Monday, September 29, 2014

தமிழக முதல்-அமைச்சர்கள்

தமிழக  முதல்-அமைச்சர்கள்

1952-ம் ஆண்டுக்கு பிறகு தமிழக முதல்அமைச்சர் பதவி வகித்தவர்கள் விவரம் வருமாறு:

ராஜாஜி        10-04-1952 முதல் 13-04-1954 வரை

கே.காமராஜ்        13-04-1954 முதல் 02-10-1963 வரை

எம்.பக்தவச்சலம்        02-10-1963 முதல் 06-03-1967 வரை

அண்ணா        06-03-1967 முதல் 03-02-1969 வரை

மு.கருணாநிதி         10-02-1969 முதல் 04-01-1971 வரை
                              15-03-1971 முதல் 31-01-1976 வரை

எம்.ஜி.ஆர்        30-06-1977 முதல் 17-02-1980 வரை
                              09-06-1980 முதல் 15-11-1984 வரை
                              10-02-1985 முதல் 24-12-1987 வரை

ஜானகி ராமச்சந்திரன்        07-01-1988 முதல் 30-11-988 வரை

மு.கருணாநிதி        27-01-1989 முதல் 30-01-1991 வரை

ஜெ.ஜெயலலிதா        24-06-1991 முதல் 12-05-1996 வரை

மு.கருணாநிதி        13-05-1996 முதல் 13-05-2001 வரை

ஜெ.ஜெயலலிதா        14-05-2001 முதல் 21-09-2001 வரை

ஓ.பன்னீர்செல்வம்        21-09-2001 முதல் 01-03-2002 வரை

ஜெ.ஜெயலலிதா        02-03-2002 முதல் 12-05-2006 வரை

மு.கருணாநிதி        13-05-2006 முதல் 15-05-2011 வரை

ஜெ.ஜெயலலிதா        16-05-2011 முதல் 27-09-2014 வரை 



Thanks dailythanthi

Saturday, September 27, 2014

ஜெயலலிதா மற்றும் 3 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு:

ஜெயலலிதா மற்றும் 3 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு:
ஆட்சியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் ஒரு பாடம்!

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ Moulavi JS Rifayee வெளியிடும் அறிக்கை:

1991-1996ஆம் ஆண்டுகளில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 1996ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கு கடந்த 18 ஆண்டு காலமாக நீடித்து வந்தது. இந்த வழக்கைப் பொறுத்தமட்டில் நீண்ட காலம் நடந்த வழக்கு என்ற சாதனையைப் பெற்றுள்ளது. 

சமீபகாலமாக பல்வேறு பதவி ஆசை வார்த்தைகளுக்கு நீதிபதிகளும் பலி ஆகிறார்களோ என்ற சந்தேகம் பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ள நிலையில், நாட்டில் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் உச்சக்கட்ட அதிகாரம் நீதிமன்றத்திற்கு இருக்கிறது; நீதிமன்றம் தன்னுடைய அதிகாரத்தை வெளிப்படுத்தும் என்ற நம்பிக்கையை இந்த தீர்ப்பு ஏற்படுத்தியிருக்கிறது.

இது அதிகாரத்தில் இருக்கக்கூடியவர்களுக்கும்; அதிகாரத்தில் இருந்தால் எதையும் செய்யலாம் என்ற எண்ணம் கொண்டவர்களுக்கும் இந்தத் தீர்ப்பு நிச்சயம் ஒரு பாடமாக அமையும். 

இந்த தீர்ப்பினால் நாங்கள் வெற்றி பெற்றுவிட்டோம் என்று ஒரு தரப்பும், தோற்று விட்டோம் என்று இன்னொரு தரப்பும் எண்ணிக் கொண்டிருக்கலாம். ஆனால் இதற்கு அடுத்தடுத்த நீதிமன்றங்களும் இந்தத் தீர்ப்பை அலசக்கூடிய வாய்ப்புள்ளது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அந்தவகையில் ஆட்சியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் பாடமாக அமைந்துவிட்ட தீர்ப்பு என்று மனிதநேய மக்கள் கட்சி இந்தத் தீர்ப்பைப் பார்க்கிறது.

இவண்
ஜே.எஸ்.ரிபாயீ
தலைவர்

Saturday, September 20, 2014

அரசு மேல் நிலைப்பள்ளி ஆசிரியைக்கும் தொண்டி தமுமுக சார்பில் விருது வழங்கி கவுரவிக்கும் நிகழ்ச்சி


தொண்டியில் இன்று செய்யது முகம்மது அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் இந்த வருடம் அதிகளவில் மாணவர்கள் மதிப்பெண் பெற்றனர் இதற்கு பெரிதும் காரனமாக அமைந்த ஆசிரியர் ஆசிரியைக்கும் பள்ளிக்கும் தொண்டி தமுமுக சார்பில் விருது வழங்கி கவுரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது விருதுகளை அரசு மேல் நிலைப்பள்ளி தொண்டிக்கு வருவதற்கு இடத்தை தானமாக வழங்கிய கல்வி தந்தை கான்சாகிபு செய்யது முகம்மது அவர்களின் பேரன் செய்யது முகம்மது அவர்கள் விருதுகளை வழங்கினார் உடன் தமுமுக மாவட்ட தலைவர் சாதிக் பாட்சா தொண்டி ஐக்கிய ஜமாத் தலைவர் இஞ்சினியர் அபுபக்கர் மானவர் இந்தியா மாவட்ட செயலாளர் ஆசிக் அஹமது உள்ளிட்டோர் இருந்தனர்

Decan chronicle ஆங்கில பத்திரிகையில் தமுமுக தலைவர் ஜே.எஸ்.ரிபாயி அவர்கள் அளித்த பேட்டி

த மு மு க தலைவர் ரிபாய் வெளிப்படுத்தியதாவது , 

யார் இந்திய முஸ்லிம்களின் தேசப்பற்று குறித்து சந்தேகம் எழுப்பும் நபர்களின் கருத்தை மாற்றுவதற்கு மோடியின் பேட்டி அமையும் என நம்பிக்கை தெரிவித்தார் .

எனினும், மோடியும் , அவரது கட்சியை சார்ந்தவர்களும் முஸ்லிம்கள் குறித்து கூறிய கடந்த கால அறிக்கைகள், குஜராத் கலவரங்கள் ஆகியவற்றை முஸ்லிம்கள் மறந்துவிடுவார்கள் என்று நினைத்தால் அது தவறு என்று கூறினார்.

தேசபற்றை நிரூபிக்க பிரதமரின் சான்றிதழ் எங்களுக்கு தேவையில்லை. நாங்கள் ஏற்கனவே நாட்டிற்காக போராடியும், உயிரை தியாகம் செய்தும் இருக்கிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.

Tmmk president rifayee expressed hope that modi's statement would change the opinion of those who raise doubts about the patriotism of indian muslims.

however, he said that if modi and his party thought that muslims would forgot their past statements and the gujarat riots, they were wrong.we don't need prime minister's certificate to prove our patriotism .

We always fought sacrificed our lives for the country, he noted-

http://www.deccanchronicle.com/140920/nation-current-affairs/article/muslims-laud-pm-narendra-modi’s-remark

காஷ்மீர் வெள்ள நிவாரண நிதி தாரீர்!

காஷ்மீர் வெள்ள நிவாரண நிதி தாரீர்! பேரழகும் இளங்குளிரும் கொண்டாடி மகிழும் அழகிய காஷ்மீர், இப்போது பெரு வெள்ளத்தில் மூழ்கி சோகத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இமயத்தின் அடிவாரத்தில், பார்புகழ் போற்றும் மத்திய, மாநில அரசுகள் மட்டுமின்றி நம் இந்திய சகோதர, சகோதரிகள் துன்பத்தில் மூழ்கியுள்ளனர். அவர்களுக்கு உதவிட இந்தியா வெங்கும் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் நிவாரண நிதியை சேகரிக்கிறார்கள். 1999ல் ஒரிஸ்ஸா புயல் நிவாரண நிதி, 2001ல் குஜராத் பூகம்ப நிவாரண நிதி என தேசிய பேரழிவுகளின் போது, நாட்டு மக்களுக்காக நிவாரண நிதி சேகரித்த தமுமுக இப்போது, ஜம்மு&காஷ்மீர் மக்களின் துயர் துடைக்கவும் மக்களை தேடி வருகிறது. மனிதநேயம் கொண்டோரே... உங்கள் உள்ளங்களை திறந்து உதவிடுவீர்...!! வங்கி கணக்கு விபரம்: A/C No:034811011900313 TMMK TRUST, Andhra Bank, Chennai Main Branch, Rajaji Salai, Chennai-1 தலைமையகம்: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் 7, வடமரைக்காயர் தெரு, மண்ணடி, சென்னை &1 போன்: 044&25247824

Tuesday, September 16, 2014

காஷ்மீர் மக்களுக்காக நிவாரண நிதி


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக பாதிக்கப்பட்ட காஷ்மீர் மக்களுக்காக நிவாரண நிதி திரட்டப்பட்டு வருவது தாங்கள் அறிந்ததே. முதலாவதாக சென்னை தலைமையகத்திற்கு ‘ஹலால் இந்தியா பிரைவேட் லிமிடெட்’ என்ற நிறுவனத்தின் சார்பாக அதன் நிர்வாகிகள் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ அவர்களிடம் ரூ.10,000/&க்கான காசோலையை வழங்கினார்கள். மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி உடன் இருந்தார்.

Sunday, September 14, 2014

தத்தளிக்கும் காஷ்மீர்: ஒரு முக்கிய வேண்டுகோள்

தத்தளிக்கும் காஷ்மீர்:
ஒரு முக்கிய வேண்டுகோள்
உலகில் உன்னதமான சுற்றுலாத்தலமான, இயற்கை எழில் நிறைந்த காஷ்மீர், சமீபத்தில் ஏற்பட்ட மழை மற்றும் வெள்ளப் பெருக்கினால் அழிவின் அடையாளமாக காட்சியளிக்கிறது.
மழை நின்று ஒருவாரம் ஆகியும் வெள்ளத்தின் காரணமாக ஸ்ரீநகரின் வீதிகள் அனைத்துமே மூழ்கியுள்ளன. ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டாலும், லட்சக்கணக்கான மக்கள் அதிலே மாட்டிக்கொண்டு இன்னமும் பரிதவித்து வருகின்றனர்.
வீடுகளை, உடைமைகளை இழந்தவர்களாக, உடுப்பதற்கும், உண்ணுவதற்கும் இல்லாதவர்களாக காஷ்மீர் மக்கள் அல்லல்பட்டு வருகின்றனர். அடுத்த வேளை உணவிற்கு ஏங்கி நிற்கும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இப்போதும் பல கிராமங்கள் மூழ்கிக் கிடக்கின்றன. வெள்ளம் வடிந்து இயல்பான நிலைக்கு அவர்கள் திரும்பவே நீண்ட காலம் ஆகலாம்.
கடந்த 100 ஆண்டுகளில் ஏற்படாத ஒரு மோசமான வெள்ளப் பேரழிவு இது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மத்திய, மாநில அரசுகளும், இந்திய ராணுவமும் மீட்புப் பணியில் ஈடுபட்டும், உதவியும் செய்து வருகின்றன. எனினும் அங்கிருந்து வரக்கூடிய செய்திகளும், அங்குள்ளவர்களுடன் நாம் தொடர்பு கொண்டபோது கிடைத்த செய்திகளும் நம்மை மிகுந்த வேதனைக்குள்ளாக்குகின்றன. அதிர்ச்சியடைய செய்கின்றன.
இந்தியாவின் எந்தப் பகுதியில் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டாலும், அந்த துயரத்தில் பங்குபெற்று உதவிகளை செய்துவரக்கூடிய தமுமுக, ஏற்கனவே குஜராத் நிலநடுக்கத்தின் போதும், ஒரிஸ்ஸா வெள்ள பாதிப்பின்போதும் கோடிக்கணக்கில் நிதியுதவியும், பொருளுதவியும் செய்திருக்கிறது.
அதேபோல் காஷ்மீர் துயரத்திலும் தன்னை இணைத்துக் கொள்கிறது. தன்னுடைய லட்சக்கணக்கான தொண்டர்களையும் அந்த துயரத்தில் பங்கெடுக்கச் செய்யும் விதமாக அம்மாநில மக்களுக்காக தாராள பொருளாதாரத்தைத் திரட்டி, அனுப்புவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே உ.பி. மாநிலம் முசப்பர் நகர் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பொருளுதவிகளை கொண்டு சேர்க்க எடுக்கப்பட்ட முயற்சியின் இறுதிக்கட்டமாக வரும் 19.09.2014 அன்று நமது கழகத்தின் மூத்த தலைவர் எஸ். ஹைதர் அலி அவர்களும், பொருளாளர் ஓ.யூ. ரஹ்மத்துல்லாஹ் அவர்களும் முசப்பர் நகர் செல்ல இருக்கிறார்கள்; இன்ஷாஅல்லாஹ்.
அதேபோன்று காஷ்மீர் மக்களுக்காகவும் நம்மால் இயன்ற அளவிற்கு குறைந்தது 2 கோடி ரூபாயாவது திரட்ட முடிவு செய்துள்ளோம். மாநில துணைத் தலைவர் குணங்குடி ஆர்.எம்.அனிபா அவர்களின் தலைமையில் மாநிலச் செயலாளர்கள் கோவை செய்யது, பி.எஸ்.ஹமீது ஆகிய மூவர் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
ஆகவே துண்டுப்பிரசுரங்கள், பிற தகவல் தொடர்பு சாதனங்கள் மூலமாகவும் காஷ்மீர் துயரத்தை எடுத்துச்சொல்லி நிதி திரட்ட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். அதேபோல் அடுத்தடுத்து வரக்கூடிய ஒவ்வொரு ஜும்ஆவிலும், எதிர்வரும் ஹஜ் பெருநாள் தினத்தன்றும் அனைத்து பள்ளிவாசல்கள் மற்றும் ஈத்காக்களிலும் நிதி திரட்டி காலதாமதமின்றி வரும் 10.10.2014க்குள் தலைமையிடம் ஒப்படைக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.
நீங்கள் செய்யும் தாராள பொருளுதவி பாதிக்கப்பட்ட காஷ்மீர மக்களின் கண்ணீரைத் துடைப்பதுடன், இறைவனின் அருளையும் பெற்றுத்தரும் என்பதையும் மறவாதீர்.
- தமுமுக தலைமையகம்

Wednesday, September 3, 2014

கீழக்கரை நகர தமுமுக சார்பில் பொதுக்கூட்டம்








இராமநாதபுரம் கிழக்கு கீழக்கரை தமுமுக சார்பில் 1/9/2014 அன்று மாலை பொதுக்கூட்டம் நடைப்பெற்றது பாலஸ்தீனத்தில் நடப்பது என்ன என்ற தலைப்பில் வரலாற்று உணமைகளை தமுமுக மாநில செயலாளர் சகோதரர் கோவை செய்யது அவர்கள் தனது சிறப்புரையில் எடுத்துரைத்தார்.

மாவட்ட தலைவர் சகோதரர் தொண்டி சாதிக்,மாவட்ட செயலாளர் தேவிபட்டினம் ஊராட்சிமன்ற தலைவர் சகோதரர் ஜாகீர் ஹுசைன்,பொருளாலர் சகோதரர் வானி சித்திக் மற்றும் மாவட்ட நகர நிர்வாகிகள் பொதுமக்கள் பங்கேற்றனர்