Thursday, March 20, 2014

மனிதநேய மக்கள் கட்சி - ஆவணப்படம் 2014

திமுக வேட்பாளர் ஹாஜி;ஐலீல் அவர்கள் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைமை அலுவலகம் வருகை தாத்தார்







இன்று 18:03:2014 மாலை ஜனநாயக முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளர் ஹாஜி;ஐலீல் அவர்கள் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைமை அலுவலகம் வருகை தாத்தார்...அவரை மாவட்ட தலைவர்;சாதிக் பட்ஷா,தமுமுக மாவட்ட செயலாளர் அன்வர் அலி, மாவட்ட பொருளாளர் சித்திக்,புதுகோட்டை நிர்வாகிகள்,இராமநாதபுரம் நகர் நிர்வாகிகள் மற்றும் இராமநாதபுரம்,மண்டபம்,திருப்புலாணி ,திருவாடனை ஒன்றியங்கள் மற்றும் திராளக உறுப்பினர்கள் வரவேற்று சத்தித்தார்கள்..

Monday, March 17, 2014

ராமநாதபுரம் திமுக வேட்பாளர்முஹமது ஜலில் அவர்கள் கீழக்கரை த.மு.மு.க. அலுவலகத்துக்கு ஆதரவு கேட்டு வருகை


16/3/2014- சற்று நேரத்துக்கு முன் ஜனநயக முற்போக்கு கூட்டணியின் ராமநாதபுரம் திமுக 
வேட்பாளர்முஹமது ஜலில் அவர்கள் மற்றும் கீழக்கரை நகர் திமுகவினர் உடம் இருதனர்  நமது கீழக்கரை  த.மு.மு.க. அலுவலகத்துக்கு ஆதரவு கேட்டு வருகை தந்தார்கள், அபோது கீழக்கரை தமுமுக நகர் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இருதனர் 

Wednesday, March 12, 2014

மனிதநேய மக்கள் கட்சி தலைமையக அறிவிப்புகள்


தலைமை தேர்தல் பணிக்குழு

தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் நடைபெறும் தேர்தல் பணிக்களுக்கான தலைமை தேர்தல் பணிக்குழு தலைவர் ஜே.எஸ். ரிபாயி தலைமையில் கீழ்க்கண்டவாறு அமைக்கப்பட்டிருக்கிறது.

இதில் ஒ.யூ. ரஹ்மத்துல்லாஹ், எஸ்.எஸ். ஹாருண் ரஷீது, பி.எஸ். ஹமீது ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

அனைத்துவிதமான தேர்தல் நடவடிக்கைகள், கூட்டணிக் கட்சிகளுடனான தொடர்புகள் குறித்தும் மாவட்ட நிர்வாகிகள் இக்குழுவை தொடர்புக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பணிக்குழு கீழ்க்கண்டவாறு அமைக்கப்பட்டிருக்கிறது.

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் பணிக்கு மமக சட்டமன்றக் குழு தலைவர் பேரா.எம்.எச். ஜவாஹிருல்லாஹ் தலைமையில் அமைக்கப்பட்டிருக்கிறது. இதில் எம். தமிமுன் அன்ச £ரி, பி. அப்துல் சமது, கோவை ஈ. உமர் ஆகியோர் இடம் பெறுவர்.

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி துணை தேர்தல் பணிக்குழு கீழ்க்கண்டவாறு அமைக்கப்பட்டிருக்கிறது.

வழக்கறிஞர் சரவண பாண்டியன், மதுக்கூர் ராவுத்தர்ஷா, வேலு£ர் அவுலியா, மாயவரம் அமீன் ஆகியோர் இக்குழுவில் இடம் பெறுவர்.

இவண்
எம். தமிமுன் அன்சாரி
பொதுச் செயலாளர்
மமக தலைமையகம்

Monday, March 10, 2014

மனித நேய மக்கள் கட்சி வேட்பாளராக ஹைதர் அலி அறிவிப்பு

                


 மயிலாடுதுறை தொகுதிக்கு மனித நேய மக்கள் கட்சி வேட்பாளராக ஹைதர் அலி அறிவிப்பு

மயிலாடுதுறை தொகுதி ஜனநாயக முற்போக்கு கூட்டணி
மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளர் செ. ஹைதர் அலி

பத்திரிகை அறிக்கை
மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் பிஎம்ஆர். சம்சுதீன் வெளியிடும் அறிக்கை
இன்று காலை மனிதநேய மக்கள் கட்சியின் தலைமைச் செயற்குழு இன்று காலை சென்னையில் கட்சியின் தலைவர் ஜே.எஸ். ரிபாயி தலைமையில் நடைபெற்றது. இச்செயற்குழுக் கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்றக்குழுத் தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா, உயர்நிலைக் குழு உறுப்பினர் செ. ஹைதர் அலி, பொதுச் செயலாளர் தமீமுன் அன்சாரி, பொருளாளர் ஒ.யூ. ரஹ்மதுல்லா உயர்நிலைக் குழு உறுப்பினர்கள் ப.அப்துல் ஸமது, குணங்குடி அனிபா, எஸ்.எஸ். ஹாரூன் ரசீது, கோவை உமர் உள்ளிட்ட 150 செயற்குழு உறுப்பினர்கள் பங்குக் கொண்டார்கள். 
இக்கூட்டத்தில் திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக மனிதநேய மக்கள் கட்சியின் உயர்நிலைக் குழு உறுப்பினரும் தமிழ்நாடு வக்ப் வாரியத்தின் முன்னாள் தலைவர் எஸ். ஹைதர் அலி அவர்களை வேட்பாளராக நிறுத்துவது என்று ஏகமனதாக முடிவுச் செய்யப்பட்டது.

தன்விபரக் குறிப்பு (பயோ டேட்டா)
பெயர்: எஸ் ஹைதர் அலி
தந்தைப் பெயர்: செய்யத் முஹம்மது
வயது: 57
பிறந்த ஊர்: தொண்டி
மனைவி பெயர்: ஜம்ரூத் நிஷா
குழந்தைகள்: 1. முஹம்மது நாஸீர்
2. நாபிஆ
3. நஃபில்
தொழில்: வியாபாரம்
பொறுப்புகள்: 1. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர்களில் ஒருவர். 1995 முதல் தமுமுகவின் தலைமை நிலையச் செயலாளர் 1997 முதல் 2012 வரை தமுமுகவின் பொதுச் செயலாளர். தற்போது தமுமுகவின் மூத்தத் தலைவர். மனிதநேய மக்கள் கட்சியின் தொடக்கம் முதல் (2009) அதன் உயர்நிலைக் குழு உறுப்பினர். 
2. முத்த தமிழறிஞர் கலைஞர் தலைமையிலான சென்ற திமுக ஆட்சியில் 2007 முதல் 2009 வரை தமிழ்நாடு வக்பு வாரியத்தின் தலைவராக சிறப்பாக பணியாற்றி ஆக்கிரமிப்பில் இருந்த கோடிக்கணக்கான சொத்துகள் மீட்கப்படுவதற்கு அரசு உதவியுடன் சிறப்பாக காரணமாக இருந்தார். இவர் தமிழ்நாடு வக்ப் வாரியத் தலைவராக இருந்த வேளையில் வக்ப் நிர்வாக சீர்திருத்தம் தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்பட்டு அக்குழு இந்திய முழுவதும் ஆய்வுகளை மேற்கொண்ட பிறகு இவர் தலைமையிலான தமிழ்நாடு வக்ப் வாரியம் சிறப்பான முறையில் செயல்பட்டதாக சான்று அளித்தது. இவர் தலைவராக இருந்த போது வக்ப் வாரியத்தின் நிர்வாகத்தின் மின்ஆளுமை நிர்வாகம் அறிமுகப்படுத்தப்பட்டது.
3. பிரான்ஸ் நாட்டில் உள்ள ஐரோப்பா கூட்டமைப்பின் தலைநகரமான ஸ்டராட்ஸ்பெர்கில் நடைபெற்ற மனிதஉரிமை தொடர்பான மாநாட்டில் பங்குக் கொண்டார்.
இது தவிர சவூதி அரேபியா, கத்தார், குவைத், மஸ்கட், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்குக் கொண்டிருக்கிறார்.
4. தெரிந்த மொழிகள்:
தமிழ், இந்தி, உருது, அரபி மற்றும் ஆங்கிலம்

Saturday, March 8, 2014

ஆம்பூர் எம்.எல்.ஏ. மீது மர்ம நபர்கள் தாக்குதல்


மனிதநேய மக்கள் கட்சியின் ஆம்பூர் தொகுதி எம்.எல்.ஏ. அஸ்லாம் பாட்ஷா,தாம்பரம் அடுத்த கடப்பேரி பகுதியில் பெட்ரோல் பங்க் அருகே செல்லும்போது,  மர்ம நபர்கள் ஆயுதங்களால் தாக்க முற்பட்டுள்ளனர்.  அவருடைய ஆதரவாளர்கள் மர்ம நபர்களை அடித்து நொறுக்கினர்.  இது பற்றி அஸ்லாம் பாட்ஷா,  தாம்பரம் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.  அதன் அடிப்படையில்  2 பேரை பிடித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

news by.nakeeran.com


Tuesday, March 4, 2014

மனிதநேய மக்கள் கட்சி மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடும்




வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சி மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடும். இன்ஷா அல்லாஹ்..
இதற்கான ஒப்பந்தம் கூட்டணி கட்சிகளின் தலைவர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களும், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜே.எஸ். ரிபாயி அவர்களும் கையெழுத்திட்டனர்.
தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சி மயிலாடுதுறை உட்பட அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறுவதற்காக முழுமூச்சாக பாடுபடும் என இரு கட்சிகளும் உறுதி எடுத்துக் கொண்டன.
- மமக தலைமையகம்

Saturday, March 1, 2014

மருத்துவர் அக்பர் கவ்சர் அவர்களுக்கு நன்றி சொன்ன நிர்வாகிகள்


முசப்பர் நகருக்கு சென்ற தமுமுக கள ஆய்வு குழுவுக்கு உ.பி மாநிலத்தில் பெரும் ஏற்ப்பாடுகள் செய்து உதவிய வாணியம்பாடி பிரபல யூனானி மருத்துவர் Dr.ஹகீம் அக்பர் கவ்சர் அவர்களை இன்று மாவட்ட தலைவரும் மமக ஆம்புர் சட்டமன்ற உறுப்பினருமான சகோ அஸ்லம் பாஷா, மமக மாவட்ட செயலாளர் ஆம்பூர் நஸீர் , தமுமுக மாவட்ட செயலாளர் V.Z.அப்துல் ஷூகூர். சந்தித்து நன்றி கூறினர்கள்