Thursday, December 1, 2016

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில பொதுக்குழு தீர்மானங்கள் 11 to 13



#தீர்மானம்_11 - "கோவை"

இந்துமுன்னணி நிர்வாகி சசிகுமார் படுகொலையை இப்பொதுக்குழு கண்டிக்கிறது. அந்தப் படுகொலையைத் தொடர்ந்து முஸ்லிம்களின் நிறுவனங்களையும், சொத்துக்களையும் குறிவைத்து நடத்தப்பட்டக் கலவரத்தைத் தூண்டிவிட்டவர்கள் கைது செய்யப்படாதது கவலை அளிக்கிறது. கலவரக்காரர்களைக் கைது செய்த காவல்துறை, கலவரத்தைத் தூண்டிவிட்டவர்களையும் கைது செய்ய வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.


#தீர்மானம்_12 - "அரபி- உருது"

தமிழகப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் அரபி, உருது ஆசிரியர் பணியிடங்கள் நீண்டகாலமாக நிரப்பப்படாமல் உள்ளன. பல இடங்களில் அந்தப் பணியிடங்களை நீக்கும் செயல்களும் நடந்து வருகின்றன. சென்னை நந்தனம் அரசு கலைக்கல்லூரியில் அரபித் துறை மூடப்பட்டுள்ளது. இது கவலைக்குரியது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களில் அரபி, உருது ஆசிரியர் பணியிடங்கள் உள்ளிட்ட அனைத்துப் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

#தீர்மானம்_13 - "SLET தேர்வு"

கல்லூரி ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான தகுதித் தேர்வுகளில் ( SLET) தொடர்ச்சியாக அரபி, உருது மொழிப்பாடங்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. SLET தேர்வுகள் அரபி, உருது மொழிகளுக்கும் சேர்த்து நடத்தப்பட வேண்டும் என்றும், சிறுபான்மை மொழிகளை வஞ்சிக்கும் முறை தொடரக் கூடாதென்றும் இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது. சமீபத்தில் வெளியான SLET தேர்வு முடிவுகளில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு கடைபிடிக்கப்படாதது வன்மையாக கண்டிக்கத்தக்கது. பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தும் வகையில் தேர்வு முடிவுகள் திருத்தப்பட வேண்டுமென இப்பொதுக் குழு கோருகின்றது.



தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில பொதுக்குழு தீர்மானங்கள் முதல் பத்து

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில பொதுக்குழு தீர்மானங்கள் 1 to 10

#தீர்மானம்_1 "பாபரி மஸ்ஜித்"

உச்சநீதிமன்ற உத்தரவுகளை மீறி டிசம்பர் 6 1992ல் பாபர் மஸ்ஜித் பட்டப்பகலில் பயங்கரவாதிகளால் தகர்க்கப்பட்டது. இடிக்கப்பட்ட பள்ளிவாசல் ஓராண்டுக்குள் கட்டித்தரப்படும் என்று மத்திய அரசாங்கம் அளித்த வாக்குறுதி இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை. லிபரான் ஆணையத்தால் சுட்டிக்காட்டப்பட்டுள்ள பாபர் மஸ்ஜித் இடிப்பு குற்றவாளிகள் யாரும் தண்டிக்கப்படவில்லை. பாபரி மஸ்ஜித் இடத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வேண்டும், மஸ்ஜித் இடிப்புக் குற்றவாளிகளைத் தண்டிக்கவேண்டும், பாபரி மஸ்ஜித் வழக்கில் உச்சநீதிமன்றம் விரைந்து தீர்ப்பளிக்க வேண்டும் என்ற அடிப்படை கோரிக்கையை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது. இதை வலியுறுத்தி பாபரி மஸ்ஜித் இடிப்பு தினமான டிசம்பர் 6 அன்று தமுமுக கருஞ்சட்டை அணிந்து நடத்தும் தர்ணா போராட்டத்தில் பெருந்திரளாக மக்கள் ளை பங்கேற்க வேண்டும் எனவும் இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.


#தீர்மானம்_2

"போபால் போலி என்கவுன்டர்"

போபால் மத்தியச் சிறையிலிருந்து எட்டு முஸ்லிம் இளைஞர்களை பச்சைப் படுகொலை செய்து விட்டு, மோதல் சாவு (என்கவுன்டர்) என்று நாடகமாடும் அயோக்கியத்தனத்தை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. இப்படுகொலையில் ஈடுபட்டவர்கள் மீதும், இதைத் தூண்டிவிட்டவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு சட்டத்தின் மீதான நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.



#தீர்மானம்_3

"மரு. ஜாகிர் நாயக்"

உலகப்புகழ் பெற்ற இஸ்லாமிய அழைப்பாளரும், சவூதி, மலேசியா உள்ளிட்ட நாடுகளின் உயர் விருதுகளைப் பெற்றவரும், லட்சக்கணக்கான மக்களின் மனங்கவர்ந்தவருமாகிய மருத்துவர் ஜாகிர் நாயக் மீது மத்திய மாநில மதவெறி அரசுகள் மேற்கொண்டு வரும் பழிவாங்கும் போக்கையும், அவதூறுப் பரப்புகளையும் இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. அவரது நிறுவனத்தை 5 ஆண்டுகள் தடைசெய்துள்ள ஜனநாயகப் படுகொலையையும் இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிப்பதோடு, உடனடியாக மருத்துவர் ஜாகிர் நாயக் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகளை மத்திய, மராட்டிய மாநில பாஜக அரசுகள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும், தடையையும் நீக்கவேண்டும் என்றும் இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது. கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் அச்சுறுத்தல் தொடர்ந்தால் மாபெரும் மக்கள் போராட்டங்களை முன்னெடுக்க நேரும் என்றும் இப்பொதுக்குழு எச்சரிக்கிறது.
 தீர்மானங்கள்

#தீர்மானம்_4 ~பொதுசிவில் சட்டம்

இந்தியாவின் பன்மைத்துவத்தையும், சமூக அமைதியையும் சீர்குலைக்கும் வகையில் மத்திய அரசு பொது சிவில் சட்டம் கொண்டு வருவதற்காக எடுக்கும் முன்முயற்சிகளை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. ஜனநாயகத்தைப் பெரும்பான்மைவாதத்தின் மூலம் வீழ்த்தும் வகையில் இந்திய சட்ட ஆணையத்தின் மூலம், பொது சிவில் சட்டம் குறித்து, பொதுமக்களிடம் கருத்தாய்வு நடத்துவதையும் இப்பொதுக்குழு கண்டிக்கிறது. அரசியல் சாசனத்தின் 25வது பிரிவு வழங்கியுள்ள சமயச் சுதந்திரத்திற்கு ஊறு விளைவிக்கும் மதவாத நடவடிக்கைகளுக்கு எதிராக அனைத்து மக்களும் ஒன்றிணைய வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.


#தீர்மானம்_5 - "திப்புசுல்தான்"

இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தில் பங்களிப்பு செய்யாத, ஆங்கிலேயர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்களின் பாரம்பரியத்தில் வந்த மதவெறி சக்திகள், விடுதலைப் போரில் வீரமரணமடைந்த மாவீரன் திப்பு சுல்தான் மீது அவதூறு செய்து வருவதை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. நவம்பர் 10 2016 அன்று கர்நாடக அரசு நடத்தவிருந்த திப்புசுல்தான் விழாவும் மதவெறி சக்திகளால் தடுக்கப்பட்டுள்ளது. வரலாற்றைத் திரிக்கும் வன்னெஞ்சர்களின் வக்கிரத்திற்கெதிராக, அனைத்து மக்களும் ஓரணியில் திரள வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துவதோடு, தேசவிடுதலைக்காக தியாகங்கள் பலசெய்த திப்பு சுல்தான், பகதூர்ஷா உள்ளிட்ட மன்னர்களின் வரலாற்றையும், கண்ணியமிகு காயிதே மில்லத், மௌலானா அபுல்கலாம் ஆசாத் ஆகியோரின் வரலாற்றையும் பாடநூற்களில் இடம் பெறச் செய்ய வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

திண்டுக்கல்லில் அமைந்து வரும் ஹைதர் அலி - திப்பு சுல்தான் மணிமன்டபத்தின் பெயர் பலகையில் விடுதலைப் போராட்ட வீரர்கள் என்ற அடைமொழி அவசியம் இடம் பெற வேண்டுமென இப்பொதுக் குழு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.

#தீர்மானம்_6 - "வெறுப்புப் பேச்சு"

சங்பரிவாரத்தின் வெறுப்புப் பேச்சுகளுக்கும், விபரீத நடவடிக்கைகளுக்கும் மத்திய அரசின் மௌனம் ஊக்கமளிப்பதாக உள்ளது. அண்மையில் சங்பரிவாரப் பிரிவுகளில் ஒன்றான தர்ம் ஜாக்ரன் மஞ்ச் தலைவர் ராஜேவர் சிங் “31.12.2021க்குள் இந்தியாவில் முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விடுவார்கள், இதுவே எங்கள் முக்கிய நோக்கம்” என்று பேசியுள்ளார். இவர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சமூக அமைதியைக் குலைக்கும் வகையில் வெறுப்புப் பரப்புரைகள் செய்வோர் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

#தீர்மானம்_7 - "காஷ்மீர்"

காஷ்மீரின் அப்பாவிப் பொதுமக்கள் மீது நடத்தப்பட்டுவரும் ஈவிரக்கமற்ற வன்முறை வெறியாட்டத்தை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. காஷ்மீர், இந்தியாவின் பிரிக்கப்படாத பகுதியாகவும், அமைதிமிக்க பகுதியாகவும் இருக்கும் வகையில், அங்கு இணக்கம் ஏற்படுத்தப்பட வேண்டும். அப்பாவிகளைக் கொன்று குவிக்க வழிவகுக்கும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை (AFSPA) மத்திய அரசு திரும்பப் பெறுவதோடு, மக்களுக்கு உரிய இழப்பீடுகளையும் வழங்க வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.


#தீர்மானம்_8 - "மதுரை முஸ்லிம் இளைஞர்கள் அலைக்கழிப்பு"

மதுரை மாநகரில் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை காவல்துறை அடிக்கடி விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று அலைக்கழிப்பதை இப்பொதுக் குழு கண்டிக்கிறது. இத்தகைய அலைக்கழிப்புகள் தொடர்ந்தால் மாபெரும் மக்கள் போராட்டம் நடத்தப்படும் என்றும் இப்பொதுக்குழு எச்சரிக்கிறது.

#தீர்மானம்_9 - "சிறைவாசிகள் விடுதலை"

நீண்ட கால சிறைவாசிகளுக்கு மாநில அரசு தண்டனைக் குறைப்புச் செய்து கொள்ள உச்சநீதிமன்றம் அதிகாரம் அளித்துள்ளது. இதனடிப்படையிலும், மனிதாபிமான அடிப்படையிலும், தமிழகச் சிறைகளில் பத்தாண்டுகளுக்கு மேலாக வாடுகிற முஸ்லிம் சிறைவாசிகள் உட்பட அனைத்து வாழ்நாள் சிறைவாசிகளையும் மாநில அரசு விடுதலை செய்ய வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

நளினி, சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட நீண்ட கால சிறைவாசிகளையும், கோவை அபூதாஹிர் உள்ளிட்ட கடும் நோயாளிகளையும், 60 வயது கடந்தவர்களையும் தமிழக அரசு விடுதலை செய்ய ஆவன செய்ய வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளுக்கு பரோல் வழங்குவதில் மிகுந்த கடுமைகாட்டுவது நிறுத்தப்பட வேண்டும் என்றும் இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.


#தீர்மானம்_10 - "வக்ஃப் நிர்வாகம்"

தமிழக அரசு உடனடியாக வக்ஃப் வாரிய புதிய நிர்வாகத்தை அமைக்க வேண்டும் என்றும், ஆக்கிரமிப்பில் உள்ள ஏராளமான வக்ஃப் சொத்துகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.




Tuesday, August 2, 2016

தமுமுகவை சேர்ந்த கீழக்கரை ஹசன் கூறியதாவது

தமுமுகவை சேர்ந்த கீழக்கரை ஹசன் கூறியதாவது

கீழக்கரையில் மாடல் சிட்டி என்ற முயற்சி வரவேற்கதக்கது...

சரியான புரிதல் உருவாக்காமல் இது சாத்தியமா என்ற ஐயம் உள்ளது...

சாத்திய கூறுகள் உள்ள தெருக்களில் பாதாள சாக்கடை பம்பிங் ஸடேஷன் முறையிலே அமையபெற வேண்டும்...

வாய்ப்புள்ள தெருகளில் EB வயர்களை தரையில் மிக பாதுகாப்பாக அமைக்க வேண்டும்...

குப்பைகள் மட்டும் கழிவுநீர் கடலுக்கு போகாமல் தடுக்க வேண்டும், அது சுத்திகரிக்கப்படவும் வேண்டும்....

ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்டது போல் தரமான சாலைகள் அமைக்கப்பட வேண்டும்...

அனைத்து தெருக்களுக்கும் தூய்மையான குடி தண்ணீர் வழங்கப்பட வழி செய்யப்பட வேண்டும்....

இந்த மாடல் சிட்டிக்கு முன்பாக கீழக்கரையிலிருந்து சின்ன மாயாகுளம்,பெரிய மாயாகுளம், புல்லந்தை வரையுள்ள பகுதியில் ஒரு மினி சிட்டி அமைக்க முயலாம்....

மக்களுக்காக நல்லெண்ணத்தில் செய்யப்படும் செலவுகள் மிக்க பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்பதே அக்கறை மிகுந்த கவலை....  

M J. ஹாசன்
கீழக்கரை தமுமுக

http://keelakaraitimes.com/opinion-about-klk-model-city/

Saturday, July 30, 2016

மக்கள் சேவையில் இருந்தவர்கள் உயிரிழப்பு

மக்கள் சேவையில் இருந்தவர்கள் உயிரிழப்பு

அரசின் இழப்பீட்டை தொகுதி எம்.எல்.ஏ வும் அமைச்சருமான மாண்புமிகு மணிகண்டன் அவர்கள் பெற்று தர வேண்டும். # 29.07.16 இராமநாதபுரத்தில் # 108 ஆம்புலன்ஸ், அரசு பஸ் மோதல்: # 4 பேர் பலி # 7 பேர் படுகாயம் இராமநாதபுரம் மாவட்டம் திருப்புலாணியில் அரசு பஸ், 108 ஆம்புலன்ஸ் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த சம்பவத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர் சரவணன், நோயாளி மற்றும் உடன் சென்றவர் பலியானார்கள் 4 பேர் மரணம் அடைந்தார்கள். 7 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏர்வாடியிலிருந்து இராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்ற போது விபத்து ஏற்பட்டது..* விரைவாக வழங்கப்படும் இழப்பீடே! பாதிக்கப்பட்டவர்களை சிறிதளவேனும் ஆறுதல் படுத்தும் என்பதை அரசு நிர்வாகம் கவனத்தில் கொள்ள வேண்டும்.... M.J ஹசன் கீழக்கரை தமுமுக

Monday, July 18, 2016

ஏலகிரி மலையில் இனிய சுற்றுலா

மமக மாநிலஅமைப்பு செயலாளர் ஆம்பூர் EX M.L.A.அஸ்லம் பாஷா அவர்கள் உடன் கீழக்கரை நகர் தமுமுக செயலாளர் முஹமது சிராஜுதீன் மற்றும் தமுமுக  சகோதரர்களுடன் ஏலகிரி மலையில் இனிய சுற்றுலா

Saturday, July 16, 2016

சென்னையில் இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பாக இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்


மாபெரும் இஸ்லாமிய அறிஞர் #Dr_ஜாஹிர்_நாயிக் அவர்களை விசாரித்து கைது செய்ய துடிக்கும் மத்திய மகாரஷ்டிரா அரசுகளை கண்டித்து தொடர்ந்து அவதூறுப் பிரச்சாரம் செய்யும் சங்கபரிவாரர் ஆதரவு ஊடகங்களை கண்டித்து 
சென்னையில் இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பாக இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்  நடந்தது இதில் 
 கலந்துக்கொண்ட கீழக்கரை நகர் தமுமுக செயலாளர் முஹமது சிராஜுதீன்.

Monday, July 4, 2016

கீழக்கரை நகர் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் சார்பில் ஃபித்ரா பொருட்கள் வழங்கப்பட்டன








இன்று 03.07.2016 கீழக்கரை நகர்  தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் சார்பில்  ஃபித்ரா பொருட்கள்  வழங்கப்பட்டன   உணவுப்பொருட்கள் அடங்கிய பைகள் ஏழை எளியோர்க்கு வழங்கப்பட்டன இந்நிகழ்ச்சிக்கு மனித நேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் அன்வர் அலி  மாவட்ட துணைச்செயலாளர் ரைஸ் அவர்கள்  தலைமை தாங்கினார் மற்றும் கீழக்கரை  திமுக  நகர் செயலாளர் பஷீர் அஹமது கீழக்கரை மக்கள் சேவை MKM உமர் கீழக்கரை IUML தலைவர்  லெப்பை தம்பி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.   இலவச உணவுப்பொருட்கள் அடங்கிய சுமார் 240 பைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தமுமுக கீழக்கரை  நகர்  செயலாளர் முகமது சிராஜுதீன். அபுதாஹிர், நசீர்,இக்பால் புஹாரி கௌஸ்   மற்றும் தமுமுக&மமக கிளை நிர்வாகிகளும்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.



பின்னர் இஃப்தார் நிகழ்ச்சியும் நடைபெற்றது