Monday, April 25, 2011

சாயல்குடி ம.ம.க.வினர் மீது கொலைவெறித் தாக்குதல்! திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க ம.ம.க. வலியுறுத்தல்


மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது வெளியிடும் பத்திரிகை அறிக்கை:
முதுகளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சாயல்குடி இருவேலியைச் சேர்ந்த மனிதநேய மக்கள் கட்சித் தொண்டர்கள் மீது திமுகவினர் நடத்திய கொலைவெறித் தாக்குதலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றேன்.
கடந்த ஏப்ரல் 13 அன்று நடைபெற்ற சட்டபேரவைத் தேர்தலில் சாயல்குடி இருவேலி பகுதியில் அதிமுகவிற்கு ஆதரவாக வாக்களிக்க வந்தோரை வாக்குசாவடிக்குச் செல்லவிடாமல் திமுக கிளைச் செயலாளர் அம்சா தலைமையிலான திமுகவினர் தடுத்துள்ளனர். இதற்கு மனிதநேய மக்கள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திமுகவினரின் எதிர்ப்பை மீறி மக்கள் வாக்குசாவடிக்குச் சென்று வாக்களித்துள்ளனர்.
மக்கள் வாக்களிப்பதை திமுகவினர் தடுத்தது குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்த போதினும் சாயல்குடி காவல்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் விளைவாக மனிதநேய மக்கள் கட்சியைச் சேர்ந்த சையத் அபுதாகிர், அப்துல் ரஹ்மான், ஜபருல்லாஹ்கான் மற்றும் சாதிக் பாஷா ஆகியோர் மீது நேற்று இரவு திமுகவினர் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதல் குறித்து பெயரளவில் சாயல்குடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இத்தாக்குதலுக்கு காரணமான இருவேலி திமுக கிளைச் செயலாளர் அம்சாவை உடனே கைது செய்ய வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சி கோருகின்றது.

தொடர்ந்து அதிமுக கூட்டணிக் கட்சியினர் மீது தாக்குதல் நடத்தும் திமுகவினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையமும் காவல்துறை தலைமை இயக்குனரும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சி கோருகின்றது.


Sunday, April 24, 2011

துபை தமுமுக மர்க்கஸில்...

இறைவனின் அருளால் 22:4:2011 வெள்ளி அன்று இரவு 9:00 மணியளவில் துபை தமுமுக மர்க்கஸில் துபை மண்டல தமுமுக தலைவர் சகோதரர் அப்துல்காதர் அவர்கள் திருக்குர்ஆன் ஏற்படுத்தும் மாற்றங்கள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார், தனது உரையில், என்றும் மனிதர்களுக்கு மத்தியில் சிந்தனை மாற்றங்களை உருவாக்கி மனிதனை வெற்றியாளனாக அழைத்துச் செல்லும் பொக்கிசமாக அல்லாஹ்வின் மிகப் பெரிய அருள்கொடையாக திருமறை இருப்பதை பல வரலாற்று சம்பவங்களை எடுத்துச் சொல்லி நினைவுறுத்தினார்.
சிறப்பான இந்நிகழ்வில் திரளான சகோதரர்கள் கலந்துக் கொண்டு பயன் அடைந்தார்கள் எல்லாப்புகழும் இறைவனுக்கே.

Wednesday, April 20, 2011

சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் ம.ம.க. முன்னிலை தினமலர்

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி: தி.மு.க., சார்பில் மாவட்ட செயலர் அன்பழகன், அ.தி.மு.க., சார்பில் மனிதநேய கட்சி தமிமுன் அன்சாரி உட்பட 14 பேர் போட்டியிட்டனர். 66 ஆயிரத்து 304 ஆண்களும், 63 ஆயிரத்து 430 பெண்களும் ஓட்டுப்பதிவு செய்துள்ளனர். தி.மு.க., சார்பில், வீடுவீடாக பணம் வினியோகம் செய்திருந்தாலும், முஸ்லிம் சமுதாயத்தினர் அதிகம் நிறைந்த தொகுதி என்பதால், தமிமுன் அன்சாரி, முன்னிலையில் உள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே திருவல்லிக்கேணி தொகுதி அ.தி.மு.க., வசம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி தினமலர் 19-04-2011 புதுமலர்

Thursday, April 14, 2011

மயிலாடுதுறை மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் மீது தாக்குதல்!

வாக்காளர்களை காரில் அழைத்து வந்ததை தட்டிக் கேட்ட மனிதநேய மக்கள் கட்சியினரை, தி.மு.க.வினர் தாக்கியதால், அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை உருவானது.

மயிலாடுதுறை அடுத்த திருக்களாச்சேரியில், தி.மு.க. வைச் சேர்ந்த ஊராட்சித் தலைவர் அப்துல் மாலிக் தலைமையில் கூட்டணி கட்சியினர் மாலை 5 மணிக்கு, வாக்காளர்களை காரில் அழைத்து வந்து ஓட்டளிக்க ஏற்பாடு செய்தனர்.

இதையறிந்த அப்பகுதியைச் சேர்ந்த மனிதநேய மக்கள் கட்சி ஒன்றியத் தலைவர் இதயதுல்லா, செயலர் மொய்னுதீன் ஆகியோர், பொறையார் போலீசில் புகார் செய்தனர். ஆத்திரமடைந்த தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் இதயதுல்லா, மொய்னுதீன் இருவரையும் தாக்கினர். இச்சம்பவம் குறித்து பொறையார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tuesday, April 12, 2011

ராமநாதபுரம் தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் பேராசிரியர் ஜவாஹிருல்லா போட்டியிடுகிறார். அவர் கீழக்கரை ஜமாத்து சங்கம்கள் சந்திப்பு புகைப்படம்

1.தெற்கு தெரு பள்ளி
3.உஸ்வதுன் ஹசன முஸ்லிம் சங்கம்

4. ஜும்மா பள்ளி

5. பள்ளி பழைய ஜும்மா பள்ளி


6. கடற்கரை பள்ளி

7. கிழக்கு தெரு பள்ளி


ராமநாதபுரம் தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் பேராசிரியர் ஜவாஹிருல்லா போட்டியிடுகிறார். அவர் அன்று 7/4 /2011 கீழக்கரை ஜமாத்து சங்கம்கள் சந்திப்பு புகைப்படம்

Monday, April 11, 2011

கீழக்கரை மனித நேய மக்கள் கட்சி சார்பாக நடத்த தெருமுனை பிரசார




இன்று 10 /04 /2011 கீழக்கரை மனித நேய மக்கள் கட்சி சார்பாக நடத்த தெருமுனை பிரசாரத்தை கீழக்கரை நகர் ஹசன் துவக்கினர் இந்த தெருமுனை பிரசாரத்தை அ.தி.மு.க நகர செயலாளர் ராஜந்துரன் தலைமை தன்கீனர் மனித நேய மக்கள் கட்சி தலைமை கழக பெசளர் தமுமுக துணை செயலாளர் கோவை சையது தமுமுக முஜீப் ரகுமான் உமரி அவர்கள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தென் மண்டல செயலாளர் ஜகாகிர் அரூசி அவர்கள் அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளரும் மனித நேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவருமான ஜவாகிருல்லாவை ஆதரித்து. கீழக்கரை இன்று இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் வாக்களிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார். தேர்தல் பிரசாரதில் தமுமுக அதிமுக கூட்டணி கட்சி தேமுதிக, மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட், புதிய தமிழகம் கலந்துக்கொண்டுனர்

Saturday, April 9, 2011

கீழக்கரை நகர் முழுதும் வீதி வீதியாகச் சென்று தேர்தல் பிரசாரம் செய்தார்.





கீழக்கரை ராமநாதபுரம் சட்டப் பேரவைத் தொகுதி அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளரும் மனித நேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவருமான ஜவாகிருல்லா அவர்கள் 7 /04 /2010 அன்று கீழக்கரை நகர் முழுதும் வீதி வீதியாகச் சென்று தேர்தல் பிரசாரம் செய்தார். கீழக்கரை மூக்கு ரோடு பிரசாரம் ஆரம்பம் செய்து புது பஸ் ஸ்டாப், லக்ஷிமேபுறம் கிழக்கு தெரு லிடேரி கிளப், வடக்கு தெரு, தெருக்கு தெரு, சாமீய நகர், சின்ன கடை தெரு, பழையபஸ் ஸ்டாப் பிரபுக்கள் தெரு ஓல்ட் ஜுமா பள்ளி வழியாக கிழக்கு தெரு முடித்து. அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் ஆனிமுத்து, முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா, முன்னாள் மாவட்ட செயலாளர்கள் முனியசாமி, முருகேசன். சமத்துவல் மக்கள் கட்சி தேமுதிக நகர் நிர்வாகள், மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட், புதிய தமிழகம், மூவேந்தர் முன்னனி கழகம் மனிதநேய மக்கள் கட்சி தமுமுக உள்ளிட்டகட்சிகளின் கலந்து கொண்டனர் இந்த உட்பட பலர் உடன் சென்றனர்.

Friday, April 8, 2011

கீழக்கரையில் இந்திய தவ்ஹீத் ஜமாத் தலைவர் பிரசாரம்

கீழக்கரை, ஏப். 7: ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் அ.இ.அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளரை ஆதரித்து இந்திய தவ்ஹீத் ஜமாத் சார்பில் புதன்கிழமை தேர்தல் பிரசாரம் நடைபெற்றது.ராமநாதபுரம் சட்டப் பேரவைத் தொகுதி அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளரும் மனித நேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவருமான ஜவாகிருல்லாவை ஆதரித்து இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மாநிலத் தலைவர் எஸ்.எம்.பாக்கர் வீதி வீதியாகச் சென்று தேர்தல் பிரசாரம் செய்தார்.கீழக்கரை கிழக்குத்தெரு, முஸ்லிம் பஜார், வள்ளல் சீதக்காதி சாலை ஆகிய இடங்களில் பேசினார். ம.ம.க. மாவட்ட பேச்சாளர் ரிஸ்வான், த.மு.மு.க.மாநிலப் பொருளாளர் ரிபாய், அ.தி.மு.க. நகர்ச் செயலர் ராஜேந்திரன், இந்திய தவ்ஹீத் ஜமாத் மாவட்ட தலைவர் முஸம்மில்ஹார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் அவருடன் சென்றனர்

Wednesday, April 6, 2011

ராமநாதபுரம் தொகுதியில் மீனவர்களின் பிரச்சினையை தீர்ப்பதே எனது முதல் பணி; ம.ம.க. வேட்பாளர் ஜவாஹிருல்லா பேச்சு

ராமநாதபுரம் தொகுதி மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் ஜவாஹிருல்லா மண்டபம் யூனியன் பகுதியில் மீனவர்கள் குடியிருப்பு பகுதியில் வாக்குகள் சேகரித்தார். நேற்று காலை புதுமடம், குண்டூத்தி, புதுமடம்தெற்கு, மேற்கு, கிழக்கு அருள்ஒளி நகர் பகுதியில் ஜமாத் நிர்வாகிகள்,அனைத்து சமுதாய பிரமுகர்களை சந்தித்து தீவிரவாக்குகள் சேகரித்தார். கிராமபுறத்தில் முக்கிய பிரமுர்களை சந்தித்து வீதிவீதியாக சென்று நலத்திட்ட உதவி, மக்கள்சேவை செய்ததை கூறி பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தார்.
அப்போது வீடுவீடாக சென்று இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். புதுமடத்தில் அவர் பேசியதாவது:-
மீனவர்கள் பிரச்சி னையை தீர்ப்பதே எனது முதல் பணி. மீனவர்கள் பிரச்சினையை தீர்ப்பதில் மத்திய-மாநில அரசுகள் அக்கறை காட்ட வில்லை. தொடர்ந்து புறக் கணித்து வருகின்றன. அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் கச்சத்தீவை கைப்பற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கடல் அட்டைகள் மீதான தடையை நீக்க முயற்சி எடுப்பேன். கார்ப்ரேட் நிறுவனங்கள் கடல் அட்டையை பிடித்துச் செல்ல அனுமதி வழங்கும் அரசு, அப்பாவி ஏழை மீனவர்கள் பிடித்தால் வழக்கு போடுகிறது.
இந்த வழக்குகளை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுப்பேன். அவருடன் அ.தி.மு.க.முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா,மாவட்ட அவைத்தலைவர் சேகர்,மாவட்டதுணை செயலாளர் முனியசாமி, ஒன்றிய செயலாளர் தங்க மரைக்காயர், மீனவரணி செயலாளர் தர்வேஸ், ஒன்றிய கவுன்சிலர் ராஜேந்திரன், மாவட்ட சிறு பான்மை பிரிவு துணை செயலாளர் நூர்முகம்மது, இணைசெயலாளர் புதுமடம் ஜலீல்,மானாங்குடி ஊராட்சி தலைவர் நளவழுதி,ஒன்றிய ஜெயலலிதா பேரவை சந்தி ரன்,ஒன்றிய மாணவரணி துணைத்தலைவர் நாகாச்சி நாகநாதன் மற்றும் அ.தி.மு. க. வினர், கூட்டணிகட்சியினர் வாக்குகள் சேகரித்தனர்.

Tuesday, April 5, 2011

மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் பிரசாரம்

ராமநாதபுரம்,ஏப். 4: ராமநாதபுரம் தொகுதியில் மனித நேய மக்கள் கட்சி வேட்பாளராகப் போட்டியிடும் அக்கட்சியின் மாநிலத் தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா புதுமடம்,தங்கச்சிமடம்,பாம்பன் மற்றும் மண்டபம் ஆகிய பகுதிகளில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது: சாதி, மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு கடந்த 15 ஆண்டுகளாக ரத்த தானம், அவசர மருத்துவ உதவிகள், ஆம்புலன்ஸ் சேவை என பல்வேறு சேவைகளை செய்து வருகிறது மனிதநேய மக்கள் கட்சி. எங்கள் அமைப்பின் சேவையைப் பிரதமரும் பாராட்டியிருக்கிறார். தீவிரவாதத்துக்கு எதிரான கட்சியாகவே மனித நேய மக்கள் கட்சி இருந்து வருகிறது. அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிடுவதால் இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் வாக்களிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

Monday, April 4, 2011

கீழக்கரை நகர் சார்பாக இன்று 4/4/2010 நடத்த தெருமுனை பிரசாரத்தில் .

கீழக்கரை நகர் சார்பாக இன்று 4/4/2010 நடத்த தெருமுனை பிரசாரத்தில் . இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் மமக வேட்பாளர் பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லாவை ஆதரித்து கீழக்கரை நகர் அதிமுக சமத்துவல் மக்கள் கட்சி தேமுதிக நகர் நிர்வாகள், மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட், புதிய தமிழகம், மூவேந்தர் முன்னனி கழகம் மனிதநேய மக்கள் கட்சி தமுமுக உள்ளிட்டகட்சிகளின் கலந்து கொண்டனர் இந்த தெருமுனை பிரசாரம 500 பிளாட், சின்ன கடைதெரு லிபரிட்டி கிளப் முன்று இடத்தில நடைப்பெற்றது. அதிமுக தலைமை கழக பேச்சாளர் மாங்குடி மோதான மமக தலைமை கழக பேச்சாளர் கீழை ஹசன். சமத்துவல் மக்கள் கட்சி நகர் செயலாளர் காஜி கலந்துக்கொண்டுனர்.

கீழக்கரையில் அடிக்கடி மின்வெட்டு மெழுவர்த்தி சின்னம் பிரபலம்

கீழக்கரை நகர் சார்பாக 02 /04 /2011 அன்று நடத்த தெருமுனை பிரசாரத்தில்

கீழக்கரை நகர் சார்பாக 26 /03 /2010 அன்று நடத்த தெருமுனை பிரசாரத்தில் . இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் மமக வேட்பாளர் பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லாவை ஆதரித்து கீழக்கரை நகர் அதிமுக மற்றும் மமக கூட்டணிக்கட்சிகளின் தெருமுனை பிரசாரத்தில் மமக மாநில தலைமை கழக கோவை ஜாகிர் அவர்கள் தற்போதையா அரசியல் சுழ்நிலைகளை எடுத்து உரைத்தார், என் காங்கிரஸ்கு ஒய்ட் போடகூடாது என உரைத்தார். அதிமுக அம்மா பேரவை செயலாளர் நகன்றான் உரை நிகழ்த்தினர்.மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லாவை இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில வாக்கு அளிக்க கோரி தெருமுனை பிரசாரம் செய்தனர் இந்த தெருமுனை கூடதுக்கு அதிமுக நகர் செயலாளர் ராஜன்தூரன் தலைமை தாக்கினர்.மற்றும் இந்த தெருமுனை பிரசாரத்தில் அதிமுக தேமுதிக நகர் நிர்வாகள், மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட், புதிய தமிழகம், மூவேந்தர் முன்னனி கழகம் மனிதநேய மக்கள் கட்சி தமுமுக உள்ளிட்டகட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துக்கொண்டுனர்

Friday, April 1, 2011

கடல் அட்டை பிடிக்க அனுமதி : ம.ம.க.,வேட்பாளர் உறுதி





கடல் அட்டை பிடிப்பதற்கு மீனவர்களுக்கு உரிய அனுமதி பெற்று தர போராடுவேன்,'' என ராமநாதபுரம் தொகுதி ம.ம.க., வேட்பாளர் ஜவாஹிருல்லா பிரசாரத்தில் பேசினார். ராமநாதபுரம் தொகுதியில் சாத்தான்குளம், பெருங்குளம், உச்சிப்புளி உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்து அவர் பேசியதாவது: மீனவர்கள் பிரச்னை தீர்க்ககூடியதாக இருந்தாலும், இதுவரை சரியாக யாரும் அணுகாததால் மீனவர்களின் பிரச்னை கிடப்பில் உள்ளது. மீனவர்கள் நலன் காப்பதில் தி.மு.க., அரசு தவறிவிட்டது. மத்தியில் ஆளும் காங்., அரசும் மீனவர் நலன் காக்காததால் ஏராளமான மீனவர்கள் தொழிலுக்கு சென்றபோது பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். வெளிநாட்டிலிருந்து இங்கு வந்து கடல் அட்டை பிடித்து செல்கின்றனர் .ஆனால் இங்குள்ள மீனவர்கள் கடல் அட்டை பிடிப்பதற்கு தடைவிதித்துள்ளனர். இது எந்த வகையில் நியாயம். கடல் அட்டை பிடித்ததாக அப்பாவி மீனவர்களை கைது செய்து கொடுமை படுத்துகின்றனர். அ.தி.மு.க., பொது செயலாளர் ஜெயலலிதா கண்டிப்பாக முதல்வராவார். அவர் முதல்வரானவுடன் மீனவர்களின் நலன் காக்கும் திட்டங்கள் வகுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடலோர பகுதிகளில் கடல்சார்ந்த தொழிற்சாலைகள் உருவாக்கப்படும், கடல் அட்டை பிடிப்பதற்கான உரிய அனுமதி பெற்றுதர போராடுவோம், மீனவர்கள் மட்டுமின்றி அவர்களது குடும்பத்தினருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் திட்டங்கள் வகுக்கப்படும். கருணாநிதி ஆட்சியில்தான் கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டது. ஆனாலும் கச்சத்தீவில் மீனவர்கள் வலைகளை காயப்போடுவதற்கும், தங்குவதற்கும் உரிமை உண்டு. இந்த உரிமைகூட தற்போது தட்டிபறிக்கப்பட்டுள்ளது. ஜெ., முதல்வரானவுடன் கச்சத்தீவு மீட்பதற்கும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் .அதற்கு ம.ம.க., முழு முயற்சி எடுக்கும் என்பதை உறுதியாக கூறுகிறேன். தமிழக மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர் .அதன்படி சரியான தீர்வை தரஉள்ளனர். ராமேஸ்வரம் பகுதியில் அடிப்படை பிரச்னைகள் தீர்க்கப்படாமல் உள்ளதால் சுற்றுலா பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர். இதற்கு தகுந்த தீர்வு எடுக்கப்படும்.மக்கள் சேவை செய்வதில் ம.ம.க., தீவிரமாக உள்ளது, என்றார். அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் ஆனிமுத்து, முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா, முன்னாள் மாவட்ட செயலாளர்கள் முனியசாமி, முருகேசன் உட்பட பலர் உடன் சென்றனர்.