Thursday, February 27, 2014

MLA தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ருபாய்.15,00,000/-ஒதுக்கி உள்ளார்.கூடுதல் கட்டுமான பணியின் அடிக்கல் நாட்டு விழா



கீழக்கரை பழைய குத்பா பள்ளி ஜமாஅத் நிர்வாகத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் மக்தூமியா உயர்நிலை பள்ளிக்கு நமது ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜனாப் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் அவர்கள் தமது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ருபாய்.15,00,000/-ஒதுக்கி உள்ளார்.அந்த பள்ளியின் கூடுதல் கட்டுமான பணியின் அடிக்கல் நாட்டு விழா இன்று 27/02/2014 அன்று பேராசிரியர் ஜனாப். எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் அவர்கள் தலைமையில் நடந்தது.இதில் பள்ளி தாளாளர் ஜமாஅத் தலைவர் மற்றும் நிர்வாகிகள்,பள்ளி தலைமையாசிரியர்கள்,த.மு.மு.க. நகர்தலைவர் முகம்மது சிராஜுதீன்,செயலாளர் கிங்ஸ் ட்ராவல்ஸ் அமீன்,ம.ம.க.நகர் தலைவர் கோஸ் முகம்மது,ம.ம.க.நகர் செயலாளர் இக்பால் மற்றும் சலீம்,அபுதாஹிர்,ஈசி சாதிக்,மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tuesday, February 25, 2014

உத்தரபிரதேச முதலமைச்சருடன் தமுமுக குழு சந்திப்பு

உத்தரபிரதேச முதலமைச்சருடன் தமுமுக குழு சந்திப்பு
முசாப்பர்நகர் மக்களின் கோரிக்கைகள் ஏற்பு
உ.பி. முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க வலியுறுத்தி ஆவணங்கள் சமர்பித்த்து தமுமுக

உ.பி. மாநிலம் முசாப்பர்நகரில் கடந்த செப்டம்பர் மாதத்தில் நடைபெற்ற கலவரத்தில் 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டது. கடும் குளிரில் திறந்தவெளியில் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்கும் சூழல் உருவாகியது.. இச்சூழலில் இக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு ஏற்படுத்தித் தரும் நோக்கத்துடன் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் குழு ஒன்று பாதிக்கப்பட்ட முசாப்பர்நகர் மற்றும் ஷாம்லி மாவட்டங்களில் நேரில் கள ஆய்வுகளைச் செய்தது. இக்குழுவில் தமுமுக மூத்த தலைவர்கள் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா எம்எல்ஏ எஸ். ஹைதர் அலி பொருளாளர் ஒ.யூ.ரஹ்மதுல்லா தலைமை நிர்வாக குழு உறுப்பினர் சம்சுதீன் நாசர் உமரி ஆகியோர் இடம் பெற்றனர்.
தமுமுக குழு கடந்த பிப்ரவரி 18 தொடங்கி 6 நாட்கள் முசாப்பர்நகர் மற்றும் சாம்லி மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் மக்களை நேரில் சந்தித்தது. பாதிக்கப்பட்ட ஊர்களையும் பார்வையிட்டது. தங்கள் இருப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டு அகதிகள் போல் வாழும் மக்களுக்கு வீடுகள் மிக அவசியத் தேவை என்பதை தமுமுக குழு உணர்ந்தது. இந்த தேவையை முடிந்த அளவு பூர்த்திச் செய்யும் வகையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 100 வீடுகள் கட்டிக் கொடுக்க தமுமுக முடிவுச் செய்துள்ளது. 
முதல்கட்ட ஆய்விற்கு பிறகு குழு இருதுணைக் குழுக்களாக பிரிந்தது. பேராசிரியர் ஜவாஹிருல்லாவும் சகோதரர் எஸ். ஹைதர் அலியும் உபி தலைநகர் லக்னோவிற்கு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை சந்திக்க சென்றனர். சகோதரர்கள் ஒ.யூ. ரஹ்மதுல்லாஹ்வும் மவ்லவி நாசர் உமரியும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இரண்டாம் கட்ட ஆய்வுகளை தொடர்ந்தனர்.
லக்னோ வந்த பேராசிரியர் ஜவாஹிருல்லா மற்றும் சகோதரர் ஹைதர் அலி அடங்கிய தமுமுக குழு உ.பி. மாநில முதலமைச்சர் திரு. அகிலேஷ் யாதவ் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் திரு. ஆஜம் கான் ஆகியோரை சந்தித்து கள ஆய்வின் அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டது. 
முதலில் உத்தரபிரதேச அரசியலில் செல்வாக்குமிக்கவரும் சமாஜ்வாதி கட்சியின் பொதுச் செயலாளரும் சிறுபான்மையினர்நலன், நகர்புற வளர்ச்சி மற்றும் வக்ப் வாரியத் துறை அமைச்சருமான முஹம்மது ஆஜம் கானை ராம்பூரில் கடந்த பிப்ரவரி 22 அன்று சந்தித்து. மிக விரிவாக அவரிடம் முசாப்பர்நகர் கள ஆய்வு விவரங்களை தமுமுக குழு எடுத்துரைத்தது. பிப்ரவரி 24 அன்று சட்டமன்ற வளாகத்தில் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் அவர்களை சந்தித்தது. சட்டமன்றக் கூட்டம் நடந்துக் கொண்டிருந்த வேளையில் தமுமுக குழுவை சந்திக்க அவர் நேரம் ஒதுக்கிக் கொடுத்தார். உ.பி. சபாநாயகர் மத்தா பிரசாத் பாண்டேயின் அறையில் முதலமைச்சர் அகிலேஷ் தமுமுக தலைவர்களை வரவேற்று பேசினார். இப்பேச்சு வார்த்தையின் போது அமைச்சர் ஆஜம் கானும் சபாநாயகர் பாண்டேயும் உடன் இருந்தனர் 45 நிமிடங்கள் இப்பேச்சு வார்த்தை நடைபெற்றது. இறந்துப் போனவர்களின் குடும்பத்தினருக்கு உதவி தொகையை அதிகரித்துக் கொடுக்க வேண்டுமென்றும் காணமல் போனவர்களுக்கும் உதவித் தொகை அளிக்க வேண்டுமென்று தமுமுக முதலமைச்சரிடம் அளித்த்த கோரிக்கை முனுவில் குறிப்பிடப்பட்டிருந்து. இறந்து போனவர்களுக்கு ஏற்கெனவே அளித்த ரூ12 லட்சத்துடன் கூடுதலாக ரூ3 இலட்சம் அளிக்கப்படுமென்று முதல்வர் அகிலேஷ் குழுவினரிடம் தெரிவித்தார். இது தவிர காணமல் போனவர்களுக்கு ரூ 15 லட்சம் அளிக்கப்படும் என்றும் முதலமைச்சர் குழுவினரிடம் தெரிவித்தார். இது மட்டுமின்றி உச்சநீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளது போல் முகாமில் இறந்த குழந்தைகளின் பெற்றோருக்கு ரூ2 லட்சம் அளிக்கப்படுமென்றும் அவர் தமுமுக குழுவினரிடம் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு 100 வீடுகள் கட்டிக்கொடுக்கும் தமுமுகவின் திட்டத்திற்கு தேவையான உதவிகளை தனது அரசு செய்யும் என்று முதலமைச்சர் அகிலேஷ் உறுதி அளித்தார்.
உத்தரபிரதேசத்தில் வாழும் முஸ்லிம்களுக்குதனி இடஒதுக்கீடு அளிப்பதின் அவசியத்தை தமுமுக குழுவினர் முதலமைச்சரிடம் வலியுறுத்தியதுடன் தமிழ்நாடு கேரளா மற்றும் கர்நாடகத்தில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ள முறைமைகள் குறித்த அரசாணைகளையும் வழங்கினர். இது குறித்து உடனே ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்குமாறு தமுமுக வழங்கிய மனுவில் குறிப்பு எழுதி அமைச்சர் ஆஜம் கானிடம் தொடர் நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் அகிலேஷ் கூறினார்.
பின் வரும் கோரிக்கைகள் அடங்கிய மனு முதலமைச்சரிடம் அளிக்கப்பட்டது..
1. கலவரத்திற்கு பிறகு ஏராளமானவர்களை இன்னும் காணவில்லை என்று நாங்கள் நேரில் சந்தித்த பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர். இவர்களை குடும்பத்தினருக்கும் நிவராணத் தொகை வழங்கப்பட வேண்டும்
2. கலவரத்தில் தமது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்ட மக்களுக்கு அரசு ரூ5 லட்சம் இழப்பீடு அளித்துள்ளது. இத்தொகை வீடு கட்டுவதற்கு நிலம் வாங்குவதற்கு மட்டுமே போதுமானதாக இருந்ததாக பாதிக்கப்பட்ட மக்கள் எங்களிடம் தெரிவித்தனர். எனவே இந்த இழப்பீடு தொகையையும் இறந்து போனவர்களுக்கான இழப்பீட்டையும் அதிகரிக்க வேண்டு. மேலும் கலவரத்தால் பாதிக்கப்பட்டு அரசிடம் இழப்பீடு பெற்றவர்கள் மீண்டும் தங்கள் இருப்பிடம் சென்றால் அரசு அளித்த இழப்பீட்டு தொகை திருப்பித் தரப்பட வேண்டுமென்ற உ.பி. அரசின் இரு அரசாணைகள் திரும்பப் பெறப்பட வேண்டும்
3. முசாப்பர்நகர், சாம்லி மற்றும் பாக்பத்தில் வரலாறு காணத வகையில் முஸ்லிம்களுக்குஎதிராக நடைபெற்ற கலவரத்தை தூண்டியவர்கள் நடத்தியவர்கள் மீதும் கடமை ஆற்றத் தவறிய அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் 
4. கலவரத்தால் பாதிக்கப்பட்ட இந்த 3 மாவட்;டங்களில் வாழும் முஸ்லிம்கள் சமூக பொருளாதார நிலையில் மிகவும் பின் தங்கியுள்ளார்கள். இவர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தும் வகையில் சிறப்பு பொருளாதார திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும். இது போல் உ.பி. மாநிலத்தில் பிற்படுத்த்பட்ட முஸ்லிம்களுக்குஇடஒதுக்கீடு அளிக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
5. 50 குடும்பங்களுக்கு குறைவான எண்ணிக்கையில் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ள கிராமங்களைச் சேர்ந்த முஸ்லிம்களுக்கு அரசு இழப்பீடு அளிக்கப்படவில்லை என்பதை எங்கள் ஆய்வுகளின் போது அறிந்தோம். அத்தகையவர்களுக்கும் இழப்பீடு அளிக்க வேண்டும்
6. கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் மூன்று மாவட்டங்களுக்கு சேர்த்து ஒரு சிறப்பு பணிக்காக காவல் துணைத் தலைவர் நியமிக்கப்பட வேண்டும். இருப்பிடத்தை விட்டு வெளியேறிய மக்கள் தங்கள் இடங்களுக்கு மீண்டும் செல்ல ஊக்குவிக்கப்பட வேண்டும். சகஜ நிலை திரும்பும் வரையில் மத்திய சிறப்பு பாதுகாப்பு படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும்

Sunday, February 23, 2014

உ.பி.யின் அதிகாரமிக்க அமைச்சர் ஆஜம் கானுடன் தமுமுக குழு சந்திப்பு


 உ.பி. மாநில சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சரும் சமாஜ்வாதி கட்சியின் பொதுச் செயலாளருமான திரு. ஆஜம் கான பல்கலைகழகத்தில் எங்களை வரவேற்றக் காட்சி

உ.பி.யின் அதிகாரமிக்க அமைச்சர் ஆஜம் கானுடன் தமுமுக குழு சந்திப்பு
உத்தரபிரதேச மாநில அரசியல் அரங்கில் தனக்கென தனியான இடத்தைப் பெற்றிருப்பவர் ராம்பூர் தொகுதியிலிருந்து 8 முறை உ.பி. சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முஹம்மது ஆஜம் கான்.உ.பி. அமைச்சரவையில் நான்காவது முறையாக காபினெட் அமைச்சராக இருந்து வருபவர். அலிகர் முஸ்லிம் பல்கலைகழகத்தில் பயிலும் போது பல்கலைகழக மாணவர் சங்கத்தின் செயலாளராக இருந்தவர் இன்றைய உ.பி. ஆட்சியில் அதிகாரமிக்கவராக விளங்குபவர். இவரைப் பற்றி பல பார்வைகள் இருந்தாலும் முசாப்பர்நகர் கலவரம் தொடர்பாக கள ஆய்வு செய்த நமது குழு இவரைச் சந்தித்தப் போது பெரும் பிரமையை ஏற்படுத்தினார்.
கலவரக் களத்தில் நாம் பார்த்ததை தெரிவிப்பதற்காகவும் அம்மக்களின் சார்பாக கோரிக்கை வைப்பதற்காகவும் இன்று ராம்பூரில் (தலைநகர் லக்னோவிலிருந்து சுமார் 325 கிமீ தொலைவில் உள்ளது) அவரைச் சந்தித்தோம். அவர் உருவாக்கி வரும் மவ்லானா முஹம்மது அலி ஜவ்ஹர் பல்கலைகழகத்தின் வளாகத்தின் வாயிலில் எங்களை வரவேற்று அழைத்துச் சென்றார். இவரது தனி மருத்துவராக இருக்கும் வாணியம்பாடி ஹக்கீம் அக்பர் கவ்ஸர் அவர்கள் முன்கூட்டியே நமது பணிகளைப் பற்றி விரிவாக எடுத்துரைத்திருந்தார்.
எங்களை பிரமிக்க வைத்தது கல்வியில் மிகவும் பின்தங்கியிருக்கும் உ.பி. முஸ்லிம்கள் அலிகர் முஸ்லிம் பல்கலைகழகத்திற்கு பிறகு உருப்படியாக எந்தவொரு கல்வி நிறுவனத்தையும் உருவாக்கவில்லை. இந்த நிலையில் 250 ஏக்கர் நிலத்தில் ஆஜம் கான் இந்த பல்கலைகழகத்தை உருவாக்கியிருக்கிறார். கலை அறிவியல் பொறியியல் துணை மருத்துவப் படிப்புகள் சட்டம் கல்வி என்று சகல துறையிலும் இங்கு வகுப்புகள் உள்ளன. அடுத்த ஆண்டு மருத்துவம், வேளான்மை மற்றும் ஊடகவியல் படிப்புகளும் தொடங்கப்பட உள்ளன.
கோசி ஆற்றின் கரையில் அமைந்துள்ள இந்த பல்கலைகழக வளாகத்தின் நடு நாயகமாக மஸ்ஜித் உமர் என்ற பெயரில் பிரமாண்டமான பள்ளிவாசல் கட்டப்பட்டு வருவதையும் எங்களுக்கு சுற்றி காண்பித்தார். ஒரே நேரத்தில் 7500 பேர் தொழுகை நடத்தும் வகையில் இந்த பிரமாண்டமான பள்ளிவாசல் கட்டப்பட்டு வருகின்றது. இதே போல் நவீன முறையில் உள்விளையாட்டு அரங்கமும் கட்டப்பட்டு வருகின்றது.
எங்களை தனது வாகனத்தில் ஏற்றிக் கொண்டு பல்கலைகழக வளாகத்தின் ஒவ்வொரு பகுதியையும் சுற்றிக் காண்பித்தார். இப்பல்கலைகழகத்தில் முஸ்லிம் மாணவர்களுக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடு உண்டு என்று தெரிவித்தார். நான் தமிழக மாணவர்களுக்கு இங்கு இடம் உண்டா என்று கேட்டப்போது தாரளமாக அவர்களை வரவேற்கிறேன் என்றார்.
ராம்பூரில் மக்களிடையே நாம் பேசும் போது அவரது செல்வாக்கு தெளிவாக புரிந்தது. மிக குறைந்த கட்டணத்தில் 24 மணிநேரமும் மின்சாரம், இலவச குடிநீர் வீடுகளுக்கு என்று பல சேவைகளை செய்து வருகிறார். ஊடகங்கள் பல நேரங்களில் அவரது பேச்சுகளை திரித்து வெளியிட்டு விடுகின்றன. இப்பல்கலைக்கழகம் நன்கொடைகள் மூலமாக கட்டப்பட்டு வருகின்றது என்று நம்மிடம் தெரிவித்த அவர் இதில் 80 விழுக்காடு முஸ்லிமல்லாத அன்பர்கள் அளித்தது என்று குறிப்பிட்டார். இங்கு உள்ள ஏனைய தனியார் உயர் கல்வி நிறுவனங்களை விட மிக குறைவான கட்டணமே வசூலிக்கப்படுகின்றது என்று இவ்வூரில் பணியாற்றும் செய்தியாளர் ஒருவர் நம்மிடம் தெரிவித்தார்.
நான் பல்வேறு பல்கலைகழக வளாகங்களை உலகில் பல நாடுகளில் பார்த்துள்ளேன். இதுவரை என்னை கவர்ந்தது மலேசியாவில் உள்ள சர்வதேச இஸ்லாமியப் பல்கலைகழகத்தின் வளாகம். அதற்கு அடுத்த நிலையில் உள்ளது ராம்பூர் மவ்லானா முஹம்மது அலி ஜவ்ஹர் பல்கலைகழகம்.
உ.பி.யை ஆட்சி செய்யும் சமாஜ்வாதி கட்சியின் அமைச்சரவையில் சிறுபான்மை நலத்துறை அமைச்சராக இருக்கும் ஆஜம் கானிடம் நாம் முஸாப்பர்நகர் கலவரம் தொடர்பாக நமது கள ஆய்வில் பார்த்தவற்றை விவரித்ததுடன் எழுத்துபூர்வமாக நாங்கள் அளித்த கோரிக்கையை வரிவிடாமல் படித்து விளக்கங்களை அளித்தார். முதலமைச்சரின் கவனத்திற்கு அதனை எடுத்துச் சொல்வதாக கூறினார். உ.பி.யில் வாழும் முஸ்லிம்களுக்கு அரசு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் தனி இடஒதுக்கீடு உங்கள் காலத்தில் அளிக்கப்படாவிட்டால் வேறு எப்போதும் கொடுக்கப்பட மாட்டாது என்று நாம் தெரிவித்தப் போது ஆந்திராவில் அளிக்கப்பட்டு நீதிமன்றம் தடைச் செய்ததை அவர் குறிப்பிட்டார். நாம் கேரளாவில் கர்நாடகத்தில் தமிழகத்தில் சட்டச்சிக்கல் இல்லாமல் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு இருப்பதை எடுத்துச் சொல்லி அது தொடர்பான ஆணைகளை தருகிறோம் என்று சொன்ன போது அவற்றை தருமாறும் அவற்றை ஆய்வுச் செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.
விடுதலைப் போராட்டத்தில் காந்தியடிகளுக்கே ஊக்க சக்தியாக இருந்த மவ்லானா முஹம்மது அலி ஜவ்ஹர் பிறந்தது இதே ராம்பூரில் தான். அதே ஊரில் அரசியல் ரீதியாக மட்டுமில்லாமல் ஒரு கல்வி புரட்சியை ஆஜம் கான் செய்து வருகிறார் என்று சொன்னால் மிகை ஆகாது.
ராம்பூர் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத் தொகுதிகளில் சுமார் 60 விழுக்காடு முஸ்லிம் வாக்களார்கள் உள்ளனர்
ஆஜம் கான் ஒரு சராசரி அரசியல்வாதியல்ல. அவர் ஒரு தொலை நோக்கு சிந்தனையுடன் செயல்படும் ஒரு உண்மையான கல்வி தந்தை என்பதையும் இந்த சந்திப்பில் உணர்ந்துக் கொண்டோம்.
(குறிப்பு தமுமுக ஆய்வு குழுவில் இடம் பெற்ற சகோதர்ர் ஹைதர் அலியும் நானும் தலைநகர் லக்னோவில் அரசு ரீதியான நடவடிக்கைகளுக்காக வந்து விட்டோம். பொருளாளர் ஒ.யூ. ரஹ்மதுல்லாவும் மவ்லவி சம்சுதீன் நாசர் உமரியும் தொடர்ந்து கள அய்வுகளை முசாப்பர்நகர் பகுதியில் செய்து வருகின்றார்கள்


இப்படிக்கு 
மூத்த தலைவர்கள் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ, 

Saturday, February 22, 2014

சவுதி அரேபியா மேற்கு மண்டல தமுமுக -மமக புதிய நிர்வாகிகள் தேர்வு


சவுதி அரேபியா மேற்கு மண்டல தமுமுக -மமக புதிய நிர்வாகிகள் தேர்வு
மாநிலத்தலைவர் மௌலவி J.S. ரிஃபாயி அவர்களின் முன்னிலையில் கீழ்கண்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன்

தலைவர் : காரைக்கால் இ.அப்துல் மஜிது - ஜித்தா - 0553055601
செயலாளர் : பந்தநல்லூர் அ.ஷாஜகான் யான்பு – 0502359214
பொருளாளர் : தூத்துகுடி சம்சுதீன் ஜீசான் - 0507642295
ஒருங்கிணைப்பாளர் : உடன்குடி அபுபக்கர் சித்திக் – யான்பு – 0507342059
துணைத் தலைவர் : புதுமடம் இப்ராஹிம் – ஜித்தா - 0531458500
துணைச்செயலாளர் : கீழை இர்பான் மக்கா - 0590618165
துணைச்செயலாளார் :பார்த்திபனூர் உபைதுல்லாஹ் ஜிசான் - 0535355349
துணைச்செயலாளர் : மரைக்காயர் மதினா - 0541505818

முசாப்பர்நகரில் தமுமுக கள ஆய்வு குழு

 
                               குத்பா கிராமத்தில் சூரையாடப்பட்ட வீடுகளின் காட்சிகள்


                             குத்பா கிராமத்தில் சூரையாடப்பட்ட வீடுகளின் காட்சிகள்

                            குத்பா கிராமத்தில் சூரையாடப்பட்ட வீடுகளின் காட்சிகள்

 ஷாபூரில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமில் ஒரு முதியவரிடம் விசாரித்த போது
ஷாபூரில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமில் ஒரு மூதாட்டியிடம் விசாரித்த போது 

                              குத்பா கிராமத்தில் சூரையாடப்பட்ட வீடுகளின் காட்சிகள்

 குத்பா கிராமத்தில் முஸ்லிம்கள் அனைவரும் வெளியேற்றப்பட்ட நிலையில் பூட்டிக் கிடக்கும் ஒரு பள்ளிவாசல் முன்பு. இந்த ஊருக்கு கலவரம் தொடங்குவதற்கு சில காலம் முன்பு அமித் ஷா வருகை புரிந்துள்ளார்

                                               ஜொலா முகாமில் ஆய்வு செய்தப் போது


ஷாபூர் முகாமில் தமுமுக நிருவாகிகள்ளிடம்  குடும்ப அட்டை இருந்தும் நிவாரணம் கிடைக்கவில்லை என்று முறையிடும் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தினர்
                                                     புத்தானா பகுதயில் கள ஆய்வு

உத்தரபிரதேச மாநிலம் முசாப்பர்நகர் மற்றும் சாம்லி மாவட்டங்களில் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் கண்டு அவர்கள் துயரைத் துடைப்பதற்கு சரியான வழிமுறைகளைக் காண தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் குழு ஒன்று கலவரத்தால் பாதிக்கப்ட்ட மக்களை நேரில் காண்பதற்காக 3 நாட்கள் கள ஆய்வு செய்தது. இக்குழுவில் என்னுடன் தமுமுகவின் மூத்தத் தலைவர் எஸ்.ஹைதர் அலி, பொருளாளர் ஒ.யூ.ரஹ்மதுல்லாஹ் தலைமை நிர்வாக்க் குழு உறுப்பினர் மவ்லவி ஷம்சுதீன் நாஸர் உமரி ஆகியோர் இடம் பெற்றனர்.
கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள், நிவாரண முகாம்கள் உள்ளிட்ட பல பகுதிகளை பிப்ரவரி 18 முதல் 20 வரை நாங்கள் ஆய்வுச் செய்தோம். இங்கே படக்காட்சிகளை முதல் கட்டமாக அளிக்கின்றோம்.

இப்படிக்கு 
மூத்த தலைவர்கள் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ, 

Friday, February 21, 2014

தமுமுக 109-வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விருதுநகரில்


அனைத்து சமுதாய மக்களுக்காக விருதுநகரில் தமுமுகவின் 109வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா மற்றும் சமுதாய எழுச்சி பொதுக்கூட்டம்

Thursday, February 20, 2014

இராமநாதபுரம் கிழக்கு மனிதநேய மக்கள் கட்சி தேவிபட்டினம் சார்பாக அரசியல் பொதுகூட்டம் நடைபெற்று ண்டு இருக்கிறது





இராமநாதபுரம் கிழக்கு மனிதநேய மக்கள் கட்சி தேவிபட்டினம் சார்பாக அரசியல் பொதுகூட்டம் நடைபெற்று ண்டு இருக்கிறது.,இதில் மாவட்ட தலைவர் M.சாதிக் பட்ஷா,மாவட்டம் செயலாளர் P.ஜாஹிர் உசேன்,மாநில செயலாளர் புளியங்குடி செய்யது உரை திகழ்த்தி இருக்கிறார்கள்.,. இதில் ஆண்கள்,பெண்கள் ஆயாரகாணக்கோர் கலந்து கொண்டு இருக்கிறார்கள்...

PFI இயக்கத்தினருக்கு அரசு மருத்துவமனை அவர்களுக்கு அருதல்குரிய தமுமுக மாவட்ட நிர்வாகிகள்




17.02.2014 அன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா இயக்கத்தின் சார்பில் அனுமதி பெற்று நடைபெற்ற ஊர்வலத்தை திடீரென காவல்துறை அனுமதி மறுத்து தடை செய்தது பதட்டத்தை உருவாக்கியுள்ளது.





 இந்நிலையில் நிகழ்ச்சியை சீர்குலைக்கும் நோக்கோடு விஷமிகள் சிலர் கல்லெறிந்துள்ளனர். காவல்துறை ஊர்வலத்தின் மீது நடத்திய தடியடி தாக்குதலால் 9க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களை இராமநாதபுரம்  தமுமுக மாவட்ட தலைவர் சதிக்கு பாஷா தமுமுக மாவட்ட செயலாளர் அன்வர் அலி மற்றும் மாவட்ட நிர்வாகிகள்  அரசு மருத்துவ மனை செஇன்று அவர்களுக்கு அருதல் கூறினர் 

Tuesday, February 18, 2014

இராமநாதபுரம் தடியடி சம்பவம் – தமுமுக கண்டனம்!

இராமநாதபுரம் தடியடி சம்பவம் – தமுமுக கண்டனம்!

PAbdusSamad

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை:

17.02.2014 அன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா இயக்கத்தின் சார்பில் அனுமதி பெற்று நடைபெற்ற ஊர்வலத்தை திடீரென காவல்துறை அனுமதி மறுத்து தடை செய்தது பதட்டத்தை உருவாக்கியுள்ளது.

 இந்நிலையில் நிகழ்ச்சியை சீர்குலைக்கும் நோக்கோடு விஷமிகள் சிலர் கல்லெறிந்துள்ளனர். காவல்துறை ஊர்வலத்தின் மீது நடத்திய தடியடி தாக்குதலால் 9க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

ஜனநாயக நாட்டில் வன்முறையை தூண்டும் நோக்கம் இல்லாமல் ஊர்வலம், பொதுக்கூட்டம் நடத்துவது ஜனநாயக உரிமையாகும். அதனை தடுப்பதும் ஜனநாயக சக்திகளை அச்சுறுத்தும் வகையில் தடியடி நடத்துவதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

எனவே, இராமநாதபுரத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா நடத்திய ஊர்வலத்தில் தடியடி தாக்குதல் நடத்தியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமுமுக வலியுறுத்துகிறது.

தமுமுக சார்பில் உ.பி. மாநிலம் முஸப்பர் நகரில் ஏற்பட்ட கலவரத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடந்த மாதம் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் நிவாரண நிதி வசூலிக்கப்பட்டது




தமுமுக சார்பில் உ.பி. மாநிலம் முஸப்பர் நகரில் ஏற்பட்ட கலவரத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடந்த மாதம் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் நிவாரண நிதி வசூலிக்கப்பட்டது,

இதுவரை வசூலிக்கப்பட்ட நிதி 15 நாட்களில் சுமார் 1 கோடியை நெருங்கியுள்ளது.

இந்நிலையில் நிவாரண நிதியை உரியவகையில் வினியோகம் செய்வதற்காக தமுமுக குழு முஸப்பர் நகருக்கு புறப்பட்டிருக்கிறது மூத்த தலைவர்கள் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ, செ. ஹைதர் அலி, பொருளாளர் ஓ.யூ.ரஹ்மத்துல்லா, அமைப்புச் செயலாளர் சம்சுதீன் நாசர் உமரி ஆகிய நான்கு பேர் கொண்ட குழு புறப்பட்டுள்ளது.

அடுத்த 5 நாட்களுக்கு முஸப்பர் நகரில் முகாமிட்டு அகதி முகாம்களில் வாடிவதங்கும் மக்களை இக்குழு சந்திக்கவுள்ளது. அம்மக்களின் மறுவாழ்வு குறித்து அம்மாநில அரசியல் தலைவர்கள், சமூக தலைவர்கள், அறிவு ஜீவிகள், சமூக சேவகர்கள் என பல தரப்பினரையும் இக்குழு சந்திக்க உள்ளது.

இவண்
தமுமுக தலைமையகம்

தி.மு.க 10வது மாநில மாநாடு திருச்சி - மமக - .சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் எம்.ஹெச்.ஜவஹிருல்லாஹ் அவர்கள் ஆற்றிய உரை

Sunday, February 16, 2014

இராமநாதபுரம் நகர் 15வார்டு சார்பாக புதிய தமுமுக,மமக கிளை,நிர்வாகம் தேர்வு நடைபெற்றது



15:02:2014 இன்று இராமநாதபுரம் கிழக்கு இராமநாதபுரம் நகர் 15வார்டு சார்பாக புதிய தமுமுக,மமக கிளை,நிர்வாகம் தேர்வு நடைபெற்றது...இதில் சிறப்புரை நிர்வாகிகள் ஒழுக்கம் ஏன்ற தலைப்பில் தமுமுக மார்க்ஸ் இமாம் ஹனிப் ரஷாதி அவர்கள் உரையாற்றினர்...இதில் தமுமுக மாவட்ட செயலாளர் அன்வர் அலி,மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் யாசர் அரபாத்,மாணவர் அணி மாவட்ட செயலாளர் புர்கான்,நகர் தலைவர் சுல்தான்,நகர் செயலாளர் பரகத்துல்லாஹ்,பொருளாளர் பிஸ்மில்லாஹ்,நகர் துணை தலைவர் பசிர்,நகர் தமுமுக துணை செயலாளர் ராஜா முகம்மது ,ஆற்றாங்கரை அஃபான் மற்றும் 15 வார்டு உறுப்பினர்கள் திராளக கலந்து கொண்டார்கள்...(அல்ஹம்தில்லாஹ்)

Thursday, February 13, 2014

இராத்தானத்தில் தமுமுகவிற்க்கு முதலிடம்..

இராமநாதபுரம் கிழக்கு மருத்துவ சேவை அணிக்கு 2011முதல்2013 அவசர காலங்கலில் இரத்தம் வழங்கியதற்க்கு தமிழ்நாடு எய்ட்ஸ் காட்டுபாட்டு வாரியம் சார்பாக அரசு தலைமை மருத்துவமனை டாக்டர்;கலீல் ரஹ்மான் விருதினை வழங்கினர்..இதனை மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் யாசர் அரபாத் பெற்று கொண்டார்.,.உடன் இராமநாதபுரம் ஒன்றிய தலைவர் பாக்கர்,ஒன்றிய மமக செயலாளர் கூரியுர் இபுராஹிம் மற்றும் தமிழ்நாடு எய்ட்ஸ் காட்டுபாட்டு வாரியம் பொறுப்பாளர் இருத்தார்கள்,,

தேவிபட்டிணத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் அரசியல் விளக்க பொதுக்கூட்டம்


20:02:2014 அன்று இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் தேவிப்பட்டினம் கிளை சார்பாக அரசியல் விளக்க பொதுகூட்டம் நடைபெற உள்ளது,..

Tuesday, February 11, 2014

சட்ட மன்ற உறுப்பினரும் மனிதநேய மக்கள் கட்சி சட்ட மன்ற தலைவருமான முனைவர் ஜவாஹிருல்லாஹ் MLA அவர்களுக்கு நன்றி விழா

சட்ட மன்ற உறுப்பினரும் மனிதநேய மக்கள் கட்சி சட்ட மன்ற தலைவருமான முனைவர் ஜவாஹிருல்லாஹ் MLA அவர்களுக்கு நன்றி விழா

கீழக்கரை மக்தூமிய கல்விக்குழுமம் மற்றும் பழைய குத்பா பள்ளி நிர்வாகிகள் இராமநாதபுரம் சட்ட மன்ற உறுப்பினரும் மனிதநேய மக்கள் கட்சி சட்ட மன்ற தலைவருமான முனைவர் M.H. ஜவாஹிருல்லாஹ் MLA அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக மக்தூமிய உயர் நிலைப்பள்ளியில் சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தனர். பள்ளி தாளாளர் AKS அமீர் சுல்தான் அவர்கள் முனைவர் M.H. ஜவாஹிருல்லாஹ் MLA- வை கௌரவபடுத்தினர். எங்கள் வேண்டுகேளை ஏற்று புதிய கட்டிடத்திற்கு நிதி ஒதுக்கியத்திற்கு எங்கள் பகுதி மக்கள் சார்பாக நன்றி என தெரிவித்தார்.
பழைய குத்பா பள்ளி தலைவரும் கீழக்கரை நகராட்சி துணைத்தலைவருமான ஹாஜா முகைதீன் அவர்கள் கூருகையில் புதிய கட்டிடம் சம்பந்தமாக முனைவர் M.H. ஜவாஹிருல்லாஹ் MLA வை சந்திக்க வேண்டும் என்று கீழக்கரை தமுமுக தலைவர் தம்பி சிராஜுதீனிடம் சென்னவுடன் இது நமது பகுதி ஏழை மீனவர்கள் வீட்டு பிள்ளைகள் அதிகம் உள்ள பள்ளி அரசு உத்தரவு படி நிதி ஓதுக்கீடு சம்பந்தமாக என்ன செய்ய முடியுமே அதை முனைவர் M.H. ஜவாஹிருல்லாஹ் MLA விடம் தகவல் தந்த முயற்சிப்போம் என்று கூரினார். அதன் பிறகு MLA கீழக்கரை வருகையின் போது நமது பள்ளிக்கு அழைத்து முனைவர் ஜவாஹிருல்லாஹ் MLA அவர்களிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
இன்று இந்த புதிய கட்டிடம் கட்ட 15 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. மிக மகிழ்ச்சியளிக்கிறது. அதேடு நின்று விடாமல் உடனே டெண்டர் விடப்பட்டது. இந்த துரித நடவடிக்கைக்கு முனைவர் ஜவாஹிருல்லாஹ் MLA அவர்களுக்கும் மற்றும் துணைணின்ற தமுமுக கீழக்கரை நிர்வாகத்திற்கும் அவர்களை வெற்றி பெற செய்த வாக்காளர்களுக்கும் நன்றி நன்றி என தெரிவித்தார்

Monday, February 10, 2014

இராமநாதபுரம் தொகுதி மண்டபம் ஒன்றியம் மரைக்கபட்டிணத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாடு 3.00லட்சம் நிதியில் கட்டபட்ட பயணிகள் நிழற்குடை




08:02:2014 அன்று இராமநாதபுரம் தொகுதி மண்டபம் ஒன்றியம் மரைக்கபட்டிணத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாடு 3.00லட்சம் நிதியில் கட்டபட்ட  பயணிகள் நிழற்குடைய சட்டமன்ற உறுப்பினர் போரசிரியர்:M.H.ஜவாஹிருல்லாஹ் அவர்கள் திறத்து வைத்தார்...உடன் தமுமுக மாவட்ட செயலாளர் அன்வர் அலி,மாவட்ட பொருளாளர் வாணி சித்திக்,மாவட்ட து.தலைவர் வேதளை மரைக்கையர் மண்டபம் ஒன்றிய தலைவர் ரசூல்கான், தலைவர்,ஐமாத் நிர்வாகிகள்,கிளை தலைவர் ஜலால்,இராமநாதபுரம் ஒன்றிய தலைவர் பாக்கர்,இராமநாதபுரம் நகர் து.தலைவர் பசிர்,ஆற்றாங்கரை அஃபான் மற்றும் மரைக்காபட்டிணம்,மண்டபம் பகுதி நிர்வாகிகள்,உறுப்பினர்கள்,பொது மக்கள் திராளக கலந்து கொண்டார்கள்...