Saturday, November 26, 2011

அரசு கண்டித்து வால் போஸ்ட்

கீழக்கரை தமுமுக அலுவலகத்துல வைத்து நடத்த தர்பியா





இன்று 25 / 11 / 2011 கீழக்கரை தமுமுக அலுவலகத்துல வைத்து நடத்த தர்பியா நடந்தது இந்த தர்பியா கூடத்துக்கு தமுமுக மாநில துணை செயலாளர் கோவை செய்யாது அவர்கள் இன்றைய முஸ்லிம்களின் நிலை என்ன என்று சிறப்புரையாற்றினர். பின்பு கீழை ஹசன் அவர்கள் தமுமுகவில் இருத்து அப்படி பணி செய்வது என்று உரையாற்றினர். இந்த கூட்டம் த.மு. மு.க., -ம.ம.க மாவட்ட பொருளாலர் அன்வர் தலைமை தாங்கினார் துணை தலைவர் அஜ்முள் கான் கீழக்கரை நகர் அமைப்புக்குழு உறுப்பினர்கள மற்றும் வார்டு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டவர்கள்.

திருப்புரில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கீழக்கரை தமுமுக சார்பாக 10000rs தமுமுக மாநில துணை செயலாளர் கோவை செய்யாது அவர்கள் இடம் வழக்கப்பட்டது

Thursday, November 24, 2011

பஸ் டூவீலரில் மோதி கீழக்கரையை சேர்ந்த இளம் கர்ப்பிணி பெண் உயிரழப்பு !



கீழக்கரை பழைய குத்பா பள்ளி தெருவை சேர்ந்த காய்கறி வியாபாரி சேனா என்பவரின் மகன் முகம்மது ஹனிபா என்பவரின் மனைவியுமான செய்யது அலி பாத்திமா(30) கர்ப்பிணியான இவர் சம்பவத்தன்று அவருடைய கணவர் முகம்மது ஹனிபாவுடன் ராமநாதபுரம் மருத்துவமனையில் பரிசோதனை செய்வதற்காக டூவீலரில் அவரது மூத்த பெண் குழந்தையுடன் ஆர்.எஸ் மடை அருகே உள்ள பால்கரை பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்த போது பின்னால் அசுர‌ வேகத்தில் வந்த பஸ் ஒன்று இவர்கள் பயணம் செய்த டூவீலரில் மோதியது.இதனால் டூவீலரில் பயணம் செய்தவர்கள் தூக்கி வீசப்பட்டதில் செய்யது அலி பாத்திமா விழுந்தார் இதில் அவருடை இடுப்பு பகுதியில் பஸ் சக்கரம் ஏறியதில் சம்பவ இடத்திலேயே பாத்திமா உயிரழந்தார். இறந்த பாத்திமாவின் உடலை ராமநாதபுரம் பி1 காவலர்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் வழக்கு பதிவு செய்த விபத்துகுள்ளாக்கிய பஸ்சையும்,டிரைவரையும் தேடி வருகின்றனர்.

மருத்துவ பரிசோதனைக்கு சென்ற செய்யது அலி பாத்திமா உயிரற்ற உடலாக‌ பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பபட்டது அப்பகுதியில் உள்ளோர் நெஞ்சை உறைய வைத்தது.இச்சம்பவம் கீழக்கரை பகுதியில் மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

news by: keelakaraitimes.com

Friday, November 18, 2011

கீழக்கரையில் த.மு. மு.க., -ம.ம.க., செயற்குழு கூட்டம்

கீழக்கரையில் த.மு. மு.க., -ம.ம.க., செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் சலிமுல்லா கான் தலைமையில் நடந்தது. நகர் அமைப்புக்குழு உறுப்பினர்களாக ஹெச்.சீனி ஜகுபர் சாதிக், ஐ.செய்யது இபுராகிம், எம்.ஏ.ஹமீது இக்பால், ஏ.சேக் தாவுத் சாதிக், கே.ராஜா ஹூசைன், எச்.ஜெயினுல் ஆப்தீன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

Wednesday, November 16, 2011

டிசம்பர் 6 – போராட்ட அறிவிப்பு

டிசம்பர் 6 அன்று, பாப்ரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் விரைந்து நீதி வழங்கக் கோரியும், லிபர்ஹான் ஆணைய பரிந்துரையின்படி பாப்ரி மஸ்ஜிதை இடித்த குற்றவாளிகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரியும் தமுமுக சார்பில் மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் பெருநகரங்களில் “கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்’ நடத்தப்படும் என்றும், ஆர்ப்பாட்டத்தின் இறுதியில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கான கோரிக்கை மனு மாவட்ட நீதிபதியிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும் 15.11.2011 அன்று நடைபெற்ற தலைமை நிர்வாகக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Sunday, November 13, 2011

தமிழ் மலர் news paper


கீழக்கரை வரலாற்றில் முதன் முதலாக ஒரு எம்.எல்.ஏ குறை தீர்க்கும் நாள் என ஒரு நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்து








கீழக்கரையில் குறை கேட்கும் நாளை இராமாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் ஏற்பாடு செய்து இருந்தார்.
அந்நிகழ்ச்சி கீழக்கரை நகராட்சியில் நடைபெற்றது. இதில் ஊரின் பல அமைப்புகள், ஜமாஅத்துக்கள் மற்றும் பொது மக்கள் தங்கள் குறைகளை எம்.எல்.ஏவிடம் கொடுத்தனர். அதை பெற்றுக் கொண்ட ஜவாஹிருல்லாஹ் அவர்கள், உரிய அதிகாரிகளிடம் அதற்கான தீர்வை பெற்று வழங்கினார்.
கீழக்கரையின் சுகாதாரம், மின்சாரம், குடிநீர் மற்றும் சாலை போக்குவரத்து சம்பந்தமான பிரச்னைகளை கோரிக்கை மனுவாக கொடுத்தனர். கூட்டத்திலும் கேட்டனர். அதற்கு முறையான பதிலை உரிய அதிகாரிகளிடம் கேட்டு பெற்று தந்தார்.

கீழக்கரை வரலாற்றில் முதன் முதலாக ஒரு எம்.எல்.ஏ குறை தீர்க்கும் நாள் என ஒரு நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்து அதன் மூலம் மக்கள் பிரச்னைகளை கேட்டு அறிந்து அதற்கான தீர்வையும் பெற்று தர முயற்சித்த எம்.எல்.ஏவுக்கு கீழக்கரை பொது மக்கள் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.

கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் உள்ள அரங்கில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது .இந்நிகழ்ச்சிக்கு ஜவாஹிருல்லா.எம்.எல்.ஏ தலைமை வகித்தார். இம்முகாமில் கீழக்கரை அரசு மருத்துவமனை தலைமை அதிகார் அங்காளரெட்டி,டாக்டர் அசின் ,ராமநாதபுரம் வட்ட வழங்கல் தாசில்தார் செழியன்,மின் வாரியத்துறை போர்மேன் ரிச்சார்ட்,நகராட்சி துணை தலைவர் ஹாஜா முகைதீன்,காவ‌ல்துறை இன்ஸ்பெக்ட‌ர் இள‌ங்கோவ‌ன்,சுகாதார‌த்துறை அதிகாரி ச‌ர‌வ‌ண‌ன் ம‌ற்றும் அதிகாரிக‌ளும் ஏராள‌மான‌ பொது ம‌க்க‌ளும் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர்.இதில் பொது ம‌க்க‌ள் த‌ர‌ப்பில் 40க்கும் மேற்ப‌ட்ட‌ ம‌னுக்க‌ள் கொடுக்க‌ப்ப‌ட்ட‌து.இதில் பெரும்பாலான‌வை சுக‌தார ச‌ம்ம‌ந்த‌ப்ப‌ட்ட‌ புகார்க‌ள் என கூற‌ப்ப‌டுகிற‌து.
இது குறித்து ஜ‌வாஹிருல்லா.எம்.எல்.ஏ கூறிய‌தாவ‌து, அனைத்து ம‌னுக்க‌ளையும் க‌லெக்ட‌ரின் பார்வைக்கு எடுத்து சென்று போர்க்கால‌ அடிப்ப‌டையில் ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வ‌லியுறுத்துவேன் என்றார்.

Wednesday, November 9, 2011

மக்கள் குறைதிற்கும் நாள் நடைபெற உள்ளது

கீழக்கரை வருகின்ற 12 / 11 / 2011 அன்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் தலைவரும், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான எம்.ஹெச்.ஜவாஹிருல்லா MLA அவர்கள் நடத்தும் மக்கள் குறைதிற்கும் நாள் நடைபெற உள்ளது. இடம் கீழக்கரை நகராட்சி. மணி காலை 11 முதல் பகல் 1 மணி வரை நடைபெறும்
உங்கள் குறைகளை சொல்ல தொடர்புக்கு: 9841624418. 9442522114.9789396930.9047015891.9677985888.

Sunday, November 6, 2011

ஈதுல் “ அல்ஹா ” (ஹஜ் பெருநாள்) நல் வாழ்த்துக்கவாழ்த்து

அஸ்ஸலாமு அலைக்கும்.
அன்பார்ந்த எனது கழகத்து சகோதர சகோதரிகள் மற்றும் நண்பர்களுக்கும் கீழக்கரை தமுமுகவின் ஈதுல் “ அல்ஹா ” (ஹஜ் பெருநாள்) நல் வாழ்த்துக்கவாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

Saturday, November 5, 2011

கீழக்கரை நகராட்சி சேர்மன் மற்றும் கவுன்சிலர்களின் போன் நம்பர்கள்

புதுபிக்கப்பட்ட மஸ்ஜிதுல் மன்பஈ பள்ளிவாசல் திறப்பு விழா



கீழக்கரை வடக்குத்தெருவில் புதுபிக்கப்பட்ட மஸ்ஜிதுல் மன்பஈ பள்ளிவாசல் திறப்பு விழா நேற்று மாலை 5மணியளவில் பள்ளிவாசல் கட்டிடக்குழு தலைவர் சேகுமுகைதீன் தலைமையில் நடைபெற்றது இவ்விழாவில் தமுமுக தலைவர் ராம‌நாத‌புர‌ம் ச‌ட்ட‌ம‌ன்ற‌ உறுப்பின‌ர் ஜ‌வாஹிருல்லாஹ் MLA அவர்கள் சிறப்புரையாற்றினர்.