Tuesday, April 28, 2009

மனிதநேய மக்கள் கட்சியின் சின்னமாக ரயில் என்ஜின் பயன்படுத்தப்படும்

மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடும் மத்திய ‍சென்னை, மயிலாடுதுறை, பொள்ளாச்சி, இராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் மனிதநேய மக்கள் கட்சியின் சின்னமாக ரயில் என்ஜின் பயன்படுத்தப்படும்

மனிதநேய மக்கள் கட்சி மற்றும் புதிய தமிழகத்தின் சமூக ஜனநாயக கூட்டணிக்கு ரயில் இன்ஜின் சின்னம் ஒதுக்கப்பட்டது

மனிதநேய மக்கள் கட்சி மற்றும் புதிய தமிழகத்தின் சமூக ஜனநாயக கூட்டணிக்கு ரயில் இன்ஜின் சின்னம் ஒதுக்கப்பட்டது


மனிதநேய மக்கள் கட்சி மற்றும் புதிய தமிழகத்தின் சமூக ஜனநாயக கூட்டணி சார்பில் பாராளுமன்ற தேர்த­ல் மத்திய சென்னை, மயிலாடுதுறை, ராமநாதபுரம், பொள்ளாச்சி, தென்காசி ஆகிய ஐந்து தொகுதிகளில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வேட்பு மனுத் தாக்கல் செய்த நான்கு வேட்பாளர்களின் வேட்பு மனுவும், புதிய தமிழகத்தின் வேட்பு மனுவும் தேர்தல் அதிகாரிகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.


தற்போது மனிதநேய மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் நான்கு வேட்பாளர்களுக்கும், தென்காசியில் போட்டியிடும் புதிய தமிழகத்தின் வேட்பாளருக்கும் சின்னமாக ரயில் இன்ஜின் சின்னம் தேர்தல் கமிஷனால் ஒதுக்கப்பட்டுள்ளது. இது குறித்து மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் பி. அப்துஸ் ஸமது கூறுகையில் ஒடுக்கப்பட்ட, சிறுபான்மையின மக்களின் எதிர்பார்ப்புகளையும் கோரிக்கைகளையும் ஏற்றிச் செல்லும் பாராளுமன்ற உறுப்பினர்களாக மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளர்கள் இருப்பார்கள் என்பதற்கு அடையாளமாக நாங்கள் எதிர்பார்த்தபடியே ரயில் இன்ஜின் எங்களுக்கு கிடத்துள்ளது மகிழ்ச்சி.


இச்சின்னத்தை மக்களிடையே பிரபலப்படுத்த எங்கள் தொண்டர்கள் கடுமையாக உழைப்பார்கள், எங்கள் சமூக ஜனநாயக கூட்டணி 5 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று கூறியுள்ளார்.

Monday, April 27, 2009

கீழக்கரையில் நடைபெற்றது மனித நேய மக்கள் கட்சியின் தெரு முனை



கீழக்கரையில் நடைபெற்றது மனித நேய மக்கள் கட்சியின் தெரு முனை பிரச்சாரப். பாளை எஸ் ரபீக் அவர்களை தலைமை தாங்கினார். இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் திரு. சலிமுல்லாஹ்கான் அவர்களை ஆதரித்து P.V.M அறக்கட்டளை உரிமையாளர் திரு. அப்துல் ரசாக்,மாவட்ட செயலாளர் திரு. தஸ்பீக் அலி மட்ரும் கீழக்கரை பொறுப்பாளர் உஸ்மான், ஜெய்னுல்ஆப்தீன், முஸ்தகீன்,ஜமால்,வாப்பச, நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர் இராமநாதபுரம் மனித நேய மக்கள் கட்சியின் வேட்பாளர் சலிமுல்லாஹ்கான் ஆதரித்து பிரசாரம் சைதனர்

சலிமுல்லாஹ்கான் தீவிர வாக்கு சேகரிப்பு


சலிமுல்லாஹ்கான் தீவிர வாக்கு சேகரிப்பு

.

Wednesday, April 22, 2009

பொள்ளாச்சியில் மாநிலச் செயலாளர் உமர் வேட்பு மனு தாக்கல்

பொள்ளாச்சியில் மாநிலச் செயலாளர் உமர் வேட்பு மனு தாக்கல்

மத்திய சென்னையில் பொதுச் செயலாளர் வேட்புமனு தாக்கல்

மத்திய சென்னையில் பொதுச் செயலாளர் வேட்புமனு தாக்கல்

மனித நேய மக்கள் கட்சி சார்பில் மத்திய சென்னை தொகுதியில் ஹைதர்அலி போட்டியிடுகிறார். இவர் இன்று சென்னை மாநகராட்சியில் தேர்தல் அதிகாரி ஜோதி நிர்மலாவிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சமூக ஜனநாயக கூட்டணி சார்பில் மனித நேய மக்கள் கட்சி வேட்பாளராக மத்திய சென்னை தொகுதியில் போட்டியில் நான், அத்தொகுதியை வளம் பெற செய்ய நடவடிக்கை எடுப்பேன். இதுவரை இங்கு வெற்றி பெற்றவர்கள் தங்களை மட்டும் வளப்படுத்திக் கொண்டுள்ளனர்.

வெள்ள நிவாரண நிதி கூட அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைய வில்லை. அதிலும் பாரபட்சம் காட்டப்பட்டது. நான் வெற்றி பெற்றால் இது போன்ற குறைபாடுகள் களையப்பட்டு அனைத்து தரப்பு மக்களும் சமமாக மதிக்கப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
வேட்புமனு தாக்கலின்போது, மனித நேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் அப்துல் சமது, புதிய தமிழகம் கட்சியின் மாவட்ட செயலாளர் ராஜேந்திர பிரசாத், இரட்டை மலை சீனிவாசன் பேரவை தலைவர் நடராஜன், வக்கீல் சம்சுதீன் ஆகியோர் உடனிருந்தனர்.

முன்னதாக வேட்பாளர் ஹைதர் அலி ஆயிரக் கணக்காக கட்சி தொண்டர் களுடன் ராஜா அண்ணா மலை மன்றத்தில் இருந்து சென்ட்ரல் ரெயில் நிலையம் வரை திறந்த ஜீப்பில் ஊர்வலமாக வந்தார். பொருளாளர் ஆருண், அமைப்பு செயலாளர் ஜெயினுலாதீன், தலைமை நிலைய செயலாளர் இஸ்மாயில் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மயிலாடுதுறையில் தமுமுக தலைவர் வேட்புமனு தாக்கல்

மயிலாடுதுறையில் தமுமுக தலைவர் வேட்புமனு தாக்கல்

Monday, April 20, 2009

திருப்புல்லாணி செயல் விரர்கள் கூட்டம் கீழக்கரையில் நடைபெற்றது

மனித நேய மக்கள் கட்சியின் த.மு.மு.க திருப்புல்லாணி செயல் விரர்கள் கூட்டம் கீழக்கரையில் நடைபெற்றது

நல்லமுஹம்மது களஞ்சியம் தலைமை தாங்கினார்

பெரிய பட்டிணம் சாஹுல் ஹமீது, காஞ்சிரங்குடி, கீழக்கரை பொறுப்பாளர் உஸ்மான், ஜெய்னுல்ஆப்தீன், முஸ்தகீன்,ஜமால்.இந்திய தவ்ஹீத் ஜமாத் மாவட்டத் தலைவர் ஹஸன் அல.ஒன்றிய அளவில் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர் இராமநாதபுரம் மனித நேய மக்கள் கட்சியின் வேட்பாளர் சலிமுல்லாஹ்கான் ஆதரித்து பிரசாரம் செய்வது என்று முடிவு செய்யபட்டது.

Sunday, April 19, 2009

சலிமுல்லாஹ்கான் வாக்குகளை சேகரித்தார்



இராமநாதபுரம் மனித நேய மக்கள் கட்சியின் வேட்பாளர் சலிமுல்லாஹ்கான் ஜமாத் தலைவர்களையும் சங்கத்தின் தோழர்கள் சந்தித்து வாக்குகளை சேகரித்தார் அப்போது அவர், தான் சாமானிய சமூகத்தில் இருந்து வந்த களப் போராளி என்றும், மக்களின் உரிமைகளுக்காக களத்தில் இருந்து போராடுவேன் என்றும், தனக்கு வாக்களித்தால் உங்களில் ஒருவனாக இருந்து சேவை செய்வேன் என்றும் கூறி வாக்குகள் சேகரித்தார். அவருடன் கீழக்கரை, பெரிய பட்டிணம்,காஞ்சிரங்குடி தமுமுகவின் நிர்வாகிகளும் .P.V.M அறக்கட்டளை உரிமையாளர் திரு. அப்துல் ரசாக், மாவட்ட பொருளாளர் திரு. வாணி சித்தீக், திரு. பாக்கர், திரு. தஸ்பீக் அலி ஆகியோர் உடனிருந்தனர்.

மனிதநேய மக்கள் கட்சியின் மத்திய சென்னை வேட்பாளர் பிரச்சாரப் படங்கள்

மனிதநேய மக்கள் கட்சியின்

மத்திய சென்னை வேட்பாளர் பிரச்சாரப் படங்கள்


மனிதநேய மக்கள் கட்சியின் மத்திய சென்னை வேட்பாளர் செ. ஹைதர் அலி அவர்களை, புதிய தமிழகம் கட்சியின் சென்னை மாவட்ட நிர்வாகிகள் மற்றும் துறைமுகம் புதிய தமிழகம் தொழிலாளர் சங்கத்தின் தோழர்கள் சந்தித்து தங்களது ஆதரவையும், வாழ்த்தையும் தெரிவித்தனர். பின்பு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரச்சாரத்தில் ஈடுபடுவது குறித்தும் கலந்துரையாடல் நடத்தினர். அப்போது தமுமுக துணைப் பொதுச் செயலாளர் ஜே.எஸ்.ரிஃபாயி, ம.ம.க. பொதுச் செயலாளர் பி. அப்துல் சமது ஆகியோர் உடனிருந்தனர்.


மனிதநேய மக்கள் கட்சியின் மத்திய சென்னை வேட்பாளர் திரு. செ. ஹைதர் அலி அவர்கள் கோடம்பாக்கம் பிராமணர்கள் நலச்சங்க தலைவர் ராமமூர்த்தி அவர்களையும், ரப்பானி வைத்தியசாலை நிறுவனர் டாக்டர் சையத் சத்தார் அவர்களையும், ஆசாத் நகர், சூளைமேடு, எம்.எம்.டி.ஏ. பகுதி ஜமாத் தலைவர்கள், வில்லிவாக்கம் இயேசு கிறிஸ்து தேவாலயங்கள், அருட்தந்தைகள் ஆகியோரையும், மேலும் பல்வேறு அமைப்புகள், சங்கங்கள், நிறுவனங்களின் தலைவர்களையும் சந்தித்து வாக்குகளை சேகரித்தார். அப்போது அவர், தான் சாமானிய சமூகத்தில் இருந்து வந்த களப் போராளி என்றும், மக்களின் உரிமைகளுக்காக களத்தில் இருந்து போராடுவேன் என்றும், தனக்கு வாக்களித்தால் உங்களில் ஒருவனாக இருந்து சேவை செய்வேன் என்றும் கூறி வாக்குகள் சேகரித்தார். அவருடன் ம.ம.க.வின் பொதுச் செயலாளர் பி. அப்துல் சமது அவர்களும், வடசென்னை, தென்சென்னை மாவட்ட நிர்வாகிகளும் தொண்டர்களும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். மேலும், வில்லிவாக்கம் வியாபாரிகள் நலச்சங்கம் தலைவர் திரு. செல்வராஜ், மனித உரிமைக்கான மக்கள் இயக்க தலைவர் திரு. செ. ரமேஷ்பாபு, திருநகர் குடியிருப்போர் நலச்சங்கம் தலைவர் திரு. மோகன் சுந்தரம், அம்மன்கோட்டை நலச்சங்கம் தலைவர் திரு. பிரபாகரன் ஆகியோரையும் ம.ம.க. வேட்பாளர் செ. ஹைதர் அலி அவர்கள் சந்தித்து ஆதரவு கோரினார்.

Saturday, April 18, 2009

இராமநாதபுரம் மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்
சலிமுல்லா கான்


மேடையில் சலிமுல்லா கான், தஸ்பீக் அலி, வாணி சித்தீன், ஓ.யூ. ரஹ்மத்துல்லாஹ், கோவை செய்யது

இராமநாதபுரம் ஏப்ரல் 18, மனித நேய மக்கள் கட்சி அங்கம் வகிக்கும் சமூக ஜனநாயக முன்னணியின்t செயல் விரர்கள் கூட்டம் இராமநாதபுரம் வலம்புரி மஹாலில் நடந்தது. இக்கூட்டத்திற்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் திரு. ஓ.யூ. ரஹ்மத்துல்லாஹ் தலைமை தாங்கினார்.. சமூக ஜனநாயக முன்னணியின் இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் திரு. சலிமுல்லாஹ்கான் அவர்களை ஆதரித்து P.V.M அறக்கட்டளை உரிமையாளர் திரு. அப்துல் ரசாக், மாவட்ட பொருளாளர் திரு. வாணி சித்தீக், திரு. பாக்கர், திரு. தஸ்பீக் அலி, புதிய தமிழகத்தின் மாவட்ட செயலாளர் திரு. காளிதாஸ், இந்திய தேசிய லீக் நிர்வாகிகள், கோவை செய்யது உட்பட பலர் பேசினார்கள்..




ஒ.யூ.ரஹ்மத்துல்லாஹ், கோவை செய்யது பிரச்சார வாகனத்தில்

அதன் பின்னர் மதியம் சுமார் 1.00 மணியளவில் இராமநாதபுரம் அரன்மனை முன்பாக வேட்பாளர் அறிமுக கூடடம் நடந்தது. கோவை செய்யது அவர்கள் ஏன் மனித நேய மக்கள் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்ற தலைப்பில் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார். அதன் பின்னர் வேட்பாளர் திரு. சலிமுல்லாஹ்கான் அவர்கள் உரையாற்றினார்கள் பின்னர் அங்கிருந்து ஆயிரக்கணக்கான தமுமுக தொண்டர்கள் பின்தொடர வேட்புமனு தாக்கல் செய்வதற்காக ஊர்வலமாக புறப்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் சென்றனர். வேட்பு மனு தாக்கல் செய்யும் இடத்திற்கு 100 மீட்டர் முன்பே வாகனங்கள் நிறுத்தப்பட வேண்டும் போன்ற தேர்தல் கமிசனின் விதிமுறைக் அமலில் உள்ளதால் தொண்டர்கள் அனைவரும் தூரத்தில் நிற்க கோவை செய்யது தலைமையில் கூட்டணியை சேர்ந்த 5 நர்கள் மட்டும் வேட்பாளர் சலிமுல்லா கான் உடன் சென்றனர்.


வேட்பாளர் சலிமுல்லாஹ் கான் தனது ஆதரவாளர்களுடன்


வேட்பு மனு தாக்கல் செய்ய ஊர்வளமாக தமுமுக வினர்

சமூக ஜனநாயக முன்னணியின் இந்த வேட்பு மனு தாக்கல் நிகழச்சியில் ஆயிரக்கணக்கில் புதிய தமிழகம், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் உட்பட பொதுவான பல முஸ்லிம்களும் கலந்து கொண்டனர். அத்துடன் பல்வேறு ஜமாத் நிர்வாகிகளும் வந்திருந்தனர். நூற்றுக்கணக்கான வாகனங்களில் தமுமுக மற்றும் மனித நேய மக்கள் கட்சியினர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கடும் வெயிலையும் பொருட்படுத்தாது வந்திருந்தனர்.


அரன்மனை முன்பாக கூட்டணியினர் மத்தியில் உரையாற்றும் கோவை செய்யது


முன்னதாக செயல்வீரர் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்

Thursday, April 16, 2009

சமூக ஜனநாயக முன்னணிக்கு இந்திய தவ்ஹீத் ஜமாத் ஆதரவு

சமூக ஜனநாயக முன்னணிக்கு இந்திய தவ்ஹீத் ஜமாத் ஆதரவு

அரசியலில் தனி அதிகாரம் பெற வேண்டும் என்ற சிறந்த நோக்கத்துடன் மனித நேய மக்கள் கட்சி களம் இறங்கியது. சுய மரியாதையுடனும், தனித்துவமாகவும் செயல்படும் விதமாக எடுக்கப்பட்ட தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் முயற்சியை கொச்சைப்படுத்தும் விதமாக இரு திராவிட கட்சிகளும் நடந்து கொண்டது வேதனைக்குரியது.

எனவே புதிதாக உருவாகி இருக்கும் சமூக ஜனநாயக முன்னணிக்கு ஆதரவளிப்பது எங்கள் கடமை.

அதன்படி மயிலாடுதுறை, ராமநாதபுரம், பொள்ளாச்சி, மத்திய சென்னை, திருச்சி, தென்காசி, தூத்துக்குடி, ஆகிய 7 தொகுதிகளில் மட்டும் சமூக ஜனநாயக முன்னணி வேட்பாளர்களை ஆதரிக்கிறோம் என்றார் இந்திய தவ்ஹீத் ஜமாத் தலைவர் பார்க்கர்.

Wednesday, April 15, 2009

தேர்தல் பணிக்குழு விபரங்கள்

தேர்தல் பணிக்குழு விபரங்கள்

தலைமை தேர்தல் பணிக்குழு

ஜே.எஸ்.ரிஃபாயி, எஸ்.எஸ்.ஹாருண் ரஷீத், மண்டலம் ஜெய்னுல் ஆபிதின், டி.ஏ. முகம்மது இஸ்மாயில்

மத்திய பிரச்சாரக்குழு


ஓ.யூ.ரஹ்மத்துல்லாஹ், எம். தமிமுன் அன்சாரி


தலைமை நிதிக்குழு

ஜிப்ரி காஸிம், நல்லமுஹம்மது களஞ்சியம், முகம்மது ஜுல்பிகார்,
தாவூத் பாட்சா


சட்ட ஆலோசனைக்குழு

பி.எம்.ஆர்.சம்சுதீன், அப்துல் ரஹ்மான், யூசுப் ராஜா, அஸ்மத் பீவி, ரஃபீக், ஜெய்னுலாபிதீன், கே.பி.முஸ்தபா, கே. சாகுல் ஹமீது

ஊடகக்குழு

ஜெ. ஹாஜாகனி, எம். ஜெய்னுலாபிதீன்


மயிலாடுதுறை தொகுதி தேர்தல் பணிக்குழு


ஜே. அவுலியா (நிர்வாகம்), ஜின்னா (நிதி)


மத்திய சென்னை தொகுதி தேர்தல் பணிக்குழு


பி. அப்துல் சமது (நிர்வாகம்), ஹஸன் அலி ஆலிம் (நிதி)


பொள்ளாச்சி தொகுதி தேர்தல் பணிக்குழு


முகம்மது கவுஸ் (நிர்வாகம்), கோவை பஷீர் (நிதி)


ராமநாதபுரம் தொகுதி தேர்தல் பணிக்குழு


மௌலா நாஸர் (நிர்வாகம்), வாணி சித்தீக் (நிதி)

Monday, April 13, 2009

மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகளுடன் டாக்டர் ராமதாஸ் திடீர் சந்திப்பு

மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகளுடன் டாக்டர் ராமதாஸ் திடீர் சந்திப்பு


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் என்ற சமுதாய அமைப்பு சமீபத்தில் மனிதநேய மக்கள் கட்சி என்ற பெயரில் அரசியல் இயக்கத்தை உருவாக்கியது.
தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்று இருந்த இந்த கட்சி 2 தொகுதிகளை கேட்டது. ஆனால் ஒரு தொகுதி மட்டும் தான் தர முடியும் என்று தி.மு.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் தி.மு.க.வுடன் தேர்தல் உடன்பாடு ஏற்படவில்லை. இதை தொடர்ந்து அ.தி.மு.க. தரப்பில் இருந்து பேசப்பட்டது. இதிலும் உடன்பாடு ஏற்படவில்லை.
இதை தொடர்ந்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி புதிய தமிழகத்துடன் இணைந்து போட்டியிட மனித நேய மக்கள் கட்சி முடிவு செய்தது.
முதல் கட்டமாக மத்திய சென்னை, மயிலாடுதுறை, ராமநாதபுரம் ஆகிய 3 தொகுதிகளில் போட்டியிடுவதாக மனித நேய மக்கள் கட்சி அறிவித்தது.
மத்திய சென்னையில் ஹைதர் அலியும், மயிலாடுதுறையில் பேராசிரியர் ஜவாகிருல்லாவும், ராமநாதபுரத்தில் சலிமுல்லாகானும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இதற்கு ஏற்றவாறு தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் பதவியில் இருந்து ஹைதர் அலி விலகினார்.
இந்த நிலையில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் இன்று மதியம் 12.30 மணியளவில் சென்னை மண்ணடியில் உள்ள மனித நேய மக்கள் கட்சி அலுவலகத்துக்கு வந்தனர்.
அவர்களை மனித நேய மக்கள் கட்சி ஒருங்கிணைப்பாளர் ஜவாகிருல்லா, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழக செயலாளர் ஹைதர்அலி ஆகியோர் வரவேற்றனர். அப்போது டாக்டர் ராமதாஸ் அவர்களிடம் உங்கள் நட்பு நீடித்த நட்பாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்று கூறினார்.
பின்னர் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகளுடன் டாக்டர் ராமதாஸ் தனியாக பேசினார். அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தருமாறு அவர்களிடம் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
நன்றி: மாலை மலர்

Sunday, April 12, 2009

மனிதநேய மக்கள் கட்சியின் 4 வேட்பாளராக

மனிதநேய மக்கள் கட்சியின் பொள்ளாச்சி வேட்பாளராக தமுமுகவின் மாநிலச் செயலாளர் கோவை. இ. உமர் அவர்கள் அறிவிக்கப் பட்டுள்ளார்.

இவர் ஆரம்ப காலத்தில் கோவை குனிய முத்துர் கிளை தலைவராகப் பணியாற்றி பின்னர் மாவட்டச் செயலாளராக பணியாற்றினார். பின்னர் மாவட்டத் தலைவர் பதவிக்குப் பின்னர் மாநிலச் செயலாளராக பணியாற்றி வருகிறார், கோவை மாவட்ட மக்களால் நன்கு அறிமுகமானவர்.

தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு புது சவால்

மனிதநேய மக்கள் கட்சி தலைமையில் 4வது அணி! : தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு புது சவால்

சென்னை : லோக்சபா தேர்தல் களத்தில், மனிதநேய மக்கள் கட்சி தலைமையில் நான்காவது அணி உருவாகியுள்ளது. இதில், சமத்துவ மக்கள் கட்சி, புதிய தமிழகம், கொங்கு வேளாளர் பேரவை மற்றும் பல் வேறு சமூக அமைப் புக்கள் இணைந் துள்ளன. இந்தக் கூட்டணி, தமிழகத்தின் முக்கிய கட்சிகளான தி.மு.க., - அ.தி.மு.க., வுக்குப் புதிய சவாலாக உருவெடுத்துள்ளது.

லோக்சபா தேர்தலில், தி.மு.க., - அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணிகள், தே.மு.தி.க., என மூன்று அணிகள் போட்டியிடுகின்றன. தற்போது, மனிதநேய மக்கள் கட்சி தலைமையில் பல்வேறு கட்சிகள் மற்றும் சமூக அமைப்புக்கள் இணைந்து, நான்காவது அணியாக களம் இறங்குகின்றன. தமிழக முஸ்லிம்களை ஒன்று திரட்டி, அவர்களை சமூக, பொருளாதார நிலையில் முன்னேற்ற, கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் துவக்கப்பட்டது. கடந்த தேர்தல்களின் போது, அ.தி.மு.க., - தி.மு.க., கூட்டணிகளுக்கு இக்கட்சி மாறி மாறி தார்மீக ஆதரவு அளித்து, அக்கட்சிகளை வெற்றியடையச் செய்து வந்தது.

இந்நிலையில், மத்திய, மாநில அரசுகளிடம், தங்கள் சமூகத்தை மேம்படுத்துவதற்கான சலுகைகளைப் பெறுவதற்காக, கடந்த பிப்ரவரியில் தாம்பரத்தில் நடந்த மாபெரும் மாநாட்டில் த.மு.மு.க., என்ற அமைப்பு, மனிதநேய மக்கள் கட்சி என்ற அரசியல் அமைப்பாக மாறியது. மனிதநேய மக்கள் கட்சி கிட்டத்தட்ட 20 தொகுதிகளில் கணிசமாக ஓட்டுக் களை கொண்டுள் ளது. அதிக அளவில் முஸ்லிம் ஓட்டுக்கள் உள்ள தஞ்சாவூர், திருச்சி, வேலூர், மயிலாடுதுறை, ராமநாதபுரம், மத்திய சென்னை ஆகிய ஆறு தொகுதிகளில் வெற்றியை நிர்ணயிக்கும் கட்சியாக இக்கட்சி உள்ளது. லோக்சபா தேர்தலில் கூட்டணி வைத்துக் கொள்ள முதலில், தி.மு.க.,வுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. கூடுதல் தொகுதிகள், தனிச் சின்னம் என்ற கோரிக்கை முன் வைக்கப் பட்டது. தி.மு.க., இக்கோரிக்கையை நிராகரித்தது. அ.தி.மு.க.,வும் ஒத்து வராததால், லோக்சபா தேர்தலில் தனித்துப் போட்டியிட மனிதநேய மக்கள் கட்சி முடிவெடுத்தது. தற்போது, தமிழகத்தில், மனிதநேய மக்கள் கட்சி தலைமையில் நான்காவது அணி உருவாகியுள்ளது.

நடிகர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, முடிவு எட்டப்பட்டது. அடுத்ததாக, கொங்கு வேளாளர் பேரவை உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தை நடந்தது. இக்கூட்டணியில் உள்ள கட்சிகள் மற்றும் சமூக அமைப்புக்களுக்கான தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. நெல்லை தொகுதி சமத் துவ மக்கள் கட்சிக்கும், தென்காசி தொகுதி புதிய தமிழகத்திற்கும் ஒதுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முஸ்லிம் மக்கள் அதிகமாக உள்ள மத்திய சென்னை, மயிலாடுதுறை, ராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட மனிதநேய மக்கள் கட்சி திட்டமிட்டுள்ளது. இருப்பினும், இது குறித்து ஆலோசனை நடந்து வருவதாகவும், இறுதி முடிவு எட்டப்படவில்லை என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மயிலாடுதுறையில் கட்சியின் மாநிலத் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாவும், மத்திய சென்னையில் கட்சியின் மாநிலப் பொதுச் செயலர் ஹைதர்அலியும், ராமநாதபுரத்தில், அந்த மாவட்டச் செயலர் கலிமுல்லாகானும் போட்டியிடுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மனிதநேய மக்கள் கட்சி, தமிழக லோக்சபாத் தேர்தலில் போட்டியிடுவதால் தி.மு.க.,வுக்குத் தான் பெரும் பாதிப்பு ஏற்படும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட சில தொகுதிகளில் நான்காவது அணியால் அ.தி.மு.க., விற்கும் பாதிப்பு ஏற்படும்' என்றனர்

மனித நேய மக்கள் கட்சி 20 தொகுதிகளில் போட்டி

சென்னை: தமிழகத்தில் 20 தொகுதிகளில் போட்டியிடுவோம் என்று மனித நேய மக்கள் கட்சி அறிவித்துள்ளது. மேலும் சரத்குமார் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளதாகவும், அவர்கள் பாஜகவுடன் கூட்டணி வைத்தால் அதில் நாங்கள் இருக்க மாட்டோம் என்றும் அறிவித்துள்ளது.

முதலில் திமுக கூட்டணியில் இடம் பெற முயன்று 4 சீட் கேட்டது. ஒரே ஒரு இடம் தான் தர முடியும் என திமுக கூறிவிட்டது. இதையடுத்து அதிமுக கூட்டணியில் இணையப் போவதாகக் கூறப்பட்டது. ஆனால், அதிமுக வேட்பாளர் பட்டியலும் மதிமுகவுடனான தொகுதிப் பங்கீடும் வெளியானபோது அதில் இந்தக் கட்சிக்கு இடம் ஏதும் தரப்படவில்லை,

இந் நிலையில் மனித நேய மக்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளருமான ஹைதர் அலி நிருபர்களிடம் பேசுகையில்,

மனித நேய மக்கள் கட்சி மத்திய சென்னை, மயிலாடுதுறை, ராமநாதபுரம், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, தஞ்சாவூர் உள்பட 20 தொகுதிகளில் போட்டியிடும். வேட்பாளர் பட்டியல், தேர்தல் அறிக்கை ஆகியவை 13ம் தேதி வெளியிடப்படும்.

நாங்கள் சமத்துவ மக்கள் கட்சி, புதிய தமிழகம், இதயத்துல்லா தலைமையிலான இந்திய தேசிய லீக் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளோம். ஆனால் பாஜகவுடன் கூட்டணி வைக்கும் கட்சியுடன் நிச்சயமாக இருக்க மாட்டோம். (சரத்குமார்-பாஜக கூட்டணி ஏற்பட்டால் இந்தக் கட்சி சரத்துடனான கூட்டணியிலிருந்து வெளியேறும்)

முதலில் நாங்கள் திமுக கூட்டணியில்தான் இருந்தோம். ஆனால், அவர்கள் எங்களுக்கு ஒரு தொகுதிதான் தருவதாகக் கூறினார்கள். எனவே நாங்கள் வெளியேறிவிட்டோம்.
இதன் பின்பு அதிமுகவினர்தான் எங்களுடன் கூட்டணி குறித்து பேசினார்கள். எங்களுக்கு 2 தொகுதிகள் ஒதுக்குவதாகவும், ஆனால் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடவேண்டும் என்றும் கூறினார்கள். இதில் எங்களுக்கு உடன்பாடு இல்லாததால் கூட்டணி வைத்துக் கொள்ளவில்லை.

காங்கிரஸ் மேலிட பார்வையாளர் குலாம்நபி ஆசாத்தும் எங்களுடன் கூட்டணி குறித்துப் பேசினார்.

திமுக கூட்டணியில் இருந்தபோது எனக்கு வக் போர்டு வாரிய தலைவர் பதவி வழங்கப்பட்டது. இப்போது அந்தப் பதவியை ராஜினாமா செய்துவிட்டேன். எங்களுக்கு கொள்கை லட்சியம்தான் முக்கியம். பதவி ஒரு உபகரணம்தானே தவிர, பதவியே எங்கள் நோக்கம் அல்ல.

மத்திய சென்னையில் நான் போட்டியிடவேண்டும் என்று தொண்டர்கள் விரும்புகிறார்கள். இதுபற்றி எங்கள் கட்சியின் மத்திய கமிட்டி முறையாக அறிவிக்கும். மத்திய சென்னையில் 3 லட்சத்திற்கு மேற்பட்ட முஸ்லீம் ஓட்டுகள் உள்ளன. இந்த வாக்குகள்தான் வெற்றியை நிர்ணயம் செய்யும். இந்த தொகுதியில் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு மிக நன்றாகவே உள்ளது.

வேலூரில் திமுக வேட்பாளர்தான் நிறுத்தப்பட்டுள்ளார் (உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லீ்ம் வேட்பாளர்). அந்த தொகுதியில் எங்கள் கட்சி சார்பில் வேட்பாளரை நிறுத்துவதா, வேண்டாமா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை.

news by oneindia.in

Saturday, April 11, 2009

லோக்சபா தேர்தலில் சமூக கூட்டணி : மனிதநேய மக்கள் கட்சி அறிவிப்பு

லோக்சபா தேர்தலில் சமூக கூட்டணி : மனிதநேய மக்கள் கட்சி அறிவிப்பு

சென்னை : ''மனித நேய மக்கள் கட்சி சமூக கூட்டணியை ஏற்படுத்தியிருக்கிறது. நாங்கள் சொல்லும் வேட்பாளர்களுக்கு 40 தொகுதிகளிலும் ஓட்டு போடுங்கள்,'' என்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக பொதுச்செயலர் ஹைதர் அலி பேசினார். மனித நேய மக்கள் கட்சி பொதுக்கூட்டம் தாம்பரத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில், மனிதநேய மக்கள் கட்சி காஞ்சிபுரம் மாவட்ட செயலர் யாக்கூப் தலைமை தாங்கினார்.


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக பொதுச்செயலர் ஹைதர் அலி பேசியதாவது: முஸ்லிம் மக்களுக்கு பிரதிநிதித்துவம் பெற மனித நேய மக்கள் கட்சி உதயமாகியுள்ளது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தி.மு.க.,விடம் நமது சமுதாயத்தை அடகு வைத்திருந்தது. இந்த லோக்சபா தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதியை தி.மு.க., ஒதுக்கியது. அக்கட்சியின் பொதுக்குழுவில் வேலூர் தொகுதி நமக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது என்றும், அதற்கு நான் தான் வேட்பாளர் என்றும், ஏணி சின்னத்தில் போட்டியிடுகிறோம் என்றும் காதர்மொய்தீன் கூறியிருந்தார். அவர் சார்ந்த கட்சியில் அவரால் கூட சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. தற்போது வேலூர் தொகுதியின் வேட்பாளரும், தொகுதியின் சின்னமும் மாற்றப்பட்டுவிட்டது. எனது சமுதாயத்தின் கண்ணியம் காக்கப்பட வேண்டும் என்பதற்காக நான் வகித்து வந்த வக்பு வாரிய தலைவர் பதவியை துறந்துவிட்டு வந்திருக்கிறேன். ஒரு 'சீட்' வாங்கி லோக்சபாவை பார்க்க நாங்கள் விரும்பவில்லை.

மனிதநேய மக்கள் கட்சி ஒரு சமூக கூட்டணியை ஏற்படுத்தியிருக்கிறது. தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த புதிய தமிழகம், நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த சமத்துவ மக்கள் கட்சி ஆகியவை நம்முடன் கூட்டணி வைத்து போட்டியிட உள்ளன. கிடைத்த வாய்ப்பை ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட அனைத்து சமுதாய மக்களுக்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வரும் லோக்சபா தேர்தலில் தமிழகம், புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் நாங்கள் யாருக்கு ஓட்டு போட சொல்கிறோமே, அவர்களுக்கு ஓட்டுப் போடுங்கள். நம்மை இழந்தவர்களுக்கு நாம் நல்ல பாடம் கற்றுத்தர வேண்டும். இவ்வாறு ஹைதர் அலி பேசினார். தலைமை கழக பேச்சாளர் கோவை சையது உள்ளிட்ட பலர் பேசினர்.

வக்பு வாரியத் தலைவர் பதவி ராஜினாமா

பத்திரிக்கை அறிக்கை

வக்பு வாரியத் தலைவர் பதவி ராஜினாமா!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும் தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவருமான செ.ஹைதர் அலி அவர்கள் வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை:

நான் இதுவரை வகித்து வந்த தமிழக வக்பு வாரியத் தலைவர் பொறுப்பிலிருந்து சொந்த காரணங்களுக்காக ராஜினாமா செய்கிறேன்.


எனது கடமையை செம்மையாக செய்ய ஒத்துழைத்த அனைத்து நல் இதயங்களுக்கும் சமுதாய சொந்தங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


Thursday, April 9, 2009

3 தொகுதிகளில் மனித நேய மக்கள் கட்சி தனித்துப்போட்டியிட முடிவு

எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலில் மத்திய சென்னை - தமுமுக பொதுச் செயலாளர் எஸ். ஹைதர் அலி,
மயிலாடுதுறை தமுமுக தலைவர் பேராசிரியர்
எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ்
,
இராமநாதபுரம்-
ராமநாதபுரம் மாவட்ட மனிதநேய மக்கள் கட்சியின் செயலாளர் சலிமுல்லாகான். ஆகிய தொகுதிகளில் மனிதநேய மக்கள் கட்சி தனித்துப் போட்டி.
மனிதநேய மக்கள் கட்சியின் உயர்மட்டக்குழு இன்று முடிவை அறிவித்தது.

யாருடனும் கூட்டணி இல்லை மனிதநேய மக்கள் கட்சி 10 இடங்களில் தனித்து போட்டி ராமநாதபுரம் மாவட்ட தலைவர் தகவல்

தமிழகத்தில் செயல்பட்டு வந்த தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகம், சமீபத்தில் மனித நேய மக்கள் கட்சியாக உருவெடுத்து பாராளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என்று அக்கட்சி நிர்வாகிகள் தீவிர ஆலோசனை நடத்தி வந்தனர். இதுதொடர்பாக தி.மு.க.விடம் நடத்திய பேச்சுவார்த்தையில் இடம் தருவதாக தெரிகிறது.

ஆனால் அதை ஏற்க மறுத்த நிலையில் தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிந்து விட்டதாக தி.மு.க. அறிவித்தது. இதனால் அக்கட்சி அ.தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியது. அ.தி.மு.க.வினர் வேலூர், மயிலாடுதுறை ஆகிய 2 தொகுதிகள் தருகிறோம்.என்று கூறியதாக தெரிகிறது. ஆனால் கூடுதல் தொகுதிகளை எதிர்பார்த்த மனித நேய மக்கள் கட்சி, தற்போது யாருடனும் கூட்டணி இல்லை என்ற முடிவுக்கு வந்துள்ளதாக தெரிகிறது.

இதுதொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட தலைவர் ஹலிமுல்லாகான் கூறுகையில் தி.மு.க., அ.தி.மு.க. இருகட்சி களிடமும் கூட்டணி தொடர்பாக நடத்திய பேச்சுவார்த்தை எங்களுக்கு சாதகமாக இல்லை எனவே தமிழகத்தில் 10 தொகுதிகளில் மனித நேய மக்கள் கட்சி தனித்துப்போட்டியிட முடிவு செய்துள்ளது. ராம நாதபுரம் தொகுதியின் கட்சியில் மாநில தலைவர் ஜகாங்ஹிருல்லா போட்டியிடுகிறார்.


thanx by malaimalar

Wednesday, April 8, 2009

திமுக-அதிமுக அணிகளுடன் கூட்டணி இல்லை


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக-அதிமுக அணிகளுடன் கூட்டணி இல்லை என மனிதநேய மக்கள் கட்சி அறிவிப்பு. யாருடன் கூட்டணி என்று நாளை இன்ஷா அல்லாஹ் அறிவிக்கப்படும்.

தி.மு.க-அ.தி.மு.க.வுடன் தொடர்ந்து பேச்சு: மனிதநேய மக்கள் கட்சி யாருடன் கூட்டணி?

தமிழக அரசியல் களத்தில் புதிய வரவான மனிதநேய மக்கள் கட்சியை தங்களது கூட்டணியில் சேர்க்க தி.மு.க.. மற்றும் அ..தி.மு.க. நிர்வாகிகள் போட்டி போட்டுக் கொண்டு பேச்சு நடத்தி வருகின்றனர்.

தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த மனிதநேய மக்கள் கட்சிக்கு தொகுதிகள் எதுவும் ஒதுக்கப்படாத நிலையில் கூட்டணியில் இடம் பெற்றிருந்த மற்ற கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் வெளியிடப்பட்டது. இதனால் மனிதநேய மக்கள் கடசி அ.தி.மு.க. கூட்டணியில் சேரப்போவதாக தகவல்கள் வெளியானது. அ.தி.மு.க. கூட்டணியில் அக்கட்சிக்கு மத்திய சென்னை தொகுதி ஒதுக்கப்படுவதாகவும் கூறப்பட்டது.

இதற்கிடையே மனிதநேய மக்கள் கட்சியை கூட்டணியில் தக்க வைத்துக் கொள்ள தி.மு.க. தரப்பில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

தி.மு.க. கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கியது பற்றியெல்லாம் நீங்கள் கவலைப்பட வேண்டாம். எங்களது அணிக்கு வாருங்கள். கவுரவமான முறையில் தொகுதிகளை ஒதுக்கி தருகிறோம் என்று கூறி மனிதநேய மக்கள் கட்சியுடன் தி.மு.க. அணியினர் தொடர்ந்து பேச்சு நடத்தி வருகிறார்கள்.


அதே நேரத்தில் மனிதநேய மக்கள் கட்சியை அ.தி.மு.க. கூட்டணியில் சேர்க்கவும் தீவிர முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து யாருடன் கூட்டணி சேர்வது என்பது குறித்து மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இன்று மாலைக்குள் கூட்டணி தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அக்கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

Saturday, April 4, 2009

மனிதநேய மக்கள் கட்சி செயற்குழு முடிவு

பத்திரிகை அறிக்கை


தேர்தல் கூட்டணி மனிதநேய மக்கள் கட்சி செயற்குழு முடிவு


மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை செயற்குழுக் கூட்டம் இன்று (04.04.09) சென்னையில் நடைபெற்றது, தமுமுக தலைவர் பேராசிரியர்
எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ் பொதுச் செயலாளர் எஸ். ஹைதர் அலி. பொருளாளர் ஒ. யூ. ரஹ்மதுல்லாஹ், துணைப் பொதுச் செயலாளர்
ஜே. எஸ. ரிபாயி, மாநிலச் செயலாளர்கள் கோவை உமர், ஏ. எஸ். எம். ஜூனைத் மவ்லா நாசர் மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் பி. அப்துல் சமது, பொருளாளர் ஹாருன் ரசீத் துணைப் பொதுச் செயலாளர் எம். தமீமுன் அன்சாரி, அமைப்புச் செயலாளர்கள் எம். ஜெய்னுல் ஆபீதீன். முஹம்மது கவுஸ், சம்சுதீன் நாசர் உமரி, தலைமை நிலையச் செயலாளர் இஸ்மாயில் உள்ளிட்ட 200 செயற்குழு உறுப்பினர்கள் தமிழகம் முழுவதிலிருந்தும் பங்குக் கொண்டார்கள்.


சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இச்செயற்குழுவில் வரும் நாடாளுமன்றத் தேர்தல் நிலைப்பாடு குறித்து விரிவாக விவாதித்தது, பின்னர் வரும் தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சி யாருடன் கூட்டணி வைப்பது என்பது குறித்து முடிவு எடுக்கும் அதிகாரத்தை தலைமை நிர்வாக குழுவிற்கு அளிப்பது என்று ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

நக்கீரன் குறும் ம ம க நிலை


Thursday, April 2, 2009

மனிதநேய மக்கள் கட்சியின் தேர்தல் நிலைபாடு..

தமிழக அரசியலில் அதிர்வுகளை ஏற்படுத்தப் போகும் மனித நேய மக்கள் கட்சியின் தேர்தல் நிலைபாடு குறித்த முடிவுகள்

இன்ஷா அல்லாஹ் ம.ம.க வின் செயற்குழுவில் அறிவிக்கப்படும்.


மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் இஸ்மாயில் அவர்கள் வெளியிடும் அறிக்கை:


மனிதநேய மக்கள் கட்சியின் அரசியல் உயர்நிலை குழு, எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் கட்சியின் நிலைபாடு குறித்து இறுதி முடிவெடுத்திருக்கிறது.


எடுக்கப்பட்ட முடிவு குறித்து எதிர்வரும் 04.04.2009 அன்று சென்னையில் கூடும் மனிதநேய மக்கள் கட்சியின் முதல் செயற்குழுவில் அறிவிக்கப்பட இருக்கிறது.

இம்முடிவு தமிழக அரசியலின் போக்கை மாற்றியமைக்கும் என ம.ம.க.வின் உயர்நிலை குழு அறிவித்திருக்கிறது.

Wednesday, April 1, 2009

மனிதநேய மக்கள் கட்சி அங்கீகாரம் வழங்கியது தேர்தல் ஆணையம்

மனிதநேய மக்கள் கட்சி
அங்கீகாரம் வழங்கியது தேர்தல் ஆணையம்


தமிழக அரசியலில் அதிர்வு களை ஏற்படுத்தியிருக்கும் மனித நேய மக்கள் கட்சிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியிருக்கிறது. டெல்லியில் தேர்தல் ஆணையத்தின் முன்பு பேரா. எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் மற்றும் கே. அப்துல் சலாம் (தென் சென்னை மாவட்ட மனிதநேய மக்கள் கட்சியின் செயலாளர்) ஆகியோர் தேர்தல் ஆணையத்தின் நேர்காணலில் கலந்து கொண்டனர். அதன்பிறகு கடந்த 27.03.09 அன்று மனிதநேய மக்கள் கட்சியை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கப் பட்ட அரசியல் கட்சியாக பதிவு செய்து அறிவித்திருக்கிறது.