Tuesday, March 31, 2009

கூட்டணி பற்றி முடிவு : ம.ம.க இன்றும் பேச்சுவார்த்தை நடக்கிறது

சென்னை, மார்ச்.31- பாராளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி வைப்பது என்பதில் மனித நேய மக்கள் கட்சியில் தொடர்ந்து குழப்பம் நிலவி வருகிறது. இதனால் பல்வேறு கட்சிகளுடன் தொடர்ந்து கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை இன்றும் நடக்கிறது.

ஏற்க மறுப்பு

தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் மனித நேய மக்கள் கட்சி பாராளுமன்ற தேர்தலில் தங்கள் கட்சிக்கு 6 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. ஆனால் அந்த கட்சிக்கு ஒரு இடம் மட்டுமே கொடுக்க தி.மு.க. தலைமை முடிவு செய்தது.

ஆனால் அந்த ஒரு தொகுதியை மனித நேய மக்கள் கட்சி ஏற்க மறுத்து விட்டது.

இதற்கிடையே தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளின் விவரங்களை முதல்-அமைச்சர் கருணாநிதி கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்டார். இதில் மனித நேய மக்கள் கட்சி இடம் பெறவில்லை.

உயர்நிலைக் கூட்டம்

இந்த நிலையில் மனிதநேய மக்கள் கட்சியின் உயர்நிலை கூட்டம் சென்னையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்று மாலை 5.30 மணிக்கு கட்சியின் கூட்டணி யாருடன் என்று அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் இரவு 7.30 வரை எந்த முடிவும் கூறப்படவில்லை.

பின்னர் இது குறித்து கட்சியின் மாநில துணை பொது செயலாளர் அன்சாரி கூறுகையில், காலையில் இருந்து எங்கள் கட்சியின் உயர்மட்ட குழுவினர் யாருடன் கூட்டணி வைப்பது என்பது குறித்து ஆலோசனை நடத்திவருகின்றனர். தி.மு.க., அ.தி.மு.க.வுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. மேலும் தமிழகம் முழுவதும் இருக்கும் மாவட்ட தலைவர்களிடமும் கட்சியின் நிலை குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம். இதன் மூலம் கட்சியின் செல்வாக்கையும், பலத்தையும் அறிந்து அதன்படி முடிவு எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி தி.மு.க.வுடன் தொடர்ந்து நீடிப்பதா அல்லது அ.தி.மு.க.வுடன் இணைவதா அல்லது சுயேச்சையாக போட்டியிடுவதா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும். இந்த முடிவு அதிகாரபூர்வமாக நாளை அறிவிக்கப்படும் என்றார்.

குலாம் நபி ஆசாத்

இதற்கிடையில் தமிழக காங்கிரஸ் மேலிட பார்வையாளர் குலாம் நபி ஆசாத் மனிதநேய மக்கள் கட்சியை தொடர்பு கொண்டு சமரசம் பேசியதாகவும், தொடர்ந்து எங்கள் கூட்டணியில் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும், தொடர்ந்து கூட்டணியில் இருப்பதற்கு தி.மு.க. சார்பில் 1 தொகுதியும், காங்கிரஸ் சார்பில் 1 தொகுதியும் மொத்தத்தில் 2 தொகுதிகள் தரப்படும் என்று பேச்சுவார்த்தை நடப்பதாகவும் கூறப்படுகிறது.

நன்றி : தினத்தந்தி

Friday, March 27, 2009

மனிதநேய மக்கள் கட்சி ஒரு தொகுதியை ஏற்கவில்லை!

மனிதநேய மக்கள் கட்சி ஒரு தொகுதியை ஏற்கவில்லை!
மனிதநேய மக்கள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி அவர்கள் வெளியிடும் அறிக்கை:
மனிதநேய மக்கள் கட்சி திமுக கூட்டணியில் ஒரு தொகுதியை ஏற்றுக் கொண்டது போல சில செய்தி ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இது தவறான தகவலாகும். மனிதநேய மக்கள் கட்சிக்கு 6 நாடாளுமன்ற தொகுதிகளில் தலா 2 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் பலம் உள்ளது. இதர தொகுதிகளில் சராசரியாக தலா 50 ஆயிரத்திற்கும் அதிகமாக வாக்காளர்களின் ஆதரவு இருக்கிது.
நாங்கள் ஆறு தொகுதிகளை குறிவைத்து கூட்டணி பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறோம். திமுகவிடமும் நாங்கள் நடத்தி வரும் பேச்சுவார்த்தைகள் இன்னும் முழுமையடையவில்லை. ஒரு தொகுதியை ஏற்கும் பேச்சுக்கே இடமில்லை. எனவே. வதந்திகளை நம்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம். தேவைப்பட்டால், தனித்து போட்டியிடவும் தயங்கமாட்டோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

Wednesday, March 25, 2009



காயிதேமில்லத் பேரவையின் துணைச் செயலாளர் ஹமீது ரஹ்மான் அவர்களுக்கு! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்தஹூ






.


கீழை S. முஜிபு ரஹ்மான்

முஸ்லிம் லீக் ன் இணைய தளத்தில் உங்களின் கடிதத்தை பார்த்தேன். ஒரு (தமுமுக) இணையதளத்தில் வெளியான கேள்வி பதில் தாங்களை பாதித்து பதில் கூற வைத்துள்ளதோ என்று கருதுகின்றேன்.

எனினும் எனக்கு தெரிந்த கருத்துகளை தாங்கள் முன் வைக்கின்றேன். கற்றரிந்தவர் தாங்கள் என்பதால் நியாயங்களை இன்ஷாஅல்லாஹ் தாங்களும் ஏற்றுக் கொள்ளலாம். தாங்களின் கடிதத்தின் படி சென்ற தேர்தலின் போது அது சமயத்தில் தான், தாங்கள் கூட்டணி பற்றி முடிவு செய்து அறிவித்தாக எழுதியுள்ளீர்கள். ஆனால் இந்த தேர்தலின் போது முன் கூட்டியே கூட்டணி பற்றி அறிவித்து விட்டதாக எழுதியுள்ளீர்கள். 100 ஆண்டு கால பாரம்பரிய கட்சியின் அனுபவம் இதில் மிளிர்வதாக தெரிகிறது. ஆனால் 50 ஆண்டுகளை தாண்டாத இந்திய முழுவதும் உள்ள பெரும்பான்மையான கட்சிகள் அனைத்தும் இன்று வரை தனது பழைய கூட்டணியையோ அல்லது புதிய கூட்டணியையோ முடிவு செய்யாத நிலையில் தான், தனது சமூக மக்களின் நலனை பற்றி தேசிய மற்றும் மாநில கட்சிகளிடம் பேசி வருதை தாங்கள் அறியாமல் இருக்க வாய்ப்பில்லை. அதே பாணியில் தான் தமுமுக வின் அரசியல் பிரிவான மனிதநேய மக்கள் கட்சியும் கூட்டணி பற்றி பேசி வருகிறது. இதில் இழிநிலை அரசியல் எங்கிருக்கிறது? சமுதாயத்திற்கு உரிய பிரதிநிதிதுவம் வழங்கபட வேண்டும் என்ற உரிமை போராட்டம் தான் முன் நிற்கிறது என்பதை தாங்களுக்கு தெரிவித்து கொள்ளுகின்றேன்.

கிடைத்த பதவிகளாக இருந்தாலும், கிடைக்கவிருக்கும் பதவிகளாக இருந்தாலும் தமுமுக அல்லது மமக வை பொறுத்தவரை இம்மையில் மக்களுக்கும், மறுமையில் அல்லாஹ{க்கும் பதில் சொல்ல வேண்டும் என்ற கவலையை உள்ளத்தில் கொண்டு பொறுப்பாக தான் பார்க்கின்றோம். பதவியாக ஒரு போதும் உள்ளதில் எண்ண மாட்டோம். இதே மனநிலையில் தான் தாங்களும், பாரம்பரிய மிக்க மேன்மை பொருந்திய தாங்களின் முஸ்லிம்லீக் அமைப்பினரும் பதவியை பார்ப்பார்கள் என்றே கருதுகின்றேன்.

அரசு பதவியில் (பொறுப்பில்) ஒட்டிக் கொண்டு என்று எழுதியுள்ளீர்கள். சமுதாயத்தின் நன்மையை கருதி மட்டுமே அரசு பதவிகளில் (பொறுப்புடன்) இருப்போம் என்பதில் தமுமுக மற்றும் மமக தெளிவாக இருக்கிறது. பதவியை காட்டினால் உரிமையை விட்டு கொடுக்க மாட்டோம். எப்படிபட்ட பதவியை தந்தாலும் அது எங்களின் பொறுப்பை அதிகமாக்கியுள்ளதாக மட்டுமே கருதுவோம். உரிமைகளை கேட்க தயங்க மாட்டோம். பதவி என்பது எங்களை பொறுத்தவரை அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு தான் என்பதில் தெளிவாக உள்ளோம். தமிழகத்தில் இருந்த சமுதாய அரசியல் கட்சிகள் நிறைவாக செயல்படும் என்று பதிமூன்று ஆண்டுகள் பொறுத்திருந்து பார்த்து விட்டு, அவைகளின் செயல்பாடு மக்களுக்கு திருப்திகரமாக இல்லாத காரணத்தால் சமுதாயத்தின் நியாயமான எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற தமுமுக தனது அரசியல் பிரிவாக மமக வை தொடங்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது என்பதை நாணயத்துடன் நியாயவான்கள் பேசிக் கொள்ளுவதை தாங்கள் அறியாமலிருக்க வாய்ப்பில்லை.

பதிமூன்று ஆண்டுகளாக நாம் யாரையும் உரசி பார்க்கும் எண்ணம் கொண்டதும் இல்லை. அப்படி எண்ணம் கொள்ளப் போவதுமில்லை. மனித சமுதாயத்தை வஞ்சிக்க நினைக்கும் பாஸிசத்தை எதிர்ப்போம். அது அவர்களுக்கு உரசலாக தெரியலாம். எப்படி நீங்கள் எங்களை விமர்சித்தாலும், ஒரு காலமும் முஸ்லிம் லீக்கை நாங்கள் அப்படி பட்ட பாஸிச பட்டியலில் சேர்க்க மாட்டோம். முஸ்லிம் லீக்கை பொறுத்தவரை எங்களின் பார்வை என்னவென்றால் எங்களின் வீரிய மிக்க மூத்தோர் பணியற்றிய போற்றுதலுக்குரிய அமைப்பு. கண்ணியமிக்க தலைவர்கள் பணியாற்றிய அமைப்பு. தற்போது சமுதாயத்தின் எதிர்பார்ப்பை இவ்வமைப்பு நிறைவேற்ற முடியாத பலகீன நிலையில் இருப்பதை நினைக்கும் போது உளமாறஎங்களுக்கும் வருத்தம் தான்.

கடந்த காலத்தின் போது முஸ்லிம்லீக்கோடு நல்லுறவுடன் இருக்கவே விரும்பியிருக்கின்றோம். எப்போதும் நல்லுறவை மட்டும் தான் விரும்புவோம்.

அதே சமயத்தில் சமுதாயத்தை ஏமாற்ற நினைக்கும் அரசியல்வாதிகளுக்கு நிச்சயமாக மென்மையானவர்களாக இருக்க மாட்டோம். ஏற்றுக் கொண்ட பொறுப்புகளுக்காக அல்லாஹ்விடம் குற்றம் பிடிக்கப்பட்டு விட கூடாது என்பதை மட்டுமே கவலையாக கொண்டு செயல்படுவோம். அறிவாளிகளுக்கும், ஆற்றல் மிக்கவர்களுக்கும் மறுமை நன்மைகளை பெற்று தரும் நல்ல களமாக தமுமுக மற்றும் மமக செயல்படும். உங்களின் தனிப்பட்ட ஆற்றலுக்கும் அல்லாஹ் நிறைவான நன்மைகளை தர துவாச் செய்கின்றோம்.

தமுமுக மற்றும் மமக வை நோக்கி நியாய உணர்வோடு வரும் உங்களின் ஒவ்வொரு விமர்சனத்துக்கும், அறிவுரைக்கும், கண்டத்துக்கும் அல்லாஹ{க்கு மட்டுமே பயந்தவர்களாக! அதன் முக்கியத்துவம் கருதி கவனத்தில் எடுத்துக் கொள்வோம். அதே சமயத்தில் அர்த்தமற்ற விமர்சனங்களைப் பற்றி கவலைப்பட நேரமில்லை. உங்களின் நன்முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற துவாச் செய்கின்றோம். எங்களின் நன்முயற்சிகள் வெற்றி பெற நீங்களும் துவாச் செய்யுங்கள்.

அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவனாக இருக்கின்றான்.
வஸ்ஸலாம்.
இப்படிக்கு
கீழை S. முஜிபு ரஹ்மான்
தொடர்பு எண் : 050 5030882
UAE
____________ _________ _________ _________ __

பரிதாபத்துக்குரியவர்கள் ஆழ்ந்த அனுதாபம்படுவது தங்களின் பலகீனத்தை மறைக்குமோ?




ஜேனா என்ற ஜெய்னுல்ஆப்தீன்
00919841624418
கீழக்கரை


முஸ்லீக் இணையத்தில் வந்தவைக்கு பதில்

அரசியல் ஆரோக்கியம் என்று கூறி பூசாரி, மடாதிபதி, சாமியார்கள், ஜோசியக்கார்கள் காலில் விழுவதும்,மதவெறிபிடித்த இந்துமுன்னனியின் கூட்டத்தில் கலந்து கொண்டு வாழ்த்துவதும் லீகின் புதுபரிணாமமா? அல்லது இயல்பு நிலையா? தவறுதலாக நடந்து விட்ட நிகழ்வாகவே கருதுவோம்.

அரசியலில் உள்ளடி வேலை, அரசியல் வியாபாரம் என்றெல்லாம் எழுதியுள்ளீர்கள். நீண்ட நாட்களாகஅதுபோன்ற அரசியலில் இருக்கும் தாங்களுக்கு மட்டுமே நன்றாக தெரிந்திருக்க முடியும். அப்படி பட்ட அரசியலுக்கு முற்று புள்ளி வைக்கத்தான் மமக வை கண்டுள்ளோம்.

சமுதாயம்! சமுதாயம்!! என்றுகூறிய உங்களின் பழைய உள்ளடி வேலையுடன் கூடிய வியாபாரம் பயன் தராமல் போய்விடுமோ என்ற பதட்டம் உங்களின் எழுத்துக்களில் தெரிகிறது. தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு அரசியலில் உரிய பிரதிநிதிதுவம் கொடுக்கப்படுகிறதா? அல்லது ஏமாற்றபடுகிறதா? அல்லாஹூவுக்கு பயந்து சொல்லுங்கள்.

கண்ணியிமிக்க காயிதே மில்லத்தின் திறனான முடிவுகளை கண்டு அதிர்ந்தார்கள் அன்றைய அரசியல்தலைவர்கள். கண்ணியமிக்க கயிதேமில்லத்தின் தியாகத்தை மட்டுமே சொல்லி கொண்டு, மறுப்பக்கத்தில் சமுதாயத்தின் எந்த எதிர்பார்ப்பையும் நிறைவேற்றாமல் வீறு நடை, பீடு நடை என்றால் அதை எற்றுக் கொள்ளும் ஏமாளி சமுதாயமாக இனியும் இருக்க மாட்டோம் என்பதை நடைமுறையில் நிருபித்து காட்டியது தான் மமக வின் தொடக்க விழா மாநாட்டில் கலந்து கொண்ட சமுதாய மக்களின்
அற்பணிப்பான பங்களிப்பு.

சிவப்பு விளக்கு வாகனத்தில் பவனி வருவதாக எழுதியுள்ளீர்கள். பல சகோதர துரோகத்திற்கு மத்தியில் அல்லாஹ{க்கு பயந்து சிவப்பு விளக்கு வாகனத்தின் அதிகாரத்தை சமுதாயத்தின் நன்மைக்காக மட்டும் உயிரையும் துச்சமன நினைத்து மிகத் துணிச்சலாக செயல்பட்டு வரும் எங்கள் பொதுச் செயலாளரின் ஆற்றல்மிக்க பணிக்கு சன்றிதழ்கள் பல இங்கு கிடைத்தாலும் மறுமையில் இறைவன் வலது கையில் தரும் நற்ச் சன்றிதழையே இலக்காக கொண்டுள்ளோம்.

தமுமுக வை தடை செய்ய ராமகோபலன் கூறியதாக சொல்லுகிறீர்கள். ஆர்.எஸ்.எஸ்., பிஜேபி, மற்றும் அனைத்து இந்துவா பாஸிச அமைப்புகளின் தலைமையகத்திலும் தமுமுகப் பற்றி பேசப்படுவது வழக்கமான ஒன்று. வட நாட்டு மேடைகளில் கூட தமுமுகப் பற்றி நரேந்திர மோடி பேசுகிறார்.

செயல்பாட்டுடன் இருக்கும் அமைப்புகளைப் பற்றி பேசுவார்கள். லீக்கை பற்றிய அவர்களின் பார்வையில் செயல்பாடுகள் இல்லாமல் போய்விட்ட தொண்டர்கள் இல்லாத அமைப்பு. அதை அழிப்பது பற்றியும் பேசுகிறார்களா? எங்களை பொறுத்தவரை முஸ்லிம்லீக் செயல்பாடுகள் அற்றநிலையில் இருந்து கொண்டு தான் இருக்கிறது. முஸ்லிம்லீக் பிரதிநிதிகள் பாரளுமன்றத்திலும் முஸ்லிம் லீக் என்றே அழைக்கப்பட வேண்டும் என்பதே எங்களின் பார்வையில் சமுதாயத்தின் அவா? முஸ்லிம்லீக்கிற்கு புது தெம்பு கொடுக்க தலைமை பொறுப்பை உங்களைப் போன்ற இளைஞர்கள் ஏற்று செயல்படுங்கள். ஆற்றல் மிக்க அமைப்பாக உருவாக்குங்கள். அதன் பின்பு அனைவருக்கும் அழைப்பு விடுங்கள். இல்லை என்றால் அறிவுக்கும், திறமைக்கும். ஆற்றலுக்கும், நேர்மைக்கும், தூய்மைக்கும், துணிச்சலுக்கும் முக்கியத்துவம் தரப்பட்டு இறையச்சம் என்ற கோட்பாட்டை கொண்டு செயல்பட்டு வரும் தமுமுக மற்றும் மமக வில் இணைந்து பணியாற்ற வாருங்கள் என்று அன்புடன் மறுமையின் இன்பம் காண அழைக்கின்றோம்.

மறுமையில் இன்பம் என்பது கனாகாண்பது இல்லை. நடக்கவிருக்கும் உண்மை. மறுமை வெற்றியை தரும் நேரான வழியில் செல்ல அல்லாஹ் அருள்புரியட்டும்.
வஸ்ஸலாம்.
இப்படிக்கு
ஜேனா என்ற ஜெய்னுல்ஆப்தீன்
00919841624418
கீழக்கரை

Sunday, March 22, 2009

கத்தாரில் இஸ்லாமிய பொதுக் கூட்டம் வாரியத்தலைவர் ஹைதர் உரை



3 தொகுதிகளைத் தந்தால் கூட்டணி

திருவாரூர்: லோக்சபா தேர்தலில் மனித நேயக் கட்சிக்கு 3 தொகுதிகளைத் தர வேண்டும். அப்படித் தரும் கட்சியுடன்தான் கூட்டணி வைப்போம் என மனித நேயக் கட்சியின் மாநிலப் பொருளாளர் ஹாரூண் ரஷீத் கூறியுள்ளார்.

திருவாரூர் வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், மனித நேயக் கட்சி வேட்பாளர்கள் லஞ்சம், ஊழலுக்கு எதிரானவர்கள். அவற்றை ஒழிக்கப் பாடுபடுவார்கள்.

எங்களுக்கு தமிழகத்தில் 10 தொகுதிகளில் வெற்றி வாய்ப்புள்ளது. இந்தத் தொகுதிகளை முன்வைத்து எங்களுடன் ஒத்துப் போகும் கட்சியுடன் பேச்சு நடத்துவோம். குறைந்தது 3 தொகுதிகளையாவது எதிர்பார்க்கிறோம். அப்படித் தரும் கட்சியுடன் கூட்டணி வைப்போம்.

திமுகவுக்கே முன்னுரிமை தர விரும்புகிறோம். அதேசமயம், அதிமுக 3 தொகுதிகளைக் கொடுத்தால் அதனுடன் கூட்டணி அமைக்கவும் தயாராக உள்ளோம். அதேசமயம், பாஜகவுடன் எதிர்காலத்தில் கூட்டணி வைக்க மாட்டோம் என அதிமுக உறுதியளிக்க வேண்டும் என்றார் ரஷீத்.
thanks by oneindia.in

Monday, March 16, 2009

எங்களுக்கு நியாயமான இடப் பங்கீடு தேவை.


சென்னையில் மமகவின் முதல் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்
மனிதநேய மக்கள் கட்சியின் முதல் கொள்கை விளக்கப் பொதுக் கூட்டம் கடந்த 15.03.09 அன்று மண்ணடி, தம்புச்செட்டித் தெருவில் நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் எச். முஹம்மது தமீம் தலைமை தாங்கினார். தமுமுக மாவட்டச் செயலாளர் எப். உஸ்மான் அலி, துறைமுகம் மீரான், எஸ்.ஏ. அஸீம் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
வடசென்னை மாவட்ட தமுமுக தலைவர் பி.எஸ். ஹமீது மமகவின் அமைப்புச் செயலாளர் எஸ்.எம். ஜெய்னுல் ஆபிதீன், பொருளாளர் எஸ்.எஸ், ஹாரூண் ரஷீது, துணைப் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி ஆகியோர் சிறப்புரையாற்றினர். இந்தப் பொதுக்கூட்டத்தில் 2ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.

திமுகவுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்திவிட்டு கூட்டணி குறித்து இறுதி முடிவு செய்வோம். நாங்கள் திமுகவுடன் இருக்கத் தான் விரும்புகிறோம். ஆனால், எங்களுக்கு நியாயமான இடப் பங்கீடு தேவை. ஒரு சீட் தந்து ஏமாற்றும் திட்டத்துக்கு எல்லாம் அடிபணிய மாட்டோம் என்று மனித நேய மக்கள் கட்சி கூறியுள்ளது.


தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் அரசியல் கட்சியான மனித நேய மக்கள் கட்சியின் தேர்தல் நிலை விளக்கப் பொதுக்கூட்டம் மண்ணடியில் நடந்தது.

இதில் பேசிய கட்சியின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் தமீமுன் அன்சாரி,

முஸ்லிம்களை இனி யாரும் ஏமாற்ற முடியாது. ஒரு சீட் கலாசாரம் எல்லாம் முடிந்துவிட்டது. தமிழகத்தில் 75 லட்சம் முஸ்லிம்கள் உள்ளனர். அவர்களுக்கு உரிய அரசியல் பங்கு இதுவரை தரப்படவில்லை. வரும் லோக்சபாத் தேர்தலில் அது சரி செய்யப்பட வேண்டும்.


முக்கிய கட்சிகளான திமுக, அதிமுக, தேமுதிக ஆகியவை எங்களுக்கு கூட்டணி அழைப்பு விடுத்துள்ளன. தமிழகத்தில் திமுக, அதிமுக உள்பட எந்தக் கட்சியும் இனி எங்களைத் தவிர்த்துவிட்டு, அரசியல் செய்ய முடியாது.

திமுகவுடன் திங்கள்கிழமை பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம். செவ்வாய்க்கிழமை நிர்வாகக் குழு கூடி, கூட்டணி குறித்து இறுதி முடிவு செய்யப்படும். நாங்கள் திமுகவுடன் இருக்கத் தான் விரும்புகிறோம். ஆனால், எங்களுக்கு நியாயமான பங்கீடு தேவை.

ஒரு சீட் தந்து ஏமாற்றும் வேலைக்கு எல்லாம் அடிபணிய மாட்டோம். எங்களின் அரசியல் வியூகம் பின்னர் வேறு மாதிரியாக இருக்கும் என்றார்.

இதற்கியையே லோக்சபா தேர்தல், அதி்ல் முஸ்லிம்களின் பங்கு, அமைக்க வேண்டிய கூட்டணி ஆகியவை குறித்து சென்னையில் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஒரு ஹோட்டலில் இஸ்லாமிய கட்சிகள் மற்றும் சமுதாய அமைப்புகளின் பிரதிநிதிகளின் கூட்டம் நடந்தது.

அதில் மனித நேய மக்கள் கட்சியின் சார்பில் ஹாருண் ரஷீத், முஸ்லிம் லீக் சார்பில் அப்துல்லா, ஜமாத் உலாமாக்கள் தலைவர் தர்வீஸ் ரஷாதி, மக்கள் ஜனநாயக கட்சி, சமூக நீதி அறக்கட்டளை, இந்திய தேசிய மக்கள் கட்சி, மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் உள்பட பல அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

பல பிரிவாகப் பிரிந்து கிடக்கும் இஸ்லாமிய கட்சிகள், அமைப்புகளை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து இணைந்து செயல்படுவது, தேர்தலில் முஸ்லிம்களுக்கு அதிக சீட்டுகள் ஒ ஒதுக்கும் அணியுடன் கூட்டணி அமைப்பது என்று அதில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Saturday, March 14, 2009

ராமநாதபுரத்தை குறிவைக்கும் த.மு.மு.க.

தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்று ராமநாதபுரம் லோக்சபா தொகுதியை பெற த.மு.மு.க., திட்டமிட்டுள்ளது. கடந்த 2004ல் நடந்த லோக்சபா தேர்தலில் த.மு.மு.க.,வினர், தி.மு.க., தலைமையிலான கூட்டணி வேட்பாளர்களுக்கு தேர்தல் பணி ஆற்றினர். தற்போது த.மு.மு.க., சார்பில் மனித நேய மக்கள் கட்சி துவக்கப்பட்டுள்ளது. இதன் துவக்க விழாவில் அரசியல் தலைவர்களின் பார்வையை தங்கள் பக்கம் திரும்ப செய்தனர். இதை தொடர்ந்து, லோக்சபா தேர்தலில் குதிப்பதற்கான ஆயத்தப்பணிகளையும் துவக்கி உள்ளனர். மாவட்ட நிர்வாகிகளை சென்னைக்கு அழைத்து சாதகமான தொகுதி நிலவரங்கள் குறித்து விசாரித்துள்ளனர். அதன்படி சாதகமான தொகுதிகளை கணக்கெடுத்துள்ளனர். தி.மு.க., தேர்தல் பணிக்குழுவினருடன் தொகுதி பங்கீடு சம்பந்தமாக நடைபெறும் பேச்சு வார்த்தையில் ராமநாதபுரம் உட்பட ஆறு தொகுதிகளை கேட்க முடிவு செய்துள்ளனர்.

நன்றி : தினமலர்

தமிழகத்தில் முஸ்லிம்கள் பெருவாரியாக வாழும் மாவட்டங்களின் புள்ளி விபரம்.

மண்டிய இருள் கிழிக்கும் மக்களின் எழுச்சி! மாற்று அரசியலுக்கான மாபெரும் புரட்சி!! என்ற முழக்கத்தோடு களத்தில் புறப்பட்டிருக்கும் தமுமுக வின் மனித நேய மக்கள் கட்சி இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் முதன் முதலாக பலப் பரிச்சை பார்க்கப் போகிறது வெற்றிக் கனிகளை பறித்து தன் சமுதாய மக்களுக்கு புகட்டி எட்டுத்திசையிலும் வெற்றிக் கொடி நாட்டிட இருகரம் ஏந்தி இறைவனிடம் துவாச் செய்கிறோம்.

அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு செய்வதில் முனைப்புக்காட்டிவரும் இவ் வேளையில் முஸ்லிம் சமுதாய மக்கள் அதிகமாக வாழும் சில குறிப்பிட்ட மாவட்டங்களில் உள்ள நமது சமுதாய மக்கள் தொகையின் பட்டியலை வெளியிடலாம் என்று ஆசைப்பட்டேன் அதன் விபரங்களை மக்கள் பார்வைக்கும் குறிப்பிட்டுள்ள இந்த தொகுதிகளில் எறும்புகளைப் போன்று சுருசுருப்பாகவும் தேனிக்களைப் போல் கடினமாகவும் உழைக்கும் மனித நேய மக்கள் கட்சி தொண்டர்களுக்காகவும் தொகுத்து வழங்கி உள்ளேன்.


எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டில் ஈடுபட்டுவரும் அரசியல் கட்சிகள் தமிழக மக்கள் தொகையில் பெருவாரியாக உள்ள முஸ்லீம் சமுதாய மக்களைக் கொண்ட அரசியல் கட்சிகளுக்கு ஒரு சீட்டு கொடுத்து வந்த திரவிடக் கட்சிகள் கடந்த காலங்களில் கிள்ளுக்கீரையை போல் பாவித்த நிலையை மாற்றி இந்த சமுதாயத்திற்குரிய பிரதிநிதித்துவத்தை முறையாக வழங்குவது தான் அவர்களது வெற்றிக்கு சிறந்தது என்று கூத்தாடிகளுக்கும், சாதி நாட்டமைகளுக்கும் சிகப்பு கம்பளம் விரிக்கும் தமிழக அரசியல் கட்சிகளுக்கு சொல்லிக்கொள்கிறோம்.


தமிழக அரசு 2001 ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாய் வெளியிட்டுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பின் புள்ளிவிபரப்படி இதோ எங்கள் மக்கள் தொகையின் புள்ளி விபரக் கணக்குகள்.


இந்தக் கணக்கெடுப்பு எடுத்த ஆண்டு 2001

இந்தத்தேர்தல் சந்திக்கும் ஆண்டு 2009

சமுதாய வாரியாக மக்கள் தொகை கூடுதலை நீங்களே சேர்த்துக் கொள்ளுங்கள்.

தமிழக மக்கள் தொகை மொத்தம்: 62405679

சாதிவாரியாக
மக்கள் தொகை விபரம்
இந்துக்கள்: இதில் அனைத்து பிரிவினரும் அடங்கும்
54985079
கிருஸ்தவர்கள்:
3785060
முஸ்லிம்கள்
3470647
Jains Population
83359
Buddhists Population
5393
Sikhs Population
9545
Others Population
7252
Religion not stated Population
59344

முஸ்லிம்கள் பெருவாரியாக உள்ள மாவட்டங்களின் விபரம்

மாவட்டம்

சாதிகளின் விபரம்
தொகை

சென்னை

Hindus Population
3573356


Muslims Population
379206


Christians Population
331261

மாவட்டம்

சாதிகளின் விபரம்

எண்னிக்கை

இராமநாதபுரம்

Hindus Population
928090

Muslims Population
174079

Christians Population
84092

மாவட்டம்

சாதிகளின் விபரம்
எண்னிக்கை

நாகபட்டிணம்

Hindus Population
1328144

Muslims Population
112753

Christians Population
45780

மாவட்டம்

சாதிகளின் விபரம்
எண்னிக்கை

தஞ்சை

Hindus Population
1925677


Muslims Population
163286


Christians Population
124945

மாவட்டம்

சாதிகளின் விபரம்
எண்னிக்கை

வேலூர்

Hindus Population
3016962


Muslims Population
350771


Christians Population
102477

மாவட்டம்

சாதிகளின் விபரம்
எண்னிக்கை

திருநெல்வேலி

Hindus Population
2172815


Muslims Population
252235


Christians Population
296578
இதில் குறிப்பிட்டுள்ள இந்து மக்கள் தொகையிலிருந்துதான் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமாக மற்றும் தேமுதிக போன்ற அரசியல் கட்சிகள் கூறுபோட்டுக்கொள்ளவிருக்கின்றன.
ஆனால் இறைவனின் மாபெரும் அருளால் அவனது துணைகொண்டு முஸ்லிம், கிருஸ்தவ சிருபான்மை மக்களின் வாக்குகளை அப்படியே சிந்தாமல் சிதறாமல் ஒட்டு மொத்தமாக அள்ளும் அபரித சக்தியை தமுமுக வின் மனித நேய மக்கள் கட்சி பெற்றுள்ளது என்பதை திரவிட கட்சிகளுக்கு சொல்லிக் கொள்கிறோம்.

Wednesday, March 11, 2009

இலங்கை மீலாது விழாவில் குண்டுவெடிப்பு! தமுமுக கண்டனம்!!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் ஜே.எஸ்.ரிபாஃயி அவர்கள் வெளியிட்ட அறிக்கை


இலங்கை மாத்தறை பகுதியில் மார்ச் 10 அன்று மீலாது விழா ஊர்வலத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பை வன்மையாக கண்டிக்கிறோம்.


அரசியல் தலைவர்கள், கிறிஸ்த்தவ, பௌத்த மதத் தலைவர்கள் தமிழ் சிந்தனையாளர்கள் என பலரும் கலந்து கொண்ட ஒரு பொதுவான நிகழ்ச்சியில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதும், ஏராளமானோர் படுகாயமடைந்திருப்பதையும் வன்மையாக கண்டிக்கிறோம். ஏற்கனவே வட இலங்கையில் போரால் அப்பாவி தமிழர்களின் வாழ்வு நிலை குலைந்துள்ள நிலையில், இச்சம்பவம் அதை மோசமான நிலைக்கு கொண்டு செல்லுமோ என்று அஞ்சுகிறோம். இலங்கையில் தமிழர்கள், மலையாக தமிழர்கள், சிங்களர்கள், முஸ்லிம்கள் என சகல தரப்பும் அமைதியான முறையில், சமஉரிமையுடன் வாழ துரிதமான நடவடிக்கையை எடுக்குமாறு இலங்கை அரசை கேட்டுக்கொள்கிறோம்.


உண்மையில் இப்பயங்கரவாதத்தை செய்திட்ட சக்தி எது என்பதை கண்டறியும் வரை மாத்தறை தற்கொலை படை தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்கள் அமைதி காக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

Tuesday, March 10, 2009

மனிதநேய மக்கள் கட்சி ஒரு 'சீட்டை' ஏற்காது

மனிதநேய மக்கள் கட்சி ஒரு 'சீட்டை' ஏற்காது

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் (தமுமுக) அரசியல் பிரிவான மனிதநேய மக்கள் கட்சி (மமக) எதிர்வரும் மக்களவை தேர்தலில் ஒரு சீட்டுக்காக கூட்டணி என்ற கருத்தை நிராகரித்துள்ளது.

தமுமுக தலைவரும், மமகவின் ஒருங்கிணைப்பாளருமான எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ், முஸ்லிம் அரசியல் கட்சியின் மூத்த பங்காளிகள் கடைப்பிடித்து வந்த டோக்கன் ஸிஸ்டத்தை கடுமையாக எதிர்த்துள்ளார்.

'அதேபோல், முன் சென்ற காலங்களில், முஸ்லிம் அரசியல் கட்சிகள் பிறருடைய சின்னங்களில் போட்டியிட்டதைப் போல, போட்டியிடவும் நாங்கள் விரும்ப வில்லை. தமிழக அரசியலில் எங்களுக்கென தனி அடையாளம் இருக்கிறது' என்றும் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் 'த ஹிண்டு' பத்திரிக்கையாளரிடம் தெரிவித்தார்.

மமக கடந்த பிப் 7 அன்று தான் துவக்கப்பட்ட போதிலும், 13 வருட காலமாக சமூகப்பணி ஆற்றிவரும் தமுமுகவின் பின்புலம் அதற்கு உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

திமுக தலைமையுடன் நல்ல தொடர்பில் உள்ள அவர், அடுத்த வாரம் இடபங்கீடு விஷயமான பேச்சுவார்த்தை நடைபெறும் என நம்புவதாகவும் கூறினார்.

திமுக கூட்டணியில் ஒரே ஒரு சீட் தான் என நிர்பந்திக்கப்பட்டால், தனது கட்சி மாற்று முகாமை நாடவும் தயங்காது என்றும் சூசகமாக குறிப்பிட்டார்.

'அதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு செய்து கொள்ளவும் நாங்கள் தயங்க மாட்டோம். ஆனால், தேர்தலுக்குப் பின் எந்நிலையிலும் பாஜக அணிக்கு செல்ல மாட்டோம் என அதிமுக தலைமை எழுத்துப் பூர்வமாக உறுதி அளிக்க வேண்டும்' என்றும் அவர் தெரிவித்தார்.

தமுமுக பலமாக உள்ள வேலூர், ராமநாதபுரம், மயிலாடுதுறை, மத்திய சென்னை, திருச்சி மற்றும் தென்காசி ஆகிய ஆறு தொகுதிகளை குறி வைத்து தமது கட்சி களமிறங்க தயாராக உள்ளதாகவும், பகுஜன் ஸமாஜ் போன்ற கட்சிகளுடன் இணைந்து மாற்று அணி அமைப்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Wednesday, March 4, 2009

மனித நேய மக்கள் கட்சி 6 தொகுதிகளில் போட்டி

Added > 3/4/2009 4:19:00 AM Views > 15 Rating > 0

மனித நேய மக்கள் கட்சி 6 தொகுதிகளில் போட்டி - தமுமுக மாநில தலைவர் ஜவாஹிருல்லா அறிவிப்பு

கோவை-மார்ச்-3

மனித நேய மக்கள் கட்சி வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஆறு தொகுதிகளில் தனித்துப் போட்டியிடும் என தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லாஹ், பொதுச் செயலாளர் ஹைதர்அலி, மனித நேய மக்கள் கட்சிப் பொதுச் செயலாளர் அப்துல் சமத், பொருளாளர் ஹாரூண் ரஷீத் ஆகியோர் இன்று கோவையில் நிருபர்களிடம் கூறினார்கள்.

மனித நேய மக்கள் கட்சி பிப்ரவரி 7ம் தேதி துவங்கப்பட்டது. முறைப்படி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பொதுக் கட்சியாக இருந்தாலும், த.மு.மு.க.வின் முழுக் கட்டுபாட்டில் இயங்கும்.

மனித நேய மக்கள் கட்சிக்கு மாவட்ட நிர்வாகிகளை நியமிப்பதற்காக தமிழகம் முழுவதும் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஆலோசனைக் கூட்டங்கள் நடந்து வருகிறது.

முதல் கட்டமாக தஞ்சை, மதுரை, மண்டலங்களில் கலந்தாய்வு முடிந்து விட்டது. இன்று கோவையில் நடைபெற்றது. நாளை சென்னை மண்டலத்தில் கலந்தாய்வு நடைபெறும். இன்னும் ஓரிரு நாட்களில் 32 மாவட்டங்களுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள்.

வருகிற பாராளுமன்றத் தேர்தலில் மத்திய சென்னை, வேலூர், மயிலாடுதுறை, ராமநாதபுரம், தஞ்சை, திருநெல்வேலி அல்லது தென்காசி தனி ஆகிய தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளோம். ஏதேனும் அரசியல் கட்சிகள் சிறுபான்மை, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக எழுத்துப் பூர்வமாக வாக்குறுதி அளித்தால் அந்த கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவோம்.

இன்னும் ஓரிரு தினங்களில் கூட்டணி நிலவரம் மற்றும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

சென்னை உயர்நீதிமன்றம் மோதல் சம்பவம் துர்பாக்கியமான செயல். அப்பாவி மக்கள், காவல்துறையையும், நீதித்துறையையும் நம்பித்தான் இருக்கிறார்கள். அவர்களே பகிங்கரமாக மோதிக் கொள்வது வேதனையானது. மருத்துவனை நோயாளிக்கு சிகிச்சையளிக்க மருத்துவர் மறுத்தது போல் இச்செயல்கள் உள்ளது.

இலங்கைத் தமிழர்களுக்கு அதிகார பகிர்வு வழங்க மத்திய அரசு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். ராணுவ நடவடிக்கையின் மூலம், இப்பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது. இவ்வாறாகக் கூறினார்கள்.

இந்த பேட்டியின் போது மாநிலச் செயலாளர், கோவை உமர், மாவட்டத் தலைவர் பஷீர், மாவட்டச் செயலாளர் அமீர், மாவட்ட பொருளாளர் கபீர் ஆகியோர் உடனிருந்தார்கள். பின்னர், த.மு.மு.க. மர்க்கஸில் இன்று பகல் 12.00 மணியளவில் மனித நேய மக்கள் கட்சியின் மேற்கு மண்டலச் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த செயற்குழுவில் கட்சியின் மாவட்ட நிர்வாகிகளை நியமித்தல் சம்பந்தமாக கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களின் நிர்வாகிகள், மாநில நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்தார்கள்.

மனித நேய மக்கள் கட்சி 6 தொகுதிகளில் போட்டி

மனித நேய மக்கள் கட்சி 6 தொகுதிகளில் போட்டி - தமுமுக மாநில தலைவர் ஜவாஹிருல்லா அறிவிப்பு

கோவை-மார்ச்-3

மனித நேய மக்கள் கட்சி வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஆறு தொகுதிகளில் தனித்துப் போட்டியிடும் என தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லாஹ், பொதுச் செயலாளர் ஹைதர்அலி, மனித நேய மக்கள் கட்சிப் பொதுச் செயலாளர் அப்துல் சமத், பொருளாளர் ஹாரூண் ரஷீத் ஆகியோர் இன்று கோவையில் நிருபர்களிடம் கூறினார்கள்.

மனித நேய மக்கள் கட்சி பிப்ரவரி 7ம் தேதி துவங்கப்பட்டது. முறைப்படி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பொதுக் கட்சியாக இருந்தாலும், த.மு.மு.க.வின் முழுக் கட்டுபாட்டில் இயங்கும்.

மனித நேய மக்கள் கட்சிக்கு மாவட்ட நிர்வாகிகளை நியமிப்பதற்காக தமிழகம் முழுவதும் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஆலோசனைக் கூட்டங்கள் நடந்து வருகிறது.

முதல் கட்டமாக தஞ்சை, மதுரை, மண்டலங்களில் கலந்தாய்வு முடிந்து விட்டது. இன்று கோவையில் நடைபெற்றது. நாளை சென்னை மண்டலத்தில் கலந்தாய்வு நடைபெறும். இன்னும் ஓரிரு நாட்களில் 32 மாவட்டங்களுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள்.

வருகிற பாராளுமன்றத் தேர்தலில் மத்திய சென்னை, வேலூர், மயிலாடுதுறை, ராமநாதபுரம், தஞ்சை, திருநெல்வேலி அல்லது தென்காசி தனி ஆகிய தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளோம். ஏதேனும் அரசியல் கட்சிகள் சிறுபான்மை, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக எழுத்துப் பூர்வமாக வாக்குறுதி அளித்தால் அந்த கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவோம்.

இன்னும் ஓரிரு தினங்களில் கூட்டணி நிலவரம் மற்றும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

சென்னை உயர்நீதிமன்றம் மோதல் சம்பவம் துர்பாக்கியமான செயல். அப்பாவி மக்கள், காவல்துறையையும், நீதித்துறையையும் நம்பித்தான் இருக்கிறார்கள். அவர்களே பகிங்கரமாக மோதிக் கொள்வது வேதனையானது. மருத்துவனை நோயாளிக்கு சிகிச்சையளிக்க மருத்துவர் மறுத்தது போல் இச்செயல்கள் உள்ளது.

இலங்கைத் தமிழர்களுக்கு அதிகார பகிர்வு வழங்க மத்திய அரசு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். ராணுவ நடவடிக்கையின் மூலம், இப்பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது. இவ்வாறாகக் கூறினார்கள்.

இந்த பேட்டியின் போது மாநிலச் செயலாளர், கோவை உமர், மாவட்டத் தலைவர் பஷீர், மாவட்டச் செயலாளர் அமீர், மாவட்ட பொருளாளர் கபீர் ஆகியோர் உடனிருந்தார்கள். பின்னர், த.மு.மு.க. மர்க்கஸில் இன்று பகல் 12.00 மணியளவில் மனித நேய மக்கள் கட்சியின் மேற்கு மண்டலச் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த செயற்குழுவில் கட்சியின் மாவட்ட நிர்வாகிகளை நியமித்தல் சம்பந்தமாக கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களின் நிர்வாகிகள், மாநில நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்தார்கள்.