Thursday, April 29, 2010

மனிதநேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் பி. அப்துல் சமது வெளியிடும் அறிக்கை:

மனிதநேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் பி. அப்துல் சமது வெளியிடும் அறிக்கை:

இந்தியாவின் மிக முக்கிய பிரச்சனையாக மக்களை வாட்டியெடுக்கும் விலைவாசி உயர்வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நாடு தழுவிய அளவில் முன்னெடுக்கும் முழு அடைப்பு போராட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி தனது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது.தவறான பொருளாதார கொள்கைகளாலும், யூகபேர வணிகத்தாலும்தான் விலைவாசி தாறுமாறாக உயர்ந்திருக்கிறது என்பதை மக்களுக்கு எடுத்துக்கூறவும், ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கவும் இந்தப் போராட்டம் தேவைப்படுகிறது.

எனவே எதிர்வரும் 27.04.2010 அன்று நடைபெறவிருக்கும் முழு அடைப்பு போராட்டத்திற்கு பொதுமக்களின் நலனைக் கருதி அனைவரும் ஆதரவு தரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்

Wednesday, April 28, 2010

அரசியல் சதி நடக்கிறது! குணங்குடி ஹனீபா மகன் மக்கள் உரிமைக்கு சிறப்பு பேட்டி



குணங்குடி ஹனீபா அவர்களின் மூத்த மகன்முகைதீன் துபையில் பணி புரிகிறார். தந்தை சிறையில் இருக்கும் போது குடும்பத்தை சிரமங்களிலிருந்து ஓரளவாவது மீட்டு வழி நடத்தியதில் இவரது பங்கு முக்கியமானது. அவரிடம் மக்கள் உரிமைக்காக மின்அஞ்சலில் கேள்விகளை அனுப்பி இருந்தோம். அவரது பதிலை சமுதாயத்தின் சிந்தனைக்கு விட்டுவிடுகிறோம




கேள்வி : தீர்ப்பு தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஏப்ரல் 23 அன்று தீர்ப்பு தள்ளிப்போயிருப்பது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

பதில் : எங்களது குடும்பத் தார்களும், சமுதாய மக்களும் எனது தந்தையின் வழக்கில் இறுதித் தீர்ப்பு வரும் என்று எதிர்பபார்க்கப்பட்ட ஏப்ரல் 23 மீண்டும் தள்ளிப்போயிருப்பது என்பது சாதாரண விஷயமாக எடுத்துக்கொள்ள முடியாது. இதில் நிச்சயமாக கலைஞர் கருணாநிதி அவர்களின் தலைமையில் செயல்படும் திமுக அரசின் சதி இருப்பதாகவே நாங்கள் கருதுகிறோம். கடந்த பல மாதங்களுக்கு முன்பு உயர்நீதிமன்றத்தில் பிணை தாக்கல் (ஜாமினில் விடுதலை செய்ய) செய்த போது, தமிழக அரசு பிணை கொடுக்க மறுத்து, இரண்டு மாதத்தில் வழக்கை முடித்து விடுவோம் என்றார்கள். ஆக வழக்கு முழுவதுமாக நடத்தப்பட்டு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த தருவாயில்தான் தீர்ப்பை இழுத்தடித்து வருகின்றனர். இன்னும் சொல்லப்போனால் எனது தந்தைக்கு எதிராக இந்த வழக்கிலிருந்த சாட்சிகள் அனைவரும் பிறழ் சாட்சியாக மாறி உள்ளார்கள். எனவே விடுதலை நிச்சயம், நியாயமான தீர்ப்பு வரும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் தான் தீர்ப்பு தொடர்ந்து தள்ளி வைக்கப்பட்டு வருகிறது. கருணாநிதி அவர்கள் யாரையோ திருப்திபடுத்துவதற்காக வழக்கை இழுத்தடிக்கிறார் என்று கருதத் தோன்றுகிறது. இந்தியாவை அச்சுறுத்தும் சங்பரிவார கூட்டத்தாருடன் மீண்டும் கைகோர்க்க கிளம்பி விட்டார் என்று கருதத்தோன்றுகிறது. மதுரை லீலாவதி வழக்கில் கைது செய்யப்பட்டு தண்டனை பெற்றிருந்த தனது கட்சிக்காரர்களை விடுதலை செய்வதற்காக சில ஆண்டுகளுக்கு முன்பாக அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு 1400 கைதிகளை விடுதலை செய்தார் ஆனால் கடந்த ஆண்டு முஸ்லிம் இயக்கங்களின் சார்பாக கடுமையாக வலியுறுத்தியதின் காரணமாக கோவை வழக்கில் தண்டனை காலம் முடிந்து விடுதலை அடைய இருந்த பத்து முஸ்லிம்களை மட்டுமே விடுதலை செய்து ஏமாற்றம் அளித்தார் கருணாநிதி. ஆக மனுநீதிச் சோழன் என்றும், முஸ்லிம்களின் நண்பன் என்றும் தன்னைத்தானே அடையாளப்படுத்திக் கொண்டு நீதிமன்றத்தின் பரிபாலனத்தை எப்படியும் பயன்படுத்துவார் கருணாநிதி என்பது விளங்குகிறது.

கேள்வி : தங்களின் தந்தையின் கைதிற்கு பிறகு உங்கள் குடும்பத்தின் நிலை என்ன?

பதில் : 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி 15&ஆம் நாள் எனது சகோதரியின் திருமணத்தின் போது எனது தந்தை கைது செய்யப்பட்டார் என்பது அனை வரும் அறிந்ததே. அதன்பிறகு ஒரு சில வாரங்களில் நானும் எனது சகோதரரும் விசாரணை கைதியாக போலிசாரால் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டோம். அல்லாஹ்வின் மாபெரும் உதவியைக் கொண்டு ஒருசில மாதங்களில் விடுதலை செய்யப் பட்டோம். இந்த காலகட்டங்களில் எனது தாயார் மிகுந்த மன வேதனைக்கு ஆளானார்கள். உழைத்து சம்பாதித்து ஊதியத் தை ஈட்டித்தர வேண்டிய பிள்ளைகளும் தனது கணவரும் கைது செய்யப்பட்டால் ஒரு குடும்பத்தில் எப்படிப்பட்ட சூழ்நிலைகள் நிகழும் என்பதை ஒவ்வொருவரும் சற்று நினைத்துப்பார்த்தாலே எளிதில் விளங்கிக்கொள்ளலாம். ஆக வறுமையில் இருந்த எங்களின் குடும்பத்திற்காக வறுமையை போக்க விடுதலை அடைந்த நானும் எனது சகோதரரும் சென்னை மணலியில் உள்ள சிறிலி (விஸிலி) தொழிற்சாலையில் பல வருடங்களாக ஒப்பந்த ஊழியர்களாக கூலி வேலை செய்கின்ற தருவாயில், அல்லாஹ்வின் மாபெரும் உதவியைக்கொண்டு வளைகுடா த.மு.மு.க&வின் முன்னாள் அமைப்பாளராக இருந்த சகோதரர் மேலப்பாளையம் ஃபழ்லுல் இலாஹி அவர்களின் மூலமாக வளைகுடாச் சென்று பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. ஆனாலும் கூட இன்னும் நாங்களும் எனது தாயாரும் எனது தந்தையுடைய பெற்றோர்களும் மனவேதனை யோடுதான் எனது தந்தையின் விடுதலையை எதிபார்த்துக் கொண்டிருக்கிறோம். அல்லாஹ் எங்களுக்கு நியாயத்தை பெற்றுத்தருவான் என்ற நம்பிக்கையில் உறுதியாக இருக்கிறோம்.

கேள்வி : சமுதாய மக்களுக்கு தாங்கள் கூற விரும்புவது என்ன?

பதில் : நீதி சாரியான தருவாயில் கூறாமல் எனது தந்தையின் வழக்கில் சதிச் செயலின் மூலமாக தாமதப்படுத்தி, நீதிபதிகளையும்கூட தமிழக அரசு மாற்றி வருகிறது. எனவே தமிழக அரசு தற்போது எந்த சிந்தனையில் உள்ளது என்பதை தமிழக முஸ்லிம்கள் நன்கு விளங்கிக்கொள்ள வேண்டும். பா.ம.க முதல் பொருளாளர், த.மு.மு.க நிறுவனத் தலைவர், ஜிஹாத் கமிட்டியின் தலைவர், எம்.ஜி.ஆர், கருணாநிதி போன்ற அரசியல்கட்சி தலைவர்களோடு பல கூட்டங்களில் பேசியவர் போன்ற நிகழ்வுகளை பெற்றிருக்கின்ற எனது தந்தைக்கே நீதி மறுக்கப்படுகிறதென்றால் சமுதாயத்தின் அடித்தட்டு மக்களுக்கு எந்த அளவு நீதி மறுக்கப்பட்டு மோசடி நடந்து வருகிறது என்பதை விளங்கிக் கொள்ளலாம். எனவே நமது சமுதாய மக்கள் முழுமையான விழிப்புணர்வு பெற வேண்டும். சமுதாய மக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு கல்வி அறிவை புகட்டுவதோடு மட்டுமல்லாமல் மார்க்க அறிவையும் சேர்த்து கற்றுத் தர வேண்டும். சமுதாயத்தின் அக்கரையுள்ள பிள்ளைகளாக வளர்க்க வேண்டும். எங்களைப் போன்று சமுதாயத்தில் பாதிக்கப்படக்கூடிய மக்களுக் காக வாதாடுவதற்கு ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு வழக்கறிஞரை தன்னார்வு உணர்வுடன் செயல்படும் வண்ணம் உருவாக்கப்பட வேண்டும். எனது தந்தையின் விடுதலைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் த.மு.மு.க&வின் பணிகளுக்காக சமுதாய மக்களும், ஜமாத்தார்களும் முழு ஒத்துழைப்புத் தர வேண்டும். சமுதாய இயக்கங்கள் இது போன்ற பொதுப் பிரச்சினைக்களுக்காக ஓரணியில் திரண்டு போராட வேண்டும் என்பதுதான் சமுதாய மக்களுக்கும், சமுதாய இயக்கங்களுக்கும் நாங்கள் அன்போடு விடுக்கும் கோரிக்கையாகும்!.

Tuesday, April 27, 2010

(29-APRAIL-2010) இரவு 9.45 மணியளவில் நமது ஷார்ஜா முமுகவில்

இன்ஷா அல்லாஹ் (29-APRAIL-2010) இரவு 9.45 மணியளவில் நமது ஷார்ஜா
முமுகவில் சகோதரர்: ஹுசைன் பாஷா அவர்கள்
சிறப்புரையாற்றயிருக்கின்றார்கள். அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு
அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

Monday, April 26, 2010

தமுமுக மாநில தலைவர் பேராசிரியர் டாக்டர் எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ் ராமநாதபுரம் பேட்டி



WÖUSÖR“W•,H�.26-

LXÖoNÖW qW³ÛY H¼ T|†‰• I.‘.G¥. f¡e ÙLy ÚTÖyzLÛ[ U† ‡V AWr RÛP ÙNšV ÚY�|• GÁ¿ R.˜. ˜.L. UÖŒX RÛXYŸ ÙR¡«†RÖŸ.

ÚTyz

R–²SÖ| ˜Í¦• ˜Á Ú]¼\ LZL†‡Á UÖŒX RÛXYŸ PÖePŸ.^YÖ £¥XÖ WÖUSÖR“W†‡¥ Œ£ TŸLºeh ÚTyz A¸† RÖŸ. A�ÚTÖ‰ AYŸ i½ VRÖY‰:- SÖÛ[ G‡ŸeLy pL· NÖŸ‘¥ SÛPÙT\ E·[ SÖ| Rµ«V ÚYÛX Œ¿†R†‡¼h R.˜.˜.L. U¼ ¿• UÂR ÚSV UeL· Lyp ˜µ BRW° R£•. R.˜. ˜.L. Œ¿Y]ŸL¸¥ J£Y WÖ] hQjhz aÃTÖ —‰ zN•TŸ 6-‹ÚR‡ ÙW›¥ h�| ÙYz�“ N•TY†‡¥ ÙRÖPŸ“T|†‡ pÛ\›¥ AÛPeL�Ty| E·[ÖŸ.

A‹R YZeh «NÖWÛQ ˜zYÛP‹‰• 12 B�|L [ÖL pÛ\›¥ C£‹‰ «| «eL�TPÖU¥ E·[ÖŸ. AYŸ —RÖ] YZeÛL EPÚ] ˜z†‰ ˆŸ�“ YZjL ÚY�|•. CÛR Y¦�¿†‡ ÚU 5-‹ÚR‡ ÙNÁÛ] ‰Û\˜L†‡¥ C£‹‰ IÚLÖŸy| ÚSÖef R.˜.˜.L. NÖŸ‘¥ ÚTW‚ SÛPÙT¿•.

f¡eÙLy

I.‘.G¥. f¡eÙLyz¥ FZ¥ ÙYz†‰·[‰. NpR¤Ÿ WÖÈ]ÖUÖ L� ‰ÛP�“ RÖÁ. –L�ÙT¡V A[«¥ ÚUÖNz SP‹‰· [‰. ÙPÍy, J£SÖ·, 20 KYŸ G] f¡eÙLy ÚTÖyz LÛ[ UÖ¼½]ÖŸL·. C� ÚTÖ‰ ÙT�L· AÛWhÛ\ BÛP�PÁ BPeizV LXÖoNÖW qW³YÖL UÖ¼½ «yPÖŸL·. ÙT¡V A[«¥ sRÖyPjL· SPef\‰. EP]zVÖL I.‘.G¥. ÚTÖy zLÛ[ U†‡V AWr RÛP ÙNšV ÚY�|•. ‘.p.p.I. AÛU�ÛT AWrPÛU VÖef ÚLÖzeLQeLÖ] Œ‡ÛV HÛZ «YNÖ›Lºeh TVÁ T|†R ÚY�|•.

R–ZL†‡¥ UÂR ÚSVUe L· Lyp›Á NÖŸ‘¥ ”WQ U‰ «XeÛL AU¥T|†R ÚLÖ¡ ÚTÖWÖyPjL·, ‘W NÖWjL· ÙNš‰ Y£f Ú\Ö•. U‰eLÛP ÚSW†ÛR AWr Tz�TzVÖL hÛ\�TRÖL A½«†R‰. B]Ö¥ SLŸ Th‡L¸¥ 24 U‚ ÚSW˜• U‰eLÛP TÖŸL· CVjf Y£fÁ\]. ‡.˜.L. AWr TX SX†‡yPjLÛ[ ŒÛ\ ÚY¼½ Y£f\‰. AWpÁ pX ÙLÖ·ÛLL· G‡ŸLÖX†‡¥ TXÁ R£UÖ GÁT‰ ÚL· «eh½VÖL E·[‰. HWÖ[ UÖ] «Û[ŒXjL· Lyz PjL[ÖL UÖ¿• ŒÛX E·[‰. CR¼h Ly|�TÖ| «‡eL ÚY�|•.

–ÁRÛP

AWr ER« ÙT¿• T·¸ Lºeh ÚU¼ÙLÖ�| AWr Œ‡ÛV A‡L¡eL iPÖ‰ GÁ¿ 1991¥ A�ÚTÖÛRV ˜R¥YŸ A½«†RÖŸ. A‹R E†RWÛY C‰YÛW R[Ÿ† RÖU¥ AWr ‘ÁT¼½ Y£ f\‰. CR]Ö¥ AWr ER« ÙT¿• RÂVÖŸ T·¸e iPjL¸¥ i|RXÖL Yh� TÛ\L· LyPÚYÖ, Bp¡VŸ LÛ[ ŒV–eLÚYÖ ˜zVÖ U¥ UÖQYŸL· TÖ‡eL� Ty| Y£f\ÖŸL·.

TÁ]Öy| ÙRÖ³¼NÖÛX Lºeh RÛP›Á½ –ÁNÖW• YZjhYRÖ¥ NÖRÖWQ Ue L· –ÁÙYyPÖ¥ AY‡� T|f\ÖŸL·. TÍ LyPQj L· UÛ\˜LUÖL EVŸ†R� Ty| E·[‰. C‹R hÛ\ LÛ[ AWr ŒYŸ†‡ ÙNšV ÚY�|•. ‘WTÖLWÂÁ RÖVÖŸ TÖŸY‡ A•UÖ· ‡£�‘ AÄ�T�TyP‰ UÂR ÚSV†‰eh «ÚWÖR UÖ]‰. AYÛW R–ZL AWÚN —�|• YWYÛZ†‰ AWr ÙNX«¥ AY£eh U£†‰Y pfoÛN A¸eL ÚY�|•.

CªYÖ¿ AYŸ i½]ÖŸ. A�ÚTÖ‰ UÖYyP UÂR ÚSV UeL· Lyp ÙNVXÖ[Ÿ N¦˜¥XÖLÖÁ, R.˜.˜.L. UÖYyP RÛXYŸ NÖ‡e TÖycÖ, UÖYyP ÙNVXÖ [Ÿ RÍ’e A¦ U¼¿• ŒŸ YÖfL· EP£‹R]Ÿ.


கீழக்கரை தமுமுக சார்பாக நடத்த தர்பிய நிகிழ்ச்சி



கீழக்கரை தமுமுக சார்பாக நடத்த தர்பியவில் கீழக்கரை நகர் ஹசன் நிகிழ்ச்சிஐ துவைன்கீனர் மாவட்ட செயலாளர் தஸ்பீக் அலி தலைமை தாக்கினர். மாநில செயலாளர் கோவை சையது அவர்கள் இந்திய முஸ்லிம் களின் நீலை படு என்ன என்று கூறினர், பின்னர் தமுமுக தலைவர் பேராசிரியர் டாக்டர் எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் தமுமுக பனி என்ன தமுமுக என்றால் என்ன என்று சிறப்புரை ஆற்றினர் கீழக்கரை நகர் ஹசன் நிகிழ்ச்சிஐ துவைன்கீனர்.மற்றும் தமுமுக மாவட்ட தலைவர் சாதிக் பாஷா,மனித நேய மக்கள் கட்சியின் இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் சலிமுல்லாஹ்கான் மற்றும் கீழக்கரை நகர் தமுமுக நிர்வாகி முஜீப் ரகுமான், முஸ்தகீன் ஜெய்னுல்ஆப்தீன், யாசின், ராஜா ஹுசைன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் கீழக்கரை பொது மக்கள் 100 மேற்பட்டோர் கலந்து கொண்டவர்கள்.

தொண்டியில் தண்ணீர் பந்தல்

குளச்சல் பள்ளிவாசல் சம்பவம் CBCID விசாரணை நடத்த தமுமுக கோரிக்கை

Saturday, April 24, 2010

குணங்குடி அனிபா வழக்கில் தாமதமாகும் தீர்ப்பை கண்டித்து தமுமுக கண்டன பேரணி


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர்
எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் அறிக்கை




தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர்களில் ஒருவரும், பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் பொருளாளருமான குணங்குடி ஆர்.எம். அனிபா அவர்கள் மீது பல்வேறு பொய் வழக்குகள் புனையப்பட்டு அவர் கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடி வருகிறார். அவர் மீது போடப்பட்ட பல வழக்குகளில் அவர் விடுதலைப் பெற்றிருந்தாலும் ஒரேயொரு வழக்கு மட்டும் இன்னும் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கிலும் இவருக்கு எதிராக காவல்துறையினர் நிறுத்திய இரண்டு சாட்சிகளும் பிறழ் சாட்சியங்கள் அளித்துள்ளனர். இந்த வழக்கு விசாரணை முழுவதுமாக நிறைவடைந்து பல மாதங்களாகிய பிறகும் எவ்வித காரணமுமின்றி பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்காமல் காலதாமதம் செய்து வருகின்றது. பின்னர் ஒரு வழியாக தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட்ட பின்னரும் தீர்ப்பு அளிக்கப்படாமல் மீண்டும் சாட்சிகள் விசாரணை என்ற கேலிக் கூத்து நடை பெற்றுள்ளது. தொடர்ந்து தீர்ப்பு தேதி அளிக்காமல் நீதிபதியை மாற்றும் வேலையும் நடந்து வருகிறது. இவ்வழக்கில் இதுவரை 7 நிதிபதிகள் மாற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற செயல்பாடுகள் இவ்வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டு யாரும் விடுதலையாகி விடக்கூடாது என்பதில் சிறப்புக் கவனம் செலுத்தப் படுகிறதோ என்ற கருத்து மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.

குணங்குடி அனிபாவிற்கு பிணையும் மறுக்கப்பட்டு வருகின்றது. நீண்ட சிறைவாசத்தின் காரணமாகவும், முதுமையின் காரணமாகவும் குணங்குடி அனிபா அவர்கள் பல்வேறு நோய்களுக்கு இலக்காகி மிகவும் பலவீனமான நிலையில் உள்ளார்.

தாமதப்படுத்தப்படும் நீதி மறுக்கப்படும் நீதியாகவும் கொடூரமான மனிதஉரிமை மீறலாகவும் உள்ளது. இந்த அநீதியை கண்டித்தும், உடனடியாக குணங்குடி அனிபா தொடர்புடைய வழக்குகளில் தீர்ப்பு வழங்க வலியுறுத்தியும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக வரும் மே 5ம் தேதி சென்னை உயர்நீதி மன்றம் நோக்கி கண்டன பேரணி நடைபெறவுள்ளது. இந்த கண்டன பேரணியில் மனித உரிமை ஆர்வலர்கள் ஆயிரக்கணக்கில் பங்குக் கொள்வார்கள்.

Thursday, April 22, 2010

நமது துபை தமுமுக வின் இரத்ததான முகாம்

21/04/2010 அன்று நடத்த மாவட்ட மற்றும் நகர் நிர்வாகிலுடன் மசுர கீழக்கரையில் நடைபெற்றது

21/04/2010 இன்று கீழக்கரை தமுமுக ஆபீஸ்ல வைத்து நடத்த கூட்டதில வரும் 25/04/2010 அன்று தமுமுக தலைவர் பேராசிரியர் டாக்டர் எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ்
வருவதை ஓடித் நிகிழ்ச்சி நிடல் முடிவு செய்யபட்டது. இந்த கூட்டத்துக்கு மனித நேய மக்கள் கட்சியின் இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் சலிமுல்லாஹ்கான் மற்றும் தமுமுக மாவட்ட தலைவர் சாதிக் பாஷா, மாவட்ட செயலாளர் தஸ்பீக் அலி தலைமை தாக்கினர். கீழக்கரை நகர் தமுமுக நிர்வாகி முஜீப் ரகுமான், முஸ்தகீன் ஜெய்னுல்ஆப்தீன், யாசின், ராஜா ஹுசைன் ஆகியோர் கலந்து கொண்டவர்கள்.

Tuesday, April 20, 2010

முஸ்லிம்களுக்கு உடனே இடஒதுக்கீடு வழங்கக்கோரி புதுச்சேரியில் மனிதநேய மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்


E-mailPrintPDF

புதுச்சேரி மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்காமல் காலதாமதப்படுத்தும் புதுச்சேரி மாநில அரசைக் கண்டித்து புதுவை மாநில மனிதநேய மக்கள் கட்சி சார்பாக இன்று புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுச்சேரி மறைமலை அடிகள் சாலையில் சுதேசி மில் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ம.ம.க. புதுச்சேரி மாவட்டச் செயலாளர் அஷ்ரப் தலைமை தாங்கினார்.

புதுச்சேரி மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்காமல் காலதாமதப்படுத்தும் புதுச்சேரி மாநில அரசைக் கண்டித்து புதுவை மாநில மனிதநேய மக்கள் கட்சி சார்பாக இன்று புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுச்சேரி மறைமலை அடிகள் சாலையில் சுதேசி மில் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ம.ம.க. புதுச்சேரி மாவட்டச் செயலாளர் அஷ்ரப் தலைமை தாங்கினார்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றிய ம.ம.க. தலைமை ஒருங்கிணைப்பாளர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ், “புதுச்சேரியில் முஸ்லிம்களுக்கு இடஓதுக்கீடு அளிக்காமல் வைத்தியலிங்கம் அரசு தேவையில்லாமல் காலம் தாழ்த்தி வருகிறது. புதுவை முதல்வர் வைத்தியலிங்கம் தனது சொந்த ஊரான நெட்டப்பாக்கத்தில் அமைந்துள்ள பள்ளிவாசலில் இன்றுவரை பாங்கு ஒலி எழுப்ப தடை இருப்பதற்கு காரணமாக இருக்கின்றார். பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களிடையே மோதலை உருவாக்குவதற்காக முஸ்லிம்களுக்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் இருந்து 1.5 விழுக்காடும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 1 விழுக்காடும் இடஒதுக்கீடு அளிக்கப்படும் என்று அறிவித்தார். இது நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்று மட்டுமின்றி சட்டசிக்கலும் நிறைந்ததாகும். ஆனால் முஸ்லிம்களும் பிற பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரும் ஒன்று சேர்ந்து வைத்தியலிங்கத்தின் சதியை முறியடித்தோம். தொடர்ந்து புதுவையில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு கோரி பல்வேறு வகையில் போராட்டம் நடத்திவிட்டோம். இனியும் நாம் காத்திருக்க முடியாது. தற்போது நடைபெற்று வரும் புதுவை சட்டமன்றத் தொடரில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் அரசாணை வெளியிட வேண்டும். இல்லையெனில் புதுவை மாநில முதல்வர் வைத்தியலிங்கத்தின் இல்லத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும். இதன் பின்பும் இடஒதுக்கீடு வழங்காவிட்டால் தமிழகத்திற்குள் அவரை நுழைய விடாமல் தடுக்கும் போராட்டத்தை நடத்துவோம். இதேபோல் மறைமுகமாக முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு தெரிவிப்போர் இல்லத்தையும் முற்றுகையிடுவோம்” என உரையாற்றினார். மேலும் ‘மீனவர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க கோரியும் ம.ம.க. போராட்டம் நடத்தும்’ என்றும் அவர் அறிவித்தார்.

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் புதுவை சுகுமாரன்,

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் புதுவை சுகுமாரன்,


கண்டன ஆர்ப்பாட்டத்தில மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் பி. அப்துல் சமது, தமுமுக துணைச் செயலாளர் எஸ்.எம்.ஏ. ஜின்னா, மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் புதுவை சுகுமாரன், கிராம பஞ்சாயத்து தலைவர்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு சார்பில் ஜெகன்நாதன் சிங்காரவேலர் முன்னேற்ற கழக செயலாளர் செ. சந்திரன், சிந்தனை சிற்பி சமூக சேவை சங்கத்தின் செயலாளர் இரா. குமரன், சலவைத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் முத்து, மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தலைவர் இரா. அவிமன்னன், புதுச்சேரி மாணவர் கூட்டமைப்பின் அமைப்பாளர் சி.சூ. சாமிநாதன், சமூக ஆர்வலர் ச. மூர்த்தி, பெரியார் தி.க. இளைஞரணி செயலாளர் செ. சுரேஷ், ஒட்டர் நலச் சங்கத்தின் செயலாளர் முருகன் ஆகியோரும் கண்டன உரை ஆற்றினார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்குகொண்டனர்.

Monday, April 19, 2010

திருபனந்தாலில் மனிதநேய மக்கள் கட்சியின் மாபெரும் பொதுக் கூட்டம்



தஞ்சை வடக்கு மாவட்டம் திருபனந்தாலில் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் 15.04.2010 அன்று அம்பேத்கார் சிந்தனைகளும், ஒடுக்கப்பட்டோரின் அரசியலும் என்ற தலைப்பில் மாபெரும் பொதுக் கூட்டம் நடைபெற்றது.
மனிதநேய மக்கள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி, ம.ம.க உயர்நிலைக் குழு உறுப்பினரும் தமுமுக பொதுச் செயலாளருமான செ. ஹைதர் அலி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

இக்கூட்டத்திற்கு திருபனந்தால் ஒன்றிய தமுமுக செயலாளர் ஏ. அப்துல் நாசீர் தலைமை தலைமை தாங்கினர்.

ம.ம.க மாவட்ட நிர்வாகிகள், சம்சுதீன், உமர் ஜஹாங்கீர், பீ. ராஜ் முகம்மது, சரணவன். தமுமுக மாவட்ட நிர்வாகிகள் முகம்மது செல்லப்பா, மௌலவி. நஜிமுதீன் வாஹிதீன், சல்லி நசீர், ம.ம.க ஒன்றியச் செயலாளர் ஹைதர் அலி, திருபன்தால் நகரச் செயலாளர் கஜினி முகம்மது உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

லட்சிய தாகம் கொண்ட மாணவர்களை அழைக்கிறது த.மு.மு.க மாணவரணி!

சமுதாய சிந்தனையும், கொள்கை உறுதியும் கொண்ட இளைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு! உங்கள் திறமைகளை பட்டை தீட்டிக்கொள்ளவும், சமூக மார்க்க விஷயங்களை பற்றி புரிதலை ஏற்படுத்தவும் ஜூன் முதல் வாரத்தில் மாணவரணி சார்பில் குளுகுளு மலைப்பிரதேசம் ஒன்றில் சிறப்பு பயிற்சி முகாம் நடத்தப்பட உள்ளது.

+2 வகுப்பு முடித்தவர்கள் கல்லூரி மாணவர்கள் மற்றும் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும். முதலில் விண்ணப்பிப்பவர்களுக்கு முன்னுரிமை.தங்கள் விபரங்களை வெள்ளை தாளில் எழுதி அனுப்பவும்.கடைசி தேதி 10.05.2010

முகவரி:
த.மு.மு.க மாணவரணி
7, வடமரைக்காயர் தெரு, மண்ணடி, சென்னை.1.
செல் : 9994292932, 9841678783

Sunday, April 18, 2010

ஷார்ஜா முமுகவில் சகோதரர்: நாசர் அலிகான், அவர்கள் சிறப்புரையாற்றயிருக்கின்றார்கள்

இன்ஷா அல்லாஹ் (22-APRAIL-2010) இரவு 9.45 மணியளவில் நமது ஷார்ஜா முமுகவில் சகோதரர்: நாசர் அலிகான், அவர்கள் சிறப்புரையாற்றயிருக்கின்றார்கள் . அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

Saturday, April 17, 2010

த.மு.மு.க.வின் இருசக்கர சீருடை வாகன ஊர்வலம்

புதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் உரையில் அறிவிக்கப்பட்ட முஸ்லிம் களுக்கான 2.5 சதவீத தனி இடஒதுக்கீட்டை உடனே அமல் படுத்த வலியுறுத்தி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சார்பாக காரைக்கால் மாவட்டம் தழுவிய இருசக்கர சீருடை வாகன ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வ லத்திற்கு மாவட்ட துணை தலைவர் எஸ்.யூசுப்கான் தலைமை வகித்தார்.
காரைக்கால் மாவட்ட பொரு ளாளர் பி.ஷாஜஹான், மாவட்ட துணை செயலாளர் எச்.அப்துல் காசிம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எ.லியாக்கத் அலி, புதுச்சேரி மாவட்ட செயற்குழு உறுப்பினர் அப்துல் ஜப்பார் கான் ஆகியோர் முன்னிலை வகித் தனர். மாவட்ட தொண்டரணி செய லாளர் முஹம்மது ஜியாவுதீன் ஊர்வலத்தை ஒருங்கிணைத்தார், காரைக்கால் மாவட்டம் வாஞ்சூரில் தொடங்கப்பட்ட ஊர்வலத்தை சட்டமன்ற உறுப்பினர் வி.எம்.சி. சிவக்குமார் தொடங்கி வைத்தார்.

வாஞ்சூரில் தொடங்கிய ஊர்வலம் போலகம், திருபட்டினம், நிரவி, காரைக்கால், திருநள்ளார், சேத்தூர், அம்பகரத்தூர், நல்லம்பல், கருக்கன்குடி, நெடுங்காடு, கோட்டுச்சேரி வழியாக 100 கிலோ மீட்டர் பயணம் செய்து காரைக்கால் பேருந்து நிலையத்தை சென்றடைந்தது, மாவட்ட செயலாளர் ஐ. அப்துல் ரஹீம், புதுச்சேரி மாவட்ட தலைவர் அப்துல் ரஜாக், கழக பேச்சாளர் எம்.முஹம்மது ஹாஜி ஃபிர்தவ்ஸி ஆகியோர் கோரிக்கை உரை நிகழ்த்தினர். முடிவில் நகர செயலாளர் எம்.முஹம்மது நஜிமுதீன் நன்றி கூறினார்.
ஊர்வலத்தில் மாவட்ட மாணவரணி செயலாளர் எஸ்.நியாஜ் அஹமது, நிர்வாகிகள் எம்.ஜலாலுதீன், முஹம்மது ஹாஜா அலாவுதீன், பாவா பஹ்ருதீன், சர்புதீன், முஹம்மது சபுருதீன், உட்பட நூற்றுக்கணக்கானோர் இரு சக்கர வாகனத்தில் கலந்து கொண்டனர்.

த.மு.மு.க.வின் தொடர் போராட்டத்தின் விளைவாக, கடந்த 11-4-2010 அன்று சட்டசபையில் முதல்வர் வைத்திலிங்கம் பேசும் போது, முஸ்லிம்களுக்கு 2.5 சதவீத தனி இடஒதுக்கீட்டு அரசாணை இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Friday, April 16, 2010

அருரில் தமுமுகவின் 81 வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு

தர்மபுரி மாவட்டம் ஆருர் நகர தமுமுக சார்பாக கடந்த 14.03.2010 அன்று தமுமுகவின் ஆம்புலன்ஸ் அர்ப்பணிக்கப் பட்டது. இந்த நிகழ்வுக்கு மாவட்டத் தலைவர் கலந்தர் தலைமை தாங்கினார். ஆம்புலன்ஸை தமுமுக தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அர்ப்பணித்ததார்.
இந்த நிகழ்ச்சியில் அருர் அஹ்லே சுன்னத் ஜமாத் செயலாளர், அருர் பேருராட்சி தலைவி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
இந்த ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சியில் திரளான மக்கள் கலந்து கொண்டனர்

Wednesday, April 14, 2010

கோடைகால பன்முக பயிற்சி முகாம்-2010


தமுமுக சார்பில் நடத்தப்படும் மாணவர்களுக்கான பன்முக பயிற்சி முகாம் வழக்கம்போல், இவ்வருடமும் மே மாதம் நடைபெறும் இன்ஷா அல்லாஹ்.எட்டு முதல் பன்னிரண்டு வரை படித்தவர்களுக்கு, நான்கு வெவ்வேறு ஊர்களில் 7 நாட்களும், கல்லூரி மாணவர்களுக்கு மலைவாசஸ்தலத்தில் 4நாட்களும், பல்வேறு மார்க்க அறிஞர்கள் மற்றும் கல்வியாளர்களைக் கொண்டு பயிற்சிகள் அளிக்கப்பட இருக்கின்றன.

ஏப். 31&க்குள் விண்ணப்பங்களை அனுப்புபவர்கள் மட்டுமே சேர்க்கப்படுவர். அனுப்ப வேண்டிய முகவரி: விண்ணப்பிப்பவர்களுக்கு இடமும் காலமும் தபால் மூலம் அறிவிக்கப்படும்.

கோடைகால பன்முக பயிற்சி முகாம்
7, வடமரைக்காயர் தெரு, மண்ணடி, சென்னை-600 001.
போன்: 044 25247824, 25233884 பேக்ஸ்: 044 2523868

விவசாயிகள் தற்கொலைக்கு ஒரே தீர்வு இஸ்லாமிய வங்கிமுறை மட்டுமே!


வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பேச்சு

கடன்சுமை தாளாமல் விவசாயி கள் தற்கொலை செய்து கொள்வது நம்நாட்டில் தொடர்கதையாகி விட்டது. சென்ற வாரம் கூட விதர்பா பகுதியில் 30 விவசாயிகள் கடன் கொடுமையைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டனர்.

இது குறித்து ஒரு விழாவில் கருத்து கூறிய பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், இஸ்லாமிய வங்கி முறையால் மட்டுமே இத்தகையத் தற்கொலைகளைத் தடுத்து நிறுத்த முடியும் என்று ஆணித்தரமாக எடுத்துரைத்துள்ளார்.

விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதற்குக் காரணம், கடனை செலுத்த முடியாமை அல்ல, அந்தக் கடனுக்கு விதிக்கப்படும் கொடுமை யான வட்டியைக் கட்டமுடியாமையே.

விவசாயிகள் மட்டுமின்றி, ஏழை எளிய மக்கள் கந்து வட்டிக் கொடுமை யின் காரணமாக, குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்கிற செய்தி கள் அடிக்கடி நெஞ்சைச் சுடுகின்றன.

வட்டியில்லாத கடனை வழங்கும் இஸ்லாமிய வங்கிமுறையே, இந்தக் கொடுமைகளுக்கு ஒரே தீர்வு என சென்னையில் நடைபெற்ற ‘கருணா ரத்னா’ விருதுகள் வழங்கும் விழாவில் எம்.எஸ்.சுவாமி நாதன் பேசியுள்ளார்.

அகிம்சை, மரக்களி உணவு, சுற்றுப் புறச்சூழல் ஆகிய தளங்களின் சிறந்த சேவை ஆற்றுவோருக்கு கருணா ரத்னா விருது வழங்கப்படுகிறது.

இவ்வாண்டு பத்மஸ்ரீ முசாபர் ஹூசேன், சின்னி கிருஷ்ணா, நந்திதா கிருஷ்ணா ஆகியோருக்கு விருதும் 1 லட்ச ரூபாய் பொறிகிழியும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் விருதுகளை வழங்கிய எம்.எஸ்.சுவாமிநாதன் இஸ்லாமிய வங்கி முறையே தேசத்தின் பிரச்சினைக்குத் தீர்வு என்றுள்ளார். சு.சுவாமி என்ற அரசியல் தரகரோ, கேரள அரசு இஸ்லாமிய வங்கியைத் தொடங்குவதற்குத் தடை விதிக்குமாறு வழக்குப் போடுகிறார். எம்.எஸ். சுவாமி நாதன் உரையை கேட்டாவது, சுப்ரமணியசுவாமி திருந்த வேண்டும்.

ஹாஜாகனி

Sunday, April 11, 2010

இஸ்லாமிய வங்கி துவங்க கேரள உயர்நீதிமன்றம் அனுமதி

கொச்சி:கேரள மாநிலத்தில் இஸ்லாமிய வங்கியை தொடங்குவதற்கான நடவடிக்கைகளுக்கு கேரள உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

அதேவேளையில் அரசு அல்லது அரசு நிறுவனங்கள் இவ்வங்கியில் முதலீடுச் செய்வதற்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய வங்கிக்கெதிரான இறுதித் தீர்ப்புவரும் வரை இந்நிலைத் தொடரும். கேரளமாநிலத்தில் இஸ்லாமிய வங்கியல் நிறுவனம் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கைகளை மேற்க்கொண்டு வரும் அல்பராக்கா நிதியியல் நிறுவனம் சட்டப்படி நடவடிக்கைகளை ஆரம்பிக்கலாம் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இஸ்லாமிய வங்கியியல் நடவடிக்கைகளுக்கான தடையை நீக்கவேண்டுமென்று கோரி அல்பராக்கா நிதியியல் நிறுவனமும், இந்நிறுவனத்தின் ப்ரொமோட்டர் டைரக்டர் சி.கே.மேனனும் அளித்த மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஜெஸ்தி செலமேஷ்வர், நீதிபதி சி.என்.ராமச்சந்திரன் நாயர் ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் இந்த உத்தரவை பிறப்பித்தது.

கேரள மாநில தொழில் வளர்ச்சிக் கழகத்தின்(K.S.I.D.C) பங்குகளுடன் மாநிலத்தில் இஸ்லாமிய வங்கி ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைக்கு எதிராக முன்னாள் மத்திய சட்ட அமைச்சரும், ஜனதா கட்சியின் தலைவருமான சுப்பிரமணிய சுவாமி அளித்த பொதுநல மனுவை விசாரித்த நீதிமன்றம் இஸ்லாமிய வங்கியியல் நடவடிக்கைக்கு தடைவிதித்தது.

மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் தங்களின் நிலைப்பாட்டை அறிவிக்காததால் இவ்வழக்கில் இறுதித் தீர்ப்பை வழங்கவியலாது என நீதிமன்றம் அறிவித்தது.

அல்பராக்கா நிதியியல் நிறுவனத்திற்கு இதுவரை முதலீடுச் செய்யவில்லை என K.S.I.D.C உயர்நீதிமன்றத்திடம் தெரிவித்தது. இஸ்லாமிய வங்கியல் நடவடிக்கைகள் மதசார்பற்றது என்றும், இதில் எவர் வேண்டுமானாலும் முதலீடுச்செய்யலாம் எனவும் K.S.D.I.C யும் கேரள அரசும் நீதிமன்றத்திடம் விளக்கின.

இவ்வழக்கின் இறுதி விசாரணை வருகிற ஜுன் மாதம் 3 ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Wednesday, April 7, 2010

நமது முமுகவின் வாராந்திர சிறப்பு நிகழ்ச்சிகள்...


இடஒதுக்கீட்டை அமல்படுத்தக்கோரி இருசக்கர சீருடை பேரணி

புதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் உரையில் அறிவிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கான 2.5 சதவிகித தனி இட ஒதுக்கீட்டை உடனே அமல்படுத்த வலியுறுத்தி, காரைக்கலில் இருசக்கர வாகனத்தில் சீருடை அணிந்து தமுமுகவினர் நேற்று பேரணி நடத்தினர். மாவட்ட துணைத்தலைவர் யூசூப்கான் தலைமை வகித்தார். பொருளாளர் ஷாஜகான், துணை செயலர் அப்துல்காசிம், செயற்குழு உறுப்பினர் லியாகத் அலி, மாநில தொண்டர் அணி செயலாளர் முஹமது ஜியா வுதின் முன்னிலை வகித்தனர். காரைக்காலை அடுத்த வாஞ்சூரில் துவங்கிய பேரணியை, எம்.எல்.ஏ சிவக்குமார் துவக்கி வைத்தார்.

போலகம், திரு.பட்டினம, நிரவி, காரைக்கால், திருநள்ளாறு, சேத்தூர், அம்பகரத்தூர், நல்லம்பல், கருக்கன்குடி, நெடுங்காடு, கோட்டுச்சேரி வழியாக சுமார் 100 கிலோ மீட்டர் பயணம் செய்து காரைக்கால் புதிய பேருந்து நிலையத்தில் பேரணி நிறைவடைந்தது.

இதைதொடர்ந்து மாவட்ட செயலாளர் அப்துல்ரஹீம், புதுச்சேரி மாவட்ட தலைவர் அப்துல்ரஜாக், முஹமது பீர்தவ்ஸி ஆகியோர் கோரிக்கை உரையாற்றினர். ஊர்வலத்தில், த.மு.மு.க நிர்வாகிகள் நியாஜ், ஜலாவுதின், முஹமது ஹாஜா, பாவா பஹ்ருதீன், சர்புதீன், சபுரூதீன் கலந்து கொண்டனர்.

Monday, April 5, 2010

தமிழ்நாடு காவல் துறையில் பணி நம் சமுதாயத்திற்கு 3.5 % இடஒதுக்கீடு உள்ளது


அன்பிற்கினிய இஸ்லாமிய சொந்தங்களே !

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு

தமிழ்நாடு காவல் துறையில் 1095 நபர்களை SI (சப் இன்ஸ்பெக்டர்) போஸ்டிங்கான தேர்வு செய்யும் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது, தகுதியுள்ள சகோதரர்கள் விண்ணப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

வயது வரம்பு : 28, கல்வித்தகுதி : ஏதேனும் ஒரு டிக்ரி

நம் சமுதாயத்திற்கு 3.5 % இடஒதுக்கீடு உள்ளது என்பதையும், அதை சரிவர பயன்படுத்திக்காள்ளுமாறும் மிகவும் அக்கரையுடன் நினைவூட்டிக்கொள்கிறோம்.


FOR REF : http://www.tn. gov.in/tnusrb/ about_us. htm

33 சதவீத ஒதுக்கீடு: தமுமுக கோரிக்கை

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜவாஹிருல்லா நெல்லையில் கட்சியின் நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அப்போது அவர் செய்தியாளர்களிடம்,

மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை வரவேற்கிறோம். ஆனால் உள்ஒதுக்கீடு இல்லாமல் வெறுமனே நிறைவேற்றப்பட்டால் ஏற்கனவே பதவியில் இருக்கிற, மேல்தட்டு வர்க்கத்தினரின் வீட்டுப்பெண்கள்தான் பதவிக்கு வரும் வாய்ப்புள்ளது.

எனவேதான் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்களும் பயன்பெறும் வகையில் உள்ஒதுக்கீட்டை வலியுறுத்துகிறோம்.

உள்ஒதுக்கீட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி ஏப்ரல் கடைசி அல்லது மே மாத துவக்கத்தில் சென்னையில் மாநாடு ஒன்றை நடத்த உள்ளோம். அதில் லல்லுபிரசாத், முலாயம்சிங் ஆகியோரை பங்கேற்க செய்ய உள்ளோம்’’ என்று தெரிவித்துள்ளார்.

Thursday, April 1, 2010

அயோத்திக்கு போனேன்! மனம் கலங்கினேன்! பாபர் மஸ்ஜித் நிலத்தில் தமுமுக தலைவர்!


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற் றக் கழகத்தின் தலைவர் பேரா சிரியர் முனைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் கடந்த வாரம் உத்தரபிரதேசம் மற்றும் டெல்லியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். உத்தரபிர தேசத்தின் தலைநகர் லக்னோவில் கடந்த மார்ச் 19, 20 மற்றும் 21 ஆகிய மூன்று நாட்கள் நடைபெற்ற அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் 21வது பொதுக் குழுவில் அவர் கலந்து கொண்டார். பிறகு மார்ச் 22 அன்று அயோத்திக்கும் மார்ச் 23 அன்று அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்திற்கும் மார்ச் 24 மற்றும் 25 அன்று டெல்லிக்கும் சென்று விட்டு தமிழகம் திரும்பினார். தமுமுக தலைவர் தனது வட இந்திய பயணம் குறித்து மக்கள் உரிமைக்கு அளித்த சிறப்பு பேட்டி:


மக்கள் உரிமை: அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் 21வது பொதுக்குழு எப்படி அமைந்திருந்தது?
பேராசிரியர்: அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் பொது குழுக்கூட்டம் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகின்றது. இந்த அமர்வில் நிர்வாகிகள் தேர்வு மற்றும் புதிய உறுப்பினர்களை நியமித்தல் மற்றும் தனியார் சட்ட வாரியத்தின் பல்வேறு குழுக்களின் செயற்பாடுகள் குறித்த அறிக்கைகள் பற்றிய விவாதம் முதலிய நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இந்த முறை முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் பொதுக்குழு லக்னோவில் உள்ள புகழ்பெற்ற தாருல் உலூம் நத்வத்துல் உலமா என்னும் நத்வா பல்கலைக் கழகத்தின் வளாகத்தில் நடைபெற்றது. லக்னோ நகரம் முழுவதும் இதற்காக விழா கோலம் பூ ண்டிருந்தது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வாரியத்தின் கூட்டத்திற்கு வரும் உறுப்பினர்களை வரவேற்க வரவேற்பு வளைவுகளும், தட்டிகளும் வைக்கப்பட்டிருந்தன. நத்வாவில் உள்ள மாணவர் தங்கும் விடுதிகளில் வாரிய உறுப்பினர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனக்கு சுலைமானிய விடுதியில் அறை ஓதுக்கப்பட்டிருந்தது. ஒரு நவீன பல்கலைகழகத்திற்கு இணையாக பல்வேறு துறைகளுக்கு தனித்தனி கட்டிடங்கள், நூலகத்திற்கு என்று தனி கட்டிடம், புல்வெளித் தோட்டம், கூட்ட அரங்கம், வளாகத்தின் நடுவில் கம்பீரமாக பள்ளிவாசல் என்று பிரமாண்டமாக இருந்தது நூற்றாண்டு கண்ட நத்வா வளாகம். நத்வா மாணவர்கள் மிக இனிமையா க சேவை மனப்பான்மையுடன் விருந்தினர்களை உபசரித்தார்கள்.


கேள்வி: அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரிய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?
பதில்: இந்த கூட்டத்தில் மத்திய அரசு வகுப்பு கலவர தடுப்புச் சட்டம் 2009&ஐ தற்போதைய வடிவத்தில் நிறைவேற்றக் கூடாது என்று தீர்மானிக்கப்பட்டது. லிபரான் ஆணைய அறிக்கை தொடர்பாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த நடவடிக்கை அறிக்கையில் பல்வேறு பரிந்துரைகளுக்கு வகுப்பு கலவர தடுப்புச் சட்டத்தின் மூலம் பரிந்துரை காணப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் இச்சட்டம்
காவல்துறைக்கும், மாநில அரசுக்கும் மிதமிஞ்சிய அதிகா ரம் அளிக்கும் வகையில் வடிவமைக் கப்பட்டுள்ளது. இச்சட்டம் இல்லாத நிலையிலேயே குஜராத் கலவரம் நடைபெற்றிருக்கும் போது இச்சட்டம் அமுலுக்கு வந்தால் அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் இச்சட்டத்தை தற்போதைய வடிவத்தில் கொண்டு வரவேண்டாம் என்று பிரதமரிடம் வலியுறுத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.

பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் புரிந்து வரும் அராஜகத்தை தடுத்து நிறுத்த இந்திய அரசு குரல் கொடுக்க வேண்டும் என்று
ம் தீர்மாணிக்கப்பட்டது. இஸ்ரேலின் உளவுப்படையான மோசாதுடன் இந்திய உளவுப்பிரிவு நெருங்கிய உறவு கொண்டிருப்பதையும், அமெரிக்காவின் நிர்பந்தத்திற்கு இந்த விஷயத்தில் இந்தியா அடிபணிவதும் கண்டிக்கப்பட்டது. நேரு காலத்திய வெளியுறவு கொள்கையி
ன் அடிப் படையில் இஸ்ரேலுடனான உறவை துண்டிக்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

லிபரான் ஆணையம் சுட்டிக் காட்டியுள்ள 68 நபர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் தீர்மாணிக்கப்பட்டது. பாபரி மஸ்ஜித் தொடர்பான வழக்குகள் விரைந்து முடிக்கப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.
முஸ்லிம்களை தீவிரவாதிகள் என்று சித்தரிப்பது ஒட்டுமொத்த நாட்டின் நலனுக்கு உகந்தது அல்ல. அப்பாவி இளைஞர்கள் சிறையில் வாடுவதும், போலி என் கவுண் டர்கள் மூலம் முஸ்லிம் இளைஞர்கள் கொல்லப் படுவதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும் தீர்மானிக் கப்பட்டது.

திருமணங்களின் போது ஆடம்பரங்களை
தவிர்த்து எளிமையாக நடத்த வேண்டும் என்றும் வரதட்சணை இல்லாமல் திருமணங்கள் நடத்தப்பட வேண்டும் என்று முஸ்லிம் சமூகத்தை அறிவுறுத்தியும், சிறிய பிணக்கு களுக்காக திருமணத்தை முறித்துக் கொள்வதை தவிர்க்குமாறும் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

இந்த பொது அமர்வின் போது 5 பெண்கள் உட்பட 50 பேர் கொண்ட வாரியத்தின் செயற்குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் எம்.எம்.ஹாசிமும் இவர்களில் ஒருவர்.

இந்த அமர்வின் போது தமிழக அரசு கொண்டு வந்துள்ள கட்டாய திருமண பதிவுச் சட்டம் குறித்தும் அது குறித்த தமிழக முஸ்லிம் அமைப்புகளின் எதிர்ப்பு குறித்தும், இது தொடர்பாக தமிழக சட்ட அமைச்சர் துரைமுருகனுடன் நடத்திய பேச்சு குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.
பொது அமர்வின் தீர்மானங்களை விளக்கி லக்னோ ஈத்காவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டார்கள்.
கேள்வி: தங்களின் அயோத்தி பயணம் குறித்து சொல்லுங்களேன்...!

பேராசிரியர்: பாபரி மஸ்ஜித் இடிக்கப்படுவதற்கு முன்பு 1980&களில் சென்றிருக்கிறேன். இப்போது மீண்டும் இடிப்பிற்கு பிறகு சென்றேன். பாபரி மஸ்ஜித் இருந்த இடத்தில் உள்ளது உள்ளபடியே உள்ளதா என்பதை கண்காணிப்பதற்காக நீதிமன்றம் நியமித்துள்ளவர்களில் ஒருவரான பைசாபாத்தைச் சேர்ந்த காலிக் அஹ்மது என்னை ‘சர்ச்சைக்குரிய” பகுதிக்கு அழைத்துச் சென்றார். அவர் நான் வருவது குறித்து முன்கூட்டியே காவல்துறைக்கு தகவல் கொடுத்திருந்தார். செல் போன், கேமரா, பேனா, காகிதம் என்று எதுவும் எடுத்துச் செல்லாமல் சென்றோம்.

பல இடங்களில் பலத்த சோதனைக்குப் பிறகு இரும்பு வேலிகளுக்கு நடுவே நடந்து 450 ஆண்டு காலம் முஸ்லிம்களின் வழிப்பாட்டுத்தலமாக இருந்த பாபரி மஸ்ஜித் அமைந்த இடத்தை நெஞ்சில் பெரும் துயரத்தை சுமந்தவனாக பார்த்தேன். நீதிமன்றத் தீர்ப்பு விரைவில் வர உள்ளது என்றும் பாபரி மஸ்ஜித் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான வழக்கை நடத்தும் வழக்குரைஞர் ஜபர்யாப் ஜெய்லானி லக்னோவில் என்னிடம் சொல்லியிருந்தார்.

தீர்ப்பு சாதகமாக அமைந்து அடுத்த முறை பாபரி மஸ்ஜித் இருந்த இடத்தில் ஏக இறைவனை தொழும் வாய்ப்பு எனக்கும், முஸ்லிம் சமூகத்திற்கும் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்த வண்ணமாக அந்த இடத்தை பார்த்தேன். நானும் என்னுடன் லக்னோவில் இருந்து வந்த எனது நண்பர் மட்டுமே அங்கு தாடியுடன் இருந்தோம். பாபரி மஸ்ஜித் அமைந்த இடத்தில் அமைந்திருந்த தற்காலிக கோயில் அருகே நடுநிலையுடன் இருக்க வேண்டிய காவல்துறையினர் ராம் லாலாவை தரிசனம் செய்யுங்கள் என்று அனைவரையும் பார்த்து (எங்களையும் சேர்த்து தான்) கூறிக் கொண்டிருந்தனர். மொத்த இடத்தையும் பார்ப்பதற்கு அரை மணிநேரம் எடுத்தது. தற்போது போடப்பட்டுள்ள பலத்த பாதுகாப்பு டிசம்பர் 6, 1992&க்கு முன்பு போடப்பட்டிருந்தால் பள்ளிவாசலை காப்பாற்றியிருக்கலாம். குதிரைகள் லாயத்தை விட்டு தப்பிய பிறகு லாயத்தை பூட்டி என்ன பலன் என்ற சிந்தனை திரும்ப திரும்ப வந்துக் கொண்டிருந்தது. அயோத்தி பண்டையக் காலங்களில் புத்தர்களின் வழிப்பாட்டு தலமாக, இந்துக்களின் வழிப்பாட்டுத் தலமாக இருந்தது போல் அது முஸ்லிம்களின் நகரமாக இருந்தது என்பதற்கான தடயங்கள் அங்கு ஏராளமாக உள்ளதை நேரில் பார்க்க முடிந்தது. அயோத்தியை சுற்றிய 12 கி.மீ. சுற்றுப்பரப்பில் பல பள்ளிவாசல்கள் உள்ளன. இது தவிர இரட்டை நகரமான பைசாபாத் மற்றும் அயோத்தியை இணைக்கும் சாலையின் இரு புறத்திலும் ஏராளமான பள்ளிவாசல்களும் முஸ்லிம் அடக்கத்தலங்ளையும் பார்க்க முடிந்தது.
அயோத்தியின் மக்கள் தொகையான ஒன்னரை லட்சத்தில் 6 விழுக்காட்டினர் முஸ்லிம்கள் ஆவர். இங்கு 35 பள்ளிவாசல்கள் உள்ளன. இவற்றில் ஐவேளை தொழுகையும் நடைபெற்று வருகின்றது. பாபரி மஸ்ஜிதை சுற்றி அரசு கையகப்படுத்திய 67 ஏக்கர் நிலத்தை சுற்றியும் பள்ளிவாசல்களை பார்க்க முடிந்தது. அனுமன்கிரி கோயிலிலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் 40 ஏக்கர் பரப்பளவு உள்ள முஸ்லிம் அடக்கத்தலம் உள்ளது. இங்கு 12 அடி நீளமுள்ள ஒரு அடக்கவிடம் (கப்ரு) உள்ளது. இது முதல் மனிதர் நபி ஆதமிற்கு பிறகு வந்த நபி ஷீத் அவர்களுடையது என்று உள்ளூர் முஸ்லிம்கள் நம்பி வருகின்றனர். (இங்கு படம் எடுத்துக் கொண்டோம்)

இன்னும் பல அடக்கவிடங்கள் உள்ளன. பாரசீக மொழியிலான கல்வெட்டுகளும் அதில் உள்ளன. இவையெல்லாம் அயோத்தி முஸ்லிம்களின் நகரமாகவும் தொன்மை தொட்டு விளங்கி யுள்ளது என்பதற்கு சான்றாக அமைந்துள்ளன.



இறுதியாக பாபரி மஸ்ஜித் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கின் முதல் மனுதாரர் ஹாசிம் அன்சாரியை அவரது இல்லத்தில் சந்தித்தேன். இவருக்கு வயது 92. பாபரி மஸ்ஜித் பள்ளிவாசலில் தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் இவர் தான் அந்த பள்ளிவாசலின் முத்தவல்லி. (பள்ளிவாசல் நிர்வாக குழு தலைவர்). 1949ம் ஆண்டு டிசம்பர் 22 வரை பாபர் பள்ளிவாசலில் இரவு தொழுகை வரை நடை பெற்றது. பிறகு நள்ளிரவில் தான் பள்ளிவாசலுக்குள் ஸ்ரீராமர், லட்சுமணர், சீதை, ஹனுமான் சிலைகள் வைக்கப்பட்டன. அன்று முதல் இவர் வழக்காடிவருகிறார். காங்கிரஸ் கட்சியை கடுமை யாக சாடுகிறார்.

காங்கிரஸ் ஆதரவு முஸ்லிம் தலைவர்களையும் இவர் வன்மையாக கண்டித்தார். ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த போது பூட்டா சிங் பாபரி மஸ்ஜிதை விட்டுக் கொடுக்குமாறும் அதற்காக 3 கோடி ரூபாயும், பெட்ரோல் பங்கும், இவரது மகனுக்கு அரசு வேலையும் தருவதாக ஆசைவார்த்தை காட்டியதாகவும், ‘எடு பழைய செருப்பை' என்று கூறி அவரை விரட்டியதையும் ஆவேசத்துடன் என்னிடம் பகிர்ந்து கொண்டார். தென் இந்திய மு ஸ்லிம்கள் குறிப்பாக தமிழக முஸ்லிம்கள் பாபரி பள்ளிவாசலுக்காக காட்டும் ஆர்வம் தன்னை நெகிழ வைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

என்னை அயோத்திக்கு அழைத்துச் சென்ற நண்பர் காலிக்கிடம் என்னைப் போல் சாதாரண முஸ்லிம்கள் பாபரி வளாகத்திற்குள் சென்று பார்க்கலாமா என்று கேட்டேன். அது இயலாத காரியம் என்று அவர் பதிலளித்தார். முஸ்லிம்கள் வந்தால் அவர்கள் கடுமையாக சோதிக்கப்பட்டு, தடுத்து நிறுத்தப்பட்டு பிறகு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று அவர் மேலும் கூறினார். மேலும் தென் இந்திய முஸ்லிம் தலைவர்களில் நீங்கள் தான் முதன் முதலாக இங்கே உள்ளே சென்று பார்த்து உள்ளீர்கள் என்று அவர் கூறினார்.

பாபரி மஸ்ஜித் பற்றியும் அயோத்திப் பற்றியும் ஆய்வு செய் வதற்காக ஒரு ஆய்வு நிறுவனத்தை நடத்தி வருகிறார் நண்பர் காலிக். பாபரி மஸ்ஜிதை மீட்பதற்காக இந்தியா முழுவதும் உள்ள முஸ்லிம்கள் போராடிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் அயோத்தியில் வக்ப் செய்யப்பட்ட இடங்களை, கப்ருஸ் தான்களை சில சுயநலமிகள் விலைக்கு விற்கும் அவலமும் நடைபெற்று வருகின்றது என்று அவர் தெரிவித்தார். என்னுடன் லக்னோவில் இருந்து கார் ஒட்டி வந்த இளைஞர் சில மாதங்களுக்கு முன்பு தான் பார்த்தபோது கப்ருஸ் தானாக இருந்த இடம், தற்போது கட்டிடமாக கட்டப்பட்டு வருவதை சுட்டிக்காட்டினார்.

இறுதியாக அயோத்தி ரயில் நிலையத்தில் அலிகர் செல்வதற்காக கைபியத் எக்ஸ்பிரஸ் பிடிப்பதற்காக நின்ற போது லக்னோவில் இருந்து என்னுடன் வந்திருந்த எனது நண்பர் டாக்டர் அனீஸ் சொன்ன சில கருத்துகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். டிசம்பர் 6, 1992ல் பாபரி மஸ்ஜித் வளாகத்தில் உள்ளது உள்ளபடியே இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் கரசேவை என்ற பெயரில் பாபர் பள்ளிவாசலை இடிப்பதற்கு கரசேவகர்கள் ரெயில் மூலம் தான் அயோத்திக்கு வந்தார்கள். அப்போது நரசிம்மராவ் அமைச் சரவையில் ரெயில்வே அமைச்சராக இருந்தவர் சி.கே. ஜாபர் ஷரீப். இவர் அயோத்திக்கு செல்லும் ரெயில்களை உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நிறுத்தி யிருந்தால் ஆயிரக்கணக்கில் கரசே வகர்கள் அயோத்திக்கு வந்திருக்க மு டியாது.

இதேபோல் அவர் சொன்ன இன்னொரு செய்தி என்னை உறைய வைத்தது. பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட அன்று பிரதமரை சந்தித்த குழுவில் நானும் இடம் பெற்றேன். அதற்கு முன்பு சுலைமான் சேட் சாஹிப் அவர்கள் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ராஜினாமா செய்து விடுவோம் என்று ஒரு தீர்மானத்தை முன் மொழிந்தார். ஆனால் அவரது ஆலோசனையை சையத் சகாபுதீன், ஜாபர் ஷரீப் உள்ளிட்ட முஸ்லிம் எம்.பி.க்கள் கேட்க மறுத்துவிட்டார்கள். இதைக் கேட்ட நான், சமூக நலனை விட பதவி பெரிது என்று இந்த இருவரும் எண்ணியதால் அதன் பிறகு அவர்கள் எம்.பி.களாக ஆகவே முடியவில்லை என்று நான் சொல்லிக் கொண்டிருந்த போது கைபியத் எக்ஸ்பிரஸ் நிலையத்திற்குள் வந்து விட்டது.




கேள்வி: அலிகர் பயணம் எப்படி அமைந்திருந்தது?
பேராசிரியர்: அலிகர் முஸ்லிம் பல்கலைகழகத்தின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் எனது நண்பர்கள் பலரை சந்தித்தேன். அலிகர் முஸ்லிம் பல்கலைகழகத்தின் துணை வேந்தர் பி.கே. அப்துல் அஜீஸ் அவர்களை சந்தித்து பேசினேன். அப்போது தமிழகத்தில் உள்ள மாணவர்களுக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். அதற்கு பதிலளிக்கும் போது நாங்கள் சேர்ப்பதற்கு தயார்.
இந்த முறை தமிழ் நாளிதழ்களில் கூட விளம்பரங்கள் பிரசுரித்திருந்தோம். ஆனால் தமிழக மாணவர்கள் விண்ணப்பம் செய்வதில்லை என்றார். மருத்துவம், பொறியியல், மேலாண்மையியல், இதழியல் உள்பட பல்வேறு பாடங்களை குறைந்த செலவில் படிக்கும் வாய்ப்பு உள்ளது.

ஆனால் தமிழக மாணவர்கள் இங்கே வருவதில்லை என்று அங்கு சந்தித்த காரைக்காலை சேர்ந்த முனை வர் பட்ட ஆய்வு மாணவர் ஜக்கரியா குறைபட்டுக் கொண்டார். இவர் இங்கு முதுகலை அரபி படித்து விட்டு தற்போது இஸ்லாமிய அறிவியல் துறையில் முனைவர் பட்டத்திற்காக ஆய்வு செய்துக் கொண்டிருக்கிறார். அன்று மாலை அலிகர் ஜமாஅத்தே இஸ்லாமி வட்டம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் அரசியல் மற்றும் சமூக வாழ்வில் முஸ்லிம்கள் என்ற தலைப்பில் உரையாற்றினேன். தமிழகத்தில் தமுமுக ஆற்றி வரும் பணிகளை அறிந்து அலிகர் மக்கள் வியந்து போனார்கள்.கேள்வி:
டெல்லியில் பத்திரிகையாளர் சந்திப்பு எப்படி இருந்தது?

பேராசிரியர்: சிறுபான்மை அமைச்சக கூட்டத்திற்கு பிறகு டெல்லியில் உள்ள தமிழக செய்தியாளர்களை தமிழக இல்லத்தில் சந்தித்தேன். அப்போது அவர்களிடம் பெண்களுக்கான 33 சதவிகித இடஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை பெண்களுக்கு உள்ஒதுக்கீடு அவசியம் என்ற தமுமுகவின் நிலைப்பாட்டை எடுத்துச் சொன்னேன். சமூக நீதிக்கு குரல் கொடுக்க வேண்டிய திராவிட கட்சிகள் தங்கள் கடமையை மறந்து விட்ட நிலையில் வட இந்தியாவில் சமூக நீதிக்காக குரல் கொடுத்து வரும் லாலு பிரசாத் யாதவ் மற்றும் முலாயம் சிங் யாதவ் ஆகியோரை சென்னைக்கு அழைத்து பெரும் நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டுள்ளதையும் அதற்காக நான் டெல்லியில் நடத்திய சந்திப்புகளையும் பகிர்ந்து கொண்டேன். அப்போது ஒரு முக்கிய தமிழ் நாளிதழின் டெல்லி செய்தியாளர் மார்ச் 7, 2007ல் நீங்கள் டெல்லியில் நடத்திய பேரணியில் காணப்பட்டது போல் மக்கள் திரளும் ஒழுங்கும் நிறைந்த பேரணியை நான் இதுவரை பார்க்கவில்லை என்று நெகிழ்ச்சியாக குறிப்பிட்டார்.

சமீபத்தில் விலைவாசி உயர்வு தொடர்பாக இடதுசாரிகள் நடத்திய பேரணியையும், சில முஸ்லிம் அமைப்புகள் மிஸ்ரா ஆணையம் தொடர்பாக நடத்திய பேரணியையும் தமுமுக நடத்திய பேரணியுடன் எந்த வகையிலும் ஒப்பிட முடியாது என்று குறிப்பிட்டார்.

இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் பேராசிரியர் சுலைமானும் இதே கருத்தை என்னிடம் லக்னோவில் பதிவுச் செய்ததை அவர்களிடம் பகிர்ந்து கொண்டேன். டெல்லியிலும் நீங்கள் அவ்வப்போது போராட்டம் நடத்த வேண்டும் என்று அவர்கள் குறிப்பிட்டார்கள்.