Friday, May 28, 2010

தலைமை செயற்குழு வரும் ஜுன் 15ல் சேலத்தில் நடைபெறும்

ஜுன் 15ல் செயற்குழு சேலம தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த தலைமை செயற்குழு வரும் ஜுன் 15ல் சேலத்தில் நடைபெறும் என்று தலைமை கழக செய்திக் குறிப்பு தெரிவிக்கின்றது

Wednesday, May 26, 2010

சகோ. குணங்குடி ஹனீபா தமுமுக உறுப்பினர் அடையாள அட்டைய புதுப்பித்துக் கொண்டார்.

தமுமுக தலைமையகத்திற்கு இன்று மாலை (25.05.2010) சகோ. குணங்குடி ஹனீபா வருகை தந்தார். வருகை தந்து தமுமுக தலைமை நிர்வாகிகளை சந்தித்தார். அதனைத் தொடர்ந்து தமது தமுமுக உறுப்பினர் அடையாள அட்டைய புதுப்பித்துக் கொண்டார். அப்போது தமுமுக தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி, பொருளாளர் ஓ.யு. ரஹ்மத்துல்லாஹ், துணைப் பொதுச் செயலாளர் ஜே.எஸ்.ரிஃபாயி, மாநிலச் செயலாளர்கள் கோவை இ.உமர், மௌலா நாசர், பேரா. ஹாஜாகனி, மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது, பொருளாளர் எஸ். ஹாருன் ரசீது, து. பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி, அமைப்புச் செயலாளார் சம்சுன் நாசர் உமரி ஆகியோர் உடன் இருந்தனர்



மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவி ஜாஸ்மின்


மாணவி ஜாஸ்மின் தேர்வு முடிவு: பத்தாம் வகுப்பு தேர்வு முதலிடம்; 2 வதும். 3 வதும் மாணவிகளே சாதனைனை: பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டது. நெல்லை மாணவி ஜாஸ்மின் 495 மார்க்குகள் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார். இவர் நெல்லை டவுண் கல்லணை மாநகராட்சி எம்.பி.எல்., அரசுப்பள்ளியை சேர்ந்தவர். 494 மார்க்குகள் பெற்று சிவப்பிரியா ( வித்யாபவன் மேல்நிலைப்பள்ளி தாளப்பட்டி கரூர் ), , நிவேதா ( பாத்திமா மேல்நிலைப்பள்ளி கூடலூர்), பிரியங்கா ( ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி மடிப்பாக்கம் செங்கல்பட்டு), தமிழரசன் ( நேஷனல் மேல்நிலைப்பள்ளி அபிஷேகபாக்கம் புதுச்சேரி ), ஆகிய 4 பேர் 2 வது இடத்தை பிடித்துள்ளனர்.
3 வது இடத்தை பிடித்த 10 பேர் : 493 மார்க்குகள் பெற்று 10 பேர் 3 வது இடத்தை பிடித்துள்ளனர். இதிலும் 7 மாணவிகள் தங்களது 3 வது இடத்தை பிடித்தனர். ரம்பயா (ஏ.வி.எஸ்., மேல்நிலைப்பள்ளி புளியங்குடி தென்காசி ), ‌‌ஜெயலினி (சாராள் டக்கர் மேல்நிலைப்பள்ளி பாளையங்கோட்டை ), திலகவதி (ஏ.வி., மேல்நிலைப்பள்ளி பரமக்குடி), பிரதீப்குமரார் (சவுராஷ்ட்டிரா மேல்நிலைப்பள்ளி பரமக்குடி ), ஜெயமுருகன்(நாடார் மேல்நிலைப்பள்ளி சவுத்கேட் மதுரை ), நாகராஜன் (செயிண்ட்மேரிஸ் மேல்நிலைப்பள்ளி மதுரை) , இந்துஜா (லிட்டில் ஏஞ்சல் மேல்நிலைப்பள்ளி அனியாபுரம் நாமக்கல்), ராஜ்சூர்யா ( சேரன் மேல்நிலைப்பள்ளி , புன்னம்சத்திரம், கரூர் ), ரேவதி (விவேகானந்தன் மேல்நிலைப்பள்ளி செல்லபெருமாள்பேட்டை புதுச்சேரி) , நசுரின்பாத்திமா (செயிண்ட் ஜோசப் மேல்நி‌லைப்பள்ளி ஆரணி, செயயாறு ), ஆகிய 10 பேர் 3 வது இடத்தை பிடித்து கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. இதில் மாணவர்களை விட மாணவிகள் தேர்ச்சி விகிதம் அதிகம். மாணவர்கள் 79. 4 சதமும் மாணவிகள் 85. 5 சதமும் ‌தேர்ச்சி பெற்றுள்ளனர். 60 சதவீதத்திற்கு மேலாக 4 லட்சத்து 17 ஆயிரத்து 371 மாணவ, மாணவிகள் மார்க்குகள் பெற்றுள்ளனர்.
மாநில முதலிடம்; 3 பாடத்தில் முதலிடம் : மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவி ஜாஸ்மின் ஆங்கிலம் , அறிவியல் , கணிதம் ஆகிய பாடங்களில் முதல் மார்க்கு பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார். இது வரை இல்லாத அளவிற்கு அரசுப்பள்ளியில் படித்து சாதனை படைத்திருக்கிறார் என்பது பெருமைபட வேண்டிய செய்தியாகும். இவரது வெற்றியை அடுத்து இந்தப்பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் அளவிலா மகிழ்ச்சியில் திகைத்து போயினர்.

Monday, May 24, 2010

தமிழக தலைமை தேர்தல் ஆணையாளராக முனீர் ஹோதா நியமனம்

தமிழகத்தில் உள்ளாட்சி மன்றங்களுக்கு தேர்தல் நடத்துவதற்காக தனி தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகின்றது. தமிழநாடு மாநில தேர்தல் ஆணையம் என்று அழைக்கப்படும் இந்த அமைப்பிற்கு மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சைய்யது முனீர் ஹோதா தலைமை ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முன்பு தமிழக உள்துறை செயலளாராகவும், முதல்வரின் முதன்மை செயலாளராகவும், சென்னை மெட்ரோ ரயில் திட்டத் தலைவராகவும் திறம்பட செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. தலைமை செயலாளர் அந்தஸ்தில் இருக்கும் முனீர் ஹோதா தற்போதைய தலைமைச் செயலாளர் ஸ்ரீபதியின் ஓய்விற்கு பிறகு தலைமைச் செயலளராக நியமிக்கப்படும் தகுதி பெற்றிருந்தார். இருப்பினும் அவர் தற்போது மாநில தேர்தல் ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் உள்துறை செயலளராக இருந்து கண்காணிப்பு ஆணையாளராக மாற்றப்பட்டுள்ள மாலதி அடுத்த தலைமைச் செயலாளராக நியமிக்கப்படுவார் என்று தெரிகின்றது. இதுவரை தமிழகத்தில் முஸ்லிம் அதிகாரிகளில் ஒருவர் கூட தலைமைச் செயலாளராக பணியாற்றியதில்லை.

Saturday, May 22, 2010

விடுதலை

விடுதலையான மற்ற சகோதரர்கள். உடன் வழக்கறிஞர்கள் புகழேந்தி, ஜைனுல் ஆபீதின்


புழலில் இருந்து தமுமுகவினர் பேரணியாக குணங்குடி ஹனிபாவை அழைத்து வரும் காட்சி



புழலில் இருந்து தமுமுகவினர் பேரணியாக குணங்குடி ஹனிபாவை அழைத்து வரும் காட்சி




புழல் சிறையில் இருந்து வெளியே வரும் குணங்குடி ஹனிபா


Friday, May 21, 2010

குணங்குடி ஹனீஃபா உள்ளிட்ட 6 சிறைவாசிகள் விடுதலை அவரது மகன் முஹைதீன் நன்றியினை தெரிவித்தார்

அல்ஹம்துலில்லாஹ்! அல்ஹம்துலில்லாஹ்!!
எல்லா புகழும் அல்லாஹ்விற்கே!
கடந்த 13 வருடமாக விசாரணைக் கைதிகளாக கொட்டடி சிறையில் வாடிய மூத்த சமுதாயத் தலைவர் குணங்குடி ஹனீஃபா, ஏர்வாடி காஸிம், அலி அப்துல்லாஹ், தடா அப்துர் ரஹீம், குட்டி உட்பட 6 சிறைவாசிகள் இன்று விடுதலை.

இவர்கள் விடுதலைக்காக எல்லா சமுதாய அமைப்புகளும் போராடின.

அதிலும் குறிப்பாக தமுமுக கடும் போராட்டம் நடத்தியது. இம்மாதம் மே 5ஆம் தேதி கோரிக்கை பேரணி நடத்தியது.

இவரது விடுதலைக்காக பாடுப்பட்ட அத்தனை உள்ளங்களுக்கும் அவரது மகன் முஹைதீன் நன்றியினை தெரிவித்தார்.

Thursday, May 20, 2010

முமுகவின் வாராந்திர சிறப்பு நிகழ்ச்சிகள் 21-05-2010


ஆம்புலன்ஸ் வாங்கிட உதவிடுவீர்!


பிரான்ஸில் பெண்ணின் பர்தா கிழிப்பு

பிரான்ஸ் நாட்டில் முஸ்லிம் பெண்களின் பர்தாவை தடை செய்வதற்கான ஏற்பாடுகளில் அந்நாடு மும்முரமாகியிருக்கும் சூழலில்
கடைத்தெருவில் சென்று கொண்டிருந்த ஒரு பெண்ணின் பர்தாவை இன்னொரு பெண் கிழித்த சம்பவம் நடைபெற்றுள்ளது. பிரான்ஸின் மேற்கு மாகாணத்தில் உள்ள நான்டஸ் என்ற நகரில் 26 வயதான ஒரு முஸ்லிம் பெண் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 60 வயதான ஒரு பெண்மணி ( இவர் ஒரு வழக்குரைஞர்) முஸ்லிம் பெண்ணை கேவலமாக பேசியதோடு அவருடைய பர்தாவையும் கிழித்தார். இதனால் இரண்டு பெண்மணிகளுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. முஸ்லிம் பெண்ணுடைய கணவர் அவர்களை விலக்கி விட்டார்.
காவல்துறை அதிகாரியிடம் ஒரு பெண் பர்தா அணிந்து எனக்கருகில் வருவது எனக்கு பிடிக்கவில்லை என்றும் உடனடியாக பிரான்ஸ் பர்தாவை தடை செய்ய வேண்டும் என்றும் வழக்குரைஞர் பெண்மணி கூறியுள்ளார். இன,மத பாகுபாட்டால் தாக்குதல் நடந்ததாக முஸ்லிம் பெண் அந்த வழக்குரைஞர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஐரோப்பாவில் பெல்ஜியம் நாட்டில் பர்தாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பிரான்ஸ் நாடும் பர்தாவை தடைசெய்வதற்கான நடவடி்ககைகளில் இறங்கியுள்ளது. இந்த நிலையில் பர்தா கிழிக்கப்பட்ட சம்பவம் பிரான்ஸ் மக்களிடையே எந்தளவு கசப்புணர்வு தோன்றியுள்ளது என்பதை பறைசாற்றும் விதமாக உள்ளது.

Wednesday, May 19, 2010

குணங்குடி ஹனீபா அவர்கள் மக்கள் உரிமைக்கு பின்வரும் கடிதத்தை அனுப்பியுள்ளார்.“

குணங்குடி ஹனீபா அவர்கள் மக்கள் உரிமைக்கு பின்வரும் கடிதத்தை அனுப்பியுள்ளார்.“என்னை 13 வருடமாக சிறை வைத்துள்ள பொய் வழக்கிற்கு விரைந்து தீர்ப்பு வழங்குமாறு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சென்னையில் பேரணி நடத்தியதைத் தொடர்ந்து வரும் 21.5.2010 வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் என்று பூந்தமல்லி பொடா நீதிபதி அறிவித்துள்ளார்கள். அதற்காக இறைவனுக்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். வழக்கு தீர்ப்பு வழங்கிட பேரணி நடத்திய தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைமைக்கும், தலைமை நிர்வாகிகளுக்கும் மனிதநேய மக்கள் கட்சி சகோதரர்களுக்கும் பேரணியில் கலந்து கொண்ட சமூக மக்களுக்கும் பேரணி வெற்றி பெற அதற்காக இரவு பகல் உழைத்த சகோதரர்களுக்கும் வாழ்நாள் முழுவதும் நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். மேலும் கரூர் அருகே 5.5.2010 அன்று விபத்தில் மரணம் அடைந்த மனிதநேய மக்கள் கட்சியின் ஆறு சகோதரர்களின் மறுமை வெற்றிக்காக தொடர்ந்து துஆ செய்கின்றேன். இறைவன் நாடினால் விரைவில் சந்திப்போம், இறைவன் நாடவில்லை என்றால் மறுமையில் சந்திப்போம்“. இவ்வாறு தனது கடிதத்தில் குணங்குடி ஹனீபா தெரிவித்திருக்கிறார்.இதனிடையே உடல் நலம் இன்றி இறந்து போன குணங்குடி ஹனீபா அவர்களின் தந்தையின் நல்லடக்கம் கடந்த மே 14 அன்று முகப்பேறு கபருஸ்தானில் நடைபெற்றது. த.மு.மு.க மற்றும் ம.ம.க-வைச் சேர்ந்த தலைவர்களும், தொண்டர்களும் அதில் கலந்து கொண்டனர். எப்படியாவது தன் தந்தையின் ஜனாஸா தொழுகையில் பங்கேற்க வேண்டும் என்று பரோலில் வெளிவர குணங்குடி ஹனீபா முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் “அதிகார சக்திகள்” இவர் சங்கராச்சாரியாரின் சமுதாயத்தை சேர்ந்தவர் இல்லை என்பதாலோ என்னவோ இவருக்கு மனிதாபிமான வாய்ப்பை கூட வழங்கவில்லை. இந்த வேதனையில் துடித்த குணங்குடி ஹனீபாவுக்கு கடந்த சனிக்கிழமை அன்று சிறையில் திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, மீண்டும் சிறைக்கு அனுப்பப்பட்டார்.Last Updated ( Tuesday, 18 May 2010 21:49 )

Tuesday, May 18, 2010

உண்மையிலேயே சாதனைப் படைத்த மாணவி ஃபாத்திமா பானு


உண்மையிலேயே சாதனைப் படைத்த மாணவி ஃபாத்திமா பானு
காது கேளாத, பேசுவும் வராத பிளையை பெற்றால், நாம் மிகுந்த கவலைக்கு உள்ளாகுவோம். ஆனால் தனது விடா முயற்சியால் எல்லா திறனும் பெற்று உள்ள மாணவிகளை விஞ்சும் அளவிற்கு வாய் பேச இயலாத, காது கேட்காத ஃபாத்திமா பானு சாதனைப் படைத்து இருக்கிறார்.
காசு, பணம் உள்ள பணக்கார தந்தைக்கு பிறந்தவரா என்றால் அதுவும் இல்லை. ஒரு கார் டிரைவரின் மகளாக பிறந்த அவர், அவர் தந்தையின் விடா முயற்சியால் இந்த வெற்றிக் கனியினை பறித்துள்ளார். சென்னை திருவல்லிக்கேனியை சேர்ந்த கார் டிரைவரான பி.எம். முஹம்மது அப்துல்லாஹ் நாகூர் மீரா தம்பதிகளுக்கு மகளாக ஃபாத்திமா பானு பிறந்தார். பிறந்த சில மாதங்களிலே ஃபாத்திமா பானுக்கு பேச்சுத்திறன், காது கேட்கும் திறன் குறைபாடு இருப்பது தெரியவந்தது. இதனால் அவரின் பெற்றோர்கள் மிகுந்த கவலைக்கு உள்ளானார்கள். மகளின் எதிர்காலம் அவர்களின் கண் முன் வந்து நின்றது. முஹம்மது அப்துல்லாஹ் தன்னுடைய குறைந்த ஊதியத்தில் குடும்பத்தை நடத்திக்கொண்டு, மகளின் குறைபாடு தெரியாமல் அவரை படிக்க முடிவு செய்தார். சென்னை அண்ணாசாலையில் உள்ள லிட்டில் ஃபிளவர் கான்வென்ட் மேல்நிலைப் பள்ளியில் அவரை சேர்த்தனர்.வாய் பேச முடியாவிட்டாலும், காது கேட்கும் திறனை இழந்து விட்டாலும் மாணவி ஃபாத்திமா பானு தனக்கு எதிரே பேசுகிறவர்களின் உதடு அசைவுகளை வைத்தே அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை புரிந்து கொள்ளும் ஆற்றலை பெற்று இருக்கிறார். இந்த ஆற்றலே அவர் பிளஸ்2வில் அதிக மதிப்பெண் எடுப்பதற்கு துணை புரிந்தது. பிளஸ் 2வில் வணிக கணிதம் (பிசினஸ் மேக்ஸ்) பாட பிரிவை தேர்வு செய்து தேர்வு எழுதிய அவர் 14.05.2010 அன்று வெளியிடப்பட்ட தேர்வு முடிவில் 1000க்கு 953 மதிப்பெண் பெற்று பள்ளியிலே முதல் மாணவியாக தேர்வு பெற்றார். தமிழில் 177 மார்க்கும், பொருளாதாரத்தில் 196, வணிகவியலில் 198, கணக்குபதிவியலில் 189, வாணிக கணிதத்தில் 193 மதிப்பெண்ணும் பெற்று இருக்கிறார். இந்த வெற்றி அவரையும் அவரின் பெற்றோர்களையும் மன மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. பிளஸ்2க்கு பிறகு பி.காம் படித்து, சி.ஏ.(ஆடிட்டர்) ஆக வேண்டும் என்பது தான் அவருடைய இலட்சியமாக இருக்கிறது. முதலிடம் பெற்ற மாணவியை பள்ளி தலைமை ஆசிரியர் வசந்தி, கட்டி பிடித்து உன் விடாமுயற்சிக்கு பாராட்டுகள் என்று கூறி வாழ்த்து தெரிவித்தார். பிளஸ்2 தேர்வில் வெற்றி பெற்றுள்ள மாணவி ஃபாத்திமா பானு இன்னும் ஓராண்டு ஆங்கில கல்வியை அதே பள்ளியில் கற்க வேண்டியுள்ளது. இதன்பிறகு அடுத்த ஆண்டு (2011) அவர் கல்லூரிக்கு சென்று தன்னுடைய இலட்சிய பயணத்தை தொடருவார். ஃபாத்திமா எனக்கு மூத்த மகள். பிறந்து சில மாதங்களிலே அவளால் பேசவும், கேட்கவும் முடியாது என்பது எங்களுக்கு தெரியவந்தது. இது எங்களுக்கு மனக்கஷ்டத்தை ஏற்படுத்தியது. மனதில் தோன்றிய காயங்களை தாங்கிக்கொண்டு, என் மகளின் எதிர்காலத்திற்காக பாடுபட்டு வருகிறோம். ஆண்டவனின் கருணையால் பிளஸ்2 தேர்வில் அவள் நல்ல மதிப்பெண் பெற்று இருக்கிறார். ஆடிட்டராக வர வேண்டும் என்பது அவளின் விருப்பம். அதற்கு எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவான் என நம்புவதாக அவரது தநதை தெரிவித்தார்.
நன்றி : தினத்தந்தி.

Monday, May 17, 2010

இங்கிலாந்து அமைச்சரவையில் முஸ்லீம் பெண் அமைச்சர்

லண்டன்: இங்கிலாந்து நாடாளுமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் தனிப்பெரும் கட்சியாக விளங்கும் கன்சர்வேடிவ் கட்சி, 3வது இடதைதைப் பிடித்த லிபரல் ஜனநாயகக் கட்சியுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. கன்சர்வேடிவ் கட்சியின் தலைவரான டேவிட் கேமரூன் பிரதமராக பதவி ஏற்றுள்ளார். இதையடுத்து புதிய அமைச்சரவையை அவர் அறிவித்துள்ளார்.
அமைச்சரவையில் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் இடம் தரப்பட்டுள்ளது. பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்தவரான பரோனஸ் சயீதா வர்சி (39) அந் நாட்டு அமைச்சராகிறார்.இவரது தந்தை பாகிஸ்தானில் இருந்து இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்தவர்.வழக்கறிஞரான சயீதா வர்சி, கன்சர்வேடிவ் கட்சியின் துணைத் தலைவராகவும் இருந்துள்ளார். கேமரூன் அமைச்சரவையில் இவர் இலாகா இல்லாத கேபினட் அமைச்சராக இருப்பார்.இங்கிலாந்தில் முஸ்லிம் பெண் ஒருவர் அமைச்சரானது இதுவே முதல் முறையாகும். அந் நாட்டில் 72 ஆண்டுகளுக்குப் பின் கூட்டணி அரசு பதவியேற்பதும் இதுவே முதல் முறை.

+2 சாதனையாளர்கள்

பன்னிரன்டாம் வகுப்பில் சாதனைப் படைத்த மாணவர்கள் மற்றும் பள்ளிகளின் விபரங்கள்.
திருநெல்வேலி மாவட்டத்தில் பன்னிரன்டாம் வகுப்பில் முதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவிக்கு நெல்லை மாவட்ட தமுமுக தலைவர் மைதீன் சேட்கான் நினைவுப் பரிசு வழங்கும் காட்சி.பிளஸ்-2 தேர்வில் கண் தெரியாத மாணவி ஜரின் பானு சாதனை வணிகவியல் பாடத்தில் 200க்கு 200 மதிப்பெண் பெற்றார்.கண்பார்வை இல்லாத மாணவி வணிகவியல் பாடத்தில்200க்கு200 மதிப்பெண் பெற்று சாதனை செய்துள்ளார்.கரூர் சி.எஸ்.ஐ. பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவி ஜரின் பானு இவர் பிறவியிலேயே இரண்டு கண் பார்வை இல்லாதவர். ஆனால் பார்ப்பவர்களுக்கு கண்ணில் எந்த குறையும் தெரியாது.இந்த மாணவி பிற மாணவிகள் படிக்கும் பள்ளியி லேயே படித்து வந்தார். இவர் 1,074 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் இடம் பெற்றுள்ளார்.பாட வாரியாக பெற்ற மதிப்பெண் விவரம் வருமாறு:-தமிழ் 169, ஆங்கிலம் 146, வரலாறு 185, பொருளாதாரம் 178,வணிகவியல் 200,கணக்குபதிவியல் 196 மொத்தம் 1074.''நான் கண்பார்வை இல்லாமல் கஷ்டப்பட்டு படித்து இந்த மதிப்பெண் பெற்றுள்ளேன். எனக்கு படிப்புக்கு என் பெற்றோரும், ஆசிரியரும் மிகவும் உறுதுணையாக இருந்தனர்.இனி பட்ட படிப்பு ஆங்கிலம் எடுத்து படிக்க உள்ளேன். பின்னர் ஆசிரியர் பணி ஆற்றுவதே என் விருப்பம் ஆகும். என் சகோதரர்அபுதாகிர் என்னை போல கண் பார்வை இல்லாதவர். அவர் கூடை பின்னும் தொழில் செய்து வருகிறார்.எனது மேல் படிப்புக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.மாணவி ஏ.ஜரின்பானுவை பள்ளி தாளாளர் சி.பிரடெரிக், தலைமை ஆசிரியர் மேரி சந்திரா, வணிகவியல் துறை ஆசிரியை சலோமி டெய்சி ராணி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினார்கள்.
ஆசிரியர்கள் முழு ஒத்துழைப்பால் முதலிடம்: எதிர்காலத்தில், தகவல் தொழில் நுட்ப பொறியாளராக ஆசை முதலிடம் பிடித்த மாணவி நிஷாரோஸ் பேட்டிஆசிரியர்கள் முழு ஒத்துழைப்பால் மாவட்டத்தில் முதலிடத்தை பிடிக்க முடிந்ததாகவும், எதிர்காலத்தில் சிறந்த தகவல் தொழில்நுட்ப பொறியாளராக பணி யாற்ற ஆசைப்படுவதாக நீலகிரி மாவட்டத்தில் முதலிடம் பிடித்த மாணவி நிஷாரோஸ் கூறினார்.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 1-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை பிளஸ்-2 தேர்வு நடந்தது. தேர்வை 71/2 லட்சம் மாணவ- மாணவிகள் எழுதினர். நேற்று காலை 9 மணிக்கு பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாகின.நீலகிரி மாவட்ட அளவில் கூடலூர் செயின்ட் தாமஸ் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் நிஷாரோஸ் மாவட்டத்தில் முதலிடத் தையும், அதே பள்ளியை சேர்ந்த மற்றொரு மாணவி நெஸ்ரீயா மாவட்ட அளவில் 3-வது இடத்தையும் பிடித்தனர்.மாவட்டத்தில் 1-3-வதாக வந்த கூடலூர் மாணவிகள்மாவட்டத்தில் முதலிடத்தை பிடித்த கூடலூர் செயின்ட் தாமஸ்மேல்நிலைப்பள்ளி மாணவி எம்.நிஷாரோஸ் 1200-க்கு 1,166 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மேலும் அதே பள்ளியில் படித்து வந்த மாணவி இ.நெஸ்ரீயா, 1151 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் 3-வது இடத்தை பிடித்துள்ளார்.மாவட்டத்தில் முதலிடம் பிடித்த மாணவி நிஷாரோஸ் மதிப்பெண்கள் பெற்ற விவரம்:-தமிழ் -189, ஆங்கிலம்-190, இயற்பியல்-193, வேதியியல்-200, கம்ப்ïட்டர் அறிவியல்-196, கணக்கு-198, மொத்தம் 1166.ஆசிரியர்கள் வாழ்த்துநீலகிரி மாவட்டத்தில் முதலிடம் பிடித்த மாணவி நிஷாரோஸ்சின் தந்தை முகமதலி வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். தாய் சவுதா, அண்ணன் நபி, தம்பி நிகால் ஆகியோர் உள்ளனர். மாவட்டத்தில் முதலிடம் பிடித்ததால் மாணவி நிஷாரோசை, பள்ளி முதல்வர் ராஜன் வர்க்கிஷ், ஆசிரியர்கள் வெங்கடாசலம், சுரேஷ் உள்ளிட்ட ஆசிரிய, ஆசிரியைகள் இனிப்பு வழங்கி பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.பின்னர் மாணவி நிஷாரோஸ் நிருபர்களிடம் கூறியதாவது-தகவல் தொழில்நுட்ப பொறியாளராக ஆசைநான், மாவட்டத்தில் முதலிடம் பிடிப்பேன் என எதிர்பார்க்க வில்லை. இருப்பினும் முதலிடம் வந்தது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. நான் டி.வி. பார்ப்பதில்லை. ஏனெனில் நேரமும் இல்லை. பள்ளிக்கூடம், டிïசன் என நேரங்கள் கழிந்தது. அதிக மதிப்பெண் பெற்று மாவட்டத்தில் முதலிடம் பிடிப்பதற்கு எனது பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் கொடுத்த ஊக்கம் தான் காரணம்.இல்லாவிட்டால் கூடுதல் மதிப்பெண் பெற்றிருக்க முடியாது. எதிர்காலத்தில் தகவல் தொழில்நுட்ப பொறியாளராக படிக்கலாம் என எண்ணி உள்ளேன். பொறியாளராக வேண்டும் என்ற ஆசையும் உள்ளது.இவ்வாறு மாணவி நிஷா ரோஸ் பேட்டியின் போது கூறினார். அப்போது கூடலூர் செயின்ட் தாமஸ் பள்ளி முதல்வர் ராஜன் வர்க்கிஷ் மற்றும் பெற்றோர், ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.'இருதய நோய் டாக்டராவதே லட்சியம்' திருச்சி முதலிடம் பெற்ற மாணவி பேட்டிதிருச்சி: திருச்சி மாவட்ட அளவில் ப்ளஸ் 2 தேர்வில், சமயபுரம் எஸ்.ஆர்.வி., மேல்நிலைப்பள்ளி மாணவி ஷமீமா முதலிடம் பெற்று சாதனை புரிந்துள்ளார். ஷமீமா பெற்ற மதிப்பெண்கள்: தமிழ்- 192, ஆங்கிலம்- 191, இயற்பியல்- 199, வேதியியல்- 200, உயிரியல்- 200, கணிதம்- 200. மொத்தம் 1182 மதிப்பெண். ஷமீமாவின் தந்தை முகமது பாரூக், அரபு நாடு சார்ஜாவில் தலைமை அக்கவுண்டட்டாக பணிபுரிகிறார். தாய் லைலா ஜான். சகோதரி ஷாய்மா. இரட்டைக்குழந்தைகளான இருவரும் எஸ்.ஆர்.வி., பள்ளியில் படித்தனர். ஷாய்மா 1169 மதிப்பெண் பெற்றுள்ளார். தற்போது சார்ஜாவில் இருக்கும் ஷமீமா, மொபைல்ஃபோன் மூலம் அளித்த பேட்டி: எங்களது சொந்த ஊர் தஞ்சை மாவட்டம் பண்டாரவாடை. நான் 8வது படிக்கும்போதே, மாநில அளவில் ப்ளஸ் 2 தேர்வில் முதலிடம் பெறவேண்டும் என்ற நோக்கத்துடன் படித்து வந்தேன். அதற்காக, கடந்த இரு ஆண்டாக குடும்பத்தை பிரித்து ஹாஸ்டலில் தங்கி படித்தேன்.தினமும் 10 மணி நேரம் வரை படிப்பேன். பள்ளியில் வாரத்திற்கு 5 முறை டெஸ்ட் வைப்பார்கள். டெஸ்ட்டில் செய்யும் தவறை சுட்டிக்காட்டி, அதை திருத்துவார்கள். அவர்கள் வைத்த டெஸ்ட் எனக்கு பயனுள்ளதாக இருந்தது. எஸ்.எஸ்.எல்,ஸி.,க்கு பிறகு 'டிவி' பார்ப்பது இல்லை. எனக்கு கால்பந்துதான் பிடித்த விளையாட்டு. எனது வெற்றிக்கு பெற்றோர், பள்ளி முதல்வர், ஆசிரியர், பள்ளி நிர்வாகிகள்தான் காரணம்.இருதய நோய்க்கான டாக்டர் ஆவதே எனது லட்சியம். உயிரை காக்கும் சிக்கலான மருத்துவம் என்பதால் அது எனக்கு பிடிக்கும். மருத்துவ படிப்பை தமிழகத்திலும், மேற்படிப்பை இங்கிலாந்திலும் படிக்க உள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார். மதுரை மாவட்டத்தில் முதல் மாணவிபிளஸ் 2 தேர்வில் தமிழைத் தவிர பிறமொழியை முதல் பாடமாக எடுத்து மாவட்டத்தில் முதல் இடங்களை பெற்ற மாணவி:- பெமினா செரின் ஷாஜகான்(1179) மகாத்மா மாண்டிசேரி மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி. இவர் பாடவாரியாக பெற்ற மதிப்பெண் வருமாறு:- சமஸ்கிருதம்-197, ஆங்கிலம்-188, பொருளியல்-197, வணிகவியல்-199, அக்கவுண்டன்சி-200, வணிககணிதம்-198. பரமக்குடி கல்வி மாவட்ட அளவில் 1148 மதிப்பெண் பெற்று ஆரிபா சம்சாத் முதலிடத்தை பிடித்துள்ளார். பரமக்குடி கல்வி மாவட்ட அளவில் ஆயிரவைசிய மேல் நிலைப்பள்ளி மாணவி ஆரிபா சம்சாத் 1148 மதிப் பெண் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளார். இவரது தந்தை கமல் அப்துல் நாசர். இவர் கீழக்கரை ஹைராத்துல் ஜலா லியா பள்ளியில் எழுத்தராக பணியாற்றி வருகிறார். மாணவியின் தாய் ஷாஜாத்தி பேகம் பரமக்குடி கீழ முஸ்லிம் மேல் நிலைப்பள்ளியில் ஆசிரியை யாக பணியாற்றி வருகிறார். மாணவி ஆரிபா சம்சாத் பெற்ற மதிப்பெண் விவரம் வருமாறு:- தமிழ் - 186 ஆங்கிலம் - 186 இயற்பியல் - 197 வேதியியல் - 192 உயிரியல் - 189 கணிதம் - 198 மொத்தம் - 1148 மாணவி ஆரிபா சம்சாத் கூறியதாவது:- தினத்தந்தி வினா-விடை எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. எனது பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் அளித்த ஊக்கம் தான் என்னை முதல் மதிப்பெண் பெற செய்தது. என்ஜினீயரிங் படிக்க ஆசைப்படுகிறேன். இவ்வாறு கூறினார். முதலிடம் பிடித்து பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவியை சபை தலைவர் ராசி.என்.போஸ், தாளாளர் லெனின்குமார், தலைமை ஆசிரியர் வீரராஜ், தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக தலைவர் சந்தியாகு, பூபாலன் உள்பட பலர் வாழ்த்தினர். தென்காசி கல்வி மாவட்டத்தில் முதலாவது மற்றும் முன்றாவது இடம் பெற்ற மாணவிகள்தென்காசி கல்வி மாவட்டத்தில் முதலிடம் பெற்றவர் மாண்டிசோரி பள்ளி மாணவி ரஜபு பாத்திமா. இவர் நெல்லை மாவட்டத்தில் முதல் இடத்தை பிடித்து இருக்கிறார். பழைய குற்றாலம் கில்டன் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவி சபுனா சுலைமான் 1200-க்கு 1173 மதிப்பெண்கள் எடுத்து 3-வது இடம் பெற்று உள்ளார். அவர் பெற்ற மதிப்பெண்கள் வருமாறு:- தமிழ்-192, ஆங்கிலம்-190, இயற்பியல்-199, வேதியியல்-196, கணிதம்-197, உயிரியியல்-199. சேரன்மாதேவி கல்வி மாவட்டத்தில் 2-வது இடம் பிடித்த முசுலிம் மாணவிவள்ளிïர் ஆசிர்நகர் கெயின்ஸ் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவி டி.ஜாகின் பாத்திமா 1200-க்கு 1155 மதிப்பெண்கள் எடுத்து 2-வது இடம் பெற்று உள்ளார். அவர் பெற்ற மதிப்பெண்கள் வருமாறு:- தமிழ்-189, ஆங்கிலம்-185, இயற்பியல்-196, வேதியியல்-189, கணிதம்-197, கம்ப்ïட்டர் சயின்ஸ்-199. சேலம் மாவட்ட அளவில் 2-வது இடத்தில் அல்மாஸ்அல்மாஸ் - தேவியாகுறிச்சி பாரதியார் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி மாணவி. இவர் 1200-க்கு 1176 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் விவரம் வருமாறு:- தமிழ் - 195; ஆங்கிலம் - 186; இயற்பியல் - 198, வேதியியல் - 199, கம்ப்ïட்டர் சயின்ஸ் - 198; கணிதம் - 200.இவர் சேலம் மாவட்ட அளவில் இரண்டாவது இடம் பெற்றுள்ளார், விருத்தாசலம் கல்வி மாவட்ட அளவில் 3-வது இடத்தையும் பிடித்த ஜாகிராபேகம்விருத்தாசலம் பாத்திமா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி ஜாகிராபேகம் 1133 மதிப்பெண்கள் எடுத்து 3-வது இடத்தையும் பிடித்ங்குர் என்பது குறிப்பிட தக்கது விலங்கியல் பாடத்தில் மாநிலத்தில் 3-வது இடம் சர்வத்நவீன் விலங்கியல் பாடத்தில் மாநில அளவில் 3-வது இடத்தை ஆம்பூர் மாணவி சர்வத்நவீன் பிடித்து சாதனை படைத்தார். அவர் டாக்டருக்கு படித்து ஏழைமக்களுக்கு சேவை செய்வதே குறிக்கோள் என தெரிவித்தார். வேலூர் மாவட்டம், ஆம்பூரில் உள்ள ஹஸ்னத்-யே-ஜாரியா பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவி சர்வத்நவீன் விலங்கியல் பாடத்தில் 199 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே 3-வது இடத்தை பிடித்து உள்ளார். அவர் பாட வாரியாக பெற்ற மதிப்பெண்கள் விவரம் வருமாறு:- உருது - 186, ஆங்கிலம் - 182, இயற்பியல் - 184, வேதியியல் - 193, தாவரவியல் - 195, விலங்கியல் - 199, மொத்தம்-1139. 3-வது இடத்தை பிடித்த சர்வத்நவீனுக்கு அவரது தந்தை சையத்ஷாஜகான், தாயார் நுஜ்ரத்ஜஹான் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியை முகஹிராபேகம், ஆசிரியர் ஷகிலாபானு மற்றும் பள்ளி நிர்வாகத்தினர், சகமாணவிகள் இனிப்பு ஊட்டி வாழ்த்து தெரிவித்தனர். டாக்டர் ஆவேன் அதைத்தொடர்ந்து மாணவி சர்வத்நவீன் நிருபர்களிடம் கூறியதாவது:- விலங்கியல் பாடத்தில் மாவட்ட அளவில் முதல் இடம் பெறுவேன் என்று எதிர்பார்த்தேன். ஆனால் மாநில அளவில் 3-வது இடம் கிடைத்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. வகுப்பறையில் ஆசிரியர் நடத்தும் பாடத்தை கவனமாக கவனித்து, முக்கியமான பகுதிகளை குறித்து வைத்துகொள்வேன். தினமும் இரவு 11 மணி வரைக்கும், அதிகாலையில் 5 மணிக்கும் எழுந்து படிக்க ஆரம்பித்து விடுவேன். பள்ளி நிர்வாகமும், தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியர், பெற்றோர்கள், தோழிகள் கொடுத்த ஊக்கம்தான் என்னை சாதனை மாணவியாக உருவாக்கியது. டாக்டருக்கு படிக்க வேண்டும் என்பதே எனது லட்சியம் ஆகும். டாக்ருக்கு படித்து ஏழை, எளிய மக்களுக்கு சேவை புரிய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பிளஸ்-2 தேர்வில் தஞ்சை மாவட்ட அளவில் 3-ம் இடம் பெற்ற எம்.ராகிலா பர்வீன் தஞ்சை அக்சீலியம் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி எம்.ராகிலா பர்வீன் தஞ்சை மாவட்ட அளவில் 3-ம் இடம் பெற்றார். இவர் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள்- தமிழ்-191, ஆங்கிலம்-189, இயற்பியல்-195, வேதியியல்-199, கணினி அறிவியல்-198, கணிதம்-200. தஞ்சையை அடுத்த வல்லத்தில் வசிக்கும் ராகிலா பர்வீனின் தந்தை முகமது இஸ்மாயில் வியாபாரம் செய்து வருகிறார். தாய் பரிதா பேகம். மாணவி, ராகிலா பர்வீன் கூறியதாவது:- பள்ளியில் நல்ல பயிற்சி அளித்தார்கள். அடுத்து பி.இ. எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீரியங் படிக்க விருப்பம் உள்ளது.மாநில அளவில் பல்வேறு பாடங்களில் சாதனை படைத்த மாணவ மாணவிகள் பொருளியல் இரண்டாவது இடம்;ஏ.யாகியா (200), சேரன் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, கரூர்.நுண்ணுயிரியல் மூன்றாவது இடம்;ஓ.எப்.கதிஜா பவாஷா (198), சி.எஸ்.ஐ. பெயின் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, கீழ்ப்பாக்கம், சென்னை (வடக்கு)மனையியல் முதலிடம்1. ஏ.ரெபீஜா (190), பி.கான்வென்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கோவை.உளவியல் முதலிடம் 1. ஏ.பதிமுத்து (172), அரசு மேல்நிலைப்பள்ளி, காயல்பட்டினம், தூத்துக்குடி.உருது 1. எல்.வசீமா அம்ரீன் (195), நஸ்ரத்துல் இஸ்லாம் மேல்நிலைப்பள்ளி, பேரனாம்பட்டு, திருப்பத்தூர். 2. டி.முகமது சுகாய்ப் (195), இஸ்லாமிய ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மேல்விசாரம், வேலூர். 3. சையது சாதியா இக்ரம் (193), இஸ்லாமிய பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வாணியம்பாடி, திருப்பத்தூர். அபிராமம் முசுலிம் மேல்நிலைப்பள்ளியின் சாதனைராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் முஸ்லிம் மேல் நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவ-மாணவிகள் கே. சைனி, எம்.சரண்யா, ஜி.சந்தோஷ் கண்ணன் ஆகி யோர் சந்தையியல் மற்றும் விற்பனை திறனியல் பாடத்தில் மாநில அளவில் முதல் 3 இடங்களை பிடித்து சாதனை படைத்துள்ளனர். சந்தையியல் மற்றும் விற் பனை திறனியல் பாடத்தில் முதல் இடம் பிடித்த மாணவி கே. சைனி பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் வருமாறு:- தமிழ்-149,ஆங்கிலம்-122, வணிகவியல்-151,சந்தையியல், விற்பனை திறனியல் கருத் தியல்- 191, செய்முறை 1 -200, செய்முறை 2-200, மொத்தம் -1013. இதில் சந்தையியல் மற் றும் விற்பனை திறனியலில் 600க்கு 591 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மாநில அளவிலான சாதனை குறித்து மாணவி கே. சைனி கூறியதாவது:- எனது தந்தை கருப்பையா தனுஷ் கோடி போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக உள்ளார்.தாய் முனியம்மாள். சொந்த ஊர் செட்டிகுளம். சட்டம் படித்து வக்கீல் ஆகவேண்டும் என்பது எனது லட்சியம். தடகள வீராங்கனையான எனக்கு பள்ளி தாளாளர் மற் றும் தலைவர் அகமது லத்தீப், பள்ளி செயலாளர் செய்யது இபுகிராம்,பள்ளி தலைமை ஆசிரியர் பசீர் அகமது, ஆசிரியர்கள் செல்வநாராயணன், ஷாஜகான் ஆகியோரும் தாய்,தந்தையும் உறுதுணை யாக இருந்து ஊக்கமளித் தால் மாநில அளவில் சாதனை படைக்கமுடிந்தது. முயற்சி செய்தால் முடியாதது எதுவும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார். 2-ம் இடம் 2-வது இடத்தை பிடித்த எம்.சரண்யா பாட வாரியாக பெற்ற மதிபெண்கள் வருமாறு:- தமிழ்-146,ஆங்கிலம்-112,வணிகவியல்-154,சந்தையியல்,விற்பனை திறனியல் கருத்தியல்-188,செய்முறை1-200,செய்முறை2-200, மொத்தம்- 1000. இதில் சந்தையியல், விற்பனைதிறனியல் 600க்கு 558 பெற்றுள்ளார். இவரது தந்தை மோகன், விவசாயி. தாய் ராமலட்சுமி. 3-வது இடம் இதேபோல சந்தையியல், விற்பனை திறனியல் பாடத் தில் மாநில அளவில் 3-வது இடம் பிடித்த ஜி.சந்தோஷ் கண்ணன் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் வரு மாறு:- தமிழ்-160, ஆங்கி லம்-94,வணிகவியல்-189, சந்தையியல்-விற்பனை திறனியல் கருத்தியல்-187, செய்முறை1- 200, செய்முறை2 -200.மொத்தம் -1030. இதில் சந்தையியல் விற்பனையியலில் 600க்கு 587 மதிப்பெண் பெற் றுள்ளார். இவரது தந்தை குரு சாமி ஓட்டலில் சர்வராக உள் ளார். தாய் கலாவதி. மாநில அளவில் சாதனை படைத்த மாணவ-மாணவி களை பள்ளிதாளாளர் மற் றும் தலைவர் அகமது லத் தீப், பள்ளி செயலாளர் செய்யது இபுகிராம்,பள்ளி தலைமை ஆசிரியர் பசீர் அகமது, ஆசிரியர்கள் செல்வ நாராய ணன், ஷாஜகான் ஆகியோர் பாராட்டினர். தூத்துக்குடி மாவட்டத்தில்; 100 சதவீதம் தேர்ச்சி பெற்று உள்ள முசுலிம் பள்ளிகள்சுபைதா மேல்நிலைப்பள்ளி, . எல்.கே.மேல்நிலைப்பள்ளி, காயல்பட்டினம் சென்டிரல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பிளஸ்-2 பொதுத்தேர்வில் ஈரோடு மாவட்டத்தில் அல்அமீன் மெட்ரிக் பள்ளி (ஈரோடு 100 சதவீத தேர்ச்சியை பெற்று உள்ளது.

Friday, May 14, 2010

குணங்குடி ஹனிபா அவர்களின் தந்தை நைனா முஹம்மத் அவர்கள் 14 -5 -2010 சென்னையில் இரவு வபாத்தானர்கள்

அஸ்ஸலாமு அலைக்கும், அன்புடையீர் கடந்த 13 வருடங்களாக சிறையில் உள்ள குணங்குடி ஹனிபா அவர்களின் தந்தை நைனா முஹம்மத் அவர்கள் 14 -5 -2010 சென்னையில் இரவு வபாத்தானர்கள் , என்பதை தெரியபடுத்திகிரோம், (இன்னாஹ் லில்லாஹி வ இன்னாஹ் இலஹி ராஜிஹுன்) ......

மாணவ - மாணவிகளுக்கு உதவி தொகை வழங்கும்

கல்வியை தொடரமுடியாமல் வசதியற்ற நிலையில் உள்ள
மாணவ - மாணவிகளுக்கு உதவி தொகை வழங்கும்
தொண்டு நிறுவனங்கள்

1. ஐக்கியப் பொருளாதாரப் பேரவை
அலி டவர்ஸ், கிரீம்ஸ் ரோடு
ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006
தொலைபேசி: 2829 5445

2. இஸ்லாமிக் டெவலப்மென்ட் பேங்க்
ராயபேட்டை, நெடுஞ்சாலை
சென்னை - 14
தொலைபேசி: 94440 52530

3. சீதக்காதி அறக்கட்டளை
688 , அண்ணா சாலை
சென்னை - 06

4. ஆல் இந்தியா இஸ்லாமிக் பவுண்டேசன்
688 , அண்ணா சாலை
சென்னை - 06

5. B S. அப்துல் ரஹ்மான் ஜகாத் பண்ட் பவுண்டேசன்
4 மூர்ஸ் ரோடு, சென்னை - 06
(ஜகாத்துக்கு உரியவர்களுக்கு மட்டும்)

6. சுலைமான் ஆலிம் சாரிடபிள் டிரஸ்ட்
ஜாவர் பிளாசா,
நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை
சென்னை - 34

7. முஹம்மது சதக் அறக்கட்டளை
133 , நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை
சென்னை - 34

8. மெஜெஸ்டிக் பவுண்டேசன்
117 ஜெனெரல் பேட்டர்ஸ் சாலை
சென்னை - 02

9. முஸ்லிம் பவுண்டேசன் டிரஸ்ட்
ஜபார்ஷா தெரு,
திருச்சி.

10. தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம்
118 / பி வேப்பேரி நெடுஞ்சாலை
சென்னை - 03

11. தமிழ்நாடு முஸ்லிம் பட்டதாரிகள் சங்க வெல்பர் டிரஸ்ட்
டி - பிளாக் 10 ( 23 )
11 வது தெரு
அண்ணா நகர் - சென்னை 40
போன் 98400 80564

12. அஸ்மா காசிம் அறக்கட்டளை
மாண்டியத் சாலை
எழும்பூர் - சென்னை – 08

13. ராஜகிரி பைத்துல்மால்
கீழத் தெரு
ராஜகிரி - 614 207

14. டாம்கோ
807 - அண்ணா சாலை
5 வது சாலை
சென்னை

15. ஹாஜி. அஹமது மீரான்
Managing Director
Professional Courier’s
22. மகாராஜா சூர்யா ராவ் ரோடு
ஆழ்வார்பேட்டை - சென்னை – 18


16. மியாசி
புதுக் கல்லூரி வளாகம்
பீட்டர்ஸ் ரோடு
சென்னை – 14

17. S I E T
கே.பி. தாசன் சாலை
தேனாம்பேட்டை
சென்னை - 18 .


ST Courier
199, Hariyan Street,
C.Pallavaram, Chennai - 600 043.
Tamilnadu,India.
TEL :91 44 22 666 666 .91 44 305 66 666

Thursday, May 13, 2010

தமுமுக அமைப்புத் தேர்தல்

தமுமுக அமைப்புத் தேர்தல் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தமுமுக அமைப்புத் தேர்தல், இவ்வருடம் ஜுன் 1 ஆம் தேதி முதல் ஆரம்பம். மே 31வரை சேர்க்கப்படும் உறுப்பினர்கள் மட்டுமெ தேர்தல் நடைமுறைகளில் பங்கேற்க அனுமதிக்படுவர். மாவட்டம் தோறும் தேர்தல் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்

Sunday, May 9, 2010

இலவச மருத்துவ முகாமில் 300 மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்






மே 9 அன்று கீழக்கரை தமுமுக மற்றும் யூசப் ஜுலைக மெடிக்கல் சென்டர் மற்றும் கீழக்கரை தாஸிம் பீவி அப்துல் காதர் கல்லூரி இணைந்து நடத்தும் மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.இந்த மருத்துவ முகாமில் 300 மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர். கீழக்கரை BIO MEDI CAPS நிறுவனம் இலவச மருந்துகலை வழங்க்கியது. இதனை தமுமுக மாவட்ட தலைவர் சாதிக் பாஷா,மனித நேய மக்கள் கட்சியின் இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் சலிமுல்லாஹ்கான் மற்றும் கீழக்கரை நகர் தமுமுக நிர்வாகி முஜீப் ரகுமான், ஜெய்னுல்ஆப்தீன், ராஜா ஹுசைன், சதகதுல்லா,பகர்,அகரம்
ஆகியோர் முன்னிலை வகித்தனர்

மருத்துவ முகாம் விளம்பரம்


Friday, May 7, 2010

மே 9 அன்று கீழக்கரை தமுமுக நடத்தும் மாபெரும் மருத்துவ முகாம்

இன்ஷா அல்லா மே 9 அன்று கீழக்கரை தமுமுக மற்றும் யூசப் ஜுலைக மெடிக்கல் சென்டர் மற்றும் கீழக்கரை தாஸிம் பீவி அப்துல் காதர் கல்லூரி இணைந்து நடத்தும் மாபெரும் மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது.
பொது மக்கள் அனைவரும் கலந்து கொளுமாறு அலைகுறது கீழக்கரை தமுமுக

துபை முமுக வின் வாராந்திர சிறப்பு நிகழ்ச்சிகள்...



Thursday, May 6, 2010

கரூர் அருகே இன்று விபத்து: தாறுமாறாக ஓடிய லாரி கார் மீது மோதியது; 6 பேர் பலி ஊட்டியை சேர்ந்தவர்கள்


ஊட்டியை சேர்ந்த அப்துல்கனி, யூனிக், மாத்தியூ, பாட்ஷா, அபிபுல்லா, ஏசயன் ஆகியோர் ஒரு காரில் திருச்சி வந்தனர். மே.5- காலை 11 மணி அளவில் அவர்கள் திருச்சியில் இருந்து கரூர் மாவட்டம் பாளையம் நோக்கி காரில் சென்றனர். அப்போது பாளையத்தில் இருந்து அரியலூருக்கு ஜல்லி ஏற்றி கொண்டு லாரி ஒன்று சென்றது.

சிந்தாமணிபட்டி போலீஸ் சரகம் வீரணம்பட்டி அருகே உள்ள சரக்கம்பட்டி என்ற இடத்தில் லாரி சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அப்போது எதிரே வந்த கார் மீது லாரி பயங்கரமாக மோதியது.

இதில் கார் சுக்குநூறாக நொறுங்கியது. விபத்து ஏற்பட்டதும் லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதில் காரில் இருந்த அப்துல்கனி, யூனிக், மாத்தியூ, பாட்ஷா, அபிபுல்லா, ஏசயன் ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

இந்த விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இது பற்றி தகவல் அறிந்ததும் சிந்தாமணிபட்டி போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர். விபத்தில் இறந்த 6 பேர் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பேரணிக்கு வரும்போது சாலை விபத்தில் 6 ம.ம.க சகோதர்கள் உயிர் துறப்பு!

குணங்குடி ஹனீபா உள்ளிட்ட 6 சகோதர்கள் மீதான வழக்கு விரைந்து தீர்ப்பு வழங்கக் கோரி த.மு.மு.க சார்பில் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இன்று (மே&5) காலை 11.30 மணியளவில் பேரணி தொடங்கி பர்மாபஜார் அருகில் சென்றுக்கொண்டிருந்தபோது தடுத்து நிறுத்தப்பட்டது. அப்போது ஊட்டியிலிருந்து வந்த தகவல் எல்லோரையும் நிலைகுலைய செய்தது.


பேரணிக்கு வந்துக் கொண்டிருந்த நீலகிரி மாவட்ட ம.ம.க செயலாளர் ஷேக், நகரச் செயலாளர் சாதிக் உள்ளிட்ட 6 சகோதரர்கள் சாலை விபத்தில் உயிரிழர்ந்ததாக வந்த செய்தி நெஞ்சை பதற செய்தது. இச்செய்தி அங்கு இருந்த தலைமை நிர்வாகிகளுக்கு தெரியப்படுத்தப்பட்டது. உடனே தமிமுன் அன்சாரி விமானம் மூலம் கோவை புறப்பட்டு சென்றனர்.


கோவை, ஈரோடு, நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த ம.ம.க., த.மு.மு.க&வினர் கண்ணீருடன் ஊட்டி நோக்கி விரைந்துக் கொண்டிருக்கிறார்கள்.


ஆற்றல் மிகு ஊழியர்களை ம.ம.க இழந்திருக்கிறது அனைவரின் மறுமை வாழ்வுக்காக பிரார்த்திக்குமாறு ம.ம.க கோருகிறது.
கரூர் அருகே மயிலம்பட்டி கிராமத்தில் உடல்கள் மீட்கப்பட்டு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டுள்ளது.


திருச்சி, திண்டுக்கல் நிர்வாகிகள் மருத்துவமனையில் உள்ளனர்.

Tuesday, May 4, 2010

(6-may-2010) இரவு 9.45 மணியளவில் நமது ஷார்ஜா முமுகவில்


இன்ஷா அல்லாஹ் (6-may-2010) இரவு 9.45 மணியளவில் நமது ஷார்ஜா முமுகவில் சகோதரர்: சம்ஸுதீன் அவர்கள் சிறப்புரையாற்றயிருக்கின்றார்கள். அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

Monday, May 3, 2010

துபாய் கோட்டை பள்ளியில் அனைத்து முஸ்லிம் அமைப்புகளும் இணைந்து நடத்தும் நிகழ்ச்சி

துபாய் கோட்டை பள்ளியில் அனைத்து முஸ்லிம் அமைப்புகளும் இணைந்து நடத்தும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனைவரையும் அன்புடன் அழைக்கும் - முஸ்லிம் முன்னேற்ற கழகம்,துபாய்

மேலப்பாளையத்தில் மே தின நிகழ்ச்சி.







பெல்ஜியத்தில் புர்கா தடை : பெல்ஜிய முஸ்லீம்கள் கடும் கண்டனம்

பெல்ஜியத்தில் முஸ்லீம் பெண்கள் தங்களை முழுமையாக மறைத்து கொள்ள பயன்படுத்தும் நிகாப் அல்லது புர்கா அணிய தடை விதித்து நேற்று பெல்ஜிய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இரண்டு உறுப்பினர்கள் மட்டும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். மீதமுள்ள உறுப்பினர்கள் அனைவரின் ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப்பட்டது தெரிந்ததே.

இதற்கு பெல்ஜிய முஸ்லீம்கள் பாதுகாப்பு எனும் பெயரில் தங்களை ஒடுக்கும் சதி என்று கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பிரஸ்ஸல்ஸில் உள்ள ஜூம்மா மசூதியில் தொழுகைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய சாதாரண புர்காவில் இருந்த சவூத் பர்லாபி என்ற பெண் இதை விட முக்கிய பிரச்னைகள் தீர்க்கப்பட வேண்டியதிருக்கிறது என்றும் முஸ்லீம்கள் அச்சத்திற்கு உட்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இச்சட்டம் அமுலுக்கு வந்த பின்னர் யாரேனும் நிகாப் அல்லது புர்கா அணிந்தால் சுமார் 20 - 25 யூரோக்கள் அபராதமும் 7 நாட்கள் வரை சிறைத்தண்டனையும் அளிக்கப்படும் என தெரிகிறது. சமீபத்தில் இஸ்லாத்தை தழுவிய சாமுவேல் புல்டே எனும் பெண்மணி பாதுகாப்பு காரணங்களுக்காக புர்காவை தடை செய்வதாக சொல்பவர்கள் பெல்ஜியத்தில் எத்துணை திருடர்கள் புர்கா அணிந்து திருடினார்கள் என்று பட்டியலிட முடியுமா என்று கேட்டார்.

மேலும் நாஜிக்கள் யூதர்களை அழிக்க யூதர்களை மஞ்சள் நட்சத்திரங்கள் அணிந்து கொள்ள நிர்ப்பந்தித்ததை போல் முஸ்லீம்கள் தங்கள் பின்னால் பிறைகளை அணிந்து கொள்ள நிர்ப்பந்திப்பார்களோ என்று அஞ்சுவதாக குறிப்பிட்டார். இத்தீர்மானத்தில் கலந்து கொள்ளாத புருனோ டைபின்ஸ் என்ற உறுப்பினர் இது மத சுதந்திரத்தை பறிப்பதாக கூறினார்.
கன்னி மேரியின் புர்காவை தடை செய்யாதவர்கள் ஏன் முஸ்லீம்களின் புர்காவை மட்டும் தடை செய்கிறார்கள் என முதியவர் ஒருவர் எதிர்ப்பு குரல் எழுப்பினார். முஸ்லீம்கள் தனிமைப்பட்டுள்ளதக உனரும் இந்நேரத்தில் இது போன்ற தடைகள் அவர்களை இன்னும் அந்நியப்படுத்தி விடும் என மனித உரிமை அமைப்புகள் அச்சம் தெரிவித்துள்ளன.

துபாய் முமுகவின் முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் ரத்த தான முகாமின் புகைப்படங்கள்.



துபாய் முஸ்லிம் முனேற்ற கழகம் சார்பில் 30 : 4 :2010 அன்று நடைபெற்ற ரத்த தான முகாமின் புகைப்படங்கள்.