Monday, March 28, 2011

தேர்தல் பிரச்சாரம் நடைபெறும் இடங்களும் பேச்சாளர்களின் விபரமும்




சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி அணைத்துக்கட்சி ஊழியர்கள் கூட்டம்



சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் மமக வேட்பாளர் எம்.தமிமுன் அன்சாரியை ஆதரித்து கூட்டணிக்கட்சிகளின் ஊழியர் கூட்டம் நடைப்பெற்றது.


அதில் அதிமுக, தேமுதிக மாவட்ட நிர்வாகள், மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட், புதிய தமிழகம், மூவேந்தர் முன்னனி கழகம் உள்ளிட்டகட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துக்கொண்டுனர். இதில் தேர்தல் பிரச்சார வியூகம்கள் பற்றி ஆலோசிக்கப்பட்டது. தொகுதி முழுவதும் பிரச்சாரத்தை முடுக்கிவிட்டு வெற்றிக்காக உழைப்பது என முடிவேடுக்கப்பட்டது.

Sunday, March 27, 2011

கீழக்கரை நகர் சார்பாக 26 /03 /2010 அன்று நடத்த உழியர் கூட்டம் துக்கு.

கீழக்கரை நகர் சார்பாக 26 /03 /2010 அன்று நடத்த உழியர் கூட்டம் துக்கு. இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் மமக வேட்பாளர் பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லாவை ஆதரித்து கீழக்கரை நகர் அதிமுக மற்றும் மமக கூட்டணிக்கட்சிகளின் ஊழியர் கூட்டம் நடைப்பெற்றது இதில் முழுவதும் பிரச்சாரத்தை தொடக்குவது தேர்தல் பிரச்சார வியூகம்கள் பற்றி ஆலோசிக்கப்பட்டது. .அதில் அதிமுக சிறுபான்மைபிரிவு செயலாளர் அன்வர் ராஜா தேமுதிக நகர் நிர்வாகள், மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட், புதிய தமிழகம், மூவேந்தர் முன்னனி கழகம் உள்ளிட்டகட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துக்கொண்டுனர்.

ஆம்பூர் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்



வேலூர் மாவட்டம் ஆம்பூர் சட்டமன்ற தொகுதி மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் ஏ.அஸ்லம் பாஷா 25.03.2011 மதியம் வேட்புமனு தாக்கல் செய்தார். மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் ப.அப்துல் சமது தலைமையில் பேரணியாக சென்று வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். மனுதாக்கலின் போது அதிமுக மற்றும் கூட்டணிக்கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Saturday, March 26, 2011

தி.மு.க. ஆட்சியில் பல ஆயிரம் கோடி ரூபாய் மணல் கொள்ளை: ஜவாஹிருல்லா


ராமநாதபுரம், மார்ச் 24: கருணாநிதி ஆட்சிக் காலத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் மணல் கொள்ளை நடந்திருப்பதாக மனித நேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவரும், ராமநாதபுரம் தொகுதி வேட்பாளருமான எம்.ஹெச். ஜவாஹிருல்லா வியாழக்கிழமை தெரிவித்தார். ராமநாதபுரத்தில் அதிமுக-வின் கூட்டணிக் கட்சியான மனித நேய மக்கள் கட்சி சார்பில் அக் கட்சியின் மாநிலத் தலைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லா போட்டியிடுகிறார். ராமநாதபுரத்தில் கூட்டணிக் கட்சிகள் சார்பில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டத்துக்குப் பின்னர் அவர் மேலும் பேசியதாவது: தமிழகத்தில் திமுக ஆட்சிக் காலத்தில் இலவச கலர் டி.வி. முழுமையாக வழங்கப்படவில்லை. மின்வெட்டு காரணமாக டி.வி.யை யாரும் பார்க்கவே முடியவில்லை. ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசியைத் தருகிறோம் என்று சொல்லி விட்டு காய்கறிகள், பலசரக்கு சாமான்களும் வாங்க முடியாத அளவுக்கு விலைவாசி உயர்ந்திருக்கிறது. ஸ்பெக்டரம் ஊழல் தமிழக மக்களுக்கு உலக அளவில் மிகுந்த தலைக்குனிவை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழக மீனவர்களைக் காப்பாற்ற காங்கிரஸ், திமுக அரசு தவறி விட்டது. 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கொல்லப்பட்டிருக்கும் வகையில் இந்திய கடற்படை வலிமையிழந்து மீனவர்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டது. கச்சத் தீவை மீட்பதுதான் எங்களது முக்கியக் கோரிக்கையாகும். தமிழகத்தில் கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சியில் பல ஆயிரம் கோடிக்கு மணல் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. ராமநாதபுரத்தில் பாதாளச் சாக்கடைத் திட்டம், காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டம் ஆகியன முறையாகச் செயல்படுத்தப்படவில்லை. ராமநாதபுரத்தில் கடல் சார்ந்த தொழிற்சாலை அமைக்கப்படும். சீர்கேடாக இருக்கும் ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனை சீர்படுத்தப்படும். அரசே கேபிள் டி.வி. நடத்தும் என ரூ. 100 கோடி நிதி ஒதுக்கி அந் நிதி முழுமையாகச் செயல்படுத்தப்படாமல் பாழாகிப் போய் விட்டது. அதற்காக நியமிக்கப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரியும் திமுக ஆட்சிக் காலத்தில் பழிவாங்கப்பட்டுள்ளார் என்றார் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா. பேட்டியின் போது, அதிமுக-வின் மாவட்டச் செயலாளர் கே.சி.ஆணிமுத்து, முன்னாள் அமைச்சர் அ.அன்வர்ராஜா, மனித நேய மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் சலிமுல்லாகான், செய்தித் தொடர்பாளர் பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

dinamani

பேரா.டாக்டர்.ஜவாஹிருல்லாஹ் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.





இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் வேட்பாளர் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் பேரா.டாக்டர்.ஜவாஹிருல்லாஹ் போட்டியிடுகின்றார். இராமநாதபுரம் அரண்மனையில் இருத்து பேரணியாகப் புறப்பட்டு இராமநாதபுரம் RDO அலுவலகத்தில் தேர்தல் பொறுப்பாளர் ˜†‰hUWÂP• அவர்களிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.


கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் வரவேற்புடன். அதிமுக-வின் மாவட்டச் செயலாளர் கே.சி.ஆணிமுத்து, முன்னாள் அமைச்சர் அ.அன்வர்ராஜா, தமுமுக துணைப் பொதுச் செயலாளர் ஜ.ச ரிபாய் மனித நேய மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் சலிமுல்லாகான், அவர்களிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

Friday, March 25, 2011

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி ம.ம.க வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்




சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் துணைப் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி போட்டியிடுகின்றார். சென்னை அண்ணாசாலையில் உள்ள மக்கா மஸ்ஜித் பள்ளிவாசலில் ஜும்மா தொழுதுவிட்டு தமுமுக பொதுச் செயலாளர் செ.ஹைதர் அலி தலைமையில் பேரணியாகப் புறப்பட்டு சிந்தாதிரிப்பேட்டையில் சென்னை மாநகர குடிநீர் மற்றும் கழிவுநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் தேர்தல் பொறுப்பாளர் பாஸ்கரன் அவர்களிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
அ.தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் வரவேற்புடன் மனிதநேய மக்கள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி இன்று பகல் 3 மணியளவில் மனு தாக்கல் செய்தார்.


இராமநாதபுரம் தொகுதி அணைத்துக்கட்சி ஊழியர்கள் கூட்டம் - தொண்டர்கள் உற்சாகம்


இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் மமக வேட்பாளர் பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லாவை ஆதரித்து அதிமுக கூட்டணிக்கட்சிகளின் ஊழியர் கூட்டம் நடைப்பெற்றது.அதில் அதிமுக சிறுபான்மைபிரிவு செயலாளர் அன்வர் ராஜா தேமுதிக மாவட்ட நிர்வாகள், மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட், புதிய தமிழகம், மூவேந்தர் முன்னனி கழகம் உள்ளிட்டகட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துக்கொண்டுனர். இதில் தேர்தல் பிரச்சார வியூகம்கள் பற்றி ஆலோசிக்கப்பட்டது. தொகுதி முழுவதும் பிரச்சாரத்தை முடுக்கிவிட்டு வெற்றிக்காக உழைப்பது என முடிவேடுக்கப்பட்டது.

Wednesday, March 23, 2011

ம.ம.க. வேட்பாளர்கள் விவரக் குறிப்புகள் & Photos

பேரா.எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் (வயது 51)



மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக இராமநாதபுரம் சட்டமன்ற வேட்பாளராக பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் அறிவிக்கப்பட்டுள்ளார். எம்.பி.ஏ. எம்.பில் படித்து வாணியம்பாடி இஸ்லாமியா கல்லூரியில் 25 ஆண்டுகாலம் பேராசிரியராகப் பணியாற்றிய ஜவாஹிருல்லாஹ் வட்டியில்லா வங்கி குறித்த ஆய்விற்காக சென்னை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.


தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் பிறந்த பேராசிரியர் மாணவர் பருவம் முதல் பொதுப்பணியில் ஈடுபட்டு வருகிறார்.

1996 ஆம் ஆண்டு முதல் த.மு.மு.க வின் தலைவராக பணியாற்றி வரும் பேராசிரியர் மனிதநேய மக்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றி வருகிறார்.

1996ம் ஆண்டு முதல் சட்டமன்ற மற்றும் நாடாளுமனற தேர்தலில் கூட்டணிக் கட்சிகரக்காக பிரச்சாரம் செய்த பேராசிரியர் 2009ல் மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக போட்டியிட்டார்.

ஏராளமான நூல்கள் மற்றும் கட்டுரைகளை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியுள்ள பேராசிரியர் 2007ல் ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இந்திய சிறுபான்மை மக்கள் சார்பாக ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்தார்.

இங்கிலாந்து, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், குவைத், மலேசியா, மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் பல்வேறு மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகளில் உரையாற்றியுள்ளார்.

தற்போது தனியார் கல்லூரியில் உயர் கல்வி ஆலோசகராகப் பணிபுரிந்து வருகிறார்.

எம்.தமிமுன் அன்சாரி (வயது 34)


1995 முதல் தமுமுகவின் தீவிர தொண்டராக அறிமுகமானார். தமுமுக வின் மாணவரணியை உருவாக்கி அதன் தலைவராக திறம்பட செயல்பட்டார். சென்னை புதுக்கல்லூரியில் பயிலும் போது, 1997&ல் சென்னை புதுக்கல்லூரியின் மாணவர் பேரவை தேர்தலில் போட்டியிட்டு செயலாளராக வெற்றி பெற்றார்.

2001&ல் தமுமுகவின் மாநில செயலாளராக பணி உயர்வு பெற்று செயல்பட்டார். 2009ல் மனிதநேய மக்கள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார்.

சிறந்த மேடைப் பேச்சாளர், கவிஞர், கட்டுரையாளர், பத்திரிக்கையாளர், நிர்வாகி என பன்முகத்தன்மை கொண்ட இவர் 34 வயதே நிரம்பியவர்.

ஹாங்காங், தாய்லாந்து, சிங்கப்பூர், மலேஷியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், குவைத் நாடுகளில் நடைபெற்ற மாநாடுகளிலும், கருத்தரங்குகளிலும் இயக்கத்தின் சார்பில் பங்கேற்றுள்ளார். இயக்கப்பணியை கட்டமைப்பதில் தீவிர ஆர்வம் கொண்ட இவர் தனது 14 வயதில் பொதுவாழ்வில் ஆர்வம் காட்டினார். 1990 முதல் பொதுவாழ்வில் ஈடுபடும் இவருக்கு 21 ஆண்டுகால சேவை அனுபவம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மக்கள் உரிமை வார இதழின் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார். சென்னை புதுக்கல்லூரியில் பி.எ.சி.எஸ் இளங்கலை பட்டம் முடித்த இவர், தற்போது சென்னை பல்கலைக்கழக்கத்தில் எம்.ஏ.அரசியல் விஞ்ஞானம் பயின்று வருகிறார்.

ஏ.அஸ்லம் பாஷா (வயது 42)


மனிதநேய மக்கள் கட்சியின் ஆம்பூர் வேட்பாளராக ஏ.அஸ்லம் பாஷா நிறுத்தப்பட்டுள்ளார். ஆம்பூர் அருகே உள்ள புதூர் கிராமத்தைச் சேர்ந்த இவர் பிளாஸ்டிக் பைகள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். பி.ஏ(சி.எஸ்) படித்த அஸ்லம் பாஷா த.மு.மு.கவில் 2004 முதல் செயல்பட்டு வருகிறார்.

2006ல் மாவட்ட துணைச் செயலாளராகவும், 2007 ல் மாவட்ட செயலாளராகவும், 2009 முதல் வேலூர் (மேற்கு) மாவட்ட தலைவராகவும் செயல்பட்டு வருகிறார்.

மனித உரிமைகளில் மிகுந்த நாட்டம் கொண்ட அஸ்லம் பாஷா அப்பகுதியில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகப் போராடி வருகிறார். தமிழ், உருது மற்றும் ஆங்கிலத்தில் பேசக்கூடிய ஆற்றல் பெற்றுள்ளார்.

Tuesday, March 22, 2011

ம.ம.க. வேட்பாளர்களை ஆதரித்து ஜெயலலிதா-விஜயகாந்த் பிரசாரம்: வேட்பாளர் ஜவாஹிருல்லா தகவல்

சென்னை, மார்ச். 22-
அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள மனிதநேய மக்கள் கட்சிக்கு சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி, ஆம்பூர், ராமநாதபுரம் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரத்தில் மனித நேய மக்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஜவாஹி ருல்லா, சேப்பாக்கத்தில் மாநில துணை பொது செயலாளர் தமிமுன் அன்சாரி, ஆம்பூரில் வேலூர் மேற்கு மாவட்ட தலைவர் அஸ்லாம் பாட்சா ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதனை மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் ஹைதர் அலி நேற்று மாலை அறிவித்தார்.
இது தொடர்பாக அவர் கூறும்போது, மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் 3 பேரும் பட்டதாரிகள். ஜவாஹிருல்லா முனைவர் பட்டம் பெற்றுள்ளார். தேர்தலில் இவர்கள் வெற்றி பெற்று சிறப்பாக மக்கள் பணியாற்றுவார்கள் என்றார். பின்னர் ராமநாதபுரம் தொகுதி ம.ம.க. வேட்பாளர் ஜவாஹிருல்லா நிருபர்களிடம் கூறியதாவது:-
சட்டமன்ற தேர்தலில் விலைவாசி உயர்வு போன்ற மக்கள் பிரச்சினைகளை முன் நிறுத்தி பிரசாரம் செய்வோம். தேர்தலில் வெற்றி பெற்று தொகுதியிலேயே தங்கி இருந்து மக்கள் பணி யாற்றுவோம். அ.தி.மு.க. கூட்டணி தேர்தலில் அமோக வெற்றி பெறும். மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலா ளர் ஜெயலலிதா, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ஆகியோர் பிரசாரம் செய்ய உள்ளனர்.
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தேர்தல் புறக்கணிப்பை மறு பரிசீலனை செய்யவேண்டும். இலங்கை தமிழர், மீனவர்கள் பிரச்சினைக்காக குரல் கொடுத்து வரும் அவர் மீண்டும் அ.தி.மு.க. கூட்டணிக்கு வரவேண்டும்.
இவ்வாறு ஜவாஹிருல்லா கூறினார்.

news by: malaimalar.com

Monday, March 21, 2011

மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு:-

1)ராம நாதபுரத்தில் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் பேரா டாக்டர் எம் ஹெச் ஜவாஹிருல்லாஹ்

2)மனித நேய மக்கள் கட்சியின் ஆம்பூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சகோதரர் அஸ்லம்பாஷா அவர்கள்

3)மனித நேய மக்கள் கட்சியின் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சகோதரர் எம். தமிமுன் அன்சாரி, அவர்கள்

மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு

அதிமுக தலைமையிலான கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி

1)சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி,

2)ஆம்பூர்

3) இராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது.

இராமநாதபுரத்தில் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்,

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் எம். தமிமுன் அன்சாரி,

ஆம்பூரில் அஸ்லம் பாட்ஷா ஆகியோர் போட்டியிடுவார்கள்.

-ம.ம.க தலைமையகம்

Sunday, March 20, 2011

தமுமுக தலைமையகத்திற்கு சரத்குமார் வருகை


தமுமுக தலைமையகத்திற்கு இன்று (19-03-2011) மாலை அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் மற்றும் நிர்வாகிகள் வருகை புரிந்தனர். அவர்களை தமுமுக தலைவர் பேரா.எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ், பொதுச் செயலாளர் எஸ். ஹைதர் அலி, பொருளாளர் ஓ.யூ. ரஹ்மத்துல்லாஹ் மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் அப்துல் சமது ஆகியோர் மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர். இச்சந்திப்பின் போது அதிமுக தலைமையிலான கூட்டணியின் தேர்தல் வியூகங்கள் பற்றி விவாதிக்கப்பட்டன.

Saturday, March 19, 2011

மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு


அதிமுக தலைமையிலான கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகள்

1)சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி

2) ஆம்பூர்

3) இராமநாதபுரம்

Tuesday, March 15, 2011

திருச்சி மேற்கு சட்டமன்ற எழுச்சி பொதுக்கூட்டம் 12.03.2011 நடைபெற்றது


திருச்சி மேற்கு சட்டமன்ற எழுச்சி பொதுக்கூட்டம் 12.03.2011 சனிக்கிழமை மாலை திருச்சி மாநகர் 49 வது வார்டு சார்பாக நடைபெற்றது.கூட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் டாக்டர்.தமுமுக மாநில துணைச்செயலாளர்

Friday, March 11, 2011

மார்ச் 11 அன்று இரவு இஷா தொழுகைக்குப் பின் தமுமுக மர்க்கஸில் சகோதரர் நாகூர் செய்யத் அலி அவர்கள் உரை நிகழ்த்துகிறார்


அஸ்ஸலாமு அலைக்கும், இன்ஷா அல்லாஹ் மார்ச் 11 அன்று இரவு இஷா தொழுகைக்குப் பின் தமுமுக மர்க்கஸில் சகோதரர் நாகூர் செய்யத் அலி அவர்கள் உரை நிகழ்த்துகிறார் அனைவரும் வருக.

Thursday, March 10, 2011

குடோன்களில் பல ஆயிரம் கோடி ரூபாய் பதுக்கல்: மனித நேய மக்கள் கட்சி தலைவர் "பகீர்'

சென்னை: ""தமிழகம் முழுவதும் குடோன்களில், தி.மு.க.,வினர் பல ஆயிரம் கோடி ரூபாயை பதுக்கி வைத்துள்ளனர். இவற்றை தேர்தல் கமிஷன் கண்டறிந்து முடக்கினால் மட்டுமே இந்த தேர்தல் ஜனநாயக ரீதியில் நடைபெறும்,'' என, மனித நேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா கூறினார்.


இது குறித்து, மனித நேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா கூறியதாவது: தமிழக தேர்தல் அதிகாரி பிரவீன்குமாரின் நடவடிக்கைகள், பேச்சுக்கள், சட்டசபை தேர்தலை நடுநிலையாக நடத்த வேண்டும் என்று அவர் விரும்புவதை காட்டுகிறது. சமீபத்தில், குண்டல்பட்டியில் கூட அதிரடி வாகன சோதனைகள் நடத்தி, பல லட்சம் ரூபாய் பணத்தை கைப்பற்றியிருக்கின்றனர். தேர்தலை நடுநிலையாக நடத்த, தேர்தல் அதிகாரிகளின் பேச்சுக்கள், செயல் வடிவம் பெற வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள குடோன்களில், தி.மு.க.,வினர் பல ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை பதுக்கி வைத்துள்ளனர். இது, மத்திய, மாநில உளவுத் துறைகளுக்கு நன்றாகவே தெரியும். இந்த பணத்தைக் கொடுத்து வாக்காளர்களைக் கவர, தி.மு.க., நினைக்கிறது. தலைமை தேர்தல் கமிஷனர் இது குறித்து அதிரடி ஆய்வு நடத்தி, குடோன்களில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பணத்தை கைப்பற்ற வேண்டும். அப்போது தான், தேர்தல் கமிஷன் நினைக்கும் வகையில் தேர்தல் நடுநிலையாக நடக்கும். இவ்வாறு பேராசிரியர் ஜவாஹிருல்லா கூறினார்.

Wednesday, March 9, 2011

மதுக்கடையை மூடக்கோரி மதுரையில் மமகவினர் ஆர்ப்பாட்டம்

மதுரை : மதுரை மாட்டுத்தாவணி பள்ளிவாசல் அருகேயுள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி, நேற்று மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் இம்ரான் தலைமையில் 200 பேர் பங்கேற்றனர். இதன் காரணமாக, டாஸ்மாக் கடை மூடப்பட்டது. இதன்மீது சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தினர். யாரும் கைது செய்யப்படவில்லை. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

டாஸ்மாக் கடை பிரச்னைக்கு சமரசம்

மார்ச் 02,2011,

மதுரை : மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் எதிரே டாஸ்மாக் கடையை(5123) இடமாற்றம் செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

மதுவிலக்கு கூடுதல் துணைக் கமிஷனர் சுகுமாறன் தலைமை வகித்தார். மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் பள்ளிவாசல் அருகே அமைந்துள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும். டாஸ்மாக் மீது ஜமாத் ஐகோர்ட் கிளையில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. கோர்ட் தீர்ப்புக்கு கட்டுப்படுதல்; தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் நடந்த இருந்த போராட்டத்தை தற்காலிகமாக கைவிட முடிவு செய்யப்பட்டது. அண்ணாநகர் உதவி கமிஷனர் வானமாமலை, டாஸ்மாக் உதவி மேலாளர் ராஜாங்கம், த.மு.மு.க.,மாவட்டத் தலைவர் சிக்கந்தர், பொருளாளர் அப்துல் ரபி, நகர் தலைவர் ஷேக் இப்ராகிம் பங்கேற்றனர்.

Source: dinamalar

குவைத் தமுமுகவினரின் அவசரகால இரத்த தானம்

தமுமுக குவைத் மண்டலத்தின் அம்காரா கிளை பொருப்பாளரான திருச்சி மாவட்டம் கொளக்குடி முஹம்மது அலி ஜின்னா அவர்களின் அண்ணனும் தமுமுகவின் உறுப்பினருமாகிய சகோ. முஹம்மது காஸிம் அவர்களுக்கு பைபாஸ் சர்ஜரி செய்வதற்காக 8 யூனிட் இரத்தம் தேவைப்பட்டது.

அதற்காக கடந்த பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு அல் முபாரக் மருத்துவமனையில் திருச்சி பஜ்லுர்ரஹ்மான் அவர்களின் தலைமையில் 8 பேர் கொண்ட தமுமுக உறுப்பினர்கள் குழு இரத்த தானம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

அதனடிப்படையில் இரத்தம் கொடுக்கப்பட்டு பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி திங்கட்கிழமை காஸிம் அவர்களுக்கு அல்அதான் தலைமை மருத்துவமனையில் ஆப்பரேஷன் செய்யப்பட்டது.

ஆப்பரேஷனுக்குப்பிறகு பூரண சுகமடைந்து மருத்துவமனையில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் சகோதரரை தாழையூத்து பீர் மரைக்காயர் அவர்களின் தலைமையில் இரத்தம் கொடுத்த அனைவரும் சென்று சந்திப்பதற்கு திட்டமிட்டனர்.

கடந்த குவைத் விடுதலை தினத்தின் விடுமுறையில் பிப்ரவரி மாதம் 26 சனிக்கிழமை அன்று மாலை 5 மணிக்கு மருத்துவமனைக்கு சென்று சகோ. காஸிம் அவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்து, அவரை உற்சாகப்படுத்தினர்.

தமுமுக சார்பாக வந்து சந்தித்ததில் மகிழ்ச்சி அடைந்த அவர் எதிர்வரும் தேர்தல் மற்றும் தமுமுக குவைத் மண்டலம் ஏற்பாடு செய்ய இருக்கும் நிகழ்ச்சிகள் குறித்து கேட்டு அறிந்து கொண்டார்.

இந்த சந்திப்பில் குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கத்தின் முக்கிய நிர்வாகிகளும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Monday, March 7, 2011

துபை தமுமுக மர்க்கஸில்அந்நஜாத் மாத இதழின் ஆசிரியர்...



துபை தமுமுக மர்க்கஸில்அந்நஜாத் மாத இதழின் ஆசிரியர்... அல்லாஹ்வின் கிருபையால், மார்ச் 4 வெள்ளியன்று இரவு 8 :45 மணியளவில் துபை தமுமுக மர்க்கஸில் தாயகத்தில் இருந்து வருகைத் தந்துள்ள அந்நஜாத் மாத இதழின் ஆசிரியர் சகோதரர் அபூ அப்துல்லாஹ் அவர்கள் இஸ்லாமிய குடும்பவியல் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள், நிகழ்வில் திரளான சகோதரர்கள் கலந்துக் கொண்டு பயன் அடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே.

Friday, March 4, 2011

மங்கலத்தில் 93வது ஆம்புலன்ஸ் அர்பணிப்பு


திருப்பூர் மாவட்டம் மங்கலம் ஒன்றியம் சார்பில் 93-வது ஆம்புலன்ஸ் அர்பணிப்பு நிகழ்ச்சி கடந்த பிப்ரவரி 20 அன்று நடைபெற்றது. இந்த ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு மற்றும் பொதுக்கூட்டத்திற்கு தமுமுக மாவட்டத் தலைவர் ஹாலிதீன் தலைமை தாங்கினார். தமுமுக பொதுச்செயலாளர் செ.ஹைதர்அலி அவர்கள் ஆம்புலன்ஸை அர்பணித்தார்.

Tuesday, March 1, 2011

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் ரஹிமா கிளை பொதுக் கூட்டம் கிளை தலைவர் சகோதரர் அப்துல் குத்தூஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது




கடந்த 25-2-2011 வெள்ளிக் கிழமை அன்று சகோதரர் அல்சுவைதி டிராவல்ஸ் அப்துர் ரஹீம் அவர்கள் வீட்டில் மதியம் ஜும்ஆ தொழுகைக்குபின் மதிய உணவுடன் தொடங்கி மாலை 4:00 மணி வரை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் ரஹிமா கிளை பொதுக் கூட்டம் கிளை தலைவர் சகோதரர் அப்துல் குத்தூஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.அதில் கிழக்கு மண்டல நிர்வாகிகளும், கிளை நிர்வாகிகளும், கிளை உறுப்பினர்களும், கழகத்தின் அனுதாபிகளும் சுமார் 50 பேர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.
1. கிளைத்தலைவர் சகோதரர் அப்துல் குத்தூஸ் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த நிகழ்ச்சி இனிதே தொடங்கியது.
2. அடுத்து கிழக்கு மண்டலச் செயலாளர் சகோதரர் இஸ்மாயில் அவர்கள் நம்முடைய அனைத்து பணிகளும் அல்லாஹ்வின் திருப்பொருத்தம் ஒன்றுமட்டுமே குறிக்கோளாக இருக்கவேண்டும் என்றும் அதன் மூலம் நாளை மறுமையில் அல்லாஹ்விடம் சொர்க்கத்தை பெறவேண்டும் எனவும் நசீஹத்து செய்ய கூட்டம் தொடர்ந்தது.
3. அடுத்து கிழக்கு மண்டல துணைத் தலைவர் பொறியாளர் அப்துல் காதர் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் கடந்தகால சேவைகளையும் நமது இலட்சியத்தையும் அதை நாம் அடைந்த விதத்தையும், அரசியலில் நம் நிலைபாடுகளையும், அதற்கு நம்முடைய ஒத்துழைப்புகள் எவ்வாறு அமையவேண்டும் எனவும் எடுத்துரைத்தார்.
4. தொடர்ந்து கிழக்கு மண்டல தலைவர் பொறியாளர் ஷஃபியுல்லாஹ் கான் அவர்கள் அ.தி.மு.க. உடனான கூட்டணி குறித்தும் நமக்கு கூட்டணியில் கிடைத்துள்ள இடங்கள் குறித்தும் மேலும் பல்வேறு கேள்விகளுக்கும் தகுந்த பதில்களை கொடுத்தும் பல சந்தேகங்களுடன் வந்திருந்தவர்களின் சந்தேகங்களை போக்கி மனநிறைவுடன் அவர்கள் திரும்பி செல்லும் வகையில் பதிலளித்தார்கள் .
5. இறுதியாக கிளைப் பொருளாளர் டாக்டர் இர்ஷாத் அவர்கள் நன்றியுரை கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.களத்தொகுப்பு:
எம். எஸ். ஹமீது.
கிளை மக்கள் தொடர்பு அதிகாரி

பஸ்டே கொண்டாட்டத்தை தடை செய்க! தமுமுக மாணவரணி கோரிக்கை!

தமுமுக மாணவரணி செயலாளர் வழக்கறிஞர் ஜைனுல் ஆபிதீன் வெளியிட்டுள்ள அறிக்கை.

"பஸ் டே" என்ற பெயரில் சென்னையில் கல்லூரி மாணவர்கள் அரசு பேருந்தை வாடகை எடுத்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் பஸ்ஸின் உள்ளேயும், கூரை மேலும் ஏறி நின்று ஆட்டம் போடுவதும் பொதுமக்களுக்கு இடையூறு செய்வதும், பாதுகாப்புக்கு வந்த போலீசார் மீது கல்வெறிவதும் வன்மையாக கண்டிக்கதக்க ஒன்று.

உயர்நீதிமன்றம் ‘பஸ்டே’ கொண்டாடட்பவருக்கு தடை போட்டிருந்தும் காவல்துறை மாணவர்களின் அராஜகத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதும் மாணவர்களின் கல்லெறிக்கு உள்ளாவதும் காவல்துறையின் கண்ணியத்தை காப்பாற்ற கூடியதல்ல.

மாணவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக போராட்டம், நடத்தப்படுகையில் அவர்களை ஒடுக்கும் தமிழக அரசும், காவல்துறையும் ‘பஸ் டே’ விஷயத்தில் மென்மையாக நடந்துக் கொள்வது மாணவர்களிடையே போக்கிரித்தனத்தையே உருவாக்கும்.

எனவே தமிழக அரசு "பஸ் டே" கொண்டாட்டங்களை நிரந்தரமாக தடை செய்வதோடு இது போன்ற போக்கிரி செயலில் ஈடுபடும் மாணவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமுமுக மாணவரணி கேட்டுக் கொள்கிறது.