Sunday, January 31, 2010

குடியரசு தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம்.

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்..)

குடியரசு தினத்தை முன்னிட்டு இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் கிழக்கு தமுமுக மற்றும் கீழக்கரை தமுமுக இணைந்து மாபெறும் இரத்ததான முகாம் நடைப்பெற்றது.நூற்றுக்கும் மேர்பட்டோர் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தனர்.





Tuesday, January 26, 2010

திருப்பூர் மாவட்ட த மு மு க மாவட்ட தலைவர் மீது போலீஸ் தாக்குதல்....



திருப்பூர்- ஜனவரி-26

போலீஸ் ஸ்டேஷனில் தமுமுக மாவட்ட தலைவர் தாக்கப்பட்டதாக கூறி, திருப்பூர் தெற்கு போலீஸ் ஸ்டேஷனை தமுமுகவினர் நேற்று இரவு முற்றுகையிட்டு மறியல் செய்தனர். விடிய விடிய பதற்றம் நிலவியது.
திருப்பூர், கோம்பைத் தோட்டத்தைச் சேர்ந்தவர் முஹம்மது யூசுப் (வயது 42) . தமுமுக மாவட்ட தலைவர். இவர் மீது பொய் புகார் கூறி திருப்பூர் தெற்கு போலீஸ் ஸ்டேஷனில் புகார் தெரிவித்தார். விசாரணைக்காக முஹம்மது யூசுப் நேற்று திருப்பூர் தெற்கு போலீஸ் ஸ்டேஷன் வரவழைக்கப்பட்டார்.
எந்த ஒரு விசாரனை இல்லாமல் இவரை ஏ டி எஸ் பி முருகசாமி. மற்றும் பெண் எஸ் ஜ மல்லிகா. இவரை கண்முடிதானமாக தாக்கிறார்கள். இவர் அப்போது நான் தமுமுக மாவட்ட தலைவர் என்று கூறிகிறார் அதற்கு நீ எவன இருந்த எனக்கு என்ன என்று முருகசாமி கூறிகிறார். பிறகு இவரை நிர்வான படுத்தி தாக்க முயற்ச்சிகிறார் அனால் இவர் கதறிகிறார். இவரை மிண்டும் மிண்டும் தாக்கிறார்கள். அப்போது யூசுப் நான் இப்போது தான் தலையில் ஆப்ரோஷன் செய்து உள்ளோன். நான் என்ன தவறு செய்தோன் சொல்லுங்கள். கேட்டுகிறர் ஆனாலும் இவரை விட்டு விடவில்லை. பிறகு மாவட்ட தமுமுக. மாவட்ட மனித நேய மக்கள் கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் கிடைக்க உடனே காவல் நிலையம் முன்பு முற்றுகையிட்டனர்.
பிறகு உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிந்தயுடன். டி.எஸ்.பி. ராஜா தலைமையில் ஏராளமான போலீஸ் அங்கு குவிக்கப்பட்டனர்.
போலீசாரை கண்டித்து தாராபுரம் ரோட்டில் தமுமுகவினர் சாலைமறியலும் ஈடுபட்டனர். போக்குவரத்து மாற்றிவிடப்பட்டது. டி.ஐ.ஜி. பாலநாகதேவி, எஸ்.பி. அருண் ஆகியோர் முற்றுகையிட்டவர்களுடன் பேச்சுவார்தை நடத்தினார்.
தமுமுக மாநில செயலாளர் உமர், கோவை மாவட்ட மனித நேய மககள் கட்சி மாவட்ட செயலாளர் சுல்தான் அமீர், மாவட்ட தமுமுக தலைவர் பஷிர், திருப்பூர் மாவட்ட செயலாளர் ஹாலிதீன், ஆகியோருடன் உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. பிறகு யுசுப் அவர்களை கோவை மருத்துவ கல்லுரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். முற்றுகை, சாலைமறியலால், விடிய, விடிய பதற்றம் நீடித்தது. இச்சம்பவத்தை தொடர்ந்து கோவை, திருப்பூரில் போலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Monday, January 25, 2010

திருவாரூரில் நடைபெற்ற ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை மாநாட்டில்






திருவாரூர்,​​ ஜன.​ 24:​ சிறுபான்மையினருக்கு தேசிய அளவில் கல்வி,​​ வேலைவாய்ப்பு ஆகியவற்றில் 15 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென்ற ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்று இடஒதுக்கீட்டை வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ​ ​ மனித நேய மக்கள் கட்சி சார்பில் திருவாரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை மாநாட்டில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ​ ​ மேலும்,​​ மரபணு மாற்றம் செய்யப்பட்ட பிடி கத்தரிக்காயை இந்திய மண்ணில் அனுமதிக்கக் கூடாது.​ மான்சாண்டோ நிறுவனத்தின் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி விதைகளே ஆந்திர விவசாயிகளைத் தற்கொலைக்குத் தள்ளின.​ தாய்நாட்டின் மண்ணைத் தரிசாக்கும் வெளிநாட்டு விதைகளுக்குத் தடைவிதிக்க வேண்டும். ​ ​ இறக்குமதி கோதுமைக்கு அதிக விலை கொடுக்கத் தயாராக உள்ள மத்திய அரசு,​​ உள்நாட்டில் உற்பத்தியாகும் உணவு தானியங்களுக்கு உரிய கொள்முதல் விலை வழங்க மறுப்பது கொடுமை.​ நெல்,​​ கரும்பு விவசாயிகள் நிர்ணயிக்கும் நியாயமான கொள்முதல் விலையை அரசு வழங்க வேண்டும். ​ ​ புதிய குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்தவர்களுக்கு ஓராண்டுக்கு மேலாகியும் புதிய அட்டைகள் விநியோகிக்கப்படவில்லை.​ ஜாதி,​​ மத வெறியைத் தூண்டும் வகையில் பொதுஇடங்களில் பேசுபவர்களைக் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்ய வேண்டும். ​ ​ திருவாரூரில் மத்தியப் பல்கலைக்கழகம்,​​ அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கிய மத்திய,​​ மாநில அரசுகளுக்கு நன்றி.​ வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்பவர்களில் திருவாரூர்,​​ தஞ்சாவூர்,​​ நாகை,​​ புதுக்கோட்டை,​​ கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் அதிகம் என்பதால் திருவாரூரில் விமான நிலையம் அமைக்க வேண்டும்.​ இதன் மூலம் காரைக்கால்,​​ நாகையில் செயல்படும் துறைமுகங்களின் முன்னேற்றம்,​​ வளர்ச்சி அதிகமாகும்.​ ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் தஞ்சாவூரில் பாஸ்போர்ட் அலுவலகம் அமைக்க வேண்டும். ​ ​ அகல ரயில் பாதை பணிக்காக நிறுத்தப்பட்ட நாகூரிலிருந்து சென்னை,​​ எர்ணாகுளம்,​​ பெங்களூர் ஆகிய ஊர்களுக்குச் சென்ற ரயில்களை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.​ மேலும் நாகூரிலிருந்து மும்பை,​​ தில்லி,​​ கொல்கத்தா போன்ற நகரங்களுக்கும் ரயில் போக்குவரத்தை ஏற்படுத்தித் தர வேண்டும். ​ ​ மீனவர்களின் பாரம்பரிய உரிமையைப் பறிக்கும் வகையில் மத்திய அறிமுகப்படுத்தவுள்ள புதிய மீன்பிடி மசோதாவை உடனடியாக நிறுத்த வேண்டும்.​ தமிழக மீனவர்களைத் தொடர்ந்து தாக்கி,​​ படுகொலை செய்யும் இலங்கை கடல்படையை இந்த மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.​ சர்ச்சைக்குரிய பகுதிகளில் இந்திய கடல்படை ரோந்து சென்று தமிழக மீனவர்களைப் பாதுகாக்க வேண்டும். ​ ​ ஆதிக்கச் சக்திகளுக்கு அஞ்சாமல் தமிழகத்துக்கு பெரும் நன்மை பயக்கக் கூடிய சேதுக் கால்வாய் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும். ​ ​ தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தை ஆண்டுக்கு 200 நாளாகவும்,​​ கூலியை ரூ.150-கவும் உயர்த்தி வழங்க வேண்டும்.​ குடியிருக்க இடமில்லாத பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை,​​ ஆதிதிராவிட மக்களுக்கு அரசு வழங்கிய இலவச வீட்டுமனைகளை அதிகாரிகளோ அபகரித்துக் கொள்வதைத் தடுத்து,​​ ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இலவச வீட்டுமனைகள் அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ​ ​ மாநாட்டுக்கு திருவாரூர் மாவட்டச் செயலர் எம்.​ முஜிபுர் ரஹ்மான் தலைமை வகித்தார். ​ ​ மனிதநேய மக்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் எம்.எச்.​ ஜவாஹிருல்லா,​​ பொதுச் செயலர் பி.​ அப்துல் சமது,​​ பொருளாளர் எஸ்.எம்.​ ஹாருண் ரஷீது,​​ துணைப் பொதுச் செயலர் எம்.​ தமீமுன் அன்சாரி,​​ அமைப்புச் செயலர் எஸ்.எம்.ஜெய்னுல் ஆபிதீன்,​​ மக்கள் உரிமை கூட்டமைப்பின் செயலர் புதுவை கோ.​ சுகுமாறன்,​​ தாளாண்மை உழவர் இயக்கத் தலைவர் கோ.​ திருநாவுக்கரசு உள்ளிட்டோர் பேசின


Friday, January 22, 2010

டென்மார்க் நாட்டில் பெண்கள் பர்தா அணிய தடை


கோபன்கெகன், ஜன.21-

டென்மார்க் நாட்டு பத்திரிகை ஒன்று முகமதுநபி படத்தை வெளியிட்டதால் சர்ச்சை எழுந்தது. இப்போது அங்கு முஸ்லிம் பெண்கள் பர்தா அணிய தடை விதித்து புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளனர்.
டென்மார்க் நாட்டில் மொத்த மக்கள் தொக 55 லட்சம். இதில் 1.9 சதவீதம் பேர் முஸ்லிம்கள். 1 லட்சம் முஸ்லிம் பெண்கள் உள்ளனர். அவர்களில் ஒரு பகுதியினர் பர்தா அணியும் பழக்கத்தை கொண்டுள்ளனர்.
அவர்கள் பர்தா அணிய தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதுபற்றி ஆராய அரசு குழு ஒன்றை அமைத்தது. அவர்கள் பர்தா அணிய தடை விதிக்கலாம் என்று சிபாரிசு செய்தனர்.
இதையடுத்து அந்த நாட்டு பிரதமர் ரசும்சென் டென்மார்க்கில் பெண்கள் பர்தா அணியக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
டென்மார்க் வெளிப்படையான ஜனநாயக நாடு. இங்கு யார்-யாரை சந்தித்தாலும் அவர்களுக்குள் பேசிக்கொள்ளலாம். எனவே யாரும் முகத்தை மறைத்து செல்வதற்கு அனுமதிக்க முடியாது. எனவேதான் பர்தா அணிய தடை விதிக்கப்படுகிறது என்று கூறினார்.

இதேபோல பிரான்ஸ் நாட்டில் பஸ் மற்றும் ரெயில்கள், பொது போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்வோர் பர்தா அணியக் கூடாது என்று தடை விதிக்க திட்டமிட்டு உள்ளனர்.

ஜோதிபாசு மரணம். தமுமுக இரங்கல்

Thursday, January 14, 2010

முஸ்லிம்கள் ஏன் பொங்கலைக் கொண்டாடுவதில்லை?

பொங்கல் விழா தமிழர் திருநாள் தானே. முஸ்லிம்கள் ஏன் அதை விமரிசையாகக் கொண்டாடுவதில்லை? பலர் இப்படி கேட்பதுண்டு. நமது கொள்கைக் கோட்பாடுகளை நன்கறிந்த ஒரு முஸ்லிமல்லாத கல்வியாளர் நம்மிடம் இவ்வாறு கேட்டார்.
திட்டங்களை அள்ளித் தெளித்து பணங்களை குவித்தது இந்த நிறுவனம்.
பொங்கல் திருநாளின் கோட்பாடுகள் என்ன என்று வினவினோம்.
* அறுவடையாகி வீடு வரும் புது நெல்லில் பொங்கல் செய்து, சுற்றங்கள், நட்புகளுக்கு விருந்தளித்து மகிழ்தல்,
* விவசாயத்திற்கு உதவிகரமான சூரியனுக்கும், மாடுகளுக்கும் நன்றி தெரிவித்தல்,
* உறவுகள் வளரும் வகையில் வீர விளையாட்டுகள் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி சமூக ஒருங்கிணைப்பை உண்டாக்குதல்,
* இவையெல்லாம் பொங்கல் விழாவின் பின்னணிகள் என்றார்.
அப்படிப் பார்த்தால், முஸ்லிம்கள் ஆண்டு முழுவதும் பொங்கல் கொண்டாடி வருகிறோம் என்றோம். அறுவடை நெல் வந்தாலும் வராவிட்டாலும், அண்டை வீட்டாருடன் உணவைப் பகிர்ந்து கொள்வது நபிகள் நாயகம் வலியுறுத்தியுள்ள வழிமுறை.
ஆட்டின் குளம்பைக் கொண்டு குழம்பு வைத்தாலும் சற்று (தண்ணீரை சேர்த்து) அதிகமாக வையுங்கள். அண்டை வீட்டாருடன் பகிர்ந்து கொள் வதற்காக என்று நபிகள் நாயகம் தம் மனைவி ஆயிஷா (ரலி) அவர்களிடம் கூறியுள்ள செய்தி வரலாற்றில் பதிவாகி யுள்ளது.
சென்னை போன்ற மாநகரங்கள் விவசாயத்திற்குச் சம்பந்தமில்லாத வாழ்க்கை முறைக்கு வழுக்கி விழுந்து விட்டன. கடையில் அரிசி வாங்கி இங்கும் பொங்கல் கொண்டாடப் படுகிறது. ஆனால் இங்குதான், அடுத்த வீட்டில் யார் வசிக்கிறார் என்று அறியாத கூட்டம் வாழ்ந்து வருகிறது.
அடுத்த கிரகங்கள் எல்லாம் அண்டை வீடுகளாகிவிட்ட இந்த அறிவியல் யுகத்தில் அண்டை வீடுகள் நமக்கு வேற்று கிரகங்கள் போல் விலகி விட்டன. இது மிக அவலமான சமூக விபத்து.
“அடுத்த வீட்டார் பசித்திருக்க, தான் மட்டும் வயிறாற உண்பவர் உண்மை யான முஸ்லிம் இல்லை'' என்றார்கள் நபிகள் நாயகம். “அண்டை வீட்டார் யார்? என்று கேட்டதற்கு “உங்கள் வீட்டின் இரு மருங்கிலும் உள்ள 40 வீடுகளைச் சேர்ந்தோர் உங்களுக்கு அண்டை வீட்டார்தான்'' என்று நாயகம் விளக்கமளித்தார்கள்.
உணவையும், நல்லுணர்வையும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது இஸ்லாமிய கோட்பாடு. அது எல்லா நாளும் தொடர வேண்டும். ஒருநாள் கொண்டாட்டத்தோடு முடிந்து விடாது.
சூரியனுக்கு நன்றியா?
சூரிய ஒளிதான் விவசாயத்திற்கு உதவுகிறது. மாடுகள் உழவுக்குப் பயன் பட்டன. ஆகவே அவற்றிற்கு நன்றி தெரிவிப்பது பொங்கலின் ஓர் அம்சம். நன்றி சொல்வது ஒரு மேன்மை மிகுந்த பண்பு. பழந் தமிழினம் மேன்மையான குணங்கள் நிரம்பிய இனம். ஆயினும் நாம் நன்றி சொல்வதை சூரியனோ, மாடுகளோ விளங்கிக் கொள்வதில்லை.
மாறாக, சூரியனையும், மாடுகளையும் படைத்த உன்னத இறைவனிடம் நாம் உண்ணும் ஒவ்வொரு பருக்கை உணவுக்கும் நன்றி சொல்லக் கடமை பட்டவர்கள் என்று உணர வேண்டும்.
மாடுகளைப் பூட்டி உழவு செய்த காலம் போய் இப்போது ட்ராக்டர் போன்ற கருவிகள் வந்துவிட்டன. மாட்டுக்கு நமது நன்றி புரியும் என்று மாட்டுப் பொங்கல் கொண்டாடினால், இப்போது ட்ராக்டருக்கு கொண்டாட வேண்டும்.
ஆண்டில் ஒருமுறை அறுவடை செய்தபோது தைப் பொங்கல். பலமுறை அறுவடை செய்யும் காலம் இப்போது வேளாண் புரட்சியால் விளைந்திருக்கிறது.
பொங்கலை ஒரு திருநாளாகக் கொண்டாடும் தமிழர்கள், அதன் விழுமி யங்களுக்குத்தான் விழா கொண்டாட வேண்டும்.
நபிகள் நாயகம் இஸ்லாமியப் பெரு நாளில் வீர விளையாட்டுக்களை நடத்தி யுள்ளார்கள். அவை வீரத்திற்கும், சமுதாய ஒற்றுமைக்கும் முக்கியத்துவம் தருவ தாகத்தான் இருக்க வேண்டும். பிற உயிர்களை வதைத்து, இன்பம் காண் பதாக இருக்கக் கூடாது.
பொங்கல் என்பது மதப் பண்டிகை அல்ல, அது ஒரு விழா தான். ஆயினும் முஸ்லிம்கள் அதை விமரிசையாகக் கொண்டாடவில்லை என்ற கூற்றுக்கு சூரிய வழிபாடு போன்ற ஆரியக் கருத் துக்கள் பொங்கலில் ஊடுருவியது ஒரு காரணம்.
பொங்கலை முஸ்லிம்கள் கொண்டாட வேண்டும் என்று வலியுறுத்திய நண்பர் இந்துத்துவ வெறியாளர் இல்லை. மதங்களைக் கடந்து மனிதர்கள் ஒன்று பட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கம் உள்ளவர்.
முஸ்லிம்கள் எப்போதும் ஒற்றுமைக்கு உடன்பாடுடையவர்கள். பண்டைய வரலாற்றின் பக்கங்களே இன்றைய மக்களுக்கு இதை எடுத்துரைக்கும்.
-ஹாஜாகனி

துபை முமுக வின் வாராந்திர(15-JAN-09) சிறப்பு நிகழ்ச்சி

இன்ஷா அல்லாஹ் வருகின்ற 15-ஜனவரி வெள்ளியன்று இரவு 8.30 மணியளவில், நமது துபை முமுக மர்கஸில், தமுமுக வின் மாநில துணைப் பொதுச்செயலாளர் சகோதரர் J.S.ரிஃபாயி அவர்கள் சமுதாய முன்னேற்றத்தில் நமது பங்கு என்ற தலைப்பில் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலமாக சிறப்புரையாற்ற ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அவர்களின் இக்கட்டான சூழ்நிலையின் காரணமாக அவருடைய வீடியோ கான்ஃபரன்ஸ் நிகழ்ச்சி இரத்து செய்யப்பட்டு, அதற்கு பகரமாக முமுக துபை மண்டல தலைவர் சகோதரார் அப்துல் காதரர் அவர்கள் ஒழுக்கம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்ற இருக்கின்றார்கள். அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

முமுக வின் வாராந்திர(15-JAN-09) சிறப்பு நிகழ்ச்சி

இன்ஷா அல்லாஹ் வருகின்ற 15-ஜனவரி வெள்ளியன்று இரவு 8.30 மணியளவில், நமது துபை முமுக மர்கஸில், தமுமுக வின் மாநில துணைப் பொதுச்செயலாளர் சகோதரர் J.S.ரிஃபாயி அவர்கள் சமுதாய முன்னேற்றத்தில் நமது பங்கு என்ற தலைப்பில் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலமாக சிறப்புரையாற்றயிருக்கின்றார்கள். அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

Monday, January 11, 2010

ஊடகங்களின் பார்வையில் தமுமுக தலைவருக்கு உள்துறை அமைச்சர் எழுதிய கடிதம்


E-mailPrintPDF

உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தமுமுக தலைவருக்கு எழுதிய கடிதம் தினமலர், டெக்கான் ஹெரால்ட், பி.டி.ஐ ஆகிய பத்திரிக்கைகளில் வெளியாகி உள்ளன.



Friday, January 8, 2010

கீழக்கரை மாணவர்களுக்கு தேசிய அளவிலான பரிசு

கீழக்கரை, ஜன. 7: நாசா அமைப்பு சார்பில் கட்டடக்கலை மாணவர்களுக்கு சென்னையில் நடத்தப்பட்ட தேசிய அளவிலான போட்டிகளில் கீழக்கரை கல்லூரி மாணவர்கள் அர்பன் ரிடிசைன் என்ற போட்டியில் வெற்றிபெற்று தேசிய அளவிலான சிறப்புப் பரிசை பெற்றுள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக நடைபெற்ற கருத்தரங்கில் இந்தியா, நேபால், இலங்கை, பாகிஸ்தான் உள்பட பல நாடுகளை சேர்ந்த 120-க்கும் மேற்பட்ட கல்லூரி கட்டடக்கலை பிரிவு மாணவர்கள் கலந்துகொண்டனர்.

இந்தக் கருத்தரங்கைத் தொடர்ந்து பல பிரிவுகளில் கட்டடக் கலை தொடர்பான போட்டிகள் நடைபெற்றன.

இதில் அர்பன் ரிடிசைன் என்ற போட்டியில் கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரி கட்டடக்கலை மாணவர்கள் கலந்து கொண்டு தேசிய அளவிலான சிறப்பு பரிசை பெற்றனர்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர் எ. செய்யது அப்தாகிர், கல்லூரி சேர்மன் எஸ்.எம்.ஹமீது அப்துல் காதர், செயலாளர் எஸ்.எம். கபீர் சாகிப், சிறப்பு இயக்குநர் எஸ்.எம். யூசுப்சாகிப் ஆகியோர் பாராட்டுகளை தெரிவித்தனர்.

மனித நேய மக்கள் கட்சி சார்பாக திமுக கவுன்சிலர்யை கண்டித்து ஆர்பாட்டம் கோவையில்


கோவை புறநகர் பகுதியான குறிச்சி, நகராட்சி துனைத்தலைவரும், 1-வது வார்டு ஆத்துபாலம் பகுதி கவுன்சிலருமான இ.எம். அனிபாவை கண்டித்து 1-வது வார்டு பொதுமக்களும், மனித நேய மக்கள் கட்சியும் இனைந்து கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றுது, 1-வது வார்டுக்குட்பட்ட ஆத்துப்பாலம் பகுதியில் உள்ள காயிதே மில்லத் காலனியில் பாட்ட ஏற்பாடு செய்ய கோரி பலமுறை கூறியும் அதில் அசட்டையாக இருந்து. ஆத்துபாலம் பகுதியில் சாக்கடை நீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை சுத்தம் செய்ய ஏற்பாடு செய்யாமை சாக்கடை சுத்தம் செய்யாதால் கடந்த 25-11-05 அன்று அசாருதீன் என்ற சிறுவன் டெங்கு காய்ச்சால் இறந்தது கூறியும் அசட்டையாக இருந்தது. 1-வது வார்டில் குப்ழபத்தொட்டி வைக்காமல் அதை 2-வது வார்டில் உள்ள மண்டபங்கள் முன்பு வைத்தது. டி.எ.ஹச்.காலனியில் பொது சுகாதாரக் கழிப்பிடம் 3 வருடமாகக் கேட்டும் ஏற்பாடு செய்யாதது, தெரு விளக்குகள் முறையாக அமைக்காமல் இருப்பது. குடிநீர் விநியோகம் சரிவர முறைப்படுத்தால் வார்டு மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள்.
மேலும் 1-வது வார்டு, 2-வது வார்டு பகுதிகளில் ராஜ வாய்க்கால் அருகில் கடந்த 40 ஆண்டுகளாக குடியிருந்து வரும் மக்களை ஒவ்வொரு மழைக்காலங்களிலும் மாவட்ட வருவாய் அதிகாரிகள் திடீரென காலி செய்ய வேண்டும் என அச்சுறுத்துவதை நகராட்சி கண்டு கொள்வதில்லை.
மேலும் நகராட்சிப் பகுதிகளில் துப்புரவு தொழிலாளர்களின் எண்ணிக்கையை அதிகபபடுத்தி, கொசு ஒழிப்பு நடவடிக்கைளையும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீரையும் நகர மக்களுக்கு வழங்க வேண்டும். என தழிழக அரசுயின் கவணத்திற்காக இந்த ஆர்பாட்டம் நடத்தபாட்டது.
இந்த ஆர்பாட்டதிற்க்கு அந்த பகுதி பொதுமக்கள் பெண்கள் மற்றும் தமுமுக, மனித நேய மக்கள் கட்சியினர் கலந்து கொண்டார்கள். இதில் தமுமுக மாவட்ட தலைவர் அப்துல் பஷிர் தலைமையில். மனித நேய மக்கள் கட்சி மாவட்ட பொருளாளர் அப்பாஸ், துனை செயலாளர் ஷாஜகான். தமுமுக மாவட்ட செயலாளர் ரபிக். இளைஞர் மாவட்ட செயலளாளர் அப்பாஸ். மற்றும் ஜபார். பாபு. அஜிஸ். ஹக்கிம். 100க்கும் மேற்பட்டோர்கள் கலந்து கொண்டார்கள்
செய்தி,புகைப்படம் : கோவை தங்கப்பா



புதிய வரலாறு படைக்கும் அப்துற் ரஹிம் மருத்துவமனை

த மு மு க வின் மாநில செயலாளர் (காலம் சென்ற ) மவ்லவி.அப்துல் ரஹீம் பெயரில் கோவை மாவட்டம் குனியமுத்தூரில் மருத்துவ மனை துவக்கப்பட்டு ஒரு மாதம் நிறைவடைந்த சூழ ல் இந்த மருத்துவமனையின் சேவை குனியமுத்தூர் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

த மு மு க வின் மாநில செயலாளர் (காலம் சென்ற ) மவ்லவி.அப்துல் ரஹீம் பெயரில் கோவை மாவட்டம் குனியமுத்தூரில் மருத்துவ மனை துவக்கப்பட்டு ஒரு மாதம் நிறைவடைந்த சூழ ல் இந்த மருத்துவமனையின் சேவை குனியமுத்தூர் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த மருத்துவமனையின் மருத்துவக்குழுவில் பி. வெங்கடாசலம் (அறுவை சிகிச்சை மற்றும் பொது மருத்துவம்) திருமதி.மாலா வெங்கடாசலம் (மகப்பேரு மற்றும் பொது மருத்துவம்) டாக்டர். மானேக் ஆகிய 3 மருத்துவர்கள் மற்றும் 2 செவிலி யர்கள் உள்ளனர். மருத்துவமனையின் ஒரு பகுதியில் படுக்கை வசதியும், இன்னொரு பகுதியில் ஊசி மற்றும் மருந்துகள் வழங்கும் பிரிவும் இயங்கி வருகின்றது. ஒரு நாளைக்கு சராசரியாக 60 நோயாளிகள் வந்து சிகிச்சைப் பெற்று செல்கின்றனர்.

முஸ் லிம்கள் மட்டுமின்றி பிற சமுதாயத்தினரும் இம்மருத்துவமனைக்கு வந்து குறைந்த செலவில் சிகிச்சை செய்து கொள்ள தடையில்லை என்பதால் பிற சமுதாயத்தை சேர்ந்தவர்களும் இங்கு வந்து சிகிச்சையினை மேற்கொள்கிறார்கள். எவ்விதமான பாகுபாடு இல்லாமல் ஆரம்பிக்கப்பட்ட இந்த மருத்துவமனையானது கோவையில் சிறப்பு மிக்க இடத்தினைப் பிடிக்கும் என்றும் அங்குள்ள பொதுமக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
.
மருத்துவமனை காலை 10 மணியி ருந்து பகல் 2 மணியளவிலும் பின்னர் மாலை 5 மணியி ருந்து இரவு 9 மணி வரையிலும் இயங்கி வருகின்றனது. நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பார்வை நேரம் அதிகப்படுத்துப் படுகின்றது.



அப்துர் ரஹிம் மருத்துவமனையானது லாப நோக்கத்தில் செயல்படாமல் சேவை நோக்கத்தினை மட்டுமே கருத்தாக கொண்டுச் செயல்பட்டு வருகிறது. குறைந்த கட்டணமே (ரூ. 20 மட்டுமே) இங்கு வசூ க்கப்படுகிறது. இங்குள்ள மருத்துவர் எழுதித் தரும் மருந்துகளை இங்குள்ள மருந்தகத்தில் கொடுத்து மருந்துகளை கொள்முதல் விலைக்கே பெற்று கொள்ளலாம்.


இந்த மருத்துவமனையின் வளர்ச்சிக்கு மனிதநேய மிக்கவர்கள் நிதியுதவிகளை செய்வதன் மூலம் எக்ஸ்ரே, ஸ்கேனர், பல்வேறு அறுவைச் சிகிக்சைகள் கொண்ட அதிநவின மருத்துவமனையாக மாற்றிட இயலும்.

தமுமுகவின் எண்ணற்ற மனிதநேய சேவைக்கு புதிய வடிவத்தை இந்த அப்துர் ரஹிம் மருத்துவமனைப் பெற்றுத் தந்துள்ளது. இதனைப் பின்பற்றி இனி தமிழகமெங்கும் புதிய மருத்துவமனைகள் உருவாகுவதற்கு இது சிறந்த முன்னுதாரணமாக திகழ்கிறது என்பதில் ஐயமில்லை.

-ராமேஸ்வரம் ராஃபி

Thursday, January 7, 2010

துபை முமுக வின் வாராந்திர(08-JAN-09) சிறப்பு நிகழ்ச்சி

இன்ஷா அல்லாஹ் வருகின்ற 08-ஜனவரி வெள்ளியன்று இரவு 8.30 மணியளவில், நமது துபை முமுக மர்கஸில், சகோதரர் நாகூர் ஸையது அலிஅவர்கள் இறைத்தூதர்கள் வாழ்வினிலே... என்ற தலைப்பில் சிறப்புரையாற்றயிருக்கின்றார்கள். அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

Sunday, January 3, 2010

ஜிஹாதும் பயங்கரவாதமும் ஒன்று தான் என்ற மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தின் கருத்திற்கு தமுமுக தலைவர் கண்டன கடிதம்



E-mailPrintPDF
புதுடெல்யில் கடந்த டிசம்பர் 23 அன்று நடைபெற்ற மத்திய உளவுத்துறையின் 22வது ஐ.பி. என்டோமென்ட் சொற்பொழிவின் போது மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் ஜிஹாதை பயங்கரவாதத்துடன் ஒப்பிட்டு உரையாற்றினார். இந்த உரையை கண்டித்து தமிழ்நாடு முஸ் லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் முனைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் எழுதிய கடிதம்:
சமீபத்தில் மத்திய உளவுத்துறை (ஐ.பி.) கூட்டத்தில் வெறுக்கத்தக்க தீவிரவாதத்தை புனித ஜிஹாதிற்கு இணையானது என்று தாங்கள் பேசியதாக வெளிவந்துள்ள செய்தி சிறுபான்மை முஸ் லிம் சமூகத்தின் உணர்வுகளை மிக மோசமாக புண்படுத்தியுள்ளது. ஜிஹாத் என்பது ஒரு போராட்டம் தான். ஆனால் அது யாருக்கு எதிராக எந்த நிலையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது குறித்து உங்களுக்கு தெளிவுப்படுத்த விரும்புகிறேன். ஜிஹாத் என்பது பொய்மைக்கும் அநீதிக்கும் எதிராக தொடுக்கப்படும் போராட்டம் ஆகும். ஆனால் இந்த போராட்டம் வன்முறை வாயிலாக மட்டுமே நடத்தப்பட வேண்டும் என்று சொல்வது வடிகட்டிய பொய்யாகும்.

உங்கள் உரையில் சிலுவை யுத்தங்களை பாரம்பரிய போர்கள் என்றும் ஜிஹாதை நம்பிக்கையற்றோர் மீது தொடுக்கப்படும் யுத்தம் என்றும் நீங்கள் வேறுபடுத்தி பேசியதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இது உண்மைக்கு புறம்பான கருத்து என்பதை ஆணித்தரமாக தெரிவித்துக் கொள்கிறேன். சிலுவை யுத்தங்கள் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்த்தவர்கள் ஆகிய இரு சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இரு அரசுகளுக்கு இடையே அச்சமூகங்களின் ஆட்சியாளர்கள் தலைமையில் நடைபெற்ற முழுமையான யுத்தங்களாகும். முஸ் லிம்கள் இது போன்ற நிலையில் நடைபெறும் யுத்தங்களில் பங்குக் கொள்ளும் போது தான் அதனை ஜிஹாத் என்றழைக்க இயலும். இது போன்ற யுத்தங்களில் பங்குக் கொள்ளும் நிலையிலும் கூட முதியவர்கள், பெண்கள், குழந்தைகள், மதகுருமார்கள் மட்டுமல்லாது வழிப்பாட்டு ஸ்தலங்கள், நீர்நிலைகள், பயன் தரும் தாவரங்களை கூட எந்த காரணத்திற்காகவும் தாக்கக் கூடாது என்று இஸ்லாம் தெளிவான போர் நெறிமுறைகளை உருவாக்கியுள்ளது.

இறைவனோ அவனது இறுதித்துôதர் முஹம்மது (ஸல்) அவர்களோ பயங்கரவாதச் செயல் ஈடுபடுமாறு முஸ்லிம்களுக்கு கட்டளையிடவில்லை. உண்மையில் போர் நடைபெறும் நிலையில் கூட அதில் ஈடுபடாத அப்பாவி மக்களுக்கு எவ்வித துன்பமும் விளைவிக்க கூடாது உட்பட எவ்வித பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுவடுவதையும் இஸ்லாம் தடைச் செய்துள்ளது என்பதை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் உரையில் ஜிஹாதை பயங்கரவாதத்துடன் நீங்கள் ஒப்பிட்டுள்ளது மூலம் இஸ்லாம் கூறும் ஜிஹாத் கோட்பாடு குறித்த உங்கள் மனநிலை தெளிவற்றது என்பது வெளிச்சமாகியுள்ளது. எவ்வித தயக்கமும் இல்லாமல் ஆனால் முழு பொறுப்புடன் நான் ஒன்றை தெளிவுப்படுத்திக் கொள்கிறேன். பயங்கரவாதச் செயல் ஈடுபடும் முஸ்ம் ஒருவரை முஸ் ம் என்றே சொல்ல இயலாது. எனெனில் அமைதியை நிலைநாட்டும் மார்க்கமாக இஸ்லாம் விளங்குகின்றது.. அதன் பொருளும் அமைதி என்பதாகவே அமைந்துள்ளது.

பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் முஸ்லிம் கும்பல்களுக்கு தாங்கள் ஜிஹாதில் ஈடுபட்டுள்ளதாக கூறிக் கொள்ள எவ்வித உரிமையும் கிடையாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தீவிரப்போக்கை கைவிடுமாறு போதித்துள்ளார்கள். தீவிர போக்குத் தான் கடந்த கால சமூகங்கள் அழிந்ததற்கான கரணமாக இருந்தது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். சில முஸ் லிம் கும்பல்கள் தீவிரவாதச் செயல் ஈடுபட்டால் அவர்கள் இறைவனது உத்தரவிற்கு முரணான செயல்களில் ஈடுபட்டுள்ளார்கள் என்றே கருதப்படும். இத்தகைய போக்கை நியாயப்படுத்துபவர்கள் தோல்வியை தான் சந்திப்பார்கள். எனெனில் இவை இஸ்லாமிய மார்க்க நெறிமுறைகளுக்கு முரணாகவும் வெறுக்கத்தக்க பாவங்களாகவும் அமைந்துள்ளன. நீதியின் அடிப்படையிலும், பொறுமையுடனும். நிலைகுலையா தன்மையுடனும் நெருக்கடியான சூழல்களை எதிர்கொள்ளுமாறு திருக்குர்ஆன் வழிகாட்டியுள்ளது.. அநியாயமாக ஒரு மனிதரை கொலைச் செய்வது முழு மனித சமுதாயத்தையும் கொன்றதற்கு இணையானது என்று திருக்குர்ஆன் வயுறுத்துகின்றது. மனித உயிர் மிக புனிதமானது என்ற இஸ்லாத்தின் இந்த அடிப்படை தத்துவத்தை புரியாத நிலையில் தான் பயங்கரவாதிகள் தங்கள் செயல்களை அமைத்துக் கொள்கிறார்கள். அப்பாவி மக்கள் மீது நடத்தப்படும் பயங்ரவாதச் செயல்களை மிக வெறுக்கத்தக்கது என்றும் அதில் ஈடுபடுபவர்களை மிக மோசமான குற்றவாளிகள் என்று இஸ்லாமிய அறிஞர்கள் கருதுகிறார்கள்.

எதார்த்தமான உண்மைகள் இப்படியிருக்க நீங்கள் ஐ.பி. அதிகாரிகள் கூட்டத்தில் ஆற்றிய உரை எங்கள் சமூகத்திற்கு பெரும் மன உளைச்சலையும், வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இது முஸ் ம் சமூகத்திற்கும் மத்தியில் ஆட்சியில் உள்ள கட்சிக்கும் இடையிலான உறவையும் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது. இச்சூழல் நீங்கள் வெளிப்படுத்திய உண்மைக்கு புறம்பான கருத்தை நீங்கள் திரும்பப் பெற்று நீங்கள் நியாயவான் என்பதை உறுதி செய்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

அனைத்திந்திய முஸ் லிம் தனியார் சட்ட வாரியம், ஜமாஅத்தே இஸ்லாமி, 'ஷரிஅத் பாதுகாப்பு குழு போன்ற முஸ்லிம் அமைப்புகளும் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.

kilakarai tmmk given medical fund

nallai tmmk blood camp