Saturday, November 10, 2012

இலங்கை வெளிக்கடை சிறையில் கலவரம்: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்


மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி வெளியிடும் பத்திரிகை அறிக்கை:
இலங்கை கொழும்பு வெளிக்கடை சிறையில் இன்று திடீர் கலவரம் ஏற்பட்டு ஐந்து பேர் உயிரிழந்திருப்பதாகவும், ஏராளமானோர் காயம் அடைந்திருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
முன்பு 1983ல் இதே வெளிக்கடை சிறையில்தான் தமிழ் விடுதலைப் போராளிகளான தங்கமணி, ஜெகன் குட்டிமணி உட்பட 27 தமிழர்கள் சிங்களப் பேரினவாத தூண்டுதலில் படுகொலை செய்யப்பட்டனர். அதுவே இலங்கையில் தமிழர்கள் ஆயுதமேந்தி போராடும் நிலையை ஏற்படுத்தியது.
தற்போது அதே வெளிக்கடை சிறையில் கலவரம் வெடித்திருக்கிறது. அங்கு விசாரணைக் கைதிகளாக ஏராளமான தமிழ் கைதிகள் உள்ளனர். அதில் இந்தியர்கள் உள்ளிட்ட பன்னாட்டு கைதிகளும் உள்ளனர். அவர்களின் நிலை என்னவாயிற்று என்று தெரியவில்லை.
சிறப்புக் காவல் படையினர், சோதனை என்ற பெயரில் பல கைதிகளை நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்ததுதான் கலவரத்திற்கு காரணம் என முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு இலங்கை அரசே பொறுப்பு என்ற வகையில் இலங்கை அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

(எம். தமிமுன் அன்சாரி)

news by:tmmk.in

No comments :