Thursday, April 9, 2009

யாருடனும் கூட்டணி இல்லை மனிதநேய மக்கள் கட்சி 10 இடங்களில் தனித்து போட்டி ராமநாதபுரம் மாவட்ட தலைவர் தகவல்

தமிழகத்தில் செயல்பட்டு வந்த தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகம், சமீபத்தில் மனித நேய மக்கள் கட்சியாக உருவெடுத்து பாராளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என்று அக்கட்சி நிர்வாகிகள் தீவிர ஆலோசனை நடத்தி வந்தனர். இதுதொடர்பாக தி.மு.க.விடம் நடத்திய பேச்சுவார்த்தையில் இடம் தருவதாக தெரிகிறது.

ஆனால் அதை ஏற்க மறுத்த நிலையில் தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிந்து விட்டதாக தி.மு.க. அறிவித்தது. இதனால் அக்கட்சி அ.தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியது. அ.தி.மு.க.வினர் வேலூர், மயிலாடுதுறை ஆகிய 2 தொகுதிகள் தருகிறோம்.என்று கூறியதாக தெரிகிறது. ஆனால் கூடுதல் தொகுதிகளை எதிர்பார்த்த மனித நேய மக்கள் கட்சி, தற்போது யாருடனும் கூட்டணி இல்லை என்ற முடிவுக்கு வந்துள்ளதாக தெரிகிறது.

இதுதொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட தலைவர் ஹலிமுல்லாகான் கூறுகையில் தி.மு.க., அ.தி.மு.க. இருகட்சி களிடமும் கூட்டணி தொடர்பாக நடத்திய பேச்சுவார்த்தை எங்களுக்கு சாதகமாக இல்லை எனவே தமிழகத்தில் 10 தொகுதிகளில் மனித நேய மக்கள் கட்சி தனித்துப்போட்டியிட முடிவு செய்துள்ளது. ராம நாதபுரம் தொகுதியின் கட்சியில் மாநில தலைவர் ஜகாங்ஹிருல்லா போட்டியிடுகிறார்.


thanx by malaimalar

No comments :