Sunday, October 31, 2010

இரத்த தானம்! தொடரும் விருதுகள்!!


தமிழகத்தில் மனித நேயப்பணிகளை ஆற்றிவரும் தமுமுக முஸ்லிம் அல்லாத சகோதரர்களிடமும் மிகுந்த பேராதரவை பெற்று வருவது தெரிந்ததே.


இந்நிலையில் எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சங்கம் மற்றும் தமிழ்நாடு மாநில குருதிப் பரிமாற்று குழுமம் தேசிய தன்னார்வ இரத்ததான நாளை முன்னிட்டு விருது கொடுத்து ஊக்குவித்து வருகிறது. சென்னை சேத்துப்பட்டு சின்மயா ஹெரிடேஜ் மையத்தில் விருதுகள் வழங்கும் விழா 30.10.2010 அன்று நடைபெற்றது. இதில் சென்னை மாவட்டத்தை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்ட இரத்ததான விருதுகளை வழங்கியது.

அவசர இரத்ததான சேவையில் இவ்வருடம் தமுமுக பெறும் சாதனைப் பெற்றிருக்கிறது. .

இவ்வருடம் (முகாம்கள் நீங்கலாக) 1723 யூனிட் ரத்தங்களை அவசர உதவிகளுக்கு வழங்கியமைக்காக தமுமுக விருதினைப் பெற்றது. இதனை தமுமுக மாநிலச் செயலாளர் பி.எஸ்.ஹமீது, வட சென்னை மாவட்டத் தலைவர் உஸ்மான், தென் சென்னை மாவட்டத் தலைவர் சீனி முகம்மது ஆகியோர் தமிழக மக்கள் நலவாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் எம். ஆர்,கே. பன்னீர் செல்வம் அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டனர்.


சென்னை மாவட்ட தமுமுகவுக்கு 100 பேருக்கு அதிகமாக கொடுத்த கிளைகள் என்ற அளவில் 3 விருதுகள் (புழல் திருவல்லிக்கேணி மற்றும் தி.நகர்) கிடைத்தது. மற்ற கிளைகள் முறையாக பதிவு செய்யாததால் விருது பெறும் வாய்ப்பினைப் பெறவில்லை.

இந்நிகழ்ச்சிக்கு சென்னை மாநகராட்சி மேயர் மா. சுப்பிரமணியன், மக்கள் நலவாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலர் வி,கே,சுப்புராஜ் ஐ.ஏ.எஸ், எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சங்கம் திட்ட இயக்குநர்கள் அமுதா ஐ.ஏ.எஸ் மற்றும் பெ. அமுதா ஐ.ஏ.எஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



முன்னதாக நிகழ்ச்சியில் உரையாற்றிய போது அமைச்சர் பன்னீர் செல்வமும் சென்னை மாநகர மேயர; மா. சுப்ரமணியமும் அனைத்து சமூக மக்களுக்கும் சேவை செய்து வரும் தமுமுகவின் மனிதநேயப்பணிகளைப் பாராட்டிப் பேசினார்.

Saturday, October 30, 2010

சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

கீழக்கரை, அக். 29: கீழக்கரை அருகே வியாழக்கிழமை இரவு சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்புக்கப்பட்டது.
கீழக்கரையில் வியாழக்கிழமை இரவு பலத்த காற்றுடன் மழை பெய்ததால் கீழக்கரையிலிருந்து, ராமநாதபுரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மின்வாரியம் (பவர் ஹவுஸ்) அருகில் பழமை வாய்ந்த ஆலமரம் வேரோடு சாய்ந்து, சாலையின் குறுக்கே விழந்தது.
இதனால் ராமநாதபுரத்திலிருந்து கீழக்கரை, ஏர்வாடி, திருநெல்வேலி, தூத்துக்கடி, கன்னியாகுமரி ஆகிய ஊர்களுக்குச் செல்லும் வாகனங்கள் செல்லமுடியாமல் பாதிப்பு ஏற்பட்டது.
கீழக்கரை காவல்துறையினரின் முயற்சியால் மரத்தின் ஒரு பகுதி வெட்டப்பட்டு போக்குவரத்து சீர்செய்யப்பட்டது.
30-ம் தேதி தேவர் குருபூஜை விழாவும், 31-ம் தேதி ஏர்வாடி சந்தனக்கூடு விழாவும் நடைபெற உள்ளதால் வாகன போக்குவரத்து அதிகமாக உள்ளது.ஆகவே நெடுஞ்சாலைத் துறையினர் மரத்தை அப்புறப்படுத்த துரித நடவடிக்கை எடுக்கவேண்டும் என வாகன ஓட்டுநர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஓரணியில் சமுதாயப் பிரமுகர்கள்!




முஸ்லிம் சமுதாய அமைப்புகள் ஓரணியில் திரளுமா? என்ற கேள்வியை அடிக்கடி பலரும் கேட்பதுண்டு. கொள்கை அடிப்படையில் இல் லாமல், குறைந்தபட்ச செயல் திட்டங்களின் அடிப்படையிலாவது உட்கார்ந்து பேசலாமே என்பது தான் பலரின் கடைசி வேண்டுகோளாக இருந்தது. அது இப்போது சாத்தியப்பட்டிருக்கிறது.
வன்முறைக் கும்பலால் திருவிடச்சேரி பள்ளிவாசலில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டையும், ஜமாத் நிர்வாகிகளின் படுகொலையை கண்டித்தும், அலஹாபாத் உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பு குறித்து விவாதிக்கும் விதமாகவும் வலுவான முஸ்லிம் அமைப்புகள் மட்டுமின்றி அனைத்து தலைமைகளும் கடந்த 19.10.2010 அன்று சென்னையில் அசோகா ஓட்டலில் ஒன்று கூடினர்.ஏற்கனவே தமிழக அரசு கொண்டு வந்த திருமண பதிவுச் சட்டத்திற்கு எதிராக அனைவரும் அமர்ந்து ஆலோசித்தனர். மேலும், அதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டு சந்திப்புகளை விட இப் போது நடைபெற்ற சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. திருவிடச்சேரி சம்பவத்தின் பின்னணியில் இருக்கும் வன் முறைக் கும்பலுக்கு எதிராக அமைப்புகள் சார்பில் தமிழகமெங்கும் கண்டன சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது. இதற்கு பெரும் வரவேற்பு கிடைத் துள்ள நிலையில், உடனடியாக கொலைகாரன் ஹாஜி முகம்மது குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டான். இதற்குப் பின்னணியில் இருக்கும் சதிகாரர்களும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்த நிலையில், 19 முஸ்லிம் அமைப்புகள் ஓரணியில் திரண்டிருப்பது ஆட்சியாளர்களை மிரள வைத்திருக்கிறது.
தொடர்ந்து இது குறித்து அதிகாரிகளை சந்திப்பதற்கு பேரா.ஜவாஹிருல்லாஹ் தலைமையில் ஒரு குழுவும் தமிழக முதல்வரை சந்திப்பதற்கு காங்கிரஸ் பிரமுகரும், இஸ்லாமிய இலக்கிய கழகத் தலைவருமான ஹிதாயத் துல்லாஹ் தலைமையில் ஒரு குழுவும், அமைக்கப்பட்டது.19.10.2010 அன்று நடந்த கூட்டத்தில் பாபர் மஸ்ஜித் தீர்ப்புக் குறித்து லக்னோவில் நடைபெற்ற அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியக் கூட்டத்தில் நடந்தது என்ன? என்பது குறித்து தமுமுக தலைவர் பேரா.ஜவாஹிருல்லாஹ் விளக்கினார்.இக்கூட்டத்திற்கு ஜமாத்துல் உலமா சபையின் தலைவர் அப்துல்ரஹ்மான் ஹஜ்ரத் தலைமை தாங்கினார். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், ஜமாத்துல் உலமா, பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா, ஜமாத்&இ&இஸ்லாமி, இந்திய தவ்ஹீத் ஜமாத், இந்திய தேசிய லீக், தேசியலீக் கட்சி, மறுமலர்ச்சி முஸ்லிம் லீக், தமிழ் மாநில தேசிய லீக் (அல்தாப்), இஸ்லாமிய இலக்கியக் கழகம், மில்லி கவுன்ஸில், மஜ்லிஸே முஷாவரத், ஜம்மியத்துல் உலமா&இ&ஹிந்த், தாருல் இஸ்லாம் ஃபவுண்டேஷன், முஸ்லிம் தனியார் சட்டவாரியம், ஜம்மியத்துல் உலாமா (அர்ஷத் மதனி), ஷரியத் பாதுகாப்பு பேரவை, இஸ்லாமிய விழிப்புணர்வுக் கழகம், தமிழக முஸ்லிம் தொண்டு இயக்கம், சென்னை சுன்னத் ஜமாத் பள்ளி வாசல் கூட்டமைப்பு உள்ளிட்ட முஸ்லிம் அமைப்புகள் இதில் பங்கேற்றன.

Thursday, October 28, 2010

சிறைக்குள் வேண்டாம் போலீஸ்!


அரசியல் கைதிகளால் நிரம்பி வழிகிறது, அமைதிப் பூங்காவான தமிழகச் சிறைச்சாலைகள்!கைதிகள், தாங்கள் செய்த குற்றங் களை உணர்ந்து, திருந்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட இந்தச் சிறைகள், சித்ரவதைக் கூடங்களாக விளங்குவதை... அதனுள் 13 ஆண்டுகள் இருந்து அனுபவித்த நான், எந்த தவறும் செய்யவில்லை என நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டவன். வெள்ளைக்காரன் ஆண்ட 1894-லிலேயே சிறைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அவன் இந்த நாட்டைவிட்டுப் போன பிறகும், அந்த ஷரத்துகள் இன்று வரை அமலில் இருக்கின்றன. தன்னுடைய அரசாங்கத்தை எதிர்க்கும் அடிமைகளைத் துன்புறுத்தக் கொண்டுவரப்பட்ட சிறைச் சட்டம், சுதந்திர இந்தியாவில் 'விடுதலை' இந்தியனைப் பழிவாங்கவும் பயன்படுத்தப்படுவதுதான் கோரமானது!பீகார் மாநிலம் பாகல்பூர் சிறையில், கைதிகளின் கண்களையே பிடுங்கி வீசினர். 1998-ல் சென்னை மத்திய சிறையில் நடந்த கலவரத் தில், 10-க்கும் மேற்பட்ட கைதிகள் கொலை செய்யப்பட்டார்கள். 1999-ல் பாளையங்கோட்டை சிறையில் இருந்து குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த ஏழு நபர்கள் அதிரடியாக வேலூர் சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டு, அங்கு அவர்கள் மொட்டை அடிக்கப்பட்டு, 30 நாட்கள் நிர்வாணமாக வைக்கப்பட்டார்கள். அதே ஆண்டின் இறுதியில் மதுரை, பாளை மத்திய சிறை தவிர, மற்ற ஆறு மத்திய சிறைகளில் இஸ்லாமிய சிந்தனையாளர்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு, தனி செல்லில் 45 நாட்கள் சூரிய வெளிச்சம்கூட படாத வகையில் கொடுமைப்படுத்தப்பட்டனர்.1990-களின் தொடக்கத்தில் இருந்து சிறைகளில் 'உயர் பாதுகாப்புத் தொகுதி' என்ற தனிப் பிரிவை உருவாக்கி சித்ரவதை செய்து வருகிறார்கள். இங்கே மனித வாடையும், இயற்கைக் காற்றும் மருந்துக்குக்கூட கிடைக்காது. இதில்தான் புரட்சியாளர்கள், தமிழ் தேசிய மற்றும் இஸ்லாமியப் போராளிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அரசின் சட்டபூர்வ, சட்ட விரோத வன்முறைகள் இவர்கள் மீது நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அரசியல் சாசன சட்டத்துக்கு எதிராக, மனித உரிமைகளை மீறுகிற வகையில் இவர்கள் அடைக்கப்பட்டு உள்ளனர். அரசியல் சிறைவாசிகள் முழுமையாக உளவுத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் நடத்தப்படுகின்றனர். சிறை நிர்வாகம் என்பது பெயர் அளவில்தான். உளவுத் துறையே சர்வ அதிகாரம் கொண்டதாக செயல்படுகிறது.சிறையில் 90 சதவிகிதம் பேர் ஏழை மற்றும் சாதாரண மக்கள். இவர்கள் அடிப்படையில் உழைக்கும் வர்க்கத்தைச் சார்ந்தவர்கள். 'இவர்கள் இந்த அரசாங்கத்துக்கு எதிராகச் செயல்பட்டவர்கள் என்றால், சட்டபூர்வமான எந்தத் தண்டனையும் தரட்டும். ஆனால், சிறைக்கூடங்களில் சித்ர வதைகள் செய்வது என்ன நியாயம்?' என்பதுதான் எங்களது கேள்வி!பணம் படைத்த அதிகாரத்தின் ஆராதனைக்கு உரிய ஒருவர், பல கோடி மோசடியில் மாட்டி, இதே சிறைக்குள் வந்தால், அவருக்கு ராஜ மரியாதை தரப்படுகிறது. சிறை வாசலில் நின்று அதிகாரிகள் வரவேற்று உள்ளே அழைத்துச் செல்கிறார்கள். நோயே இல்லை என்றாலும், சிறை மருத்துவ மனைகளில் அவர்கள் தங்கவைக்கப்படுகிறார்கள். சொகுசான வாழ்க்கைக்கு உத்தரவாதம் தரப்படுகிறது. உள்ளே வருபவர் சாதாரணமானவர் என்றால், எல்லார் முன்னிலையிலும் அவமானப்படுத்தப்படுகிறார்.'சிறைக் கட்டடத்தில் உள்ள ஒவ்வோர் தொகுதியிலும், தனித் தனி புகார் பெட்டிகள் வைக்கப்பட்டு, அவை மாவட்ட முதன்மை நீதிபதியின் நேரடிப் பராமரிப்பில் இருக்க வேண்டும். மாத ஆய்வுக்கு மாவட்ட நீதிபதி சிறைக்கு வரும்போது, சிறை அதிகாரிகளைத் தவிர்த்து சிறைவாசிகளிடம் நேரடியாகக் குறைகளைக் கேட்க வேண்டும்' என்று உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் சொல்கின்றன. ஆனால், இவை எங்கும் நடைமுறையில் இல்லை.இந்தக் குறைபாடுகள் அனைத்தை யும் ஒரேநாளில் முற்றிலுமாகத் தீர்த்துவிட முடியாதுதான். அவற்றைப் படிப்படியாகச் சரிப் படுத்தினாலும்கூடப் போதும். ஆனால், அதற்கும் வாய்ப்பு இல்லை என்றே தோன்றுகிறது. இருப்பினும் இது தொடர்பான ஒரு குறைந்தபட்சக் கோரிக்கை என்ன வென்றால், மனிதாபிமானம் உள்ள மனிதர்கள் சிறைத் துறையைக் கவனிக்கும் பொறுப்புக்கு வர வேண்டும் என்பதே.'கைதிகள் தங்களின் அடிமைகள்!' என்று நினைக்கும் போலீஸார் கையில் இன்று சிறைகள் இருக் கின்றன. காவல் துறை இயக்குநர் ஆர்.நட்ராஜ் சிறைத் துறை இயக் குநராக இருந்தபோது... இந்தியாவில் முதன் முதலாக இந்து, முஸ்லிம், கிறிஸ்துவப் பண்டிகை நாட்களில் சிறைவாசிகளை அவர்களின் குடும்பத்தினர் சந்தித்து நலம் விசாரிக்க அனுமதி அளித்தார். ஒரே ஒரு அதிகாரி மட்டும் இப்படி இருந்தால் போதாது. போலீஸார் அனைவருக்குள் ளும் அந்த மன நிலை புகுத்தப்பட வேண்டும்.காவல் துறையினரால்அடக்கு முறைக்கு ஆளாகி, சிறைப்பட்டு உள்ளவர்களைப் பராமரிக்கும் மனிதாபிமானம் சார்ந்த பொறுப் புக்கு, அதே காவல் துறையின் தலைவர்களை நியமனம் செய் வதைத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக, இந்திய ஆட்சிப் பணி, சுகாதாரத் துறை அல்லது நீதித் துறையைச் சார்ந்தவர்களை சிறைத் தலைவராக நியமனம் செய்வதன் மூலம், மனித உரிமைகள் மீறலை பெருமளவுக்குக் கட்டுப் படுத்தலாம்!

Tuesday, October 26, 2010

முன்னாள் பிரதமர் பிளேரின் மைத்துனி இஸ்லாமுக்கு மாறினார்



லண்டன்: இங்கிலாந்துமுன்னாள் பிரதமர் டோனி பிளேரின் மைத்துனியான லாரன் பூத் இஸ்லாமுக்கு மதம் மாறியுள்ளார். இதை அவரே அறிவித்துள்ளார்.பிளேரின் மனைவி செரி பிளேரின் ஒன்று விட்ட சகோதரிதான் இந்த பூத். பிறப்பால் கத்தோலிக்க கிறிஸ்தவர் ஆவார். சமீபத்தில் ஈரான் சென்றிருந்த அவர் அங்கு இஸ்லாம் மதத்தின்பால் ஈர்க்கப்பட்டு இஸ்லாமியராக மாறியுள்ளார்.உலக அளவில் பிரபலமாகி வரும், ஈரான் தொடங்கியுள்ள 24 மணி நேர ஆங்கில சர்வதேச தொலைக்காட்சியான பிரஸ் டிவியில் இவர் பத்திரிக்கையாளராகப் பணியாற்றுகிறார். அமெரிக்க, இங்கிலாந்து ஆதரவு சிஎன்என், பிபிசி போன்றவற்றுக்குப் போட்டியாக அறிமுகமான பிரஸ் டிவி தற்போது உலக அளவில் பிரபலமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பூத் ஒரு மனித உரிமை ஆர்வலரும் கூட. சமீபத்தில், இஸ்லாமியர்கள் பலரும் கலந்துகொகண்ட உலக அமைதி மற்றும் ஒற்றுமை என்ற பெயரிலான பேரணியில், பூத்தும் கலந்து கொண்டார். அப்போதுதான் அவர் மதம் மாறியிருக்கலாமோ என்ற பேச்சு எழுந்தது. தற்போது அதை உறுதிப்படுத்தியுள்ளார் பூத்.43 வயதாகும் பூத், இதுகுறித்து இங்கிலாந்து மீடியாக்களிடம் கூறுகையில், ஈரானில் உள்ள ஒரு தர்காவில் ஆறு வாரங்களுக்கு முன்பு எனக்கு அருமையான இறை அனுபவம் கிடைத்தது. அதன் பின்னரே நான் இஸ்லாம் மார்க்கத்தின் பால் ஈர்க்கப்பட்டேன். இப்போது நான் தினசரி ஐந்து வேளை தொழுகிறேன். சில சமயம் மசூதிக்கும் போகிறேன். கடந்த 45 நாட்களாக நான் ஆல்கஹால் கலந்த பானம் எதையும் அருந்தவில்லை என்றார்.தற்போது வெளியில் செல்லும்போது முஸ்லீம் பெண்களைப் போல தனது தலையைச் சுற்றிலும் துணி கட்டிக் கொள்கிறார் பூத். எதிர்காலத்தில் புர்க்கா அணியவும் முடிவு செய்துள்ளாராம். குரானை தினசரி படிக்கிறாராம். தனது இந்த மதமாற்றம் சர்ச்சைகளை ஏற்படுத்தலாம் என்பது தனக்குத் தெரியும் என்று கூறும் பூத், ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர்வினையுண்டு என்பதை நான் அறிவேன் என்கிறார்.பூத்தின் மதமாற்றம் குறித்து செரி பிளேரும், டோனி பிளேரும் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. டோனி பிளேரே 2007ம் ஆண்டு வரை சர்ச் ஆப் இங்கிலாந்தில் உறுப்பினராக இருந்தவர்தான். அதன் பின்னர்தான் அவர் ரோமன் கத்தோலிக்கராக மாறினார். செர்ரி பிளேர் ஆரம்பத்திலிருந்தே ரோமன் கத்தோலிக்கர் என்பது குறிப்பிடத்தக்கது.சமீபத்தில் பூத், மார்னிங் ஸ்டார் என்ற கம்யூனிஸ்ட் நாளிதழில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில், டோனி பிளேரை கடுமையாக விமர்சித்திருந்தார். அதில், பாலஸ்தீனத்தின் ரபா, நபுலஸ் ஆகிய நகரங்களில் இஸ்ரேலின் தாக்குதல்களில் உயிரிழந்து போன தங்களது உறவினர்களின் உடல்கள் மீது விழுந்து அழும் தாய்மார்களி்ன் கண்ணீரை டோனி பிளேர் மறந்து விட்டார். குறைந்தபட்சம், இந்த நகரங்களின் பெயர்களாவது அவருக்குத் தெரியுமா என்று தெரியவில்லை. இந்த நகரங்களைச் சேர்ந்த எத்தனையோ தாய்மார்கள் தங்களது பிள்ளைகளை இழந்து பரிதவித்து கண்ணீரில் மூழ்கியுள்ளனர். இஸ்ரேலின் இந்த ராட்சத கொடூரத் தாக்குதல்களை அங்கீகரிக்கிறீர்களா பிளேர் என்று காட்டமாக கேட்டிருந்தார்.

கீழக்கரையில் நாளை மின் தடை

கீழக்கரை, அக். 24: கீழக்கரையில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, கீழக்கரை, ஏர்வாடி, முஹம்மது சதக் கல்லூரி பகுதி, மாயாகுளம், காஞ்சிரங்குடி, உத்தரகோசமங்கை, களரி, எக்ககுடி, தேரிருவேலி மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (அக். 26) காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரை மின் தடை ஏற்படும் என்று ராமநாதபுரம் உதவி செயற்பொறியாளர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

அல்கோபர் தமுமுக நடத்திய இரத்த தான முகாம்




தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தொடங்கிய நாள் முதல் மக்கள் பணியான கல்வி உதவி, மருத்துவ உதவி மற்றும் அவசர கால உதவிகளில் அதிக கவனம் செலுத்தி வருவது தாங்கள் அறிந்ததே, குறிப்பாக உயிர் காக்கும் உதவிகளான இரத்ததானம், மற்றும் ஆம்புலன்ஸ் சர்வீசில் தமுமுகவிற்கு நிகர் தமுமுக தான் என்றால் அது மிகையாகாது.
அதன் தொடர்ச்சியாக எதிர்வரும் ஹஜ் மாத்தில் ஹாஜிகளுக்கு அவரசகால உதவிக்காக சவூதி அரேபியா கிழக்கு மண்டலத்தில் அல்-கோபர் தமுமுக முதன் முறையாக கிங் ஃபகத் மருத்துவமனையுடன் இணைந்து மாபெரும் இரத்ததான முகாமை 3 வாரங்களுக்கு நடத்த திட்டமிட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக கடந்த வெள்ளிக்கிழமை (22-10-2010) அன்று முதல் கட்ட இரத்ததான முகாம் நடத்தப்பட்டது. இம்முகாமில் சுமார் 100க்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர். அதில் 60 பேர் இரத்ததானம் செய்தனர்.
இதில் சிறப்பம்சம் என்னவென்றால் தாயகத்தில் தமுமுகவின் தன்னலமற்ற இரத்தான சேவைகளைக் கண்ட மாற்று மத சகோதரர்கள் தாங்களாகவே முன்வந்து இரத்ததானம் செய்தது அனைவரையும் அகமகிழச்செய்தது.
மேலும் அல்-கோபர் தமுமுக சார்பாக எதிர் வரும் வெள்ளிக்கிழமை (29-10-2010) இரண்டாம் கட்ட இரத்தான முகாமை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.
இம்முகாம் அல்-கோபர் தமுமுக கிளைத் தலைவர் சகோ.ஹாஜா நஜ்முதீன் தலைமையிலும் துணைத் தலைவர் சகோ.இஸ்மாயில், செயலாளர் சகோ. ஹாஜா பஷிர், பொருளாளர். சகோ. ஷஃபியுல்லா ஆகியோர்களின் முன்னிலையிலும் நடைபெற்றது. மேலும் மண்டலச் செயலாளர் சகோ. இஸ்மாயில், மண்டலப் பொருளாளர் சகோ.நஸ்ருத்தீன் ஸாலிஹ், துணைத்தலைவர் சகோ. ஜக்கரியா, துணைச் செயலாளர் சகோ.அஸ்ரப், துணைச் செயலாளர் சகோ.சீனி முஹம்மது ஆகியோர் கலந்து கொண்டனர்.
இரத்ததானம் செய்வீர்!! உயிர் காப்பீர்!!!சீனி முஹம்மது


தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழக மாவட்ட பொறுப்பாளர்கள் தேர்வு

தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் மற்றும் மினிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட தலைவராக ஜனாப். S.ஆசாத் அவர்களும் மாவட்ட பொருளாளராக ஜனாப். S.M.P.முஹமது நெய்னா, த.மு.மு.க. செயலாளராக ஜனாப்.நவாஸ், மனிதநேய மக்கள் கட்சியின் செயலாளராக ஜனாப். H.பீரப்பா,த.மு.மு.க. துணை தலைவராக ஜனாப். A.V.S. காஜா முஹைதீன்,த.மு.மு.க. துணை செயலாளர்களாக ஜனாப். யூசுப்,ஜனாப். மஹ்தூம் ஆகியோர் தேர்வுசெய்யப்பட்டனர். முன்னதாக தூத்துக்குடியில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் மாநில துணை செயலாளர் ஜனாப். சாதிக் அவர்களின் தலைமையில் நடைபெற்ற தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் மற்றும் அதன் அரசியல் பிரிவான மனிதநேய மக்கள் கட்சியின் கூட்டு பொதுக்குழுவில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டது.

Wednesday, October 20, 2010

தொண்டியில் தமுமுக பொதுக் குழு கூட்டம்

திருவாடானை தாலுகா தொண்டியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக (தமுமுக) தொண்டி கிளையின் சார்பில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
அதன் மாநிலச் செயலாளர் ஜாகீர் உசேன் தலைமை வகித்தார். தமுமுக மாவட்ட செயலாளர் சாதிக் பாட்சா, மனித நேய மக்கள் கட்சி ஒன்றியச் செயலாளர் அகம்மது பாட்சா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொண்டி அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள், குறிப்பாக பெண் மருத்துவர்களை நியமனம் செய்ய வேண்டும். அரசு மேல்நிலைப் பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
அரசு போக்குவரத்து பணிமனையை உடனடியாக துவங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் தொண்டி நகர் செயலர் முகம்மது ஆசீக், அப்துல் ரசீக், அலாவுதீன் ரசாக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பாபரி பள்ளிவாசல் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு! அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியக் கூட்டத்தில் தீர்மானம்! தமிழகத்திலிருந்த

பாபரி பள்ளிவாசல் வழக்கில் அலஹாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வதற்கு அனைத்திந்திய முஸ் லிம் தனியார் சட்ட வாரியம் முடிவு செய்துள்ளது.
உ.பி. மாநிலத்தின் தலைநகர் லக்னோவில் உள்ள புகழ்பெற்ற நத்வத்துல் உலூம் அரபி பல்கலைக் கழகத்தில் அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் செயற்குழுக் கூட்டம் கடந்த சனிக்கிழமை (அக்டோபர் 16) அன்று நடைபெற்றது. அனைத்திந் திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் இந்தியாவில் உள்ள பல்வேறு முஸ்லிம் அமைப் புகளின் பிரதிநிதித்துவ அமைப் பாகும். முஸ்லிம் தனியார் சட்டவாரியத்தின் தலைவரும் நத்வா பல்கலைக்கழகத்தின் தலை வருமான மவ்லவி ராபி ஹசன் நத்வி தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தனியார் சட்ட வாரியத்தின் செயற்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் 51 பேர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டார்கள். தமிழகத்தில் இருந்து இக்கூட்டத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் கலந்து கொண்டார்.முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் பொதுச் செயலாளர் மவ்லவி நிஜாமுத்தின், துணைப் பொதுச் செயலாளர் அப்துர் ரஹீம் குறைஷி, வாரியத்தின் துணைத் தலைவரும் ஜமாஅத்தே இஸ்லாமி அமைப்பின் தலைவருமான மவ்லவி ஜலாலுத்தீன் அன்சார் உமரி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சைய்யது சஹாபுதீன், ஜம்மியத்துல் உலமா ஹிந்தின் தலைவர்கள் மஹ்மூத் மதனி எம்.பி. மற்றும் அர்ஷத் மதனி பிரபல மூத்த வழக்குரைஞர் யூசுப் முசாலா, தனியார் சட்ட வாரியத்தின் பாபரி பள்ளிவாசல் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் டாக்டர் எஸ்.கி.யூ.ஆர். இல்யாஸ், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தலைவர் இ.எம். அப்துர் ரஹ்மான், கர்நாடக இமாஅரத்தே ஷரீஅத் அமைப்பின் தலைவர் முப்தி அஷ்ரப் அலி, இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் பேரா.சுலைமான், மில்லி கவுன்சில் பொதுச் செயலாளர் டாக்டர் மன்சூர் ஆலம் உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.காலை 10 மணிக்கு தொடங்கிய கூட்டம் மதியம் 2.30 வரை நீடித்தது. தொடக்கமாக பாபரி பள்ளிவாசல் வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு குறித்து வழக்குரைஞர் ஜஃபர்யாப் ஜீலானி விவரித்தார். இதனைத் தொடர்ந்து உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் இக்கூட்டத்தில் தெரிவித்த கருத்துரையின் சுருக்கம் பின்வருமாறு:
“பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட பிறகு 1993ல் ஜெய்பூரில் நடைபெற்ற அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இங்கே குழுமியுள்ள உறுப்பினர் களுக்கு மீண்டும் நினைவூட் டுகிறேன். அந்தக் கூட்டத்தில் ஒரு இடம் பள்ளிவாசலாக இருந்தால் அது என்றைக்குமே பள்ளிவாசலாகத் தான் இருக்க முடியும் என்று ஷரீஅத்தின் விதிமுறைப்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த அடிப்படையில் தான் நாம் இந்தப் பிரச்னையை அணுக வேண்டும். பாபரி பள்ளிவாசல் தீர்ப்பு வெளிவந்த பிறகு நமது உரிமையை விட்டுக் கொடுக்க வேண்டும் என்று ஒரு சில வட்டாரங்களில் பேச்சுக்கள் எழுகின்றன. இதனை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. அல்லாஹ்வின் ஆலயத்தை அன்பளிப்பாக அளிப்பதற்கு நமக்கு அதிகாரம் இல்லை. பாபரி பள்ளிவாசல் வழக்கில் அலஹாபாத் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு மிகவும் ஆபத்தானது. உச்சநீதிமன்றத்தை நாடி இந்தத் தீர்ப்பை புதைக் குழிக்கு அனுப்புவதுதான் நமது முதன்மையான பணியாக இருக்க வேண்டும். இதற்காக சையது ஷஹாபுத்தீன் அவர்கள் குறிப்பிட்டது போல் பல்வேறு முஸ்லிம் அமைப்புகளும் இந்த வழக்கில் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும். தலைசிறந்த வழக்குரைஞர்களின் பட்டாளம் இதற்காக அமைக்கப்பட வேண் டும். இந்தத் தீர்ப்பு நமது அரசியல் அமைப்புச் சட்டத்தின் நெறிமுறைகளுக்கு எதிராக அமைந்துள்ளது என்பதையும் நாம் அனைத்து மக்களுக்கும் விளக்க வேண்டும். இந்தத் தீர்ப்பு நம்பிக்கையின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது மிகவும் ஆபத் தானது. தீண்டாமை ரீதியான கொடுங்கோன்மைகளைக் கூட இந்தத் தீர்ப்பை முன்னுதாரணமாக காட்டி நியாயப்படுத்தும் நிலை ஏற்படும். இவ்வாறு தமுமுக தலைவர் பேரா.ஜவாஹிருல்லாஹ் பேசினார்.சுமார் நான்கரை மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தின் இறுதியில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 1) பல்வேறு குழப்பங்களும், தவறுகளும் நிறைந்த அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வது மிக அவசியமாகும். இந்த மேல்முறையீட்டின் மூலம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடித்தளங்களை சிதைக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ள தீர்ப் பை திருத்தி எழுத முயற்சிகள் மேற்கொள்வது, 2) மேல்முறையீடு தொடர்பான நீதிமன்ற செலவுகளுக்காக பாபரி பள்ளிவாசல் சட்டநிதி உருவாக்குவது, 3) பாபரி பள்ளிவாசல் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பின் அபத்தங்களை விளக்குவதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் கருத்தரங்குகள் நடத்துவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.செயற்குழுக் கூட்டத்தின் இறுதியில் செய்தியாளர் கூட்டம் நடைபெற்றது. பாபரி பள்ளிவாசல் பிரச்சனையில் பேச்சு வார்த்தைக்கு வழி இல்லையா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த வாரியத்தின் துணைப் பொதுச் செயலாளர் அப்துல் ரஹீம் குரைஷி, ‘நீதிமன்றத் திற்கு வெளியில் பேச்சு வார்த்தை நடத்துவதற்கான திட்டம் எதுவும் எங்களிடம் இல்லை. எதிர்தரப்பு ஏதாவது திட்டத்தை முன்வைத்தால் அது நாட்டின் அரசியலமைப்புச் சட்டம், ஷரீஅத் நெறிமுறைகள் மற்றும் முஸ்லிம்களின் கண்ணியம் ஆகியவற்றின் வெளிச்சத்தில் பரிசீலிக்கப்படும்‘ என்று பதிலளித்தார்.ஹாசிம் அன்சாரி நடத்தி வரும் சமாதான பேச்சு வார்த்தைகள் குறித்து கருத்து கேட்டபோது, “அது தனி நபர் எடுக்கும் முயற்சி என்றும் ஆனால் தனியார் சட்டவாரியம் எடுக்கும் முடிவிற்கு தான் கட்டுபட்டு நடப்பதாக அன்சாரி தன்னிடம் தெரிவித்தார்” என டாக்டர் இல்யாஸ் தெரிவித்தார்.

Tuesday, October 19, 2010

உடன்குடி தமுமுகவிற்கு இரத்ததான விருது

தேசிய தன்னார்வ இரத்ததான நாளை முன்னிட்டு தமிழ் நாடு மாநில குருதி பரிமாற்று குழுமம் மற்றும் தமிழ்நாடு மாநில எயிட்ஸ் கட்டு பாட்டு சங்கம் நடத்திய இரத்ததான விழாவில் அதிக முறை இரத்ததானம் செய்த தொண்டு நிறுவனங்களுக்கு பாராட்டு சான்றிதழும் விருதும் வழங்கப்பட்டது. .அதில் தூத்துகுடி மாவட்டத்தில் அதிக முறை இரத்ததானம் செய்ததற்காக உடன்குடி தமுமுகவிற்கு விருது வழங்க பட்டது.


Sunday, October 17, 2010

பாபரி பள்ளிவாசலை அதே இடத்தில் கட்டுவது மட்டும் தான் ஒரே தீர்வு!-டெல்லி ஜும்ஆ மஸ்ஜித் தலைமை இமாம் சையத் அஹமத் புஹாரி

அயோத்தியில் பாபரி பள்ளிவாசலை தகர்க்கப்பட்ட இடத்திலேயே மஸ்ஜித் கட்டித்தருவதைத் தவிர வேறு எந்த சமரசத் தீர்வையும் ஏற்க மாட்டோம் என்று டெல்லி ஜும்ஆ மஸ்ஜித் தலைமை இமாம் சையத் அஹமத் புஹாரி தெரிவித்திருக்கிறார். டெல்லி மற்றும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த நாற்பதுக்கும் மேற்பட்ட மார்க்க அறிஞர்கள் டெல்லியில் கூடி அலகாபாத் உயர்நீதிமன் றத் தீர்ப்பு குறித்து விரிவாக விவாதித்தனர்.

அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை முழுதாக நிராகரிப்பதாகவும் மஸ்ஜித் கட்டுவது தொடர்பாக எந்தவித சமரசத் தீர்வையும் ஏற்பதற்கு தாங்கள் தயாராக இல்லை என்றும் அவர்கள் தீர்மானம் நிறைவேற்றினர்.

“அலகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பை நாங்கள் நிராகரிக் கிறோம்; இந்தத் தீர்ப்பு தொடர் பாகத் தன்னுடைய நிலை என்ன என்பதை மத்திய அரசும், காங்கிரஸ் கட்சியும் தெளிவாக விளக்க வேண்டும் என்று எதிர் பார்க்கிறோம்.

இந்த விவகாரம் தொடர்பாகப் பிரதமர் மன்மோகன் சிங்குக்குக் கடிதம் எழுதி அவரைச் சந்திக்க நேரம் ஒதுக்குமாறு கேட்டிருக்கிறோம்.

மஸ்ஜிதிற்கு எதிரான அத்தனை நடவடிக்கைகளுக்கும் காங்கிரஸ் கட்சிதான் நேரடியான காரணம் என்று நாங்கள் கருதுகிறோம். பாபரி பள்ளிவாசல் பிரச்னை தொடங்கியது முதல் அலகாபாத் உயர் நீதிமன்றம் இப்போது அளித்துள்ள தீர்ப்புவரை அனைத் துமே காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கைகளால் அமைந்தவை தான்” என்றும் அவர் கடுமையாக சாடினார்.

முஸ்லிம்களுக்கு உற்ற நண்பனைப் போல பேசியே ஏமாற்றிக் கொண்டு, வகுப்புவாத சக்திகளுக் குத்தான் காங்கிரஸ் துணைபோய்க் கொண்டிருக்கிறது.

முஸ்லிம்களில் சிலர் சமரசத் தீர்வு காண்பதாகக் கூறிக்கொண்டு கொல்லைப்புற வழியாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதை நாங்கள் விரும்பவும் இல்லை, ஆதரிக்கவும் இல்லை. எந்த மாதிரி யான சமரசத் தீர்வை அவர் கள் காணப் போகிறார்கள்? இடிக்கப் பட்ட இடத்திலேயே மஸ்ஜிதை அமைப்பதைத் தவிர வேறு எதையும் முஸ்லிம்களால் ஏற்க முடியாது. இந்த விஷயத்தில் முஸ்லிம் சமூகத்தை ஆதரிக்கும் எவருடைய ஆதரவையும் நாங்கள் வரவேற்கிறோம். வழக்கு தொடர் பாக உச்சநீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்வோம் என்றார்.

Friday, October 15, 2010

முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் சிறப்பு ஆலோசனை கூட்டத்தில் தமுமுக தலைவர் பங்குக் கொள்கிறார்



அயோத்தி பாபரி பள்ளிவாசல் வழக்கில் அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பிரிவு வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் செயற்குழுக் கூட்டம் வரும் 16ம் தேதி லக்னோவில் நடைபெறுகின்றது.
இந்த கூட்டத்தில் பங்குக் கொள்வதற்காக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக்தின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் நாளை லக்னோவிற்கு செல்கிறார். அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் இந்த கூட்டத்தில் அயோத்தி வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தீர்மானிக்கப்படும். அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் இந்தியாவில் உள்ள அனைத்து முஸ்லிம் அமைப்புகள், கட்சிகள் மற்றும் மதநிறுவனங்களில் பிரதிநிதித்துவ அமைப்பாகும்.

Tuesday, October 12, 2010

திருவாரூர் மாவட்டத்திற்கு இரத்ததான விருது


கடந்த அக்டோபர் தேசிய தன்னார்வ இரத்ததான நாளை முன்னிட்டு தமிழ் நாடு மாநில குருதி பரிமாற்று குழுமம் மற்றும் தமிழ்நாடு மாநில எயிட்ஸ் கட்டு பாட்டு சங்கம் நடத்திய இரத்ததான விழா அக்டோபர் 2 அன்று தஞ்சாவூர் மருத்துவ கல்லூரியில் நடை பெற்றது .அதில் அதிக முறை ரத்த தனம் செய்த தொண்டு நிறுவனங்களுக்கு பாராட்டு சான்றிதழும் விருதும் வழங்கப்பட்டது. .அதில் திருவாரூர் மாவட்டத்தில் அதிக முறை இரத்ததானம் செய்ததற்காக திருவாரூர் மாவட்ட தமுமுகவிற்கு திருவாரூர் நகரம் கொடிக்கால் பாளையம் கிளைக்கும் விருதுகள் வழங்க பட்டது.

Monday, October 11, 2010

முன்னாள் அமைச்சர் வெங்கடாசலம் படுகொலை! த.மு.மு.க. கடும் கண்டனம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் பத்திரிகை அறிக்கை:

முன்னாள் அமைச்சரான திரு. வெங்கடாசலம், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வடகாடு கிராமத்தில் உள்ள அவரது வீட்டிலேயே சமூக விரோதிகளால் கொடூரமாக கொல்லப்பட்டு உள்ளார்.
இந்த காட்டுமிராண்டித்தனமான செயல் கடும் கண்டனத்திற்கு உரியதாகும்.
அவரை கொடூரமான முறையில் கொன்ற சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்து, அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி, தண்டனை பெற்றுத் தருமாறு காவல்துறையையும், தமிழக அரசையும் கேட்டுக் கொள்கிறேன்.
தமிழகத்தில் ஒரு முன்னாள் அமைச்சருக்கே பாதுகாப்பில்லாத சூழல் நிலவுகிறது. இது தமிழக அரசுக்கு நல்லதல்ல.
திரு. வெங்கடாசலத்தை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அதிமுக நிர்வாகிகளுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Saturday, October 9, 2010

கீழக்கரை தமுமுக நகர் புதிய நிர்வாகிகள்

கீழக்கரை தமுமுக சார்பாக 7 /10 /2010 அன்று கீழக்கரை தமுமுக நகர் தேர்தல் பொதுக்குழு நடைபெற்றது. இதில் நிர்வாகம் மறு சீரமைக்கப்பட்டு புதிய சகோதரர்கள் நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

கீழக்கரை தமுமுக நகர் புதிய நிர்வாகிகள் பின்வருமாறு

1) தலைவர்; முஜீப் ரகுமான்

2) துணை தலைவர் : முஸ்தகீன்

3) செயலாளர்: கபீர்

4) துணை செயலாளர் : ராஜா ஹுசைன்.

5) பொருளாளர் :வப்பு மரிக்க.

6) மாணவரணி செயலாளர்: இக்பால்

7) மருத்துவரணி செயலாளர்: சதக்காதுல

8) மக்கள் தொடர்பாளர்: பக்கர்

Wednesday, October 6, 2010

குமரி மாவட்டம் மிடாலத்தில் விநாயகர் ஊர்வலக் கலவரம் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம்

சென்ற வாரம் மக்கள் உரிமையில் குமரி மாவட்டம் மிடாலத்தில் கடந்த 19ம் தேதி விநாயகர் ஊர்வலத்தின் போது நடைபெற்ற தாக்குதல்கள் குறித்து விரிவாக எழுதியிருந்தோம். இதில் வீடுகள், கடைகள், மற்றும் வாகனங்கள் சேதமடைந்தன. அரசு பஸ் தீவைத்து கொளுத்தப் பட்டது.
சென்ற வாரம் மக்கள் உரிமையில் குமரி மாவட்டம் மிடாலத்தில் கடந்த 19ம் தேதி விநாயகர் ஊர்வலத்தின் போது நடைபெற்ற தாக்குதல்கள் குறித்து விரிவாக எழுதியிருந்தோம். இதில் வீடுகள், கடைகள், மற்றும் வாகனங்கள் சேதமடைந்தன. அரசு பஸ் தீவைத்து கொளுத்தப் பட்டது.இச்செய்தி மக்கள் உரிமையில் வெளியானதின் எதிரொலியாக தமிழக முதல்வர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.மிடாலம் பிரச்சினையினால் பாதிக்கப்பட்ட 8 வீடுகள், 3 கடைகளுடன் கூடிய வீடுகள், 21 கடைகள், மற்றும் 5 வாகனங்கள் ஆகியவற்றின் உரிமையாளர்களுக்கு மொத்தம் 15 லட்சத்து 68 ஆயிரத்து 800 ரூபாய் நிவாரண நிதியாக வழங்கிட தமிழக முதல்வர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.அடுத்து கலவரத்தில் ஈடுபட்ட விநாயகர் ஊர்வலத்தினர் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மிடாலம் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tuesday, October 5, 2010

அயோத்தி தீர்ப்பை எதிர்த்து 1 மாதத்தில் அப்பீல் செய்கிறது வக்பு வாரியம்

டெல்லி: அயோத்தி தீர்ப்பை எதிர்த்து இன்னும் ஒரு மாதத்தில் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் மனுவைத் தாக்கல் செய்யவுள்ளது சன்னி மத்திய வக்பு வாரியம்.இந்த அப்பீல் மனுவில் கீழ்க்கண்ட விஷயங்களை முன்வைக்கவுள்ளது வக்பு வாரியம் எனத் தெரிகிறது.1. ராமர் பிறப்பிடத்தை முடிவு செய்ய நம்பிக்கையை அடிப்படை ஆதாரமாக அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பெஞ்ச் எடுத்துக்கொண்டிருப்பது செல்லாது. 2. 1949ம் ஆண்டு ராமர் சிலையை ரகசியமாக மசூதிக்குள் வைக்கும் வரை மசூதியின் உட்பகுதியை முஸ்லீ்ம்கள்தான் தங்களது கட்டுப்பாட்டில்தான் வைத்திருந்தனர். 3. இஸ்லாம் நெறிமுறைக்களுக்குட்பட்டுத்தான் பாபர் மசூதி கட்டப்பட்டிருந்தது.இவற்றை முன்வைத்து தங்களது மேல் முறையீட்டைமேற்கொள்ள வக்பு வாரியம் முடிவு செய்துள்ளது.இதற்கிடையே அப்பீல் மனு தொடர்பாக அக்டோபர் 9ம் தேதி டெல்லியில் தனது சட்டக் கமிட்டியின் கூட்டத்தைக் கூட்டியுள்ளது அகில இந்திய முஸ்லீம் தனி சட்ட வாரியம். அதன் பின்னர் அக்டோபர் 16ம் தேதி முடிவை அறிவிக்கவுள்ளது.

துபாய் தமுமுக மர்க்கஸில் தமீமுன் அன்சாரி தொலைப்பேசி மூலம் உரை


1-10-2010, அன்று துபாய் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மர்க்கஸில், இரவு 9 மணியளவில் சகோதரர் நாகூர் செய்யத் அலி அவர்கள் ஜும்மா தொழுகையின் சிறப்புகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அதை தொடர்ந்து மனித நேய மக்கள் கட்சியின் தமிழக துணை பொதுச்செயலாளர் சகோதரர் தமீமுன் அன்சாரி அவர்கள் பாபரி மஸ்ஜித் தீர்ப்பு தொடர்பாக தமிழகத்தில் இருந்தபடி தொலைப்பேசி மூலம் உரையாற்றினார்கள் தனது உரையில் தற்போது நிலவும் சூழ்நிலைகளையும் நீதிமன்ற தீர்ப்பின் மூலமாக முஸ்லிம் சமுதாய மக்களின் உள்ளக் குமுறல்களையும் ,மற்றும் சகோதர சமுதாய மக்கள் சட்ட வல்லுனர்கள் முன்னாள் நீதிபதிகள் நியாயவான்கள் ஆகியோர்களின் கருத்துக்களையும் அவர்களின் கவலைகளையும் எடுத்துரைத்தார்கள். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக எடுக்கவுள்ள அடுத்தக்கட்ட நடவடிக்கைகளையும் பரிமாறிக் கொண்டார்கள், மிகப்பெரிய அரசியல் சதி அரங்கேறி நீதித் துறையின் பரிபாலனம் சிதைக்கப்பட்டு நிர்பந்தத்தின் அடிப்படையில் வழங்கப் பட்ட தீர்ப்பு என்றும், முஸ்லிம்கள் இந்நேரத்தில் கோபம் கொள்ளாமல் சிந்தித்து ஒற்றுமையாக செயல்படக்கூடிய தருணம் என்றும் எடுத்துரைத்தர்கள். இறுதியாக நிகழ்வில் கலந்துக் கொண்ட சகோதரர்களின் தீர்ப்பு தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலுரைத்தார்கள், இன்ஷா அல்லாஹ் உச்ச நீதிமன்றத்தில் நியாயம் கிடைக்கும் என்ற சிந்தனையோடு இறைவனின் உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு கலந்துக் கொண்ட சகோதரர்கள் கலைந்துச் சென்றார்கள்.

பாபரி மஸ்ஜித் தொடர்பாக வழக்கு தொடுத்தவர் அதிர்ச்சியில் மரணம்

அஸ்லம் புரேவின் ஜனாசா ஊர்வலம்


பாபரி மஸ்ஜித் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த அஸ்லம் புரே அலஹாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு கேட்டு அதிர்ச்சி அடைந்து அக்டோபர் 2 அன்று காலை மரணமடைந்தார்.

டெல்லியைச் சேர்ந்த சைக்கிள் ரிக்ஷா விற்பனையாளர் அஸ்லம் புரே. 1991ல் உ.பி. மாநில முதல்வராக இருந்த கல்யாண் சிங் பாபரி மஸ்ஜிதை சுற்றி 2.77 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தினார். இந்த நிலப்பகுதியில் எவ்வித கட்டுமானப் பணியும் நடைபெறக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் இவர் போட்ட மனுவை அது நவம்பர் 1991ல் ஏற்றுக் கொண்டு உள்ளது உள்ளபடியே இருக்க வேண்டுமென உத்தரவிட்டது. இதே போல் மத்திய அரசு கையகப்படுத்திய நிலப் பகுதியில் மீண்டும் கரசேவை செய்ய வி.ஹெச்.பி. 2002ல் முயற்சித்தப் போது அதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் இவர் போட்ட பொது நல வழக்கில் உச்சநீதிமன்றம் தடை உத்தரவு விதித்தது. பாபரி மஸ்ஜித் இடிப்பு குறித்து விசாரித்த நீதிபதி லிபரான் விசாரணை ஆணையத்தின் முன்பும் இவர் பிரமாண வாக்குமூலம் சமர்பித்துள்ளார். அடல்பிகாரி வாஜ்பேயியை லிபரான் ஆணையம் அழைத்து விசாரிக்க வேண்டும் என்று ஆணையத்திடம் இவர் மனு செய்திருந்தார்.பாபரி பள்ளிவாசல் வழக்கில் அலஹாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை கேட்டவுடன் அஸ்லம் மிகுந்த மனவேதனைக்கு உள்ளானர். இவர் அது குறித்து யாரிடமும் பேசாமல் தனது அறையை விட்டு வெளியே வராமல் முடங்கிப் போனார். இவரது மகன் இம்ரான் செய்தியாளர்களிடம் பேசுகையில் அயோத்தி தீர்ப்பு எனது தந்தைக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது. நான் எப்படி இனி முஸ்லிம் சமூகத்தை சந்திப்பேன் என்று சொல்லிக் கொண்டிருந்நதார். இதன் காரணமாக அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு தாரியாகஞ்சில் உள்ள அவரது வீட்டிலேயே மரணம் அடைந்தார். டெல்லி கேட் அருகே உள்ள அடக்கவிடத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Saturday, October 2, 2010

பாபர் மஸ்ஜித் தீர்ப்பு விவகாரம்: அவசரமாக தலைமை நிர்வாக குழு கூடியது

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைமை நிர்வாக குழு அவரசகூட்டம் அக்டோபர் 1-ம் தேதி மாலை 4:30 மணிக்கு இன்று சென்னையில் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் தலைமையில் நடைபெற்றது.

இதில் தமுமுக பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி, பொருளாளர் ஓ.யு. ரஹ்மத்துல்லாஹ், துணைப் பொதுச் செயலாளர் ஜே. எஸ். ரிஃபாயி, தலைமை நிர்வாககுழு உறுப்பினர் குணங்குடி ஹனிபா மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது, துணை பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி ஆகியோர் கலந்து கொண்டனர். அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

1. பாபரி மஸ்ஜித் இடம் யாருக்குச் சொந்தமானது என்ற வழக்கில் அலஹாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு நமது நாட்டின் அரசியலமைப்பு சட்டம் மற்றும் சட்ட நடைமுறைகளை ஏளனம் செய்யும் வகையில் அமைந்துள்ளது என்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைமை நிர்வாக குழு கருதுகின்றது விடுதலைப்பெற்ற இந்தியாவில் வழங்கப்பட்ட மிக மோசமான கட்டப்பஞ்சாயத் தீர்ப்பாக இந்த தீர்ப்பு அமைந்துள்ளது ஒரு தரப்பு மக்களின் மத நம்பிக்கையை மட்டும் கருத்தில் கொண்டு 450 ஆண்டு காலம் முஸ்லிம்கள் வழிப்பாடு நடத்திய இடம் பள்ளிவாசல் இல்லை என்றும் அது ராமர் பிறந்த இடம் என்றும் நீதிபதிகள் தீர்ப்பில் கூறியிருப்பது நடைமுறைச் சட்டங்களுக்கு முரணாக புராணங்களின் அடிப்படையில் அளிக்கப்பட்ட தீர்ப்பாகும். லக்னோ பெஞ்சின் இந்த நடைமுறையைப் பின்பற்றி; இனி நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கினால் இனி நாட்டில் எவரும் தமது உரிமைகளை தக்க வைக்க இயலாது. எனவே உத்திரப்பிரதேச மாநில சன்னி வக்ஃப் வாரியம் அலஹாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய எடுத்துள்ள முடிவை தலைமை நிர்வாக குழு வரவேற்கிறது.

2. பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட போது டிசம்பர் 6, 1992ல் அப்பள்ளிவாசல் மீண்டும் அதே இடத்தில் கட்டித் தரப்படுமென அன்றைய காங்கிரஸ் பிரதமர் நரசிம்மராவ் வாக்குறுதி அளித்தார். அன்று நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதியை இன்றைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி நிறைவேற்ற வேண்டுமென இந்நிர்வாக குழு கேட்டுக் கொள்கிறது.

3. அத்வானி உள்ளிட்டோர் மீது தொடுக்கப்பட்ட பாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கு உத்திரபிரதேச ராய்பரேலி நீதிமன்றத்தில் 18 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடைபெற்று வருகின்றது. இந்த வழக்கில் விசாரணை துரிதமாக நடைபெற்று குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை அளிக்கப்பட மத்திய அரசு ஆவனச் செய்ய வேண்டுமென இந்நிர்வாக குழு கோருகின்றது.

4. பாபரி மஸ்ஜித் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு நீதி பரிபாலண முறைக்கு விரோதமாக அமைந்த போதினும் அது இறுதி தீர்ப்பு அல்ல. உச்சநீதிமன்றத்தில் நியாயம் கிடைக்க சட்டவழியாக கடும் முயற்சி மேற்கொள்ளவோம். அதுவரை சட்டம் ஒழுங்கை மதிக்கும் இந்தியர்கள் என்ற அடிப்படையில் அமைதியும் நல்லிணக்கமும் நாட்டில் தழைத்தோங்கும் வகையில் செயல்பட அனைவரையும் இந்நிர்வாக குழு கோருகின்றது.