Saturday, September 26, 2009

நான் ஏன் செருப்பை வீசி எரிந்தேன்?


நான் ஏன் செருப்பை வீசி எரிந்தேன்? : முன்தாஜர் அல் ஜெய்தி

குறிப்பு: ஜார்ஜ் புஷ்ஷின் மீது செருப்பை வீசியெறிந்தகுற்றத்திற்காக’ ஒன்பது மாத சிறை வாசத்திற்குப் பின், கடந்த வாரம் விடுதலையாகியுள்ள முன்தாஜர் அல் ஜெய்தி எழுதிய கீழ்க்காணும் கட்டுரை, கார்டியன் செய்தித்தாளில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டது. அதன் தமிழாக்கம் கீழே தரப்பட்டுள்ளது..

நான் விடுதலையடைந்து விட்டேன். ஆனால், எனது நாடு இன்னமும் போர்க் கைதியாக சிறை வைக்கப்பட்டிருக்கிறது. செயல் குறித்தும், செயல்பட்டவர் குறித்தும், நாயகனைக் குறித்தும், நாயகத்தன்மை வாய்ந்த செயல் குறித்தும், குறியீடு குறித்தும், குறியீடான செயல் குறித்தும் நிறையப் பேச்சுக்கள் அடிபடுகின்றன. ஆனால், எனது எளிமையான பதில் இதுதான். என் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியும், எனது தாயகத்தை ஆக்கிரமிப்பானது எவ்வாறு தனது பூட்சுக் கால்களால் நசுக்கி இழிவுபடுத்த விரும்பியதென்பதும்தான், என்னை செயல்படக் கட்டாயப்படுத்தியது.கடந்த சில ஆண்டுகளில், ஆக்கிரமிப்பின் துப்பாக்கி ரவைகளுக்கு இரையாகி பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட தியாகிகள் தமது இன்னுயிரை இழந்தார்கள். கணவனை இழந்த ஐம்பது இலட்சம் பெண்களும், உடல் உறுப்புகளை இழந்த ஆயிரக்கணக்கான மக்களும் நிறைந்து கிடக்கும் தேசம்தான் இன்றைய இராக். நாட்டுக்குள்ளும், வெளியிலும் இலட்சக்கணக்கானவர்கள் அகதிகளாய் உழன்று கொண்டிருக்கிறார்கள்.துருக்கியர், அசிரியர், சபியர், யாசித் என அனைவரோடும் தனது அன்றாட உணவை அரபு இனத்தவன் பகிர்ந்துண்ட ஒரு தேசமாக நாங்கள் வாழ்ந்திருந்தோம். சன்னியுடன் ஷியா ஒரே வரிசையில் நின்று வழிபட்ட காலமது. கிறிஸ்துவின் பிறந்தநாளை கிறிஸ்தவரோடு இசுலாமியர் இணைந்து கொண்டாடிய நாட்கள் அவை. இவையனைத்தும் பத்தாண்டுகளுக்கும் மேலான பொருளாதாரத் தடைகளுக்கிடையே, பசியை பகிர்ந்து கொள்ள நேர்ந்த போதிலும் கூட நீடித்திருந்தன.எமது பொறுமையும், ஒற்றுமையும் ஏவப்பட்ட ஒடுக்குமுறையை மறக்கவிடாமல் தடுத்தன. ஆனால், ஆக்கிரமிப்போ சகோதரர்களையும், நெருக்கமானவர்களையும் பிரித்துத் துண்டாடியது. எங்கள் வீடுகளை சுடுகாடுகளாக்கியது.நான் நாயகனல்ல. ஆனால் எனக்கு ஒரு கண்ணோட்டம் உண்டு. ஒரு நிலைப்பாடு உண்டு. எனது நாடு இழிவுபடுத்தப்படுவதைக் கண்ட பொழுது, எனது பாக்தாத் நகரம் தீயில் கருகிய பொழுது, எனது மக்கள் படுகொலை செய்யப்பட்ட பொழுது, நான் இழிவுபடுத்தப்பட்டவனாக உணர்ந்தேன். ஆயிரக்கணக்கான துயரம் தோய்ந்த காட்சிகள் எனது மனதில் அலைமோதிக் கொண்டிருந்தன. என்னை போரிடத் தூண்டின. இழிவுபடுத்தப்பட்ட அபுகிரைப்…பலூஜா, நஜாஃப், ஹடிதா, சதர் நகரம், பஸ்ரா, தியாலா, மொசூல், தல் அஃபர் என ஒவ்வொரு இடத்திலும் நடைபெற்ற படுகொலைகள்… ஒரு அங்குலம் குறையாமல் காயமுற்ற எனது நாடு… எரியும் தேசத்தினூடாகப் பயணம் செய்து, நேரடியாக பாதிக்கப்பட்டவர்களின் வலியைக் கண்ணால் கண்டேன். துயருற்றவர்களின் ஓலத்தை, அனாதைகளாக்கப்பட்டவர்களின் அலறலை காதுகளில் கேட்டேன். ஒரு அவமானம் என்னை அழுத்தி வாட்டியது. நான் பலவீனனாக உணர்ந்தேன்.அன்றாடம் நிகழ்ந்த துயரங்களை தெரிவிக்கும் ஒரு தொலைக்காட்சி நிருபராக, எனது தொழில்சார்ந்த கடமைகளை முடித்த பின்னால், தரைமட்டமாக்கப்பட்ட இராக்கிய வீடுகளின் இடிபாடுகளின் தூசியையோ அல்லது ஆடைகளில் படிந்த இரத்தக் கறைகளையோ, நான் தண்ணீரால் கழுவிய பொழுதுகளில், பற்கள் நெறுநெறுக்க, பாதிக்கப்பட்ட எனது நாட்டு மக்களின் பேரால் பழிக்குப் பழி வாங்குவேனென நான் உறுதிமொழி எடுத்துக் கொள்வேன்.வாய்ப்பு வழிதேடி வந்தது. நான் அதனைக் கைப்பற்றிக் கொண்டேன்.ஆக்கிரமிப்பினூடாகவும், ஆக்கிரமிப்பின் விளைவாகவும் சிந்தப்பட்ட அப்பாவிகளின் ஒவ்வொரு இரத்தத் துளிக்கும், வேதனையில் கதறிய ஒவ்வொரு தாயின் ஒலத்திற்கும், துயரத்தில் முனகிய ஒவ்வொரு அனாதையின் கண்ணீருக்கும், பாலியல் வன்புணர்ச்சியால் சிதைக்கப்பட்ட பெண்களின் அலறலுக்கும், நான் செய்ய வேண்டிய கடமையாகக் கருதியதனால்தான் அச்செயலை செய்தேன்.என்னைக் கண்டிப்பவர்களுக்கு நான் சொல்வது: நான் வீசியெறிந்த காலணி, உடைந்து நொறுங்கிய எத்தனை வீடுகளை தாண்டி வந்திருக்கிறதென்று உங்களுக்குத் தெரியுமா? பலியான எத்தனை அப்பாவிகளின் குருதியைக் கடந்து வந்திருக்கிறதென்று உங்களுக்குத் தெரியுமா? எல்லா மதிப்பீடுகளும் மீறப்படும்பொழுது செருப்புதான் சரியான பதிலடியாகத் தோன்றுகிறது.”குற்றவாளியான ஜார்ஜ் புஷ்ஷின் மீது செருப்பை வீசியெறிந்த பொழுது, எனது நாட்டின் மீதான ஆக்கிரமிப்பை, எனது மக்களைப் படுகொலை செய்ததை, எனது நாட்டின் வளத்தை கொள்ளையடித்ததை, அதன் கட்டுமானங்களை தரைமட்டமாக்கியதை, அதன் குழந்தைகளை அகதிகளாக்கியதை, நான் ஏற்க மறுக்கிறேன் என்பதையே தெரிவிக்க விரும்பினேன்.ஒரு தொலைக்காட்சி நிருபராக, நிர்வாகத்திற்கு தொழில்ரீதியாக ஏற்பட்ட சங்கடத்திற்கும், ஒருவேளை நான் பத்திரிக்கை தருமத்திற்கும் ஊறு விளைவித்திருப்பதாகக் கருதினால், அத்தகைய நோக்கம் எனக்கு இல்லாத போதும், எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஒட்டுமொத்தத்தில், ஒவ்வொரு நாளும் தனது தாயகம் இழிவுபடுத்தப்படுவதைக் காணச் சகியாத ஒரு குடிமகனின் அணையாத மனசாட்சியை வெளிப்படுத்தவே நான் விரும்பினேன். ஆக்கிரமிப்பின் அரவணைப்பிற்குள்ளிருந்து தொழில் தர்மம குறித்து முனகுவோரின் குரல் நாட்டுப்பற்றின் குரலை விடவும் ஓங்கி ஒலிக்கக் கூடாது. நாட்டுப்பற்று பேச விரும்பும் பொழுது, அதனோடு தொழில் தர்மம இணைந்து கொள்ள வேண்டும்.எனது பெயர் வரலாற்றில் இடம் பெறுமென்றோ, காசு, பணம் கிடைக்குமென்றோ, நான் இதனைச் செய்யவில்லை. நான் எனது நாட்டைக் காக்க மட்டுமே விரும்பினேன்.நன்றி – http://porattamtn.wordpress.com/

Tuesday, September 22, 2009

கீழக்கரையில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் திங்கள்கிழமை ரம்ஜான் பெருநாளை முன்னிட்டு, சிறப்புத் தொழுகை நடைபெற்றது

கீழக்கரை, செப். 21: ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் திங்கள்கிழமை ரம்ஜான் பெருநாளை முன்னிட்டு, சிறப்புத் தொழுகை நடைபெற்றது. கீழக்கரையில் உள்ள மொத்தம் 8 ஜமாத் நிர்வாகத்தின் கீழ் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும், ரம்ஜான் பெருநாள் சிறப்புத் தொழுகை 8 முதல் 11 மணி வரை நடைபெற்றது. கீழக்கரை பெரிய ஜூம்மா மசூதி, பழைய குத்பா பள்ளி மசூதி, கிழக்குத் தெரு அப்பா பள்ளி மசூதி, தெற்குத் தெரு பள்ளி மசூதி, மேலத்தெரு புது பள்ளி மசூதி ஆகிய மசூதிகளில் ரம்ஜான் சிறப்புத் தொழுகை, பெருநாள் குத்பா பேருரையும் நடைபெற்றது. மேலும், கே.இ.சி.டி. ஈத்கா மைதானம் மற்றும் பல இடங்களில் ஜூம்மா பேருரை நடைபெற்றது. காலை 11 மணிக்கு மேல் அனைத்து ஜமாத்தினர்களும் சம்பிரதாய முறைப்படி பெரிய ஜூம்மா பள்ளியில் ஒன்று கூடி ஜூம்மா குத்பாவில் கலந்துகொண்டனர். நடுத்தெரு ஜூம்மா பள்ளியில், கீழக்கரை டவுன் காஜி காதர் பாக்ஸ் உசைன் தலைமையில் தொழுகை நடைபெற்றது. கீழக்கரையில் உள்ள அனைத்து மசூதிகளிலும் சேர்த்து 5000-க்கும் மேற்பட்டோர் சிறப்புத் தொழுகையில் கலந்து கொண்டனர். மேலும், வெளியூர் மற்றும் வெளி நாடுகளில் இருந்து பெருநாளை முன்னிட்டு சொந்த ஊருக்குத் திரும்பியவர்கள் இந்த சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர். பின்னர், கே.இ.சி.டி. அறக்கட்டளை மூலமாக அரிசி, காய்கறி, மளிகை சாமான்கள் அடங்கிய பைகள் 1000-க்கும் மேற்பட்ட ஏழை எளியவர்களுக்கு வழங்கப்பட்டது.

Monday, September 21, 2009

எனது இதயம் கனிந்த ஈதுல் ஃபித்ர் நல்வாழ்த்துக்கள்

Sunday, September 20, 2009

கீழக்கரை த மு மு க மாணவர் அணி சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி





19/9/2009அன்று கீழக்கரை த மு மு க மாணவர் அணி சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி கீழக்கரை கடற்கரை பள்ளி வழக்கத்தில் நடைபெற்றது.கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டவர்கள் . இன் நிகழ்ச்சிக்கு ராமநாட கீழக்கு மாவட்ட தலைவர் சாதிக் பாட்சா, மாவட்ட பொருளாளர் வாணி சித்தீக்,மாவட்டசெயலாளர் தச்பிகு,மற்றும் கீழக்கரை பொறுப்பாளர் ஜெய்னுல்ஆப்தீன், முஸ்தகீன், உஸ்மான, மற்றும் ஆய்பு, அகரம், சாதக,குர்சித், ஹமாத் ஹசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் 200 மேற்பட்டோர் கலந்து கொண்டவர்கள்

Saturday, September 19, 2009

CBI யின் வசம் ஒப்படைக்கப்படும் ஷோபியான் வழக்கு - நீதி கிடைக்குமா???


ஷோபியானில், ராணுவத்தால் கற்பழித்து கொல்லப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட இரண்டு பெண்கள் நிலொஃபர்(22), ஆசியா(17) அவர்களின் வழக்கு CBI யின் வசம் ஒப்படைக்கப்படுகிறது. இந்த வழக்கை முன்னதாக விசாரித்து வந்த காஷ்மீர் போலீஸார் இந்த வழக்கு சார்ந்த விசாரணைகளில் பெரும் குழப்பங்களையும் மோசடிகளையும் செய்து வந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில் இது பெரும் பரபரப்பை கிளப்பவே இந்த விசாரணையை CBI யின் வசம் ஒப்படைக்க ஜம்மு காஷ்மீர் அரசு முடிவு செய்தது.

CBI யின் இயக்குனர் அஷ்வாணி குமார் இதுபற்றி கூறுகையில், "CBI இந்த வழக்கை எடுப்பதற்கான தன்னுடைய நிலை பற்றி அரசிடம் தெளிவு படுத்திவிட்டது. மேலும் இந்த வழக்கு CBI யிடம் கொடுக்கப்படுமா இல்லையா என்பது பற்றிய முடிவை நாங்கள் அரசிடம் விட்டுவிட்டோம்" என்று கூறினார்.

ஜம்மு பெராமல்லிருந்ததை அரசு, தான் நியமித்த சிறப்பு புலனாய்வுக்குழு இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் பெறாமலிருந்ததை அடுத்து கடந்த செப்டம்பர் 9 ல் மத்திய அரசை தொடர்பு கொண்டு இந்த வழக்கை விசாரிக்க CBI க்கு உத்தரவிடுமாறு கேட்டுக்கொண்டது.

மேலும் ஜம்மு அரசு உயர் நீதிமன்றத்தில், இந்த வழக்கை CBI யின் வசம் ஒப்படைக்க போவதாகவும், இதனால் அரசுக்கு எந்த ஒரு ஆட்சேபமும் இல்லை என்றும், மேலும் வழக்கின் முன்னேற்றத்தை அது தொடர்ந்து கண்காணித்து வரும் எனவும் கூறியுள்ளது.

Friday, September 18, 2009

டெல்லியில் இமாம் மீது தாக்குதல்



டெல்லியின் புறநகர் பகுதியான ராஜாப்பூர் கிராமம் 9வது செக்டர், ரோஹினி ஏரியாவைச் சேர்ந்த முஸ்லிம்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அருகிலுள்ள பூங்கா ஒன்றினை தங்களது ஈத் பெருநாள் திடலாக உபயோகித்து வருகின்றனர்.

இவ்வருடமும் எதிர்வரும் ஈத் பெருநாள் தொழுகையை இதே பூங்காவில் நிறைவேற்றுவதற்காக தயாராகி வரும் முஸ்லிம்கள், இதற்கென ஒரு கமிட்டியை உருவாக்கியுள்ளனர். அதன் தலைவரான முஹம்மது ஃபஹீம் என்பவரைத் தாக்கி கடத்துவதற்கு கடந்த இரவு முயற்சி நடந்துள்ளது.

இதே ஏரியாவைச் சேர்ந்த சிலர் கடந்த சில மாதங்களாக இவ்வருடம் ஈத் தொழுகையை இந்த பூங்காவில் நடத்த விடமாட்டோம் என மிரட்டல் விடுத்து வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு 5 நபர்களைக் கொண்ட ஒரு குழு முஹம்மது ஃபஹீமை சுற்றி வளைத்து கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளது. அதில் நிலை குலைந்து போன ஃபஹீமை கடத்திச் செல்லவும் முயற்சித்துள்ளது.

இதற்கிடையில் ஃபஹீமின் கூக்குரலைக் கேட்டு பொதுமக்கள் அங்கு திரண்டதால் வன்முறையாளர்கள் ஓடிவிட்டதாக தெரிகிறது. முஹம்மது ஃபஹீம் தற்சமயம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பெற்று வருகிறார்.

இச்சம்பவத்திற்கு மார்க்ஸிஸ்ட் லெனின் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அருகிலுள்ள பிரஷாந்த் விஹார் காவல் நிலைய அதிகாரி சஞ்செய் ஷர்மாவிடம் முறையிட்ட அவர்கள் செப்.16 அன்று இத்தாக்குதலை கண்டித்து ஊர்வலம் பேரணி நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.

ஐந்து நாட்களுக்கு முன்பு தான் டெல்லி புறநகர் உயர் காவல் அதிகாரி அடுல் கத்தியார் முன் சமாதான கூட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் இத்தாக்குதல் குறித்து அப்பகுதி கவுன்ஸிலரிடம் முறையிட்ட பொழுது, ஈத் தொழுகையை எதிர்ப்பவர்களிடமே பரிந்துரை வாங்கி வரும்படி கூறினாராம்.

பிஜேபி கவுன்ஸிலரிடம் வேறு எதனை எதிர்பார்க்க முடியும்.

செப்டம்பர் 16 பேரணி முஸ்லிம்களின் வழிபாட்டு உரிமையை தக்க வைக்க உதவுமா??!

சேவையின்போது உயிர் நீத்த தமுமுக தொண்டர்


-அனீஸ்

திருவாரூர் மாவட்டம் கூத்தா நல்லூரைச் சேர்ந்த முகம்மது அலி ஜின்னா தமுமுகவின் உயிர் துடிப்புமிக்க நிர்வாகிகளில் ஒருவர். இவர் கூத்தா நல்லூர் நகர தலைவராக பணியாற்றி வந்தார்.

கடந்த 9ம் தேதி அல்அமான் என்கிற ஜமாத்திற்குச் சொந்தமான ஆம்புலன்ஸில் மற்றொருவருக்கு சேவை செய்துவிட்டு சென்னையி­ருந்து தனது சொந்த ஊரான கூத்தாநல்லூருக்கு திரும்பி வந்தார். வரும்போது கடலூர், சிதம்பரம் அருகே அதிகாலை 4 மணியளவில் ஆம்புலன்ஸ் மரத்தில் மோதி விபத்துக் குள்ளானது. ஜின்னா சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார் (இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்)

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த தமுமுக மாநில துணைச் செயலாளர் எஸ்.எம்.ஜின்னா மற்றும் கடலூர் மாவட்ட நிர்வாகிகள் உடனடியாக சம்பவ இடத் திற்கு விரைந்தனர்.

ஜின்னாவின் உடலை மீட்ட தமுமுக நிர்வாகிகள் உடனடியாக பிரேத பரிசோதனையை முடித்துவிட்டு கூத்தாநல்லூர் கொண்டு சென்றனர்.

சம்பவ நடந்த அன்று மாலை மக்ரிப் தொழுகையை நிறைவு செய்ததும் கூத்தாநல்லூர் சின்னப் பள்ளிவாசலில் ஜின்னாவின் உடல் ஏராளமான தமுமுக மற்றும் பொதுமக்களின் முன்னிலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. மிகச்சிறந்த தொண்டரான ஜின்னாவின் மரணம் அவரது குடும்பத்தினர் மற்றும் தமுமுக வினரை மிகப்பெரிய துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கூத்தாநல்லூரில் மாவட்ட தொண்டரணி செயலாளர் நூர்முகமது படுகொலை செய்யப்பட்டார். இரண்டு வாரங்களுக்குள் இரண்டு செயல் வீரர்களை இழந்து வாடும் திருவாரூர் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இதுபோன்ற நேரங்களில் அதிகமதிகம் இறைவனை வேண்டியும், மனம் தளராமலும் பணிபுரிய வேண்டும்.

Saturday, September 12, 2009

முஸ்லிம் ஜமாத் நிர்வாகத் தகராறு ஊராட்சித் தலைவி, கணவர், மகன் உள்பட 61 பேர் மீது வழக்கு

கடலாடி, செப். 11: கடலாடி அருகே வாலிநோக்கத்தில் முஸ்லிம் ஜமாத் நிர்வாகத்தில் ஏற்பட்ட தகராறில் வீடு மற்றும் வாகனங்கள் தாக்கி சேதப்படுத்தப்பட்டன. மேலும் வீடு புகுந்து 150 பவுன் தங்க நகைகள் அபகரிக்கப்பட்டன. இதுகுறித்து ஊராட்சித் தலைவி, இவரது கணவர், மகன் உள்பட 61 பேர் மீது போலீஸôர் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர். வாலிநோக்கம் முஸ்லிம் ஜமாத் நிர்வாகப் பொறுப்பை ஊராட்சித் தலைவி வகிதா சகுபர் (திமுக) தரப்பினரிடம் வக்ஃப் வாரியம் ஒப்படைத்துள்ளதாம். ஆனால், இதை எதிர்த்து அப்துல் ரசாக் தரப்பினர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந் நிலையில், புதுப் பள்ளிவாசல் ஒன்றில் பெண்கள் தொழுகைக்கு ஊராட்சித் தலைவி வகிதா சகுபர் தரப்பினர் ஏற்பாடு செய்ததாகவும், இதை எதிர் தரப்பினர் ஆட்சேபித்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து மதுரை உயர்நீதி மன்றக் கிளையில் அப்துல் ரசாக் தரப்பினர் மனுத் தாக்கல் செய்திருந்தனர். மனுவை விசாரித்த நீதிபதி புதுப் பள்ளிவாசலில் 17.9.2009 வரையில் பெண்கள் தொழுகை நடத்தக் கூடாது என்று இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக காவல் துறை அதிகாரிகள் தடுத்ததன் பேரில், பள்ளிவாசலுக்கு வெளியே பெண்கள் தொழுகை நடத்தினார்களாம். இதில் ஏற்பட்ட விரோதத்தில் ரகமத்துல்லா என்பவரது வீட்டுக்கு ஊராட்சித் தலைவி, இவரது கணவர் சகுபர், மகன் தவ்பீக் ரகுமான் மற்றும் 21 பெண்கள் உள்பட 61 பேர் திரண்டு சென்றார்களாம். வீடு, கார், டிராக்டர், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றைத் தாக்கி சேதப்படுத்தினார்களாம். மேலும் வீட்டுக்குள் புகுந்து 150 பவுன் நகைகளை அபகரித்துச் சென்று விட்டார்களாம். இச் சம்பவம் குறித்து சிக்கல் காவல் துறை ஆய்வாளர் (பொறுப்பு) பிரதாபன், உதவி ஆய்வாளர் (பொறுப்பு) மேனகா ஆகியோர் வாலிநோக்கம் வகிதா சகுபர், கணவர், மகன் உள்பட 61 பேரைத் தேடி வருகின்றனர்.

thanx :dinamani

Wednesday, September 9, 2009

செஞ்சியில் தமுமுக வின் 73வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா

செஞ்சியில் தமுமுக வின் 73வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா


செஞ்சியில் 20/08/09 அன்று தமுமுக வின் 73வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா மற்றும் 63வது சுதந்திர தின விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட துணைச் செயலாளர் ஜீலானி தலைமை தாங்கினார். மாவட்ட உலமா அணி செயலாளர் மௌலவி. ஏ. அஹமது சித்தீக் பாகவி திருக்குர்ஆன் கருத்துரை வழங்கினார். தமுமுகவின் பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி ஆம்புலன்ஸை அர்ப்பணித்தார்.


இந்த நிகழ்வில் மாவட்ட, நகர தமுமுக மற்றும் ம.ம.க நிர்வாகிகளும், நூற்றுக் கணக்கான பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.

செஞ்சியில் தமுமுக வின் 73வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா

செஞ்சியில் தமுமுக வின் 73வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா


செஞ்சியில் 20/08/09 அன்று தமுமுக வின் 73வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா மற்றும் 63வது சுதந்திர தின விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட துணைச் செயலாளர் ஜீலானி தலைமை தாங்கினார். மாவட்ட உலமா அணி செயலாளர் மௌலவி. ஏ. அஹமது சித்தீக் பாகவி திருக்குர்ஆன் கருத்துரை வழங்கினார். தமுமுகவின் பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி ஆம்புலன்ஸை அர்ப்பணித்தார்.


இந்த நிகழ்வில் மாவட்ட, நகர தமுமுக மற்றும் ம.ம.க நிர்வாகிகளும், நூற்றுக் கணக்கான பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.

Tuesday, September 8, 2009

கமதாபாத்: நரேந்திர மோடி [^] அரசு நடத்திய இன்னொரு போலி என்கவுண்டர் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையைச் சேர்ந்த இளம் பெண் இஷ்ரத் ஜெஹான். இவர் மும்பை மும்ப்ரா பகுதியைச் சேர்ந்தவர். இவரும், கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஜாவேத் ஷேக், அம்ஜத் அலி ரானா, ஜிஷான் ஜௌஹார் ஆகியோர் 2004ம் ஆண்டு ஜூன் 15ம் தேதி அதிகாலையில் அகமதாபாத் அருகே போலீஸார் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்ட நான்கு பேரும் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள். குஜராத் கலவர சம்பவம் [^] தொடர்பாக மோடியை சுட்டுக் கொல்ல ஊடுறுவியர்கள் என்று அப்போது போலீஸார் தெரிவித்தனர்.

ஆனால் இது போலி என்கவுண்டர், திட்டமிட்ட படுகொலை என்று அகமதாபாத் பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட் தற்போது தீர்ப்பளித்துள்ளது.

அப்போதைய என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் வன்சாரா மற்றும் காவல்துறை அதிகாரிகளே இந்த கொடூரமான கொலைக்குக் காரணம் என்றும் மாஜிஸ்திரேட் தமங் வழங்கிய தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே சோராபுதீன் என்பவரை போலி எண்கவுண்டர் செய்து கொலை செய்த வழக்கில் சிக்கி வன்சாரா உள்ளிட்ட போலீஸார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்த்கது.

இஷ்ரத் ஜெஹான் வழக்கை விசாரிக்க குஜராத் உயர்நீதிமன்றம் [^], 3 உயர் போலீஸ் அதிகாரிகளைக் கொண்ட குழுவை முன்பு நியமித்தது. இந்த விசாரணைக் குழு, தனது விசாரணையின்போது இஷ்ரத் ஜெஹான் உள்ளிட்டோர் போலியான முறையில் என்கவுண்டர் என்ற பெயரில் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டுபிடித்தது.

தங்களது சுய நலத்துக்காக சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் இஷ்ரத் உள்ளிட்டோரை சுட்டுக் கொன்றதாகவும், பதவி உயர்வு பெறுவதற்காகவும், இந்தக் கொலைகளை செய்து முதல்வர் நரேந்திர மோடியிடம் நற்பெயரை சம்பாதிப்பதற்காகவும் இந்த என்கவுண்டரை திட்டமிட்டு நடத்தியதாகவும் விசாரணைக் குழு தெரிவித்தது.

இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம் [^] தற்போது தீர்ப்பளித்துள்ளது.

இந்தக் கொடூரக் கொலைகளுக்கு காரணமான காவல்துறை அதிகாரிகளையும் நீதிபதி 2 பக்கங்களில் குறிப்பிட்டுள்ளார். வன்சாரா தவிர, என்.கே.அமீன் (இவரும் சோராபுதீன் வழக்கில் கைதானவர்), அகமதாபாத் போலீஸ் கமிஷனர் கே.ஆர்.கெளசிக், பி.பி.பாண்டே, தருன் பரோட் மற்றும் சில மூத்த காவல்துறை அதிகாரிகளே இந்த போலி என்கவுண்டருக்குக் காரணம் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நீதிபதியின் தீர்ப்பின் விவரம்...

குற்றப் பிரிவு போலீஸார் இஷ்ரத் மற்றும் 3 பேரை மும்பையிலிருந்து 2004ம் ஆண்டு ஜூன் 12ம் தேதி கடத்தி அகமதாபாத் கொண்டு வந்துள்ளனர். நான்கு பேரையும் ஜூன் 14ம் தேதி இரவு தங்களது கட்டுப்பாட்டு இடத்தில் வைத்து சுட்டுக் கொன்றனர்.

ஆனால் ஜூன் 15ம் தேதி அதிகாலையில், அகமதபாத்துக்கு வெளியே உள்ள கோதார்பூர் பகுதியில் வைத்து என்கவுண்டரில் கொன்றதாக போலீஸ் தரப்பில் தெரிவித்தனர்.

ஆனால் பிரேதப் பரிசோதனையில் அதற்கு முதல் நாள் இரவு 11 மணி முதல் 12 மணிக்குள்தான் இஷ்ரத் இறந்திருக்க வேண்டும் என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது போலீஸ் தரப்பு வாதத்தை பொய்யாக்குவதாக அமைந்தது.

தங்களது சதித் திட்டத்தை உண்மையானது போல காட்டுவதற்காக இஷ்ரத்தின் இறந்த உடலை தொடர்ந்து சுட்டு ஏராளமான தோட்டாக்களை உடலில் செலுத்தியுள்ளனர் போலீஸார்.

இஷ்ரத் உள்ளிட்ட நான்கு பேரிடமிருந்தும் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்ட வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் உள்ளிட்ட அனைத்துமே போலீஸார் போட்ட செட் ஆகும் என்று நீதிபதி கூறியுள்ளார்.

தண்டிக்க வேண்டும் - இஷ்ரத் குடும்பம்

அப்பாவியான தங்களது மகளை திட்டமிட்டுக் கொன்று விட்ட போலீஸ் அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் கடும் நடவடிக்கை [^] எடுக்க வேண்டும் என இஷ்ரத்தின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அகமதாபாத் கோர்ட் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த அவர்கள், சம்பந்தப்பட்ட போலீஸாருக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

Sunday, September 6, 2009

முதுகுளத்தூரில் ரேஷன் கடை முற்றுகை

முதுகுளத்தூரில் ரேஷன் கடை முற்றுகை


0

முதுகுளத்தூர் : முதுகுளத்தூரில் ரேஷன் கடையில் முறைகேடு நடப்பதை கண்டித்து பொது மக்கள் தாலுகா அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

முதுகுளத்தூர் திடல் தெரு ரேஷன் கடையில் 20 கிலோ அரிசிக்கு பதில் 15 கிலோ அரிசி வழங்கிவிட்டு கார்டில் 20 கிலோ வழங்கியதாக பதியப்படுகிறது. பாமாயிலும் கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது. பருப்பு உள்ளிட்ட பொருட்களின் எடையும் குறைகிறது . இது தொடர்பான புகாரை தொடர்ந்து ஐந்து தெருக்களை சேர்ந்த பொது மக்கள் த.மு.மு.க., மாவட்ட மாணவரணி செயலாளர் அஜிஸ்கனி, வக்கீல் அன்சாரி தலைமையில் முதுகுளத்தூர் தாலுகா அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

சிவில் சப்ளை தாசில் தார் கதிரேசன் கூறுகையில், "பொது மக்கள் விற்பனையாளர் மீது கூறியுள்ள புகார் குறித்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

Friday, September 4, 2009

த.மு.மு.க., நோன்பு நிகழ்ச்சி

ராமநாதபுரம்:ராமநாதபுரம் நகர் த.மு.மு.க., இஸ்லாமிய பிரசார பேரவை சார்பில் ரமலான் நோன்பு சிறப்பு நிகழ்ச்சி சின்னகடை தெரு மஸ்ஜித் தக்வா பள்ளிவாசலில் நடந்தது.

மனிதயே மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சலிமுல்லாகான் தலைமை தாங்கினார். அயுப்அலி பைஜி, அப்துல்காதர் மன்பா ஆகியோர் பேசினர்.

த.மு.மு.க., நகர் தலைவர் சுல்த்தான், நகர் செயலாளர் பரக்கத்துல்லா, நகர் பொருளாளர் அப்துல்கனி, மாவட்ட துணை செயலாளர் அன்வர் ஆகியோர் பங்கேற்றனர்.

Thursday, September 3, 2009

R–²SÖ| ˜Í¦• ˜ÁÚ]¼\ LZL†‡]Ÿ ÚTÖ§Í N-CÁÍÙTePŸ —‰ SPYzeÛL G|eLeÚLÖ¡ E·‰Û\ ÙNVXÖ[¡P• “LÖŸ

gZeLÛW,ÙN. 3-

ÙT ÚTÖ§Í N-CÁÍÙTePŸ —‰ SPYzeÛL G|eL E·‰Û\ÙNV XÖ[£eh R.˜.˜.L. “LÖŸ UÄ AĐ‘ E·[]Ÿ.

“LÖŸ UÄ

WÖUSÖR“W• UÖYyP• gZeLÛW R–²SÖ| ˜Í¦• ˜ÁÚ]¼\ LZL• U¼¿• ÙTÖ‰UeL· R–ZL E· ‰Û\ ÙNVXÖ[Ÿ, LÖY¥‰Û\ RÛXYŸ, UÖYyP ÚTÖ§Í s‘W| BfÚVÖ£eh AĐ‘ E·[ “LÖŸ UÄ«¥ i½›£TRÖY‰:-

gZeLÛW ÚT֧͌ÛX V†‡¥ ÙTN-CÁÍ ÙTePWÖL T‚“¡TYŸ Ù^VÚR«. CYŸ TÖÍÚTÖŸy «NÖWÛQ GÁ\ ÙTV¡¥ ˜Í¦• ÙTLÛ[ ÚTÖ§Í ŒÛXV†‡¼h YWLyPÖ VT|†‡ «NÖWÛQeh ¤. 300 XtN• ÙT¿YRÖL “LÖŸ i\TyP‰.C‰ ÙRÖPŸTÖL LP‹R YÖW• XtN J³“ ÚTÖ§NÖŸ Ù^VÚR« —‰ YZeh T‡° ÙNšR]Ÿ. B]Ö¥ AYŸ—‰ C‰YÛW G‹RSPYze ÛL• G|eLTP «¥ÛX. G]ÚY AYŸ —‰ ‰Û\ ¢‡VÖ] Rh‹RSP YzeÛL G|eL ÚY|•.

CªYÖ¿ A‡¥ i\Ty |·[‰.

Wednesday, September 2, 2009

ஊட்டியில் முஸ்லிம்கள் மீது காட்டுமிராண்டி தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் பேராசிரியர் எம் ஹெச் ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் அறிக்கை:

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இன்று வினாயகர் ஊரவலம் நடத்தியவர்கள் காந்தல் சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல் முதல் தொடங்கி ரகளையில் ஈடுபட்டு வந்துள்ளார்கள். ஊட்டி லோவர் பஜார் பள்ளிவாசல் அருகில் வரும் போது சிலைகளை பள்ளிவாசல் முன்பு வைத்து விட்டு ஊர்வலத்தில் வந்தவர்கள் ரகளை யில் ஈடுபட்டுள்ளார்கள். அப்போது காவல்துறையினர் அவர்களை லேசான தடியடி நடத்தி கலைத்துள்ளார்கள். சிதறி ஒடிய ஊர்வலத்தினர் அருகில் உள்ள மார்கெட் பகுதி மீது கல்லெறிந்து விட்டுச் சென்றுள்ளார்கள். இவ்வாறு ரகளையில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத ஊட்டி காவல்துறையினர் மார்க்கெட் பகுதிக்குள் புகுந்து அங்கிருந் தவர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர். ஒரு 70 வயது முதியவரும் தாக்கப்படுவதை கண்டு அந்த இடத்திற்கு வந்த தமுமுக மாவட்டத் தலைவர் அப்துல் ஸமது காவல் துணை கண்காணிப்பாளரிடம் அப்பாவிகளை தாக்கும் உங்கள் நடவடிக்கை நியாயமா என்று கேட்டுக் கொண்டிருந்த நிலையில் அவரும் காவல்துறையினரால் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டுள்ளார். அவர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். இதே போல் அங்கு வந்த மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஷேக்கும் பலமாக தாக்கப் பட்டு நினைவிழந்த நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 15க்கும் மேற்பட்ட அப்பாவி முஸ்லிம்கள் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வினாயகர் ஊர்வலத்தில் சென்றவர்கள் ரகளையில் ஈடுபட அதற்கு எவ்வகையிலும் தொடர் பில்லாதவர்கள் மீது காரணமின்றி ஊட்டி காவல்துறையினர் அராஜகத்தை கட்ட விழ்த்து விட்டுள்ளனர். இந்த அராஜகத் திற்கு காரணமாக இருந்த காவல்துறை அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை உடனடி யாக எடுக்கவும், காயமடைந்த மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கு மாறு தமிழக அரசை கோருகிறோம்.

சேரன்மகாதேவி அருகே தொழுகைக்கு வந்தவர்கள் மீது கல்வீச்சு




சேரன்மகாதேவி அருகே தொழுகைக்கு வந்தவர்கள் மீது கல்வீச்சு

சேரன்மகாதேவி: சேரன்மகாதேவி அருகே பள்ளிவாசலில் இரவில் தொழுகை முடிந்து வந்தவர்கள் மீது சிலர் கல்வீசி தாக்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சேரன்மகாதேவி அடுத்துள்ள உலகன்குளம் அருகே பள்ளிவாசல் உள்ளது. அங்கு நேற்றிரவு 11 மணிக்கு முஸ்லிம்கள் தொழுகை முடிந்து வெளியில் வந்தனர்.

அப்போது அவர்கள் மீது அங்கு மறைந்திருந்த சிலர் கல்வீசி தாக்கினர். இதில் இரு பெண்கள் உள்பட 5 பேர் காயமடைந்தனர். பள்ளிவாசல் முன்பியிருந்த டியூப் லைட்டுகள் கல்வீச்சில் சேதமடைந்தன. காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு நெல்லை எஸ்பி ஆஸ்ரா கர்க், சேரன்மகாதேவி டிஎஸ்பி அருண், இன்ஸ்பெக்டர் சங்கர், களக்காடு இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கம், ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

பதட்டம் நிலவியதைத் தொடர்ந்து அங்கு ஆயுதம் தாங்கிய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து சேரன்மகாதேவி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவாரூர் மாவட்ட தமுமுக தொண்டரணிச் செயலாளர் படுகொலை


படுகொலை செய்யப்பட்ட நூர் முகம்மது

சத்தியத்தை எடுத்துரைத்து அதை நிலைநாட்ட பாடுபட்ட தமுமுகவின் திருவாரூர் மாவட்டத் தொண்டரணிச் செயலாளர் நூர்முஹம்மது (வயது 32). சமுதாயத் துரோகி ஒருவனால் 29.8.2009 அன்று கூத்தாநல்லூரில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் திருவாரூர் மாவட்டத்தைப் பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. நோன்பு துறந்து, தொழுகை முடித்து களைப்புடன் வெளிவந்த நூர் முஹம்மதுவை வன்னெஞ்சம் கொண்ட அனஸ் மைதீன் (42) என்ற அயோக்கியன் அன்வரியா பள்ளிவாசலுக்கு அருகிலேயே வழிமறித்துக் கத்தியால் குத்திக் கொலை செய்திருக்கிறான்.

இவன் கொரடாச்சேரியை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஒரு ரவுடிக் கும்பலுக்கு கூத்தாநல்லூரில் ஏஜென்டாக இருப்பவன் என்றும், கூத்தா நல்லூரில் முஸ்லிம் சமுதாயத்தைக் காட்டிக் கொடுப்பது, இன்னும் சொல்லக் கூசும் இழிசெயல் களை இவன் செய்து வந்துள்ளான் என்றும் சொல்லப்படுகிறது.

இவனை நூர்முஹம்மது தட்டிக் கேட்டுள்ளார். அனஸ் மைதீனின் அருவறுக்கத் தக்க இழிசெயல்களை அன்வரியா பள்ளிவாசல் நிர்வாகத்தில் நூர்முஹம்மது ஆதாரங்களுடன் அம்பலப்படுத்திய தால், 29.8.09 அன்று மதியம் பள்ளிவாசல் நிர்வாகம், இந்தப் பாதகனை நிர்வாகக் குழுவில் இருந்து நீக்கியுள்ளது.

இதனால் வெறி தலைக்கேறிய குடிகாரன் அனஸ் மைதீன், புனிதமிகு ரமலான் மாதம் என்றும் பாராமல், பள்ளிவாசலில் நோன்பு துறந்து, தொழுது முடித்து, களைப்போடு வெளியே வந்த சமுதாயத் தொண்டர் நூர்முஹம்மதுவை கண்ணிமைக்கும் நேரத்தில் சரமாரியாகக் கத்தியால் குத்தி சரித்திருக்கிறான்.

நூர்முஹம்மது ஷஹீதான பின்னணி

பழம்பெரும் ஊரான கூத்தாநல்லூருக்குப் பல பெருமைகள் உண்டு. அதே நேரம் மார்க்கத்தை விட ஊர்ப் பெருமையும், குலப் பெருமையும்தான் பெரியது எனக் கருதுகிற, பண்ணை ஆதிக்கக் குணம் கொண்ட சிலரும் அந்த ஊரில் உண்டு. ஆதிக்க சக்தி கொண்ட இந்த பணக் காரர்கள் நூறாண்டு களுக்கும் மேலாக கூத்தாநல்லூரில் வசித்து வரும் பெரும் பான்மையான முஸ்­ம் குடும்பங்களை கூத்தாநல்லூர் வாசிகளாக அங்கீகரிக் காமல், வெளியூரி­ருந்து பிழைக்க வந்தவர்கள் என முத்திரைக் குத்தி, பள்ளிவாசல்களின் நிர்வாகப் பொறுப் பிற்கு வரவிடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறது.

(சமநிலை சமுதாயம் காணப் பாடு படுவதாகக் கூறி சென்னையில் பத்திரிகை நடத்தும் பெரியவர்கள் கூட இந்த அராஜகத்தை ஆசீர்வதித்து ஆதரிப்பவர்கள் என்பது வேதனை.)

பள்ளிவாசல்களுக்குத் தேர்தல் நடத்தினால், பாதிக்கப்பட்டவர்கள் சட்ட ரீதியாகத் தங்கள் உரிமைகளை நிலை நாட்டி விடுவார்கள் என்பதால், அங்கு தேர்தல்களையே நடத்தாமல் இழுத்தடித்து வந்தனர்.


சக முஸ்­ம்களுக்கு சில ஆதிக்க வாதிகள் இழைக்கின்ற கொடுமையை சகிக்காத சகோ. நூர்முஹம்மது, தனக் கிருக்கும் உரிமை, அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காகப் பாடு பட்டார். வக்ப் வாரியத்தில் தொடர்ச்சியாக முறையிட்டுத் தேர்தல்களை நடத்த வைத்தார். இதனால் ஆதிக்க சக்திகள் சில நூர்முஹம்மது மீது ஆத்திரத்தில் இருந்தன.

எடுபிடித் துறையின் கெடுதல்கள்

உறவினர்களுக்கு ஆறுதல் கூறும் தமுமுக தலைவர்

பள்ளிவாசல் நிர்வாகத்தில் கூத்தா நல்லூரில் குடியேறி பல ஆண்டுகளாக வாழ்ந்து வருபவர்களுக்கும் இடம் கொடுக்க வேண்டும் என்ற கருத்தில் இருந்த உள்ளூர் நல்லோர்களில் சிலரைத் தேர்த­ல் போட்டியிடாமல் தடுக்க, ஆதிக்கவாதிகள் சதி செய்தனர். உள்ளூர் காவல்துறைக் கருப்பாடுகளைப் பணத் தால் குளிப்பாட்டி, தங்களின் எடுபிடி களாக்கிக் கொண்டனர் இந்த எதேச்சதி காரர்கள். நல்லுள்ளம் படைத்த உள்ளூர் நபர்கள் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, உள்ளூர் காவல்துறை (குறிப்பாக அன்றைய ஆய்வாளர் அண்ணாதுரை), தேர்தலைக் கவிழ்த்தது. விசுவாசமான காவல்துறை வாலாட்டி ஜீவன்களின் உதவியோடு, விஷக் கருத்து கொண்ட அனஸ் மைதீன் வெற்றி பெற்றான்.


குடி, கும்மாளம், விபச்சாரம் எனக் கெட்டவைகளில் எந்த ஒன்றையும் விட்டு வைக்காத அனஸ் மைதீன், விபச்சாரம் செய்து பிடிபட்டபோது, பலரும் கெஞ்சியதால் தமுமுகவினர் விட்டுள்ளனர். மறுநாள் காவல்துறையில் தமுமுகவினர் மீது பொய்ப் புகார் கொடுத்துள்ளான் இந்தப் பொல்லாதவன்.

இவனது கெட்ட நடத்தைகளை சகோ. நூர்முஹம்மது, அன்வரியா பள்ளிவாசல் நிர்வாகத்தில் ஆதாரங்களுடன் அம்பலப் படுத்தியதால், செயலாளர் பொறுப்பி­ ருந்து 29.8.09 அன்று மதியம் விலக்கப் பட்டுள்ளான். அதேநாளில், இஃப் தாருக்குப் பிறகு, பள்ளிவாச­­ருந்து நிராயுதபாணியாய் வெளிவந்த சகோ. நூர்முஹம்மதுவைக் கொடூரமாகக் குத்தி படுகொலை செய்துள்ளான்.


கூத்தாநல்லூர் காவல்துறையின் கொடியச் செயல்கள்


மக்களைப் பாதுகாத்து சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய காவல்துறை கூத்தா நல்லூரில் சில பணக்காரர்களின் எடுபிடித் துறையாகவே கடந்த பல மாதங்களாக இருந்து வருகிறது. ஜெஹபர் அ­ உள்ளிட்ட துடிப்புமிகு தொண்டர்கள் மீது பொய் வழக்கு போட்டு தங்கள் எஜமானர்களைத் திருப்திபடுத்துவது உள்ளூர் காவல்துறையின் வாடிக்கை.

பின்வரும் கொடியவர்களால் தனது உயிருக்கு ஆபத்து உள்ளது என சகோ. நூர்முஹம்மது முதல்நாளே காவல் நிலையத்தில் புகார் கொடுத்து ரசீது பெற்றுள்ளார்.


தன்னைக் கொலை செய்ய முயற்சிப்பவர்கள் என நூர்முஹம்மதுவால் குறிப்பிடப்பட்டவர்கள்


அனஸ் மைதீன் (22வது வார்டு திமுக பிரதிநிதி)
முருகேசன் (22வது வார்டு திமுக செயலாளர்)
மஜீத் (8வது வார்டு திமுக செயலாளர்)
வேலு (மைய ஒருங்கிணைப்பாளர்)

இவர்கள் மீது உள்ளூர் காவல்துறை ஆரம்பத்தி­ருந்தே நடவடிக்கை எடுக்க வில்லை.

அனஸ் மைதீன் பெரிய பட்டாக் கத்தி களுடன் வந்துள்ளார். அவரது மோட் டார் சைக்கிளை சோதனையிடுங்கள் என்று காவல் நிலையத்தில் வைத்து சகோ. நூர்முஹம்மது கூறியபோது, அங்கிருந்த ஏட்டு, தற்காப்புக்காக ஆயுதம் வைத்திருப்பார், உன் வேலை யைப் பார் என்று உபதேசித்துள்ளார். உள்ளூர் காவல்துறை யின் ஒத்துழைப்பும், ஆதிக்க சக்திகளின் பின்னணியும், ஒரு கயவ னால், ஒரு சமுதாயத் தொண்டர் கொல்லப் படுவதற்கு காரணமாகி யுள்ளன என்றால் மிகையில்லை.

நூர்முஹம்மது போன்ற போராளிகள் தான் தமிழக முஸ்லிம் களின் உரிமைக் குரலாய் செயல்படுகிறார்கள். இவர்களை வெட்டிச் சாய்ப்ப தால் நீதியை புதைத்துவிட முடியாது.

நூர்முஹம்மது போன்றவர்கள் பல நூறு பேரை கூத்தாநல்லூரில் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். சத்தியத்திற்காகவும், பொதுமக்களின் குமுறல்களுக்காகவும் அவர்களின் போராட்டம் தொடர்ந்து கொண்டேயிருக்கும்.


சமுதாய நன்மைக்காகப் போராடி உயிர் துறந்திருக்கும் நூர்முஹம்மதுவுக் காக இறைவனிடம் பிரார்த்திப்போம்!

கூத்தாநல்லூரில் சகோ. நூர்முஹம்மது படுகொலை செய்யப்பட்ட செய்தியை ம.ம.க. மாவட்டச் செயலாளர் முஜிபுர் ரஹ்மான், தமுமுக திருவாரூர் மாவட்ட பொறுப்பாளரான மாநிலச் செயலாளர் ஹாஜாகனியிடம் தெரிவிக்க, ம.ம.க. துணைப் பொதுச் செயலாளர் அன்சாரி மற்றும் தலைவருடன் ஆலோசனை செயயப்பட்டு, உடனடியாக அன்சாரி மற்றும் ஹாஜாகனி கூத்தாநல்லூர் புறப்பட்டனர். ஜனாஸாவில் தலைவர் கலந்து கொள்வதாக முடிவெடுக்கப்பட் டது. அன்று இரவே தகவலறிந்து மாநிலம் முழுவதுமுள்ள தமுமுகவினர் கொந் தளிக்க, வெளிநாடு வாழ் சகோதரர்களும் தொடர்ந்து தொடர்பு கொண்டனர்.


தமுமுக, ம.ம.க. திருவாரூர் மாவட்ட நிர்வாகிகளான முஜிபுர் ரஹ்மான் நாச்சிக்குளம் தாஜூதீன், குத்புதீன், அலீம், சாகுல் ஹமீது உள்ளிட்டோர் சம்பவத் தன்று இரவே கூத்தாநல்லூரில் முகாமிட்ட னர். திருவாரூர், நாகை வடக்கு, நாகை தெற்கு, தஞ்சை வடக்கு, தஞ்சை தெற்கு, காரைக்கால், புதுக்கோட்டை, ராமநாதபுரம் என பல்வேறு பகுதிகளி­ருந்தும், தமுமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் கூத்தாநல்லூரில் முகாமிட்டனர்.

கூத்தாநல்லூருக்கு விரைந்து வந்த ம.ம.க. துணை பொதுச் செயலாளர் அன்சாரி, தமுமுக மாநிலச் செயலாளர்கள் பேரா. ஹாஜாகனி, கோவை சாதிக், மாணவரணி பொருளாளர் மாயவரம் அமீன், ஷாஜஹான் ஆகியோர் கொந் தளிப்போடு குழுமியிருந்த தொண்டர் களை அமைதிப்படுத்தினர்.


பின்னர் மாவட்ட காவல்துறை துணைக் கண்காணிப்பாளர்கள், மாநில நிர்வாகிகளை சந்தித்து, எடுக்கப்பட்ட நடவடிக் கைகளைக் கூறினர்.


கொலையாளியைப் பிடித்து விட்தாகக் காவல் அதிகாரிகள் கூறிய பின் மாவட்டத் தலைவர் தாஜுதீன் மற்றும் நகரத் தலைவர் நைனார் உள்ளிட் டோர் சென்று குற்றவாளி காவல் நிலையத்தில் அடைபட்டிருப்பதை நேரில் பார்த்து உறுதி செய்தனர்.


மீதி குற்றவாளிகளை இரவுக்குள் பிடித்து விடுவதாக துணை கண்காணிப்பாளர்கள் துரைராஜ் மற்றும் ராமன் உறுதியளித்தனர்.

பின்னர் மாவட்டக் காவதுறை கண்காணிப்பாளர் பிரவீண்குமார் அபினபு விடம் தமுமுக மாநில நிர்வாகிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். குற்றவாளியைக் கண்டிப்பாக கைது செய்வோம், எந்த அழுத்தத்திற்கும் பணியாமல் குற்றவாளிக்கு தண்டனைப் பெற்றுத் தருவோம் என கண்காணிப்பாளர் உறுதியளித்தார்.

முத்துப்பேட்டை விநாயகர் சிலை ஊர்வலப் பிரச்சினையில் காவல்துறை நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என நிர்வாகிகள் வ­யுறுத்தினர். காவல்துறை உயரதிகாரிகளிடம் உரிய உறுதிமொழிகளைப் பெற்ற பிறகு, மாநிலத் தலைவருக்கு விவரம் தெரிவிக்கப்பட்டது. பின்னர் போலீசாரின் வேண்டுகோளை ஏற்று பிரேத பரிசோதனைக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

சகோ. நூர்முஹம்மதுவின் உடலை மன்னார்குடி அரசு மருத்துவமனையிலிருந்து பெற்று வருவதற்காக மாநிலச் செயலாளர் பேரா. ஹாஜாகனி, கோவை சாதிக், மாணவரணி பொருளாளர் மாயவரம் அமீன், அச்சிறுப்பாக்கம் ஷாஜஹான் ஆகியோர் சென்றனர்.

லெட்சுமாங்குடி பாலத்திலிருந்து ஆம்புலன்ஸில் உடல், பேரணியாக வீடுவரை சுமார் 3 கி.மீ. தூரம் எடுத்துச் செல்லப்பட்டது.

அந்தப் பேரணியில் பல்லாயிரக்கணக் கானோர் திரண்டு வந்து பங்கேற்றனர். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், நோன்பு நோற்றவர்களாக மக்கள் நடந்து வந்ததில் கூத்தாநல்லூரே குலுங்கியது.

ஜனாஸாவைப் பார்வையிட தமுமுக தலைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வருவதை முன்னிட்டு பெருமளவில் போலீஸ் குவிக்கப்பட்டது. ஜனாஸாவைப் பார்வையிட்ட பேராசியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், குடும்பத்தினருக்கும் கழகத் தொண்டர்களுக்கும் ஆறுதல் கூறினார். மாநிலச் செயலாளர் கடலூர் எஸ்.எம்.ஜின்னா மற்றும் கடலூர் மாவட்ட நிர்வாகிகளும் ஜனாஸாவைப் பார்வையிட வந்தனர்.

குவைத்திலிருந்து நூர்முஹம்மதுவின் தந்தையார் வருவதை முன்னிட்டு, நல்லடக்கம் இரவு 8 மணிக்கு என முடிவு செய்யப்பட்டது.

இஃப்தார் நேரத்தின் போது கூத்தா நல்லூர் பள்ளிவாசல்கள் நிரம்பி வழிந்தன. நகரமெங்கும் பல்வேறு பகுதியைச் சேர்ந்த தமுமுக தொண்டர்கள் திரண்டிருந்தனர்.


தமுமுக சார்பில் கூத்தாநல்லூரில் எழுச்சிமிகு நிகழ்ச்சியை நடத்த ஆசைப் பட்டார் சகோ. நூர்முஹம்மது, கூத்தா நல்லூர் குலுங்குமளவுக்கு. அவர் ஆசைப் பட்ட படி தொண்டர்கள் வந்து குவிந்த போது, சகோ. நூர்முஹம்மது உயிருடன் இல்லை என்பது நெஞ்சை நெகிழ வைத்தது.

7.45 மணியளவில் பல்லாயிரம் பேர் கண்கலங்க, சகோ. நூர்முஹம்மதுவின் உடல் கூத்தாநல்லூர் பெரிய பள்ளிவாசலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, தொழுகை நடத்தப் பட்டு, முஃமின்களின் பூங்காவில் அடக்கம் செய்யப்பட்டது.

நல்லடக்கத்திற்குப் பிறகு நடந்த இரங்கல் கூட்டத்தில் ஆயிரக்கணக் கானோர் பங்கேற்றனர். தாஜுதீன் தலைமையேற்க, தமிமுல் அன்சாரி, பேரா. ஹாஜாகனி உணர்ச்சிகரமாக இரங்கலுரை ஆற்றினர்.


சகோ. நூர்முஹம்மதை அடக்கம் செய்ததோடு, உள்ளூர்வாசி வெளியூர்வாசி போன்ற மார்க்க விரோத பேதங்களை குழிதோண்டி புதையுங்கள் என்று உருக் கமான வேண்டுகோள் விடுத்தனர். ஊர் இளைஞர்கள் பேரெழுச்சியுடன் இதை வரவேற்றனர். இன்ஷாஅல்லாஹ் எதிர் காலம் ஒளிபெற, நூர்முஹம்மதுவின் தியாகம் வழிகோலட்டுமாக.

வேடிக்கைப் பார்த்த வேதனை
பள்ளிவாச­ல் இருந்த சிலர் கொஞ்சம் கூட மனிதாபிமானமில்லாமல் நூர்முஹம்மதுவைப் பார்த்து, நீங்க வெளியே போயிருங்க என்று கூறி தாங்கள் தப்பித்தால் போதும் என்ற போக்கில் செயல்பட்டுள்ளனர்.
இது குடிபோதையில் இருந்த அனஸுக்கு வசதியாகப் போய்விட்டது. வெளியே வந்த நூர்முஹம்மதுவை கண் இமைக்கும் நேரத்தில் அனஸ் கத்தியால் சரமாரியாக குத்த, நிலைகுலைந்து கீழே விழுந்திருக்கிறார் நூர்முஹம்மது.
அப்பகுதி பெண்கள் அலறி பக்கத்தில் பள்ளிவாச­ல் நின்றவர்களை அழைக்க, அந்த ஆண்கள் சிறிதும் இரக்கமின்றி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்கள்.
அவர்கள் தடுத்திருந்தால் நூர்முஹம்மதுவை நூ­ழையில் காப்பாற்றி இருந்திருக்கலாம். அப்படிச் செய்யவில்லை. ரத்த வெள்ளத்தில் துடித்த அந்தப் போராளி மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே உயிர் துறந்தார். தீமைக்கு எதிராகப் போராடியதால், நூர்முஹம்மது ஷஹீதாக்கப்பட்டார்.

படுகொலை செய்யப்பட்ட நூர்முஹம்மது முகவரி

எஸ்.எச். அப்துல் சலாம் (தந்தை),
33, அன்வரியா தெரு,
கூத்தாநல்லூர் 614 107.

Tuesday, September 1, 2009

த.மு.மு.க. நிர்வாகி குத்திக் கொலை




த.மு.மு.க. நிர்வாகி குத்திக் கொலை:
கூத்தாநல்லூரில் கடைகள் அடைப்பு, போலீஸ் குவிப்பு, தி.மு.க. பிரமுகர் சரண் அடைந்தார்



கூத்தாநல்லூர், ஆக.31-

கூத்தாநல்லூரில் த.மு.மு.க. நிர்வாகியை கத்தியால் குத்தி கொலை செய்த தி.மு.க. பிரமுகர் போலீசில் சரண் அடைந்தார். இதனால் கடைகள் அடைக்கப்பட்டதால் அங்கு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.

த.மு.மு.க. நிர்வாகி கொலை

கூத்தாநல்லூர் அன்வாரியா தெருவைச் சேர்ந்தவர் நூர்முகம்மது (வயது 32). தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழக மாவட்ட தொண்டரணிச் செயலாளர். அதே தெருவைச் சேர்ந்தவர் அனஸ்மைதீன் (வயது 32). தி.மு.க. 22-வது வார்டு பிரதிநிதி. இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் மாலை கூத்தாநல்லூர் அன்வாரியாதெரு பள்ளிவாசல் அருகே இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு இருவரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இதில் அனஸ்மைதீன், நூர்முகமதுவை ஓடஓட விரட்டி கத்தியால் குத்தியதாக தெரிகிறது. இதில் படுகாயம் அடைந்த நூர்முகம்மது மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நூர்முகம்மது பரிதாபமாக இறந்தார்.

தி.மு.க. பிரமுகர் சரண்

இந்த சம்பவம் குறித்து கூத்தாநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் என்.நடராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இதற்கிடையே அனஸ்மைதீன் நேற்று காலை கொரடாச்சேரி போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே த.மு.மு.க. நிர்வாகி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து நேற்று கூத்தாநல்லூர், லெட்சுமாங்குடி பகுதியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் கூத்தாநல்லூரே வெறிச்சோடி காணப்பட்டது. தகவல் அறிந்த போலீஸ் துணை சூப்பிரண்டு சீனிவாசன் தலைமையில், கூத்தாநல்லூர் இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் ஆயுதம் தாங்கிய போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். முக்கிய இடங்களில் போலீசார் ரோந்து சுற்றி வருகிறார்கள்.

கொலை செய்யப்பட்ட நூர்முகம்மதுவின் உடல் மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாநிலத்தலைவர் ஜெகபருல்லா, மாநிலச்செயலாளர் காஜாகனி, கோவை சாதிக், மாநில துணைச்செயலாளர் கடலூர் ஜின்னா, மாநில பொதுச் செயலாளர் தமீம்அன்சாரி உள்பட ஏராளமானவர்கள் அஞ்சலி செலுத்தினர்.