Thursday, March 28, 2013

கல்பாக்கத்தில் ஜனநாயக வழியில் போராடிய தமுமுக, மதிமுக தலைவர்களை விடுதலை செய்ய வேண்டும் : எம்.எச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ

மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. அவர்கள் வெளியிடும் பத்திரிகை அறிக்கை:

* கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினம், மெய்யூர் பகுதிக்கு 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும்.

* கல்பாக்கத்தைச் சுற்றியுள்ள மக்களுக்கு இடஒதுக்கீடு அடிப்படையில் அணுமின் நிலையத்தில் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.

* ஏற்கனவே இங்கு இயங்கும் அணுஉலைகள் தவிர புதிய அணுஉலைகள் அமைக்கக் கூடாது, கதிர்வீச்சு தன்மையை அறியவும், கதிர்வீச்சில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கவும் அனைத்து வசதிகளும் கொண்ட பல்நோக்கு மருத்துவமனை ஒன்றை கல்பாக்கம் அருகில் அமைக்க வேண்டும்.

* நாட்டில் இயங்கும் எந்த அணுஉலைகளின் கழிவுகளையும் கடல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொட்டக்கூடாது.

* அணுசக்தி துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் சுற்றுப்புற கிராம மக்களின் குழந்தைகளுக்கு இடஒதுக்கீடு அடிப்படையில் இடம் ஒதுக்க வேண்டும்


- ஆகிய ஐந்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கல்பாக்கத்தில் அறவழியில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இன்று இதே கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த போராட்டக் குழுவினர் அனுமதி கேட்டிருந்தனர். ஆனால் அனுமதி தரப்படவில்லை. இருப்பினும் போராட்டக் குழுவினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முற்பட்டுள்ளனர்.

இந்நிலையில் போராட்டத்திற்கு தலைமை தாங்கிய தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்ட 500 பேரை காவல்துறையினர் கைது செய்து, 15 நாள் சிறைக் காவலில் அடைத்துள்ளனர். அறவழியில் போராட்டம் நடத்தியவர்களைக் காவல்துறை கைது செய்ததை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

சமீபத்தில் சட்டப்பேரவையில், கெயில் நிறுவனம் விவசாய நிலங்களில் குழாய் பதிப்பது தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்துப் பேசிய தமிழக முதல்வர் அவர்கள், மக்களுக்காகவே திட்டம், திட்டத்திற்காக மக்கள் அல்ல என்று மிகத்தெளிவாகக் குறிப்பிட்டார். இதே அடிப்படையில் தான் கல்பாக்கம் பகுதி மக்கள் தங்கள் வாழ்வுரிமைக்காகப் போராடி வருகிறார்கள். அவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு தமிழக முதலமைச்சர் அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கல்பாக்கம் போராட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனே விடுதலை செய்ய உத்தரவிட வேண்டுமென தமிழக முதல்வரைக் கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்

Monday, March 25, 2013

இலவச மருத்துவமனை கோவை சாரமேடில் தமுமுக




த மு மு க சேவையில் மற்றும் ஒரு மைல்கல்

இலவச மருத்துவமனை கோவை சாரமேடில் 
தமுமுக - "முத்த தலைவர் ஹைதர் அலி" 
அவர்களால் இன்று திறந்து வைக்கப்பட்டது .

...புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனக்கே!

இராமேஸ்வரம் மக்கள் அமைதி காக்க ம.ம.க எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா வேண்டுகோள்


இராமேஸ்வரத்தில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கிடையே நடைபெற்ற வாக்குவாதம் கலவரமாக மாறியதற்கு ம.ம.க இராமநாதபுரம் தொகுதி எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா வேதனை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
இராமேஸ்வரம் நகரத்தில் 22.03.2013 அன்று நடந்த விரும்பத்தகாத சம்பவங்கள் அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.. ஆட்டோ ஒட்டுனர்களுக்கு மத்தியில் ஏற்பட்ட சிறு வாக்குவாதம் பெரிய சேதங்களை ஏற்படுத்தி இருப்பது கவலை அளிப்பதாகவுள்ளது. ஏற்கனவே இலங்கை கடற்படை செய்யும் அட்டூழியம் காரணமாக இராமேஸ்வரம் மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாக ஆக்கப்பட்டுள்ள சூழலில் சுற்றுலா மற்றும் கோவிலை சார்ந்த தொழிலும் பாதிக்கப் பட்டுவிடக்கூடாது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
1980 களில் நிகழ்ந்த ஒரு சில விரும்ப தகாத சம்பவத்தை தவிர்த்து பொதுவாக இராமேஸ்வரம் என்பது சமாதான பூமியாகவே காலங் காலமாக திகழ்ந்து வருகிறது. எனவே அமைதியை காக்க அனைத்து தரப்பினரும் முன்வர வேண்டும். எந்த பிரச்சினையாக இருந்தாலும் பேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்வு காண வழி இருக்கிறது. வன்முறை அனைவருக்கும் பாதிப்புகளையே ஏற்படுத்தும். எனவே இராமேஸ்வரத்தில் அனைத்து தரப்பினரும் அமைதி காத்து சுமூக சூழல் ஏற்பட ஒத்துழைக்க வேண்டும் என்று மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.

Saturday, March 16, 2013

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்: இலங்கை மீது ராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் : மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற குழு தலைவரும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான முனைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.வலியுறுத்தல்


மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற குழு தலைவரும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான முனைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் அறிக்கை

இராமேஸ்வரம் மீனவர்கள் உட்பட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகிறார்கள். சமீப காலத்தில் இத்தகைய தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது .குறிப்பாக எனது இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இராமேஸ்வரம் தீவு பகுதி மீனவர்கள் 53 பேரை இலங்கை கடற்படை வம்புக்காக கைது செய்துள்ளது.தொடர்ந்து நடைபெற்று வரும் இலங்கை கடற்படையின் அராஜகப் போக்கினால் இராமேஸ்வரம்மீனவர்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டிய மத்திய அரசு வேடிக்கை பார்த்து கொண்டிருப்பதோடு மட்டுமல்லாமல் இலங்கை நட்பு நாடு என்று வர்ணித்து வருகிறது . இந்திய கடற்படையும், கடலோர பாதுகாப்பு படையும் தமிழக மீனவர்களை பாதுகாக்க தவறி விட்டன. தமிழக மீனவர்களை கொன்று,காயப்படுத்திய இலங்கை கடற்படை மீது சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்தில் இந்தியா வழக்கு தொடுக்க வேண்டும்.இலங்கை கடற்படையால் கடந்த 25 ஆண்டுகளாக தாக்குதலுக்கு உள்ளாகி பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு இலங்கை அரசிடமிருந்து இழப்பீட்டு தொகையை மத்திய அரசு பெற்று தர வேண்டும்.
தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் இலங்கை மீது ராணுவ நடவடிக்கை எடுக்கவும்,கச்சதீவை மீட்கவும் மத்திய அரசு முன்வர வேண்டும்.இதுவே இப்பிரச்சினைக்கு தீர்வாக அமையும்.மத்திய அரசு தனது கடமையை உணர்ந்து செயல்பட்டு தமிழக மீனவர்கள் மீண்டும் தாக்கப்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை போர்கால அடிப்படையில் எடுக்க வேண்டும்.

Thursday, March 14, 2013

ராம‌நாத‌புர‌ம் மாவ‌ட்ட‌த்தில் மீன்பிடி துறைமுக‌ம்!முத‌ல்வ‌ர் ம‌ற்றும் எம்.எல்.ஏவுக்கு ந‌ன்றி அறிவிப்பு!

ராம‌நாத‌புர‌ம் மாவ‌ட்ட‌ம் ராமேஸ்வரம் அருகேயுள்ள மூக்கையூர் மீன்பிடி துறைமுகம் அமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

 இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் 

நாகை, பழையாறு, பூம்புகார் மற்றும் ராமேஸ்வரம் அருகேயுள்ள மூக்கையூர் பகுதிகளில் மீன்பிடித்துறைமுகங்கள் அமைக்க உத்தரவிட்டுள்ளார். பூம்புகாரில் ரூ.78 கோடியே 50 லட்ச செலவில் மீன்பிடி துறைமுகம் அமைக்க முதல்வர் நிர்வாக ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும், துறைமுகம் அமைக்கும் பணிகளை விரைவாக துவக்க, முதல்கட்டமாக ரூ.6 கோடியே 67 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கீழை. இர்பான் வெளியிட்டுள்ள ‌ செய்தியில்,

நீண்ட கால‌மாக‌ இப்ப‌குதி மீனவ ம‌க்க‌ள் உள்ளிட்ட‌ ப‌ல்வேறு த‌ர‌ப்பின‌ரும் மீன்பிடித்துறைமுகம் அமைக்க கோரிக்கை விடுத்து வ‌ந்த‌ன‌ர்.ச‌ட்ட‌ம‌ன்ற‌ கூட்ட‌த்தொடரின் போது ராம‌நாத‌புர‌ம் ச‌ட்ட‌ம‌ன்ற‌ உறுப்பின‌ர் ஜ‌வாஹிருல்லாஹ்வும் மீன்பிடித்துறைமுகம் அமைக்க கோரிக்கை விடுத்திருந்தார்.

கோரிக்கையை ஏற்று த‌ற்போது ராமேஸ்வரம் அருகேயுள்ள மூக்கையூரில் மீன்பிடித்துறைமுகம் அமைக்க அனும‌தியும் நிதியும் வ‌ழ‌ங்கி உத்த‌ர‌விட்ட மாண்புமிகு த‌மிழ‌க முத‌ல‌மைச்ச‌ருக்கும்  ராம‌நாத‌புர‌ம் ச‌ட்ட‌ம‌ன்ற‌ உறுப்பின‌ர் ஜ‌வாஹிருல்லாஹ்க்கும் ந‌ன்றியை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவ‌ர் தெரிவித்துள்ளார்.


news by:kilakaraitimes

Wednesday, March 13, 2013

அஜ்மானில் நடைபெறவுள்ள இலவச மருத்துவ முகாம்

அஜ்மானில் நடைபெறவுள்ள இலவச மருத்துவ முகாம்

ஐக்கிய அரபு அமீரகங்களில் ஒன்றான அஜ்மானில் 15.03.2013, வெள்ளிக் கிழமை காலை 8 மணி முதல் 12 மணி வரை இலவச மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது. 

அஜ்மான் மண்டல தமுமுகவும், அட்வான்ஸ்டு மெடிக்கல் சென்டரும் இணைந்து நடத்தும் இந்த முகாமில் பொது மருத்துவம், மகளிருக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன. மேலும் இலவச மருந்துகளும் வழங்கப்படும்.

Monday, March 4, 2013

சசி பெருமாள் மீது காவல்துறை அத்துமீறல் ம ம க கண்டனம்


காந்திய வாதி சசி பெருமாள்; உண்ணாவிரத்தை கெடுக்கும் நோக்கோடு காவல் துறை அவரை வலுக்கட்டாயமாக மருத்துவனைக்கு கொண்டு சென்றுள்ளது.  இந்தஅத்து மீறல் வன்மையாக  கண்டிக்கத்தக்கது   இது தொடர்பாக மம க   தலைவர் ஜே எஸ் ரிபாயி வெளியிடும் பத்திரிகை அறிக்கை
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை  வலியுறுத்தி சாகும் வரை உண்ணாவிரதம்  இருந்துவரும் காந்தியவாதி சசி பெருமாள் அவர்களை காவல்துரையினர் அத்துமீரலுடன் அவரது உண்ணாவிரதத்தை சீர்குலைக்கும் நோக்குடன் செயல்பட்டது வன்மையாக கண்டிகத்தகது,
33நாள் உண்ணாவிரதம் இருந்து உடல் நலிவுற்ற பெரியவர் சசிபெருமாலை காப்பாற்றும் நோக்கம் உண்மையிலேயே அரசுக்கு இருந்து இருந்தால் அரசு அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி அவரது கோரிக்கைகளை ஏற்று அவரை இணங்க செய்திருக்கவேண்டும் . அதை விடுத்து பலபிரயோகம் செய்தமை கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் பூரண மதுவிலக்கை  கொண்டு வர  அணு தினமும்  பாடுபடும்  மனித நேய மக்கள் கட்சி  சசி பெருமாளின் முயற்சிகளுக்கு என்றும் பெறும் துணையாக இருக்கும்    என்பதை தெரிவிக்கும் அதே வேளையில் அரசு சசிபெருமாளின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும்  என்றும் கேட்டுக்கொள்கிறோம்
ஜே எஸ் ரிபாயி