Tuesday, August 31, 2010

கண்கலங்க செய்த ரமலான் சந்திப்பு நிகழ்ச்சி

இறைவனின் கிருபையால் 30-8-2010 அன்று 5:00 மணியளவில் துபாய் அல்கூசில் உள்ள பட்சி சாக்லட் கேம்பில் ரமலான் சிறப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்வில் திரளான தமிழக முஸ்லிம் சகோதரர்கள் கலந்துக்கொண்டனர்.நிகழ்ச்சியை கேம்ப் பொறுப்பாளர் சகோதரர் கொள்ளுமேடு ஜாகிர் அவர்கள் தலைமை தாங்கி நடத்தினார். சிறப்பு அழைப்பாளர்களாக தமுமுகவின் தலைமை கழக பேச்சாளர் சிவகாசி முஸ்தபா அவர்களும் மமகவின் துனைப்போதுச்செயலாளர் சகோதரர் தமிமுன் அன்சாரி அவர்களும் கலந்துக்கொண்டு உரையாற்றினார்கள்.சிவகாசி முஸ்தபா அவர்கள் ரமலான் தரும் பாடம் என்ற தலைப்பிலும் தமிமுன் அன்சாரி அவர்கள் தமிழக முஸ்லிம்களின் அரசியல் எழுச்சி என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தி அனைவரையும் உணர்வு பூர்வமாக சிந்திக்கவைத்தார்கள்.மேலும் தமுமுக தமிழக முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாத மக்களுக்கு செய்துவரும் பணிகளையும் நினைவுக் கூர்ந்தார்கள். கடந்த பாரளுமன்ற தேர்தலின்போது தமிழக ஆட்சியாளர்கள் கொள்கை சகோதரர்கள் மீது தொடர்ந்த தாக்குதல்களையும்,அதை கொள்கை சகோதரர்கள் எதிர்கொண்ட விதத்தையும் எடுத்துரைத்தது நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட அனைவரையும் கண்கலங்க செய்தது. இந்நிகழ்வில் கலந்துக் கொண்ட அனைவரும் இன்றைய சூழ்நிலையில் மமகவின் தேவையை விளங்கினார்கள்.இப்தார் நிகழ்ச்சியோடு நிறைவுப் பெற இருந்த நிகழ்ச்சி சகோதர்களின் ஆர்வத்தினால் மக்ரிப் தொழுகைக்குப் பிறகும் தொடர்ந்தது எனபது குறிப்பிடத்தக்கது.

Monday, August 30, 2010

காவிப் பயங்கரவாதம் - ப.சிதம்பரம் எச்சரிக்கை

டெல்லி: நாட்டில் புதுவித காவிப் பயங்கரவாதம் தலையெடுத்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இந்தியாவின் காவ‌ல்துறை தலைவ‌ர்க‌ள் மாநாடு தலைநகர் டெல்லியில் நடைபெற்று வருகின்றது. இம்மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றிய ப.சிதம்பரம், நாட்டில் நடைபெற்றுள்ள பல்வேறு குண்டு வெடிப்புக்களில் காவிப் பயங்கரவாதத்தின் தொடர்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
மாலேகான், நந்தித், அஜ்மீர் தர்கா, ஹைதராபாத் மக்கா மசூதி, கோவாவின் மார்கோ உள்ளிட்ட பல்வேறு குண்டுவெடிப்புக்களில் இந்துத்துவாவின் கைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்நேரத்தில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் இந்த எச்சரிக்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.மாலேகான் மற்றும் நந்தித் குண்டுவெடிப்புக்களுக்கு பின்னணியில் சனாதன் சன்ஸ்தா என்ற இந்துத்துவ அமைப்பே செயல்பட்டது என்பதை மும்பைத்தாக்குதலின் போது கொல்லப்பட்ட மஹாராஷ்டிரா தீவிரவாதத் தடுப்புப் படையின் தலைவர் ஹேமந்த் கார்கரே கண்டுபிடித்தது குறிப்பிடத்தக்கது.நன்றி : இந்நேரம் .காம்

அபுதாபி இஃப்தார் நிகழ்ச்சி (28.08.2010)
















அல்-அய்னில் எழுச்சியுடன் நடந்த இஃப்தார் நிகழ்ச்சி...

அருள் வளம் நிறைந்த ரமளான் மாதத்தில் இதயங்களை இணைக்கும் நிகழ்வுகள் உலகெங்கிலும் நிகழ்ந்து வருகின்றன.குறிப்பாக இஃப்தார் நிகழ்ச்சிகள் மூலமாக சமூக நல்லிணக்கமும்,மகிழ்சியும் இதயங்களில் விதைக்கப்படுகின்றன என்றால்.. இதில் மாற்றுக் கருத்துகளுக்கு இடமில்லை.

மனிதநேயமும்,சமூகநீதியும் உலகினில் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்ற இஸ்லாத்தின் கோட்பாட்டினை செயல் வடிவம் கொடுத்திட உழகை;கும் தமுமுக ஊழியர்கள் ரமளானில் செய்து வரும் எண்ணற்ற நல்லறங்களில்.. மகுடமாய் விளங்கிக் கொண்டிருக்கின்றன இந்த இஃப்தார் நிகழ்வுகள்.அல்-அய்ன் மண்டலம் முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் கடந்த வியாழக்கிழமை 17 வது நோன்பு திறக்கும் நிகழ்ச்சி அல்-அய்ன் நகரின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் பிரபல உணவகம் ஒன்றின் கூட்ட அரங்கில் நடைபெற்றது.இதைனையொட்டி மார்க்க சமுதாய விழிப்புணர்வு பிரச்சார உரைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாலை 5 மணிக்கு நிகழ்ச்சிகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் கடும் கோடை வெப்பத்தையும் பொறுட்படுத்தாது நோன்பாளிகள் 4.30 மணி தொடங்கி நிகழ்ச்சி அரங்கத்திற்கு வரத்தொடங்கினர்.
சரியாக 5 மணிக்கு மண்டல தலைவர் கொள்ளுமேடு முஹம்மது ரிஃபாயி தலைமையில் நிகழ்ச்சிகள் தொடங்கின.மௌலவி அப்துல் காதர் ஜெய்லானி கிராஅத் ஓதினார். மஸியாத் கிளின்கோ பகுதி கிளையின் ஆலோசகர் மேலப்பாளையம் மௌலவி பஷீர் ஆலிம் திருக்குர்ஆன் விளக்கவுரையாற்றினார். மண்டல நிர்வாகக் குழு உறுப்பினர் காட்டுமன்னார்குடி அஸ்கர் அலி வரவேற்புரையாற்றினார்.அமீரக முமுக செயலாளர் யாஸீன் நூருல்லாஹ்,அமீரக முமுக துணை செயலாளர் டாக்டர் அப்துல் காதர்,மண்டல துணைத் தலைவர் நாச்சிகுளம் அசாலி அஹமது, மண்டல செயலாளர் மன்ணை ஹாஜா மைதீன்,மண்டல பொருளாளர் பூதமங்களம் ஜாஹிர் ஹுஸைன்,மண்டல மூத்த நிர்வாகி தோப்புத்துறை சர்புதீன்,நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கீழை முஹம்மது இபுனு,ஷேக் தாவூத்,அப்துல் முத்தலிப், மற்றும் மஸியாத் கிளின்கோ பகுதி கிளை நிர்வாகிகள்,அல்-ஜிமி பகுதி நிர்வாகிகள் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தனர். தாயகத்திலிருந்து வருகை தந்திருக்கும் தலைமை கழக பேச்சாளர் மௌலவி சிவகாசி முஸ்தஃபா ரமளானில் செய்ய வேண்டியவை என்ற தலைப்பில் உரையாற்றினார்.இறுதியாக உரையாற்றிய மனிதநேய மக்கள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி தமுமுக தொடங்குவதற்கு முன்னர் தமிழகத்தில் முஸ்லிம் சமூகம் சந்தித்த இன்னல்களையும் அது தொடங்கப்பட்டதற்கு பின்னர் முஸ்லிம்களுக்கு எவ்வாறு மரியாதையைப் பெற்றுத் தந்தது என்பதையும் தமிழக அரசியலில் மமக வின் எழுச்சி குறித்தும் தனக்கே உரித்தான பாணியில் விளக்கினார்.



கூட்டம் அளவுக்கதிகமாக கூடியதால் ஏராளமான நோன்பாளிகள் இருக்கை கிடைக்காமல் நின்று கொண்டே உரைகளை செவிமடுத்தனர். இஃப்தார் நேரம் தொடங்தியவுடன் நோன்பாளிகளுக்கு பழங்களும் பழச்சாறும் வழங்கப்பட்டன. பின்னர் நோன்பாளிகள் அணைவரும் உடனடியாக அருகில் உள்ள பள்ளியில் மக்ரிப் தொழுகையை நிறைவேற்றிய பின்னர் அந்த உணவகத்திலேயே அவர்களுக்கு உணவு விருந்து பறிமாறப்பட்டது.மண்டல துணை செயலாளர் அதிரை அப்துல் ரஹ்மான்,இணை செயலாளர்கள் களப்பால் சையது யூசுஃப்,விழுப்புரம் முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்ட சகோதரர்கள் நிகழ்ச்சியினை சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.ஆரம்ப காலங்களில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யும் போது வாகன வசதி செய்து கொடுத்தால் மாத்திரமே பொது மக்கள் கலந்து கொள்வார்கள் என்ற நிலை மாறி பெரிய அளவில் விளம்பரங்கள் செய்யப்படாத நிலையிலும் பெரிய அளவில் மக்கள் திரண்டிருக்கின்றனர் என்றால் இது சமுதாயம் தமுமுக வின் மீது வைத்திருக்கும் நன்மதிப்பைக் காட்டுவதாக அமைந்திருப்பதாக மூத்த ஊழியர்கள் தெரிவித்தனர்.
கலந்தாய்வுக் கூட்டம்.
அல்-அய்ன் முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தாயகத்திலிருந்து வருகை தந்திருக்கும் தலைமை நிர்வாகிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.அமீரக முமுக செயலாளர் யாசின் நூருலாஹ் தலைமை தாங்கினார். தமுமுக தலைமைக் கழக பேச்சாளர் சிவகாசி முஸ்தபா அமீரக முமுக துணை செயலாளர் டாக்டர் அப்துல் காதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.




Saturday, August 28, 2010

தமுமுக துபை மண்டலம் ஜபல்அலி புதிய கிளை

25 - 8 -2010 , துபாய் ஜபல்அலி தீவா கேம்பில் முமுக சந்திப்பு நிகழ்ச்சி தோப்புதுறை ஜின்னாஹ் தலைமையில் நடைப்பெற்றது,
இந்நிகழ்ச்சியில் ஷார்ஜா மண்டல செயலாளர் தோப்புதுறை இப்ராகிம், ஷார்ஜா மண்டல பொருளாளர் அபுல்ஹசன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள், மமக துணைப் பொதுச்செயலாளர் M ,தமிமுன் அன்சாரி அவர்கள் உரை நிகழ்த்தி, கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள். நிகழ்ச்சியின் முடிவில் புதிய கிளை அமைக்கப்பட்டு கிழ்க்காணும் சகோதர்கள் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.

A ,சபியுல்லாஹ் - தலைவர், - லப்பைகுடிகாடு,
M ,சலீம் -செயலாளர் - லால்குடி
M ,பக்கிர் முஹம்மத் -பொருளாளர் -தோப்புத்துறை
M ,ஜாபர் -துணைத்தலைவர் -திருநெல்வேலி
S ,ஹாஜானஜ்முதீன் -துணைச்செயலாளர் -தோப்புத்துறை

N ,பாதுஷா -செயற்குழு உறுப்பினர் - கடையநல்லூர்
M ,சபியுர்ரஹ்மான் -செயற்குழு உறுப்பினர் -கும்பகோணம்
R ,யாசர் -செயற்குழு உறுப்பினர் -லப்பைகுடிகாடு
A ,ருக்னுதீன் -செயற்குழு உறுப்பினர் -தோப்புத்துறை.

முமுக அஜ்மான் மண்டலத்தின் புதிய நிர்வாகிகள்

அஜ்மான் மண்டல முமுகவின் ஆலோசனைக் கூட்டம் 26-08-2010 அன்று அல்புத்தான் பகுதியில் முமுகவின் அமீரக துணைத் தலைவர் சகோதரர்ஹுசைன் பாஷா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.மண்டல முமுக நிர்வாகிகள் முன்னிலை வகிக்க முமுகவின் ஷார்ஜா மண்டல துணை செயலாளர் சகோதரர் பந்தல்குடி சம்சுதீன் அவர்கள் தமுமுகஏன்? எதற்கு? என்ற தலைப்பில் உரைநிகழ்த்த அஜ்மான் மண்டல புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..
தலைவர் :- குடவாசல் செய்யது ஷஹாபுதீன்துணை தலைவர் : - முத்துப்பேட்டை முகைதீன்செயலாளர் :-
கட்டிமேடு ஜபருல்லாஹ்துணை செயலாளர்கள்
2:-பசுபதி கோவில் முகம்மது ரபீக்கட்டிமேடு சாகுல் ஹமீதுபொருளாளர் :- திருச்சி முகம்மது இல்யாஸ்மக்கள் தொடர்பு
:- செய்யது ஜமால் (சித்தார் கோட்டை)செயற்குழு உறுப்பினர்கள்
:-அஜீஸ் ரஹ்மான் - திருநெல்வேலி,
களக்காடு முகம்மது ஹனிபா -
திருநெல்வேலிமக்கள் உரிமை பொறுப்பாளராக
சகோ.முத்துப்பேட்டை முகைதீன் ஆகியோர் ஏகமானதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.வந்திருந்தோர் அனைவருக்கும் நோன்பு திறக்கும் ஏற்பாடு மண்டல நிர்வாகிகளால் செய்யபட்டு இருந்தது. இந்த ஆலோசனை கூட்டத்தில் எதிர்வரும் 02-09-2010 வியாழன் அன்று தாயகத்தில் இருந்து சிறப்பு அழைப்பாளர்களாய் அமீரகம் வந்திருக்கும் தமுமுகவின் மாநில செயற்குழு உறுப்பினரும், மக்கள் உரிமை ஆசிரியரும், மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துணை பொது செயலாளருமான சகோதரர் M.தமீமுன் அன்சாரி MBA., அவர்களையும், தமுமுகவின் தலைமை கழக பேச்சாளர் சகோதரர் மவ்லவி சிவகாசி முஸ்தபா அவர்களையும் அழைத்து அஜ்மானில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி ஏற்ப்பாடு செய்வது என்று ஏக மானதாக முடிவு செய்யப்பட்டது.கலந்துகொண்ட அணைவரும் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளின் பணிகள் சிறக்க எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திதவர்களாக கலைந்து சென்றனர்.

செய்தி தொகுப்பு - முத்துப்பேட்டை முகைதீன்

அப்துல் நாசர் மதானி கைது: காரைக்காலில் த.மு.மு.க கண்டன ஆர்ப்பாட்டம்

கேரள ஜனநாயக மக்கள் கட்சியின் தலைவர் அப்துல் நாசர் மதானியின் கைதைக் கண்டித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் தமுமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் துணைத் தலைவர் யுசுப்கான் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட, நகர நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானனோர் கலந்து கொண்டனர்.

Friday, August 27, 2010

பாலஸ்தீனில் நோன்பு நோற்கும் கிறிஸ்தவர்கள்


பாலஸ்தீனத்தில் உள்ள மேற்கு கரை பகுதியில் பைத்துல் லஹ்மு என்று அழைக்கப்படும் பெத்லஹேம் (ஈஸா நபி பிறந்த) நகரில் புனித ரமலான் நோன்பைமுஸ்லிம்களுடன் சேர்ந்து கிறிஸ்துவர்களும் கடைப்பிடிக்கும் வித்தியாசமான தகவல் கிடைத்திருக்கிறது. பாரம்பரியமாக முஸ்லிம் களுடன் வாழ்ந்து வரும் பாலஸ்தீன கிறிஸ்தவர்களும்ரமலான் முழுவதும் நோன்பு இருந்து தங்களின்நல்லிணக்கத்தை காட்டுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இது போன்று நோன்பு இருப் பதினால் தங்களின் சமய நம்பிக் கையில்எவ்வித பாதிப்பும் இல்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர் பாலஸ்தீன கிறிஸ்தவர்கள் முஸ்லி ம்கள் இடையே தொன்று தொட்டு நிலவி வரும் நெருங்கிய உறவை இது காட்டுவதாக சமூக வியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Thursday, August 26, 2010

தமுமுக துபை மண்டலம் லெப்பைகுடிகாடு தமுமுக சகோதரர்களின் ஒருங்கினைப்பு நிகழ்ச


ஐக்கிய அரபு அமீரகம் துபாயில் லெப்பைகுடிகாடு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக சகோதரர்களின் ஒருங்கினைப்பு நிகழ்ச்சி மற்றும் இப்தார் நிகழ்வு துபாய் - தேரா முஸ்லிம் முன்னேற்றக் கழக மர்கஸில் நடைப்பெற்றது. நிகழ்விற்கு துபை மண்டல தலைவர் சகோ. அப்துல் காதர் அவர்கள் தலைமைத் தாங்கினர்.
21-08-2010 அன்று சரியாக மாலை 5.00 மணிக்கு நிகழ்வு ஆரம்பமானது. தாயகத்திலிருந்து வருகைத் தந்துள்ள தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைமைக் கழக பேச்சாளர் சகோ. சிவகாசி முஸ்தபா அவர்கள் சிறப்புரையாற்றினார். அவரைத் தொடர்ந்து மனித நேய மக்கள் கட்சியின் மாநில துனைப் பொதுச் செயலாளர் சகோ. தமீமுன் அன்சாரி அவர்கள் இளைஞர் எழுச்சியின் அவசியம் பற்றியும் மனித நேய மக்கள் கட்சியின் அரசியல் நகர்வுகளையும், தற்கால தமிழக முஸ்லிம் அரசியல் நிலவரம் குறித்தும் ஆராய்ச்சி பூர்வமான அனுகுமுறையோடு தனது சொற்பொழிவை நிகழ்த்தினார்.இறுதியில் பொது மக்கள் எழுப்பிய வினாக்களுக்கு விளக்கமளித்தார். வந்திருந்த சகோதரர்கள் அனைவருக்கும் இப்தார் விருந்து மிகவும் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டது

ஐ.ஏ.எஸ் மாணவர்களுக்கு பயிற்சி வகுப்பு எடுத்த ஷாபைசல்




ஐ.ஏ.எஸ் தேர்வில் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்ற ஐம்முகாஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த டாக்டரான ஷாபைசல் ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தின் சார்பில் நடத்தப்படும் ஐ.ஏ.எஸ். பயிற்சியாளர் முகாமில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். காஷ்மீர் மாநிலத்தில் குப்வாரா மாவட்டத்தில் மிகச்சிறிய கிராமத்தில் பிறந்த ஷாபைசல் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்ற வெற்றி ரகசியத்தை மாணவர்களுக்கு தெரிவித்தார்.அது பயனுள்ள வகையிலும் ஊக்கமூட்டும் விதத்திலும் இருந்ததாக ஜாமியா மாணவர்கள் தெரிவித்தனர்.

Wednesday, August 25, 2010

அல்கூஸில் ரமலான் வசந்தம்


முமுகவின் சார்பாக அமீரகம் முழுவதும் ரமலான் வசந்தம் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக 24-08-2010 அன்று துபாய் அல்கூஸ் கிளையின் சார்பாக லேபர் கேம்பில் மாலை 5மணி முதல் மஹ்ரிப் வரை மார்க்கம் மற்றும் அரசியல் சொற்ப்பொழிவு நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சியில் தமுமுகவின் தலைமைக் கழக பேச்சாளார் சகோ.சிவகாசி முஸ்தபா அவர்கள் ”நோன்பு தரும் பயிற்ச்சி” என்ற தலைப்பிலும், மனித நேய மக்கள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் சகோ.எம்.தமிமுன் அன்சாரி அவர்கள் மமகவின் செயல்பாடுகள் தொடர்பாகவும்,எதிர் கால திட்டங்கள் சம்பந்தமாகவும் விவரித்தார்கள்.
மேலும் கலந்து கொண்ட தோழர்களின் ஐயங்களுக்கு தெளிவான முறையில் அரசியல் புலமையோடு பதில் அளித்தார்கள்

துபாயில் மதுக்கூர் சகோதரர்களுடன் சந்திப்பு


24‍‍‍‍.08.2010 அன்று இரவு 10 மணியளவில் துபாய் தமிழ்பஜாரில் வசிக்க கூடிய மதுக்கூர் சகோதரர்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைப்பெற்றது இதில் மனித நேய மக்கள் கட்சியினுடைய மாநில துணைப் பொதுச் செயலாளர் எம்.தமீமுன் அன்சாரி அவர்கள் கலந்து கொண்டு மமகவின் செயல்பாடுகள் மற்றும் அதன் பணிகள் பற்றி விரிவாக விவரித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் திரளான சகோதரர்கள் கலந்து கொண்டு சமூதாய அக்கறையோடு ஆக்கப் பூர்வமான கேள்விகளை முன்வைத்தார்கள். இக்கேள்விகளுக்கு தமீமுன் அன்சாரி அவர்கள் அறிவுப்பூர்வமான பதில்களை நடைமுறை சாத்தியத்தோடு பதிலளித்தார்கள்

முஸ்லிம் முன்னெற்றக் கழகம் - துபை மண்டலத்தின் நிர்வாகம் மறு சீரமைக்கப்பட்டு புதிய சகோதரர்கள் நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்நிகழ்ச்சிக்கு

முஸ்லிம் முன்னெற்றக் கழகம் - துபை மண்டலத்தின் நிர்வாகம் மறு சீரமைக்கப்பட்டு புதிய சகோதரர்கள் நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்நிகழ்ச்சிக்கு தாயகத்திலிருந்து வருகை தந்திருக்கம் மமக துணைப் பொதுச்செயலாளர் சகோ. தமீமுன் அன்சாரி அவர்கள் தலைமை தாங்கினார்கள்.
முமுக – துபை மண்டலத்தின் புதிய நிர்வாகிகள் பின்வருமாறு :
1) தலைவர் - அப்துல் காதர் (மதுக்கூர்) - 050-58470932)
செயலாளர் - ஷாகுல் ஹமீது (எ) அப்துல் ஹமீது (அதிரை) - 050-37921673)
பொருளாளர் - சுல்தான் அலாவுதீன் (இளையாங்குடி) - 050-70333584)
துணைத்தலைவர் - முஹைதீன் (சென்னை) - 050-29104995)
துணைச்செயலாளர் - சிராஜ் (மதுக்கூர்) - 050-94319806)
மக்கள் தொடர்பாளர் - ஹாரிஸ் (கோட்டைப்பட்டினம்) - 055-41281287)
மருத்துவ சேவை அணி செயலாளர் - ரைசுல் இஸ்லாம் (லால்பேட்டை) - 050-86241618)
மனிதவள மேம்பாடு அணி செயலாளர் - ரியாஸ் (கேவை) - 050-96406399)
தஃவா பிரிவு செயலாளர் - முஹம்மது பிலால் (சென்னை) - 055-291049910)
வர்த்தகர் அணி செயலாளர் - யூஸுஃபஃ (நாகூர்) - 050-898182911) மக்கள் உரிமை பிரச்சார அணி - கலீல் ரஹ்மான் (திருப்பூர்) - 055-986625112) மக்கள் உரிமை பிரச்சார அணி - அப்துல் அஜீஸ் (திருப்பந்துருத்தி) - 050-794401713) மக்கள் உரிமை பிரச்சார அணி - உஸ்மான் (நெல்லை, ஏர்வாடி) - 050-955435514)
மக்கள் உரிமை பிரச்சார அணி - காலித் (நாகூர்) - 055-6603281

Tuesday, August 24, 2010

மதானி கைது: கோவையில் தமுமுக கண்டன ஆர்ப்பாட்டம்

கோவை:"இந்தியாவை நாம் ஆளும் போது தான், உரிமைகள் நமக்கு கிடைக்கும்' என மதானி கைது செய்யப்பட்டதை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில், த.மு.மு.க., மாநில துணை செயலர் பேசினார்.பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கில், கேரள மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மதானி சில நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். கர்நாடக போலீசாரின் இந்நடவடிக்கையை கண்டித்து, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில், நேற்று காந்திபுரம் தமிழ்நாடு ஓட்டல் முன், ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் பர்கத் அலி தலைமை வகித்தார். மாவட்ட செயலர் ரபீக், பொருளாளர் அகமது கபீர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைச் செயலர் செய்யது பேசியதாவது:கடந்த 2008ல் பெங்களூருவில் நடந்த குண்டு வெடிப்பு வழக்கில் பிடிபட்ட கேரளாவை சேர்ந்த நசீர் கொடுத்த வாக்குமூலத்தில், மதானி 31வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். கோவை குண்டு வெடிப்பு வழக்கில் விடுதலையானவர், கேரள சிறப்பு போலீஸ் படை பாதுகாப்பில் இருந்தார். அவர் எங்கெல்லாம் சென்றார் என கேரள போலீசாருக்கு தெரியும்.இப்படி இருக்கும் போது, 31வது குற்றவாளியாக இருக்க முடியுமா? மதானி கைது மூலம் வேறு யாரையோ சிக்க வைக்க கர்நாடக அரசு முயற்சிக்கிறது. மதானியை கைது செய்ய தீவிரம் காட்டிய போலீசார், மலேகான், சம்ஜவ்தா, அஜ்மீர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் குற்றம் சாட்டப்பட்ட இந்துத்துவா பெரும்புள்ளிகளை கைது செய்யாதது ஏன்?கேரள போலீஸ் பாதுகாப்பில் இருக்கும் ஒருவர் எப்படி குண்டு வைத்திருக்க முடியும். எனவே கேரள போலீசாரையும் இவ்வழக்கில் முக்கிய சாட்சியாக விசாரிக்க வேண்டும். தவிர கர்நாடக அரசையும் மத்திய போலீசார் விசாரிக்க வேண்டும். ஒவ்வொரு குண்டு வெடிப்பின் போதும், முஸ்லிம்களை கைது செய்து, தீவிர விசாரணைக்கு பின் விடுவிக்கின்றனர்.மத்திய உளவுத் துறையில் ஆர்.எஸ்.எஸ்., பற்றுள்ளவர்கள் தான் அதிகாரிகளாக உள்ளனர். இவர்கள் தான் முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படுகின்றனர். முஸ்லிம்களாகிய நமக்குரிய உரிமைகள் கிடைக்க, நாம் இந்தியாவை ஆள வேண்டுமென்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பொய் வழக்கில் கைது செய்யப்பட்ட மதானியை விடுதலை செய்யும் வரை போராட்டம் தொடரும்.இவ்வாறு செய்யது பேசினார்.கோவை மாநகர் மாவட்ட தலைவர் மொய்தீன் சேட் நன்றி கூறினார்நன்றி- தினமலர்,

Monday, August 23, 2010

ராசல் கைமாவில் ஏகத்துவ எழுச்சி மாநாடு

ஐக்கிய அரபு அமீரகம் முஸ்லிம் முன்னேற்றக் கழக ராசல் கைமா மண்டலம் கடந்த 20.08.2010 அன்று இரவு ராசல் கைமா - அல் நக்கில் வீணஸ் ரெஸ்டாரெண்ட் அரங்கத்தில் ஏகத்துவ எழுச்சி மாநாட்டை நடத்தியது".
மாநாட்டு அரங்கத்தில் மாலை 9.30 மணிக்கு சகோ.அப்துல் ஹன்னான் அவர்கள் இறைவசனம் ஓத நிகழ்ச்சிகள் ஆரம்பம்மானது. மாநாட்டிற்க்கு ராசல் கைமா மண்டல தலைவர் சகோ. குடந்தை ஜாப்பர், மண்டல துணை தலைவர் கடியாச்சேரி ஹாஜா முகைதீன், பொருளாலர் செங்கோட்டை அப்துல் ஹமிது, மண்டல ஆலோசகர் தோப்புத்துரை ஆதம்.ஆரிபின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராசல் கைமா மண்டல செயளாலர் பொதக்குடி ஷாஜஹான் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார் பின்னர் அமீரக தலைவர் சகோ. அப்துல் ஹாதி அவர்கள் மாநாட்டுக்கு தலைமை ஏற்று சிறப்புரை நிகழ்த்தினார்.

அவர்களைத் தொடர்ந்து மாநாட்டிற்கு சிறப்பு அழைப்பாளர்களாகவும் பேச்சாளர்களாவும் நமது தாயகத்திலிருந்து வருகைத் தந்திருக்கும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைமை கழக பேச்சாளர் சகோ. மவுலவி சிவகாசி முஸ்தபா அவர்கள் "ஏகத்துவத்துவத்தின் அவசியம்" என்ற தலைப்பிலே தனது உரைவீச்சை நிகழ்த்தினார்.

அவரைத் தொடர்ந்து மனித நேய மக்கள் கட்சியின் மாநில துனைச் செயலாளர் சகோ. தமீமுன் அன்சாரி அவர்கள் தனது சமுதாயத்தை தட்டுயெழுப்பும் பானியில் இந்தியா விடுதலைக்காக பங்காற்றிய வஹாபிக்களை(ஏகத்துவ வாதிகள்) பற்றிய வரலாற்றுச் சான்றுகளையும் தமிழக முஸ்லிம்களிடய ஏற்ப்பட்டுள்ள ஒற்றுமையின்மையும், பின்னர் தமிழக அரசியலில் மனிதநேய மக்கள் கட்சியின் பங்களிப்பையும் மிக விவரமாக விளக்கினார். தமிழக முஸ்லிம் அரசியலில் ஏற்பட்டுள்ள சாதக, பாதக விடயங்களை விவரமாக தொகுத்து கூறினார். இறுதியாக தனது உரையின் முடிவில் நம்முடைய சகோதரர்கள் மற்றும் பொதுமக்களும் கேட்ட வினாக்களுக்கு விடையளித்தார்.
அமீரக துணை தலைவர் சகோ.ஹூசைன் பாஷா அவர்கள் நன்றியுரை நிகழ்த்தி துஆவுடன் இம்மாநாடு அல்லாஹ் பேரருளால் இனிதே நிறைவுற்றது.
மாநாட்டில் திரளானோர் கலந்துக்கொண்டு பயன்பெற்றனர், பின்னர் சிற்றுண்டியுடன் தேநீரும் வழங்கப்பட்டது.
இம்மாநாட்டுக்கு ராசல் கைமா மண்டல நிர்வாகிகள் சில இன்னல்களிடைய வெகு சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தது அனைவரையும் திகைக்க வைத்தது.


Saturday, August 21, 2010

திருப்பூரில் இரத்ததான முகாம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகரம் சார்பாக ரத்ததானம் நடைபெற்றது. இந்த முகாம் மாவட்ட செயலாளர் நசிர்தீன் தலைமையில் நடைபெற்றது. நகர நிர்வாகிகள் இந்த முகாமில் கலந்து கொண்டார்கள் இதில் 25 யூனிட் ரத்தம் கொடுக்கப்பட்டது

இராமநாதபுரம் மாபெரும் மருத்துவ முகாம்

ராமநாதபுரத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் இலவச சிறப்பு பொது மருத்துவ முகாம், மருத்துவத் துறை இணை இயக்குநர் டாக்டர் இப்ராகிம் அலி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஆ.ரவிச்சந்திர ராமவன்னி துவக்கி வைத்தார். தமுமுக அமைப்பின் மாவட்டத் தலைவர் சலிமுல்லா கான், மருத்துவ அணி செயலாளர் அன்வர் அலி, ரியாஸ் கான், பரக்கத்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர் தலைவர் சுல்த்தான் வரவேற்றார்.
முகாமில் 513 பேருக்கு இலவசமாக ஆலோசனைகளும், மருந்துகளும் வழங்கப்பட்டன.அப்பல்லோ மருத்துவமனையும் தமுமுகவும் இணைந்து நடத்திய இம்முகாமில், 22 பேருக்கு கலைஞர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் மேல் சிகிச்சைக்காக இருதய அறுவைச் சிகிச்சைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.
கிழக்கு மாவட்ட தலைவர் சாதிக் பாட்ஷா நன்றி கூறினார். முகாமை ஆசிரியர் ஐயப்பன் ஒருங்கிணைப்பு செய்திருந்தார்.

Friday, August 20, 2010

தமுமுக துபை மண்டலம் சோனாப்பூர் பலுதியா கேம்பில் ரமலான் சிறப்பு சொற்பொழிவு


அல்லாஹ்வின் உதவியால் 19 - 08 - 2010 அன்று இரவுத் தொழுகைக்குப் பிறகு துபாய் சோனாப்பூர் பலுதியா கேம்பில் ரமலான் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது. தாயகத்தில் இருந்து வருகைதந்துள்ள தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைமை கழக பேச்சாளர் மௌலவி. சிவகாசி முஸ்தபா அவர்கள் ''ரமலானில் நாம் கடைபிடிக்க வேண்டியவை'' என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். உரையின் முடிவில் தமிழகத்தில் சமுதாய மக்களுக்காக தமுமுக செய்துவரும் பணிகளை எடுத்துரைத்தார்கள். அதேபோல முஸ்லிம்கள் ஏன் அரசியல் ரீதியான எழுச்சி பெறவேண்டும் என்பதைபற்றியும் எடுத்துரைத்தார்கள். இறுதியில் மார்க்க, மற்றும் அரசியல் சம்பந்தமான கேள்விகளுக்கு விளக்கமளித்தார்கள்.
இந்நிகழ்வில் திரளான சகோதரர்கள் கலந்துக்கொண்டு பயன்பெற்றார்கள். பலுதியா கேம்ப் சகோதரர்கள் சிறப்பான ஏற்பாடுகளை செய்து இருந்தார்கள்.

முமுகவின் ரமலான் நிகழ்ச்சிகள்


கர்நாடகம் மற்றும் குஜராத் பா.ஜ.க. அரசுகளின் இந்த சதித்திட்டங்களுக்கு......

அப்துல் நாசர் மதானி கைது - அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை-தமுமுக தலைவர் கடும் கண்டனம்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைவர் பேரா. எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் கண்டன அறிக்கை
கேரளா மக்கள் ஜனநாயக கட்சியின் நிறுவன தலைவரும் இஸ்லாமிய மார்க்க அறிஞருமான அப்துல் நாசர் மதானியை அரசியல் காழ்புணர்ச்சியோடு கைது செய்துள்ள கர்நாடக பா.ஜ.க. அரசை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது.
பெங்களூரு குண்டுவெடிப்பில் அப்துல் நாசர் மதானிக்கு தொடர்பு இருப்பதாக ஒரு நபர் போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு அவரை பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில் 31 வது குற்றவாளியாக சேர்த்து கர்நாடக காவல்துறை கைது செய்துள்ளது. காவல்துறையினரிடம் அளிக்கப்பட்ட ஒரு வாக்குமூலத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு அதன் உண்மை நிலையை ஆய்வு செய்யாமல் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு இந்த கைது நடந்திருக்கிறது.
மும்பையில் 2000 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டு பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டதற்கு காரணமான (1992-1993) மும்பை கலவரத்தின் சூத்திரதாரி என நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா அவர்களால் விசாரணைக் கமிஷன் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்ட பால்தாக்கரே இதுவரை கைது செய்யப்படவில்லை.
குஜராத்தில் ஆயிரக்காணக்கான முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படவும் லட்சக்கணக்கானோர் சொந்த நாட்டில் அகதிகளாவதற்கும் காரணமான நரேந்திர மோடியை உச்சநீதிமன்றமே நேரடியாக தலையிட்டு கண்டனம் செய்த பிறகும் இதுவரை அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
பாபர் மஸ்ஜிதை முன் நின்று இடித்த அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, அசோக் சிங்கால் உள்ளிட்ட யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமானவை என்பது குறிப்பிடத்தக்கது.
நிலைமை இவ்வாறிருக்க, ஒரு வாக்குமூலத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு முறையாக எந்த விசாரணையும் நடத்தாமல் கேரள மக்களின் பேராதரவு பெற்ற ஒரு அரசியல் தலைவரை கர்நாடக பா.ஜ.க. அரசு கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் வஞ்சமாக சிக்கவைக்கப்பட்டு பல ஆண்டுகளாக சிறையில் வாடி சித்திரவதைப்பட்டு உடல்நலம் சிதைந்து சிகிச்சை பெற்று வரும் மதானியை மனிதநேயமற்ற முறையில் மறுபடியும் கைது செய்திருப்பது பா.ஜ.க.வின் வக்கிர குணத்தைக் காட்டுகின்றது.

அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து அப்துல் நாசர் மதானியை கைது செய்துள்ள கர்நாடக பா.ஜ.க. அரசையும் அதற்கு உறுதுணையாக செயல்பட்ட கேரளா அரசையும் தமுமுக வன்மையாக கண்டிக்கிறது.
ரெட்டி சகோதரர்களின் ஊழல் காரணமாக சந்தி சிரித்து நிற்கும் கர்நாடக பா.ஜ.க. அரசு மக்களின் கவனத்தை திசைத் திருப்புவதற்காகவே மதானி கைது நாடகத்தை அரங்கேற்றியுள்ளது. இதற்கு துணை நின்றுள்ளத கேரள மாநில இடதுசாரி அரசு.
பெங்களூரு வழக்கில் கைதுச் செய்யப்பட்டுள்ள மதானி குஜராத் வழக்கு ஒன்றிலும் சேர்க்கப்பட்டு குஜராத் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்படுவார் என்றும் தெரிய வருகின்றது. கர்நாடகம் மற்றும் குஜராத் பா.ஜ.க. அரசுகளின் இந்த சதித்திட்டங்களுக்கு துணைப் போகும் வகையில் கேரளவை ஆளும் இடதுசாரி அரசும் மதானி கைதுச் செய்யப்படுவதற்கு துணை நின்றிப்பது வெட்ககேடானதாகும்.


நன்றி- tmmk .in

Tuesday, August 17, 2010

ஷார்ஜா மண்டலத்தில் புதிய கிளை


கடந்த 14.08.2010 அன்று ஷார்ஜா மண்டல ரோலா கிளை (மு.மு.க) புதிய துவங்கப்பட்டது.இந்நிகழ்ச்சிக்கு மனிதநேய மக்கள் கட்சியின் தமிழ் மாநில துணைப் பொதுச் செயளாளார் எம். தமிமுன் அன்சாலி துவங்கி வைத்தார்.

மண்டலத் தலைவர் நெல்லிக்குப்பம் இக்பால் மற்றும் மண்டல நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் எம்.தமீமுன் அன்சாரி புதிய நிர்வாகிகளின் எதிர்காலச் செயல் திட்டம் மற்றும் நிர்வாகச் செயல்பாடுகளை எவ்வாறு அமைப்பது என புதிய நிர்வாகிகளுக்கு எடுத்துரைத்தார்.

தலைவராக அக்பர் பாஷா (கள்ளக் குறிச்சி) செயளாளராக செய்யது ஷகீல் (கள்ளக்குறிச்சி), பொருளாளராக சர்புதீன் (லெப்பைக்குடிக்காடு)-, துணைத்தலைவராக யூசுப் தீன் (அடியக்க மங்களம்), து.செயளாலராக ரசூல் மைதீன் (கடைய நல்லூர்) மக்கள் தொடர்பாளராக தீன் முஹம்மது (தோப்புத்துறை) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

Sunday, August 15, 2010

தமுமுக செயலாளரை கொல்ல முயற்சி

தமுமுக துபை மண்டலம தவ்ஹீத் எழுச்சி மாநாடு " நடைபெற உள்ளத

வரும் 20.08.2010, வெள்ளிக் கிழமை அன்று இரவு 8 மணிக்கு ராசல் கைமா அல் நக்கில் - சபிர் மார்கெட் அருகில்,வீனஸ் ரெஸ்டாரெண்ட் அரங்கத்தில்
" தவ்ஹீத் எழுச்சி மாநாடு " நடைபெற உள்ளது.
மக்கள் உரிமை பத்திரிகை ஆசிரியர் சகோ. தமீமுன் அன்சாரி
அவர்களும்,தமுமுக தலைமைக் கழகப் பேச்சாளர் மௌலவி சிவகாசி முஸ்தபா அவர்களும் சிறப்புரையாற்றுகிறார்கள்.

ஊழலை வீழ்த்த சூளுரை ஏற்போம் தமுமுக தலைவர் கொடியேற்றி சுதந்திர தின சிறப்புரை

தமுமுக தலைமையகத்தில் தமுமுக தலைவர் பேரா. எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ் கொடியேற்றி சுதந்திர தின சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
இந்திய திருநாடு வெள்ளையர்களிடமிருந்து விடுதலைப் பெற்ற 64வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்நன்நாளில் இந்திய மக்கள் அனைவருக்கும் தமுமுக விடுதலை திருநாள் வீர வாழ்த்துக்களை தெரிவிக்கிறது. விடுதலை என்ற விருட்சகத்திற்கு நம் முன்னோர்களின் வீர, தீர தியாகங்கள் தான் விதையாக இருந்தது. விடுதலையின் நிழலில் இருக்கும் நாம் அந்த தியாகங்களின் நினைவுகளை போற்ற வேண்டும் அவர்களின் நோக்கம் சிதையாமல் பாதுகாக்க வேண்டும் அடிமை இருளை விரட்டுவதற்க்காவும் தேச விடுதலைக்காவும், தீரர்கள் ஏற்றிய தியாக சுடரில் சாதி மத பேதங்கள் சாம்பலாகி இருக்க வேண்டும்.

மாறாக, அடிமை இருட்டை விரட்டிய நாம் இன்னும் அறியாமை இருட்டை விரட்டவில்லை. அறியாமை என்ற அபாய நோயினால் மக்கள் மனங்களில் மதவெறி, ஜாதி வெறி போன்ற மனித விரோத குணங்கள் குடி கொள்ள தொடங்குகின்றன. மதியை புதைக்கும் மதுவால் மனிதன் போதையின் அடிமையாகி புழுதியில் புரழ்கிறான், லஞ்சமும் ஊழலும் நம் நெஞ்சை பதர வைக்கின்றன.

இன்றைய இந்தியாவில் நாம் காணும் காட்சி ஜனநாயக்கத்தின் உயிர் நாடியான தேர்தலில் கூட ஊழல் புகுந்து உலுக்குகிற கொடுமை.

மனித உரிமைகளின் சமாதி பூமியாக காஷ்மீர், பன்னாட்டு நிறுவனங்களால் சூரையாடப்படும் உள்நாட்டு தொழில்கள் இவை எல்லாம் பெற்ற விடுதலையை நாம் போற்றி பேணாததன் விளைவுகள் ஆகும்.

அரிய தியாகங்களின் பயனாய் கிடைத்த விடுதலையின் 64 வது ஆண்டில் நாம் ஏற்க வேண்டிய சூளுரையாவன:- பெற்ற விடுதலையை முறையாக பேணிக் காப்போம். ஊழலை பொது வாழ்விலிருந்து நீக்குவோம். மது மற்றும் மதவெறியினை மாய்த்திடுவோம். வெல்க நாடு! வீர வாழ்த்துகள்! இவ்வாறு அவர் உரையாற்றினார்.

அப்போது துறைமுக பகுதி தமுமுகவினர், தலைமைக் கழக ஊழியர்களும் மக்கள் உரிமை ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

Thursday, August 12, 2010

முமுகவின் மாபெரும் இஸ்லாமிய மற்றும் சமுதாய சொற்ப்பொழிவு நிகழ்ச்சி

இந்த நிகழ்ச்சி நமது முமுகவின் www.tmmkdubai.tk இணையதளத்தில் மற்றும் www.tmmktv.tk ஆகியவற்றில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

Wednesday, August 11, 2010

தேர்தல் வன்முறைகளைக் கண்டித்து திருச்சியில் ஆர்ப்பாட்டம்




திருச்சி மாநகராட்சி இடைத்தேர்தலில் நடைபெற்ற தேர்தல் வன்முறைகளைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் அப்துல் ஹக்கிம் தலைமை வகித்தார்.


பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி கண்டன உரையாற்றினார். மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

Tuesday, August 10, 2010

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை கெட்டுப் போய் விட்டது - ஹைதர் அலி

தென்காசி: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை கெட்டுப் போய் விட்டது என்று கூறியுள்ளார் தமுமுக மாநில பொதுச் செயலாளர் ஹைதர் அலி.தென்காசியில் த.மு.மு.க.வின் மாநில பொதுச் செயலாளர் ஹைதர் அலி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. குற்றம் செய்தவர்களுக்கு பதிலாக பாதிக்கப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்வதும், குற்றவாளிகளை தப்பிக்க வைக்கும் பேரமும் நடந்து வருகிறது. மேலும் காவல்துறை மிகவும் கேவலமாக உள்ளது. பல முஸ்லீம்கள் கொலை செய்யப்பட்டும் சி.பி.சி.ஐ.டி. விசாரணை முடிந்த பின்பும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இவைகளை வலியுறுத்தியும், த.மு.மு.க.வினர் மீது வேண்டுமென்றே பல்வேறு சம்பவங்களில் தொடர்பு படுத்தி வழக்குப் பதிவு செய்ததை கண்டித்தும் வரும் செப்டம்பர் மாதம் 15-ம் தேதி நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் நோக்கி கோரிக்கை பேரணி தடையை மீறி நடத்துவோம். நெல்லை காவல்துறை கண்காணிப்பாளர் சட்டம் ஒழுங்கை மீறும் விதமாக செயல்பட்டு வருகிறார் என்பதை கூடன்குளம் ஐ.பி. கண்காணித்து வருகிறது.

Monday, August 9, 2010

ரமலான் சிறப்பு


ஷார்ஜா மண்டலம் சார்பாக மாபெரும் ரமலான் சிறப்பு மாநாடு நடைபெற உள்ளது

முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் ஷார்ஜா மண்டலம் சார்பாக இன்ஷா அல்லாஹ் வரும்13.08.2010, வெள்ளிக் கிழமை அன்று மாலை 4 மணிக்கு பிலிப்பைன்ஸ் பள்ளி வளாகத்தில் மாபெரும் ரமலான் சிறப்பு மாநாடு நடைபெற உள்ளது.மனிதநேய மக்கள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும், மக்கள் உரிமை பத்திரிகை ஆசிரியருமான சகோ. தமீமுன் அன்சாரி அவர்களும், தமுமுக-வின் தலைமைக் கழகப் பேச்சாளர் மௌலவி சிவகாசி முஸ்தபா அவர்களும் சிறப்புரையாற்றுகிறார்கள்.நிகழ்ச்சியில் கலந்துக் கொள்பவர்களுக்கு நோன்பு துறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Saturday, August 7, 2010

துபை மண்டல முமுகவின் மாதாந்திர செயற்க்குழு


எல்லாம் வல்ல அல்லாஹ்வின் வற்றாத கருணையால்,கடல் கடந்தும் சேவை செய்யும் தமுமுகவின் கிளையான முஸ்லீம் முன்னேற்றக் கழகம் துபை மண்டலத்தின் மாதாந்திர செயற்க்குழு 05-08-2010 அன்று வியாழன் இரவு 10:30 மணிக்கு மண்டலத்தின் தலைவர் சகோ.மதுக்கூர் அப்துல் காதர் தலைமையில் நடைப்பெற்றது.
தாயகத்தில் இருந்து வருகை தந்துள்ள தமுமுக தலைமைக் கழக பேச்சாளர் சகோ.சிவகாசி முஸ்தஃபா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு செயல்கள் அனைத்தும் அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தை நாடி செய்ய வேண்டும் என்று உரை நிகள்த்தினார்கள். மேலும் தலைமைக் கழக செயல்பாடுகள் குறித்தும் விளக்கினார்கள். இச்செயர்க் குழுவில் வரக்கூடிய ரமளான் மாதத்தில் முமுகவின் மார்க்கப் பணி மற்றும் சமுதாயப் பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இராமநாதபுரம் மாவட்ட தமுமுகவிற்கு மாவட்ட ஆட்சியர் விருது

இராமநாதபுரம் மாவட்ட தமுமுகவிற்கு மாவட்டத்திலேயே அதிகமான இரத்ததான முகாம் நடத்தியதைப் பாராட்டி இராமநா தபுர மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் விருது வழங்கினார்.
இவ்விருதினை ம.ம.க மாவட்டச் செயலாளர் சலிமுல்லாஹ்கான் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் அன்வர் அலி, நகரச் செயலாளர் பரக்கத்துல்லாஹ், ரத்த வங்கி பொறுப்பாளர் டாக்டர். சகாய ஸ்டிபன் ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Friday, August 6, 2010

இலவச பொது மருத்துவ முகாம் இடம்: ராமநாதபுரம்

வருகின்றே 8/8/2010 அன்று ராமநாதபுரம் தமுமுக உடன் மதுரை அப்போலோ மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெறும் இலவச பொது மருத்துவ முகாம் இடம்: ராமநாதபுரம் இவன்: ராமதபுரம் தமுமுக

இந்தியாவில் முதல் முஸ்லிம் தலைமை தேர்தல் ஆணையர்!


இந்தியாவின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஷஹாபுத்தீன் யாகூப் குரைஷி குடியரசுத் தலைவரால் அறிவிக்கப்பட்டிருக்கிறார். இந்தியாவில் முதல் முதலாக முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்தவர் ஒருவர் தலைமை தேர்தல் ஆணையர் ஆகியுள்ளார். 63 வயதான இவர் டெல்லியைச் சேர்ந்தவர். 1947 ஜூலை 11ஆம் தேதி பிறந்த இவர் 1971 ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் தேர்வில் தேறினார்.வரலாற்றில் முதுகலை பட்டம் பெற்ற குரைஷி பாரசீகம், அரபி, ஜெர்மன் மொழிகளில் சிறந்த புலமை மிகுந்தவர்.மக்கள் தொகை, பெண்கள், குழந்தைகள் மற்றும் வயதுக்கு வந்த இளம் தலைமுறையினர் சந்திக்கும் பிரச்சினைகளை தீவிர ஆய்வு செய்தவர். ஐக்கிய நாடுகள் அவையின் பல்வேறு சமூக நல அமைப்புகளோடு சிறந்த தொண்ட £ற்றியவர். தொடர்பியல் மற்றும் சமூக சந்தை என்ற பிரிவில் இவர் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். பல நூல்களையும் எழுதியுள்ளார்.புற்றீசல் போல் பெருகிவரும் புதிய கட்சிகள் குறித்து கவலை தெரிவித்த குரைஷி “அரை மணி நேரத்திற்கு ஒரு கட்சி தொடங்கப்படுகிறது. சில கட்சிக ளுக்கு தலைமையகமே இல்லை. சில கட்சிகள் டீக்கடைகளில் இயங்கு வதாக குறிப்பிட்டவர், இத்தகைய கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் அதிகாரம் தங்களுக்கு வழங்கப்பட வேண்டும்“ என்றார்.

அஇஅதிமுக பொதுச் செயலாளர் மற்றும் முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களை மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் இன்று சந்தித்துப் பேசினர்.

அஇஅதிமுக பொதுச்செயலாளர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களை சந்திக்க வருமாறு அஇஅதிமுகவின் தலைமை நிலையம் சார்பில் முன்னாள் அமைச்சர் கே. செங்கோட்டையன் தமுமுகவின் தலைவரும் மனிதநேய மக்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்விடம் வேண்டுகோள் விடுத்தார். இதனை தொடர்ந்து கடந்த ஜுலை 30 அன்று மனிதநேய மக்கள் கட்சியின் உயர்நிலை குழுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் அஇஅதிமுகவின் வேண்டுகோளை ஏற்று முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவை மரியாதை நிமித்தமாக சந்திப்பது என்று தீர்மாணிக்கப்பட்டது.
இன்று ஆகஸ்ட் 5 அன்று மாலை 3 மணிக்கு போயஸ் தோட்டத்தில் உள்ள முன்னாள் முதல்வரின் இல்லத்தில் எதிர்கட்சி தலைவருமான அஇஅதிமுக பொதுச் செயலாளர் செல்வி ஜெ.ஜெயலலிதாவை மனிதநேய மக்கள் கட்சியின் நிர்வாகிகள் பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் தலைமையில் தமுமுக பொதுச் செயலாளர் எஸ்.ஹைதர் அலி, மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது, தமுமுக பொருளாளர் ஒ.யூ.ரஹ்மதுல்லாஹ், மனிதநேய மக்கள் கட்சியின் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரஷீத் ஆகியோர் சந்தித்தனர்.


அரை மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து கருத்து பறிமாறிக் கொண்டனர். அனைத்திந்திய அளவில் சிறுபான்மை மக்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க பரிந்துரைத்துள்ள நீதயரசர் ரங்கநாத் மி்ஸ்ரா ஆணையத்தின் அறிக்கையை உடனடியாக செயல்படுத்த மத்திய அரசை அஇஅதிமுக வலியுறுத்த வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் அஇஅதிமுக பொதுச் செயலாளரிடம் கோரி்க்கை விடுத்தனர்

Thursday, August 5, 2010

தமுமுக துபை மண்டலம் அல்-அய்னில் இரத்த தான முகாம்


கடல் கடந்து வாழ்ந்த போதிலும் என் கடன் பணி செய்து கிடப்பதே.. என்று சத்திய மார்கத்தின் வழிகாட்டுதலில் வீறு நடை போட்டுக் கொண்டிருக்கும் தமுமுக ஊழியர்கள்,தமிழகத்திற்கு வெளியேயும் வெளிநாடுகளிளும் ஆற்றி வரும் மக்கள் நலப் பணிகள் எண்ணிலங்காதவை..வட்டியில்லாக் கடனுதவித் திட்டத்தில் சிறந்த சேவையாற்றி வரும் அல்-அய்ன் மண்டல முஸ்லிம் முன்னேற்றக் கழகம்,தற்போது இரத்த தான சேவையைத் தொடங்கியுள்ளது. கடந்த 29-07-2010 வியாழனன்று மாலை 5 மணி தொடங்கி அல்-அய்ன் மண்டல இரத்த வங்கியை நோக்கி தமுமுக தொண்டர்கள் அணிவகுக்கத் தொடங்கினர். இரத்த சேமிப்பு கொள்ளளவை கருத்தில் கொண்டு குறைந்த அளவில் மட்டும் இப்போதைக்கு வழங்கினால் போதுமென்று அதிகாரிகள் கேட்டுக் கொண்டதால், 24 சகோதரர்கள் தங்தளது இரத்தத்தை தானமாக வழங்க முன் வந்தனர்.மாலை 5 மணி தொடங்கி இரவு 8 மணி வரை நடைபெற்ற முகாமை அமீரக மு.மு.க வின் துணை செயலாளர் டாக்டர் அப்துல் காதர் தொடங்கி வைத்தார்.அமீரக மு.மு.க செயலாளர் சகோதரர் யாஸீன் நூருல்லாஹ்வின் ஆலோசனையின் பேரில் மண்டல தலைவர் கொள்ளுமேடு முஹம்மது ரிஃபாயி,மண்டல செயலாளர் மண்னை ஹாஜா மைதீன்,மண்டல துணைச் செயலாளர் அதிரை அப்துல் ரஹ்மான்,மண்டல இணைச் செயலாளர்கள் களப்பால் சையது யூசுஃப்,விழுப்புரம் முஜிபுர்ரஹ்மான்,மண்டல நிர்வாகக் குழு உறுப்பினர் காட்டுமன்னார்குடி அஸ்கர் அலி ஆகியோர் முகாமை சிறப்பான முறையில் ஒருங்கிணைத்தனர்.இரத்த வங்கியில் உதவியாளராக பணிபுரியும் தமிழக இளைஞர் மருதன்,தமிழர்கள் ஒன்று திரண்டு இரத்த தானம் செய்வது பாராட்டுக்குரியது என்று கூறிய அவர்..உண்மையில் நல்லதோர்இயக்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறீர்கள் என்று நெகிழ்ச்சியுடன் குநிப்பிட்டார்.இனி தொடர்ந்து இரத்த தான முகாம்கள நடத்தப் போவதாக மண்டல நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.புகழனைத்தும் இறைவனுக்கே..!
கொள்ளுமேடு பை.மு.ரிஃபாயிஅல்-அய்ன்

துபை முமுகவின் ரமலானை வரவேற்ப்போம் இஸ்லாமிய




Wednesday, August 4, 2010

உங்களது வாக்கை டாக்டர் எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ், தலைவர் தமுமுக,அவர்களுக்கு அளித்திடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.


சமுதாயச் சொந்தங்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

இதில் உள்ள இணைப்பை http://twocircles.net/polls/tcn_person_year_2010.html
கிளிக்கி அதில் வரும் பக்கத்தில் உங்களது வாக்கை டாக்டர் எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ், தலைவர் தமுமுக,அவர்களுக்கு அளித்திடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Tuesday, August 3, 2010

300 ஆண்டுகள் பழமையான பள்ளிவாசல் ஆற்காட்டில் மீட்பு

மீட்கப்பட்ட பள்ளிவாசலில் உரையாற்றும் ம.ம.க அமைப்புச் செயலாளர் நாசர் உமரி



வேலூர் மாவட்டம் ஆற்காட்டில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பள்ளிவாசலை தமுமுக 01.08,2010 அன்று அதிரடியாக மீட்டது. அன்று மாலை அஸர் தொழுகையில் இருந்து தொடர்ச்சியாக தொழுகைகள் நடைபெற்று வருகின்றன. 20 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்தப் பள்ளியை சுற்றி குடியிருப்புகளும், பள்ளிகூடம் போன்றவற்றை ஜமாத்தார்களின் உதவியுடன் அமைப்பதற்கான முயற்சிகளை தமுமுக தற்போது எடுத்து வருகின்றது. தமுமுகவினரின் பள்ளிவாசல் மீட்புபணிகள் தமிழகம் முழுக்க செயல்படும் ஜமா அத்துக்களால் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.