Sunday, January 18, 2015

பனைக்குளத்தில் நடைபெற்ற ஆம்புலன்ஸ் அற்பணிப்பு நிகழ்ச்சி

ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளத்தில் நடைபெற்ற ஆம்புலன்ஸ் அற்பணிப்பு நிகழ்ச்சி மிகுந்த எழுச்சியோடு நடைபெற்றது. அப்பொதுகூட்டம் பயங்கரவாதத்திற்கு எதிரான போர்பிரகடனமாகவும் அமைந்தது குறிப்பிடத்தக்கது.பொதுக்கூட்டத்தில் முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ மற்றும் மமக மாநில பொதுச் செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி அவர்கள் சிறப்புரை ஆற்றீனார்கள்.

தமுமுக 2015 தேர்தல் அதிகாரிகள் பட்டியல்

 தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தேர்தல் 
2015 தேர்தல் அதிகாரிகள் பட்டியல்  


Thursday, January 8, 2015

தமுமுக கழக அமைப்பு தேர்தல்

தமுமுக கழக அமைப்பு தேர்தல்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக அடிப்படை கிளையிலிருந்து மாநில நிர்வாகம் வரைக்கும் ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கு தேர்தல் நடைபெற வேண்டும் என கழக அமைப்பு நிர்ணய சட்டத்தில் குறிப்பிட்டுள்ளப்படி வரும்18.01.2015 முதல் 7.03.2015 வரை தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் நடைபெறும். 

இதற்காக 3 பேர் கொண்ட தேர்தல் ஆணையத்தை தலைமை நிர்வாகக் குழு அமைத்துள்ளது. பி.எம்.ஆர். சும்சுதீன் அவர்கள் தலைமையில் தேர்தல் ஆணைய உறுப்பினர்களாக ஜெ. அவுலியா மற்றும் இராயபுரம் சிராஜுதீன் ஆகியோர் செயல்படுவார்கள்.

அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கவும், கண்காணிக்கவும், தேர்தலை நடத்தவும் 33 பேர் கொண்ட குழுவினர் தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். தேர்தல் அதிகாரிகளுக்கான பயிற்சிக் கூட்டம் வரும் 10.01.2015 (சனிக்கிழமை) அன்று காலை 10.00 மணிக்கு சென்னை இராயபுரத்தில் உள்ள மேஜிக் பார்க் அரங்கத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் தேர்தல் விதிமுறைகள், தேர்தல் நடத்தும் விதம் பற்றி விரிவாக விளக்கப்படும்.

தமுமுக தலைமையகம்

பி.எஸ். அப்துல் ரஹ்மான் - ஒரு பன்முக வள்ளல் - ஜவாஹிருல்லாஹ் MLA!


பி.எஸ். அப்துல் ரஹ்மான் - ஒரு பன்முக வள்ளல் - 

ஜவாஹிருல்லாஹ் MLA!

__________________________________________________________

எம் நேசத்திற்குரிய பி.எஸ். அப்துல் ரஹ்மான் அவர்கள் மரணமடைந்துவிட்டார்கள். அவர்களை எனது மாணவப் பருவத்திலிருந்தே அறிந்து வந்துள்ளேன். சென்னை வண்டலூரில் அவர்கள் கிரஸண்ட் தங்குமிடப் பள்ளியை தொடங்கிய செய்தியை அறிந்த போது அந்த பள்ளியில் சேர்ந்து படிக்க வேண்டுமென்ற ஆவல் எனக்கு இருந்தது. ஆனால் எனது தந்தையின் அனுமதி கிடைக்காததினால் அந்த ஆசை நிறைவேறவில்லை. இருப்பினும் எங்கள் மாணவர் இஸ்லாமிய இயக்கத்தின் சார்பில் அந்த பள்ளிக்கூட வளாகத்தில் கோடை விடுமுறைக் காலத்தில் மாணவர்களுக்கான ஆளுமை வளர்ப்பு முகாம்களை அங்கு பல முறை நடத்தியுள்ளோம்.

தமிழகத்தில் எத்தனையோ கொடை வள்ளல்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால் நமது சமகாலத்தில் முஸ்லிம் சமுதாயம் கல்வியில் முன்னேற வேண்டும் என்பதே தலையாய நோக்கமாக இருக்க வேண்டும் என்பதை உளமாற உணர்ந்து அந்த வழியில் செயல்பட்டவர் பி.எஸ்.ஏ. அவர்கள். அவர்களுடன் நெருங்கி நேரடியாக பழகும் வாய்ப்பு எனக்கு டிசம்பர் 1997ல் ஏற்பட்டது. 1997 நவம்பர் இறுதி வாரம் கோவையில் காவலர் செல்வராஜ் படுகொலைச் செய்யப்பட்ட பிறகு அங்கு முஸ்லிம்களுக்கு எதிராக வரலாறு காணாத கலவரம் நடைபெற்றது. 19 முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள். பல நூறு கோடி ரூபாய் சொத்துகளை முஸ்லிம் சமுதாயம் இழந்தது. கோவை பற்றி எரிந்துக் கொண்டிருந்த நிலையில் அங்கு நிலவிய பதட்டச் சூழலை தணிப்பதற்காக எனது தலைமையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் குழு ஒன்று கோவை சென்றது. கலவரம் தலைவிரித்தாதிக்கொண்டிருந்த நிலையில் அங்கு பல நாட்கள் முகாமிட்டு கலவரம் ஏற்பட்ட சூழல், பாதிக்கப்பட்டவர்களின் கருத்துக்கள் என அனைத்தையும் வீடியோவில் பதிவுச் செய்து பிறகு அதனை ஒரு ஆவணப்படமாக தமிழிலும் ஆங்கிலத்திலும் தயாரித்தோம். இந்த ஆவணப்படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப பட்டது.

இந்த படம் ஒளிபரப்பான ஒரு சில நிமிடம் கழித்து எனக்கு ஒரு தொலைபேசி வந்தது. மறுமுனையில் பேசியவர் நான் அப்துல் ரஹ்மான பேசுகிறேன் என்றார். ஆமாம் பி.எஸ்.ஏ. அவர்கள் தான் பேசினார்கள். கோவை கலவரம் தொடர்பான படத்தைத் தான் பார்த்ததாகவும் உடனடியாக என்னை பார்க்க விரும்புவதாகவும் தெரிவித்தார். மறுநாள் பி.எஸ்.ஏ. அவர்களை சென்னையில் சுப்பா ராவ் நிழல் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தேன். சந்திப்பு பல மணி நேரம் நீடித்தது. அங்குள்ள சூழல்கள் அனைத்தையும் கவலையுடன் கேட்டறிந்தார்கள்.

பள்ளிக்கூட மாணவ மாணவிகளும் பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்து மிகவும் வருந்தினார்கள். தனது பங்கிற்கு நான் பரிந்துரைச் செய்யும் பள்ளிக்கூடத்திற்கு வகுப்பறைகள் கட்டித் தருவதாக உறுதி அளித்தார்கள். வாக்குறுதி அளித்தப்படி கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள மன்பஉல் உலூம் உயர்நிலைப் பள்ளிக்கூடத்திற்கு ஒரு தளம் முழுவதையும் கட்டிக் கொடுத்தார்கள்.

இதன் பிறகும் எங்கள் தொடர்புகள் நீடித்தன. பல முறை நேரிலும் தொலைபேசியிலும் பேசியுள்ளோம். எனது பரிந்துரையில் அடிப்படையில் சென்னை புவிருந்தவல்லியில் உள்ள அஹ்லே ஹதீஸ் பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள பள்ளிக்கூடத்திற்கும் வகுப்பறைகளை கட்டிக் கொடுத்தார்கள். இதே போல் அவர்கள் தமிழகம் முழுவதும் கல்விக்காக செய்த தர்மம் கணக்கில் அடங்காது. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மீது பி.எஸ்.ஏ. அவர்கள் கொண்டிருந்த பற்றின் காரணமாக தி ஹிந்து நாளிதழின் நிர்வாகிகளை அவர்கள் அழைத்து தமுமுகவின் செயற்பாடுகளை பாராட்டி பேசியுள்ளார். அவர்கள் இவ்வாறு பேசியது எனக்கு தெரியாது. ஆனால் தி ஹிந்து நாளிதழின் முதன்மை செய்தியாளர் சுரேஷ் நம்பத் என்னை அழைத்து பி.எஸ்.ஏ. அவர்கள் தங்கள் நிர்வாகத்திடம் தமுமுகவைப் பற்றி சிறப்பித்து பேசியதைப் பற்றி தெரிவித்தார். இதன் பிறகு தி ஹிந்து நாளிதழில் தமுமுகவைப் பற்றி செய்திகள் நல்ல முறையில் பிரசுமாகின.

சென்னை அண்ணா சாலையில் சீதக்காதி அறக்கட்டளை கட்டடத்தில் ஒரு தலைசிறந்த இஸ்லாமிய நூலகத்தை அவர்கள் தொடங்கியதும் மிகவும் பயனுள்ள அறப்பணியாகும். அந்த நூலகத்தினால் நான் பயனடைந்துள்ளேன். என்னைப் போல் பல ஆய்வாளர்களும் பயனடைந்துள்ளார்கள்.
இன்று பல்கலைகழகமாக உயர்ந்துள்ள கிரஸண்ட் பொறியியல் கல்லூரி முஸ்லிம்களும் தலைசிறந்த கல்வி நிறுவனங்களை நடத்த இயலும் என்பதற்கு சான்றாக அமைந்துள்ளது. இது பி.எஸ்.ஏ. அவர்களின் வாழ்வியல் சாதனைகளில் ஒன்று என்றுச் சொன்னால் மிகையாகாது.

இதே போல் கீழக்கரையில் இயங்கி வரும் தாசிம் பீவி பெண்கள் கல்லூரி இன்று தேசிய அளவில் தலைசிறந்த கல்லூரிகளில் ஒன்றாக இயங்கி வருவதும் பி.எஸ்.ஏ. அவர்களின் சீரிய சிந்தனைகளின் பிரதிபலிப்பாக உள்ளது.

இன்று தமிழகத்தில் அரபி மத்ரஸாக்களில் சேர்வதற்கு மாணவர்கள் கிடைப்பதில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மாணவர்களை தங்கள் மத்ரஸாக்களில் கொண்டு வந்து சேர்ப்பதற்காக ஆசிரியர்களும், நிர்வாகிகளும் தமிழகத்திலும் பிற மாநிலங்களிலும் சல்லடைப் போட்டு தேடும் நிலை உருவாகியுள்ளது. இதற்கு நேர் மாறாக கிரஸண்ட் வளாகத்தில் இயங்கும் புஹாரியா அரபிக் கல்லூரியில் பார்க்க முடிகின்றது. இங்கு சேர வரும் அனைத்து மாணவர்களுக்கும் இடம் கிடைப்பது சிரமம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதற்காக பலரும் என் பரிந்துரையை நாடி வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. தரமான மார்க்க கல்வியுடன், பட்டப்படிப்பும் ஒரு சேர படிக்கும் வாய்ப்பை மாணவர்களுக்கு அளித்த முதன்மையான அரபிக் கல்லூரியாக அது விளங்குகின்றது.

சீதக்காடி அறக்கட்டளை நடத்தும் நிறுவனங்கள் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பல்வேறு சமுதாய கல்வி நிறுவனங்களின் வளர்ச்சியில் பி.எஸ்.ஏ. அவர்களின் பங்களிப்பு இருப்பதை யாரும் மறுக்க இயலாது.

கீழக்கரைக்காரர்கள் என்றால் ஒரு அடைமொழி தொழில் செய்பவர்கள் என்ற புரிதலை மாற்றி அமைத்தவர் பி.எஸ்.ஏ. அவர்கள். அவரது பெரும் முயற்சியில் ஒரு பன்னாட்டு நிறுவனமாக ETA எனும் எமிரேட்ஸ் டிரேடிங் ஏஜென்சி இயங்குகிறது. கட்டுமான நிறுவனம் தொடங்கி பல்வேறு பெரிய நிறுவனங்களை உருவாக்கி தமிழ் சமுதாயத்திற்கு தொழில் துறையில் ஒரு அடையாளத்தை ஏற்படுத்தியவர் பிஎஸ்ஏ. ஈடிஏவிற்கு வளைகுடாவில் இன்னொரு பெயரும் உண்டு. E - எல்லா T தமிழ் A ஆட்கள் நிறுவனம் என்றும் சொல்லும் அளவிற்கு பல்லாயிரம் தமிழக குடும்பங்கள் முன்னேறுவதற்கான வேலை வாய்ப்பு அளிக்க வழிவகுத்தார்கள். ஒரு முறை இந்த குழுமத்தின் நிறுவனமான எம்பிஎம் யின் ஒரு பிரிவு இழப்பில் இயங்கிய நிலையில் அதன் மேலாளர்கள் அப்பிரிவை மூடி விடலாம் என்று பிஎஸ்ஏ அவர்களிடம் பரிந்துரைத்தார்கள். பிஎஸ்ஏ அவர்கள் அந்நிறுவனத்தில்பணியாற்றுபவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் எத்தனை பேர் என்று கேட்டார். பெரும் எண்ணிக்கையில் உள்ளார்கள் என்றும் குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் அதிகம் என்று மேலாளர்கள் குறிப்பிட்டார்கள். உடனடியாக இத்தனை குடும்பங்களுக்கு வாழ்வளிக்கும் அந்த பிரிவு இழப்பில் இயங்கினாலும் பரவாயில்லை: அதனை மூட வேண்டாம் என்று உத்தரவிட்டார். அந்த அளவிற்கு ஏழை மக்கள் மீது கரிசனம் காட்டும் பண்புடைய வள்ளல் பிஎஸ்ஏ அவர்கள்.

தமிழகத்தில் நமது சமகாலத்தில் பல கொடை வள்ளல்கள் இருந்துள்ளார்கள். அவர்களில் பி.எஸ்.ஏ. தனி ரகம். காரணம் கல்வியில் பின்தங்கிய நிலையில் உள்ள முஸ்லிம் சமுதாயத்தைக் கரம் பிடித்து உயர்த்தி விட வேண்டும் என்பதே அவர்கள் சிந்தனையாக செயல்திட்டமாக இருந்தது. அவர்களது கல்வி பணி நிச்சயமாக மரணத்திற்கு பிறகும் பயன் தரும் சதக்கத்துல் ஜாரியாவாக -நிரந்தர நல்லறமாக அமைந்துள்ளது. அவர்கள் வழியில் அவர்கள் குடும்பத்தினர் தொடர்ந்து நற்பணிகளை தொடர இறைவனை பிராத்திக்கிறேன்.

Jawahiru

Wednesday, January 7, 2015

தமுமுக தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ வெளியிடும் இரங்கல் அறிக்கை:

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ வெளியிடும் இரங்கல் அறிக்கை:
பிரபல தொழில் அதிபரும், சமூக சேவகருமான பி.எஸ். அப்துல் ரஹ்மான் அவர்கள் இன்று மறைந்துவிட்டார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தோம்.
தன் ஆற்றலாலும், அறிவாலும் உலகம் போற்றும் தொழில் அதிபராக உருவாகி, பெரும் தொழில் சாம்ராஜ்யங்களை பன்னாட்டளவில் நிறுவியவர்.
பல்லாயிரக்கணக்கான தமிழக மக்கள் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரியவும், செல்வம் ஈட்டவும், வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ளவும் அவர் வழிகாட்டினார்.
சென்னை கிரஸண்ட் பொறியியல் கல்லு£ரி, கீழக்கரை தாஸிம் பிவீ மகளிர் கல்லு£ரி, டெல்லியில் உள்ள இந்திய இஸ்லாமிய கலாச்சார மையம், ஆகியன அவரது பெரும் புகழுக்கு மகுடம் சூட்டுபவை.
பன்னாட்டாளவில் சிறந்த தொழில் அதிபராக திகழ்ந்த அவர், ஏழை&எளிய மக்களுக்கு அறப்பணிகள் ஆற்றிய மனித நேரயராக திகழ்ந்தார்.
அன்னாரின் புகழ் வரலாற்றில் பொறிக்கப்படும் என்பதில் ஐயமில்லை, அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எங்களது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம். அவரின் மறுஉலக வாழ்வுக்காக இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்.
(ஜே.எஸ்.ரிபாயீ) 
தமுமுக தலைவர் 

Thursday, January 1, 2015

சாலை வசதி இல்லாத கிராமத்தில் இரவு நேரத்தில் சென்று மக்களிடம் குறைகளை கேட்கும் மக்கள் எம்.எல்.ஏ

சாலை வசதி இல்லாத கிராமத்தில் இரவு நேரத்தில் சென்று மக்களிடம் குறைகளை கேட்கும் மக்கள் எம்.எல்.ஏ

ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருப்புல்லாணி ஒன்றியம், மாயாகுளம் ஊராட்சி மங்களேஸ்வரி நகர் பகுதியில் விடுதலை பெற்ற இந்தியாவில் இதுவரை இந்த மணல் பாதையில் சாலை அமைக்கப்படவே இல்லை இதனால் பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் நலன் கருதி புதிய சாலை வசதி செய்து தரவேண்டி கோரிக்கை. 

மேற்கண்ட கிராமத்திற்கு பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டு அறியும் விதமாக இரவு 7 மணிக்கு சாலையோ, வெளிச்சமோ இல்லாத இப்பகுதிக்கு இரவு நேரம் என்று கூட பாராமல் உடனடியாக சென்று ஆய்வு செய்தார்.ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற குழு தலைவருமான பேராசிரியர் Dr.M.H.ஜவாஹிருல்லாஹ் MBA.,M.Phil.,PhD.,MLAJawahirullah MH அவர்கள் கீழ் மாயாகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட மங்களேஸ்வரி (அரண்மனை தோப்பு) முதல் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி ஏர்வாடி ஊராட்சிக்கு உட்பட்ட தொத்தமகன்சாவடி, நாச்சியம்மைபுரம், பொன்னகர், அரைக்காசு அம்மாள் தர்கா வழியாகஏர்வாடி அரசு மேல்நிலைப்பள்ளி வரையுள்ள சுமார் ஐந்து கி.மீ.சாலை மிக மோசமாக பழுதடைந்துள்ளது. 

10 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட இச்சாலை ஒருமுறை கூட பராமரிக்கப்படவில்லை.பல இடங்களில் குண்டும் குழியுமாக உள்ளதுடன் சில இடங்களில் சாலை இருந்ததற்கான அடையாளமே இல்லாமல் சிதைந்து போயுள்ளது.இந்நிலையில் தொத்தமகன்சாவடி முதல் சுமார் இரண்டு கி.மீ. தூரத்திற்கு மணல் பாதையாக உள்ளது. விடுதலை பெற்ற இந்தியாவில் இதுவரை இந்த மணல் பாதையில் சாலை அமைக்கப்படவே இல்லை என்பது வேதனையான தகவலாகும்.இந்த மணல் பாதை குறிப்பிட்ட ஒரு சமூகத்தின் பட்டா இடமாக இருப்பதாகவும், தங்களது சமூக மக்களின் கால்நடை பராமரிப்பிற்காக மட்டுமே மணல் சாலையாக பயன்படுத்திட விட்டு வைத்துள்ளோம், அரசு சாலை அமைத்தால் எங்கள் நிலத்திற்கு பாதுகாப்பு இல்லை என அந்த சமூக மக்கள் கூறுவதாகவும் இப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இப்பகுதியை துவக்கப்பள்ளி மாணவர்கள் மங்களேஸ்வரிநகர் செல்வதற்கும் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஏர்வாடி செல்வதற்கும் மணல் பாதையை கடந்தே செல்ல வேண்டியுள்ளது.உயிருக்குப் போராடும் ஆபத்தான நோயாளிகளை ஏற்றி செல்ல அவசர ஊர்திகள் கூட செல்வதற்கு வழியில்லை.விடுதலை பெற்ற காலத்திலிருந்து சாலை போடப்படாத மங்களேஸ்வரி நகர் - ஏர்வாடி சாலையில் உள்ள மணல் பாதையை தார்ச்சாலையாக தரம் உயர்த்தவும்மங்களேஸ்வரி நகர் - ஏர்வாடி சாலையில் குறுக்கிடும் தனியார் பட்டா இடத்தில் உள்ள மணல் பாதையை சம்பத்தப்பட்ட நில உரிமையாளர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, நிலத்திற்கு சொந்தக்கார்கள் பாதிப்படையாத வகையில் தார்ச்சலையாக அமைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவருக்கு அனுப்பும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்கள்.