்லிட்ச் கூறுகையில், சிறப்பாக விளையாடியதற்காக உஸ்மானைத் தேர்வு செய்துள்ளோம். எந்த வரிசையில் இறக்கினாலும் சிறப்பாக விளையாடக் கூடியவராக இருக்கிறார் உஸ்மான். எனவே அவருக்கு இடம் கிடைத்துள்ளது என்றார்.

ஆஸ்திலேயி அணி - ரிக்கி பான்டிங், மைக்கேல் கிளார்க், டோக் போலிங்கர், பிராட் ஹாடின், ரியான் ஹாரிஸ், நாதன் ஹாரிட்ஸ், பென் ஹில்பென்ஹாஸ், மைக் ஹூசே, மிட்சல் ஜான்சன், சிமோன் காடிச், உஸ்மான் காஜா, மார்கஸ் நார்த், ஸ்டீவன் ஸ்மித், ஷான் வாட்சன்.

உஸ்மான் காஜா, 1986ம் ஆண்டு பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tuesday, June 22, 2010

ஊடகங்களின் பார்வையில் ராமநாதபுரம் மாவட்ட, இலவச பாட நோட்டுகள் வழங்கல்

ராமநாதபுரம், ஜூன் 21: தமுமுக சார்பில் ராமநாதபுரம், கீழக்கரை ஆகிய ஊர்களில்ஏழை மாணவ,மாணவியருக்கு இலவச பாட நோட்டுக்கள் வழங்கும் விழா நடைபெற்றது. ராமநாதபுரம் சின்னக்கடை தெருவில் நடந்த விழாவுக்கு மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலர் சலிமுல்லாகான், தமுமுக மாவட்டத் தலைவர் சாதிக்பாட்சா ஆகியோர் தலைமை வகித்தனர். நகர் தலைவர் பரக்கத்துல்லா, செயலர் அப்துல்ரகுமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பொருளாளர் அப்துல்கனி வரவேற்றார். தமுமுக மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் குணங்குடி ஹனீபா கலந்து கொண்டு அரசுப்பள்ளியில் பயிலும் 300 ஏழை மாணவ, மாணவியருக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான கல்வி உதவிகளை வழங்கிப் பேசினார். மாவட்டத் துணைச் செயலர் அன்வர் அலி, ம.ம.க. பொருளாளர் சாகுல்ஹமீது,மருத்துவ அணி செயலர் ரியாஸ்கான், மாணவரனி செயலர் புரூக்கான் ஆகியோர் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.


கீழக்கரையில் இலவச பாட நோட்டுகள் வழங்கும் விழாவிற்கு தமுமுக வின் மாவட்டச் செயலர் தஸ்பீக் தலைமை வகித்தார். நகர் கழக நிர்வாகிகள் உஸ்மான் சேட்,முஸ்தகீன், பாக்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நகர் தலைவர் முஜ்புர் ரகுமான் சுமார் 500 ஏழை மாணவ, மாணவியருக்கு இலவச சீருடை, நோட்டு புத்தகங்கள் மற்றும் பென்சில், பேனாக்கள் வழங்கினார். பின்னர் கீழக்கரையில் 45 ஆண்டுகளாக கூர்காவாக பணியாற்றும் நேபாளத்தைச் சேர்ந்த பகதூருக்கு இரு கைவிளக்குகளையும் வழங்கி பேசினார். கீழக்கரை கல்வி தர்ம அறக்கட்டளையின் இணைச் செயலர் ஜமீல் முகம்மது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Monday, June 21, 2010

கோட்டை மேடு பகுதிகள் மாநாடு போல் பொதுகூட்டம் நடந்தது



மாலை 7 மணியளவில் கோவை கோட்டை மேடு இக்பால் திடலில் மாபெரும் ஒற்றை கோரிக்கை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமுமுக மாவட்ட தலைவர் அப்துல் பஷிர் தலைமையில் நடைபெற்றது. சிறப்புரையாக, தமுமுக மாநில தலைவர் போராசிரியர் எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ்அவர்கள், விடுதலை கோரிக்கை என்ற தலைப்பிலும், தமுமுக மாநில பொது செயலாளர் எஸ். ஹைதர் அலி அவர்கள், கோவை முஸ்லிம்கள் நேற்றும் இன்றும் என்ற தலைப்பிலும், தமுமுக மோன்மை குழு உறுப்பினர் குனங்குடி அனிபா அவர்கள், விடுதலை சிந்தனைகள் என்ற தலைப்பிலும், மற்றும் தமுமுக மாநில செயலாளர் இ. உம்மர் அவர்கள், தமுமுக மாநில துனைச் செயலாளர்கள், கோவை சாதிக், கோவை சைய்யது, கோவை ஜாகீர், மமக மாவட்ட செயலாளர் சுல்தான் அமீர், மமக மாவட்ட பொருளாளர், டி.எம. எஸ். அப்பாஸ், மற்றும் மமக மாவட்ட நிர்வாகிகள், அப்பாஸ், ஷாஜகான், அதுபோல் தமுமுக மாவட்ட நிர்வாகிகள், அகமது கபீர், பர்கத்துல்லாஹ், மமக நகர தலைவர் ரபிக், மற்றும் ஜபார், கவிஞர் ஹக், அக்பர் அலி, திருப்பூர் மாவட்ட தமுமுக தலைவர் யுசுப், ஊட்டி மாவட்ட தமுமுக தலைவர் சமது, ஈரோடு மாவட்ட தமுமுக தலைவர் பாருக், திருப்பூா மாவட்ட மமக தலைவர் ஹாலித்தீன், மற்றும் கோவை மாவட்டம், திருப்பூர் மாவட்டம், ஈரோடு மாவட்டம், ஊட்டி,உடுமலை, பொள்ளாச்சி, மேட்டுபாளையம்,ஆகிய இடங்களில் இருந்து தமுமுக, மமக, நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், கலந்து கொண்டார்கள், இதில் 700க்கும் மேற்பட்ட பெண் உட்பட . 3500 பேர்கள் கலந்து கொண்டார்கள்.
கோட்டை மேடு பகுதிகள் மாநாடு போல்

காட்சி அளிதத்து. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த பொதுகூட்டம் நடந்த இடம் இக்பால் திடல் 13 ஆண்டு காலம் எந்த ஒரு அரசியல் கட்சிக்கோ, சமுதாய அமைப்புகளுக்கோ, பொது கூட்டம் பேச அனுமதி மறுக்கப்பட்டது. 1998 ஆம் ஆண்டு கோவை குண்டு வெடிப்பு பிறகு இதில் கடைசி பொதுகூட்டம் 1997 ஆம் ஆண்டு கோவையில் 19 முஸலிம் இளைஞர்கள்
கொல்லப்பட்ட போது முஸ்லிம் வணிகம் செய்யும் கடைகள். ஷோபா துணிகடை
உட்பட பல முன்னணி நிர்வனங்களை தீ யிட்டு கொழுத்தப்பட்டது. இதில் பல
கோடி ருபாய் நஷ்டம் ஏற்பட்டது. இதற்காக தமுமுக பல இடங்களில் வசூல் செய்து.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கியது. அப்போது இந்த இக்பால் திடலில் வைத்துதான்
நல உதவிகள் வழங்கிய போதுதான் அன்று கோவையில் குண்டு வெடித்தது. அன்று
முதல் யார்க்கும் பொதுகூட்டம் அனுமதி இல்லை. அதோ தமுமுக 13 ஆண்டு பிறகு
பொதுகூட்டத்திற்க;்கு அனுமதி அளிக்கப்பட்டது. இழந்த உரிமையை மிண்டும்
மீட்போம் என்ற உரையுடன் பொதுகூட்டம் நடந்தது. என்று குறிப்பீடபட்டது.

செய்தி: புகைப்படம், கோவை தங்கப்பா

Tuesday, June 15, 2010

துபாயில் தலைமறைவான கீழக்கரை வாலிபர்


துபாய்: துபாயில் வேலை பார்க்க வந்த சில மாதத்திலேயே வேலை பிடிக்கவில்லை என்று கூறி விட்டு தலைமறைவான நபர், துபாயிலேயே தலைமறைவாக சுற்றிக் கொண்டிருக்கிறார். அவரை நம்பி கீழக்கரையில் வசித்து வரும் அவரது அப்பாவித் தந்தையும், தங்கையும், அந்த நபர் திரும்பி வர மாட்டாரா என்ற பெரும் கவலையில் மூழ்கியுள்ளனர்.அவரது பெயர் எச். சுல்தான் அஹமது காசிம். 29 வயதாகிறது. துபாயில் உள்ள ஈடிஏ நிறுவனத்தில் ஒர்க்கர் பணியில் 3 வருடத்திற்கு முன்பு சேர்ந்தார். ஆனால் சில மாதங்களிலேயே அங்கிருந்து தலைமறைவாகி விட்டார்.தனக்கு வேலை பிடிக்கவில்லை என்றும், ஊருக்குப் போகப் போவதாகவும் சக ஊழியர்களிடம் கூறியிருந்தாராம். இதை தனது தந்தைக்கும் கூறியுள்ளார். ஆனால், பெருமளவில் பணத்தை செலவு செய்து அனுப்பியுள்ளோம், அது திரும்பக் கிடைக்கும் வரையாவது வேலை பார் என்று அவரது பெற்றோர் கேட்டுக் கொண்டு துபாயிலேயே இருக்குமாறு கூறியுள்ளனர். ஆனால் அதன் பின்னர் சுல்தான் அஹமது பெற்றோரைத் தொடர்பு கொள்ளவில்லை.மாறாக தற்போது சோனப்பூர், அல்கூஸ், ஜபேல் அலி போன்ற கேம்புகளில் உலாவி வருவதாகவும், அஜ்மானில் உள்ள சில குதிரைக்கு புல் போடும் இடத்திலும் சுற்றி வருவதாக தகவல்கள் வருகின்றன.இவர் வீட்டிற்கு தொடர்பு கொள்வதோ, பணம் அனுப்புவதோ கிடையாது, இவரை எப்படியாவது தங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும்படி துபாயில் வசிக்கும் பல பேர்களை அணுகியும் யாரும் உதவி செய்யவில்லை என்று வருத்ததுடன் இவரது தாய் தந்தையர் தெரிவிக்கிறார்கள்.நிறுவனத்தை அணுகி விசாரித்ததில் இவரை கொண்டு வந்தால் போதும் பயணச் சீட்டு எடுத்து ஊருக்கு அனுப்பிவிடலாம் என்று தெரிவிக்கிறார்கள்.எனவே சுல்தான் அஹமதை யாரேனும் எங்காவது பார்த்தால், கீழ்க்கண்ட எண்களில் தொடர்புகொள்ளலாம்.துபாய்- முஜிப் : 050 -8660154பாலா- 050 -2120277சுல்தானின் பெற்றோரைத் தொடர்பு கொள்ள:S.ஹமீது இப்ராஹீம் நூர்ஜஹான் எலெக்ட்ரிகல்ஸ்கீழக்கரைபோன்: 00914567 - 244640செல்போன்: 0091 -9382293637

ராமநாதபுரம்: த.மு.மு.க., கல்வி உதவி



ராமநாதபுரம்: த.மு.மு.க., கல்வி உதவி
ராமநாதபுரம்: ராமநாதபுரம் த.மு.மு.க., சார்பில் அரசு பள்ளிகளில் ஆறு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் 300 மாணவ மாணவியர்களுக்கு ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான கல்வி உதவி தொகை வழங்கும் விழா நடந்தது. மாநில நிர்வாக குழு உறுப்பினர் குணங் குடி ஹனிபா கல்வி உதவிகளை வழங்கினார். ம.ம.க.,ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் சலிமுல்லாகான், த.மு.மு.க., மாவட்ட தலைவர் சாதிக் பாட்சா ஆகியோர் தலைமை வகித்தனர். நகர் செயலாளர் பரக்கத் துல்லா, செயலாளர் அப்துல் ரஹ்மான், உட் பட பலர் பங்கேற்றனர்.

Jasmine is state first in SSLC Class X exam

Monday, June 14, 2010

கோவையில் கொட்டும் மழையில்மனித நேய மக்கள் கட்சி சார்பில்தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்த கோரிஇரு சக்கர வாகன பிரச்சாரப் பேரணி...

கோவை 13
உலகத்திற்கு கலாச்சாரம் கற்று கொடுத்த நமது நாடு இன்று போதை எனும் அரக்கன் கையில் சிக்கி சீரழிந்து வருகிறது. காந்தி பிறந்த நாட்டியில் போதையில் வரும் வருமானத்தில் அரசு நடக்கிறது என்று கூறும் கேவல் நலை தமிழகத்திற்கு வந்துள்ளது. தமிழ்நாட்டில் 46 சதவிதம் மக்கள் போதை நோயாளியாகி உள்ளார்கள். இன்று ஆரம்ப கல்வி மாணவர்கள் மது குடிக்கும் ஆபத்து வந்துள்ளது. பெண்களையும் மது குடிக்க தூண்டும் விளம்பரங்களை அரசே வெளியிடுகிறது. மது நாட்டிற்கு வீட்டிற்கும் கேடு என்று அச்சடித்து விட்டு அரசே வெளியிடுகிறது. மது நாட்டிற்கு வீ்'டிற்கும் கேடு என்று அச்சடித்து விட்டு அரசே சாராய டாஸ்மாக் கடைகளை நடத்துகிறது. நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என்று தெரிந்தும் அந்த வருமானத்தில் அரசு நடத்தலாமா? அதற்கு நாம் அனுமதிக்கலாமா? சாலை விபத்துகள் அதிகம் நடப்பது போதையால் தான். மதுவை கொடுத்து விட்டு வாசலில் நின்று அபராதம் விதிக்கும் அவலம் நடக்கிறது. இந்திய சுந்திரா போராட்ட காலத்தில் பூரண மதுவிலக்கு கோரி கள், சீமை சாராயத்திற்கு எதிராக முன் நின்று போராடிய காங்கிரஸ் அரசு , மத்தியலும், மது விலக்கை உயிராய் மதித்த பெரியார்,அண்ணா வழி நடத்துவோம் என்ற கலைஞர் ஆட்சி மாநிலத்திலும் தமிழக தெருக்களில் டாஸ்மாக்காய் ஓடுகிறது. கோட்டால் வருமானம் இல்லாமல் அரசு நடத்த முடியுமா என்கிறார் கலைஞர். குஜராத்தில் இன்றும் மது விலக்கு அமுலில் உள்ளது. இன்று குஜராத் வளர்ச்சிப் பாதையில் முன்னியில் உள்ள போது ஏன் நம்மால் முடியாது. மேலும் அரசுக்குடாஸ்மாக் மூலம் வரும் வருவாயைக் காட்டிலும் அரசு மருத்துமனைகளில்சாலை விபத்துக்களால் மருத்துவமனைகள் நிரம்பி வழிவதும், கள், மது வகைகளில் குடல் நோய், வாய்ப்புண், கேன்சர், மனநோய் என சிகிச்சை செலவினங்களே அதிகமாகும். போதை தடுப்பு மையங்களும் மக்களின் பணம் விரயம் செய்யப்படுகிறது. மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்று முழக்கமிடும் கலைஞர் அசாமில் தேயஜலைக்கு மதிதிய அரசாங்கம் ராயல்டி கொடுக்கிறது, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்படும பொழுது ராயல்டி கொடுக்கப்படுகிறது. ஆனால் தமிழக நெய்வேலி நிலக்கரிக்கு,மின்சாரத்திற்கு, கனிம வளங்களுக்கு ராயல்டி கொடுப்பதில்லை, ரயல்டி பெற்றாலே பல ஆயிரம் கோடி ரூபாய் தமிழகத்திற்கு கிடைக்கும். மக்களின் நலனை பாதுகாக்கவே அரசு க்கும் வருமானம் தேவை. மக்களுக்கு குடிக்க கொடுத்து குடியை கெடுத்து வரும் வருமானம் தேவை தானா? அதில் வரும் இலவசங்கள் இருந்தும் என்ன பயன். பெண்களுக்கு கலர் டி.வி. கொடுத்து மானாட மயிலாடா ஆட்டம் கண்டு சிந்திக்க விடாமலும், ஆண்களுக்கு மதுவை கொடுத்து சிந்திக்க விடாமலும் செய்து, இந்திய நாட்டின் சிறப்பு அம்சமான ஜனநாயகத்தை பண நாயகமாக்கும் முயற்சியை முறியடிக்க வல்லரசு கனவு இளைஞர்களே அரசியலக்கு அப்பாற்பட்டு அணிதிரள்வீர். இந்த நாட்டை அடிமைபடுத்தியவனிடமே போராடி மதுவிலக்கை கொண்டு வர செய்யும் போது, சுந்ததிர இந்தியாவில் மக்கள் நல அரசு என்று கூறிக் கொள்ளும் அரசுகளிடம் நம் போராட்டம் உறுதியானால் ஏன் கொண்டு வர முடியாது. மது விலக்கு 34 ஆண்டுகள் தமிழகத்தில் பூரண மது விலக்கு அமுலில் இருந்தது. காந்தியும் காந்தியவாதிகளும் போதைக்கு எதிராய் போராடிய மாபெரும் மரபு நமக்கு உண்டு 1987-ல் மக்கள் குறிப்பாக பெண்களின் கடுமையான கள், சாராயம் எதிர்ப்பு போராட்டங்களாலே கள், சாராய கடை இழுத்து மூடப்பட்டன. அநீதிக்கொதிராய் மதுரையை எரித்த கண்ணகியின் வாரிசுகளே உங்களின் மணாலன்களை மனநோளியாக்கும் மதுவிற்கு எதிராய் திரும்பட்டும் உங்கள் கோப பார்வை எரியட்டும் தமிழக கள் மற்றும் டாஸ்மாக் கடைகள். போதையில் தள்ளாடும் தமிழகத்தை தலை நிமிர்ந்து நிற்க வைக்க இனியொரு விதி செய்வோம் என்ற கண்டன உரையுடன் இரு சக்கர வாகன பிரச்சாரப் பேரணியை த.மு.மு.க. மாநில செயலாளர், இ. உம்மர் அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தார். போதைக்கு எதிரான கோஷா முழக்கத்தயை த.மு.மு.க. மாநில துனைச்செயலாளர் கோவை செய்யது அவர்கள் வாகனத்தில் தொடர்ந்து முழுக்கமிட்டு வந்தார். இந்த நிகழ்ச்சிக்கு மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சுல்தான் அமீர் தலைமை தாங்கினர், இதில் 200க்கு மேற்பட்ட இரு சக்கர வாகனத்தில் 350க்கு மேற்பட்றோர்கள் கலந்து கொண்டார்கள். இந்த வாகன பிரச்சாரப் பேரணி கோவை ஆத்துபாலம்,குறிச்சி பிரிவு, போத்தூனுர், அறிவொளி நகர் , கோவைப்புதூர், இடையர்பாளையம், முடிவில் குனியமுத்தூர்யுள்ள த.மு.மு,க , மமக , கிளை அலுவலத்தில் முடிவுஅடைந்தது. இதற்கான ஏற்பாடுகளை, மனித நேய மக்கள் கட்சி மாவட்ட பொருளாளர் அப்பாஸ், தமுமுக மாவட்ட நிர்வாகிகள் ரபிக், நுர்த்தீன், மமக மாவட்ட நிர்வாகிகள், எம்.எச். அப்பாஸ், காஜா, நுர்முகம்மது, ஜபார், ஷாஜகான், பாவா நிசார், குட்டி, அப்பாஸ்,மமக நகர செயலளாளர் ரபிக், மமக இளைஞர் மாவட்ட நிர்வாகிகள் கவிஞர் ஹக், முத்துகாலனி காதர் அபுதாஹிர், ஜெமிஸா, ஆகியோர் ஏற்பாடுகளை செய்தார்கள். முடிவில் மமக மாவட்ட பொருளாளர் அப்பாஸ் நன்றி கூறினார்.செய்தி, புகைப்படம் : கோவை தங்கப்பா