Friday, March 30, 2012

திருப்புல்லாணி ஒன்றியம் கிராமங்களுக்கு குடிநீர் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டப்பேரவையில் இராமநாதபுரம் MLA ஜவாஹிருல்லாஹ் கோரிக்கை

இராமநாதபுரம் தொகுதி MLA, ஜவாஹிருல்லாஹ்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே இராமநாதபுரம் தொகுதியில் திருப்புல்லாணி ஒன்றியம் சேதுகரை ஊராட்சிக்குப்பட்ட மேல புதுக்குடி கீழ புதுக்குடி கிராமங்களுக்கு 10 நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் வரக்கூடிய சூழல் இருக்கின்றது. அதன் காரணமாக அந்தக் குடிநீரை சேமித்து வைக்கக்கூடிய ஒரு நிலையும் இதன் விளைவாக சில மாதங்களுக்கு முன் அங்கு டெங்கு காய்ச்சல் போன்ற காய்ச்சல்கள் பரவக்கூடிய ஒரு நிலையும் ஏற்பட்டது. இதையெல்லாம் தவிர்ப்பதற்காக தினசரி மேல புதுக்குடி கீழ புதுக்குடி உள்ளிட்ட இந்தக் கிராமங்களுக்கு குடிநீர் வழங்க அரசு ஆவன செய்யுமா என்பதை தங்கள் வாயிலாக அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு நகராட்சி நிருவாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே உறுப்பினர் அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க இராமநாதபுரம் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் வாயிலாக அந்தப் பகுதிகளுக்கு தண்ணீர் கிடைக்கின்ற பட்சத்தில் நிச்சயமாக விரைவாக உறுப்பினர் அவர்களின் வேண்டுதலை ஏற்று தண்ணீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைக் தெரிவித்துக் கொள்வதோடு அந்தக் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் வாயிலாக கிடைக்கவில்லை என்றால் எந்தெந்தப் பகுதிகளில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்கும் என்பதை ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் வாயிலாக தெரிவித்துக்கொள்கிறேன்.

Tuesday, March 27, 2012

இந்த வாரம் 29-03-2012 வியாழக்கிழமை அன்று ஷார்ஜா த.மு.மு.க மர்கஸில் இஸ்லாமிய நிகழ்ச்சி


இந்த வாரம் 29-03-2012 வியாழக்கிழமை அன்று ஷார்ஜா த.மு.மு.க மர்கஸில்
இஸ்லாமிய நிகழ்ச்சி

Friday, March 9, 2012

தமுமுக தலைவர் ரிபாய் அவர்களுக்கு இன்று சென்னை உயர்நீதி மன்றம் பிணை அளித்துள்ளது

தமுமுக தலைவர் ரிபாய் அவர்களுக்கு இன்று சென்னை உயர்நீதி மன்றம் பிணை அளித்துள்ளது.அல ்ஹம்துலில்லாஹ். சனி நாயிறு விடுமுறை என்பதால் திங்கள் கிழமை அன்று சிறையில் இருந்து வெளியில் வருவார் இன்ஷாஅல்லாஹ்.

உ.பி.,யில் 63 முஸ்லிம் எம்.எல்.ஏ.,க்கள்!

உ.பி.,யில் 63 முஸ்லிம் எம்.எல்.ஏ.,க்கள்!

08.03.2012

லக்னோ : உத்திர பிரதேச மாநிலத்தில் சமீபத்திய தேர்தலில் 63 முஸ்லிம் எம்.எல்.ஏ.,க்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அதிக பட்சமாக முலாயம்சிங் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி சார்பில் 40 பேரும், பகுஜன் சமாஜ் வாடி ( மாயாவதி) கட்சி சார்பில் 14 பேரும், தேர்வாகியிருக்கின்றனர்.

முஸ்லிம்களுக்கு 18 சத இட ஒதுக்கீட்டை வழங்குவோம் என்ற உறுதிமொழியை அளித்த காங்கிரஸ் கட்சி சார்பில் 3 பேர் மட்டுமே எம்.எல்.ஏ.,க்களாயினர்.

அமைதி இயக்கம் சார்பில் 3 பேரும், கவுமி ஏக்தா தள் சார்பில் 2 பேரும், ஒரே ஒரு முஸ்லிம் மட்டும் சுயேச்சையாகவும் நின்று எம்,எல்,ஏ,.க்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2007 ல் - 56 ஆக இருந்தவர்கள் தற்போது 63 ஆக உயர்ந்திருக்கின்றனர்.

அயோத்தி பிரச்னை இருந்த நேரம் (1993) தேர்தலில் 25 பேர் மட்டுமே தேர்வாகியிருந்தனர். சமீபத்திய தேர்தலில் தான் வரலாற்றிலேயே கூடுதலாக 63 பேர் முஸ்லிம்களை சேர்ந்தவர்கள் எம்,எல்.ஏ.,வாகியிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Thursday, March 8, 2012

இது இரண்டாம் ஜாலியன்வாலாபாக்” என்கிறார்கள் பாபா ராம் தேவ்வின் பக்தர்கள்…“இது இரண்டாம் எமர்ஜென்சி; முந்தயதை எப்படி எதிர்த்தோமோ அப்படியே இதையும் எதிர்ப்போம்” என்று அறிவித்துள்ளது ஆர்.எஸ்.எஸ் கும்பல்..

அதாகப்பட்டது தில்லி ராம் லீலா மைதானத்தில் கருப்புப் பணத்தை மீட்க அரசை நடவடிக்கை எடுக்கக் கோரி பதினெட்டு கோடி செலவில் உண்ணாவிரதம் இருந்த பாபா ராம...்தேவையும் அவரது அடிப்பொடிகளையும் கடந்த சனிக்கிழமை இரவு போலீசார் அப்புறப்படுத்தியுள்ளனர்.

இவர்கள் நீட்டி முழக்குவது போலெல்லாம் இந்த சாமியாருக்கும் அரசுக்கும் பெரிய முரண்பாடு எதுவும் கிடையாது. யோகா வகுப்புகள் மூலமும் டுபாக்கூர் ஆயுர்வேத மருந்துகளை ஏற்றுமதி செய்வதன் மூலமும் ஆயிரக்கணக்கான கோடிகள் வருமானம்.

அமெரிக்காவில் 650 ஏக்கர் நிலமும், ஓய்வாய் தியானத்தில் அமர்ந்திருக்க ஸ்காட்லாண்டில் தனி தீவும் (நித்யானந்தாவுக்கு மாதிரி கேமேரா வைத்தால் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறும்), வானத்தில் பயணம் செய்ய சொந்த விமானமும், நிலத்தில் பயணம் செய்ய விலையுயர்ந்த லேண்ட் ரோவர் காரும் கொண்டவர் இந்த ”முற்றும் துறந்த” சாமியார்.


இந்தியாவில் கருப்புப் பணம் வெளுப்பதற்கும், ஹவாலா பணத்தின் சுழற்சிக்கும் அச்சாணியாக இருப்பதே இது போன்ற கார்பொரேட் சாமியார் மடங்களும் அவர்கள் நடத்தும் டிரஸ்டுகளும் தான். பாபா ராம்தேவ் யோக்கியராய் இருந்தால் முதலில் தான் சேர்த்துள்ள சொத்துக்களுக்குக் கணக்குக் காட்டி விட்டு களத்துக்கு வந்திருக்க வேண்டும்.

பாபா ராம்தேவை தில்லியை விட்டு திருப்பியனுப்பியதை எதிர்த்து இப்போது சத்தியாகிரகம் துவங்கியிருக்கும் இதே பி.ஜே.பி, தான் ஆளும் கருநாடக மாநிலத்தில் ஊழல் தடுப்பு அமைப்பான லோக் ஆயுக்தாவின் அதிகார வரம்பைக் குறைத்து எடியூரப்பாவைக் காப்பாற்ற முயன்று வருகிறது.

பி.ஜே.பி ஆளும் இன்னொரு மாநிலமான குஜராத்தில் கடந்த ஏழு ஆண்டுகளாக லோக் அயுக்தாவின் தலைவரே நியமிக்கப் படவில்லை. எதார்த்தம் இவ்வாறிருக்க, ஆங்கிலச் சேனல்களில் தோன்றும் ஆர்.எஸ்.எஸ் டவுசர் பாண்டிகளோ மக்களை கேனையர்களாக நினைத்துக் கொண்டு எருமை மாடு ஏரோபிளேன் ஓட்டுகிறது என்கிறார்கள்.

ஏற்கனவே இவர்களின் ‘ராமர் கோயில் + வெடிகுண்டு’ பிராண்டு இந்துத்துவ அரசியல் முற்றுமுழுதாக மக்களின் முன் அம்மணமாக நிற்கிறது. இந்நிலையில் சமீப வருடங்களாக வெளியாகிவரும் ஊழல் முறைகேடுகள் பற்றிய செய்திகள் நடுத்தர வர்க்கத்தினரிடையே உண்டாக்கியிருக்கும் ஆத்திரத்தை தமக்குச் சாதகமாக மடைமாற்றிக் கொள்ளலாம் என்று நாவில் எச்சில் ஊற டவுசர் கும்பல் கணக்குப் போடுகிறது.

அந்த அடிப்படையில் தான், முன்பு அன்னா ஹசாரே உண்ணாவிரத டிராமாவின் போதும் சரி இப்போது பாபா ராம் தேவ் நடத்தும் டிராமாவிலும் சரி ஆர்.எஸ்.எஸ் அக்கறை காட்டுகிறது. உண்மையிலேயே ஊழலை ஒழிப்பதில் அதற்கு அக்கறை இருக்குமென்றால் முதலில் எடியூரப்பாவையும் ரெட்டி சகோதரர்களையும் வீட்டுக்கு அனுப்புவதிலிருந்து தான் ஆரம்பித்திருக்க வேண்டும்.See More
.

அமெரிக்க ராணுவத்தினர் குர்ஆன் பிரதியை எரித்தது உண்மை

Saturday, March 3, 2012

மனிதநேய மக்கள் கட்சியின் துணை நிர்வாகிகள்

மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி வெளியிடும் பத்திரிகை அறிக்கை:

மனிதநேய மக்கள் கட்சியின் உயர்நிலைக்குழு கூட்டம் மார்ச் 1, 2012 அன்று தலைமையகத்தில் நடைபெற்றது. அதில் எடுக்கப்பட்ட முடிவின்படி;

கட்சியின் துணைப் பொதுச் செயலாளராகப் பணியாற்றிய எஸ்.எஸ். ஹாரூண் ரஷீத் அவர்கள் கட்சியின் இணை பொதுச் செயலாளராகவும்,

தஞ்சை வடக்கு மாவட்ட துணைச் செயலாளராகப் பணியாற்றிய வழக்கறிஞர் ஆர்.சரவணன் எம்.எ.பி.எல். அவர்கள் மாநில துணைப் பொதுச் செயலாளராகவும்,

தூத்துக்குடி மாவட்ட துணைச் செயலாளராகப் பணியாற்றிய பி. ஜோசப் நொலஸ்கோ பீரிஸ் அவர்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளராகவும்,

கட்சியின் பேச்சாளராகப் பணியாற்றிவந்த பி. செல்லச்சாமி அவர்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்

Friday, March 2, 2012

இராமநாதபுரம் மாவட்ட த.மு.மு.க சார்பாக கல்வி உதவி, மருத்துவ உதவி மற்றும் சிறு தொழில் செய்வதற்கும் ஆக மொத்தம் ரூ.50000- வழங்கப்பட்டது.

மாவட்ட த.மு.மு.க தலைமைக்கு மண்டபம் ஒன்றியம் தங்கச்சிமடத்தை சேர்ந்தவரின் மருத்துவ உதவிக்காக உதவிகேட்டு மனு கொடுத்திருந்தார். அவரின் மருத்துவ செலவிற்காக ரூ. 10000-மும், இராமநாதபுரத்தை சேர்ந்த அஸ்லம் என்பவருக்கு மருத்துவ உதவியாக ரூ 25000-மும் இராமநாதபுரத்தை சேர்ந்த விதவைப் பெண் பாத்திமா என்பவருக்கு சிறுதொழில் தொடங்க ரூ 5000-மும் இரண்டு மாணவர்களின் கல்வி மேற்படிப்பிற்காக ரூ 10000-மும் ஆக மொத்தம் ரூ50000- வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளாளர்.சலிமுல்லாகான் தலைமை தாங்கி மேற்கண்ட நிதிஉதவிகளை வழங்கினார். இதில் த.மு.மு.க மாவட்ட செயலாளா; தஸ்பிக் அலி இ மாவட்ட தொண்டரணி செயலாளர் சாதிக், நகர தலைவர் சுல்தான் மற்றும் மண்டபம் ஒன்றிய பொருளாளர் இபுராஹிம் ஆகியோர் கலந்து கொண்டனா;.

இந்நிகழ்ச்சியின் போது ஏப்ரல் 29ல் முஸ்லீம்களுக்கு கல்வி வேலைவாய்ப்பில் மத்தியில் 10 சதவீதமும் தமிழகத்தில் 7 சதவீதமும் இடஓதுக்கீட்டை வலியுறுத்தி இராமநாதபுரம் ஒன்றியம் மற்றும் நகர் சார்பாக பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இந்தியாவில் காவல் துறை மத சார்பாக உள்ளது : பிரஷாத் பூஷன்

இந்தியாவில் காவல் துறை மத சார்பாக உள்ளது : பிரஷாத் பூஷன்.
புது தில்லி : அன்னா ஹசாரே குழுவின் முக்கிய உறுப்பினரும் உச்சநீதி மன்ற வழக்கறிஞருமான பிரசாந்த் பூஷன் நாடெங்கும் உள்ள காவல்துறை வகுப்பு வாத மயமாகி உள்ளது என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
“நாடு முழுவதும் காவல்துறை வகுப்பு வாத மயமாகி வருகிறது.தன் நச்சு கருத்துக்களால் ஒட்டு மொத்த குஜராத் காவல்துறையும் வகுப்புவாத மயமாகி உள்ளது “ என்று குஜராத் வகுப்பு கலவரங்களின் 10 ஆம் ஆண்டு நிறைவையொட்டி வெளியிடப்பட்ட ஆவணப்பட விழாவில் பிரசாந்த பூஷண் கூறினார்.
”நாடெங்கும் தீவிரவாத வழக்குகளில் காவல்துறையினரால் உண்மை குற்றவாளிகளை கண்டு பிடிக்க முடியா சூழலில் முஸ்லீம்களை அதில் சிக்க வைப்பதில் காவல்துறை தெளிவான திட்டமிடலுடன் செயல்படுகிறது. அப்படி சிக்க வைக்கப்படும் அப்பாவிகளுடன் எதிர்த்து போராடும் திறமற்றவராக இருந்தால் அவரின் வாழ்நாள் சிறையிலேயே கழிந்து விடுகிறது” என்றும் கூறினார்.
ஒரு வேளை அந்த நபர் வழக்காடி வெளியில் வந்தாலும் குறைந்தது 5 வருடங்களாவது சிறையில் கழிக்க நேரிடுவதோடு சமூகத்தில் தீவிரவாத முத்திரையோடு காலம் தள்ள வேண்டியுள்ளது என்ற பூஷண் சில சமயங்களில் ஊடகங்களும் இதில் முக்கிய பங்காற்றுகின்றன என்றும் கூறினார்.
இப்படி கைது செய்யப்படும் அப்பாவிகளுள் 2 % அவர்கள் அனுபவிக்கும் கொடுமைகளால் உண்மையிலேயே தீவிரவாதிகளாகும் வாய்ப்புண்டு என்றும் பிரசாந்த் பூஷன் கூறினார்.
சுப்ரதீப் சக்ரவர்த்தியால் எடுக்கப்பட்ட ஆவணப்படம் தவறாக கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப்பட்டாலும் தன் வாழ்வில் இன்னல்களை சந்திக்கும் 7 முஸ்லீம் இளைஞர்களை பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.