Saturday, November 24, 2012

கீழக்கரைஇல் துண்டு பிரசுரங்களை வழங்கும் விழிப்புணர்வு பரப்புரை



சில்லறை வணிகத்தில் 51% அந்நிய முதலீடுகளை எதிர்த்து கீழக்கரைஇல் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில்  துண்டு பிரசுரங்களை வழங்கும் விழிப்புணர்வு பரப்புரை. கீழக்கரை நகர் நிர்வாகிகள் easy சாதிக் இக்பால், மாவட்ட தலைவர் சாதிக் பாஷா மமக மாவட்ட செயலாளர் அன்வர்  அலி மாவட்ட நகர் நிர்வாகிகளும் கலந்துகொண்டு துண்டு பிரசுரத்ததை வணிகர்களுக்கும்,பயனாளிகளுக்கும்,பொதுமக்களுக்கும் வழ';கினார்கள்

Thursday, November 22, 2012

தர்மபுரியில் பொதுச்செயலாளர் முகாம்


தர்மபுரி அருகே சாதி கலவரங்களால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக மமக பொதுச்செயலாளர் எம். தமிமுன் அன்சாரி இன்று தர்மபுரி சென்றிருக்கிறார். அவருடன் மமக வின் மாநில அமைப்பு செயலலாளர் மண்டலம் ஜைனுலாபுதீன் அவர்களும், மமக வின் சட்டமன்ற உறுப்பினர் அஸ்லம் பாஷா, மாநில செயலாளர் தர்மபுரி சாதிக் ஆகியோரும் தர்மபுரி சென்றிருக்கிறார்கள்.

மமக தலைமையகம்


ஆர்ப்பாட்டம் திட்டமிட்டபடி நடைபெறும்


பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் போர் நிறுத்தம் செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எனினும் கடந்த 10 நாட்களாக இஸ்ரேல் நடத்திய பயங்கரவாத யுத்தத்தைக் கண்டிக்க வேண்டியது சர்வதேச சமூகத்தின் கடமையாகும். இஸ்ரேல் பிரதமரை ஐ.நா. அமைப்பு, போர்க்குற்றவாளி என்று அறிவிக்க வேண்டும் என்பது பாலஸ்தீன மக்களின் விருப்பமாகும். எனவே இக்கோரிக்கைகளை வ-யுறுத்தி தமுமுக சார்பில் திட்டமிட்டபடி நாளை மாலை 4 மணிக்கு மெமோரியல் ஹால் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
தமுமுக தலைமையகம்.

Tuesday, November 20, 2012

பாலஸ்தீனத்திற்காக தமுமுக ஆர்ப்பாட்டம்



கடந்த ஒரு வாரமாக பாலஸ்தீனத்தின் மீது ரவுடித்தனமாக தாக்குதல் நடத்திவரும் இஸ்ரேலின் பயங்கரவாதத்தைக் கண்டித்து தமுமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. எதிர்வரும் 23.11.2012 (வெள்ளி) அன்று மாலை 4 மணிக்கு சென்னை கவர்னர் மாளிகை அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.
இஸ்ரே-ன் பயங்கரவாதத்தைக் கண்டித்தும், இஸ்ரேலுடனான தூதரக உறவை மத்திய அரசு துண்டிக்க வலியுறுத்தியும் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலத் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ அவர்கள் தலைமை ஏற்க உள்ளார்கள் (இன்ஷாஅல்லாஹ்).
தமிழகத்தின் பிற இடங்களில் இஸ்ரேலின் பயங்கரவாதத்தைக் கண்டித்து கண்டன சுவரொட்டி ஒட்டுமாறும் மாவட்ட நிர்வாகிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
(கண்டன சுவரொட்டி மாதிரி கீழே உள்ளது)
- தமுமுக தலைமையகம்

Monday, November 12, 2012

துபாய் தமிழ் வானொலி நிலையத்திற்கு கண்டனம்


முஸ்லிம் பயங்கரவாதிகள் என்ற வார்த்தையை செய்திகளில் பயன்படுத்தியமைக்காக துபாய் தமிழ் வானொலி நிலையத்திற்கு அனுப்பப்பட்ட கண்டன அறிக்கை.

அன்புள்ள இயக்குநர் அவர்களுக்கு,

பொருள் : செய்திகளில் கவனம் செலுத்த வேண்டி

தங்களின் மீது இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவட்டுமாக!
09.11.2012, வெள்ளிக் கிழமை அன்று மதியம் 12.00 மணிக்கு தங்களது ரேடியோ ஹலோ 89.5 அலைவரிசையில் ஒலிபரப்பான தலைப்புச் செய்திகளில் முஸ்லிம் பயங்கரவாதிகளை முதலமைச்சர் ஜெயலலிதா ஒடுக்கவேண்டும் என இராமகோபாலன் தெரிவித்தார் என ஒரு செய்தி வாசிக்கப்பட்டது. தீவிரவாதமும், பயங்கரவாதமும் எந்த ஒரு மதத்திற்கும், மதத்தினருக்கும் பொதுவானது அல்ல என்று வலியுறுத்தப்பட்டதால் முஸ்லிம் பயங்கரவாதம், முஸ்லிம் தீவிரவாதம் என்ற வார்த்தைகளை சன் டிவி போன்ற ஊடகங்களே தவிர்த்தவிட்ட சூழ்நிலையில் முஸ்லிம்களின் குணாதிசியங்களையும், பண்புகளையும் அதிகமாக புரிந்துக் கொள்ளக்கூடிய வாய்ப்புள்ள நாட்டில் அமர்ந்துக் கொண்டு செய்தியின் தரம் அறியாமல் வாசிப்பது தவறு என ரேடியோ ஹலோ உணரவேண்டும்.
மதக் கலவரங்களை ஏற்படுத்தி, அமைதி குலைப்பதை தனது வாழ்நாள் இலட்சியமாக கருதும் இராமகோபாலனின் வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர் கூறிய உண்மையற்ற கூற்றை செய்தியாக வாசிப்பதற்கு முன்பு ஒன்றுக்கு பலமுறை யோசித்திருக்க வேண்டாமா?. ஒரு சில நல்ல பயனுள்ள நிகழ்ச்சிகளும், பல்வேறு மறைமுக கலாச்சார சீர்கேடுகளை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளையும் வழங்கும் தங்கள் ரேடியோ இதுபோன்ற நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் வார்த்தைப் பிரயோகங்களை தவிர்த்துக் கொள்வது நல்லது.
இந்த நாட்டினுடைய சட்டத்தின் படி இஸ்லாமிய மதத்தைப்பற்றியோ, தலைவர்களைப் பற்றியோ நேரடியாகவோ, மறைமுகமாகவோ எதிர்ப்பது, கருத்து தெரிவிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. இந்த தவறுகளை செய்ததற்காக பல செய்தித் தாள்களும், காட்சி ஊடகங்களும் கடந்த காலங்களில் உடனடியாக மூடப்பட்டுள்ளன என்பதை மேற்கோள் காட்டி, தங்களுடைய இன்றைய செய்தி வாசிப்புக்கு வருத்தம் தெரிவிப்பதுடன், இனி செய்திகளில் கவனம் செலுத்துப்படும் என்ற உறுதி மொழியையும் இந்த மின்னஞ்சல் கிடைத்த 7 வேலை நாட்களுக்குள் கொடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். தவறும் பட்சத்தில் சட்ட ரீதியாக இந்த விஷயத்தை அணுகுவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்பதை இதன் மூலமாக பதிவு செய்துக் கொள்கிறேன்.

இப்படிக்கு,
ஹூசைன் பாஷா
துபாய்
நாள் : 19.11.2012


துபாய் தமிழ் வானொலி நிலையத்திலிருந்து கிடைத்த பதில் :

திரு. ஹூசைன் பாஷா
துபாய்

மதிப்பிற்குரிய திரு. ஹூசைன் பாஷா அவர்களுக்கு>
செய்திகளில் கவனம் செலுத்த வேண்டி அனுப்பப்பட்ட தங்களது கடிதம் கண்டோம். தாங்கள் குறிப்பிட்டுள்ள செய்தியில் தவறுதலாக வார்த்தை பிரேயாகம் செய்யப்பட்டுள்ளதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம். சுமார் ஒன்றரை ஆண்டுகளாக எங்களது செய்திகளை கூர்ந்து கவனித்து வந்தீர்களானால் இஸ்லாமிய மதம் குறித்தோ> இஸ்லாமிய சகோதரர்கள் குறித்தோ சிறப்பான செய்திகளையே நாங்கள் அளித்து வந்திருப்பதை அறிந்திருப்பீர்கள். தவிர மதம்>மொழி> இனம் குறித்து எந்த தவறான செய்திகளும் வெளியாகி விடக்கூடாது என்பது குறித்தும் நாங்கள் தொடர்ந்து கவனமாகவே இருந்து வருகிறோம். மேலும்> எங்களது செய்திப் பிரிவின் அனைத்து ஊழியர்களுக்கும் இதுகுறித்து முறையாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த குறிப்பிட்ட வார்த்தைப் பிரயோகம் கவனக்குறைவினால் ஏற்பட்ட தவறே அன்றி> எந்தவித உள்நோக்கத்தினாலும் வாசிக்கப்பட்டதல்ல என்பதையும் தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம் . மேலும்> இதுபோன்ற தவறுகள் நேராவண்ணம் கூடுதல் கவனம் செலுத்தவும் உறுதி ஏற்கிறோம். எங்களது கவனத்துக்கு இதை உடனடியாக கொண்டு வந்தமைக்கு தங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

இங்ஙனம்
செய்தி ஆசிரியர்
ரேடியோ ஹலோ 89.5
நாள் : 11-11-2012

இந்த செய்தியை ஈமெயில் மூலமாக அறிந்த மாநில தலைவர் ஜே.எஸ். ரிபாயி அவர்கள், துபாய் நிர்வாகத்தின் வேகமான செயல்பாட்டிற்கு பாராட்டு தெரிவித்தார்.

Saturday, November 10, 2012

இலங்கை வெளிக்கடை சிறையில் கலவரம்: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்


மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி வெளியிடும் பத்திரிகை அறிக்கை:
இலங்கை கொழும்பு வெளிக்கடை சிறையில் இன்று திடீர் கலவரம் ஏற்பட்டு ஐந்து பேர் உயிரிழந்திருப்பதாகவும், ஏராளமானோர் காயம் அடைந்திருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
முன்பு 1983ல் இதே வெளிக்கடை சிறையில்தான் தமிழ் விடுதலைப் போராளிகளான தங்கமணி, ஜெகன் குட்டிமணி உட்பட 27 தமிழர்கள் சிங்களப் பேரினவாத தூண்டுதலில் படுகொலை செய்யப்பட்டனர். அதுவே இலங்கையில் தமிழர்கள் ஆயுதமேந்தி போராடும் நிலையை ஏற்படுத்தியது.
தற்போது அதே வெளிக்கடை சிறையில் கலவரம் வெடித்திருக்கிறது. அங்கு விசாரணைக் கைதிகளாக ஏராளமான தமிழ் கைதிகள் உள்ளனர். அதில் இந்தியர்கள் உள்ளிட்ட பன்னாட்டு கைதிகளும் உள்ளனர். அவர்களின் நிலை என்னவாயிற்று என்று தெரியவில்லை.
சிறப்புக் காவல் படையினர், சோதனை என்ற பெயரில் பல கைதிகளை நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்ததுதான் கலவரத்திற்கு காரணம் என முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு இலங்கை அரசே பொறுப்பு என்ற வகையில் இலங்கை அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

(எம். தமிமுன் அன்சாரி)

news by:tmmk.in

Tuesday, November 6, 2012

மனிதநேய மக்கள் கட்சியின் மனிதநேய தொழிற்சங்க (MTS) மாநிலச் செயலாளராக


மனிதநேய மக்கள் கட்சியின் மனிதநேய தொழிற்சங்க (MTS) மாநிலச் செயலாளராக கோவையைச் சேர்ந்த சுல்தான் அவர்களும்,
மனிதநேய வணிகர் சங்கத்தின் (MVS) மாநிலச் செயலாளராக தஞ்சையைச் சேர்ந்த கலந்தர் அவர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சுல்தான் (செல்: 9047477897)
கலந்தர் (செல்: 9994845651)

எம்.தமிமுன் அன்சாரி,
பொதுச் செயலாளர், மனிதநேய மக்கள் கட்சி

தமுமுக மாணவர் அணியின் மாநிலச் செயலாளராக


தமுமுக மாணவர் அணியின் மாநிலச் செயலாளராக டாக்டர் சர்வத் கான் அவர்களும், தமுமுக தொண்டர் அணிச் செயலாளராக
பண்ருட்டி அப்துல் காதர் அவர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
டாக்டர் சர்வத்கான் (செல்: 9943888950)
பண்ருட்டி அப்துல் காதர் (செல்: 9787271973)

ப.அப்துல் சமது, பொதுச் செயலாளர்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்