Tuesday, April 28, 2009

மனிதநேய மக்கள் கட்சி மற்றும் புதிய தமிழகத்தின் சமூக ஜனநாயக கூட்டணிக்கு ரயில் இன்ஜின் சின்னம் ஒதுக்கப்பட்டது

மனிதநேய மக்கள் கட்சி மற்றும் புதிய தமிழகத்தின் சமூக ஜனநாயக கூட்டணிக்கு ரயில் இன்ஜின் சின்னம் ஒதுக்கப்பட்டது


மனிதநேய மக்கள் கட்சி மற்றும் புதிய தமிழகத்தின் சமூக ஜனநாயக கூட்டணி சார்பில் பாராளுமன்ற தேர்த­ல் மத்திய சென்னை, மயிலாடுதுறை, ராமநாதபுரம், பொள்ளாச்சி, தென்காசி ஆகிய ஐந்து தொகுதிகளில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வேட்பு மனுத் தாக்கல் செய்த நான்கு வேட்பாளர்களின் வேட்பு மனுவும், புதிய தமிழகத்தின் வேட்பு மனுவும் தேர்தல் அதிகாரிகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.


தற்போது மனிதநேய மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் நான்கு வேட்பாளர்களுக்கும், தென்காசியில் போட்டியிடும் புதிய தமிழகத்தின் வேட்பாளருக்கும் சின்னமாக ரயில் இன்ஜின் சின்னம் தேர்தல் கமிஷனால் ஒதுக்கப்பட்டுள்ளது. இது குறித்து மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் பி. அப்துஸ் ஸமது கூறுகையில் ஒடுக்கப்பட்ட, சிறுபான்மையின மக்களின் எதிர்பார்ப்புகளையும் கோரிக்கைகளையும் ஏற்றிச் செல்லும் பாராளுமன்ற உறுப்பினர்களாக மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளர்கள் இருப்பார்கள் என்பதற்கு அடையாளமாக நாங்கள் எதிர்பார்த்தபடியே ரயில் இன்ஜின் எங்களுக்கு கிடத்துள்ளது மகிழ்ச்சி.


இச்சின்னத்தை மக்களிடையே பிரபலப்படுத்த எங்கள் தொண்டர்கள் கடுமையாக உழைப்பார்கள், எங்கள் சமூக ஜனநாயக கூட்டணி 5 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று கூறியுள்ளார்.

No comments :